• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மின்னல் - 9

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மின்னலே என் வானம் தீண்ட வா...

அத்தியாயம் – 9

மனதில் புதிதாய் மலர்ந்த காதலுடன் கண்விழித்தாள் மதுரவர்ஷினி.
சுற்றியுள்ள இயற்கை அனைத்தும் அவளை வாழ்த்துவதாகவே கற்பனை செய்தாள்.

பால்கனியில் உள்ள தொட்டிச் செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்காக வெளியே வந்தாள்.

அப்போது பெண்குருவி தவறவிட்ட உணவுத் துணுக்கை ஆண் குருவி தன் அலகால் கவ்வி ஊட்டி விட்டது.

அந்தக் கட்டுப்பாடில்லாத காதல் இப்பொழுதே தனக்கு வேண்டும் என்பதுபோல் மதுரவர்ஷினியின் மனம் பரபரத்தது.

பெயர் தெரியாத ஒரு ஆண்மகனின் பின்னே தன் பெண்மை பைத்தியமாகத் திரிவதைக் கண்டு மனதிற்குள் சிறு பயக்குமிழியும் வெடித்தது.

தன்னுள்ளே தோன்றும் இந்தப் பெயரிடப்படாத உணர்விற்கு காதல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் அந்தப் பேதை.

சுகமோ துக்கமோ எதையும் தன் தந்தையுடன் பகிரும் மதுரவர்ஷினி, தன் மனதையும் தந்தையிடமே திறக்க, நிற்கும் கோலம் மறந்து இரவு உடையிலேயே தந்தையை நோக்கி ஓடி வந்தாள்.

தோட்டத்தில் தன் தந்தை வேலையாட்களுடன் நிற்பதை அறிந்து ஜன்னலின் அருகே தன் தந்தையின் வரவிற்காய் காத்து நின்றாள்.

அவள் தந்தையோ முரட்டுக் குரலில் தோட்டக்காரருடன் பெரிய வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

“ வேண்டாம் சார். பிரச்சினை எல்லாம் வேண்டாம். என் பொண்ணு அவள் விரும்பியவனுடனே சந்தோஷமாக இருக்கட்டும்” என்றார் தோட்டக்காரர் வேலப்பன்.

“ நீ உன் பொண்ணுக்காக இங்கு அழுது கொண்டிருக்க, அங்கு அவளோ அவனுடன் சிரித்துக் கொண்டிருப்பாளா?

உன் பொண்ணை நீ எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைத்தாய்?

உன் தங்கை பையனுக்கு மணமுடித்து வைக்க ஆசைப்பட்டாயே?


உன் ஆசைகளை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு, அவள் தன் வழிதேடி போய்விட்டாளே?

நட போலீஸ் ஸ்டேஷனுக்கு. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்.
நம் பெண்ணை நம்மை மீறி யார் கொண்டு செல்கிறார் என்று பார்ப்போம்.


காதலாம் காதல் மண்ணாங்கட்டி..” வெகுண்டெழுந்தார் சிவானந்தன்.

“ விடுங்க சார். சின்ன கழுத. இந்த அப்பன் நினைப்பு வரும்போது வந்து பார்ப்பாள்.

நெனப்பு எங்கே வரப்போகிறது? இனி அவள் கணவன் குழந்தை என்று வாழ்வதற்கே அவளுக்கு நேரம் சரியாகப் போகும்” என்று கூறியபடி தோளில் தன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு போனார் அந்த எதார்த்தவாதி.

ஆத்திரத்தில் சிவானந்தன் உதைத்த உதையில் குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த மண்மேடு நாற்புறமும் சிதறியது.


தன் தந்தையின் எதிர்வினையைப் பார்த்த மதுரவர்ஷினி, தன் எண்ணங்களை தன் மனதிற்குள்ளேயே புதைத்துக்கொண்டாள்.
சத்தம் செய்யாமல் மெதுவாக தன் அறைக்கு திரும்பினாள்.


தன் தந்தையைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் பின்னே செல்ல அந்த தேக்குமரத்தை ஆராயும் எண்ணம் முன்னே வந்தது.

கல்லூரிக்கு முதல் ஆளாக கிளம்பி வந்து,
மரத்தடியில் உள்ள கல் மேடையில் அமர்ந்தாள்.

கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவள் விழியோ வருவோரை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.


நேரம் கடந்ததே தவிர அவள் விரும்பும் காலடித் தடமோ இன்னும் மண்ணில் பதியவில்லை.

