காலை எப்போதும் எழுப்பும் மலரின் மலர்ந்த முகமும், மனமனக்கும் தேநீரும் இல்லாமல், அலார்ம் தான் ஒலித்தது. அதுவே விக்ரமின் மனதிற்குள் சிறிய அச்சத்தைப் பரப்பிட, சட்டென எழுந்து வீடு முழுதும் தேடிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே பனிமலர் அங்கே இல்லை.
மீண்டும் அறைக்கு வந்து திறன்பேசியில் மலரின் எண்ணிற்கு அழைக்க இரண்டாம் ரிங்கிலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
இருபக்கமும் அப்படி ஒரு அமைதி. 'எதுக்கு அழச்சிருக்கேன்னு தெரிஞ்சும் பேசுறாளா பார்... சண்டக்காரி' என்று விக்ரம் அவளைத் திட்டியபடியே தன் தோல்வியிலும் தலைநிமிர்ந்து, "எங்கே டி இருக்கே?" என்றான் அதிகாரமாக...
"இங்கே தான் இருக்கேன்..." என்று அவளும் கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டே பதில் கூறினாள்.
"இங்கேனா? நம்ம வீட்ல தானா?" என்று புருவம் சுருக்கி ஒருவிதமான இதம் பரவ வினவினான்.
'நீ போ...' என்று சொல்லிவிட்டானே ஒழிய அவனாலும் அவள் இல்லாத இந்த அறையைக் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. முடிந்த அளவு அனைவரிடமும் பேசி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முகூர்த்த நாள் பார்த்து ஊரறிய அவளை தன் மனைவியாக்கி மரியாதையோடும், கௌரவத்தோடும் தன் இல்லம் அழைத்துவர நினைத்திருந்தான்.
இப்போதா பனிமலர் இங்கே தான் இருக்கிறேன் என்றவுடன் நல்லவேலை அவள் தன்னைவிட்டு எங்கேயும் பிரிந்து செல்லவில்லை என்ற நிம்மதியே அவனை இலகுவாக்கியது.
"ஆமா" என்று அவளும் அதனை உறுதி செய்திட, 'வீட்டில் எங்கேயும் இல்லேயே... ஒரு வேலை டெரெஸில் இருப்பாளோ!' என்று யோசித்தபடி கடகடவென அதிகமாக பயன்படுத்திடாத டெரெஸ்ஸிற்குச் சென்றான்.
ஆனால் அங்கேயேயும் காலி மொட்டைமாடியே அவனைப் பார்த்து பல்லைக் காட்டிட, விக்ரமின் முகத்தில் மீண்டும் கோபம்.
"ஏய்... என்ன கண்ணாமூச்சி ஆடுறேயா? மரியாதையா சொல்லு எங்கே இருக்கே?" என்று சீற்றமாய் கத்தினான்.
"ஸ்ஸப்பாபாஆஆ... என்னமா கோபம் வருது உங்களுக்கு!!!... டெரெஸ்ல தேடிட்டு இருக்கிங்க போல.... தேடுங்க தேடுங்க.... நல்ல தேடுங்க... தேடி..... களைச்சி..... கண்டுபிடிக்க முடியாம..... ஈவ்னிங் நாலு மணிக்கா கால் பண்ணுங்க... நான் எங்கே இருக்கேனு சொல்றேன்.... நேத்து நைட் என்னை அழ வெச்சிங்கல்ல.... இனி ஒருமுறை என்னை தனியா ஊருக்கு அனுப்புற நெனப்பு வரவே கூடாது... அதுக்கு தான் இது..." என்று பழிக்குப் பழி போல் கூறினாள்.
"பனிஈஈஈ..." என்று பல்லைக் கடித்து சீறினான்.
"ஹாவ் அ க்ரேட் டே மாமா....."" என்று அழைப்பை துண்டிக்கப் போக, மறுமுனையில் அவனின்
"பனி... பனி... இப்போ நீ என் கண்ணு முன்னாடி வந்து நிக்கலேனு வை..." என்று அவன் கத்திக்கொண்டிருந்தது கேட்க,
மீண்டும் காதில் வைத்து "லவ் யூ மாம்ஸ்... உங்களை மாதிரி வார்த்தைக்காக கூட எதிரில் நிக்கிறவங்ககிட்ட இதுவரை சொன்னதில்லே. இனியும் சொல்லவும் மாட்டேன். என்னைக்குமே எனக்கே எனக்கான உங்களுக்கு மட்டும் தான் இந்த லவ் யூ... என் புஜ்ஜி மாமா... ஈவ்னிங் பாக்கலாம்... பைய்..." என்று கூறி அழைப்பு துண்டித்தாள்.
"சண்டக்காரி... பழி வாங்குறியா டி! நான் ஒன்னும் உன்னைத் தேடி அழையமாட்டேன்... போடி...." என்று அழைப்பு துண்டிக்கப்பட்ட தொடுதிரையில் மயக்கும் மந்திரப் புன்னகையோடு அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவளது நிழல் பிம்பத்தைப் பார்த்துக் கூறினான்.
இருந்தும் 'அவள் எங்கே சென்றிருப்பாள்! எங்கெல்லாம் சென்றிருக்கக் கூடும்!' என்று சிந்தித்தபடியே குளித்து முடித்து அலுவலகம் புறப்பட்டவனின் முன்பு செண்பகம் வந்து நின்றார்.
"மலர் சமச்சி வெச்சிட்டு தான் போயிருக்காப்ள தம்பி. சாப்பிட வாங்க..."
"அவ வந்ததும் அவளையே கொட்டிக்க சொல்லுங்க... எனக்கு வேண்டாம்" என்று அவரிடம் தன் கோபத்தை காண்பிக்க விரும்பாமல் குரலை இயல்பாக வைத்து பேசியபோதும், அவனது முகம் காட்டிக் கொடுத்திருந்தது.
செண்பகத்திற்கு புரிந்துவிட்டது, கணவன் மனைவிக்கு நடுவே வாய்க்கா தகராறு என்று. ஆனால் அவரும் தலையிட முடியாததால் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்.
வாசல் வரை சென்றவனது, திறன்பேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தான். அவளே தான்,
அழைப்பை ஏற்ற நொடியே நெருப்புக் கங்கை கொட்டினான், "என்ன டீ?" என்று,
"இப்போ நீங்க சாப்பிடாம போனிங்க... நானும் சாப்பிடமாட்டேன் மாமா..."
"நல்லது... நல்லா பட்டினி கெட.... உடம்புல இருக்குற கொழுப்பாவது குறையட்டும்..." என்று சிடுசிடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
வாசலில் இருந்து மகிழுந்து வரை செல்வதற்குள் ஆயிரம் அர்ச்சனைகள் செய்திருந்தான் அவனது பனிக்கு. ஆனால் மகிழுந்தில் ஏறி அமர்ந்த பின்னரும், அதனை உயிர்ப்பிக்க மனமில்லாமல், மீண்டும் வீட்டிற்குள் சென்று உணவுமேசையில் அமர, செண்பகம் பறிமாறினார்.
வயிறு நிறைய உண்டு முடித்து மகிழுந்தில் புறப்பட, சற்று நேரத்தில் மலரிடம் இருந்து புலனக் குறுந்தகவல் வந்தது. 'லவ் யூ புஜ்ஜி மாமா

' என்று.
இடையில் இருந்த ஒற்றை பறக்கும் இதழ் முத்த முகத்தைக் கண்டவனுக்கு அதில் அவளது முகம் தெரிந்ததோ!! என்னவோ!!
"கொல்றாளே!!! ராட்சசி!" என்று கோபத்தில் அவளைத் திட்டியபடி ஆரம்பித்த அவன் பயணம், 'இது வெறும் ஆரம்பம் தான்' என்பது போல் அதன்பின் வந்த பல எமோஜிகளை சமாளிப்பதற்குள் அவன் பாடு திட்டாட்டமாகியது.
இறுதியில் ஸ்டூடியோவை நெருங்கும்போது, "என் குட்டி ராட்சசி!!! இங்கே எங்கேயோ பக்கத்துல இருந்துகிட்டே என்னை எப்படியெல்லாம் பந்தாடுறா பார்!!" என்று காதலோடு கொஞ்சும் அளவிற்கு மாறியிருந்தது.
