மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 18
இது உனக்கு மட்டுமே உரிமையான உயிர்களின் சங்கமம் என்று மதுரவர்ஷினியின் மனது கூக்குரலிட்டு கத்த, அவளது மூளையோ அதனை மறுத்து பேசியது.
சித்தார்த்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல், ஆதித்ய வர்மனை அணைத்துக் கொண்டு, சட்டென மறுபுறம் திரும்பினாள்.
தன் ஒரு கையை பேன்ட் பாக்கெட்டின் உள்ளே வைத்துக்கொண்டு , மதுரவர்ஷினியின் தவிப்பை, தன் உதடு மடித்து கடித்தபடி ரசித்தான் சித்தார்த் வர்மன்.
மதுரவர்ஷினியின் கையில் இருந்து கொண்டு, அவளுடைய தோள்பட்டையில் தன் நாடியை குற்றியபடி, சித்தார்த்தை பார்த்த ஆதித்ய வர்மன், அடுத்து என்ன என்பது போல் சைகை மொழியில் கேட்டான்.
தாய்க்கான அன்பின் தேடலில் தவித்த தன் மகனைப் பார்த்து விட்டு, “ஆதித்ய வர்மன் நம் மகன் என்று தெரிவதற்கு முன் என் காதலை உணர்ந்து என்னிடம் திரும்பி விடு மதுரவர்ஷினி. ஆதித்ய வர்மன் நம் மகன் என்று தெரிந்தபின் என்மேல் வரும் உன் காதல் அர்த்தமற்றது” என்று தன் மனதோடு மதுக்கு விண்ணப்பம் வைத்தான்.
தன் தாய் அறியாமல் “அப்பா.... “ என்று சப்தம் வராமல் உதட்டசைத்தான் ஆதித்ய வர்மன்.
மது திரும்பியிருக்கும் தைரியத்தில், “ உதைக்க போகிறேன் படவா... அம்மா பாவம்...“ என்று பதிலுக்கு ஒரு விரல் காட்டி மிரட்டி அவனும் உதட்டசைத்தான்.
தன் தாயைப் போலவே ஐவிரல்களையும் குறுக்கி ப்ளீஸ் என்று மெதுவாக உதட்டைசைத்தான்.
சித்தார்த் சாப்பிடுவது போல் சைகை செய்து காட்டினான். தன் தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆதித்ய வர்மன் ஈ...என்று பல்லை காட்டியவாறு தலையசைத்தான்.
தன் குரலை செருமியபடி, “ஆதி அப்பாவிடம் வா. நாம் செல்லலாம்” என்றான் அதிகாரமாக.
ஆதித்திய வர்மனோ மதுரவர்ஷினியின் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டு, “ஆதி குட்டிக்கு பசிக்கி “ என்று உதடு பிதுக்கி மழலையில் மிழற்றினான்.
குழந்தை பசி என்றதும் மதுரவர்ஷினியின் மதி கெட்டுநின்றது.
“ இல்லை ஆதி. கேன்டீன் செல்ல அப்பாவிற்கு நேரமில்லை. நீ வந்து நர்ஸோடு சமர்த்தாக இரு” என்றான் மதுரவர்ஷினியை ஓர விழியால் பார்த்தபடி.
சித்தார்த் வர்மனின் பதிலில் சட்டென்று அவன் புறம் திரும்பியவள், “மிஸ்டர் சித்தார்த் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிய பிறகும், ஒரு குழந்தையின் பசியைப் புரிந்து கொள்ளாத நீங்கள் ஒரு நல்ல அப்பாவா? சுத்த மோசம்.
குழந்தையை அவனின் அம்மாவிடமாவது விட்டு விட்டு வந்திருக்கலாம். இங்கு வந்து நர்ஸ் பொறுப்பில் விடப் போகிறாராம்.
உங்களை எல்லாம் பெரிய கட்டை கொண்டு அடிக்க வேண்டும்” என்று சீறினாள்.
தன் தந்தையை கட்டை கொண்டு அடிக்க வேண்டும் என்று கூறியதும், தாயின் கூற்றில் தானும் கலந்து கொண்டு, “ம் மா.... ஆதிக்கும் பெருசு கட்ட... “ என்று கையை விரித்து காட்டினான்.
புரியாமல் விழித்த மதுரவர்ஷினிக்கு, “ அப்பா அடி டம்... டம் “ என்று அடிப்பது போல் சைகை செய்து களுக்கென்று சிரித்தான்.
மழலையின் சிரிப்பில் தன்னை மறந்து இதழ் விரித்து சிரித்தவள், “ஓ... அடிக்கலாமே.... “ என்று சித்தார்த்தை நேருக்கு நேர் பார்த்து, உதடு சுழித்து பழிப்பு காட்டினாள்.
அவளின் உதட்டுச் சுழிப்பில் தன்னைத் தொலைத்தவன், “உன் கையால் அடி வாங்குவது என்றால் காலம் முழுவதும் அடி வாங்கத் தயார் மது “ என்றான் தன் இரு கைகளையும் விரித்தவாறு.
பேச்சின் திசை மாறுவதைக் கண்ட மதுரவர்ஷினி, “ என் கன்னத்தை தீண்டும் வேலையெல்லாம் இனி வைத்துக்கொள்ள வேண்டாம். இம்முறை குழந்தை செய்த பிழையால் நடந்தது. இனி ஜாக்கிரதை” என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.
“எதுவாகிலும் உங்கள் உதடுகள் செய்தது தவறுதான். அதற்குத் தண்டனையாக உங்கள் குழந்தையை ஒரு மணி நேரம் நானே வைத்துக் கொள்கிறேன் “ என்று மடமடவென கூறிவிட்டு அவனைப் பார்க்காமல் குழந்தையுடன் அந்த வராண்டாவை விட்டு விரைந்து வெளியேறினாள்.
“ஆம் மது. இனி உன் கன்னத்தை தீண்டக்கூடாது. என்னை இம்சிக்கும் அந்த இதழ்களையே தீண்ட வேண்டும்” என்று தன் இதயத்தோடு உடன்படிக்கை செய்து கொண்டான்.
போரில் புறமுதுகு காட்டி ஓடினால் தோல்வி என்பார்கள். இன்று இந்தக் காதல் போரில் புறமுதுகிட்டு ஓடும் மதுரவர்ஷினி தன்னை ஜெயித்து விட்டதாகவே நினைத்து மென் நகை புரிந்தான் சித்தார்த் வர்மன்.
வீட்டில் தன் தந்தையின் கையில் பாலை சமத்தாக குடித்துவிட்டு, அதனால் மெல்லிசாக உப்பிய தன் வயிற்றை, உள் மூச்சு விட்டு இழுத்துக்கொண்டு, மதுரவர்ஷினியிடம், தன் வயிற்றை தடவி “ரொம்ப பசிக்கி.... “ என்று நடிப்பில் தன் தந்தையையும் மிஞ்சினான் ஆதித்திய வர்மன்.
இத்தனை நாள் மதுரவர்ஷினியின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த தாய்மை விழித்தெழுந்தது.
தான் ஒரு பெண் என்பதை மறந்தாள். தான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதை மறந்தாள். ஏன் தான் மதுரவர்ஷினி என்பதையே மறந்தாள்.
ஆதித்ய வர்மனை சற்று தூக்கிப் பிடித்து, அவனின் மேல் சட்டையை தன் மூக்கினால் சற்று மேலே ஏற்றி, அவனின் குட்டி தொப்பையை தன் நாசியால் உரசினாள்.
கூச்சத்தில் சிலிர்த்த ஆதித்ய வர்மன், மதுரவர்ஷினியின் தலைமுடியை தன் இரு கைகளால் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
மருத்துவமனையில் அவள் கடந்து சென்ற பாதையில், அவளைக் கண்ட செவிலியர், மருத்துவர் அனைவரும் ஆவென்று வாயைப் பிளந்தபடி அவளைப் பார்த்தனர்.
யாருடனும் பேசாது உம்மென்ற முகத்துடன், எப்பொழுதும் அமைதியாகக் கடக்கும் மதுரவர்ஷினி, உடையில் சிறு கசங்கல் கூட இல்லாத மதுரவர்ஷினி, இன்று தலை முடி கலைந்து, முகம் கொள்ளா சிரிப்புடன், திடீரென்று ஏறிய முகவசீகரத்துடன், சுற்றியிருக்கும் உலகத்தை பற்றி கவலைப்படாது, ஒரு குழந்தையை கையில் ஏந்தி நடந்து செல்வதை அதிசயமாக பார்த்தனர் அனைவரும்.
அவளின் சிறிய உலகத்தில் இது எதையும் கருத்தில் கொள்ளாது, ஆதித்ய வர்மனை தன்கையில் புதையலைப் போல் ஏந்திய படி வந்தவள், தன் பிரத்தியோக அறைக்குள் நுழைந்ததும், ஆதித்ய வர்மனை தன் மேஜை மீது அமரச் செய்தாள்.
தன் கைப்பையில் தனக்காக கொண்டுவந்திருந்த டிபன் பாக்ஸை எடுத்து வைத்தாள்.
தன் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து, தன் கைகள் நடுங்க டிபன் பாக்சை திறந்து, நடுங்கும் தன் விரல்களால் இட்லியை ஒரு விள்ளல் பிய்த்து எடுத்து, கலங்கிய கண்களுடன், ஆதித்ய வர்மனனின் வாய் அருகே கொண்டு சென்றாள்.
முதன் முதலாக தன் அன்னை தனக்கு உணவு ஊட்டுவதை அறிந்த ஆதித்ய வர்மனோ, உலகளந்தவன் வாயைத் திறந்தது போல் தன் வாயைத் திறந்து காட்டினான் தன் தாயிடம்.
முதலில் தயங்கியவள் பின் அவனின் அழகில் மயங்கி, உணவை ஊட்ட ஆரம்பித்தாள்.
தனது மகிழ்ச்சியை எப்படி காட்டுவது என்று தெரியாத அந்தக் குழந்தை, மதுரவர்ஷினியை கட்டிப்பிடித்துக்கொண்டு “ம்மா, இக்கிலி சூப்பர்....” என்று கூறியது.
“ நிஜமா...? “ என்று தன் கண்களை உருட்டியபடி கேட்டாள்.
தன் இரு விரல்களை மடக்கி மூன்று விரல்களை உயர்த்தி சூப்பர் என்று அபிநயம் பிடித்தான் ஆதித்ய வர்மன்.
தாயின் அன்பில் குளிர்ந்து கொண்டிருந்தவன், மறுமுறை தன்னை நோக்கி உணவு ஊட்ட வந்த மதுரவர்ஷினியின் கைகளைப்பிடித்து, அந்த உணவை அவள் வாயிலே ஊட்டி விட்டான்.
பொங்கி வந்த அழுகையை, மிகவும் முயன்று அடக்கியபடி, ஆதித்ய வர்மனைப் பார்த்து புன்னகைத்தாள்.
கௌசிக்கின் அறையிலிருந்த சிசிடிவி கேமரா வழியே இந்தக் காட்சிகளைக் கண்ட சித்தார்த் வர்மனின் கண்களும் கலங்கி இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.
சித்தார்த்தின் சிரிப்பைக் கண்ட கௌசிக், நாற்காலியில் இருந்து எழுந்து தாவி வந்து, சித்தார்த்தின் தோள்களை பிடித்து தொங்கிக் கொண்டு, “சித்தார்த், உன்னை இப்படி பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீ ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறாய். மதுரவர்ஷினியிடம் சென்று அனைத்து உண்மைகளையும் கூறிவிடு. பிரச்சனை முடிந்தது. நீங்கள் யாரும் கஷ்டப்பட வேண்டாம் “ என்று அறிவுரை வழங்கினான் ஒரு நல்ல நண்பனாக.
“ம்ஹூம்.... இல்லை கௌசிக்.
மதுரவர்ஷினி என்னை எனக்காகவே தேடி வரவேண்டும். சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் சதி செய்தாலும், என்னவள் என்னை நம்பி என்னை எனக்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் மகனுக்காக என்னை ஏற்றுக் கொண்டாலும் அது என் காதலுக்கு இழுக்கு. என்னை இன்னொரு பெண்ணின் கணவன் என்று நினைத்து கொண்டிருக்கும் மது, என்னைத் தேடி வந்து, நீ எப்படி என்னை விட்டு இன்னொரு பெண்ணை மணம் புரியலாம்? என்று உரிமையாகக் கேட்டு சண்டையிடும் போது சாய்த்துக் கொள்வேன் என்னவளை என் மார்போடு...” என்று கண்களைமூடி காதலில் கசிந்துருகி நான் சித்தார்த்.
தன் நண்பனின் நிலையைக் கண்ட கௌசிக், சித்தார்த்தின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “ அப்பப்பா... இந்தக் காதல்தான் மனிதர்களை என்ன பாடு படுத்துகிறது. அதிலும் உன்னைப் போல் ஒரு பாறாங்கல்லை கூட இப்படி இளக வைக்கிறது. நிமிடத்தில் மீண்டும் இறுக வைக்கிறது.
போங்கடா நீங்களும் உங்க காதலும்... “ என்று சிரித்துக்கொண்டே கூறி சித்தார்த்தின் முதுகில் ஒரு அடி வைத்தான்.
தன் நண்பனின் அடியை சுகமாக வாங்கிக் கொண்ட சித்தார்த், “காதலித்து பார் கௌசிக், உன் வாழ்க்கையின் அர்த்தம் உனக்கே புரியும். “ என்றான் கண்கள் மூடி ரசித்தபடி.
“ அதை இந்த நான்கு வருட தேவதாஸ் என்னிடம் கூறுகிறார்.. “ என்று கிண்டல் அடித்து சித்தார்த்திடம் இரண்டு அடிகள் வாங்கிக்கொண்டான் கௌசிக்.
அங்கே தன் மகனுடன் இருந்தவளோ, சித்தார்த்தின் மறு உருவமாக இருக்கும் ஆதித்திய வர்மனை தன் மனம் அறியாமலேயே அணுஅணுவாக ரசித்தாள்.
ஆதித்திய வர்மனின் புருவங்களை தன் மென் கரத்தால் மென்மையாக நீவி விட்டாள். குண்டு கன்னத்தில் ஒட்டியிருந்த உணவு பருக்கையை பூவிதழ் தீண்டுவது போல் ஒற்றை விரலால் தீண்டி அப்புறப்படுத்தினாள்.
கலைந்திருந்த அவன் கேசத்தை, தன் இடது கை விரல்கள் கொண்டு கோதிக் கொடுத்தாள்.
விழி எடுக்காமல் தன்னையே உற்று நோக்கிய மதுரவர்ஷினியைக் கண்டு சிறிதாக வெட்கம் வந்தது ஆதித்திய வர்மனுக்கு.
அவள் மெலிதாக புன்னகை புரிய, சட்டென்று தன் கைகளால் தன் முகத்தை மறைத்துக் கொண்டான் ஆதித்திய வர்மன்.
தன் விரல் இடுக்கின் வழியே தன் அன்னையை நோக்கி மோகனப் புன்னகை சிந்தினான்.
குழந்தையின் குறும்பில் குதூகலம் அடைந்த மதுரவர்ஷினி, தானும் தன் கைவிரல்களால் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
சட்டென்று நிலவு போன்ற தன் தாயின் முகம் மறைந்து விட்டதைக் கண்டு, “நோ... “ என்று கூறியபடி அவளது கைகளை பிடித்து கீழிறக்கினான்.
மதுரவர்ஷினியோ மீண்டும் மீண்டும் தன் கைகளால் முகத்தினை மறைக்க, கோபம் கொண்ட ஆதித்ய வர்மன் மேசையின் மறு பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டான்.
குழந்தையின் கோபத்தில் கூட அழகு மிளிர்வதைக் கண்ட மதுரவர்ஷினிக்கு தான் இழந்த சொர்க்கம் நினைவிற்கு வந்தது.
தன் மகவு தன்னோடு இருந்திருந்தால், இப்படித்தானே தானும் அவனும் செல்லச் சண்டை போடுவோம் என்ற நினைப்பில், உள்ளத்தில் ஆழத்தில் பதிந்து இருந்த அந்த துக்க பந்து மேல் எழுந்து அவளுடைய தொண்டையை அடைத்தது.
எவ்வளவோ தன்னை அடக்க முயன்றும் முடியாதவளின் அழுகை பெரும் கேவலாக வெடித்தது.
மதுரவர்ஷினியின் அறையை நோக்கி வேகமாக நகரத் துடித்த சித்தார்த்தனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான் கௌசிக்.
உறுத்து விழித்தவனின் விழிகளுக்கு, தங்கள் முன்னே இருந்த சிசிடிவி திரையைக் காட்டினான்.
தன் தாயின் அழுகுரலைக் கேட்டவுடன், சட்டென திரும்பிய ஆதித்ய வர்மன், தன் தாயின் அருகே நகர்ந்து வந்தான். தன் குட்டி கால்களை மடக்கி மண்டியிட்டு தன் தாயின் தோள்களைப் பிடித்தான்.
மதுரவர்ஷினி அவனுக்கு செய்தது போலவே, அவளுடைய புருவங்களை தன் பிஞ்சு கரத்தால் நீவி விட்டான்.
அவளது சிகையை மென்மையாய் தடவிக் கொடுத்தான்.
இமை மூடி விழிநீர் பெருக்கியவளின் கண்களின் மீது முத்தமிட்டான்.
ஆதித்திய வர்மன் தந்த இன்னுயிர் முத்தம், அவளின் அடி உயிர் ஆழம் வரை சென்று தித்தித்தது.
தன் கோபம் தான், தன் தாயை அழ வைத்தது என்று நினைத்த ஆதித்ய வர்மன், தன் தாயை சிரிக்கவைக்க, அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான்.
ஆதித்திய வர்மனின் முத்தத்தில் முத்தாடியவள், மனதில் ஏதோ ஒன்று நிறைந்து வழிய, தன் திரிசங்கு சொர்க்கத்தில் நின்றாள்.
வயிறு நிறைந்து உண்ட குழந்தைக்கோ தூக்கம் கண்ணைச் சுழற்றியது. மதுரவர்ஷினியை பார்த்து,
“ம்..மா... ஆதிக்கு ஜோஜோ பாடு... “ என்றான் அவள் தோளில் உரிமையாக சாய்ந்துகொண்டு.
இதனைக்கண்ட சித்தார்த்துக்கு, தன்னுடைய ஸ்கிரிப்டில் இந்த சீன் எல்லாம் இல்லையே என்று நினைத்தான்.
தன் மகனின் திறமையில், உதட்டோரம் கர்வத்தில் மீசை துடித்தது அந்தத் தந்தைக்கு.
பாடச் சொன்னதும் மதுரவர்ஷினி யோசனையாக ஆதித்ய வர்மனை பார்த்தாள்.
ஏக்கம் சுமந்த அந்த குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் மதுரவர்ஷினியின் இதழ்கள் தானாக அசைந்தன.
“தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ
—
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே..
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா?
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா?
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை...”
ஆதித்ய வர்மனின் முதுகில் தட்டிக் கொண்டே பாட, ஜம்மென்று துயில் கொண்டான் மைந்தன்.
ஆதியை படுக்கையில் கூட விடாமல், தன் கைச் சூட்டிலேயே வைத்துக்கொண்டு அறையினுள் நடை பயின்றாள். தான் சித்தார்த்திடம் வாங்கிய ஒரு மணி நேரம் முடிந்து விட்டதைக் கூட கணக்கில் கொள்ளாமல், கண்டெடுத்த புதையலை கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள்.
எதேச்சையாக விழி உயர்த்தி பார்த்தவள் கண்டது, தன் இரு கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்ற சித்தார்த் வர்மனைத்தான்.
நிதர்சனம் முகத்தில் அறைய, இத்தனை நேரம் பூமாலையாய் தோளில் இருந்தவன், மலையாய் கணக்க ஆரம்பித்தான்.
உரிமை இல்லாத இந்த அன்பில், உறுதி தேடி தவித்தது அந்த உரிமையானவளின் நெஞ்சம்.
மின்னல் வெட்டும்...

Last edited: