அத்தியாயம் 10
ஒரு வார காலம் முகி சொல்லும் பதிலுக்காக காத்திருந்தான் ஆதி. அவளோ பேசா மடந்தையாகி விட இவனோ மௌனத்தை கடைபிடித்தான். ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை முகியால்.
"ஆதி நீங்க இப்டி இருக்குறது நல்லாவே இல்லை. வீட்ல நான் ஒருத்தி இருக்குறதே உங்களுக்கு தெரியலையா?" என்று கத்த..
"அதை நான் சொல்லனும். உம்முனு இருக்குறது நீயா இல்லை நானா?" என்று அவனும் முறைத்துக் கொண்டு நிற்க.
"சரி பேசுங்க"
"சரி சொல்லு"
"என்ன சொல்ல?"
"ம்.. உன் ப்ரத்டே அன்னைக்கு நான் குடுத்த கிஃப்ட் பத்தி. ஏத்துக்க போறியா இல்ல தூக்கிப் போட போறியா?" என்று விடாப்பிடியாய் நிற்க..
"ஏதோ உங்களையே தூக்கிப் போடுற மாதிரி ஏன் இப்டி பேசுறேங்க?"
"நான் அப்படி சொல்லவே இல்லையே. ஏன் உனக்கு அப்டித் தோனுதா என்ன?" என்று விழிகள் இடுங்க கேட்க..
"என்ன கார்னர் பண்றேங்களா?. எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. ப்ளீஸ் விட்டுடுங்க. யாராவது கேட்டுருந்தா நோனு நேரா சொல்லிட்டு போயிருப்பேன். நீங்க கேட்டதால என்னால மறுக்கவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம யோசிச்சு யோசிச்சு மண்டை குழம்பி பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு" என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள் குனிந்தபடியே குலுங்கினாள்.
அவன் கைகட்டி வெற்றுப்பார்வை பார்த்தவன் அவள் முன்பு அவள் சைக்காலஜிஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்து வைத்தான். கூடவே இன்னும் சில அவள் டிசைன் செய்த உடைகளும் பொருட்களும்..
தன் முன்னால் கிடந்த பொருட்களை கண்டு அதிர்ந்து விழித்தவள், "ஆ.. ஆதி.." என்று நா தந்தியடிக்க..
"ஏன் முகி என்கிட்ட சொல்லல?. உன்கிட்ட மறைக்குறதுக்கு எனக்கு ஒன்னுமே இல்ல. ஆனா உனக்கு என்கிட்ட மறைக்க நிறைய இருந்துருக்குல. ஒரு போலியான வாழ்க்கையை தான் என்கூட வாழ்ந்துட்டு இருந்தியா?. உன் கஷ்டத்தை ஷேர் பண்ணக் கூடாத அளவுக்கு தான் நான் உன்கூட வாழ்ந்துருக்கேனானு நினைக்கும் போது நான் ரொம்ப சுயநலவதியா என்னோட விருப்பம் ஆசைனு மட்டும் இருந்திருக்கிறேனு எனக்கே குற்றவுணர்ச்சியா இருக்கு" என்று கசந்த புன்னகை ஒன்றை சிந்த..
"ஆதி ஏன் இப்படிலாம் பேசுறேங்க?. உங்களை விட வேற யார் கூடவும் நான் இவ்வளோ சந்தோஷமா இருந்ததில்லை. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது காலேஜ் படிக்குறப்போ கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன். அதுக்காக சைக்காரிஸ்ட் பார்க்க போனேன். அது அப்பவே சால்வ் ஆகிடுச்சு. எனக்கு ஒன்னுமில்ல" என்று பதறி எழ..
"சைக்காரிஸ்ட் பாக்கப் போனவங்க எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவங்கனு நான் சொல்லவே இல்லையே முகி.."
அவன் சொல்ல வருவது புரியாமல் முழித்தாள்.
"உன் ஸ்ட்ரெஸ் சால்வ் ஆகிடுச்சுனா நீ ஏன் முகி உனக்கு பிடிச்ச படிப்பை மறந்து டிசைனர் ஆகனும்ங்குற உன் ஆம்பிஷனை மறந்து ஒரு பொய்யான வாழ்க்கையை வாழுற?"
"இல்.. இல்ல.. எனக்கு அதுல விருப்பம் இல்ல. எனக்கு அது செட் ஆகாது. அதுக்கும் நான் இப்போ இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்"
"நீ சந்தோஷமா இருக்குறேனு உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு வாழுற முகி. நான் மட்டுமே உன் வாழ்க்கை இல்ல. உனக்கு பிடிச்சதை செய்றதுலயும் உன் வாழ்க்கை இருக்கு. அதை புரிஞ்சுக்க மொத"
"உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது. எனக்கு தான் அது செட்டாகாதுனு சொல்றேன்ல. அதை நானே மறந்துட்டேன். நீங்க ஏன் தோன்டி துருவுறேங்க. உங்களை மாதிரி எல்லாரும் டேக் இட் ஈஸி கேரக்டராக இருப்பாங்களா?. எனக்குனும் ஒரு மனசு இருக்கு. ஒரு தடவை அசிங்கப்பட்டு அந்த இடத்துலே திரும்ப அங்க போய் நிக்க என்னால முடியாது ஆதி.." என்றவளின் கத்தலில் ஆதியே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்.
ஆழ் மனதில் புதைத்த நிறைவேறாத ஆசைகளை என்றோ ஒருநாள் யாரோ ஒருத்தர் தோண்டி எடுக்கும் போது அது எரிமலையாக வெடித்துச் சிதறி விடுகிறது. கால ஓட்டத்தில் காயம் ஆறி விட்டதாக நம்பிக்கொண்டு நம்ப வைத்துக் கொண்டு இத்தனை நாட்கள் வாழ்க்கையை நகர்த்தி விட்டாள். ஆனால் மேலாப்பாக காய்ந்திருந்த காயம் உள்ளே சிதைந்திருப்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.
மெதுவாய் அவள் அருகில் சென்றவன் அவளைத் தோளோடு அணைத்து முதுகைத் தடவிக் குடுக்க.. அவன் நெஞ்சில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள். அவளின் ஏக்கங்கள் புரிந்து போனது. ஆனால் அவளின் மனப் போராட்டங்களை அவள் வாய் திறந்தாலல்ல ஆறுதல் தர முடியும்.
"நான் ஒன்னு சொல்றேன். அமைதியா கேட்குறியா?" என்க.. அவள் ம் என்று தலையாட்டினாள்.
"பிரச்சினைல இருந்து நீ முழுசா குணமாகிட்டனு நினைக்கிறியா முகி?"
நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகள் இவ்வளவு நாள் அவள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லியது.
"பிரச்சினைல இருந்து ஓடி ஒளிஞ்சுட்டா அதுல இருந்து நீ வெளில வந்துட்டனு அர்த்தமா முகி?. நீ பிரச்சினையை விட்டு விலகி தான் வந்துருக்க. அதுல இருந்து முழுசா வெளில வரல. நீ எப்போ பிரச்சினையை நேரா நின்னு ஃபேஸ் பண்றியோ அப்போ தான் அதுல இருந்து வெளில வந்துருக்கனு அர்த்தம். இவ்ளோ நாளா உன் மன அழுத்தத்துல இருந்து வெளில வந்துட்டேன்னு நீயா நினைச்சுக்கிட்டு இருந்துருக்க. பிரச்சினையை ஓரமா வச்சுட்டு நீ தள்ளி தான் வந்துருக்க. அது அது இடத்துலே அப்படியே தான் இருக்கு. எப்போலாம் அது உன் பக்கத்துல வருதோ அப்போலாம் உன் ஆழ் மனசுல புதைச்ச அழுத்தமும் வலிகளும் தானா மேல வருது. இந்த உலகத்துல எத்தனையோ பேரு எத்தனையோ பிரச்சனைகளை துணைக்கு ஆளில்லாம தனியாவே சமாளிச்சுக்கிட்டு இருக்காங்க. உனக்கு நான் இருக்கேன். நீ தோத்தாலும் ஜெயிச்சாலும் தோள் கொடுக்கவும் கொண்டாடவும் நான் இருக்குறேன் முகி. உன்னோட ஆசை கனவுகளை கானல்நீராக்கப் போறியா?. அதை நிஜமாக்கனும்னு ஆசை இல்லயா?. பிராப்ளம்ஸை ஃபேஸ் பண்ணப் போறியா இல்லை ஓடி ஒளியப் போறியா?. எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை உனக்கு இருந்தா நீ இந்த காம்பெடிஷன்ல ஜாயின் பண்ணு" என்றவன் மொத்த நம்பிக்கையையும் அவளுக்கு கொடுக்க..
அவன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையில் சிறிது தெளிந்தவள், "பயமா இருக்கு ஆதி.. நான் அன்னைக்கு எவ்ளோ அசிக்கப்பட்டேன் தெரியுமா?" என்று ஏங்கி ஏங்கி அழுதவள் அன்றைய கல்லூரி நிகழ்வை அவனிடம் சொல்ல..
"நான் இருக்கேன்டி .பேசுறவங்க பேசிட்டு போட்டும். நான் முக்கியமா உனக்கு மத்தவங்க சொல்றது முக்கியமா?" என்று புது தெம்பைக் கொடுக்க.. அவள் சரி என்று ஒருவாறு தலையாட்டினாள்.
"ம் குட். மை பப்ளி. சிரிடி. மார்ஷ்மெல்லோல காரம் போட்டா எப்டி காண்டாகும்?. சில்லி ப்ளேவர்டு மார்ஷ்மெல்லோ மாதிரி இருக்க" என்று சிரிக்க..
"உங்களை.. என்னை அழ வச்சது நீங்க தான்" என்று அவன் தோளில் அடிகளை போட..
"சிரிக்க வச்சதும் நான் தான்டி வொஃய்ப்பி.." என்று அவளைக் கட்டிக் கொண்டவன் ஒரு வாரம் விட்ட காதல் பாடத்தை அவளுக்கு எடுக்க ஆரம்பித்தான்.
தன்னவன் தன்மேல் வைத்த நம்பிக்கைக்காக அந்த போட்டியில் கலந்து கொள்ள நினைத்தவள் ஒரு வாரம் தனது முழுமுயற்சியைப் போட்டாள். ஆனால் எதுவும் அவளுக்குத் திருப்தியாக இல்லை. சோர்ந்து போனவள், "ஆதி.. எனக்கு நல்லாவே வர மாட்டேங்குது. நிச்சயமா நான் இதுல கலந்துக்கனுமா?" என்று நூறாவது முறையாக என்னால முடியாது என்ற வார்த்தை அவளிடம் இருந்து வர..
"ஆஃப்கோர்ஸ் பப்ளி.. என்ன ப்ராப்ளம்" என்று ஆராய்ந்தவன், 'பிரச்சினை வெளியாட்களிடம் இல்லை. மொத இவளுக்குத் தான் பாடம் எடுக்கனும்' என்று உணர்ந்தவன், "முகி இந்த டிசைன் எப்போ பண்ண?" என்றான் அவள் டிசைன் செய்த உடையை கையில் வைத்துக் கொண்டு. அது ஜீரோ ஹிப் சைஸ் உடை..
"இது நம்ம மேரேஜ்க்கு முன்னாடி தான் பண்ணேன். புது டிசைன் தான். அதான் இதுலே சில சேன்ஞ்ஜஸ் பண்ணி இதுவே சோகேஸ் பண்ணலாம்னு நினைச்சேன். பட் வொர்க்அவுட் ஆகும்னு தோணல" என்று உதட்டைப் பிதுக்கினாள்.
"முகி அழகுனா என்னனு நினைக்குற?"
"ஹான்" என்று விழித்தவள், "இப்போ எதுக்கு இந்தக் கேள்வி?"
"காரணமா தான் கேட்கிறேன். ஜீரோ ஹிப் சைஸ்ல அழகான கூந்தல் அழகான வனப்பு உள்ளவங்க தான் அழகானவங்களா?. நீயே அழகுனா ஜீரோ ஹிப் சைஸ் தான்னு நினைக்கும் போது மத்தவங்க எப்டி சரியா யோசிக்க முடியும்?. அப்போ குண்டா இருக்குறவங்களாம் டிசைன் டிசைன்னா ட்ரெஸ் போடனும்னு நினைக்ககக்கூடதா?. எங்க பார்த்தாலும் கால்ல போடுற செருப்புல இருந்து உள்ளே போடுற இன்னர் வரைக்கும் சைஸ் சின்னதா இருக்குறவங்களுக்கு இருக்குற டிசைன்லாம் சைஸ் அதிகமா இருக்குறவங்களுக்கு இருக்குறது இல்ல. ஏன் அப்டி?. பண்ண முடியாதா இல்லை அவங்களுக்கு நல்லா இருக்காதுங்குற எண்ணமா?. நீ அந்த எண்ணத்தை உடைச்சு எறியேன். உன் மனசுல இருக்குற எண்ணத்தை மொத மாத்து. புதுசா ஒரு முயற்சில ஈடுபடுறோம்னா அதுக்கு மொத நாம தான் சோதனை எலியாகனும். உனக்கேத்த மாதிரி டிசைன் பண்ணு. குண்டா இருக்குறவங்களுக்கும் அழகா டிசைன் பண்ண முடியும்னு நிரூபி. புதுசா ட்ரை பண்ணு. உன் பழைய எண்ணத்தோட இதையும் தூக்கிப்போடு.." என்று அவள் செய்த ஜீரோ சைஸ் டிசைனர் கவுனை தூக்கிப் போட்டான்.
ஆதியின் வார்த்தையை மனதில் போட்டுக் கொண்டவள், "தேங்க்ஸ் ஆதி" என்று அவன் கன்னத்தில் பரிசாக ஒன்று வைக்க..
"இதெல்லாம் பத்தாது. சேர்த்து அப்புறமா மொத்தமா வாங்கிக்கிறேன். புது டிசைன் பண்ணு. இன்னும் டைம் இருக்கு" என்றவன் அவளுக்கு முழு ஆதரவையும் கொடுத்தான்.
போட்டி நாள்.. அவள் டிசைன் செய்த உடையை அவளே அணிந்து கொண்டு அவள் முறை வரும் நேரத்திற்காக கையைப் பிசைந்தபடி காத்திருந்தாள். லைட் ரோஸ் வண்ணமும் ஸ்கை ப்ளூ கலரும் சேர்ந்த ஒரு டிசைனர் புடவை. முத்துக்களும் மிர்ரர் வொர்க்காலும் டிசைன் செய்த அந்த சேலையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கூடவே அந்த சேலைக்கு மேட்சாக அவள் அணிந்த அணிகலன்களும் அவள் டிசைன் செய்தவை. இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அந்த காம்பெடிஷனில் அவள் மட்டுமே தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் உடை அணிந்திருந்தாள். மற்றவர்களெல்லாம் டிசைன் என்றால் வெஸ்டர்ன் கலாச்சாரம் என்பது போல் வெளிநாட்டு நாகரீக உடையில் இருந்தனர்.
அலங்காரம் செய்த முகிலாய் அவள் இருக்க அருகில் அமர்ந்திருந்த ஆதிக்குத் தான் இருப்புக் கொள்ளவில்லை. அவளே பயத்தில் இருக்க, "முகி தப்பு பண்ணிட்டேன் டி" என்றானே பார்க்கலாம் அவள் இதயம் நின்று துடித்தது.
"எ.. என்ன? ஏதாவது மிஸ்டேக் இருக்கா?" என்றாள் தன்னை குனிந்து ஆராய்ந்து கொண்டே. ஏனென்றால் அவளின் அலங்காரத்திற்கு உதவியவன் அவன் தானே.
"செம அழகு பப்ளிடி. போட்டியே வேண்டாம்னு அப்படியே உன்னை வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிரலாம்னு நினைக்கிறேன்" என்று கண்ணடிக்க..
வந்த கோவத்தில் அவன் தொடையிலே கிள்ளி அவன் கத்துவதற்குள் அவன் வாயை அவளே மூடிவிட்டாள்.
'அடியே கத்தக்கூட விடாம இப்டி வாயைப் பொத்துறியே. எடுடி கைய' என்று விழியாலே கெஞ்சியவன் அவள் கையை எடுத்து விட..
"அடியே நான்தான்டி உன்னை சிவக்க வைக்கனும். இப்டி நீ என்னை சிவக்க வைக்குறது நியாயமா?. இப்டி பப்ளிக்ல வச்சு புருஷன் மேல கை வைக்குறது ஒரு குடும்ப பொண்ணுக்கு அழகா?" என்றான் தொடையில் கிள்ளிய இடத்தை தடவிக் கொண்டே..
"இன்னொரு தடவை என்னை சிரிக்க வைக்கிறேங்குற பேர்ல இப்டி ஏதாவது காமெடி பண்ணேங்க?. அப்புறம் வாய்ல கேவலமா வார்த்தைகள் வந்துரும்" என்று எச்சரிக்க..
"அப்போ வீட்ல போய் வேண்டாமா?" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு மார்க்கமாக கேட்க..
"அய்யோ ஆதி.. ஏன் தான் இப்படி இருக்கேங்களோ.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு அமைதியா இருங்க" என்று நாணிச்சிவக்க..
"இப்டியே போ பப்ளி. ஒரு பௌர்ணமி நிலவொன்று சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டு வந்ததோனு ஆச்சர்யமா பார்ப்பாங்க எல்லாரும்.." என்றவன் அவளை இயல்பாக்க பேசிக் கொண்டேயிருக்க..
எப்படியோ போட்டி முடிந்து விட்டது.. முதல் பத்து பேரை தேர்ந்தெடுக்க.. முகி நான்காம் இடத்தைப் பிடித்தாள். முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று இருவரும் நினைக்கவில்லை. அவளின் கனவு மன அழுத்தமும் குறைய வேண்டும் என்று அவனும், தன்னவனுக்காக இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவளும் நினைத்தனர்.
அவளின் கானல் நீரான கனவு இன்று நிஜமாய் அவள் கையில். அனைத்திற்கும் காரணமானவனை தேடி அவன் கையில் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். "ஜெயிச்சிட்ட பப்ளி" என்று சிரிக்க..
"ம் ஆமா.. நாம ஜெயிச்சிட்டோம் ஆதி" என்க.. அவளின் மேலுள்ள மரியாதையும் காதலும் பன்மடங்கு கூடியது.
இறைவன் படைப்பில் எந்த ஒரு உயிரினமும் நூறு சதம் முழுமையான அழகோடு இருப்பதில்லை. இதற்கு முட்களோடு நறுமணம் வீசும் அழகிய ரோஜாவும், வண்ணத் தோகை விரித்தாடும் மயிலும் விதிவிலக்கல்ல. மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை. பிறர் மனம் நோகுமே என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் உருவ கேலி செய்து சிரிப்பது வன்முறைக்கு ஒப்பாகும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களோடு உடல் அழகெல்லாம் அழகன்று உள்ளத்து
ஆரோக்கிய அழகே அழகு என்றே சொல்லிக் கொடுத்தே வளர்க்க வேண்டும்.
சில மாதங்களில்.. "இது தான் உன்னோட ப்ரத்டே கிஃப்ட். என்ன ரெடி பண்ண கொஞ்சம் லேட்டாகிடுச்சு" என்று அவளுக்கென்று தனியாக பொஃட்டிக் வைத்துக் கொடுக்க.. நாளுக்கு நாள் அவளை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பவனின் காதலில் மூழ்கினாள் இன்பமுகிலா.
அவளுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தாள் முகிலா. வாரம் ஐந்து நாட்கள் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க வார இறுதி இருவருக்குமான நாள்..
குரல் மாறுபாட்டில் மனநிலைக் கணிக்க
தோற்றுப் போகையில் தோள் சாய்த்துக் கொள்ள
போ என்று விட்டுப்போகாது
சண்டை போட்டுக் கொண்டாவது உடனிருக்க
நம் கனவுகளை தம் கனவுகளாக
தோள்களில் தூக்கி சுமக்க
எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத
கூட்டத்தின் நடுவில் தனித்துப் போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேன் என்று உணர்த்த
வலி மிகுந்த கணங்களில்
கண்ணீர்க்கு ஆறுதலாக
ஒருவர் இருக்கும் வரை
இந்த வாழ்வு வரமாகின்றது..
நம்மை நமக்காகவே நேசிக்கும் ஒருவரைத் தவிர
இந்த அற்ப வாழ்வினை
அற்புதமாக்க
வேறெதனால் இயலும்?.