மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 6
மதுரவர்ஷினியின் செய்கையில் தன் இரு புருவங்களை மத்தியில் நெரித்துப் பார்த்தான் சித்தார்த் வர்மன்.
அவன் பார்வையை அஞ்சாமல் எதிர்நோக்கிய மதுரவர்ஷினி, “ ஹலோ மிஸ்டர் சித்தார்த் வர்மன்! மனைவி குழந்தையுடன் குடும்பம் சகிதமாக பார்ட்டிக்கு வந்தாயிற்று போலிருக்கிறதே... “ என்றாள் நக்கல் கலந்த குரலில்.
தன் வலது கை ஆட்காட்டி விரலால் நெரித்த புருவங்களை நீவி விட்டபடி யோசித்தான்.
குடும்பம் என்று அவள் கோடிட்டுக் காட்டிய விதத்தில், கேர் டேக்கரை தன் மனைவி என்று எண்ணிய அவள் முட்டாள்தனத்தை நினைத்து தோன்றிய இளம் சிரிப்பில் அவனுடைய இதழ் கடையோரம் லேசாக துடித்தது.
அவளின் பொறாமை கலந்த அந்த கோபத்தை நின்று நிதானமாக ரசிக்க ஆரம்பித்தான்.
அவனின் நிதானம், அவளின் நிதானத்தை இழக்கச் செய்தது.
சினத்தில் சிலிர்க்க, “மிஸ்டர் சித்தார்த் வர்மன், ஆதித்ய வர்மன் உங்கள் மகனா? “ என்றாள் நேரடியாக.
தன் தாடைகளைத் தடவியபடி உற்று நோக்கினான் அவளை.
அவன் பார்வையே ஆம் என்று பதில் அளித்தது அவளுக்கு.
“ அது எப்படி மிஸ்டர் சித்தார்த் வர்மன்? நான் என் மகனுக்கு வைக்க இருந்த பெயரை நீங்கள் உங்கள் மகனுக்கு வைக்கலாம்? “ கோபம் கரை கடந்தது அவளுக்கு.
“ உன் மகன்..... என் மகன்? இப்படியெல்லாம் சொல்வதற்கு உனக்கு அருகதை உள்ளதா? “ வார்த்தைகளை அதிர்வில்லாமல் அழுத்தமாய் உரைத்தான்.
“ நான் என் மகனுக்கு தேர்வு செய்த பெயரை நீங்கள் உங்கள் மகனுக்கு வைத்திருக்கக்கூடாது” ஆங்காரமாக ஒலித்தது அவள் குரல்.
“ ஆஹான்......” ஏளனமாய் இதழ் சுளித்தான்.
“ அடுத்தவன் பொண்டாட்டி எல்லாம் என் மகனைப் பற்றி பேசக்கூடாது” நெருப்பாய் உமிழ்ந்தான் வார்த்தைகளை.
அதிர்ச்சியில் மையிட்ட விழிகளை விரித்துப் பார்த்தாள் மதுரவர்ஷினி.
“ ஷட் அப்.... என் அந்தரங்கத்தைப் பேச உங்களுக்கு உரிமை இல்லை” என்றாள் வேக மூச்சுடன்.
“ என்ன பார்வை! என்ன ஒரு அற்புதமான நடிப்பு! இன்னும் இதை நம்புவதற்கு நீ வேறு ஒருவனைத் தான் தேட வேண்டும்.
மதுரவர்ஷினி! பெயரைப் போலவே ஆளும் மயக்கும் படி தான் இருக்கிறாய்“ என்று கூறியபடி அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
“ச் சீ..... என்று கூறியபடி முகத்தை சட்டென்று வேறு பக்கம் திருப்பினாள்.
அவளின் முகத் திருப்பலில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் சட்டென விழித்தெழ, சுற்றம் மறந்து சூழ்நிலை மறந்து அழுத்தமான காலடிகளுடன் அவளை நோக்கி முன்னேறினான்.
ஆண்மை நிறைந்த அவனின் பிரத்தியோக வாசம் நாசியில் நிரட , சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனின் ஆழ்ந்த பார்வையில் உள்ளம் நடுநடுங்கியது மதுரவர்ஷினிக்கு.
அவன் முன்னெட்டுகள் எடுத்துவைக்க, நெற்றியில் பூத்த வியர்வை பூக்களுடன் பின்னெட்டுக்கள் வைத்து பின்னே நகர்ந்தாள் மதுரவர்ஷினி.
பின்னே நகர்ந்து சென்றவளின் முதுகை மரம் தடுக்க, பட்டாம்பூச்சியின் சிறகாய் அவள் இமைகள் படபடத்தது.
அவளின் இருபக்கமும் தன் கைகளை மரத்தில் ஊன்றி நின்றான் சித்தார்த் வர்மன்.
“ அழகாய் இருக்கிறாய். இந்த அழகு என்ற ஆயுதத்தால் தானே என்னை வீழ்த்தினாய்.
இன்னும் இந்த அழகை எத்தனை பேருக்கு கடை பரப்புவாய்? கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் எல்லாம் பிரமாதமாய் உள்ளதா? “ நெருப்புத் துண்டாய் அவன் வார்த்தைகள் விழுந்தன.
கோபத்தில் கண்கள் சிவக்க, தன்னிரு கைகளை அவன் மார்பில் வைத்து தள்ளி கீழே விழச் செய்ய பார்த்தாள்.
அந்தோ பரிதாபம்! அந்த ஆறடி ஆண்மகனை ஓரடி கூட நகர்த்த முடியவில்லை.
அவள் கரம் தன் இதயம் தொட்ட உடன் தன்னை மறந்தவனோ, அவளை தன் இரு கைகள் கொண்டு இறுக்கி அணைத்தான்.
உடல் துள்ளிக்கொண்டு திமிறியவளை அசால்டாக அடக்கினான்.
“மது... ப்ளீஸ்.... ஒரு நிமிடம்” என்றவளின் மாயக் குரலில் அசையாது நின்றாள் மதுரவர்ஷினி.
அவளது கழுத்து அடியில் முகத்தை புதைத்துக்கொண்டு அவளின் வாசத்தைப் தாகம் கண்டு வறண்ட பூமியாய் பருகினான்.
உடலெங்கும் பெருக்கெடுத்த கூச்சத்தால் நெளிய ஆரம்பித்தாள் மதுரவர்ஷினி.
அவளின் உடல் மொழியை அறிந்தவனோ, அவளை எட்டி நிற்க வைத்து அவளுடைய தோள்களை தன் கைகளால் பிடித்துக்கொண்டான்.
“ சொல்லு மது “ என்றான் கிசுகிசுப்பாக.
என்ன என்பது போல் விழி உயர்த்திப் பார்த்தாள் அவனை.
“உன்னுடைய விலை என்ன மது ? “ என்று அவள் தோள்களில் அழுத்தம் கொடுத்தவாறே மின்னாமல் முழங்காமல் இடியை அவள் தலையில் இறக்கினான்.
மண்ணில் விழுந்து சிதறும் மழைத் துளி போல் அவள் இதயம் பதறிச் சிதறியது.
ஆவேசம் வந்தவள் போல் அவன் கைகளை உதறித் தள்ளினாள்.
“நம் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம்தான் பொறுப்பு. ஜாக்கிரதை!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
நீட்டிய அவளது விரலை பற்றிச் சுருட்டினான். வலி மிகுந்தாலும் கண்களில் அதை பிரதிபலிக்காது, நிமிர்ந்து நின்று அவனை எதிர்கொண்டாள் மதுரவர்ஷினி.
“ பணமில்லாமல் என்னை பாதியில் அத்து விட்டவள். அதே பணத்திற்காக வேறு ஒருவனை மணமுடித்தவள். நீதானே....
இதோ அந்தப் பணம் இன்று என்னிடம் கொட்டிக்கிடக்கிறது. சும்மா முரண்டு பிடிக்காமல் ஒட்டிக்கொள்ள வா மதுரவர்ஷினி” என்று உறும ஆரம்பித்தான்.
அவனுடைய கைகளிலிருந்து தன் விரலை உருவிக் கொண்டவள், “ பணமா? என் மனமா பணத்தைத் தேடியது. உங்களை சந்தித்த அந்த நாட்களை நான் அடியோடு வெறுக்கிறேன். அனைத்தையுமே மறக்கத் துடிக்கிறேன் “ என்றாள் குரல் உயர்த்தி.
“ மறந்து விடுவாயா? என்னை மறந்து விடுவாயா மதுரவர்ஷினி?
அப்படியெல்லாம் மறக்கக்கூடாதே.... என்ன செய்யலாம்?” என்று தலையை சரித்து யோசிப்பது போல் பாவனை செய்தான்.
அவனை அலட்சியம் செய்தவள் அவனைக் கடக்க எத்தனித்தாள்.
தன் இரும்புக்கரம் கொண்டு அவள் இடையை வளைத்து, தன் கைகளிலே அவளை சரியச் செய்தான். தன் கைகளை மெல்ல மெல்ல உயர்த்தி அவளின் முகத்தருகே தன் முகத்தை கொண்டு வந்தான்.
பால் நிலா போன்ற மாசு மருவற்ற முகத்தில் கருவண்டு விழிகள் நர்த்தனமாட, உதடு துடிக்க தன்னை பார்த்தவளை, விழுங்குவது போல் பார்த்தான்.
அவளை முத்தமிடுவது போல் சீண்டிப்பார்க்க எண்ணியவன், அவளது நாசியில் தன் நாசியை வைக்கப் போக , அவனுடைய சுவாசம் தன்னுடைய சுவாசத்தில் கலந்த அடுத்த நொடி மூர்ச்சையானாள் மதுரவர்ஷினி.
அந்த இதய வைத்திய நிபுணனுக்கோ இதயம் நின்று துடித்தது.
“ மது... மது... “ என்று கன்னத்தில் தட்ட அவன் கைகளிலேயே வாடிய பூமாலை போல் துவண்டாள்.
அவளைத் தன் இரு கைகளில் தூக்குவதற்காக, அவளின் கால்களின் அடியில் கைகளை வைத்து தூக்கும்போது, மதுரவர்ஷினியின் கழுத்தில் இருந்த சங்கிலி துள்ளிக் குதித்து வெளியில் விழுந்தது.
அவனுடைய உயிர் உறைய அதனையே பார்த்தான். தன்னை வதைத்த நெடிய அந்த நான்கு ஆண்டுகள் கண்முன்னே நாட்டியம் ஆடியது.
மதுரவர்ஷினியின் முகத்தையும், சங்கிலியில் கோர்த்து இருந்த மோதிரத்தையும் மாறி மாறி பார்த்தவனின் கால்கள் விண்ணை நோக்கி பறக்க ஆரம்பித்தது.
நிமிர்ந்தவனின் முகத்தில் கர்வப்பூக்கள் பூக்க ஆரம்பித்தது.
அவளிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், தன் கை சேர்ந்த தேவதையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று நினைத்தவள், தன் உயிரில் பூத்தவள் தான் என்று அறிந்த அடுத்த நொடி அவள் இதழ்களோடு மென்மையாய் தன் இதழ்களைச் சேர்த்தான்.
கையேந்திய வீணையில் ராகங்கள் மீட்டிட கைகள் பரபரத்தாலும், சற்று முன் ஆராயாமல் பேசிய தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டான்.
தன்னுடைய பெண் கடலின் சீற்றத்தை அள்ளிக்கொள்ள அந்த ஆண் கடல் தயாரானது.
அவனின் ஒரு மனம் அவளை ஏற்றுக் கொண்டாலும், மறு மனமோ என் குழந்தை தாயின் அரவணைப்பை இழந்து தவித்ததே ....
தாய்ப்பால் கூட கொடுக்க மறுத்து என் குழந்தையை ஒதுக்கியவளை நான் ஏற்றுக் கொள்வதா?” என்று பரிதவித்தது.
அரசனும் அசுரனுமாய் மாறி மாறி அவனுடைய எண்ணங்கள் அவளைச் சுற்றி வலம் வந்தது.
தன் வாழ்வின் மர்மங்களை திறக்கும் சாவி மதுரவர்ஷினியிடம் உள்ளது என்பதை அறிந்தான்.
அவளிடம் தன் மனக் காயங்களுக்கு விடை கிடைக்காத வரை, தன் மனதை அவளிடம் திறப்பதில்லை என்று உறுதி பூண்டான்.
நம்பமுடியாத கனவாய் தன்கையில் பதுமை எனச் சேர்ந்தவளை நிலவின் ஒளியில் உற்று நோக்கினான்.
வானில் இருந்த நிலவு மண்ணில் வந்துவிட்டதோ என்று எண்ணிய மேகக் காதலன் கண்ணீர்விட, மழைத்துளிகள் மதுரவர்ஷினியின் மதி முகத்தில் பட்டு தெரித்தது.
திடுக்கிட்டு விழித்தவளை, வரவழைத்த கோபப் பார்வையோடு கீழிறக்கினான் சித்தார்த் வர்மன்.
இன்னும் சிறிது நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் தன் மனமும் கால்களும் அவள் பின்னே சென்று விடும் என்பதை அறிந்த சித்தார்த் வர்மன், தன் கைகளால் தன் வலது தொடையை தட்டியபடி, விளங்காத பார்வையோடு மதுர வர்ஷினியை பார்த்துக்கொண்டே பார்ட்டி ஹாலுக்குள் உள்ளே நுழைந்தான்.
மழையும் வலுக்கத் தொடங்க, சுதாரித்துக்கொண்ட மதுரவர்ஷினி அவனைப் பின் தொடர்ந்து தானும் பார்ட்டி ஹாலுக்குள் சென்றாள்.
கேர் டேக்கரின் கையிலிருந்து நழுவி, “அம்மா.... “ என்று அழைத்தபடி ஓடிவந்தான் ஆதித்.
ஆதித்திய வர்மன் வேறு யாருடைய குழந்தையோ என்று நினைக்கும்போது இல்லாத தயக்கம், ஆதித் சித்தார்த் வர்மனுடைய மகன் என்று தெரிந்தபோதோ, அவனை அள்ளி அணைக்க கைகள் தயங்கியது.
தன் மகனையும் மதுரவர்ஷினியும் மாறி மாறி பார்த்தவனின் விழிகள் யோசனையில் சுருங்கியது.
கேள்வியாய் கேர் டேக்கரை பார்த்தான். நளினமாக நடந்து வந்தவள், அந்த துர்வாச முனிவர் சாபம் தருவதற்குள்,
அவன் முதுகின் பின்னே நின்று கொண்டு, அன்று பார்க்கில் நடந்தவற்றை சுருக்கமாக கிசுகிசுத்தாள்.
மதுரவர்ஷினிக்கோ கணவன் மனைவி இருவரும் ரகசியம் பேசுவது போல் இருந்தது.
ஆதித்ய வர்மன் தன் முகத்தையே ஏக்கமாக பார்ப்பதை உணர்ந்த மதுரவர்ஷினி, பெரும் தவிப்புடன் கைகளைப் பிசைந்தபடி நின்றாள்.
குழந்தை அழத் தொடங்க நொடிகளில் அவனைத் தூக்குவதற்காக தன் கைகளை கீழே இறக்கினாள்.
அவள் கரம் குழந்தையை தூக்குவதற்கு முன் நீண்டவலிய கரங்கள் குழந்தையைத் தூக்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டது.
அவனின் உரிமையான அந்த அணைப்பில் தன் இழப்பு பூதாகரமாகத் தெரிய, தன் கால் பெரு விரல்களை தரையில் அழுத்தி தன்னைச் சமன் செய்தாள்.
தன்னுடைய பெண்மையை கேவலமாக சித்தரித்த சித்தார்த் வர்மனை அலட்சியப் படுத்தும் நோக்கில் தோள்களை குலுக்கி விட்டு, “ முகில்.... “ என்று அழைத்தபடி ஒயிலாக நடந்து அவனைக் கடந்து சென்றாள்.
அவளின் மீது மறையத் தொடங்கிய கோபத்தனல் மீண்டும் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது சித்தார்த் வர்மனுக்கு.
மின்னல் வெட்டும்...

Last edited: