• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 27

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 27

ஒரு பிள்ளைக்கு தகப்பனே ஆனாலும், தன்னுணர்வு அறிந்து பெண்மையின் இதழ் தீண்டும் முதல் தருணம்.


ஆண்மையின் பிடியில் பெண்மை இளகத் தொடங்கிய அற்புதத் தருணம்.

கண்களால் காண முடியாத அவளது வலியை இதழில் தேடத் தொடங்கினான்.

மன்னவனின் அன்புத் தேடலுக்கு, இதழ் என்னும் சிகப்பு கம்பளம் விரித்து விழி மூடி ரசித்தது நின்றாள் பாவையவள்.

மென்மையாய் தொடங்கி அவன் வன்மையை கையாளும்போது, அதிர்ந்து விழித்தது அவள் பெண்மை.

படபடக்கும் அவளது இமைகளைத் தன் விழியால் பேசி அதன் துடிப்படக்கினான்.

ஆளுமையான அவன் விழி வழி வழிந்த பாசையில், இதமாய் பெண்மையும் இமை மூடிக்கொண்டது.

காதல் வானில் கூடிக் கலந்த மின்னலுக்கு வரவேற்பாய், சத்தமில்லாமல் முத்தத் தாளம் இங்கே இசைக்கப்பட்டது.

கரையும் மணித்துளிகளில், அவன் கலங்கும் விழித் துளிகளும் கலந்தது.

அவனின் கண்ணீரில் மெல்லமாய் அவள் விலக, செல்லமாய் அவன் அணைக்க, காதல் கவிதை ஒன்று அங்கே அரங்கேறியது.

தன் தளிர்க் கரம் கொண்டு அவன் விழிநீர் துடைத்து எடுக்க, சேர்த்து வைத்த முத்தத்தை எல்லாம் அவள் முகத்தில் சிந்திச் சிதறினான்.

சிதறிய முத்தங்களை அள்ள மனமின்றி அவன் மார்பில் சாய்ந்தாள் மதுரவர்ஷினி முத்தாரமாய்.

பிரிவின் தாபங்கள், காயங்கள், கோபங்கள் எல்லாம் வலுவிழந்து போயின முத்தச் சஞ்சாரத்தின் முன்.

மொட்டை மாடியில் காற்று வேகமாய் வீச, பறக்கும் தன் சேலை தலைப்பை தன் கைகளால் பற்றிக் கொண்டு சித்தார்த்க்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள் மதுரவர்ஷினி.

சுவைக்கும் மிட்டாயை தொலைத்துவிட்ட பாவனையில் நின்றிருந்த சித்தார்த், மதுரவர்ஷினியைப் பார்த்து,
“மது... “ என்று வார்த்தைக்கு வலிக்காமல் மெதுவாக அழைத்தான்.


நாணப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டவளோ, “ம்...“ என்று முனங்கினாள்.

“இல்லை மது... முதல் தடவை.. “


“ம்... முதல் தடவை “

“ தெரியாமல் ஏதாவது பிழையாக கொடுத்திருப்பேனோ? “

“ என்ன பிழை.. “

“ முத்தத்தை தப்பாக கொடுத்திருப்பேனோ..? “

“ஆஹான்... டாக்டருக்கு நல்ல சந்தேகம்? “

“ அதனால் மறுபடியும் இன்னொரு முறை... “ என்றவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள் மதுரவர்ஷினி.

“சித்தூ.... “ என்று சிணுங்கிய படி தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

“ என் காலமெல்லாம் தனிமையிலேயே போய்விடும் என்ற கவலையில் இருந்தேன்.

உன் காதல் மட்டுமே என்னை உயிர்த்தெழச் செய்யும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய் மது.


கடந்த காலத்தை கடந்து விட்டோம் என்ற மமதையில் இருந்தவனுக்கு, காதல் குருடனாய் இருந்தவனுக்கு, மின்னலாய் தோன்றி கண்னொளியை ஒளிரச் செய்தாயே “ என்று இருகரம் விரித்து அவளை வா என்று பார்வையால் அழைத்தான்.

நாணம் மறந்து, வெட்க ஆடை கிழிந்து, தன்னவனின் கைச்சிறையில் இனிதே கைதாகினாள்.

அவள் காதோரம் சுருண்டிருந்த கற்றைக் கூந்தலை தன் இரு விரல்களால் மடித்து, காதின் பின்னே தள்ளினான்.

சிலிர்த்திட்ட அவளின் காது மடலை இதமாய் வருடினான்.


அவளின் கன்னங்களில் செந்தூரப் பூ மலர்ந்திட, செம்பவழ இதழ்கள் பற்களிடையே கடிபட, அந்திநேர பூக்காடாய் தன் கைகளில் பூத்துக் கிடந்தவளை கண்டவனின் ஆண்மையும் கம்பீரமாய் அவன் காதலில் நிமிர்ந்து நின்றது.

ஓர விழியால் அவனின் கர்வச் சிரிப்பைக் கண்டவளுக்கு , உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அவளின் குறும்புத்தனம் தலைதூக்க அவனுடைய சட்டை காலரை தன் கைகளால் இழுத்தாள் தன் முகத்தை நோக்கி.

ஆசையாக மதிமுகம் நோக்கி குனிந்தவனின், நெற்றியில் ஒரு முட்டு முட்டி விட்டு, இதழ்களைச் சுளித்து பழிப்பு காட்டி கீழே இறங்கிச் சென்றாள்.

வெட்க மிகுதியில் ஓடிச்செல்லும் மதுரவர்ஷினியை “நில்... “ என்று அவனுடைய ஒற்றை வார்த்தை கட்டிப்போட்டது.

சிணுங்கிய கொலுசொலிகளின் சப்தம் நிசப்தமாக, சிலையென நின்றாள் பாவையவள்.

“ இனி உன்னுடைய பிரிவை என்னால் தாங்க முடியாது மதுரவர்ஷினி” என்று தன் உள்ளத்திலிருந்து கூறியவன் அவளது கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு, தன் வீடு திரும்பினான்.

சித்தார்த்தின் வீட்டை ரணகளப்படுத்திக் கொண்டிருந்தனர் தாத்தாவும் பேரனும்.

ஒரு வாய் உணவை வாங்குவதற்குள் அவரை ஒரு மினி மாரத்தான் ஓட்டம் ஓடச் வைத்தான் ஆதித்.

“ டேய் நான் உன் அம்மாவையே வளர்த்தவன். என்கிட்டேவா... வாடா... “ என்று துரத்திக் கொண்டு சென்றார்.

மாடிப்படிகளில் குடுகுடுவென ஏறத் தொடங்கினான் ஆதித்.


வயது மூப்பின் காரணமாக மெதுவாக ஏறினார் சிவானந்தன்.

தங்களுடைய அறையை அடைந்தவன் படுக்கையைச் சுற்றி ஓட ஆரம்பித்தான்.

இயல்பாய் பேரனோடு அந்த அறைக்குள் நுழைந்தவர், அலங்கார கண்ணாடி பெட்டிக்குள் இருந்த பொருட்களைக் கண்டதும் திடுக்கிட்டார்.

மதுரவர்ஷினியின் கைகுட்டை தொடங்கி காது கம்மல் வரை கவி பாடிக் கொண்டிருந்தது.

அவளின் கடிதம் அழகாய் சட்டம் இடப்பட்டு அவர்களின் காதலைப் பறைசாற்றியது.


பார்க்கப்பார்க்க அவர்களின் காதலில் நெஞ்சம் விம்மியது சிவானந்தத்திற்கு.

திடீரென்று ஆதித் ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டு சிவானந்தத்திடம், “தாத்தா அம்மாக்கு மம் மம் குடு.. “ என்ற மழலை குரலில் உள்ளம் நொறுங்க அதில் இருந்த மதுரவர்ஷினியின் புகைப்படத்தைக் கண்டார்.

நிஜம் இல்லாமல் நிழலிடம் தன் தாயைத் தேடிய அந்த பிஞ்சு உள்ளத்தின் கால்களில் பட்டென்று விழுந்தார்.

“ஐ... தாத்தா டொம்மு விழுந்தாச்சு.. “ என்று கைதட்டிச் சிரித்தான்.

“ ஆமாம்டா கண்ணா... உங்கள் அன்பின் முன், பாசத்தின் முன், அவர்களின் காதல் முன் விழுந்துவிட்டேன்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நான் செய்த தவறை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

நான் பாவி... நான் பாவி...” என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

மிரண்டுபோன ஆதித்ய வர்மன், அவர் அருகில் வந்து,
அவர் முகத்தில் ஒட்டி இருந்த சாதத்தை எல்லாம் தன் பிஞ்சுக் கரங்களால் தட்டிவிட்டு, தன் தாத்தா கீழே விழுந்ததால் அழுகிறார் என்று நினைத்து, முகத்தில் முத்தம் கொடுத்து, “போச்சு... நோ... தாத்தா... ஆதி தாத்தா குட் பாய் “ என்று கடவுள் போல் வந்து அவர் தவறை மன்னித்தான்.


“புனிதமான காதல் என்றுமே புனிதமானது... அற்பமானவர்களுக்கு என்றுமே அது அரியது “ என்று தன் ஞானம் தெளிந்தார்.

“ காதலை இரு உடல்களின் காமமாய் பார்த்தவர், இன்று அது கலங்கமில்லா இரு உள்ளங்களின் சங்கமம் “ என்பதை ஐயம் திரிபுர புரிந்துகொண்டார்.

தன் பர்ஸில் உள்ள தன் மனைவியின் புகைப்படத்தின் முன், “என் பேரன் என்னை மன்னித்து விட்டான். இனி எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் உன்னிடம் விரைந்து வந்து விடுவேன்” என்று தன் நீண்ட பாரம் நீங்கியது போல் பெருமூச்செடுத்தார்.

தன் பர்ஸில் எப்பொழுதும் வைத்திருக்கும் தன் மனைவியின் திருமாங்கல்யத்தை கையில் எடுத்தவர் அதைத் தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

சித்தார்த் வர்மனும், மதுரவர்ஷினியும் கைகோர்த்தபடி வீட்டிற்குள் நுழைய, ஆதித்ய வர்மன் ஓடிவந்து இருவரின் கால்களையும் கட்டிக்கொண்டான்.

ஒருசேர அவனைக் கட்டிக் கொண்டவர்கள் மகிழ்ந்து கொண்டாடினர்.

“ மாமா... “ என்று சித்தார்த் அழைக்க,

“ சொல்லுங்க மாப்பிள்ளை “ என்று சிவானந்தன் பதிலுரைக்க, தன் தந்தையை அங்கு கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாதவள், இருவரின் பாசப் பிணைப்பில் அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்தாள்.

“ நான் உங்களிடம் கூறியது போல், குடும்பமாக உங்கள் முன் நின்று விட்டேன்.

உறவென்று யாரும் இல்லாத எனக்கு தந்தை ஸ்தானத்தில் என்னை நீங்கள் வழி நடத்த வேண்டும் “ என்று கண் கலங்கக் கூறியவன் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறக் குனிந்தான்.


சித்தார்த்தை தொடர்ந்து மதுரவர்ஷினியும் தன் தந்தையின் கால்களில் விழுந்தாள்.

தன் தாய் தந்தை இருவரும் தாத்தாவின் காலில் விழுவதைப் பார்த்த ஆதித்திய வர்மன், சடாரென்று அவனும் தாத்தாவின் காலில் விழுந்து விட்டான்.

மகிழ்ச்சியில் அவர்கள் குடும்பம் ஆனந்தமாய் ஆரவாரித்தது.

“ இன்னும் எனக்கு ஒரு கடமை மட்டும் பாக்கி இருக்கிறது மாப்பிள்ளை “ என்றார் சிவானந்தன்.

“ சொல்லுங்கள் மாமா அதை முடித்து வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்றான் சித்தார்த் உரிமையாக.

தன் சட்டைப்பையில் தான் பத்திரப்படுத்தி இருந்த தன் மனைவியின் திருமாங்கல்யத்தை எடுத்துக் சித்தார்த்தின் கைகளில் கொடுத்தார்.

“ இது உங்கள் கடமை அல்ல மாமா என் வாழ்க்கையின் வரம். ஒரு உறவும் இல்லாத எனக்கு இந்த இனிய குடும்பம் எனக்கு தவப்பயன் மாமா” என்றான் நெகழ்ச்சியாக.

“ ஆனால் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதே மாமா இப்பொழுது நான் என்ன செய்ய? “ என்றான் குறும்பாய் மதுரவர்ஷினியைப் பார்த்தபடி.

தன் ஒரு விரல் நீட்டி பத்திரம் என்று
மிரட்டினாள்
மதுரவர்ஷினி .

அமைதியாய் காட்சியளித்த சிவானந்தன் சித்தார்த்தின் வார்த்தைகளில் ருத்ர தாண்டவம் ஆட சிவ மூர்த்தியாய் சிலிர்த்து எழுந்தார்.

“என்ன மாப்பிள்ளை? “ என்று அவர் உறும...

“ நான் முதலில் திருமணம் முடித்ததும் உங்கள் மகள் மதுரவர்ஷினியைத் தான் மாமா.

மோதிரம் அணிவித்து என் திருமணத்தை நான் உறுதி செய்தேன்.

அதை இன்றும் திருமாங்கல்யமாய் கழுத்தில் சுமந்து கொண்டிருக்கிறாள் மதுரவர்ஷினி.

அதைத்தான் வேடிக்கையாகச் சொன்னேன்.


விட்டால் திருப்பாச்சி அருவாளை தீட்டிக் கொண்டு வந்து விடுவீர்கள் போலவே...” என்று பயந்தவன் போல் சித்தார்த் நடுநடுங்க, சதங்கை ஒலி போல் குலுங்கிச் சிரித்தாள் மதுரவர்ஷினி.

அந்த மனநிறைவுடனே மதுரவர்ஷினியின் பொன் கழுத்தில், பொன் தாலியை அணிவித்தான் சித்தார்த் வர்மன்.

கண்கலங்க இருவரையும் மனதார ஆசிர்வாதம் செய்தார் சிவானந்தன்.

தன் தாத்தாவைப் போலவே தானும் இரு கரங்களை உயர்த்தி தன் பெற்றோரை ஆசீர்வாதம் செய்தான் ஆதித்ய வர்மன்.

குடும்பமே குதூகலித்து நகைத்தது.

அன்று முழு பவுர்ணமி தினமாக இருந்ததால், ஆதித்ய வர்மனை அழைத்துக்கொண்டு, தாங்கள் காதல் பகிர்ந்த கடற்கரைக்கு தங்கள் காரில் சென்றனர்.

அலைகடல் ஆர்ப்பரிக்க, நிலமகள் குளுமையை வாரி இறைக்க, வானில் வெண்ணிலா தன் ஒளியை சிதறச் செய்ய, தன் மகனை தோளில் தாங்கிக்கொண்டு, கடற்கரையில் காலடித் தடம் பதித்தான் சித்தார்த் வர்மன்.

அவனின் மனையாளோ, அவன் காலடி தடத்தில் மீது தன் காலடித் தடத்தை பதித்துக் கொண்டு நடந்தாள்.

கீழ்நோக்கியே நடந்து கொண்டிருந்தவளைக் கண்டவன், உதட்டில் புன்முறுவல் பூக்க தன் நடையை நிறுத்தினான்.

தன் மகனைப் பார்த்து உதட்டில் விரல் வைத்து சப்தம் செய்யாது இருக்கும்படி சைகை செய்தான்.

இருவரும் சத்தம் வராமல் நகைத்தனர். கீழே குனிந்தபடியே நடந்து கொண்டிருந்தவள் சித்தார்த்தின் மார்பின்மீது முட்டியபடி நின்றாள்.

“சித்தூ... “ என்று ராகமாய் இழுத்தவளை தன் கையோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

கடலோரக் கவிதைகளாய் கவி படித்தது அந்தக் குடும்பம்.

இரவின் தனிமையில் தன்னோடு சேர்ந்தவளை தன்னுயிராக்கி ஊனோடு உயிராய்க் கரைந்தனர் இருவரும்.

பௌர்ணமி நிலவும் பால் ஒளியை பாங்காய் பொழிந்தது அவர்கள் இன்பத்தின் சாட்சியாய்.

மறுநாள் கௌசிக் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு, மதுரவர்ஷினி அழகிய வெளிர் நீல டிசைனர் சாரியில் கண்ணாடி முன்னே தன்னை திருத்தம் செய்து கொண்டிருந்தாள்.

வலிய கரம் ஒன்று பின்னிருந்து அவள் இடையை வளைக்க, சுகமாய் பின்னே சாய்ந்தாள் மன்னவன் மார்மீது.

மயங்கிய பூங்கொடியை தன் கைகளில் ஏந்த , ஆதித்திய வர்மன் என்ற மலர்ச் செண்டும் கட்டிலிருந்து தாவி அவன் கழுத்தை கட்டிக் கொண்டது.

“ ஆதி குட்டி சாமி கும்பிட வா “ என்று கதவின் ஓரமாய் அவன் தாத்தா அழைக்க, தந்தையின் கழுத்திலிருந்து சரசரவென கீழே இறங்கி தாத்தாவை நோக்கி ஓடினான்.

ஓடும் வேகத்தில் கதவு தானாய் அடைத்துக்கொள்ள, மதுரவர்ஷினியை அள்ளி மஞ்சத்தில் சரித்தவன், “மது கண்ணை கொஞ்சம் மூடிக்கொள்ளேன்” என்றான் கொஞ்சும் குரலில்.

மலர்ந்த முகத்துடன் தன் இமைகளை மூடிக்கொண்டாள்.

அவளின் காதருகே குனிந்து, “ ஐ லவ் யூ மது... “ என்றான் கிசுகிசுப்பாக.

மின்னல் வெட்டும்....
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
அருமை தோழி. நிறைவான பதிவு. கதை சிறப்புற அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அருமை தோழி. நிறைவான பதிவு. கதை சிறப்புற அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.
நிறைவுப் பதிவு உங்கள் மனதை நிறைக்க வைக்கும் 👍
காத்திருங்கள் தோழமையே 😍
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
ஐ லவ் யூ ஏஹ் இப்போதான் சொல்றாரு...🤭😍

கியூட்... ❤❤
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
இதய நிபுணனுக்கு முத்தத்தில் சந்தேகமா 🤭🤭🤭

காதல் வெள்ளம் கரை புரண்டோடுதே :love::love::love:

அழகிய தருணமாய் :giggle::giggle::giggle: