• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மீனாட்சி அண்ணாமலை - துளிர்விடும் இளந்தளிர்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
துளிர்விடும் இளந்தளிர்

ஏம்பா…. முருகா ஊருக்கு வந்து ஒருநாள் கூட இல்லை. உடனே புறப்பட வேண்டும் என்கிறாயே, ஒண்டிக்கட்டையாய் வாழும் என்னுடன் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கிப் போகக்கூடாதா ? அப்படி என்னப்பா அவசரம் ? என்று அம்மா வெள்ளச்சி கேட்டுக்கொண்டே பேரனின் முகத்தைப் பார்த்தாள். முருகனோ உங்க பேரன் அருண் பத்து நாளைக்கு உங்களுடன் இருப்பான். நானும் பூங்கொடியும் நாளைக்கு வேலைக்குப் போயே ஆகவேண்டும். கோபப்பட வேண்டாம் என்று அம்மாவின் கன்னத்தை வருடினான். நீ காரின் டிக்கியை திறந்து வை என்று தோட்டத்துப்பக்கம் சென்றாள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் ஊரில் உன்னிடம் கூறியதை எல்லாம் பாட்டியிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசி அவர் மனதை மாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்றான் மகன் அருணிடம்.

மூச்சிறைக்க வந்த வெள்ளச்சி காய்களையும் பழங்களையும் டிக்கியில் வைத்தாள். பூங்கொடி முருகனின் கையைச் சுரண்டியதும் தைரியமாக பேசுவதாக நினைத்து அம்மா…… என்று சத்தமாக அழைத்துவிட்டு பின் குரலை மெல்ல இறக்கி காரை துடைத்துக்கொண்டே அருணின் படிப்புச் செலவுக்கு பணம் ? புரட்ட வேண்டும் என்று அம்மாவின் கண்களைப் பார்த்தான். எவ்வளவு பணம் என்ற அம்மாவிடம் ஒரு பெருந்தொகையை கூறினான். இவ்வளவு தொகையை கொடுத்து உன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமா ? அவனுடைய மார்க்குக்கு ஏத்த மாதிரியான படிப்பை படிக்க வைக்க வேண்டியதுதானே என்று கிராமத்து மக்களுக்கே உரித்தான அப்பாவித்தனத்தோடு வெள்ளச்சி மகனிடம் கேட்க பூங்கொடி உடனே கோபத்தோடு நாங்க ரெண்டு பேரும் உயர்ந்த பதவியில் இருக்கிறோம். எங்க அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி அவனை படிக்க வைத்தால்தான் எங்களுக்கு கவுரவம், மரியாதை என்றாள். போதுமான பணம் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட்டால் நீதான் கொடுத்து உதவவேண்டும் என்று தயக்கத்துடன் தாயின் முகம் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தபடி மகன் கூற வெள்ளச்சி, நானா? என்று நெற்றியைச் சுருக்கி தலையைச் சொரிந்தாள். புரிந்தும் புரியாதது போல் காட்டிக்கொண்டாள்.

வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்ததால் கிராமத்தின் அழகை நாங்கள் ரசித்ததில்லை. மலையடிவாரத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டையும் கழனிக்காட்டையும் ரசித்தபடி பாட்டியின் சமையலையும் ருசித்து சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள் என்று அருணிடம் நக்கலாக கூறினாள் பூங்கொடி. தாய் வீட்டுப்பக்கமே சாய்ந்து கொண்டிருந்த மருமகளின் பேச்சு தேன்போல இனித்தாலும், சொக்குப்பொடி வைத்து மகனிடம் பேசச் சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்டாள். நிலத்தை விற்று பணத்தை எடுத்துக்கொள் என்று என் வாயால் சொல்ல வேண்டும் என்று இருவரும் நினைக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் பலிகடாவாக நம் பேரனும் இருப்பான் போல தெரிகின்றது. இவனை இங்கே தங்கவைத்து என் மனதை கரைக்க பார்க்கிறார்கள் என நினைத்தபடி பெருமூச்சு விட்டாள் வெள்ளச்சி.

அம்மாவிடம் இருந்து விடைபெற்று இருவரும் ஒன்றாக காரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் இருவர் மனமும் வெவ்வேறாக சிந்தித்தபடி பயணித்துக் கொண்டிருந்தது. கணவன் முருகனின் கவனத்தை திசை திருப்பி என்னங்க…… வீடும் நிலமும் எத்தனை கோடிக்குப் போகும் என்று பூங்கொடி கேட்க முருகன் சற்று கோபத்துடன் என் பூர்வீக சொத்தை விற்று மகனை படிக்க வைக்கப் போகிறோமே என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். சுவரை அழித்து சித்திரம் வரைய முயல்கிறோமோ என எண்ணுகிறேன். என் அம்மா கேட்டதுபோல் அவன் மார்க்குக்கு ஏற்ற படிப்பை படிக்க வைப்பதில் என்ன தவறு, என் அப்பா எதை விற்று என்னை படிக்க வைத்தார். ஏன் உன் அப்பாவும் இப்படித்தான் உன்னை படிக்க வைத்தாரா ? என்று கேட்டான்.

ஏன் என்னையே குறை கூறுகிறீர்கள். உங்கள் மகன் டாக்டரானால் உங்களுக்கும் அது பெருமைதானே என்று பூங்கொடி கோபமாக கேட்டாள். ஆனால் அருண் அவன் திறமையால் சீட் வாங்கி மெடிக்கல் படிக்கப் போவதில்லையே. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சேர்த்த எங்கப்பாவின் நாலுகாணி நிலமல்லவா பறிபோகப் போகிறது என்று காரை செலுத்திக்கொண்டே கோபமாக கூறினான் முருகன்.

பெற்றோர் புறப்பட்டுச் சென்றதில் இருந்து இரண்டு மூன்று நாட்களாக இயற்கை சூழலையும், வீட்டு விலங்குகளையும் ரசித்து போட்டோ எடுத்து முக நூலில் பதிவிட்டு எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கிறது என்று பார்ப்பதுதான் அருணின் வேலையாக இருந்தது. நீ கொடுத்து வைத்தவன், ஐந்தறிவு உள்ள ஜீவன்களிடம் ஆறறிவு உள்ள நாம் தோற்று விடுகிறோம், நம்மிடம் வீட்டு விலங்குகள் எவ்வளவு பாசமாக இருக்கின்றன என்ற கமெண்ட்களை பார்த்து அருண் கிராமத்து சூழலை நகர மக்கள் எந்தளவு ரசிக்கிறார்கள் விரும்பி ஏற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தான் உரிமையாக சிலர் போட்ட. டேய் அருண் நீ போட்டோகிராபி திறமையை டெவலப் செய்துகொள் என்ற கமெண்ட்கள் அவனை சிந்திக்க வைத்தன.

பாட்டியின் செல்லப்பிராணியான நாய் ராமுவின் சேஷ்டைகளும் அது பாட்டியிடம் காட்டும் நன்றி உணர்ச்சியும் அவன் மனதை கொள்ளை கொண்டது. பாட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டு தாயிடம் பால் ஊட்டச் செய்வதையும் கன்று பாலைக்குடித்ததும் அதைக்கொண்டுபோய் கம்பத்தில் கட்டுவதற்குள் அது தாய்ப்பசுவை பார்த்து ம்மா.. என்று கத்துவதும் பின் வெள்ளச்சி பாட்டி தொடையை முட்டிமோதிச் செல்வதையும் பார்த்து ரசித்தான். பாட்டி பசுவிடம் இன்னும் எத்தனை நாளுக்கு நான் உயிரோடிருப்பேனோ ? என்னை விட்டு பிரிந்து வேறு ஒருவரிடம் இருக்கப் பழகிக்கொள்வாயா ? என்று பரிதாபமாக பசுவிடம் கேட்க அது மாட்டேன் என்று வேகமாக தலையை ஆட்டியது அருணின் மனதை என்னவோ செய்தது.

பாட்டிக்குத் துணையாக கோழிகளும் குஞ்சுகளும் கத்தியபடி வீட்டிலும் வெளியிலும் அலைவதைக் கண்டான். திடீரென்று பாட்டியின் அருகில் கத்திவிட்டு ஓடும். விடியற்காலையிலேயே உன் புருஷன் (சேவல்) கொக்கரக்கோ என்று கூவி கூவி எங்களை எழுப்பி விடுகிறான். மதியம் சற்று அசதியில் தலை சாய்த்தால் நீ வந்து என்னை எழுப்புகிறாய் என்று போலியாய் சத்தமிட்டு பேசினாள். காலையில் எழுந்து பாட்டி பஞ்சரத்தை திறந்துவிட்டதும் கோழிக்குஞ்சுகள் கீச்… கீச்… என கத்தியபடி அங்குமிங்கும் அலைவதையும் தாய்க்கோழி பாதுகாப்பாக அவற்றோடு சுற்றிச்சுற்றி ஓடுவதையும் பாட்டி கோழிகளுக்கு இரையாக தானியங்களை இறைத்த உடனே ஓடிவந்து பாட்டியின் காலைச்சுற்றியபடி பொறுக்குவதும் அருணுக்கு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

ஊருக்கு ஒதுக்குபுறமாக மலையடிவாரத்தில் சில குடும்பங்கள் குடியிருந்தாலும் பாட்டியின் வீடு மட்டும் தனியாக வயல் நடுவே காட்சியளித்தது மட்டுமல்லாமல் வயக்காட்டை சுற்றி அரண் போல மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. பாட்டி தனிமரமாய் ஐந்தறிவு ஜீவன்களுடன் உறவு கொண்டபடி வாழ்ந்து வருவது அருணுக்கு வேதனையளித்தது. வீட்டின் பின்பக்கமாக உள்ள மாமரத்தில் ஒரு ஊஞ்சலை கட்டினாள் வெள்ளச்சி. என்ன பாட்டி நான் என்ன சின்னப்பையனா ? என்று கேட்ட அருணைப் பார்த்து சிறுவயதில் உன் தாத்தாவை ஊஞ்சல் கட்டச்சொல்லி நீ அதில் ஆடியது என் நினைவுக்கு வந்துவிட்டது. கிளிகடிச்ச மாங்காய்தான் ருசி என்று உன் தாத்தா கூறும்போது எச்சிலை சாப்பிடமாட்டேன் என்று சுத்தம் பற்றி சொல்லி அடம்பிடிப்பாயே அதை நினைத்துப் பார்க்கிறேன் என்றாள்.

பேரன் வந்ததில் இருந்து பாட்டி குமரியாட்டம் ஆடுகிறாள் பாரேன் என்று கிண்டலடித்தப்படி அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வெள்ளச்சியின் உத்தரவை கேட்டனர். ஏண்டி தினமுமா என்னை கேட்பீர்கள் ? போங்கடி போய் எடுத்துக்கோங்க என்று பாட்டி கூறினாள். பாட்டிம்மா எல்லோரும் சும்மாவா தண்ணீர் எடுத்துப்போகிறார்கள் என்று அருண் கேட்க பாட்டி சிரித்துக்கொண்டே ஏன் ? காசு வாங்கிக்கொண்டா தண்ணீர் விடுவார்கள் என்று கேட்டாள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் என்பார்கள். தாகம் தீர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா என்றாள். கிணற்றிலே தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி ஒரு பழமொழி கூறுவார்கள் என்றாள். பாட்டி நான் கூறவா? அப்பா கூட சொல்வார்கள், ”அவனவன் செய்த பாவபுண்ணியம் பாதாளத்தில் தெரியும்” என்பார்கள் சரியா ? என்று கேட்டான்.

பாட்டிக்கு காசு பணம் முக்கியமில்லை என்பதை பல தருணங்களில் பார்த்து புரிந்து கொண்டான் அருண். நம் பெற்றோரிடம் இருந்து எதையும் பாட்டி எதிர்பார்த்ததில்லை என்பதை எண்ணிப் பார்த்தான். கிராமத்திற்கு புறப்படுமுன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது நெஞ்சை விட்டு நீங்காது ஒலித்துக்கொண்டே இருந்தது. நிலத்தை விற்றுவிட்டால் என் அம்மாவை என்ன செய்வது என்று யோசித்தாயா ? என முறைப்பாக அப்பா கேட்டார். கை கால்கள் நன்றாக இருக்கும்வரை நம்முடன் வைத்துக்கொள்வோம். பிறகு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவோம் என்று பூங்கொடி கூறும் பொழுதே முருகன் இடைமறித்து ஏன் இப்பொழுதே சேர்த்து விடலாமே என்றான்.

அதுவும் சரிதான், நானும் வேலைக்கு போவதால் அவர்களை பார்த்துக் கொள்வது கடினம் என்று இருவருக்குமிடையே வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. பெற்றோரின் எண்ணத்தையும் பாட்டியின் பரிதாப நிலையையும் எண்ணியபடியே தூங்கிப்போனான். காலையில் எழும்போதே குயிலின் இனிய ஓசையும் காக்கையின் இரைச்சலும் காதில் தேனாய் பாய்ந்தது, புத்துணர்வுடன் எழுந்து பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தான். பாட்டி வயக்காட்டு பக்கம் போய் பசுவை கட்டிவிட்டு வரவா ? என்றான். வேப்பங்குச்சியை வாயில் வைத்து பல்லை தேய்த்துக்கொண்டே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டிம்மா… இங்கே வாருங்கள் என்றான். உனக்கு சுடச்சுட சுக்கு காப்பி கொண்டு வரவா ? அல்லது டீ வேண்டுமா ? என்றவளிடம் உங்கள் விருப்பம் என்றான். சுக்கு காப்பியை பருகியபடியே பாட்டி ஊஞ்சலை ஆட்டிவிடுங்கள் என்றான். பாட்டி ஊஞ்சலை ஆட்டிவிடும்பொழுது அவனுடைய மனமும் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. பாட்டியின் நிலத்தை வாங்குபவர்கள் விவசாயம் செய்யாமல் மரங்களை வெட்டி இயற்கையை அழித்து நீர்வளம் உள்ள இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கணத்தது. டேய் அருண் என்னடா யோசனையில் இருந்து கொண்டு பசியை மறந்து விட்டாயா? வா களி கிண்டி கீரை கடைந்து வைத்திருக்கிறேன் என்றாள். டவுனில் இப்படியெல்லாம் சாப்பிடுவார்களா ? என்று அருணிடம் கேட்க, எதற்கு இப்படி ஒரு கேள்வியை கேட்டீர்கள் பாட்டிம்மா, அப்பாவும் அம்மாவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் அவர்களோடு நானும் கூழ், பழையசாதம், களி இப்படியெல்லாம் சாப்பிட்டு பழகிக்கொண்டேன் என்றான்.

இத்தனை வயதுக்கு அப்புறம் நான் டவுனுக்கு வந்தால் புதுவாழ்க்கை வாழ பழகிக்கொள்ள வேண்டாமா ? என்று நெஞ்சடைக்க கேட்டாள். பாட்டிம்மா… மண்வெட்டி தருகிறீர்களா? என்று கேட்கும் பொழுதே அருணின் செல் சிணுங்கியது. ஹலோ…. அப்பா என்று கூறும்பொழுதே குறுக்கிட்ட அப்பா நிலத்தை விற்க ஏற்பாடு செய்துவிட்டேன் என்று குதூகலமாக கூறினார். அப்பா உங்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். ஆன்லைனில் அக்ரிகல்சர் படிப்புக்கு அப்ளை செய்துவிட்டேன் என்று சத்தமாக கூறினான். என் அம்மா மகனின் மனதை கலைத்து விட்டார்களா ? என்று முருகன் தனக்குள்ளே கேள்விகள் பல கேட்டுக்கொண்டார்.

பாட்டியோ, இந்த படிப்பு டாக்டரை மிஞ்சின படிப்போ, என் மகனையே எதிர்த்து பேசிக்கொண்டிருக்கிறானே ? என்று பேரனை நோக்கினாள். வெள்ளச்சி பாட்டி. வாங்க நம் ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து ”என் படிப்புக்கு வித்திட்ட தெய்வம் என் பாட்டியம்மா” என்று முகநூலில் பதிவிடப்போகிறேன் என்றான். இந்த நிலத்திற்கு புத்துயிர் கொடுக்க இளங்காளை வந்துவிட்டான் என்று பேரனை பெருமையுடன் பார்த்தாள் வெள்ளச்சி.

***

நன்றி.
 
Sultan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2021
1
2
3
chennai
கதையை படித்தேன். இந்த கதை அருமையாக உள்ளது. கதையின் கரு மற்றும் எழுத்து நடை சிறப்பாக உள்ளது. எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
sathishraj2007

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 5, 2021
2
2
3
Chennai
கதையின் சாராம்சம் மிக முக்கியமான விஷயங்கள் பற்றி மிகவும் அருமையான எடுத்து காட்டுகின்றது ,நிலத்திற்கு புத்துயிர் கொடுத்த பேரான்டி வென்றான்
 
  • Like
Reactions: Userfriend97

Dharsini

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2021
20
18
3
Tamilnadu
அருண் போன்ற இளைஞர்கள் விவசாயத்தின் அருமையைப் புரிந்து கொண்டது அருமை..துளிர்விடும் இளந்தளிர் அழகான பொருத்தமான தலைப்பு..இளையதலைமுறையினர்க்கு தேவையான கதைக்கரு..வாழ்த்துக்கள்
 
  • Like
Reactions: Userfriend97

Panneer Selvam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2021
1
1
3
Tamil Nadu
Beautifully scripted story with a great message. Arun's parents did not seem to understand the interest of Arun or his grandma. Wish at least some of the younger children have the mindset like Arun to take up the higher education or job that suits for their family. Thanks to the author for this wonderful message.
 
  • Like
Reactions: Userfriend97

Abilasha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2021
1
3
3
chennai
கதாசிரியரின் எழுத்து கிராமத்து வாழ்க்கையின் மீது ஈர்ப்பையும் தாண்டி, எப்படி இயற்கையோடு இயைந்து வாழ்வது,எதையும் எதிர்பார்க்காத அன்பு...இவை அருணுக்கு எந்த பாடத்தை தேர்ந்தெடுப்பது என்கிற தெளிவையும்,வாழ்க்கை பாடத்தையும் கொடுத்திருக்கிறது.கிராமத்து வாழ்க்கையை நேர்த்தியான எழுத்தின் மூலம் கண்முன் கொண்டு வந்த கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்!அருமையான படைப்பு!!!
 
P. T. Arasu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 9, 2021
1
1
3
CHENNAI
எளிய நடை , அதில் வெளிப்படும் எத்தனையோ ஏக்கங்களும், தாக்கங்களும். அடுத்தவர்களுக்காகவே வாழுகின்ற நகர்ப்புற வாழ்க்கைக்கும் கிராமப்புற வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்ற விதம், வார்த்தைகளால் விளக்கிப் புரியவைக்காமல் இயற்கைச் சூழ்நிலைகளைக் கொண்டே பேரனின் மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்த போக்கு, எதைத் தொடுவது எதைவிடுப்பது . எல்லாமே அருமை. கதையின் முடிவும் நெருடல் இல்லா மனதின் தூய்மை.

