மின்னலே என் வானம் தீண்ட வா...
அத்தியாயம் – 7
தன் குழந்தையின் ஏக்கம் சுமந்த முகத்தைப் பார்த்தவனின் மனதில் பழி வெறி தாண்டவமாடத் தொடங்கியது.
தன் குழந்தையின் காதருகே சென்று மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான்.
குழந்தையோ மதுரவர்ஷினியைப் பார்த்துக் கொண்டே தலை அசைத்தது.
சிறிது நேரத்தில் குழந்தை கிளுகிளுத்து சிரிக்கத் தொடங்கியது.
கார்முகிலை நோக்கிச் சென்றவள், அங்கிருந்த மற்ற பெண் டாக்டர்களுடன் நகைத்தபடி பேச ஆரம்பித்தாள்.
சதங்கை போல் குலுங்கி சிரித்தவளின் சிரிப்புச் சத்தம் சித்தார்த் வர்மனின் செவிகளைத் தீண்ட கை நரம்புகள் இறுகியது அவனுக்கு.
மதுரவர்ஷினி இப்படி எல்லாம் பேசக்கூடிய ஆள் இல்லை என்பதால் மதுரவர்ஷினியை யோசனையுடன் பார்த்தாள் கார்முகில்.
எப்பொழுதும் தனிமை விரும்பியான மதுரவர்ஷினி இப்படி கூட்டத்தினுள் வந்து கலகலத்து கொண்டிருப்பதை எண்ணி குழப்பமுற்றாள்.
“ மது.... “ என்று கூறியபடி மென்மையாக அவளுடைய தோள்களைப் பற்றினாள்.
“ மது ஆர் யூ ஓகே? “ என்றாள்.
“ இந்த நாள் எவ்வளவு அருமையாக இருக்கிறது தெரியுமா முகில்?” அவள் இதழ்களின் சிரிப்பு அவள் கண்களை எட்டாததைக் கண்டு கொண்டாள் முகில்.
“ மது உன் கண்ணோரம் கண்மை கசிந்திருக்கிறது. சரி செய்து வா “ என்று அவளை ஓய்வு அறைக்குள் தள்ளினாள்.
ஓய்வு அறையின் கதவினை தாழிட்ட மதுரவர்ஷினி தன் முன்னே இருந்த அந்த நீண்ட கண்ணாடியில் தன்னை அளவிட்டாள்.
“ அவன் தொட்ட உடன் உருகிடும் உன் தேகத்தை நீ எரிக்க வேண்டும் மதுரவர்ஷினி.
உன் பெண்மைக்கு விலைபேசியவனிடம் மதி மயங்குவாயா?
அவன் மனைவி குழந்தை என்று குடும்பமாய் குதூகலித்துக் கொண்டிருக்க, பதிவிரதம் காக்கும் நீ பரத்தையா?
உன் ஆசை, கனவு, குடும்பம் என அனைத்தையும் பறித்துக் கொண்டவனிடம் கொள்ளை போவாயா?
அடுத்தவள் கணவனின் கைகளில் நெகிழ்ந்திடும் உன் பெண்மைக்கு நீ என்ன பதில் கூறப் போகிறாய்?” என்று அவளின் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.
“இல்லை.... இல்லை..... அடுத்தவர் கணவனுக்கு ஏங்கும் இழி மகள் நான் இல்லை....
வேண்டாம்.... எனக்கு யாரும் வேண்டாம்” என்ற வெறி பிடித்தவள் போல் கதறிக்கொண்டு நீரை வாரி கண்ணாடியில் இறைத்தாள்.
ஒழுகும் நீரின் வழியே அவளது முகம் கலங்கலாகத் தெரிந்தது. ஆனால் அவளது மனம் தெளிவானது.
மதுரவர்ஷினியின் மனம் என்னும் இரும்புக்கோட்டை இறுக்கமாக தன்னை பூட்டிக் கொண்டது.
அதனை தட்டித் திறக்கும் இரும்புக்கரம் கொண்டவனோ அதனை உடைத்து எடுக்கும் வழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
தன்னைத் திருத்திக் கொண்டு பார்ட்டி ஹாலுக்குள் வந்தாள்.
அந்தக் கேர் டேக்கரோ வேறு ஒரு பெண்மணியிடம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆதித்ய வர்மனோ மேசை மீது அமர்ந்து சுற்றியிருந்த ஐஸ் கிரீம்களை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சித்தார்த் வர்மன் தலைமை மருத்துவரிடம் முக்கியமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வகையில், ஆதித்ய வர்மனை நெருங்கினாள் மதுரவர்ஷினி.
“ ஆதித்யா.... “ மென் குரலில் அழைத்தாள்.
மதுரவர்ஷினியை ஏறிட்டுப் பார்த்த ஆதித், மீண்டும் தலையை குனிந்து கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஓ.... என்னுடன் பேச மாட்டாயா கண்ணா?”
சற்றே தலை நிமிர்த்தி, தன் இடது புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு பின் மீண்டும் குனிந்து ஐஸ்கிரீமை சுவைக்க ஆரம்பித்தான்.
பெருமூச்சுடன் அவள் திரும்பும் வேளை, “ சாரி சொல்லுங்க.... “ என்ற மழலைக் குரலில் நின்றாள்.
“ சாரியா?.... எதுக்கு“ என்றாள்.
“ ஆதி குட்டி ஓடி வரும்போது தூக்காமா போனதுக்கு. அப்புறம் ஆதி கூட டூ போட்டதுக்கு” என்று கூறினான்.
“ஓ... அப்போ நான் சாரி சொன்னா என்கூட பேசுவியா?” என்றாள்.
மழலை தன் தலையை ஆட்டி சம்மதம் கூறியது.
“ சாரி பேபி.... ஆதித்யா வெரி வெரி சாரி.. “ என்று கொஞ்சும் குரலில் கெஞ்சியபடி அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.
“ம்.....” என்று தலையாட்டியவனின் பார்வை வேறு புறம் சென்றதைக் கண்டு, குழப்பமுற்று திரும்பிப் பார்த்தாள்.
அங்கே சித்தார்த் வர்மன் தன் மகனைப் பார்த்து வெற்றிக்குறி காட்ட, இங்கே அவன் மகன் ஆதித்ய வர்மனும் தன் பிஞ்சுக் கரங்களால் வெற்றிக்குறி காட்டினான்.
அப்பா மகன் இருவரும் சேர்ந்து தன்னை முட்டாளாக்கியதை உணர்ந்த மதுரவர்ஷினி அந்தப் பார்ட்டி ஹாலை விட்டு உடனே வெளியேறினாள்.
மதுரவர்ஷினி வெளியேறியவுடன் தன் மகனை நோக்கி விரைந்து வந்தான் சித்தார்த் வர்மன்.
மதுரவர்ஷினி முத்தமிட்ட தன் மகனின் கன்னத்தின் மீது தானும் அழுந்த முத்தம் வைத்தான் கள்ளச் சிரிப்புடன்.
தந்தையோடு இணைந்து கொண்டு மகனும் நகைக்க ஆரம்பித்தான்.
வாசல் வரை சென்றவளை இவர்களின் சிரிப்புச் சத்தம் மேலும் துரத்தியது.
மதுரவர்ஷினி சென்றதும் கௌசிக்கிடம் வந்தான் சித்தார்த் வர்மன்.
“ கௌசிக் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் “ என்றான்.
“ டேய்.... எதுக்குடா உதவி என்று பேசிக்கொண்டு, என்ன செய்யவேண்டும் சொல்லு நண்பா “ என்றான்.
தனது கைகளால் பின்னந்தலையை கோதியபடி, லேசாக சிவந்த முகத்துடன், “எனக்கு டாக்டர் மதுரவர்ஷினியின் முழு விபரங்கள் அடங்கிய கோப்பு வேண்டும் “ என்றான்.
“ டாக்டர் மதுரவர்ஷினியா? கைனகாலஜிஸ்ட், ரைட்? “ என்றான் குழப்பமான முகத்துடன்.
“ எஸ் யூ ஆர் கரெக்ட் “ என்றான் கீழுதட்டை சிறிது கடித்தபடி.
“டேய்..... என்னடா வம்பு இது“ என்றான் சிறிது கலவரமான குரலில்.
“ மிஸஸ் மதுரவர்ஷினி சித்தார்த் வர்மனை இந்த சித்தார்த் வம்பு இழுக்காமல் வேறுயார் வம்பு இழுப்பார்கள் நண்பா? “ என்றான்.
“ வாட் கம் அகைன்.... “
“ நீ சரியாகத்தான் கேட்டாய். என்னை தெளிவு படுத்திக் கொள்ளவே எனக்கு இன்னும் நிறைய தகவல்கள் வேண்டும்.
மதுரவர்ஷினியை தவறாக எடுத்துக்கொண்டு, இத்தனை வருடப் பிரிவை சந்தித்தேன் என்று நினைக்கின்றேன்.
ஆதித்திய வர்மனை மதுரவர்ஷினிக்கு தன் குழந்தை என அடையாளம் காண முடியவில்லை.
என்னையும் திருமணமானவன் என்று நினைத்துக்கொண்டு பார்க்கிறாள்.
என் வாழ்க்கையை சிக்கலாக்கிய முடிச்சுக்களை ஆரம்பத்திலிருந்து நான் மீண்டும் தேடப் போகிறேன்.
இதுநாள் வரை இந்த சிக்கல்களில் மாட்டி நானும் என் மகனும் மட்டுமே துன்பப்பட்டு இருந்தோம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் இன்று மதுரவர்ஷினியை பார்க்கும்போது, அந்தச் சிக்கல்களில் தன்னுயிர் மூச்சுக்கே அவள் திண்டாடுவதை உணர்கிறேன்.
ஆனால் இத்தனை துன்பத்திற்கும் தானும் ஒரு காரணம் என்பதை மறந்து அவள் திமிருடன் பேசும்போது அவளின் அகந்தையை அழிக்கவும் துடிக்கிறேன்” என்றான் சற்றே குரலில் வேகம் கூட்டி.
“ சித்தார்த்.… அன்று நீ கைக்குழந்தையுடன் வந்து என்னிடம் நின்றபோதும் உன்னிடம் எதையும் நான் கேட்டதில்லை.
ஏனென்றால் நீ செய்யும் அனைத்து செயல்களிலும் உன் மேல் எனக்கு முழு நம்பிக்கை என்றும் உண்டு.
அன்று நடந்த கார் விபத்தில் எனக்கு நீ முதலுதவி சிகிச்சை செய்திருக்காவிட்டால் இன்று இந்த டாக்டர் கௌசிக் என்ற ஒருவனும் இருந்திருக்க மாட்டான்.
உன்னைப் போன்ற ஒரு திறமையான மருத்துவரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டியதில் என்றும் எனக்குப் பெருமை உண்டு.
இந்த உயிரே நீ கொடுத்தது தான் சித்தார்த். உனக்காக நான் எதையும் செய்வேன்.
என்ன செய்யவேண்டும் மட்டும் என்று நீ சொல்லுடா” என்று கூறியபடி ஆரத்தழுவிக் கொண்டான் தன் நண்பனை.
நட்பின் பெருமையில் சிரித்தபடி சித்தார்த் வருமானம் தன் நண்பனை தழுவிக் கொண்டான்.
சித்தார்த் வர்மனின் இறுக்கத்தில் அதிர்ந்த கௌசிக், “ டேய் நான் டாக்டர் மதுரவர்ஷினி இல்லடா... விடுடா என்னை” என்று கிண்டலடித்த வாரே தன்னை மீட்டுக் கொண்டான்.
“கௌசிக் நீ மதுரவர்ஷினியிடம் இதை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாதே.
மருத்துவ பாடம் கற்ற டாக்டருக்கு வாழ்க்கை பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.
தன் மகனையே தனக்கு அடையாளம் தெரியாத அவளிடம், இப்போது வேறு எதையும் நான் எதிர்பார்க்க போவதில்லை.
அவளை நெருங்குவதற்கு முதல் படியாக, ஆதித்ய வர்மனை அவளுக்கு நெருக்கமாக்க வேண்டும்.
இந்த நான்கு வருடங்களில் நடந்தது எதையும் நான் ஆராய்ச்சி செய்தது இல்லை.
ஏன் மதுரவர்ஷினியையே நான் தேடியது இல்லை.
எனக்கு உண்மைகள் என்று உரைக்கப்பட்டவை என்னை இப்படி ஊமையாக மாற்றிவிட்டது.
மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனி மதுரவர்ஷினியே நினைத்தாலும் நான் நெருங்குவதை அவளால் தடுக்க முடியாது.
அதற்கு முன் அவளைப் பற்றிய தகவல்களை நான் திரட்ட வேண்டும்.
அதற்காகத்தான் உன்னிடம் அவளுடைய தகவல்கள் அடங்கிய கோப்புகள் வேண்டும் என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தான்.
“ ஒரு விளக்கங்கள் எதுவும் எனக்கு வேண்டாம். இன்று இரவே தகவல்களை உனது மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுகிறேன். வேறு எந்த உதவி என்றாலும் செய்வதற்குத் தயாராக உள்ளேன்” என்றான்.
பார்ட்டி முடிந்ததும் தன் வீட்டிற்கு வந்து, உறங்கிய தன் மகனை படுக்கையில் படுக்க வைத்து, போர்வையை அவனது கழுத்து வரை போர்த்திவிட்டு தட்டிக் கொடுத்தான்.
பின் தன் மடிக்கணினியில் தன் மின்னஞ்சல் கணக்கை திறந்தான்.
மதுரவர்ஷினி என்று பெயரிடப்பட்ட மின்னஞ்சலைப் பார்த்து படிக்க ஆரம்பித்தான்.
கணவன் பெயர் என்ற இடம் காலியாக இருந்தது.
இரண்டு வருடத்திற்கு முன்பு தனது முதுகலை மருத்துவப் படிப்பை முடித்து இருந்தாள்.
கணக்கிட்டவனின் விழிகள் பளிச்சிட்டது.
குழந்தை பிறந்தவுடன் தனது முதுகலைப் படிப்பை தொடர்ந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.
மதுரவர்ஷினி இரவு டியூட்டி மட்டுமே பார்ப்பதை தன் மனதில் குறித்துக் கொண்டான்.
இரண்டு வருடத்தில் அவள் மருத்துவத்துறையில் புரிந்த சாதனைகளைப்
பார்த்து வியப்பில் புருவத்தை உயர்த்தினான்.
எல்லாவற்றையும் உணர முடிந்த அவனால், அவள் தன்னையும், தன் மகனையும் ஒதுக்கிய காரணத்தை மட்டும் கணக்கிட முடியவில்லை.
இத்தனை வருடங்களில் தன்னைப் பற்றி அறிய முயலாததற்கான காரணமும் புரியவில்லை.
தன்னை அவளுடைய இதயத்திற்கு அருகில் கோர்த்து வைத்திருப்பவளை மேலும் தவறாக எண்ண அவனது மனமும் இடம் தரவில்லை.
தன்னையும் தன் மகனையும் அவள் விலக்கிய காரணத்தினாலேயே, தான் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் அவள் நினைத்திருந்தால் என்றும் எப்பொழுதும் தன்னை தொடர்பு கொண்டிருக்கலாமே?
மனதில் எழுந்த கேள்விக்கு எல்லாம் விடையாக அவள் தந்தை சிவானந்தனே வந்து நின்றார்.
கோபத்தில் உடல் இறுகியவனின் காதுகளில் “சித்தூ... “ என்றவளின் உயிர் உருகிய ஓசை கேட்க,
அவனின் காலச்சக்கரம் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.
மின்னல் வெட்டும்...

Last edited: