• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 13

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 13

சித்தார்த் வர்மனோடு வெளியில் வந்த மதுரவர்ஷினி, வெளி நோயாளிகள் பார்க்கும் பிரிவிற்குச் சென்று சித்தார்த் வர்மனுக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் நடைபெற ஏற்பாடு செய்தாள்.


தேவையான ஊசி மருந்துகள் எடுத்துக் கொண்ட சித்தார்த் வர்மனை அவன் தங்கி இருக்கும் அறைக்கு அவனது வகுப்புத் தோழர்களுடன் அனுப்பி வைத்தாள்.

குளிர்சாதனக் கிடங்கில் இருந்து வெளிவந்த வேளையிலிருந்து, சித்தார்த் வர்மனை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை மதுரவர்ஷினி.

பேச்சிழந்த பதுமையாக இருந்தவளை அழுத்தமாக பார்த்தபடியே இருந்தான் சித்தார்த்.


தன் வீட்டிற்கு வந்த மதுரவர்ஷினியை “வாம்மா... “ என்றபடி அவளின் தோள்களை தொட வந்தார் சிவானந்தன்.

தன் யோசனைகளுக்குள்ளே உழன்றபடி வந்த மதுரவர்ஷினி அனிச்சை செயலாக தன் தந்தையின் கைகளைத் தட்டிவிட்டாள்.

“மதுரவர்ஷினி... “ என்ற அவரது உயர் சத்த குரலோ, அவளது மூளையை எட்டவில்லை. தன் போக்கில் மெதுவாக படி ஏறத் தொடங்கினாள்.

மதுரவர்ஷினியை பின்தொடர நினைத்தவர் பின் தன் தலையை அசைத்துக்கொண்டு அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தார்.

தன் மனதில் அன்று மகளை நினைத்து லேசாக முளைத்த சந்தேக விதை இன்று வேரூன்றியது.

தன் அறைக்கு வந்த மதுரவர்ஷினி, தன் எண்ணச் சுழல்களில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தாள்.

“நிமிடத்தில் அவனை அடியோடு இழக்க இருந்த கணத்தை எண்ணி அதிர்வதா?

தன்னவனுக்கு தன்னையே பரிசாக அளித்ததை எண்ணி மகிழ்வதா?” மனதின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்தாள்.

கூடலில் பெண்ணவளின் மனம் குளிர்ந்து நிறைவதற்கு பதிலாக, அவளது மனம் பற்றவைத்த நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

இந்த நெருப்பின் சூடு அவள் உடலெங்கும் பரவி அவளையே அழிக்கப் பார்த்தது.

சட்டென குளியலறைக்குள் புகுந்து, ஷவரை திறந்துவிட்டு அதனடியில் நின்றாள்.
கொட்டிய நீரும் அவளுக்கு குளுமை சேர்க்க மறுத்தது. தாங்கமுடியாத துக்கத்தோடு சுவரோடு சாய்ந்தபடி தரையில் அமர்ந்தாள்.


கண்களிலிருந்து வழியும் அவளது கண்ணீரை, கொட்டும் நீரும் அழித்துக் கொண்டே இருக்க, அவளது விழிநீரோ விடாமல் பெருக்கெடுத்து கொண்டே இருந்தது.

என்றுமில்லாமல் அவளது மனமோ அவளது தாயைத் தேடியது.
தாயை நினைத்த மறுகணம் “அம்மா.... “ என்ற அவளின் அலறல் கேவலாக வெளியேறியது.

தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்தவள், உடையினை நடுங்கும் கரங்களால் மாற்றிக்கொண்டு, கீழே இறங்கி பூஜை அறைக்கு வந்தாள்.


தன் தாயின் படத்தின் முன் நின்று கொண்டு விழி சிமிட்டாமல் தன் தாயின் படத்தையே உற்றுப் பார்த்தாள்.

அவளது மனமோ விடாமல் “அம்மா... அம்மா.. “ என்று அரற்றிக் கொண்டிருந்தது.
தன் தாய் தன்னை பார்த்து புன்னகைப்பது போல் இருந்ததை கண்ட மதுரவர்ஷினி தானும் புன்னகைக்க முயன்றாள்.


தன் தாயின் உருவப் படத்தில் இருந்து கீழே விழுந்த மலரைக் கண்டவள்,
தன் தாய் தன்னுடனேயே இருப்பது போல் உணர்ந்தாள். தன் தாயின் ஆறுதலில் மனம் சிறிதும் மட்டுப்பட்டது.


பெருமூச்சுடன் பூஜை அறையில் இருந்து வெளியேறிய மதுரவர்ஷினியை “மதுரவர்ஷினி... “ என்ற அவளது தந்தையின் அதட்டலான குரல் நிற்கச் செய்தது.

அதிர்ந்த படி நின்றவள், “என்னப்பா... “ என்றாள் மெதுவான குரலில்.

“ஏம்மா... ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? அப்பா கூப்பிடுவது கூட தெரியாமல் நீ மாடி ஏறி செல்கிறாய். அப்பாவிடம் எதுவும் கோவமா? “ என்றார் தன்மையாக.

தன் தந்தையின் விழிகளைக் கூட ஏறெடுத்து பார்க்க தைரியமில்லாமல் தலைகுனிந்தாள் மதுரவர்ஷினி.

“ என்னடா? “ என்று கேட்டபடி மதுரவர்ஷினியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார் சிவானந்தன்.
தன் தந்தையின் வருடலில் குற்ற உணர்ச்சி பெருக்கெடுக்க அவர் மார்பில் சாய்ந்து கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள்.


“ அப்பாவிடம் சொல்லுமா. உனக்கு என்ன பிரச்சனை?“ என்று கனிவாக கேட்டார்.

தன் தலையைக் கூட நிமிர்த்தி கூட பார்க்க விரும்பாதவள், “ எனது வகுப்புத் தோழி ஒருத்தி திடீரென்று மரணம் அடைந்து விட்டாள். அவளின் இழப்பு என் உள்ளத்தை சுக்குநூறாக உடைத்து விட்டது அப்பா.

இருக்கும் போது தெரியாத மதிப்பு அதனை இழக்கும்போது பெரியதாகத் தெரிகிறது அப்பா.

அவளை இழக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னை மீறி இப்போது இழந்து விட்டேனே.... ஐயோ நான் என்ன பாவம் செய்தேனோ... “ என்று கதறித் துடிக்க ஆரம்பித்தாள்.

மகளின் துடிப்பில் அவரின் இதயமே நின்று விடுவது போலிருந்தது.
“ வேண்டாம் மதுரவர்ஷினி. இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்தி விடு. உன் மனதை அந்த நினைவுகள் கூர்வாள் கொண்டு கீறுவது போல் குத்திக் கிழித்து விடும்.


இழந்த இழப்பை இனி நாம் எதைக் கொண்டும் நாம் ஈடு செய்ய முடியாது.

நம் நினைவுகள் எப்பொழுதும் இழந்தவற்றை கொண்டுதான் நிரம்பி வழிகிறது.

இழப்பு என்பது நிமிடத்தில் ஏற்படுவது. ஆனால் அதன் தாக்கம் நாம் வாழும் நாட்கள் முழுவதும் நம்மைத் துரத்திக் கொண்டே வரும்.

இழந்தவை இழந்ததாக இருக்கட்டும். உன் அம்மாவின் இழப்பை உன் அன்பு எனக்கு ஈடு செய்தது போல்...
உன்னுடைய இந்த இழப்பு வேறு ஒரு அன்பினால் நிறைக்கப்படும்” என்று மகளுக்கு ஆறுதல் கூறினார்.


“ என்னுடைய இழப்பு அன்பினால் நிறைக்கப்படுமா?” அவளுடைய மனம் அந்த வரிகளை தன் ஆழ்மனதில் பதிய வைத்துக் கொண்டது.

தன் தந்தையின் தைரியத்தில் மெல்ல தலை நிமிர்த்தினாள்.
கலங்கிய தன் மகளின் கண்களில் தெளிவினைக் கண்டவர், மெல்ல புன்னகை புரிந்தார்.


குற்ற உணர்ச்சியில் தவித்த மனம் சற்றே குளிர ஆரம்பித்தது. இரவில், மொட்டைமாடியில், நிலவின் வெளிச்சத்தில் வானத்தை உற்று நோக்கினாள் மதுரவர்ஷினி.

துணை இல்லாமல் தனியே தவித்த நிலவினை கண்டாள். தலைவனின் மீது கொண்ட ஏக்கம் தன்னுள்ளே எழுவதை உணர்ந்தாள்.

பகல் பொழுதில் தவறாக தெரிந்தது, தவிப்பாக மாறியது இப்போது.சித்தார்த் வர்மனை எண்ணிய கணம் உடல் முழுவதும் சிவக்க ஆரம்பித்தது மதுரவர்ஷினிக்கு.

சித்தார்த் வர்மன் தன்னை என்ன நினைப்பான்? என்ற தவிப்பும் நாணமும் சேர்ந்து கொண்டது மதுரவர்ஷினியிடம்.

தனது மன உளைச்சலில் சித்தார்த் வர்மனிடம் தான் எதுவும் பேசாததை இப்பொழுது உணர்ந்தாள்.
சித்தார்த்தை உடனே பார்க்க வேண்டும் என அவளது மனம் ஆவலாய் பறந்தது. அவளின் எண்ணச் சிறகுகளை அவளது வெட்கம் தடுத்தது.


அவனைப் பார்க்கவேண்டும் என்று ஒரு மனமும், வேண்டாம் என்று ஒரு மனமும் அவளை அலைக்கழிக்க திரிசங்கு சொர்க்க நிலையில் மிதந்தாள் மதுரவர்ஷினி.

காணுமிடமெல்லாம் தன் காதலே நிறைந்திருக்க, தன்னுடைய தலைவனுக்கே தன்னுடைய தவிப்பும் இழப்பும் என்று மனம் அவளது காதலை போற்றிப் பாட, அவளது இதழ்கள் மெல்ல அசைந்தன காதலினால்.....

“என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்..


நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்...


கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்..
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன?
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்....

கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்

சொர்க்கமே தான்.... “

தன் இழப்பின் தவிப்பில் தொலைந்தவள் காதலின் தவிப்பில் ஏங்க ஆரம்பித்தாள்.

மகளை சமாதானப்படுத்தி விட்ட சிவானந்தன், அவளைப் பற்றி விசாரிக்க தன் தொலைபேசியை எடுத்தார். தன் மகளை சந்தேகப்படுவது தன்னையே சந்தேகப்படுவது போல் என்று எண்ணிக் கொண்டவர் தொலைபேசியை வைத்து விட்டு உறங்கச் சென்றார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு சென்றவள், சித்தார்த் வர்மனை எல்லாப்பக்கமும் தேடினாள். ஆனால் அவனை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவனது வகுப்பு தோழர்களும் அவன் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்று கூறி முடித்து விட்டனர்.

தன்னுடைய வகுப்பிற்கும் செல்லமுடியாமல், சித்தார்த்தையும் காணாமல் பெண்ணவள் படாதபாடுபட்டாள்.
இறுதியாக தன் வகுப்பிற்கு சோர்ந்த முகத்துடன் வந்தாள். தன் இருக்கையில் அமர்ந்தவளின் முன் மடிக்கப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.

மனதை மயிலிறகால் வருடுவது போல் மென்மையாக இன்பம் அவளைத் தாக்கியது. இதன் தளிர் கரங்களால் மெதுவாக அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.


“ என்னவளே...
என்னுள் கலந்தவளே....
உன்னவன்...
உன்னை சுமந்து கொண்டு....
என்னில் விளையாடும் காதலோடு...

விளையாட்டு மைதானத்தில் காத்திருக்கிறேன் வா... “

வாசித்த அடுத்த நொடி கடிதம் காற்றில் பறந்தது. கடிதத்தோடு மதுரவர்ஷினியும் பறந்தாள்.

மூச்சிரைத்தபடி சித்தார்த் வர்மன் முன் நின்றாள்
மதுரவர்ஷினி. சித்தார்த்தின் கண்களைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு நிலமகளை நோக்கி இருந்தாள்.


“மது.....” மெல்லிய குரலில் சித்தார்த் வர்மன் கூப்பிட, தலை குனிந்தபடியே “ம்.... “ என்றாள்.

“ என்னைப்பார் மது. என் கண்களைப் பார். பார்வையால் கொல்லுவது ஒருவகை என்றால், நீ என்னை பார்க்காமலே கொன்றுவிடுகிறாய் மது “ என்றான் காதலுடன்.

மெல்ல தலை நிமிர்த்தி சித்தார்த் வர்மனின் கண்களை நோக்கினாள்.
தன் இரு கைகளை விரித்தபடி வா என்று கண்களால் அழைத்தான்.

நாணம் மேலிட என் தலையை இருபுறமும் அசைத்து முடியாது என்று மறுத்தாள்.


“ ப்ளீஸ்.... “ காற்றில் கலந்த அவன் குரல் அவளது செவியை அடைந்த அடுத்த நொடி, அவனின் கைகளுக்குள் அடைக்கலமாகினாள் மதுரவர்ஷினி.

“ மது என்னுடன் வா... “ என்றான் உரிமையாக.
சித்தார்த் வர்மனின் கைகளை பிடித்துக் கொண்டு, அவனுடன் பயணப்பட்டாள்.

மதுரவர்ஷினியை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.


“ மது இதுவரை நான் எந்த தெய்வத்தையும் வணங்கியதில்லை. குமரகுருபரர் ஒருவரையே தெய்வமாக நினைத்திருந்தேன். நான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்ற பிறகே என் திருமணத்தை நினைத்து இருந்தேன்.

ஆனால் நேற்று நடந்த நிகழ்வுக்கு பிறகு, இந்த நிமிடத்திற்கு நான் தள்ளப்பட்டேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு கிடைத்த வெற்றிப் பணத்தில் உனக்கு ஒரு பரிசை வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு அவளது தளிர்க் கரங்களைப் பற்றி விரல்களில் தான் வாங்கி வந்திருந்த மோதிரத்தை சேர்த்தான் காதலில் நெகழ்ச்சியாக.


கண்களில் கண்ணீர் நிறைக்க ஆனந்தத்துடன் சித்தார்த் வர்மனை பார்த்து பெருமையுடன் சிரித்தாள்.

“ உலகத்தைப் பொறுத்தவரை இது திருமணமாக இல்லாமல் இருக்கலாம். என்னைப் பொருத்தவரை இது திருமணம் தான். நீ என்னுடையவள் . எனக்கே எனக்கானவள். என் மனைவி
மதுரவர்ஷினி சித்தார்த் வர்மன்” என்றான் உள்ளத்து உவகையுடன்.

தன் மோதிரத்தின் மீது ஆசையாக இதழ் பதித்தாள் மதுரவர்ஷினி. தன் ஓரக்கண்களால் சித்தார்த் வர்மனை பார்த்துக்கொண்டே மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள்.


“ மோதிரத்திற்கு கிடைக்கும் பரிசு, இதனை வாங்கியவருக்கு கிடையாதா மது? “ ஏக்கம் கலந்த குரலில்.

“ மொத்தமாக கொள்ளை இட்டவர் முத்தத்திற்கு ஏங்குவது வேடிக்கைதான் “ என்று இதழ் சுழித்து பழிப்பு காட்டினாள்.

“ நினைவில்லாமல் கூடிய கூடல், நினைவிற்கு வர வேண்டுமென்றால்.... “ என்று இழுத்தான்.

“ஹான்.... வரவேண்டும் என்றால்... “ அவனுக்கு தோதாக பின் பாட்டு பாடினாள்.

“ நினைவோடு.... “ ஆரம்பித்தவனின் இதழ்களை தன் கை கொண்டு மூடினாள்.

“ டாக்டர் சித்தார்த்... உங்களை.. “ என்று கூறிக்கொண்டே அவன் தோள்களை தன் கைகளால் அடிக்க ஆரம்பித்தாள்.


அவளது கைகளை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன், “எனக்கு குமரகுருபரரிடமும், உன் தந்தையிடமும் அனுமதி பெற்று உன்னை கைப்பிடிக்கும் அன்று, கண்டிப்பாக இழந்த என் சுக நினைவுகளை திரும்பப் பெறுவேன் “ என்றான் கண்ணடித்தவாரே.

தன் தந்தை என்றவுடன் சர்வமும் ஆட்டம் கண்டது மதுரவர்ஷினிக்கு.

“சித்தூ.... இறுதியாண்டு பரீட்சை எழுதிய உடன், என் தந்தையிடம் நம் காதலை கூறி விடுவேன். என்ன ஆனாலும் என் தந்தையின் அனுமதியோடு உங்களை கரம் பிடிப்பேன்.

காதல் பைத்தியம் பிடித்த என் டாக்டர் சித்துவுக்கு காதல் வைத்தியம் பார்ப்பேன்” என்றாள் கலகலத்தவாரே.

அவளுடன் இணைந்து நகைத்தான் சித்தார்த் வர்மன்.

விதியோ அவர்களது சிரிப்பில் கவலை கொண்டது.

மின்னல் வெட்டும்...
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
IMG_20220122_205321.jpg
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
கவிதை செம செம போங்க 😍😍😍😍.மது அப்பா வில்லன் சீக்கிரம் தலையை காமிக்க போறார்னு நினைக்கிறேன் ஆனால் everything finished 😀😀😀😀😀😀😀👌👌👌👌👌👌👌👌👌
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
View attachment 496 அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
கவிதை செம செம போங்க 😍😍😍😍.மது அப்பா வில்லன் சீக்கிரம் தலையை காமிக்க போறார்னு நினைக்கிறேன் ஆனால் everything finished 😀😀😀😀😀😀😀👌👌👌👌👌👌👌👌👌
கதை தந்த சொந்தமே...
என் கருத்துக்களை நீங்கள் காட்சியாய் காணும்போது...
நட்பில் நெஞ்சம் நெகிழ்கிறது😍😍😍😍😍
ஒரு வரி பாராட்டி லேயே எனக்கு உயிர் கசியும்..
ஒளி கோலமாய்,
ஒளி பின்னலாய்,
ஒளிரும் உங்கள் கருத்தில்
இனிவரும் அத்தியாயங்களும் ஒளிரும்....
உங்களுக்காகவே உருகி உருகி கதை எழுதத் தோன்றுகிறது தோழமையே 👍
அறிமுக எழுத்தாளருக்கு
நீங்கள் தரும் வரவேற்பிற்கு
தலை வணங்கி என் நன்றிகளை உரித்தாக்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
கதை தந்த சொந்தமே...
என் கருத்துக்களை நீங்கள் காட்சியாய் காணும்போது...
நட்பில் நெஞ்சம் நெகிழ்கிறது😍😍😍😍😍
ஒரு வரி பாராட்டி லேயே எனக்கு உயிர் கசியும்..
ஒளி கோலமாய்,
ஒளி பின்னலாய்,
ஒளிரும் உங்கள் கருத்தில்
இனிவரும் அத்தியாயங்களும் ஒளிரும்....
உங்களுக்காகவே உருகி உருகி கதை எழுதத் தோன்றுகிறது தோழமையே 👍
அறிமுக எழுத்தாளருக்கு
நீங்கள் தரும் வரவேற்பிற்கு
தலை வணங்கி என் நன்றிகளை உரித்தாக்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
கவிதைகளின் நாயகி அதியா சகிக்கு நெஞ்சார்ந்த நன்றி, அறிமுகம் போல தெரியலை சகி. அறிமுகம் ஆவதற்கு முன்னாடி உங்களோட மனதிலேயே நிறைய கதைகள் வடிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். ரெம்ப ரெம்பவே அருமையான நகர்வு சகி, வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
கவிதைகளின் நாயகி அதியா சகிக்கு நெஞ்சார்ந்த நன்றி, அறிமுகம் போல தெரியலை சகி. அறிமுகம் ஆவதற்கு முன்னாடி உங்களோட மனதிலேயே நிறைய கதைகள் வடிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். ரெம்ப ரெம்பவே அருமையான நகர்வு சகி, வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐
ஒரு வாசகியை எழுத்தாளராய் மாற்றிய வைகை தளத்திற்கு என் நன்றிகள் 🙏🙏🙏🙏
தொடர் உற்சாகமும் வரவேற்பும் அளிக்கும் பாரதி சிவக்குமார் தோழமைக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
விதி இல்ல dr... நீங்க பண்ணின சதி... 🤭😅

அவங்க உயிரை காப்பாத்த தான்... இப்படி ல்லாம் ஸோ... அது யார் தப்பும் இல்ல... 💞

அவங்க அப்பா அஹ் நெனச்சா நமக்கும் கொஞ்சம் பக்குனு தான் இருக்கு... என்ன பண்ணுவாரோ...

இப்படி காதல் பேசிய பெண்... அவர வேண்டாம் னு சொல்லிருக்காங்க... ☹️

ஆனாலும் என்ன ஆச்சு... எப்படி பேபி பத்தி அவங்களுக்கு தெரில... 🤔
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
காந்தர்வ திருமணம் முடிந்ததா :love::love::love:

விதியும் சாதிராட்டம் ஆட ஆரம்பித்து விட்டதோ 😳😳😳

அந்தோ பரிதாபம் 🤭🤭🤭 கௌதம புத்தன் காதல் பித்தன் ஆகிவிட்டானே 🤣🤣🤣