• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 5

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 5

மதுரவர்ஷினியின் அடிமடியில் அமிலங்கள் சுரக்கத் தொடங்கின. தன் கைகள் கொண்டு அடிவயிற்றை இறுக்கப் பற்றியவளை, “ம்மா பூச்சி . கலர் ..... கலர் பூச்சி .....” என்ற மழலைக் குரல் மீட்டு வந்தது.

வண்ணத்துப்பூச்சியின் பின்னே ஆதித்தின் கால்கள் ஓடத்துவங்கியது.

ஒரு பூவின் மேல் அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை பார்த்த ஆதித், “ பூச்சி..... நோ..... கோ..... கம்..... ஆதிகிட்ட கம்.... “ என்றான்.

வண்ணத்துப்பூச்சியோ அடுத்த மலர் தாவியது. தன் சொல்லைக் கேட்காத அந்த வண்ணத்துப்பூச்சியை தன்னுடைய அடர் புருவங்களை மத்தியில் சுருக்கி முறைத்தான்.

ஆதித்திய வர்மனின் செய்கைகள் தன் கடந்த காலத்தை திருப்பிக் காட்ட திகைத்தாள்.

நேரம் செல்லச் செல்ல ஆதித்ய வர்மனின் மழலைச் செயலில் மனம் கரையத் தொடங்கியது மதுரவர்ஷினிக்கு.

அவளது இறுகிய மனமும் வண்ணத்துப்பூச்சி போல் சிறகை விரிக்கத் தொடங்கியது.

அந்தக் கை கால் முளைத்த மழலைப் பட்டாம்பூச்சியை மதுர வர்ஷினி துரத்த ஆரம்பித்தாள்.

கைக்கு அகப்படாமல் போன பட்டாம்பூச்சி மேல் கோபம் கொண்ட ஆதித் சிறு குச்சி ஒன்றை எடுத்து அடிப்பதற்கு முன்னே சென்றான்.

“ஆதித்ய வர்மா...... “ என்ற மதுரவர்ஷினியின் அதிர்ந்த குரலில் குழந்தை திடுக்கிட்டுத் திரும்பியது.

உடனே குழந்தையை வாரிக் கையில் எடுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.


“ஆதித் நாம் தேடிப்போகும் உயிரைவிட, நம்மைத் தேடி வரும் உயிரே அழகானது” என்றாள்.

அவள் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் அவள் முகத்தையே ஆதித்ய வர்மன் பார்த்தாள்.

மலர்ந்த முகத்துடன், வேலியில் படர்ந்திருந்த வாசனை மிகுந்த வண்ணப் பூங்கொத்தை கொய்தாள்.

ஆதித்திய வர்மனை மடியில் வைத்துக்கொண்டு, அவன் கைகளில் அந்த மலர்ச் செண்டை வைத்து, குழந்தையின் உள்ளங்கைகளை தன் உள்ளங்கையில் தாங்கினாள்.

பறந்து சென்ற பட்டாம்பூச்சி, மலரின் வாசம் கண்டு அந்த பூச்செண்டில் வந்து அமர ஆதித்திய வர்மனின் முகத்தில் மலர்ந்த சிரிப்பினைக் கண்டு அகம் மலர்ந்தாள் மதுரவர்ஷினி.

பட்டாம்பூச்சி அருகில் வந்ததைக் கண்ட ஆனந்தத்தில் ஆதித்ய வர்மனும் தன் தலையைத் திருப்பி முகத்தை எக்கி மதுரவர்ஷினியின் கன்னத்தில் முத்தமிட்டான்.

நேரம் கடக்க, அந்த கேர் டேக்கரோ, மதுரவர்ஷினியிடம் இருந்து ஆதித்திய வர்மனை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

அன்னையும் மகனுமாய் கிளம்பியவர்களைக் கண்டு, ஆதித்திய வர்மனுடன் இன்னும் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை தன்னுள்ளே புதைத்துக்கொண்டாள்.

உதடு பிதுங்கி அழுகத் தொடங்கியவனை, மீண்டும் சந்திக்கலாம் என்று சமாதானம் கூறி விடை பெற்றாள்.

வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சையை முடித்தவனோ, தன் கைகளை குளிர் நீரில் கழுவிக் கொண்டிருந்தான்.

நீரின் குளுமையை மீறி அவனது கைகள் மதுரவர்ஷினியின் கழுத்து வெம்மையை உணர்ந்தது.

தன் கைகளை உயர்த்தி பார்க்க, அந்த திண்மையான கைகள், அவளின் மென்மையை மீண்டும் மீண்டும் உணரத் துடித்தன.

யூ...... என்று கத்தியபடி, உள்ளங் கைகளை இறுக்கி மூடி நீர்க்குழாயின் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

அந்த ஆறடி ஆண்மகனின் ஓரடியில் குழாய் தெறித்து சிதறியது. வெளிப்பட்ட நீரின் வேகத்தில் நீர்த்துளிகள் சிதறின.

சிதறிய நீர்த்துளிகள் சித்தார்த் வர்மனின் முகத்தில் ஓங்கி அறைய, தன் நிதானத்தை மீட்டெடுத்தான்.

வார்டு பாய் ஓடி வந்து, “குழாய் உடைந்து விட்டதா டாக்டர்? நான் சரி செய்து கொள்கிறேன் நீங்கள் கிளம்புங்கள் டாக்டர்” என்றான்.

அந்த நீள வராண்டாவை நான்கே எட்டுகளில் அளந்து விட்டு, தன் அறைக்குள் நுழைந்தான்.
சுழல் நாற்காலியில் இடமும் வலமுமாக அசைந்தவாறு சிந்தனை செய்தவனின் சிந்தையை ஆக்கிரமித்து இருந்தாள் மதுரவர்ஷினி.

கொடிய நான்கு வருடங்கள்... முடிந்த பின்னும், இன்னும் அவளைத் தேடும் தன் தேகத்தை வெறுக்க தொடங்கினான்.

“ தன்னையும் தன் குழந்தையையும் வேண்டாம் என்றாளே. அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்குமா?”
அவனது கேள்வி அவனையே தேளாய் கொட்டியது. அவள் அருகில் வேறு ஒருவனை நிற்கச் செய்ய மனம் மரண வலி கண்டது.

இனியும் இது தாங்காது என்று எண்ணியவன், நேரே கௌசிக்கின் அறைக்குள் நுழைந்தான்.
தான் ஒரு மருத்துவ டீமை உருவாக்க இருப்பதாகவும், அதற்கு டாக்டர்களின் பர்சனல் விவரங்கள் தெரிந்தால் உபயோகமாக இருக்கும் என்று உண்மையும் பொய்யும் சரிவிகிதத்தில் கலந்து கூறினான்.

தன் முன்னே இருந்த கணினியில் டாக்டர்கள் விவரம் இருந்த திரையை உயிர்ப்பித்தான் கௌசிக்.
இடையில் தனக்கு ஒரு போன் கால் வர “எக்ஸ்க்யூஸ் மீ. டா.. “ என்று கூறியபடி பால்கனி பக்கம் சென்றான் கௌசிக்.

கௌசிக் சென்ற அடுத்த நொடி, திரையில் தேடுதல் கட்டத்தில் மதுரவர்ஷினியின் பெயரைத் தட்டச்சு செய்தான்.

உள்ளங்கை வியர்க்க, மவுஸ் கருவியை மெல்ல நகர்த்தினான். டாக்டர் மதுரவர்ஷினி.

திருமணமானவள் என்ற குறிப்பை பார்த்தவுடன் மீதி விவரங்களை படிக்கும் முன் அவளுடைய பக்கத்தை மூடி விட்டான்.

ஏனைய டாக்டர் விவரங்களை மேலோட்டமாக பார்த்தபடி இருந்தவனின் தோள்களை கௌசிக் தொட, “இன்னும் சில சிறப்பு தகுதியுடைய டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும் கௌசிக் “ என்றான்.

“ நிச்சயமாக சித்தார்த். உன்னுடைய முடிவே என்னுடைய முடிவாக இருக்கும் “ என்று கூறி புன்னகை செய்தான்.


தனது அறைக்குத் திரும்பியவனை அவனது மனசாட்சி , “அவளால், என்னை மீறி மனதால், உடலால் ஒருவனை ஏற்க முடியுமா?” என்று கேள்வி கேட்டது.

“அன்று கேட்டது பொய்யா? அல்லது இன்று கண்டது பொய்யா?“.

குழப்பம் அதிகமாக தன் இரு கைகளினால் தலைமுடியை இறுக கோதினான்.

“மது...... “ உதடு பிரித்து ரசனை கலந்த குரலில் அவளின் பெயரை காற்றில் தவழ விட்டான்.

அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் மது மது என்று கூப்பாடு போட அதனை அடக்கும் வழி அறியாது, அவளைத் தொலைத்த நாட்களுக்குள் தொலைந்தான்.

சிறிது நேரம் கழித்த பிறகு, சித்தார்த் வர்மனின் அறைக்கு கௌசிக் ஒரு பார்டி இன்விடேஷன் உடன் வந்தான். “ சித்தார்த் நமது தீபம் மருத்துவமனையின் வளர்ச்சியை முன்னிட்டு வரும் ஞாயிறு அன்று ஒரு செலிப்ரேஷன் பார்ட்டி தாஜ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.

நிச்சயம் ஆதித்யவர்மனுடன் நீ கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பார்ட்டியின் முக்கிய செலிபிரிட்டி நீதான்.

ஜெர்மனியில் பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய பொறுப்பை எனக்காக உதறிவிட்டு வந்த என் நண்பனுக்காக...“ என்றான் நெகழ்ச்சியுடன்.

“டேய் கௌசிக். எதையும் மிகைப்படுத்தாதே. நிச்சயம் உனக்காகவே கலந்து கொள்வேன்” என்றான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நிதானமாக எழுந்த மதுரவர்ஷினி பால்கனியில் நின்றவாறு சுடர்விட்டு எரியும் சூரியனை வரவேற்கும் விதமாக சூரியநமஸ்காரம் செய்ய ஆரம்பித்தாள்.


ஏனோ மனம் அன்று தன் அன்னை தரும் இதமான எண்ணெய் குளியலுக்கு ஏங்கியது.

தலையில் நன்கு எண்ணெய் வைத்து ஊறவைத்து, நிதானமாக குளித்துவிட்டு கார்மேக கூந்தல் காற்றில் தவழ செல் போனில் ஒலிக்க வைத்த இசையில் மயங்கி இருந்தாள்.

அவளது மயக்கத்தைப் போக்க, அலைபேசி கார்முகிலின் எண்ணை சுமந்து கொண்டு அலறியது.

“ மது..... இன்று நம் லேடி டாக்டர்கள் எல்லாம் சேலையில் வரும்படி தீம் கொடுக்கப்பட்டுள்ளது.


நான் பார்லருக்கு சென்று, அலங்காரம் முடித்து விட்டு அப்படியே தாஜ்க்கு வந்து விடுகிறேன்.

ஓகே பை..... “ என்று மதுரவர்ஷினி பேசுவதற்கு இடம் கொடுக்காமல் போனை கட் செய்தாள்.

மாலை மயங்கிய நேரம், தனது கப்போர்டில் ஆராய்ச்சி செய்தாள் மதுரவர்ஷினி. சிகப்பு நிறமும் இல்லாத அரக்கு நிறமும் இல்லாத வண்ணத்தில் கருப்பு மணிகளும் பாசிகளும் வைத்து தைக்கப்பட்ட அந்த டிசைனர் சாரியை கையில் எடுத்தாள்.

மடிப்பு வைத்து கொசுவங்களை திருத்தம் செய்து, கண்ணாடியில் தன்னை நோக்கினாள்.

எந்த அலங்காரமும் இல்லாமலே அவளது அழகைப் பறைசாற்றியது அந்தக் கண்ணாடி.

எண்ணெய் குளியலில் பளபளத்த கார் கூந்தலை, கிளப்பில் அடக்கிவிட்டு தோள்களில் கூந்தலை வழியச் செய்தாள்.

கண்களில் மையிட்டு, உதட்டில் அளவான உதட்டுச்சாயம் இட்டாள்.

அழகியாய் இருந்தவள் அசரடிக்கும் அழகியாய் உருமாறினாள்.

தன் தோற்றத்தில் என்றுமே கர்வம் கொள்ளாதவள், உடைக்கு பொருத்தமான கைப் பையுடன் தாஜ் ஹோட்டலுக்கு தன் காரில் கிளம்பினாள்.

சென்னையின் போக்குவரத்து மிகுந்த சாலையில் லாவகமாக காரை ஓட்டினாள் மதுரவர்ஷினி.

தாஜ் ஹோட்டலின் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தவளை, அத்தனை கண்களும் மொய்த்தது.

அனைவரின் பார்வைகளையும் அசால்டாக புறந்தள்ளிவிட்டு தனியே இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

கரம் ஒன்று அவள் கண்களை மறைக்க, உடல் கூசி அந்தக் கைகளை உதறித் தள்ளி விட்டாள்.

“ஹேய் மது ரிலாக்ஸ். நான் தான் கார்முகில்” என்றவள் மயிர்க்கூச்செரிந்தத அவள் கைகளைப் பார்த்து,
“ நான் தொட்டதுக்கே இப்படியா?.... “ என்று கிண்டல் அடித்தாள்.

“ மதுரவர்ஷினி.... யு ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ்” என்றாள் பிரமிப்புடன்.

“ உதை வாங்க போகிறாய் கார்முகில். கிண்டல் செய்தது போதும்” என்றாள் தோரணையாக.

“நீயோ தனிமை விரும்பி. எனக்கோ தனிமை என்றாலே அலர்ஜி. நீ உன் தனிமையில் இனிமை கண்டுகொள் கண்ணம்மா. நான் என் நட்பு ஜோதியில் ஐக்கியமாக போகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

நாற்காலியில் அமர்ந்து இருந்த மதுரவர்ஷினி தன் கண்களால் அந்த பார்ட்டி ஹாலை அளவிட்டாள்.

அனைவரின் கைத்தட்டு ஓசையைக் கேட்ட படி, அனிச்சை செயலாக வாசலை நோக்கினாள்.

ஆதித்திய வர்மனை தன் கைகளில் சுமந்தபடி சித்தார்த் வர்மன் அந்த பார்ட்டி ஹாலினுள் கம்பீரமாக அடி எடுத்து வைத்தான்.

தந்தையும் மகனும் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை சிகப்பு பிளேசர் சகிதமாக உள்ளே நுழைந்தனர்.


சித்தார்த் வர்மனை உரித்து வைத்திருக்கும் ஆதித்திய வர்மனை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

மூச்சு விடவும் மறந்தபடி மதுரவர்ஷினி திகைப்பூண்டை மிதித்தவள் போல் மாறினாள்.

இருவரின் பின்னால் வந்த அந்த கேர் டேக்கர், சிறிது நேரம் சென்றதும் சித்தார்த் கையிலிருந்து ஆதித்திய வர்மனை தன் கைகளில் வாங்கினார்.


சினம் துளிர்க்க சித்தார்த் வர்மனை நோக்கிச் சென்றாள் மதுரவர்ஷினி.

ஜெர்மனியில் இருந்த முக்கியமான போன் கால் வர கேர் டேக்கரை நோக்கி, தன் மகனைப் பார்த்துக் கொள்ளும்படி சைகை செய்துவிட்டு, பார்ட்டி ஹாலின் இறைச்சல் சத்தத்தில் இருந்து ஒதுங்கி, பின்கட்டு வழியாக தோட்டத்திற்கு வந்தான்.

சிரித்தபடியே போன் காலை பேசி முடித்துவிட்டு திரும்பியவனின் முகத்திற்கு நேராக சொடுக்கிட்டாள் மதுரவர்ஷினி.


மின்னல் வெட்டும்...



 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ஒரே குழப்பமா இருக்கு writer அடுத்து என்ன அப்படின்னு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் மனசுல ஓடுது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️
ஒரே குழப்பமா இருக்கு writer அடுத்து என்ன அப்படின்னு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் மனசுல ஓடுது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
தங்களின் தொடர் பாராட்டிற்கு நன்றி 🙏🙏🙏.

இருவேறு உணர்வுகளின் சங்கமம் பிரளயமாய் இனி வரும் அத்தியாயங்களில் 👍
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
மதுவா ஆதித்தை வேண்டாம் என்றாள் 😳😳😳

அவனும் திருமணமானவன், அவளும் திருமணமானவள், ஆனால் அவர்களின் சரி பாதிகள் எங்கோ 🧐🧐🧐

கோபம் ஏனோ மங்கைக்கு 🤔🤔🤔