மின்னலே என் வானம் தீண்ட வா....
அத்தியாயம் - 1
“தீபம்” பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வானளாவிய கட்டடங்களுடன் சிங்காரச் சென்னையில் நிமிர்ந்து நின்றது.
அட்மின் பிளாக்கில் உள்ள கான்பிரன்ஸ் ஹாலில், உயிர்காக்கும் உன்னதப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பல்வேறு துறையைச் சார்ந்த சிறப்பு மருத்துவர்களும் அனைத்து நிர்வாகக் குழுவினரும் அந்த அவசர கூட்டத்திற்காக குழுமியிருந்தனர்.
தீபம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் இளங்கோ எழுந்து நின்று அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று பேச ஆரம்பித்தார்.
“மருத்துவப் பணி இல்லையென்றால் உலகில் மனித இனம் என்றோ அழிந்திருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான பணியை 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நமது மருத்துவமனையில், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற பல திறமையான மருத்துவ நிபுணர்களால் 60 துறைகள் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நமது மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறிய அதிநவீன ‘அக்விலியன் ஒன் பிரிசம் 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர்’ என்ற கருவியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த அதிநவீன கருவி, ஜப்பானில் தயார் செய்யப்பட்டது. புற்று நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். நோயாளிகள் குறைந்த நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
நமது தீபம் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் கௌசிக் அவர்கள் இந்த அறிமுக விழாவை மிகப்பெரிய அளவில் எடுத்து நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த அறிமுக விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உலகப் புகழ்பெற்ற கார்டியாலஜிஸ்ட், டாக்டர் சித்தார்த் வர்மன் வருகை புரிய உள்ளார்.
டாக்டர் சித்தார்த் நமது குழுமத் தலைவர் டாக்டர் கௌசிக் அவர்களின் நெருங்கிய நண்பர். ஆகையினால் விழாவில் எந்த ஒரு சிறு குறையும் இருக்கக் கூடாது.
இந்த அறிமுக விழா நமது தீபம் மருத்துவமனையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்.
எனவே அனைத்து மருத்துவர்களும் இந்த விழாவிற்கான தங்களது பங்களிப்பினை சிறப்பாக செய்து தரும்படி நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.
டாக்டர் இளங்கோ பேசி முடித்ததும் கூட்டத்தில் இருந்த அனைத்து மருத்துவர்களும் கையொலி எழுப்பி தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
அந்த கான்பிரன்ஸ் ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தியின் கண்கள் மட்டும் அதிர்ச்சியில் விரிந்தன.
கைகள் கரவொலி எழுப்புவதற்கு பதிலாக இறுக மூடிக்கொண்டு மனதின் உள்ளே எழும் கோபத்தை கட்டுப்படுத்த துடித்தன.
“சித்தார்த் வர்மன்..... “ அவளின் உதடுகள் ஓசையில்லாமல் அவனின் பெயரை சொல்லி இகழ்ச்சியாய் வளைந்தன.
ஒருவேளை இது வேறு யாராக இருக்குமோ என்று எண்ணிய அந்தப் பெண் மனது,
தன் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து, கூகுள் ஆண்டவரிடம் அவன் பெயரைப் பதிவு செய்தாள்.
எவனொருவனின் பெயரை தன் மனதால் கூட நினைக்கக் கூடாது என்று இத்தனை ஆண்டுகாலம் நினைத்து இருந்தாளோ அவனுடைய பெயரை, இன்று தானே தன் விரல்களால் எழுத வைக்கும் தன் விதியை சபித்தாள்.
சித்தார்த் வர்மனின் புகைப்படம் மற்றும் அவனது மருத்துவக் கல்வித் தகுதி, சிறப்பம்சங்கள் எனப் பட்டியலிட்டது கூகுள்.
சித்தார்த் வர்மனின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்க, அதில் அவனின் கண்கள் தன்னை விழுங்குவதைப் போல் பார்ப்பதை உணர்ந்த பாவை, சட்டென உலகம் நின்ற உணர்வில், அனிச்சையாக தன் கைகளில் இருந்த அலைபேசியை தவறவிட்டாள்.
தனது அலைபேசி கீழே விழுந்தது கூட தெரியாமல், அவள் கண்கள் ஏக்கம், தாகம், கோபம் என பல்வேறு உணர்ச்சிகளை பிரதிபலித்தன.
கீழே விழுந்த அவளது அலைபேசியை எடுத்த டாக்டர் கார்முகில், யோசனையுடன் அமர்ந்திருந்த அந்தப் பதுமையின் தோளைத் தொட்டு உலுக்கினாள்.
“ஹான்...... ஒன்றுமில்லை முகில்“ என்று கூறியபடி தன்னை சுதாரித்து மீட்டெடுத்தாள்.
அந்தக் மதுர மொழியின் சொந்தக்காரி டாக்டர் மதுரவர்ஷினி.
“ மது.... போன் கீழே விழுந்தது கூட தெரியாமல் அப்படி என்ன பலத்த யோசனை? “ இடது புருவம் வில்லாய் உயர, கேள்விக்கணை விடுத்தாள் கைனகாலஜிஸ்ட் கார்முகில்.
“ நத்திங் முகில்..... “ என்று கூறியபடி கான்பிரன்ஸ் ஹாலை திரும்பிப்பார்க்க அங்கே காலி இருக்கைகளைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.
“ ஹலோ மேடம்.... கூட்டம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. வா கீழே சென்று காபி குடித்து வரலாம்.
இன்று எனக்கு நைட் டியூட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் மதுரவர்ஷினி மேடம் எப்பொழுதுமே நைட் டியூட்டி தான். அதன் மர்மம் என்ன என்று ஒரு நாள் நான் கண்டு பிடிக்கப் போகிறேன்” என்று விரலை நீட்டி மிரட்டினாள் கார்முகில்.
கையில் இருந்த போனை பார்த்தாள் மதுர வர்ஷினி. டச் ஸ்கிரீனில் ஏற்பட்ட கீறல் போல் தன் மனதில் ஏற்பட்ட கீறலில் விரிசல் விழுவது கண்டு, ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்தினாள்.
உடைந்த போனை சரி செய்யலாம் ஆனால் தன் மனதை.... கேள்விகளை புறந்தள்ளிவிட்டு கார்முகிலோடு கீழே இறங்கினாள் மதுரவர்ஷினி.
மதுரவர்ஷினி ஐந்தரை அடியில், ஆளை அசத்தும் அழகோடு, பிரம்மன் ரசித்து செதுக்கிய சந்தனச் சிற்பம்.
தன் அழகைப் பற்றி கவனத்தில் கொள்ளாது, டாக்டர் கோட்டுடன் காலர் நெக் காட்டன் சுடிதாரில்,கம்பீரம் குறையாது, இடை தாண்டிய பின்னலை பின்தள்ளிவிட்டு, மலர்ந்த நெற்றியில் சிறு கருப்புப் பொட்டோடு, சூரியனை தவிர்க்கும் இரவு நேரத்து அல்லியாய் அந்த மருத்துவமனையில் வலம் வரும் கைராசியான கைனகாலஜிஸ்ட்.
இருவரும் கீழே இறங்கி, காபி ஷாப்பில் அமர்ந்து தங்களுக்கான காபியை அருந்த தொடங்கினர்.
திரும்பும் பக்கமெல்லாம் மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பைக் கண்டு யோசனையாய் கார்முகிலை பார்த்தாள் மதுரவர்ஷினி.
“ அது ஒன்றும் இல்லை மது. மிஸ்டர் சித்தார்த் வர்மனுக்கான வரவேற்பு நடவடிக்கை” என்றாள்.
“ஓ..... “ என்று ஓலமிட்டது மதுரவர்ஷினியின் மனது.
“ அதுமட்டுமில்லை மது. டாக்டர் வர்மன் நமது தீபம் குழுமத் தலைவர் கௌசிக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜெர்மனியில் அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு இங்கேயே சேரப்போவதாக ஒரு வதந்தி சுற்றிக்கொண்டிருக்கிறது” என்றாள் கிசுகிசுத்த குரலில்.
கார்முகிலை முறைத்துப் பார்த்தாள் மதுரவர்ஷினி.
“ ஹேய் மது நிஜமாவே பா... எனக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து இந்த தகவல் கிடைத்தது “ என்று கூறி கண்ணடித்தாள் கார்முகில்.
தன் தோழமையின் மகிழ்வில் தன் துக்கங்களை காபியோடு சேர்த்து விழுங்கிவிட்டு எழுந்தவளுக்கு, வாயின் கசப்போடு சேர்த்து மனமும் கசந்தது போனது.
தன் தளத்திற்கு கிளம்பிய கார்முகிலை பார்த்து, புன்முறுவல் புரிந்து வழி அனுப்பினாள் மதுரவர்ஷினி.
மனதின் பாரம் காலை அழுத்தியதால் என்னவோ, மதுரவர்ஷினியின் நடை தளர்ந்தது.
தனது அறைக்குள் வந்து, நாற்காலியில் அமர்ந்து ஸ்டெதஸ்கோப்பை கையிலெடுத்த மதுரவர்ஷினி அடுத்த நொடி டாக்டர் மதுரவர்ஷினியாய் மாறினாள்.
கர்ப்பிணிப் பெண்களின் பயம் கலந்த கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் அளித்தாள்.
புறநோயாளிகள் மதுரவர்ஷினியின் தைரியம் தரும் வார்த்தைகளுக்காகவே இரவு எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பார்த்துச் செல்வர்.
இதுவரை மதுரவர்ஷினி பார்த்த அனைத்து பிரசவங்களும் அவளுக்கு வெற்றியைத் தேடித்தந்தன.
செவிலியர் உள்ளே வந்து, “டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி செய்துவிட்டோம். பேஷன்ட் அருந்ததிக்கு அனஸ்தீசியா கொடுக்கும் டாக்டரும் வந்துவிட்டார். உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
சிரித்த முகத்துடன் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றாள் மதுரவர்ஷினி.
மனைவியின் பிரசவத்தின் போது கணவனைக் கூட இருந்து சில நிமிடங்கள் மட்டும் பார்க்கச் சொன்னாலே போதும்.
ஆயுளுக்கும் புரியும் பெண்ணின் வலி. இருபது எலும்புகள் நொறுக்கப்படுவது போன்ற வலிக்குச் சமமானது பிரசவ வலி என்பதை உணரும் போது, பெண்ணவள் தாயாகும் போது, ஆண் தாயுமானவனாகிறான்.
தன் தாயைக் கதற வைத்துவிட்டு சுகப்பிரசவத்தில் பிறந்த அந்த மழலையை, தன் கையில் ஏந்திய மதுர வர்ஷினியின் மனம் நினைத்தது ஒன்று தான்.
“ எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.... “.
இந்த நொடி தன் துன்பம் துடைத்த, அந்த இன்பத்திற்கு முத்தம் கொடுத்து இந்த உலகிற்கு வரவேற்றாள்.
வெளியே வந்த மதுரவர்ஷினியை பார்த்த பேஷன்ட் அருந்ததியின் குடும்பத்தார் கையெடுத்து வணங்கினர்.
“ நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தையோடு நன்றாக இருக்கவேண்டும் டாக்டர்... “ என்ற அவர்களின் வாழ்த்தில் அவளது இதயம் நின்று துடித்தது.
தன் அறையில் நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்த படி இருண்ட வானத்தை வெறித்துப் பார்த்தாள் மதுரவர்ஷினி.
நிலவும் இல்லாமல், நிலவினை பாதுகாக்கும் மேகப் படையும் இல்லாமல், கரிய வானத்தில் தூரத்தில் ஓர் ஒற்றை விண்மீன் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
தன் பயணப் பாதையில் தான் மட்டும் ஒற்றையாய் நிற்பது போல் உணர்ந்தாள்.
தன் தலையை உலுக்கி, காலில்லாத தொட்டிலுக்கும் காலில்லாத கட்டிலுக்கும் இடையே போராடும் இந்த வாழ்வில் தன் காலில் நிற்க வேண்டும் என்ற ஒற்றை நம்பிக்கையில் உறுதியாய் நின்றாள்.
பின்னோக்கி செல்லத் துடிக்கும் தன் எண்ண அலைகளை கட்டி வைத்தாள்.
தன் மனம் தன் கட்டுக்குள் இல்லாமல் தவிப்பதை கண்ட மதுரவர்ஷினி, இதற்கெல்லாம் காரணமான சித்தார்த் வர்மனை வசை பாடத் தொடங்கினாள்.
தன் மனதை வென்று விட்டோம் என்று இத்தனை காலமாக இறுமாப்பில் இருந்த அந்தப் பெண் இதயத்தில், நேரம் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாவதை உணர்ந்தவள், ஒரு வெற்றுக் காகிதத்தை எடுத்து அதில் சித்தார்த் வர்மன் என்ற பெயரை எழுதி, அதனை இதமாக வருடினாள்.
பின் தன் மடத்தனத்தை நொந்தபடி அந்தக் காகிதத்தை சுக்குநூறாகக் கிழித்தாள். இதழ் கடையோரம் புன்னகை மலர்ந்தது மதுரவர்ஷினிக்கு.
விசிட்டிங் ஹவர்ஸ் முடியும் நேரம் வந்ததால், நோயாளிகளைக் காண ரவுண்ட்ஸ் செல்லப் புறப்பட்டாள்.
ஜெர்மனியில் உணவை உட்கொண்டிருந்த சித்தார்த் வர்மனுக்கு திடீரென புரை ஏற, கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் நீர் வழிய செருமினான்.
பூவோடு போட்டியிடும் ஒரு பூங்கரம் அவன் தலையை இதமாய் தட்டியது......
மின்னல் வெட்டும்....

Last edited: