பேபி, காம் டவுன், காம் டவுன் என்ற அழைப்பொலி கேட்க அலைபேசியைச் செவிக்குக் கொடுத்தாள் பத்மப்பிரியா
"ஹலோஓஓஓ..."
"என்ன லோ... எந்த நாய் பேசுறது?"
"என்னடி, கல்யாணத்துக்கு வரலன்னு கோவமா?"
"இல்ல. கொலவெறி..."
"பட்டு..."
"எதுக்கு கால் பண்ண? உனக்கும் எனக்கும் ஒட்டும் இல்ல; ஒறவும் இல்ல. நேத்தியோட எல்லாம் முடிஞ்சுது"
"பிரி... ஸாரிடி. நான் அங்க வந்து ஒரு ஓரமா நின்னு தாலி கட்றத மட்டுமாவது பாத்துருப்பேன். பட், உன்னோடவே நானும் இருக்கணும்னு நீ அடம்பிடிப்ப. அப்டி நான் பண்ணா நல்லாருக்காதுமா. உங்க அம்மாவே ஏத்துக்க மாட்டாங்க. நாலு பேரு உதட்டச் சுளிக்குற மாதிரி எதுக்கு? உன் கல்யாணம் எந்தக் குறையும் இல்லாம நடக்கணும்னு தான்..."
"ம்ச்ச்ச்... காரணம் சொல்லாத"
"அத விடு... கல்யாணம் நல்ல படியா முடிஞ்ச்சா? ஃபர்ஸ்ட் நைட் எப்டிப் போச்சு?"
"மயிரு மாரி போச்சு"
"உன் மசுரு மாதிரியா? என்னோடது மாரியா, பட்டு"
"ஆன்..."
"இல்லடி... என் முடி லென்த்தியா இருக்கும். என்னுது போலன்னா நல்லா நடந்துச்சுன்னு தான அர்த்தம்"
"வெண்ண, ஃபோன வைடி"
"ஓ, மாப்ள சார் பக்கத்துல இருக்காரா? டிஸ்டர்ப் பண்ணிட்டனா?"
"மது, வேணாம்... என் வாய்ல என்ன வரும்னே தெரியாது"
"கோவம் குறைஞ்சா நீயே கூப்டு. எனக்கு வேற வழி தெரில, பட்டு" ரேகாவின் குரலில் வருத்தம் மேலோங்கித் தெரிந்தது
மதுரேகா பத்மாவை விடச் சற்றே வயது முதிர்ந்தவள். சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக விளையாடி ஒன்று போல வளர்ந்தவர்கள். அவளின் தந்தை தோட்டவேலை புரிபவர். சுந்தரத்தின் தோப்பில் தான் பாதி வருடம் அவருக்கு வேலையே. மது நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே வேறொரு தோட்டத்தில் நீர் பாய்ச்ச சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து விட்டார். அதன் பிறகு அவளை ஒற்றையாக வளர்த்து ஆளாக்கியது அன்னை காமாட்சி தான். அவள் முதுவறிவியல் படிப்பை முடித்ததும் காமாட்சி அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். மணம் முடித்து மூன்றாண்டுகள் முடிவடைவதற்குள்ளாகவே மகளும் விதவையாகிப் போக, காமாட்சி நலிந்து போனார். இருந்தாலும் வீட்டு உதவிகள் செய்து சம்பாதித்து மகளுக்காக வாழ்ந்து வருகிறார்.
பத்மாவின் இந்தச் சிந்தையைக் குலைக்கும்படி குளியலறை கதவைத் தட்டினான் விக்ரம். அவனிடத்தில் இவள் தெரிவு செய்திருந்த உடையை எடுத்து இடுக்கின் வழியே நீட்டினாள். அதை உடுத்திக் கொண்டவன் தயாராகி முடித்து வரவேற்பறையை நோக்கிப் போனான். உடை தேடும் முயற்சியில் கப்போர்ட் அலங்கோலமாகி விட, இவள் அதை சரிசெய்ய எத்தனித்தாள். அப்போது கீழேயிருந்து மணவாளன் விக்ரமைப் பார்த்துவிட்டு நலம் விசாரிக்கும் குரல்களாக வந்தன. அவற்றைக் கேட்டதும் அவளது மூளைக்குள் அபாய மணி அடிக்க, ஆடைகளை அடுக்குவதை விடுத்து, அறையை மேலும் கலைக்கும் வேலைகளைச் செய்தாள்.
படுக்கை விரிப்பை உருவியவள் ஓடிச் சென்று அதைத் தண்ணீரில் முக்கினாள். மடிப்புக் கலையாமல் இருந்த விக்ரமின் வேட்டி, சட்டையை எடுத்து மூலைக்கு ஒன்றாகக் கசக்கி எரிந்தாள். தலையில் வைத்த மல்லிகைச் சரத்தைப் பிய்த்துத் தூவலானாள். அதற்குள் மங்கையின் ஜால்ரா கொலுசொலி நெருங்கி வர, புடவையை அவிழ்த்து வீசிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவர் வாசலோடு சென்றுவிட வேண்டும் என அவள் ஆசைப்பட, மாற்றாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் மங்கை. அவரிடம் இருந்து தப்பிக்க ஒரு வாளித் தண்ணீரை எடுத்துத் தலையோடு கவிழ்த்துக் கொண்டாள். பின்பு, குளியலறைக் கதவைக் குறுகத் திறந்தவள் கணவனின் பெயரைச் சொல்லி மென்மையாக அழைத்தாள்.
"விக்ரம்..."
"பத்மா, நான் தான் தான்டி..."
புன்னகையுடன் மங்கை முன்னே வந்து நிற்க, அவள் பொய்யான வெட்கத்துடன் வினவினாள்
"ம்மா... நீ இங்க என்னம்மா பண்ற? அவரு எங்க?"
"கீழ இருக்காருடி"
"சரி, அந்தத் துண்ட எடு"
துண்டினால் உடலைச் சுற்றி மறைத்தவள் நனைந்த உள்பாவாடையை உருவி அதே தண்ணீரில் முக்கினாள்
"என்ன காரியம் பண்றடி. புதுப் பாவாடையப் படுக்கத் துணியோடப் போட்டு வச்சுருக்கியே. சாயம் புடிச்சுக்கும்டி"
அவர் பதற ப்ரியாவோ பவ்யமாகப் பேசிச் சமாளித்தாள்
"அழுக்கா இருந்துச்சா, அதான்... ஸாரிம்மா, தெரியாமப் பண்ணிட்டேன்"
"அய்யோ, என்னத்தச் சொல்ல..."
"விடுமா. மூணு நாலு தரம் தொவச்சா சாயம் போய்டும். அப்றம்... இப்டித் திடீருன்னுலாம் என் ரூமுக்குள்ள வராத, ம்மா. ப்ளீஸ்..." என்றவளோ ஆங்காங்குக் கிடந்த உடைகளை அள்ளி வாரினாள்
அவள் கூச்சமுறுவதாக நம்பிய மங்கையும் "நீ எதயும் எடுத்துட்டு இருக்காத. காமாட்சி வந்து ஒழுங்கு பண்ணிப்பா. சட்டுபுட்டுனு கிளம்பி வா. மாப்பிள்ள கூட சேந்து சாப்பிட ஆள் வேணும். நேர நேரத்துல இங்கனருந்து பொறப்பட்டா தான் கேரளா போய்ச் சேர முடியும்" என்று கூறியபடியே அறையை விட்டு அகன்றார்
இவ்வளவு பொழுது வகை வகையாகத் தாயின் முன் நடித்துக் கொண்டிருந்த ப்ரியா ஒரு பெருமூச்சோடு கட்டிலில் வீழ்ந்தாள். இங்கு விக்ரம் வரவேற்பறையில் அமைந்த சோஃபா தனில் அமர முனைந்தான். பக்கவாட்டில் இருந்த டூ சீட்டரில் ஏற்கனவே அவனுடைய சகளை உட்கார்ந்து இருந்தான்.
"ஸ்வீட்... கேர்ள்..." டீசர்ட்டின் நெஞ்சுப் பகுதியில் பொறித்திருந்த வார்த்தைகளை எழுத்துக் கூட்டிப் படித்தான் மோகன்
'பத்மா இதப் போட்ருந்தாலும் இவன் இப்டித்தான் பாத்துப் படிப்பானா?' விக்ரம் உள்ளுக்குள் கேட்டுக் கொண்டான்
"ப்ரியாவோட டீஷர்ட் மாதிரி தெரியுது. பிங்க் கலர்... ரொம்பப் பொருத்தமா இருக்கு" மோகன் பகடி செய்ய முயன்றான்
அவனோ அலட்டிக் கொள்ளாமல் "ஐ லைக் பிங்க்" என்று முற்றாகச் சொன்னான்
அங்கு வந்த அக்ஷதா கோப்பையை அவன் முன்னே நீட்டினாள்
"டீ எடுத்துக்கங்க"
"ஸாரி... டீ குடிக்கறது இல்ல. காஃபி கிடைக்குமா?"
"கண்டிப்பா. ரெண்டே நிமிஷம்"
இருவருக்கும் இடையே வந்த மோகன் "அக்ஷதா, எனக்கு ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா" என்றான் அதிகாரமாக
"இப்போ தான சாப்டீங்க. அதுக்குள்ள என்ன? இந்தாங்க டீ..."
விக்ரமிற்காக எடுத்து வந்த தேநீரை அவள் கணவனிடம் கொடுக்க இவனோ முகம் சுளித்தான்
"எனக்கு இது வேணா"
"நீங்க தான டீ கேட்டீங்க?
"வேற பால்ல பூஸ்ட் கலந்து எடுத்துட்டு வா"
"பூஸ்ட்டு இல்ல"
"அக்ஷு..." சகளையின் முன் மானத்தை உயர்த்திப் பிடிக்க மோகன் உறுமினான்
"இருங்க, எடுத்தாரேன்..."
சமையலறைக்குச் சென்றவள் சில நிமிடங்களில் இரு கோப்பைகளோடு திரும்பி வந்தாள்
இதழில் காபியை ஒற்றி எடுத்த விக்ரம் "வாவ். கஃபேல சாப்புட்ற மாதிரியே இருக்கு. தேங்க் யூ" எனப் பாராட்டினான்
அவளின் துணைவனோ கடிக்காத குறையாய்ப் பொறுமினான் "பால்ல என்னத்தடி கலந்த?"
"ஹார்லிக்ஸ்ங்க"
"வெள்ளையாவே இருக்கு?"
"சத்தியமா, ஹார்லிக்ஸுங்க"
'இது ஹார்லிக்ஸ் தான். ஆனா, மதர் ஹார்லிக்ஸு. அத்தானுங்க வீட்ல மிச்சம் இருந்தது' அந்த ரகசியத்தை மனதில் மூடி வைத்தாள் அக்ஷதா
"போடி" வெறுப்போடு கோப்பையை டீப்பாயில் வைத்துவிட்டு மோகன் எழுந்து சென்றான்
அதைக் கண்ட விக்ரம் தானாக உதவ முன்வந்தான் "இவ்ளோ கோவப்பட்டுட்டுப் போறாரு... இருங்க, நான் போய் பூஸ்ட் வாங்கிட்டு வரேன்"
"அட, நீங்க வேற. பூஸ்ட்டு போட்டுத் தந்தா அடுத்து காம்ப்ளான் வேணும்னு கேப்பாரு. அவரு அப்டித் தான்; கண்டுக்கா..."
அக்ஷதா சமாதானம் சொன்ன வேளையில் ஹேமாலினி கண்களைக் கசக்கிக் கொண்டே வந்தாள்
"என்னம்மு? என்ன அழுக?"
"கடைக்குப் போலாம்ன்னு கூப்டேன்; அப்பா திட்டிட்டாரு"
"அழுவாதம்மு. நாம அப்றம் போலாம்"
"குட்டிக்கு என்ன வேணும்? நான் கடைக்குக் கூப்டுப் போறேன். என்னோட வரீங்களா?" என அருகில் இருந்தவன் அன்போடு வினவினான்
அழுகையை நிறுத்திய ஹேமா விழி விரியக் கேட்டாள் "நீங்க தான் சிச்சப்பாவா?"
"யெஸ்"
"வாட் இஸ் யுவர் நேம்?"
"விக்ரம்"
அவள் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போலிருந்த கரங்களை விரித்துக் காட்ட, செல்ல ஆணைப்படி அவளைத் தூக்கினான் விக்ரம்
"கடை எங்கன இருக்கு?"
"நாலு வீடு தாண்டிப் போகணும்" என்று அக்ஷதா வழி சொல்ல
"மம்மி, பை..." என மகிழ்ச்சியாகப் புறப்பட்டுப் போனாள் ஹேமாலினி
இன்னுமே படுக்கையை விட்டு எழாமல் பத்மா அலைபேசியைக் காதோடு அணைத்திருந்தாள். ரேகாவுடனான பேச்சின் வெப்பம் இப்போது தணிந்து காணப்பட்டது.
"இங்க இருக்குற அக்ரி யுனிவர்சிட்டிலப் படிச்சுட்டு, என் கல்யாணத்துக்கு உன்னால வர முடியல. கேட்டா என்னென்னமோ கதைலாம் சொல்ற"
"என்னைப் போல உனக்கும் ஆகணுமா? சொல்லு"
"பூமர் மாரி பேசாத, மது"
"..."
"ஹலோ"
"..."
"ஏய், நான் தான்டி டென்சன் ஆகணும். நீ என்னமோ கோவப்படுற?"
"ஸாரி"
"போய்த் தொல"
"ஈஈஈ"
"இளிக்காத"
"அப்பறமா உன்னைப் பாக்க வாரேன். ரிசப்ஷன்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்ததும் சொல்லு"
"ம்ம்ம்"
"விக்ரம் எப்புட்றி?"
"இன்னும் புரிஞ்சுக்க முடியல. கல்யாணத்தன்னைக்கு ஆளயே காணும், தெரிமா?"
"அச்சச்சோ... அப்றம் என்ன நடஞ்ச்சு?"
"ஜஸ்ட்டு மிஸ் ஆயிருந்தா முகூர்த்தமே தப்பிருக்கும்"
"எங்கத் தான் போனாராம்?"
"அவரா சொல்லுவாருன்னு பாத்தேன்; சொல்லல"
"அப்போ நைட்டுப் பேசவே இல்லயா. ஸ்ட்ரெயிட்டா..."
"ஏ, நிறுத்து நிறுத்து. ஒன்னும் நடக்கல. ஹி கெப்ட் ஹிஸ் ப்ராமிஸ். விரல் நுனி கூட படலன்னு பேச்சுக்குத் தான சொல்லுவாங்க. எங்க விஷயத்துல அதான் உண்ம"
"அக்னியச் சுத்தி வரும்போது கையப் புடிக்கலயா. இல்ல, மெட்டி போடும்போது காலத் தான் தொடலயா. அளக்காத"
"மது, அது வேறடி. இது வேற..."
"என்னமோம்மா. நல்லாருந்தா சந்தோஷந்தான்"
அந்நேரம் காமாட்சி துடைப்பமும் கையுமாக அங்கு வந்து நிற்க "காமாட்சியம்மா" என்று கூவி அவரைப் போய்க் கட்டிக் கொண்டாள் ப்ரியா
"பட்டு, நானே வேல செஞ்சுட்டு வந்துருக்கேன். என் வேர்வ நாத்தம் உனக்கும் ஒட்டிக்காதா?"
"ஐ டோன்ட் கேர்" என்றவள் அவரை மேலும் இறுக்கியப் பின்னரே விடுத்தாள்
"அம்மா பாத்தா திட்டப் போறாங்க"
"அவுங்க கிடக்குறாங்க. கல்யாணத்துல உங்களப் பாக்கவே முடியல. விருந்து சமைக்குற சாக்குல அடுப்படியே கதின்னு இருந்துட்டீங்களா?"
"தாலி கட்டுறதப் பாத்தேன், பட்டு. மாப்ள கூட சூப்பரா இருக்காரு"
"சைட் அடிக்காதீங்க, ம்மா. அவரு முகத்துல பிம்பிள் வந்துடப் போகுது"
"நான் கண்ணு வைக்கல, தாயி. நீயே கண்ணும் கருத்துமா பாத்துக்க... அம்மா உன்னைக் கீழக் கூப்டுட்டே இருக்காங்க. விரசாப் போ, தங்கம்"
"நான் போறேன். இதப் பிடிங்க. பேசுங்க, உங்க பொண்ணு தான் லைன்ல"
அவரிடம் கைப்பேசியை இடம் மாற்றியவள் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள். ஈரம் சொட்டும் சிகையை உச்சியில் முடிந்து கொண்டே சமையலறையைத் தேடிப் போனாள்.
ஒருவேள சமைக்கப் போறாளோ!