மனம் சோர்வுற்று அவள் எழுந்தபோது, அழுத்தமான காலடிகளுடன் சித்தார்த் வர்மன் உள்ளே நுழைந்தான்.

மதுரவர்ஷினி தன்னை மரத்தின் பின்னே ஒளித்துக் கொண்டாள்.

ஒரு சாம்ராஜ்யத்தின் மகாராஜன் போல் அவன் நடந்து வரும் அழகை விழி அகலாமல் பார்த்தாள்.


தன் மனம் கவர்ந்தவன் பின் அவன் அறியாமல் சென்றாள். முதுகலை மாணவர்களுக்குரிய கார்டியாலஜி டிபார்ட்மென்ட்டிற்க்குள் அவன் சென்றதும், அவள் மனம் சிறுபிள்ளை போல் குதூகலம் அடைந்தது.

அவனது பெயர் சொல்லி யாரும் அழைக்காததால் , அவளது மனம் சுணங்கியது.

அவர்களது டிபார்ட்மெண்ட் துறைத்தலைவர் அங்கு நின்றிருந்த நண்பர் குழுவை ஒரு நிமிடம் தன் அறைக்கு வரச் சொன்னார்.

கையிலிருந்த புத்தகத்தை வராண்டா சுவற்றின் மீது வைத்துவிட்டு உள்ளே நுழைந்தது நண்பர் குழு.


கிடைத்த நிமிடத்தை பயன்படுத்த எண்ணிய மதுரவர்ஷினி, புள்ளி மானாய் துள்ளி ஓடினாள்.

இதயம் படபடக்க, அவனது புத்தகத்தின் முதல் பக்கத்தை விரித்தாள். “சித்தார்த் வர்மன்” அவளது உதடுகள் அவனது பெயரை ஓசையில்லாமல் உச்சரித்து பார்த்தது.

காதல் தந்த கள்ள தனத்தின் தைரியத்துடன் அந்த புத்தகத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டாள்.


மரத்தடியில் அமர்ந்தவள், சித்தார்த் வர்மன் என்ற பெயரை ஒவ்வொருமுறையும் உச்சரிக்கும்போது, அடிவயிற்றில் சுளீரென்று துளிர்விடும் அந்த இன்பத்தை ரசித்தாள்.

சித்தார்த் வர்மன் அலை அடித்தால் கரைந்துவிடும் மணற் சிற்பமா?
அவளது மனமோ பதறிக்கொண்டு, “இல்லை இல்லை.....” என்று பதிலளித்தது.

நான்கு புறமும் அலை அடித்தாலும் கலங்காமல் நிற்கும் கடும் காதல் பாறை அவன் என்று மனம் எடுத்துரைத்தது.

தன் எண்ணத்தை தனக்கு தெளிவு படுத்த விரும்பியவள் தன் காதல் தீயை வேள்வித்தீயாய் ஒரு வாரகாலம் வளர்த்தாள்.

அவள் பற்ற வைத்த நெருப்பு அணையாமல், அவளையே எரிக்கப் பார்த்தது. இனியும் தன் காதலை மறைத்து வைக்க இயலாது, தன் எண்ணத்தின் நாயகனை காண விழைந்தாள்.

நேரம் பார்த்து தன் மனதிற்குள் புகாத காதலுக்கு தான் மட்டும் நேரம் பார்க்க வேண்டுமா? செல்லமாய் சிணுங்கியது அவள் மனது.



தலைமை மருத்துவருடன் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பற்றி பேசிக் விட்டு வெளியே வந்தான் சித்தார்த் வர்மன்.

வெளியே வந்தவன் தன் வேக நடையால் விறுவிறுவென்று நடக்க, சட்டென பதறியவளோ
“ ஹலோ தேக்கு.... “ என்று கூறிவிட்டு தன் தளிர் நாக்கை கடித்துக் கொண்டாள்.

விருட்டென்று திரும்பியவன் “வாட்..... “ என்றான்.


“ இல்லை சித்தூ...” என்று தன் மனதில் தோன்றிய அவனது பெயரை சுருக்கி உரைத்தாள்.

“சித்தூ வா..... ஓகே. எஸ் இட்ஸ் மீ.... “ என்றான்.

“ உங்களிடம் நான் பேச வேண்டும்” என்றாள்.
என்ன என்பது போல் இடது புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான்.

“ கொஞ்சம் தனியாக.... ப்ளீஸ்“ என்றாள்.

சரி என்பதைப் போல் எதுவும் உரைக்காமல் யோசனையுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.


மரத்தடியில் இருந்த கல் இருக்கையின் அருகே இருவரும் வந்தனர்.
கன்னங்கள் செம்மையுற, நாணம் மிக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு செய்கையையும் அவளின் மனதை புடம் போட்டுக் காட்ட, ஏளனத்துடன் சித்தார்த் வர்மனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தன.

“ ஒய் ஸ்கூட்டி பார்ட்டி... கண்டதும் காதலா? “ என்றான் கேலியாக.


தலைவனின் ஒவ்வொரு வார்த்தையும் காதலாகவே விழுந்தது அவளுக்கு.
துப்பட்டாவை கைகளில் இறுக்கி முறுக்கி சுற்றிக் கொண்டே இருந்தாள் நிதானமற்று.

“ உன் பெயர் என்ன? “

“மதுரவர்ஷினி... “

“ உன் காதலில் நீ உறுதியாக இருக்கிறாயா?“

தான் தன் மனதை உரைக்காமலேயே தன் மனதை புரிந்து கொண்ட அவனை நினைத்து பெருமிதம் மிக, ஆம் என்பது போல் தலையை அசைத்தாள்.


தலைகுனிந்து நின்றவளின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்து சென்றான் சித்தார்த் வர்மன்.

காட்டாற்றில் சிக்கிய பூங்கொடியோ அந்த தேக்கு மரத்தையே பற்றுக்கோடாக பற்றிக் கொண்டு ஓடியது.

இறுதியாக தனது வகுப்பிற்கு இழுத்து வந்தான் மதுரவர்ஷினியை.

சித்தார்த் வர்மன் தரதரவென்று ஒரு பெண்ணை இழுத்து வரும் காட்சியை கண்ட அவனது நண்பர்கள் மலைத்து நின்றனர்.

அவர்களைப் பொருத்தவரை ஆசைகளைத் துறந்த அந்த கௌதம புத்தரும் இந்த சித்தார்த் வர்மனும் ஒன்றே என்று எண்ணம் கொண்டவர்கள்.

அப்படிப் பட்டவன் ஒரு பெண்ணை இழுத்து வருகிறான் என்றால் அனைவரும் ஆர்வமாகவும் யோசனையாக பார்த்தனர்.

மதுரவர்ஷினியோ நடப்பது எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்து நின்றாள்.

“ ஹலோ பிரண்ட்ஸ் மேடம் பேரு மதுரவர்ஷினி. இப்போ இவங்க உங்க எல்லார் முன்னாடியும் அவங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என்று நிரூபிக்க போறாங்க “ என்றான் ஆர்ப்பாட்டமாக.

“ கமான் மதுரவர்ஷினி. காதலைக் கூட சொல்ல தைரியம் இல்லாதவள், கடைசிவரை எப்படி அந்த காதலைக் காப்பாற்றுவாய்?” என்றான் சப்தமாக.


“ஒதுங்கிச் சென்றவனை, இழுத்து வந்தவள் நீதான்...” என்று அவள் காதில் மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.

இந்த நிமிடம் சொன்னால் என்ன? அடுத்து வரும் நிமிடம் சொன்னாலென்ன? தன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவனை, தன் பெண்மையை மலரச் செய்தவனை, காதலை உணரச் செய்தவனை உள்ளம் அறிய சொன்னால் என்ன? ஊரறிய சொன்னால் என்ன?
உறுதி பிறந்தது அந்த மெல்லியாளிடம்.

பொழுதுபோக்கிற்காக மதுரவர்ஷினி தன்னிடம் இப்படி விளையாடுகிறாள் என்று நினைத்த சித்தார்த் வர்மன் அவளுக்கு பாடம் புகட்டவே இப்படி செய்ய நினைத்தான்.


சித்தார்த் வர்மனின் தோற்றத்தையும் அறிவையும் பார்த்து காதல் என்ற பெயருடன் வரும் பெண்கள், அவனின் பின்புலத்தை கேட்டவுடன் ஒதுங்கிச் சென்று விடுவர்.

வேடிக்கையான இந்த வாடிக்கையில் மதுரவர்ஷினியும் தன்னை சீண்டுவதாகவே நினைத்தான்.


அனைவரையும் ஒதுக்கிச் செல்பவன், மதுரவர்ஷினியின் சீண்டலில் , சீறும் சிறுத்தையாய் உருமாறி நின்றதன் காரணத்தை யார் அறிவாரோ?

அவன் இதயத்தில் திருமகளாய் வாசம் செய்ய வந்தவளை, வேஷம் தரித்து வந்தவளாய் நினைத்து கோபாவேசம் கொண்டான்.

பதில் உரைக்காமல் தலை குனிந்தபடியே மதுரவர்ஷினி செல்லும் அந்த தருணத்திற்காக காத்திருந்தான் சித்தார்த் வர்மன்.

ஆனால் தலைகுனிந்திருந்த மதுரவர்ஷினியோ, தலை நிமிர்ந்து தன் தலைவனைப் பார்த்தாள்.

தனது வலது கையை எடுத்து அவன் இதயத்தில் அழுத்தினாள்.

“மிஸ்டர் சித்தார்த் வர்மன் உங்களுக்குள் தொலைந்த என்னை மீட்டுக் கொடுங்கள்.
இல்லை என்றால் இந்த மதுரவர்ஷினிக்குள் நீங்கள் தொலைந்து விடுங்கள்” என்று தன் காதலையும் கர்வமாக உரைத்தாள் .

“ புரிந்து கொள்வீர்களா? இல்லை பிரிந்து செல்வீர்களா? ” என்று அவனைப்போலவே காதில் கிசுகிசுத்தாள்.

தன்னைத் தீண்டி உருகச் செய்பவளின் காதலைத் தாண்ட முடியாமல் திகைத்து நின்றான் சித்தார்த்.

அவன் முன்னே தன் கைகளை நீட்டி, “வாழ்தலோ... சாதலோ.... அது இனி நம் காதலால் தான்” என்றாள் உணர்ச்சி பாவையாக.

அந்தக் கண்களில் அவனால் பொய்மையை கலந்து பார்க்க இயலவில்லை.


சொந்தங்கள் யாருமற்ற அவனுக்கு ஓர் உயிர் உருகி பந்தமாய் கைநீட்ட, பாந்தமாய் தன் கையை அவள் கை மீது வைத்தான்.

சுற்றியிருந்த அவன் வகுப்பு தோழர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்ய, நனவுலகிற்கு வந்தவளோ, வெட்கம் தாங்காமல் சித்தார்த் வர்மனின் பின்னே ஒளிந்து கொண்டாள்.

பெண்ணவளின் பேரன்பில் அந்தப் பேராண்மைக்கும் கர்வம் வந்தது.

மின்னல் வெட்டும்...
 
Last edited:

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அன்பார்ந்த வாசகர்களே,
வைகை தளத்தின் மல்லிகைத் தோட்டத்தில் பூத்த, இந்த மின்னலுக்கு உங்கள் கருத்துக்களால்,தொடர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

-அதியா ❤️
 
  • Love
Reactions: Kavi priya

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
சித்தார்த் மதுவின் காதலை எப்படி ஏற்கிறான்? அறிய ஆவல். Waiting for the next episode.
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
Wow wow செம சீன் சகி ♥️♥️♥️♥️மதுரவர்ஷினி டக்கர், சூப்பரா காதலை வெளி படுத்தின 😍😍😍😍😍😍😍😍
காதலை வெளிப்படுத்துவதில் மட்டுமா?
காதல் செய்வதிலும் மதுரவர்ஷினி டக்கரான டாக்டர் 👍

சித்தார்த் வர்மனின் எதிர்வினையும் உங்களை ஆச்சரியப்படுத்தும் 👍
 

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
பெத்தவங்க மனசு கஷ்டப்படுத்தறது தப்புதான்... ஆனா காதல் ஒரு உணர்வு... வேணும் னு யாரும் பண்றத்தில்லையே...

அவங்க அப்பா தான் ஏதோ பண்ணிருக்காரு... 🙄

செம்ம ப்ரொபோஸல்... 😍😍

உங்க ஸ்டோரி ஹீரோயின்ஸ் கெத்தே கெத்து தான் dr.. 🤩

ஹீரோ சார்... அவங்க தைரியத்தில், காதலில் கவுந்துட்டாரு... 🤭💞

இந்த சாங் அஹ் சித்து, மது க்கு டெடிகேட் பண்றேன்... ❤

Click this... 👇❣️

மன்மதனே நீ கலைஞன் தான்... 😍
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
சிவானந்தனின் காதல் மீதான கருத்து மகள் விடயத்தில் மாற்றம் பெருமா 🙄🙄🙄

காதல் கொடுத்த திடத்தில் மனதை வெளிப்படுத்தி விட்டாள் தன்னவனிடம் 🥰🥰🥰

பாடம் புகட்ட நினைத்தவன், அவளுக்குள் தொலைந்திட சம்மதம் சொல்லி விட்டானே 😃😃😃

அன்பு பேராண்மையை வென்றது 🥳🥳🥳