• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 28 Final

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 28 ( இறுதி அத்தியாயம் )

அவனின் ஐ லவ் யூ வில் கன்னம் சிவக்க வேண்டியவளோ, கண்களால் முறைத்தாள்.


அவளின் புருவச் சுளிப்பை நீவி விட்டவன், “ என் ஐ லவ் யூ க்கு பதில் சொல்ல மாட்டாயா மது? “ என்றான் மென்மையாக.

“ ஓ... பதில் தானே! சொல்லிவிட்டால் போயிற்று” என்றவள் அவனின் கன்னங்களை ஆழமாகக் கடித்து வைத்தாள்.

“ ராட்சசி... “ என்று தன் கன்னங்களை அழுத்தமாக தேய்த்துக்கொண்டான்.

“ மிஸ்டர் சித்தார்த், இந்த ஐ லவ் யூ தான், என் வாழ்க்கையையே திசை திருப்பியது. இதை மீண்டும் கேட்கும் போது ஆனந்தத்திற்கு பதிலாக கோபம் தான் வருகிறது “ என்றாள் நுனி மூக்கு சிவந்த கோபத்துடன்.

சிவந்த அவள் மூக்கில் ஆசையாக முத்தமிட்டவன்,
“அடியேய்.... சொப்பன சுந்தரி, வார்த்தைகள் வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்கலாம், சொல்லும் நபரும் , இடமும், வார்த்தைகள் தாங்கிய உணர்வுகளும் மாறுபடும்” என்றவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்துக்கொண்டு,


“ இன்னும் உனக்கு புரியவில்லை என்றால் உனக்கு வேண்டுமானால் செயலில் காட்டவா “ என்றான் காதலாக.

“ ஐ லவ் யூ “ என்றான் அவள் உள்ளங்கையில் முத்தமிட்டபடி.
கோபப் பார்வை சற்றே குறைந்தவளின் கண்களில் கிறக்கமாக “ஐ லவ் யூ... “ என்று கூறியபடி முத்தமிட்டான்.

இளகத் தொடங்கிய தன் மனதை இறுக்கிப் பிடித்தாள் மதுரவர்ஷினி.

“ ஐ லவ் யூ... “ என்று கூறியபடி கன்னங்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மயங்கியவளை தன் மடி சாய்ந்து “ஐ லவ் யூ... “ என்று கூறியபடி காது மடலில் முத்தமிட்டான்.

உடல் சிலிர்த்து அடங்கியவளை நோக்கி , “ ஐ லவ் யூ.. “ என்று கூறியபடி அவள் உதட்டை நோக்கி வந்தவனின் இதழில் தன் கைகளை வைத்து மறைத்தாள்.

“ அய்யாசாமி.... நன்றாக புரிந்து கொண்டேன். பார்ட்டிக்கு நேரமாகிறது எழுந்திருங்கள்” என்று அவனை தன்னில் இருந்து விலக்கி எழுந்து நின்றாள்.

கட்டிலில் மல்லாந்து கைகளை தலையின் அடியில் கொடுத்து படுத்திருந்தவனோ, “மருத்துவனை மடக்கிய மைனா நீயடி.... “ என்றான் சிரித்துக்கொண்டே.

இதழ் சுளித்து பழிப்பு காட்டினாள் அவனுக்கு.
சித்தார்த்துடைய போன் அந்த நேரம் அழைப்பு விடுக்க, அதனை எடுக்க முயன்றவனின் கைகள் பட்டு ஸ்பீக்கர் மோட் ஆன் ஆக “ஹலோ.. “ என்றான்.


போனில் மானசா அந்தப் பக்கம் இருந்து சித்தார்த்திடம், “ நீ இப்பவே எனக்கு ஐ லவ் யூ சொல்லு “ என்றாள் ஆணையாக.

சற்று முன் பெரும் புயலை சமாளித்தவன், மீண்டும் ஒரு புயலைக் கண்டு அஞ்சி அப்படியே மதுரவர்ஷினியைப் பார்க்க, அவளோ தாய்மையின் பரிவுடன் பேசு என்பது போல் சைகை செய்தாள்.

முகம் மலர்ந்தவன், நிமிடத்தில் கணவன் அவதாரத்தில் இருந்த தந்தை அவதாரத்திற்கு மாறினான்.

முகத்தில் பாசம் பொங்க, அரவணைக்கும் குரலில் “ ஐ லவ் யூ... “ என்றான் மானசாவிடம் ஒரு தந்தையாக.

சித்தார்த்தின் தோள் வளைவில் தன் தலையைப் பதித்தவள், இதமாய் அணைத்துக்கொண்டாள் அவனை.

அவன் போன் பேசி முடித்தவுடன், மதுரவர்ஷினி சித்தார்த்தை பார்த்து “உங்கள் வார்த்தைகளைக் கேட்ட நான், அதன் உணர்வுகளை புரியாமல் போனது விதியின் சதியோ...“ என்று கூறியபடி பெருமூச்செறிந்தாள்.

“ஓ... ஹனி... நீ எனக்கானவள் நான் உனக்கானவன். இதுவே நிதர்சனம்” என்று கூறியவன் இத்தனை நேரம் மொழிந்த காதல் வார்த்தைகளை, ஒற்றை மொத்தமாய் பிறை நுதலில் பதித்து விலகினான்.

“ இன்னும் நாம் பார்ட்டிக்கு செல்ல காலம் தாமதித்தால் கௌசிக் அண்ணா நம்மை கேலி செய்து விடுவார். கிளம்புங்கள் சித்தூ.... “ என்றாள் இனிய குரலில்.

இருவரும் சிரித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்க, தன் பேரனை அவர்களிடம் கொடுத்து விட்டு, அந்த இனிய குடும்பத்தை மனநிறைவுடன் பார்த்தார் சிவானந்தன்.

“ மாமா ஒரு நிமிடம். நீங்களும் கண்டிப்பாக எங்களுடன் பார்ட்டிக்கு வந்துதான் ஆக வேண்டும்” நான் சித்தார்த் அன்புக் கட்டளையாக.

மனம் நெகிழ்ந்து பாசத்திற்கு கட்டுப்பட்டவர், மனமகிழ்ச்சியுடன் அவர்களுடன் கிளம்பினார்.

இவர்களின் இனிய குடும்பம் பார்ட்டி ஹாலுக்குள் நுழைய, அனைத்து மருத்துவர்களின் குடும்பங்களும் ஆரவாரித்து வரவேற்றனர்.

ஆண்மையின் கம்பீரத்துடன் சித்தார்த் வர்மனும், பெண்மையின் பொலிவுடன்
மதுரவர்ஷினியும், அவர்கள் காதலின் சாட்சியாக ஆதித்ய வர்மனும் நிற்க, பொறாமை பேச்சுக்கள் பொசுங்கித் தான் போயின.


கார்முகில் ஓடிவந்து நட்புடன் மதுரவர்ஷினியை அணைத்துக்கொண்டாள்.

“ கள்ளி... டாக்டர் சித்தார்த்தை பற்றி என்னிடமே போட்டு வாங்கினாயா? “ என்று வம்பிழுத்துச் சிரித்தாள்.


கேக் வெட்டி பார்ட்டியை ஆரம்பிக்க கௌசிக் அழைத்தான்.

சித்தார்த் பெயரை வெட்ட மதுரவர்ஷினி மறுக்க, மதுரவர்ஷினியின் பெயரை சித்தார்த் வெட்ட மறுக்க, “ஹோ... “ என்று கூட்டம் ஆரவாரம் செய்தது.

தன் தந்தையின் கைகளில் இருந்த ஆதித், கேக்கின் மீதிருந்த ஆர்வம் தூண்டப்பட, தன் தாய் தந்தையர் பெயர் எழுதப்பட்டிருந்த அந்த க்ரீமை வழித்து தன் வாயில் வைத்து, சுவைத்து சப்புக் கொட்டினான்.

மழலையின் செய்கையில் அனைவரும் மனம் நிறைந்து சிரித்தனர்.

பார்ட்டி டான்ஸ் மோடுக்கு மாற, அனைவரும் மதுரவர்ஷினி மற்றும் சித்தார்த் வர்மனை நடனமாட அழைக்க, சிரித்தபடியே மேடையேறினர் இருவரும்.

மதுரவர்ஷினி இசைத் தட்டை சுழலச் செய்பவரின் அருகே சென்று ஒரு பாட்டை தேர்வு செய்து கொடுத்தாள்.

மேடையின் விளக்குகள் அணைய, சித்தார்த் மற்றும் மதுரவர்ஷினி மீது மட்டும் வெளிச்சம் பரவ, இனிமையான அந்த பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது.

“உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே

உன் கைகள்
கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்
ஓரம் நீா்த்துளி

உன் மாா்பில்
சாய்ந்து சாகத்தோணுதே
ஓ….. ஓ…….. ஓ…….. ஓ……


விடிந்தாலும் வானம்
இருள்பூச வேண்டும்

மடிமீது சாய்ந்து
கதைபேச வேண்டும்


முடியாத பாா்வை
நீ வீச வேண்டும்

முழு நேரம் என்மேல் உன்
வாசம் வேண்டும்


இன்பம் எதுவரை
நாம் போவோம் அதுவரை


நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே

ஓஹோ…. ஓ… ஓ…

ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்


ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்


காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே


ஓ… ஓ……. ஓ…… ஓ…
உன்னாலே எந்நாளும்

என் ஜீவன் வாழுதே”

சுற்றியிருக்கும் உலகம் மறந்து இருவரும் பாட்டில் லயித்து காதலில் கரைந்தனர்.

எந்தப் பாடலை பிரிவின் தாக்கத்தில் பாடிக்கொண்டிருந்தாளோ, அதே பாடலை இன்று சந்தோஷத்தின் உச்சத்தில் பாடும்போது மதுரவர்ஷினி பேரழகியாக ஜொலித்தாள்.

தன் காதல் வானில் மின்னலாய் வந்த மனைவியையும், மகனையும் தன்னிரு பக்கமும் அணைத்துக் கொண்டு ஆனந்தப் பரவசத்தில் நின்றான் சித்தார்த் வர்மன்.

அழகான அந்தக் காதல் காவியத்தை அனைவரும் ரசித்தனர்.

************************
ஐந்து வருடங்கள் கழித்து....

மருத்துவமனை கிளம்பும் அவசரத்தில் “ சித்தூ.... “ என்று மதுரவர்ஷினி குரல்கொடுக்க, “ என்ன மது?” என்று சித்தார்த்தும், “என்ன மீ” என்று சித்தார்த் மற்றும் மதுரவர்ஷினியின் சீமந்த புத்திரி சித்ர வர்ஷினி குரல் கொடுக்க, தன் மகளை முறைத்துப் பார்த்தாள் மதுரவர்ஷினி.

“ அடியே அம்மு... நான் என் சித்தார்த்தை கூப்பிட்டேன்” என்றாள் விரைப்பாக.

தாய் தன்னை முறைத்ததும், கண்களைக் கசக்கியபடி தன் தந்தையை நோக்கி ஓடியது அந்த சின்னச் சிட்டு.

தன் மகளை தோளில் சாய்த்துக்கொண்டு சமாதானப்படுத்தியவன், “மது திஸ் இஸ் டூ மச்.... என் சித்துக் குட்டியை யாரும் அழ வைக்க கூடாது. இனிமேல் என்னை வர்மா என்று அழைத்துக் கொள்.


இந்த வீட்டில் இனி ஒரே ஒரு சித்து குட்டி தான் அது என் செல்ல மகள் தான் “ என்றான் மகளைத் தாங்கிப் பேசியபடி.

தனக்கு ஆதரவாக பேசிய, தன் தந்தையின் கன்னத்தில் லஞ்சம் கொடுத்தது அந்த இளம் மொட்டு.


“ ஹலோ வருமா... குருமா என்றெல்லாம் அழைக்க முடியாது. சித்தூ என்றால் அது என் புருஷன்தான் “ என்றாள் சண்டைக் கோழி போல் சிலிர்த்துக்கொண்டு.

“மதுரவர்ஷினி என் பேத்தியிடம் எல்லாம் சண்டை போடாதே. நாங்கள் எல்லோரும் எங்கள் பேத்தி பக்கம்தான் “ என்றார் சிவானந்தன்.

பாசத்தை பகிரத் தொடங்கிய நாள் முதல் உலகமே வண்ணமயமாகியது சிவானந்தத்திற்க்கு.

பாசத்தால் பைத்தியமான அந்தத் தந்தை, தன் பேரன் பேத்தியின் அன்பில் கட்டுண்டு கிடந்தார்.

மதுரவர்ஷினி பரிதாபமாக தன் மகனைப் பார்க்க, அவனோ தன் தாத்தாவின் பேச்சுக்கு ஆமாம் என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

“ அம்மா நீங்கள் பெரியவர்கள். பாப்பா குட்டிப் பொண்ணு. பாப்பா சொல்வதைக் கேளுங்கள் அம்மா. அன்பு எதையும் விட்டுக் கொடுக்கும் என்று தாத்தா சொன்னார். ஒருத்தவங்கள நமக்கு மட்டும் தான் வேணும்னு வைத்துக் கொள்ளக்கூடாது. ஷேர் பண்ண ஷேர் பண்ண அன்பு பெருகுமாம். தாத்தா தான் சொன்னார். சோ நீங்க விட்டுக்கொடுங்கள். ப்ராப்ளம் ஓவர் “ என்று பெரிய மனிதனாக தீர்ப்பு சொன்னான் ஆதித்.

தன்னுடைய பேரனை பெருமையாகக் கட்டி அணைத்துக்கொண்டார் சிவானந்தன்.

“சரிதானே தாத்தா?” என்றான்.

“ஆமாண்டா செல்லம்” என்று கண் கலங்கினார்.

சித்தார்த்தின் அழைப்பை விட்டுத் தர வேண்டுமா? செல்லமாய் சிணுங்கியது
மதுரவர்ஷினியின் மனது.


சாதாரண விஷயம்தான். ஆனால் அந்தப் பிரிவின் தாக்கம் இன்னும் மதுரவர்ஷினியின் மனதை விட்டு அகலாமல் இருந்தது.

ஆனாலும் தன் மகளின் பொன் முகம் வாடி இருப்பதைக் கண்டவள், அவளின் அருகே சென்று, “ ஓகே பேபி. இனி இந்த வீட்டில் நீதான் எல்லாருடைய செல்ல சித்தூ... “ என்று கூறி அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பதிலுக்கு மகளும் தன் அன்னையின் கன்னத்தில் பாசமாக முத்தமிட்டாள்.

வெளியே வந்ததும், தன் கால்களை உதைத்துக் கொண்டு, மருத்துவமனை செல்ல காரில் ஏறி அமர்ந்தவளின், அருகே சித்தார்த் அமர்ந்தான்.

“ மிஸ்டர் குருமா நீங்கள் உங்கள் மகள் கூடவே செல்லலாம்” என்றாள் வீம்பு பிடித்த குரலில்.

“ஹேய்... மது.... நம் தனிமை நேரங்களில் எத்தனை பெயர் சொல்லி அழைத்திருக்கிறாய். ஒரே ஒரு பெயரை விட்டுக்கொடுக்க கூடாதா? “ என்றான் கேலியாக.

நாணத்தால் தலை குனிந்தவளின் காதருகே சென்று அவள் அழைக்கும் பெயர்களை வரிசையாக பட்டியலிட, குங்குமமாய் சிவந்த முகத்துடன் அவன் இதழைத் தன் இதழால் மூடினாள் மதுரவர்ஷினி.

சுபம்!
 
Last edited:

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பிற்கினிய நட்புகளே 💐
கதையோடு பயணித்த அத்தனை வாசகர்களுக்கும், கதை எழுத வாய்ப்புத் தந்த வதனி பிரபு தோழி அவர்களுக்கும், களம் தந்த வைகை தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்து கொள்கிறேன் 🙏
தளத்தில் தொடர்ந்து ஆதரவளித்து ஊக்கம் தந்த,பாரதி சிவக்குமார் மற்றும் கவிப்பிரியா தோழமைகளுக்கு என் சிறப்பு நன்றிகள் 🙏

இனிய நினைவுகளுடன்...
அதியா ❤️
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
554
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சூப்பர் சுபம் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்த epi ல ரெம்ப ரெம்ப பிடிச்ச வார்த்தைகள் ன்னு சொன்னா அது """நீ எனக்கானவள், நான் உனக்கானவன் """"செம highlight words 😍😍😍😍😍😍😍😍😍😍
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சூப்பர் சுபம் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்த epi ல ரெம்ப ரெம்ப பிடிச்ச வார்த்தைகள் ன்னு சொன்னா அது """நீ எனக்கானவள், நான் உனக்கானவன் """"செம highlight words 😍😍😍😍😍😍😍😍😍😍
முதல் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரை அன்பாய் பண்பாய் எனக்கு ஆதரவளித்த உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றிகள் நட்பே🙏🙏🙏🙏
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
சுபமான நிறைவான பதிவு தோழி. மென்மேலும் பல நாவல்கள் படைத்திட வாழ்த்துக்கள்.
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
5 yrs க்கு அப்பறோம்...

ரெண்டு பேபிஸ்... 🥰🥰

நிறைவான முடிவு dr... 🥰😍

என்னைக்கும் சித்தார்த், மது அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹப்பியா இருக்கட்டும்... 🥰🥰

லவ்லி ஸ்டோரி... 😍

All the best for all your upcomming novels dr... 🥰🤝
 
Last edited:

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
மின்னலே என் வானம் தீண்ட வா....

மறக்க முயன்று
தோற்றுப்போய்,
சமாதானம் செய்ய முயன்று
தோல்வியோடு துவண்டு
அழுது கரைந்து,
அந்த நேசத்திடமே
அடைக்கலம் பெற மனம்
துடித்துக்கொண்டிருக்கும்
இரு இதயங்களின் கதை....

விரும்பி நேசித்து உருகி
விழி வழியே
விழிக்குள்ள தொலைந்து போக
ஆரம்பித்த நொடியில்,
அந்த நேசத்தின்
வழியே பெரும்
வலியொன்று
சதியாய் பிரித்த
விதியின் கதை .....

தந்தையின் நேசம்
தாயுமானவனின் பாசம்
தன் மகளின் காதலால்
தன்னுள் இருக்கும் சுயநல
தீவிர அன்பினால்
தீரா துன்பம் தரும்
துரோகியாய் மாற்றிய கதை....
(சிவானந்தன்)

தாயின் தவறான புரிதலால்
தந்தையின் பிடிவாதத்தால்
தாய் பாசத்திருக்கு ஏங்கும்
தனயனின் கதை.......
(ஆதித்ய வர்மன்)

இரு விழி படபடப்பில்
இதய துடிப்பின் லப்டப்பில்
இரு இதயம் _ ஒரு
இதயமாய் துடிக்கும்
இதய டாக்டரின் கதை....
(டாக்டர் சித்தார்த் வர்மன்)

மன்னவனை பிரிந்து
மகனை இழந்து
மனதால் வாடும்
மகப்பேறு மருத்துவரின் கதை...
( மதுரவர்ஷினி)


மின்னலாய் மனதில் பதிந்து
வானமாய் அன்பை சுமந்து
மழையாய் காதல் பொழிந்து
இடியாய் பிரிந்து
மேகமாய் மறுபடியும் நுழைந்து
தூறலாய் தவிக்க விட்டு
சாரலாய் சீண்டி
மீண்டும் சேர்ந்த
கடல் அலைகளின் சாட்சியாய்
கடற்கரையில் சேரும்
காதல் ஜோடிகளின் கதை......

முதல் சந்திப்பு
மோதலில் காதல்
காதல் பரிசு தங்க மீன்கள்
முதல் முத்தம்
மயங்கிய நிலையில்
முதல் கூடல்
தாலியாய் மோதிரம்
ஐ லவ் யூ _ ஐ ஹேட் யூ ஆக
முத்தத்தில் தான்
எவ்வளவு அன்பு....
தந்தையின் பாசம்
காதலனின் ஏக்கம்
கணவனின் சீண்டல்கள்
மகனின் துடுக்குத்தனம்( நடிப்பு)
மனதை மயக்கிய மைனா...
மதுவின் சித்தூ.......
ப்ப்பபபா......
என்னா காதல் கதை இது....
சொல்லிக் கொண்டே போகலாம்.
அனைத்தும் அருமை....


சித்தார்த் வர்மன்
ஆதித்ய வர்மன்
மதுரவர்ஷினி
சித்ர வர்ஷினி
பெயர்கள் அருமை.....
💐💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் சகி.....

அதியா.... இது
கவிதையாய் ஒர்
காதல் கதையா!!!!!!
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஓ மதுவுக்கு போட்டியாக இன்னொரு சித்தூவா 🤭🤭🤭

அன்பால் இணைந்த குடும்பம், இனி என்றும் அளவில்லா மகிழ்ச்சியில் :love::love::love:

அருமை சகி 👏👏👏💐💐💐