• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 16

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 16

குழந்தையுடன் வெளியேறிய சித்தார்த்தின் மனம் முழுவதும் கசந்து வழிந்தது. தன் முதலும் முடிவான காதல் தோற்று விட்டதை எண்ணி உயிரைத் துறக்கவும் முடியாமல் உயிரோடு இருக்கவும் முடியாமல் தவித்தான்.

தன்னை உயிர் என்று கூறியவள், தன்னோடு சேர்த்து ஈன்றெடுத்த உயிரையும் பிரிந்து விட்டாளே. தந்தை மற்றும் தந்தையின் பணம் இருக்கும் தைரியமா?

இதயம் என்னும் சிறையில் பாசம் வைத்தவர்கள் மட்டுமே கைதியாகி நிற்கிறார்கள்.

தன் நேசம் தவறில்லை, தான் நேசித்தவள்தான் தவறாகிப் போனாள், அவன் நெஞ்சம் அரற்றியது.

யாருமற்றவன் போல் நடுவீதியில் தன் சிந்தனைகளைத் தொலைத்து நின்றவனின் விரல்கள் அவனுடைய மழலையின் வாயருகில் இருந்தது.

தன் தாயின் மார்பு தேடி தன் தந்தையின் விரல்களைக் கண்டு சப்பத் தொடங்கியது அந்தப் பிஞ்சுக் குழந்தையின் இதழ்கள்.

வீரிட்டு அழத் துடித்த தன்னை உறுதியாக கட்டுப்படுத்திக் கொண்டவன், குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான்.

தாயின் ஸ்பரிசம் கூட உணராத அந்த குழந்தைக்குத் தாயாகி தந்தையுமாகினான்.

மதுரவர்ஷினி பற்றிய நினைவுகளை தன் ஆழ்மனதில் புதைத்துக்கொண்டான்.

காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சைகளின் மூலம் போதையின் பிடியில் இருந்து மீட்டு எடுத்தனர் அந்த மருத்துவக் குழுவினர்.

மானசாவும் சற்று தெளிவு பெற்று, தன் முரட்டுத்தனங்களைக் குறைத்து, அமைதியாக ஆசிரமத்தில் வலம் வந்தாள்.

அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக்கொண்டு அந்த மருத்துவக் குழுவினர் தங்கள் ஊர் திரும்பினர்.

தன்கையில் விடாமல் அழுது கொண்டிருந்த தன் மகனின் பசியினை உணர்ந்த சித்தார்த், வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் செய்தான்.

தேனீர் கடையில், மகனுக்கு இளம் சூடான பதத்தில் வெந்நீர் வாங்கி, பால் பவுடர் கலந்து, பதமாக ஆற்றி, இதமாக மகனுக்கு ஊற்றிக் கொடுத்தான்.

மகன் பசியாறி முடித்தவுடன், தன் தோள்களில் சாய்த்து, மழலையின் முதுகினை கீழிருந்து மேலாக நீவி விட்டான்.


செல்ல மகனின் ஏப்பக் குரலை கேட்டவுடன், இறுகிக் கிடந்த சித்தார்த் வர்மனின் இதழ்கள் மலர்ந்தன.

சித்தார்த் காரில் ஏறிச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த வாகனம் தன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.

கார் மோதிய வேகத்தில் காரின் உள்ளே இருந்த தீபம் மருத்துவக் குழுமத்தின் தலைவர் கௌசிக் ரோட்டில் தூக்கி வீசி எறியப் பட்டான்.

கௌசிக் விழுந்த வேகத்தில் அவனுடைய குருதி தரையை நனைத்தது. சித்தார்த் தன் மகனை பாதுகாப்பாக தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, கௌசிக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தான்.

அதிர்ச்சியின் உச்சியில் கௌசிக்கின் இதயம் தன் செயல்பாட்டை இழந்து விட, அவசரமாக சிபிஆர் சிகிச்சை தர ஆரம்பித்தான்.


சி பி ஆர் என்பது மார்பை அழுத்தி சுவாசத்தை மீட்கும் ஒரு அவசர சிகிச்சைச் செயற்பாட்டைக் கொண்டது. இதயம் செயலிழப்பதை அனுபவிக்கும் ஒருவருக்குத் தகுந்த முறையில் சி பி ஆர் சிகிச்சை கொடுக்கப்படும்போது சுவாசித்தலையும் இரத்த ஒட்டத்தையும் பழைய நிலைக்குக்குக் கொண்டுவர முடியும்.

அதற்குள் சித்தார்த்தின் தோழர்கள், கௌசிக்கின் அடையாளம் காண அவன் உடமைகளைச் சோதனையிட்டனர். கௌசிக், தீபம் மருத்துவமனையின் குழுமத் தலைவர் என்பதை அறிந்து, உடனே தொடர்புகொள்ள, அவசர ஆம்புலன்ஸ் உடனே வந்தது.

தகவல்களுக்கு தங்களது தொலைபேசி இலக்கங்களை பரிமாறிவிட்டு, நண்பர் குழுவும் சென்னை வந்து சேர்ந்தது.

சித்தார்த்துடன் குழந்தை இருந்ததைக் கண்டு, பார்க்கும் கண்கள் பார்வைக்கு ஒன்றாக கதைகள் எழுத, அவனோ அந்த ஊரைவிட்டு வெளியேறும் முடிவிற்கு வந்து நின்றான்.

குமரகுருபரை நேரில் சந்தித்தான். அவரிடம் கூட குழந்தையை பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்க மறுத்து நின்றான்.


மதுரவர்ஷினியை யாரும் தவறாக நினைப்பதில் உடன்பாடு இல்லை சித்தார்த்துக்கு.

அழுத்தமாக தன் முன்னே நின்றவனை, கேள்விகள் எதுவும் கேட்காமல், பார்வையால் ஆறுதல் அளித்தார் குமரகுருபரர்.

சித்தார்த் வர்மன் தவறு செய்தவன் என்று கடவுளே சாட்சி சொன்னாலும் நம்ப மறுக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்.

இறுதியாக அவன் எழுதி அனுப்பிய ஆராய்ச்சி கட்டுரை, சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைமை மருத்துவர் எவ்வளவு வற்புறுத்தியும், அவர் கூறிய இடத்தில் வேலை பார்க்க மறுத்து நின்றான்.


சுற்றியுள்ள உலகை வெறுத்து , வேறு உலகம் தன் மகனோடு காண, தனது அறையில் தனது உடமைகளை கட்டிவைத்து கொண்டிருந்தவனின் அலைபேசி அலறியது.

கௌசிக், சித்தார்த் வர்மனை பார்க்க விரும்புவதாக அவனது காரியதரிசி அழைப்பு விடுத்தார்.


யாருடைய மனதையும் நோக வைக்க விரும்பாத சித்தார்த், குழந்தையை குமரகுருபரர் பொறுப்பில் விட்டுவிட்டு, கௌசிக்கைக் காண தீபம் மருத்துவமனைக்குச் சென்றான்.

தன்னைக் காப்பாற்றிய நன்றி கடனுக்காக தீபம் மருத்துவமனையில் வேலை செய்ய கௌசிக் சித்தார்த்தை கெஞ்சிக் கேட்ட போதும், அந்த ஊரில் இருக்க மறுத்தான் சித்தார்த்.

“ நான் உதவி செய்யாவிட்டாலும், வேறு யாராவது நிச்சயம் உதவி செய்திருப்பார்கள். அதனால் இந்த நன்றி பாராட்டல் எல்லாம் வேண்டாம் “ என்று சித்தார்த் கண்டிப்பாக மறுத்தான்.

“ எவ்வளவு பெரிய உதவி செய்துவிட்டு, இவ்வளவு எளிமையாக பேசுகிறீர்கள் மிஸ்டர் சித்தார்த். இந்த ஊரில் மருத்துவர் வேலை பார்க்கக்கூடாது அவ்வளவுதானே? ஜெர்மனியில் உங்களுக்கு வேலை பார்க்க விருப்பமா? “ என்று அன்பொழுக கேட்டான்.

தன் வாழ்க்கையை வெற்றுக் காகிதமாக எண்ணி வருபவர் போகிறவர் எல்லாம் தங்கள் கருத்தை பதிந்து வைத்திருக்க, தன் மகனுக்காக வாழ்க்கையில் முன்னேற முதற்படியாக கௌசிக்கின் அன்பு விண்ணப்பத்தை ஏற்றான்.


மூன்றே வாரத்தில், அவனுடைய ஜெர்மன் பயணம் இனிதே தொடங்கியது.

குழந்தையையும் சமாளித்துக் கொண்டு, வேலை நேரத்தையும் சமாளிக்க முதலில் சிரமப்பட்ட சித்தார்த், பின் நிலமையை எளிதாகக் கையாண்டான்.

மதுரவர்ஷினி தன்னை மறந்தாலும் அல்லது வெறுத்தாலும் அதைப்பற்றி சிறிதும் சலனம் கொள்ளாது, அவளது உருவப்படத்தை தன் மகனுக்கு தாய் என்று அறிமுகப்படுத்தினான்.

அவர்களது சிறிய உலகத்தில் மதுரவர்ஷினி, அவளை அறியாமலேயே உள்நுழைந்தாள்.

மருத்துவமனையோடு இணைந்த பேபி கேரில் குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு வருபவன், நாளடைவில் அவனுடைய திறமையால் பெற்ற பெயராலும் புகழாலும், வசதி வாய்ப்பு பெருக, தன் வீட்டிலேயே பேபி கேர் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

குழந்தையின் பெயர் என்ன என்று அனைவரும் கேட்கும் பொழுது அவனை அறியாமலேயே அவனது வாய் ஆதித்ய வர்மன் என்று உரைத்தது.
மதுரவர்ஷினியின் தாக்கம் தன்னிடம் இன்னும் உள்ளதை அறிந்து, தன் உணர்வுகளை அடக்கி வாழப் பழகிக்கொண்டான்.

எத்தனையோ பெண்கள் அவனை சுற்றி வளைத்தாலும், அலைகள் நான்கு புறமும் சுற்றி அடிக்க அசையாது நிற்கும் பாறை போல் அவனது உள்ளம் அசையாமல் இறுகி இருந்தது.


குமரகுருபரருக்கு ஆசிரம நிதியாக ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். நன்றிக் கடனோ,பாசக் கடனோ யாரும் அறியார்.

அவனுடைய உலகம் ஆதித்ய வர்மன் ஆனான்.
ஆதித்திய வர்மன் என்ற பெயரில் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு சட்டென விழித்து எழுந்தான் சித்தார்த் வர்மன்.

மதுரவர்ஷினியிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு, தான் விரும்பும் தகவல்களை பெற முடியாது என்பதை உணர்ந்தே இருந்தான் சித்தார்த். சிவானந்தத்திடமும் நேரடியாக கேள்வி கேட்க முடியாது.

தன் வாழ்வில் ஏற்பட்ட அந்த மர்ம முடிச்சை விடுவிக்கும் நேரத்திற்காக காத்திருந்தான் சித்தார்த்.

தான் அணிவித்த மோதிரத்தை, கழுத்துச் சங்கிலியில் கோர்த்து இருந்த மதுரவர்ஷினியைக் கண்டு, அகமகிழ்ந்து ஆனந்தத்தில் மிதந்தான்.

அவனுடைய மனதில் நேச நதி பெருக்கெடுத்து ஓடியது. ஆதித்ய வர்மனை அவளுக்கு தெரியவில்லை என்றால் கண்டிப்பாக குழந்தை பற்றிய தகவல்கள் அவளுக்கு மறைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தான்.

தன்னைப் பற்றிய ஏதோ ஒரு தவறான தகவல் அவளை அடைந்திருக்க வேண்டும் என்று மிகச் சரியாக கணித்தான்.

இத்தனை நாள் அவளைப் பிரிந்திருந்த துக்க தினங்கள் எல்லாம் ஏக்க தினங்களாக இன்று மாறியது சித்தார்த்திற்கு.

அவளைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே மகனைப் பெற்ற அவனுக்கு, அவளை முழுவதுமாக ஆண்டு அனுபவித்து, மகளைப் பெற வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

இறுகிக் கிடக்கும் அந்த இதழ்களும் இன்று வெட்கப் புன்னகை சிந்தின.

உள்ளத்தில் தோன்றிய உல்லாசத்துடன், மதுரவர்ஷினியை நெருங்கும் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தான்.

கேர் டேக்கரிடம், ஆதித்ய வர்மனை மதுரவர்ஷினி வரும் சரியான நேரத்திற்கு பூங்காவிற்கு அழைத்துச் செல்ல கட்டளையிட்டான்.

அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் உடனுக்குடன் தனது செல்போனுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டான்.

முதல்நாள் பார்ட்டியில் நடந்த எதிர்பாராத தாக்கங்களில் சுருண்டு கிடந்த மதுரவர்ஷினி தன்னை முயன்று உற்சாகப் படுத்திக் கொண்டாள்.

“ சித்தார்த் வர்மனின் பார்வைகள் என்னை எதுவும் செய்யாது. அவனின் தீண்டல்கள் என்னைக் கரைக்காது. சித்தார்த் வர்மன் திருமணமானவன்” என்று திரும்பத் திரும்ப தன் மூளைக்கு பதிய வைத்துக் கொண்டாள்.

பறவைகளுக்கு இரை பரிமாற பூங்காவிற்குச் சென்றாள்.

பூங்காவில் ஆதித்திய வர்மனை, கேர் டேக்கரோடு கண்ட மதுரவர்ஷினி திகைத்தாள்.

சித்தார்த் வர்மனை ஒதுக்கத் துணிந்த அவளுக்கு ஆதித்திய வர்மனை ஒதுக்க மனம் வரவில்லை.


அவனுடைய மனைவிக்கு தன்னைப் பற்றி தெரியாது என்ற தைரியத்தில், கண்டிப்பாக எந்த ஆண்மகனும் தன் காதலை மனைவிக்கு கூறியிருக்க மாட்டான் என்ற சிந்தனையில் ஆதித்திய வர்மனோடு சிரித்துப் பழக ஆரம்பித்தாள்.

வாரங்கள் மாதங்களாக உருண்டோட, மதுரவர்ஷினிக்கு ஆதித்திய வர்மனின் மேல் பாச ஊற்று பொங்கி எழுந்தது.

தினந்தோறும் புகைப்படத்தில் தான் காணும் மதுரவர்ஷினியின் கண்களில் தோன்றும் ஏக்கங்களை காணும்போது, அவள் அருகில் சென்று அவளை ஆறுதல் படுத்த துடித்த தன் மனதை, கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டான் சித்தார்த்.

மதுரவர்ஷினியின் பேஷன்ட் ஒருவருக்கு சிசேரியன் செய்ய அன்று இரவு நாள் குறிக்கப் பட்டிருந்தது. அந்தப் பெண்மணி இதய நோயாளி என்பதால், அறுவை சிகிச்சையின் போது, கார்டியாலஜிஸ்ட் ஒருவர் வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை மருத்துவருக்கு வைத்திருந்தாள்.


தனது அறையில் கௌசிக் அமர்ந்திருக்க, அலைபேசியை எடுத்து சித்தார்த்திற்கு அழைப்பு விடுத்தான். சித்தார்த் அலைபேசியை எடுத்தவுடன், சிரித்துக்கொண்டே விசில் அடித்தான்.

தனது அலைபேசியை ஒருமுறை கைகளில் எடுத்து அதை உற்று நோக்கினான் சித்தார்த். அதில் தெரிந்த கௌசிக்கின் எண்ணைக் கண்டு குழப்பத்துடன்’ யோசித்தான்.

பின் தன்னை சரி செய்து கொண்டு, “ கௌசிக்...” என்றான்.

“ சித்தார்த் நான்தான். உன் மதுரவர்ஷினி செய்யப்போற சிசேரியனுக்கு கார்டியாலஜிஸ்ட் ஒருத்தர் அசிஸ்ட் பண்ணனுமாம். மேடம் ரெக்வஸ்ட் கொடுத்திருக்காங்க. சோ.... “ இன்று எழுதி ராகம் பாடினான் கௌசிக்.

“சோ..... “ என்று அழுத்தமாக அவன் பாட்டிற்கு பின் பாட்டு பாடினான் சித்தார்த்.

“ கிளம்பி வாடா இடியட்... “ என்று கூறி நகைத்தான்.

உதட்டில் இளம் புன்னகை தோன்ற, சித்தார்த் ஆதித்ய வர்மனை பாதுகாப்பாக விட்டுவிட்டு, மருத்துவமனை நோக்கி கிளம்பினான் உடனே.

ஆப்ரேஷன் தியேட்டர் ரெடியாக இருக்க, மருத்துவ உடையுடன் உள்ளே நுழைந்தாள் மதுரவர்ஷினி.

அவள் நுழைந்த சிறிது நேரத்தில் சித்தார்த்தும் உள்நுழைந்தான் மருத்துவ உடையுடன்.

சித்தார்த்தை கண்டவுடன் மதுரவர்ஷினியின் விழிகள் அதிர்ந்து விழித்தன.

இதுவரை கைகள் நடுங்காதவளுக்கு கத்தி பிடித்தவுடன் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

“மதுரவர்ஷினி பிகேவ் லைக்க டாக்டர்... “ என்று சித்தார்த் ஒரு அதட்டல் போட்டுவிட, அவன் குரலுக்கு அடிபணிந்து அந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்தாள்.

வெகு நாட்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குடும்பமே மதுரவர்ஷினியை ஆராதித்தது.


தனது பிரத்தியோக மருத்துவ அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக் கொண்டு, அதிக மன அழுத்தத்துடன் இருந்தாள்.

தன்னருகில் வந்து நின்ற உருவத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே சித்தார்த் வர்மனை கண்டவுடன், நிம்மதி எழுவதற்கு பதிலாக ஆத்திரமே எழுந்தது மதுரவர்ஷினிக்கு.

அவள் பேச வாயைத் திறக்கும் முன், “ நீ எனக்கு எப்பொழுது பெண் குழந்தை பெற்றுத் தருவாய் மது...?” என்றான் தன் புருவங்களை உயர்த்தியவாறு.

மின்னல் வெட்டும்...
 
Last edited:

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️ஆஹா இது ரெம்ப நல்லா இருக்கே சித்தார்த் அடுத்த பிள்ளைக்கு அடிபோடுவது 😃😃😃😃😃😃👍👍👍👍👍👍👍
அவள் தானே அவன் மீது கோபமாக இருக்கிறாள். தலைவன் தலைவியை இதமாய் சேர்கிறான் 😍😍😍😍
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
மிக அருமை சகோதரி! சித்தார்த் வர்மனின் கேள்விக்கு மதுர வர்ஷினியின் பதிலை அறிய ஆவல். அடுத்த எபி எப்போது?
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மிக அருமை சகோதரி! சித்தார்த் வர்மனின் கேள்விக்கு மதுர வர்ஷினியின் பதிலை அறிய ஆவல். அடுத்த எபி எப்போது?
வலி மிகுந்தவள்... அவ்வளவு சீக்கிரம் வழி விடுவாளா?
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
தோள் கொடுத்த தோழனாய் கௌசிக் :cool::cool::cool:

ஹப்பாடா இப்போதாவது தன்னவள் மனம் அறிந்து கொண்டானே 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

இன்னல் பல கடந்து வெற்றிகள் பல கண்டவன், தன் காதலையும் தன்னவளோடு சேர்ந்து மீட்டெடுக்க கிளம்பி விட்டான் :love::love::love: