மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 10
மதுரவர்ஷினி காதல் சொன்ன கணமே கூடியிருந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி அவர்களுக்கு தனிமை கொடுத்துச் சென்றனர்.
தன் பின்னால் ஒளிந்த மதுரவர்ஷினியை தன் கரம் கொண்டு இழுத்து தன் முன்னே நிற்கச் செய்தான் சித்தார்த் வர்மன்.
கண்களில் தீவிரம் குடிபுக அவள் கண்களையே உற்று நோக்கினான்.
அவனின் பார்வையை வீச்சை தாங்க முடியாத மதுரவர்ஷினி தலை குனிந்தாள்.
தன் கைகள் கொண்டு அவள் நாடியைப் பற்றி அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“இந்த நொடி, இந்த கணத்திலிருந்து நம் காதலில் பின்வாங்க மாட்டேன் என்று எனக்கு உறுதி கூறுவாயா? “ என்றான் தீர்க்கமாக.
‘நம் காதல்’ என்ற அவனின் வார்த்தைகளில் மதுரவர்ஷினியின் இதயமோ புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்தது.
அதனை இசைத்த இசை மகளும், இசைவாய் சித்தார்த் வர்மனின் மார்பில் சாய்ந்துகொண்டு “என் மரணம் என்னைத் தீண்டும் வரை உங்களைத் தவிர வேறு ஒரு ஆண்மகனை என் மனதாலும் தீண்ட மாட்டேன்” என்றாள் மையல் பொங்கும் விழிகளுடன், அவன் விழிகளைப் பார்த்தவாறு.
அவளை தன்னில் இருந்து பிரித்து தூரத் தள்ளி நிற்கச் செய்தான்.
“எனக்கு சொந்தங்கள் என்று யாரும் இல்லை மதுரவர்ஷினி” என்றான்.
“இனி உங்களின் உயிர்ச் சொந்தம் நான் தான்” என்றாள்.
“நான் சேர்த்த கல்வி செல்வத்தை தவிர வேறு செல்வங்கள் என்னிடம் கிடையாது” என்றான்.
“இந்த திருமகனின் உள்ளத்தில் திருமகளாய் செல்வம் கொழிக்க வாழ்வேன் நான்” என்றாள் காதலுடன்.
“நீ என்னவளானால் என்னில் இருந்து உன்னை பிரிப்பது கடினம் “ என்று நான் உறுதியாக.
“கடலோடு சங்கமித்த நதியை பிரிப்பதும் கடினம்” என்றாள் அவனுக்கு குறையாத உறுதியோடு.
தன் காதலை உறுதியோடு கூறிய மதுரவர்ஷினியின் தீவிரம் சித்தார்த் வர்மனின் இதயக் கதவை தட்டித் திறந்தது.
உறவுகளின் பாசத்திற்காக பாலைவனமாய் தவித்த சித்தார்த் வர்மனின் மனதிற்கு தன் உயிரையே காதல் மழையாய் பொழிந்தாள் மதுரவர்ஷினி.
முளைவிட்ட அவர்களின் காதல் விதை, அடுத்தடுத்த அவர்களின் சந்திப்பால் வேரூன்றி வளர்ந்தது.
பழகிய வெகு சில நாட்களில் மதுரவர்ஷினி சித்தார்த் வர்மனிடம் அதிகம் கண்டது, இதய நோய் மருத்துவத்தில் சாதனை புரியத் துடிக்கும் அவன் வேட்கையைத்தான்.
குமரகுருபரர் பற்றி கூறும் போது அவன் கண்ணில் மின்னும் நன்றி உணர்ச்சியை மனதால் படித்தாள் மதுரவர்ஷினி.
அத்தனை ஆர்வம் மிகுந்த மருத்துவப் படிப்பிலும் மதுரவர்ஷினிக்காக அவன் ஒதுக்கும் நேரங்கள் அலாதியானது.
காதல் சொன்ன கணத்தில் இருந்து ஒரு நொடி கூட ஒழுக்கம் தவறிய பார்வை அவனிடம் கண்டதில்லை மதுரவர்ஷினி.
அத்துணை கண்ணியம் மிகுந்தவனைக் கணவனாக அடைய போகும் தன்னை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.
நூலகத்தில் மதுரவர்ஷினிக்கு மருத்துவ குறிப்புகள் கொடுப்பதும், அவளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதும் என அவர்கள் காலம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
தன் காதலை தன் தந்தையிடமிருந்து மறைத்த அந்த ஒரு குற்ற உணர்ச்சியைத் தவிர மதுரவர்ஷினிக்கு அவளது காதல் தித்திக்கும் தேனாய் இனித்தது.
அன்று மதுரவர்ஷினியின் பிறந்தநாள். காலையில் எழுந்தது முதலே மதுரவர்ஷினியின் கால்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டு சித்தார்த் வர்மனை நோக்கி பறக்கத் துடித்தது.
தன் மனதில் நேசம் பிறந்த பிறகு வரும் முதல் பிறந்தநாள் அல்லவா. மதுரவர்ஷினியின் மனமோ எதிர்பார்ப்பில் துள்ளிக் குதித்தது.
சிவானந்தன் தன் மகளின் பிறந்தநாள் அன்று பேரானந்தம் அடைந்தார். தன் மனைவியின் உருவப் படத்திற்கு முன் நின்று தன் மகளைத் தான் சிறப்பாய் வளர்த்ததை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார்.
பின் தன் மகளுக்கு என தான் பார்த்து பார்த்து ஆசையாய் வாங்கிய பரிசுப் பெட்டியை மனைவியிடம் காட்டி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு மகளை நோக்கி வந்தார்.
தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நேசம் பொங்கக் கூறி பரிசுப் பெட்டியை கையினில் கொடுத்தார்.
ஆசையாய் அதனைப் பிரித்த மதுரவர்ஷினி, அதனுள் இருந்த கரு நீலப் புடவையில் வெள்ளை பொடிக்கற்கள் வைத்து வெள்ளி ஜரிகை இழையோடிய டிசைனர் புடவையைப் பார்த்து வியந்தாள். புடவைக்கு பொருத்தமான வைர அணிகலன்களையும் கண்டு தன் தந்தையின் ரசனையை எண்ணி மகிழ்ந்தாள்.
தன் தந்தையின் அன்பை எண்ணி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக் கொண்டு தன் நன்றியை பகிர்ந்து கொண்டாள்.
தனது பரிசில் மகிழ்ந்த மகளின் தலையை ஆதுரமாய் தடவிக் கொடுத்தார்.
கல்லூரிக்கு விரைவாக கிளம்பிச் சென்று, சித்தார்த் வர்மன் அமரும் இருக்கையில் கடிதத்தை வைத்து விட்டு ஓடி வந்து விட்டாள்.
செடிகளின் மறைவில் நின்று கொண்டு சித்தார்த் வர்மனின் வரவை ஆவலோடு எதிர் நோக்கினாள்.
தன் வகுப்பிற்குள் நுழைந்த சித்தார்த் வர்மன், அந்தக் கடிதத்தை யோசனையுடன் பார்த்துவிட்டு பின் நிதானமாக பிரித்து படிக்கத் தொடங்கினான்.
“உருவமில்லா உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவனே....
என்னை முடிவில்லா உலகிற்கு அழைத்துச் சென்றவனே...
என் புன்னகையை புதுப்பித்து தந்தவனே...
என் உள்ளம் நிறைந்து என் உலகமாய் மாறியவனே...
உன் விழிகளை மூடிக் கொள்...
கசிந்துருகும் என் உயிர் உன் சுவாசத்தோடு கலந்ததை உணர்கிறாயா?
என்னில் உறைந்தவனே,
நான் மண்ணில் பிறந்ததினமான இன்று உன்னை காண, உன் நினைவை சுமந்துகொண்டு,
ஓயாது கரை தீண்டி மகிழும் அலை கடல் அருகே, உனை வேண்டி காத்திருக்கிறேன்.....”
மதுரவர்ஷினியின் கடிதத்தைப் படித்து முடித்ததும் காதல் கர்வத்தில் அவன் உதட்டோரம் துடித்தது.
அவனின் எதிர்வினைகளைக் கண்ட மங்கையோ ஆனந்தத்தில் கண்ணீர் மல்க அவனைப் பார்த்தபடியே நின்றாள்.
தன்னவளின் பிறந்தநாள் தினமான இன்று அவளைக் காண அவன் உள்ளமும் பேராவல் கொண்டது.
மதுரவர்ஷினி தென்படுகிறாளா என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.
அவளைக் காணாது அவளின் கடிதத்தை மென்மையாக தடவி தன் சட்டைப்பையில் பத்திரம் செய்தான்.
அவன் இதயம் சேர்ந்த தன் கடிதம் கண்டு மதுரவர்ஷினிக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
தனது வகுப்புத் தோழர்களிடம் இன்று ஒரு நாள் விடுமுறை சொல்லி விடுமாறு கூறி விட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
சித்தார்த் வர்மன் வெளியேறியதைக் கண்ட மதுரவர்ஷினி மனம் நிறைந்த குதூகலத்துடன் அவளுக்கு முன்னே விரைந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றாள்.
பகல் பொழுதில் கூட்டம் இல்லாத அந்த கடற்கரை மதுரவர்ஷினிக்கு மிகவும் ரம்மியமாகத் தோன்றியது.
தூரத்தில் வந்த சித்தார்த் வர்மன் கதிரவனின் வெண்மையான ஒளிக் கதிர்களில் மதுரவர்ஷினியின் கரு நீலப் புடவையில் உள்ள கற்கள் பளபளத்து ஜொலித்து நின்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தபடி வந்தான்.
அவளின் வைர ஆபரணங்கள் அவளின் செம்பவள கன்னங்களில் பட்டுத் தெறித்தன.
ஒளிப் பாவையாக நின்றவளின் தோற்றம் அவனை அசர வைத்தது.
கடவுள் தனக்குத் தந்த இந்த புதையலை வாழும் காலம் முழுவதும் தன் மனதில் பொத்தி வைத்து பாதுகாக்கத் துடித்தான்.
மதுரவர்ஷினியின் பின்னே வந்தவன், “மது....“ என்று மென்மையாக அழைத்தான்.
அவனின் குரல் கேட்டவுடன், “சித்தூ.... “ என்று கூறியபடி மதுரவர்ஷினியும் திரும்பினாள்.
ஆளை அசரடிக்கும் அழகுடன் நின்றிருந்த அந்த அழகியோ, தன்னை விழுங்குவதை போல் பார்க்கும் அந்த அசுரனை கண்டு நாணத்தால் தலை கவிழ்ந்தாள்.
இந்த உலகில் தனக்கே தனக்காக உருகும் அந்த உயிரைக் கண்டு உயிர் நெகிழ்ந்தான் சித்தார்த் வர்மன்.
தனது வலக்கையை அவள் புறம் விரித்துக் காட்டினான்.
“ மது உன் வலது கையை என் கை மீது வை... “ என்றான் மென் குரலில்.
பெண்ணவளும் ஆணவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு தனது வலது கையை அவனது வலது கை மீது வைத்தாள்.
இணைந்த இரு கைகளையும் ஆதவனை நோக்கிக் காட்டினான் சித்தார்த் வர்மன்.
“உலகையே இருளில் இருந்து காக்கும் ஒளி பொருந்திய இந்த சூரியன் சாட்சியாக என் வாழ்நாள் முழுவதும் உன்னை என் உயிராக போற்றிப் பாதுகாப்பேன் மது “ என்றான் உறுதியான குரலில்.
தன் காதல் தரும் நம்பிக்கையில் கண்களில் நீர் வழிய கால் மடங்கி அப்படியே கடற்கரை மணலில் அமர்ந்தாள் மதுரவர்ஷினி.
சித்தார்த் வர்மனும் கடற்கரை மணலில் மண்டியிட்டு “ எனக்காக மண்ணில் வந்து அவதரித்த தேவதைப் பெண்ணே! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்றான் அவளது காதின் ஓரத்தில் கிசுகிசுப்பாக.
அவனின் ரகசியப் பாஷை அவளுக்கு மோகன புன்னகையை வரவழைத்தது.
அவனின் தோள்களின் மீது கைகளை ஊன்றி எழுந்து நின்றாள்.
அவனும் தன் கைகளில் உள்ள மணலை தட்டிக் கொண்டு எழுந்து நின்றான்.
ஏதோ பேச ஆரம்பித்தவனை, “ஷ்.... இனி நீங்கள் பேசக் கூடாது. மதுரவர்ஷினி கூப்பிடும் இடத்திற்கு நீங்கள் கண்டிப்பாக கண்ணை மூடிக் கொண்டு வரவேண்டும்” ஆணையிட்டாள் அந்த காதல் இளவரசி.
அழுத்தமான அந்த உதடுகள் மலர்ந்து சிரித்தன. தன் கண்களை மூடிக்கொண்டான்.
அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மதுரவர்ஷினி அவனை வழிநடத்தினாள்.
அந்தக் கடற்கரையின் அருகில் ஆறு தளங்களைக் கொண்ட அக்வாரியம் ஒன்று இருந்தது. வார நாட்கள் மற்றும் காலைப்பொழுது என்பதால் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
தங்களுக்குரிய டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட மதுரவர்ஷினி அவனை அழைத்துக்கொண்டு அக்வாரியத்தின் லிப்டுக்குள் புகுந்தாள்.
கண்ணை மூடிக் கொண்டு காதல் குருடனாய் அவளின் பின்னே சென்றான் சித்தார்த் வர்மன்.
நான்கு தளம் வரை லிப்ட் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஐந்தாவது தளத்திற்கு வந்தவுடன் திடீரென ஏற்பட்ட பழுதினால் லிப்ட் நின்று விட்டது.
காற்று இல்லாமல், திடீரென்று லிப்ட் நின்ற அதிர்ச்சியில் நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க ஆரம்பித்தது மதுரவர்ஷினிக்கு.
ஏதோ ஒரு பிரச்சனை என்று உணர்ந்த சித்தார்த் வர்மன் தன் கண்களைத் திறந்தான்.
அச்சத்துடன் மருண்ட விழிகளுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மதுரவர்ஷினியைப் பார்த்து,
“ என் பிறந்தநாள் மலரின் மீது பனித்துளிகள் அமர்ந்திருப்பது அழகாக உள்ளது” என்றான் தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை ரசித்தவாறே.
அவனின் இலகுவான பேச்சில் சற்று பயம் தெளிந்த
மதுரவர்ஷினி, “பிறந்தநாள் மலருக்கு ஒரு மலர் கூட பரிசளிக்க கூடாதா? “ செல்லமாக தன் உதட்டை சுளித்து பழிப்பு காட்டினாள்.
அவசரத்தில் தன் காதலிக்கு பரிசளிக்க பரிசு வாங்கி வராத தன் மடத்தனத்தை எண்ணி ஒரு நிமிடம் தன் இரு புருவங்களை மத்தியில் சுருக்கினான்.
அடுத்த நிமிடம் கண்கள் மலர்ந்து உதட்டோரம் ரகசிய சிரிப்பில் துடிக்க மதுரவர்ஷினியைப் பார்த்து, “பிறந்தநாள் பரிசை மலராய் தந்தாலென்ன? இதழாய் தந்தாலென்ன?” என்று கூறியபடி மதுரவர்ஷினியின் மலர்க்கன்னத்தில் தன் இதழைச் சேர்த்தான்.
மின்னல் வெட்டும்....