தன் அலுவலக அறையில் நுழைந்தவனை பின் தொடர்ந்தான் உதி.
"விபா நேத்து நீ கேட்ட ஷீட் உன் மெயிலுக்கு அனுப்பிட்டேன். எடிட்டிங் இன்னைக்கு முடிஞ்சிடும், நைட்டுக்குள்ள அனுப்பி வைக்கிறேன்..."
"ம்ம்... ஓகே" என்றவுடன் உதி தன் கணினிக்குத் திரும்பிட, "உதி" என்று திரும்பி செல்லும் அவனை மீண்டும் அழைத்தான்.
"என்ன டா?"
"அது....!!!" என்று இழுக்க, உதியின் புருவங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி நண்பனை ஆழமிட்டது.
"ம்க்ரும்..." என்று தொண்டையை செருமிய விக்ரம், "நீ.. நீ இன்னைக்கு எங்கேயும் லஞ்ச் ஆர் டின்னர் வெளியே போறேயா?"
"எதுக்கு? உன்னை எங்கேயும் கூட்டிட்டு போகனுமா?"
"அது இல்லே டா... நீயும், வினோவும் எங்கேயும்...... ப்ளான்...... பண்ணிருக்கிங்களா?"
"நீ இல்லாம நாங்க மட்டும் எங்கே போகப் போறோம்... நாம பேசிக்காத போது கூட நாங்களா எங்கேயும் போனது இல்லேயே!!!" என்று தங்கள் நட்பின் ஆழத்தை எடுத்துறைக்க,
"அடேங்கப்பா...... புல்லறிக்குது டா உங்க பாசத்தை நினைச்சு... அதுக்கு தனியா இன்னொரு நாள் உங்களை கவனிச்சிக்கிறேன்..." என்று ஏற்ற இறக்கத்தோடு கூறினான்.
விக்ரமின் 'கவனிச்சிக்கிறேன்' என்ற வாய்ஸ் மாடுலேஷனே கூறியது அவன் எப்படி கவனிக்கப் போகிறான் என்று.
ஆனால் உதிக்கு இத்தனையும் யோசிக்க சில நொடிகள் கூட முழுமையான அவகாசம் கொடுக்கவில்லை விக்ரம். மேலும் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான்.
"பனி இன்னைக்கு உங்களை லஞ்ச் ஆர் டின்னர்க்கு எங்கேயாவது இன்வைட் பண்ணிருகாளா?"
"இல்லேயே டா? ஏன்? என்னாச்சு?"
'எங்கே போனா இவ? டார்ச்சர் பண்றா!!!' என்று விக்ரம், உதியின் கேள்வியைக் கூட காதில் வாங்காமல் யோசிக்கத் தொடங்கினான்.
உதி விக்ரமின் பதிலுக்காக காத்திருக்க, அதனை தாமதமாகவே உணர்ந்த விக்ரம், முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு "சரி... சரி... நீ போ..." என்று விரட்டுவது போல் அலட்சியமாக கூறினான்.
உதியோ "நான் ஏதோ கேட்டா மாதிரி நியாபகம் இருக்கே!" என்று அவனுக்கு நினைவுபடுத்த,
"டேய்.... வேலை நேரத்துல என்ன வெட்டி பேச்சு? வேலை விஷயம் இல்லாம வேற சந்தேகம்ன்னா அப்பறமா வந்து கேளு போ...." என்று மீண்டும் விரட்டினான்.
"எனக்கு தேவை தான், போனவனை கூட்டி வெச்சி கேள்வி கேட்டுட்டு, நான் கேள்வி கேட்டா மட்டும் வெட்டியா பேசுறேனாம்? .... சரிங்க சார்" என்று முன்னதை மெதுவாக கூறிவிட்டு, பின்னதை சத்தமாக கூறிச் சென்றான்.
அதன்பின் தலைக்கு மேல் குவிந்து கிடந்த வேலைகளைக் கண்டு ஸ்த்ரியவளின் நினைவுகள் சற்று நேரத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு வேலையை கவனித்தான்.
இருந்தும் இடையே ஒரு முறை திறன்பேசியை எடுத்து வினோவிற்கு அழைத்து கேட்போம் என்று யோசித்தவன், அவனுக்கு மட்டும் இவ வீட்ல இல்லேனு தெரிஞ்சது, திரும்பவும் சண்ட போடுவான்.... என்று நினைத்து அந்த யோசனையை கைவிட்டான்.
அடுத்த முயற்சியாக செம்பியனுக்கு "வேர் ஆர் யூ?" என்ற குறுந்தகவலை அனுப்பி வைத்துவிட்டு அவன் எப்போது பார்க்கிறானோ அப்போது பதில் அனுப்பட்டும் என்று காத்திருந்தான்.
இடையிடையே தன்னவளிடம் இருந்தும் ஏதேனும் புலனச் செய்தி வந்திருக்கிறதா! குறிப்பாக எமோஜி வந்திருக்கிறதா! என்று எடுத்து பார்த்தபடி இருந்தான்.
சரியாக மதியம் பனிரண்டு மணிக்கு அவனை அழைத்தாள்.
"என்ன மாம்ஸ் கண்டுபிடிச்சிட்டிங்களா?"
"ம்கூம்...."
"அப்போ உதி அண்ணாவை ஒருவழியாக்கியும் எதுவும் தெரியலேயா?"
"ம்ம்ம்"
"அஜ்ஜிஜ்ஜோ.... பாவம் நீங்க... வினோ அண்ணாகிட்டே கேட்டா உங்களை திட்டுவாங்க.... இந்த செம்பியனுக்கும் ப்ராக்ட்டிகல் க்லாஸ் இருக்கு... சோ ஃபோன் எடுத்திருக்கமாட்டானே! பின்னே எப்படி கண்டுபிடிப்பிங்க!!!" என்று அவனை வெறுப்பேற்ற வேண்டியே வினவினாள்.
அவள் பேசும்போது பின்னால் என்ன மாதிரியான சத்தங்கள் கேட்கிறது என்று கவனித்தவன், காதுகளில் "கூக்கூ" என்று குயிலின் குரல் பனிரெண்டு முறை ஒலிக்க, சரியாக அவளும் தன் கேள்வியை கேட்டு முடித்திருந்தாள்.
"கண்டுபிடிக்கிறேன் டி..." என்று நிதானமாகக் கூறியபடி, தன் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து அதனை சுழற்றினான்.
மலரும் கெத்தாக "பாக்கலாம்... பாக்கலாம்... நீங்கலாவே உங்க வாயால 'பனி நீ எங்கேயும் போக வேண்டாம்.... என்கிட்டேயே வந்திரு டி' சொன்னப் பின்னாடி தான் உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பேன்...." என்று மீண்டும் சவால் போல் கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
இதழோரம் புன்னகை தவழ கடகடவென மீதம் இருந்த வேலைகளை முடித்துவிட்டு, மதிய உணவு இடைவேளையில் செம்பியனுக்கு அழைத்தான்.
அழைப்பு முடியப்போகும் தருவாயில் எடுத்த செம்பியன், வழக்கம் போல் "மச்சான் சொல்லுங்க" என்று தான் ஆரம்பித்தான். ஆனால் குரலில் அப்படி ஒரு பதற்றம், ஏதோ ரன்னிங் ரேஸில் ஓடி வந்தவன் போல் மூச்சுவாங்குவது போல் புஸ் புஸ் என மூச்சு காற்று சற்று இடைவெளி விட்டுவிட்டு வந்தது...
விக்ரம் முதலில் குழம்பி, பின் கைபேசியை காதிலிருந்து எடுத்து எண்ணை சரிபார்த்துவிட்டு "ஹான் செம்பியா? எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றிட
"ப்ராக்டிகல் க்லாஸ் மச்சான்.... முடிச்சிட்டு இப்போ தான் வந்தேன்..."
"ஓ... சரி ஓகே... சும்மா தான் கால் பண்ணினேன்..."
"ஓகே மச்சான்... இன்னைக்கு வீட்டுக்கு வரனுமா? ஸ்ஸ்ஆஆஆ" என்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென கத்தினான்.
"செம்பியா? என்னாச்சு டா? என்ன?" என்று விக்ரம் பரபரக்க
"இல்லே... ஒன்னுயில்லே மச்சான்... ஏதோ கையில குத்தின மாதிரி இருந்துச்சு"
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது செம்பியன் பக்கத்திலிருந்து மூன்றாவதாக ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது. "பொய் சொல்றான்.... நம்பாதிங்க..."
அது தெளிவாக விக்ரமின் காதிலும் விழுக, "செம்பியா! யாரது... என்கிட்டேயா பேசுறாங்க!!!"
"இல்லே மச்சான்... நான்..... இங்கே...... கேன்டீன்ல இருக்கேன்.... பக்கத்துல.... வருண்....... இல்லே யாராவது பேசிருப்பாங்க... அது தான் அங்கே கேட்டிருக்கும்...."
பொய் சொல்லத் தெரியாதவன் முதன்முறையாக பொய் சொல்லி வசமாக மாட்டிக் கொண்டான்.
"வருண்... பாய் நேம்மா இருக்கு? வாய்ஸ் கேர்ள் வாய்ஸ் கேட்குதே!!!..."
அய்யய்யோ நேம் சொன்னதை கவனிச்சிட்டாரே!!! "ஆமா.... இப்போ இதை கேட்க தான் கால் பண்ணிங்களா? அதை நேர்ல பாக்கும் போது தெரிஞ்சுக்கோங்க.... இப்போ என்ன விஷயம்னு சொல்லுங்க!!!"
'என்ன வரவர அக்காவும் தம்பியும் ஒரேதா என்னை அதட்டுறானுங்க!!!' என்று நினைத்துக் கொண்டு, "உன் பக்கத்துல இருக்குறது பாய்-ஆ? கேர்ள்-ஆ? தெரிஞ்சுக்க தான் கால் பண்ணினேன்... சொல்லு?"
"ஹலோ... மச்சான்.... ட்ட்...ட்டவர் க்க்...கெடைக்கலே..... அப்பறம் பேசுறேன்..."
"டேய்... டேய்..." அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
'என்ன மறைக்கிறான். இவனை இப்படியே விட முடியாதே!' என்று சற்று நேரம் யோசித்தவன், உடனடியாக வினோவிற்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட "வினோ ஃப்ரீயா? கொஞ்சம் பேசலாமா?"
"ஃப்ரீ தான் டா... என்ன? சொல்லு?"
"செம்பியன் எதுவும் பொண்ணு கூட சுத்துறானா?"
"அ..அ... அப்படியெல்லாம் இல்லேயே" என்று வினோ அவசரமாக மறுத்தான்.
'இவன் வாய் ஏன் டைப் அடிக்கிது!!! ரெண்டு பேரும் என்ன மறைக்கிறானுங்க... வீட்ல பொங்கலை போட்டு வர வெச்சிட வேண்டியது தான்' என்று நினைத்துக் கொண்டு மேற்கொண்டு துருவாமல்,
"ஸூயர் தானே? அப்படி எதுவும் இல்லேயே!"
"நான் இங்கே இருக்கும் போது அதெல்லாம் தைரியமா பண்ணிடுவானா என்ன! அப்படியே இருந்தாலும் ஜஸ்ட் ப்ரெண்டா தான் இருக்கும்... யூ டோண்ட் வொரி... ஐ வில் டேக் கேர்" என்றிட
பாதி பாரம் குறைந்தது விக்ரமிற்கு... ஆனாலும் என்ன மறைக்கிறார்கள் என்று கண்டறிய நினைத்தான்.
நான் என் ப்ரச்சனைக்கு கால் பண்ணினா இவனுங்க புது ப்ரச்சனைய இழுத்துவிட்டுட்டானுங்களே!!! என்று நினைத்துக் கொண்டு அதற்கும் சேர்த்து யோசிக்கத் தொடங்கினான்.
மணி ஒன்றை நெருங்க, விக்ரம் தானாகவே மலருக்கு அழைத்தான்.
"என்ன அதிசயமா இருக்கு? நீங்களா கால் பண்றிங்க?" என்று எடுத்ததும் முதல்வேளையாக தன் சந்தேகத்தை கேட்டாள்.
"எங்கே இருக்க?" என்று கனிவாக வந்தது அவனது குரல்.
"பார்றா... நீங்க இப்படி சாஃப்ட்டா கேட்டோனே நாங்க சொல்லிடனுமோ!!!"
"சரி சொல்ல வேண்டாம்... சாப்பிட்டாச்சா?"
"ம்ம்ம்... ஆச்சு ஆச்சு...."
"ஃபூட் பிடிச்சிருந்ததா? நல்லா சாப்பிட்டேயா?" என்று அவன் கேள்வியின் இடையிலேயே 'குக்கூ' வந்து ஒருமுறை கத்திச் சென்றது. இன்னும் அங்கே தான் இருக்கிறாளா என்பதனை அறிந்து கொள்ளத் தான் அவன் அவளை அழைத்தது. குக்கூவின் இசையில் அதனை உறுதிசெய்து கொண்டு சும்மாவேனும் பேசிக் கொண்டிருந்தான்.
"எனக்காக ஸ்பெஷலா குக் பண்ணினது... நல்லா இல்லாமலா இருக்கும்!!!"
"ம்ம்ம்... பொழுதுபோகுதா? இல்லே சும்மா ஃபோனை தான் உருட்டிட்டு இருக்கேயா?"
"ஃபோனை பாக்களே.... உங்களை தான் பாத்துட்டு இருக்கேன்..."
"என்னையா? எப்படி?"
"வாங்க சொல்றேன்."
"ம்ம்ம்... எங்கே இருக்கேனு சொல்லு. இப்போவே வந்து நிக்கிறேன்..."
"ஆச தோச....... ஆமா உங்களுக்கு ஆபிஸ்ல வேலையே இருக்காதா? வெட்டியா உக்காந்து என்கிட வாயாடிட்டு இருக்கிங்க?"
"தேவைதான் டி... பொண்டாட்டி கோபிச்சிட்டு போனாளே.... மார்னிங் ஏதோ கோபத்துல சாப்பிட்டேயா! இல்லேயானு! கூட கேட்காம விட்டுட்டோமே, மதியமாவது கேட்போம்னு உனக்கு ஃபோன் பண்ணினேன்ல.... என்னை இதைவிட கேவலமாவும் கேட்ப!!!"
"சாரி..... சாரி..... சாரி மாம்ஸ்...." என்று கெஞ்சினாள், இல்லை இல்லை கொஞ்சினாள்.
"நான் ஃபோனை வெக்கிறேன்" என்று அவன் மேலும் முறுக்கிக் கொள்ள
அவளிடம் எந்த பதிலும் இல்லை என்றவுடன் "சரி தான் போடி...." என்று அழைப்பைத் துண்டித்தான்.
அவனது புலனத்தில் 'ஆங்கிரி பேர்ட் GIF' வந்து நின்று முறைத்துக் கொண்டிருந்தது.
'என்ன தான் நான் நல்ல மூட்ல இருந்தாலும் என்னை ஆங்கிரி பேர்டா மாத்துறதே இவ தான். இதல இவளுக்கு கோபம் வந்துக்குது....'
மூனுற் மணி வரை விக்ரம் அவளது அழைப்பை எதிர்பார்த்தபடி தனதூ வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். அவ்வபோது கைபேசியை எடுத்து அவளது எண்ணை தட்டிவிட்டு ரிங் அடிப்பதற்கு முன்பே கட் செய்து ஓரமாக வைத்துவிடுவான். அவனாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசினால் அவள் வெட்டி பேச்சு, வீண் அரட்டை என்று வம்பு வளர்ப்பாள் என்று நினைத்து அமைதியடைவான்.
மூன்று மணிக்கு மேல் அவளது லீலை தொடர்ந்தது. இவன் ரிங் ஆவதற்கு முன் கட் செய்தான் என்றால், அவள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு ரிங் வந்தபின் கட் செய்தாள். முதலில் பார்த்தும் பார்க்காதது போல் நடித்தவனால் வெகுநேரம் அந்த நடிப்பைத் தொடர முடியவில்லை.
"போன் கால்-லேயே என்னை ஆட்டி வைக்கிறா!!! இனிமையான இம்சை!!!" என்று ஒவ்வொரு மிஸ்டு காலிற்கும் ஒவ்வொரு செல்லப் பெயர் வைத்து திட்டத் தொடங்கினான்.
சரியாக மணி நான்கை நெருங்க மலரின் மனம் அவனை அளவிற்கு அதிகமாக எதிர்பார்க்கத் தொடங்கியது.
'நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிப்பாரா? அப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன செய்வார்!!!' என்று அவனது நினைவுகளே அவளைச் சூழ்ந்திருந்தது.
அங்கே அலுவலகத்தில் இருந்தவனுக்கோ அப்படி எந்த யோசனையும் இல்லை போல... கையில் ஒரு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு தந்தையின் அறைக்குச் சென்றவன்,
"ப்பா... ஈவ்னிங் ஒரு ஃபங்ஷன் இருக்கு... நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க" என்றபடி அழைப்பிதழை ரத்தினத்தின் முன் வைத்தான்.
அவர்களது தொலைக்காட்சியின் ஸ்பான்ஸர்ஸ் குடும்ப விழா அழைப்பிதழ் அது.
"இந்த ஃபங்ஷனுக்கு லாஸ்ட்டு வீக் கேட்ட போது போக வேண்டியது இல்லேனு சொன்னே.... இப்போ என்னடானா எங்க ரெண்டு பேரையும் போயிட்டு வர சொல்றே! என்னடா? என்ன விஷயம்?"
"இல்லே அங்கே போன அடிஷ்னலா டூ ஆர் த்ரி ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பாங்கல்லா... அதான்"
"அதுக்கு எதுக்கு உங்க அம்மா... நானே போயிட்டு வரேன்...." என்றபடி கைகடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவர், "இன்னு ஹாஃப் ஆன் ஆர்ல கெளம்புறேன்" என்றார்.
"அம்மாவும் நீங்களும் ஒன்னா சேர்ந்து வெளியே போயி ரெம்ப நாள் ஆச்சேனு சொன்னேன்... உங்க வொய்ஃப் கூட்டிட்டு போறதும் போகாததும் உங்க விருப்பம்" என்று ஏதோ அவனுக்கு அதில் ஒன்றுமே இல்லை என்பது போல் காட்டிக் கொண்டான். ஆனால் உள்ளுக்குள்ளோ எப்படியாவது அம்மாவையும் கூட்டிட்டு போயிடுங்க ப்ளீஸ் என்று மன்றாடியது அவன் மனது.
'ஆடு நனையிதுனு ஓணாய் வருத்தப்பட்ட கதையால இருக்கு இவன் பேசுறது!' என்று நினைத்துக் கொண்டு,
"சரி விசாலிகிட்ட கேட்கிறேன். வர்றேனு சொன்னா கூட்டிட்டு போறேன்..." என்று அப்போதைக்கு பேச்சை முடித்துக் கொண்டார்.
விக்ரம் தனதறைக்கு வந்த பின்னும் ஒரு விதமான டென்ஷனோடு இருந்தான். சற்று நேரத்தில் இன்டர்காமில் ரத்தினம் தன் மகனை அழைக்க, விக்ரம் தன் டென்ஷனை மறைத்து
"ஹலோ" என்றான்.
"நானும் அம்மாவும் சேர்ந்து போயிட்டு வர்றோம்... நைட் வெளியவே டின்னர் சாப்பிட்டுட்டு..."
"அப்படியே ஏதாவது மூவி கூட்டிட்டு போயிட்டு வாங்க..." என்று அவர் என்ன கூற வந்தார் என்று கூட கவனிக்காமல் ஆளுக்கு முன்னதாக கூறினான்.
"தேவை தான் டா இந்த வயசான காலத்துலே..... உன்னை பிள்ளையா பேத்ததுக்கு அதையும் செய்து தொலைக்கிறேன்.... நீ டின்னர் ஏதாவது ஆர்டர் பண்ணிக்கோ... அதைத்தான் சொல்ல வந்தேன்... மறந்திடாதே... பைய்" என்று கூறி வைத்துவிட்டார்.
ரத்தினமும், விசாலியும் கிளம்பிச் சென்றுவிட்டனர், என்று தெரிந்ததும் விக்ரமும் புறப்பட்டான்.

-தொடரும்.