ஒரு சிறுகதைக்கான அத்தனை இலக்கணத்தோடு எழுதியது பாராட்டத்தக்கது.

கதையின் முடிவும் மனத்திற்கு ஒரு மகிழ்ச்சியினை அளிக்கிறது.

தங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்.
 
  • Like
Reactions: Userfriend97

Anusha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2021
1
1
3
chennai
வளரும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற சிறுகதையாக இருப்பதால் இளைஞர்களுக்கு இச்சிறுகதையை சமர்ப்பிக்கலாம். காலத்திற்கு ஏற்ற சிறுகதை. எழுத்து நடை சிறப்பாக உள்ளது.
 
  • Like
Reactions: Userfriend97

R_Boomadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 9, 2021
6
4
3
Puducherry
துளிர்விடும் இளந்தளிர்

ஏம்பா…. முருகா ஊருக்கு வந்து ஒருநாள் கூட இல்லை. உடனே புறப்பட வேண்டும் என்கிறாயே, ஒண்டிக்கட்டையாய் வாழும் என்னுடன் குடும்பத்தோடு ஒரு வாரம் தங்கிப் போகக்கூடாதா ? அப்படி என்னப்பா அவசரம் ? என்று அம்மா வெள்ளச்சி கேட்டுக்கொண்டே பேரனின் முகத்தைப் பார்த்தாள். முருகனோ உங்க பேரன் அருண் பத்து நாளைக்கு உங்களுடன் இருப்பான். நானும் பூங்கொடியும் நாளைக்கு வேலைக்குப் போயே ஆகவேண்டும். கோபப்பட வேண்டாம் என்று அம்மாவின் கன்னத்தை வருடினான். நீ காரின் டிக்கியை திறந்து வை என்று தோட்டத்துப்பக்கம் சென்றாள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் ஊரில் உன்னிடம் கூறியதை எல்லாம் பாட்டியிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசி அவர் மனதை மாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்றான் மகன் அருணிடம்.

மூச்சிறைக்க வந்த வெள்ளச்சி காய்களையும் பழங்களையும் டிக்கியில் வைத்தாள். பூங்கொடி முருகனின் கையைச் சுரண்டியதும் தைரியமாக பேசுவதாக நினைத்து அம்மா…… என்று சத்தமாக அழைத்துவிட்டு பின் குரலை மெல்ல இறக்கி காரை துடைத்துக்கொண்டே அருணின் படிப்புச் செலவுக்கு பணம் ? புரட்ட வேண்டும் என்று அம்மாவின் கண்களைப் பார்த்தான். எவ்வளவு பணம் என்ற அம்மாவிடம் ஒரு பெருந்தொகையை கூறினான். இவ்வளவு தொகையை கொடுத்து உன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமா ? அவனுடைய மார்க்குக்கு ஏத்த மாதிரியான படிப்பை படிக்க வைக்க வேண்டியதுதானே என்று கிராமத்து மக்களுக்கே உரித்தான அப்பாவித்தனத்தோடு வெள்ளச்சி மகனிடம் கேட்க பூங்கொடி உடனே கோபத்தோடு நாங்க ரெண்டு பேரும் உயர்ந்த பதவியில் இருக்கிறோம். எங்க அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி அவனை படிக்க வைத்தால்தான் எங்களுக்கு கவுரவம், மரியாதை என்றாள். போதுமான பணம் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட்டால் நீதான் கொடுத்து உதவவேண்டும் என்று தயக்கத்துடன் தாயின் முகம் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தபடி மகன் கூற வெள்ளச்சி, நானா? என்று நெற்றியைச் சுருக்கி தலையைச் சொரிந்தாள். புரிந்தும் புரியாதது போல் காட்டிக்கொண்டாள்.

வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்ததால் கிராமத்தின் அழகை நாங்கள் ரசித்ததில்லை. மலையடிவாரத்தில் இருக்கும் பாட்டியின் வீட்டையும் கழனிக்காட்டையும் ரசித்தபடி பாட்டியின் சமையலையும் ருசித்து சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள் என்று அருணிடம் நக்கலாக கூறினாள் பூங்கொடி. தாய் வீட்டுப்பக்கமே சாய்ந்து கொண்டிருந்த மருமகளின் பேச்சு தேன்போல இனித்தாலும், சொக்குப்பொடி வைத்து மகனிடம் பேசச் சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்டாள். நிலத்தை விற்று பணத்தை எடுத்துக்கொள் என்று என் வாயால் சொல்ல வேண்டும் என்று இருவரும் நினைக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் பலிகடாவாக நம் பேரனும் இருப்பான் போல தெரிகின்றது. இவனை இங்கே தங்கவைத்து என் மனதை கரைக்க பார்க்கிறார்கள் என நினைத்தபடி பெருமூச்சு விட்டாள் வெள்ளச்சி.

அம்மாவிடம் இருந்து விடைபெற்று இருவரும் ஒன்றாக காரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் இருவர் மனமும் வெவ்வேறாக சிந்தித்தபடி பயணித்துக் கொண்டிருந்தது. கணவன் முருகனின் கவனத்தை திசை திருப்பி என்னங்க…… வீடும் நிலமும் எத்தனை கோடிக்குப் போகும் என்று பூங்கொடி கேட்க முருகன் சற்று கோபத்துடன் என் பூர்வீக சொத்தை விற்று மகனை படிக்க வைக்கப் போகிறோமே என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். சுவரை அழித்து சித்திரம் வரைய முயல்கிறோமோ என எண்ணுகிறேன். என் அம்மா கேட்டதுபோல் அவன் மார்க்குக்கு ஏற்ற படிப்பை படிக்க வைப்பதில் என்ன தவறு, என் அப்பா எதை விற்று என்னை படிக்க வைத்தார். ஏன் உன் அப்பாவும் இப்படித்தான் உன்னை படிக்க வைத்தாரா ? என்று கேட்டான்.

ஏன் என்னையே குறை கூறுகிறீர்கள். உங்கள் மகன் டாக்டரானால் உங்களுக்கும் அது பெருமைதானே என்று பூங்கொடி கோபமாக கேட்டாள். ஆனால் அருண் அவன் திறமையால் சீட் வாங்கி மெடிக்கல் படிக்கப் போவதில்லையே. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சேர்த்த எங்கப்பாவின் நாலுகாணி நிலமல்லவா பறிபோகப் போகிறது என்று காரை செலுத்திக்கொண்டே கோபமாக கூறினான் முருகன்.

பெற்றோர் புறப்பட்டுச் சென்றதில் இருந்து இரண்டு மூன்று நாட்களாக இயற்கை சூழலையும், வீட்டு விலங்குகளையும் ரசித்து போட்டோ எடுத்து முக நூலில் பதிவிட்டு எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கிறது என்று பார்ப்பதுதான் அருணின் வேலையாக இருந்தது. நீ கொடுத்து வைத்தவன், ஐந்தறிவு உள்ள ஜீவன்களிடம் ஆறறிவு உள்ள நாம் தோற்று விடுகிறோம், நம்மிடம் வீட்டு விலங்குகள் எவ்வளவு பாசமாக இருக்கின்றன என்ற கமெண்ட்களை பார்த்து அருண் கிராமத்து சூழலை நகர மக்கள் எந்தளவு ரசிக்கிறார்கள் விரும்பி ஏற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தான் உரிமையாக சிலர் போட்ட. டேய் அருண் நீ போட்டோகிராபி திறமையை டெவலப் செய்துகொள் என்ற கமெண்ட்கள் அவனை சிந்திக்க வைத்தன.

பாட்டியின் செல்லப்பிராணியான நாய் ராமுவின் சேஷ்டைகளும் அது பாட்டியிடம் காட்டும் நன்றி உணர்ச்சியும் அவன் மனதை கொள்ளை கொண்டது. பாட்டி கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டு தாயிடம் பால் ஊட்டச் செய்வதையும் கன்று பாலைக்குடித்ததும் அதைக்கொண்டுபோய் கம்பத்தில் கட்டுவதற்குள் அது தாய்ப்பசுவை பார்த்து ம்மா.. என்று கத்துவதும் பின் வெள்ளச்சி பாட்டி தொடையை முட்டிமோதிச் செல்வதையும் பார்த்து ரசித்தான். பாட்டி பசுவிடம் இன்னும் எத்தனை நாளுக்கு நான் உயிரோடிருப்பேனோ ? என்னை விட்டு பிரிந்து வேறு ஒருவரிடம் இருக்கப் பழகிக்கொள்வாயா ? என்று பரிதாபமாக பசுவிடம் கேட்க அது மாட்டேன் என்று வேகமாக தலையை ஆட்டியது அருணின் மனதை என்னவோ செய்தது.

பாட்டிக்குத் துணையாக கோழிகளும் குஞ்சுகளும் கத்தியபடி வீட்டிலும் வெளியிலும் அலைவதைக் கண்டான். திடீரென்று பாட்டியின் அருகில் கத்திவிட்டு ஓடும். விடியற்காலையிலேயே உன் புருஷன் (சேவல்) கொக்கரக்கோ என்று கூவி கூவி எங்களை எழுப்பி விடுகிறான். மதியம் சற்று அசதியில் தலை சாய்த்தால் நீ வந்து என்னை எழுப்புகிறாய் என்று போலியாய் சத்தமிட்டு பேசினாள். காலையில் எழுந்து பாட்டி பஞ்சரத்தை திறந்துவிட்டதும் கோழிக்குஞ்சுகள் கீச்… கீச்… என கத்தியபடி அங்குமிங்கும் அலைவதையும் தாய்க்கோழி பாதுகாப்பாக அவற்றோடு சுற்றிச்சுற்றி ஓடுவதையும் பாட்டி கோழிகளுக்கு இரையாக தானியங்களை இறைத்த உடனே ஓடிவந்து பாட்டியின் காலைச்சுற்றியபடி பொறுக்குவதும் அருணுக்கு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

ஊருக்கு ஒதுக்குபுறமாக மலையடிவாரத்தில் சில குடும்பங்கள் குடியிருந்தாலும் பாட்டியின் வீடு மட்டும் தனியாக வயல் நடுவே காட்சியளித்தது மட்டுமல்லாமல் வயக்காட்டை சுற்றி அரண் போல மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. பாட்டி தனிமரமாய் ஐந்தறிவு ஜீவன்களுடன் உறவு கொண்டபடி வாழ்ந்து வருவது அருணுக்கு வேதனையளித்தது. வீட்டின் பின்பக்கமாக உள்ள மாமரத்தில் ஒரு ஊஞ்சலை கட்டினாள் வெள்ளச்சி. என்ன பாட்டி நான் என்ன சின்னப்பையனா ? என்று கேட்ட அருணைப் பார்த்து சிறுவயதில் உன் தாத்தாவை ஊஞ்சல் கட்டச்சொல்லி நீ அதில் ஆடியது என் நினைவுக்கு வந்துவிட்டது. கிளிகடிச்ச மாங்காய்தான் ருசி என்று உன் தாத்தா கூறும்போது எச்சிலை சாப்பிடமாட்டேன் என்று சுத்தம் பற்றி சொல்லி அடம்பிடிப்பாயே அதை நினைத்துப் பார்க்கிறேன் என்றாள்.

பேரன் வந்ததில் இருந்து பாட்டி குமரியாட்டம் ஆடுகிறாள் பாரேன் என்று கிண்டலடித்தப்படி அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வெள்ளச்சியின் உத்தரவை கேட்டனர். ஏண்டி தினமுமா என்னை கேட்பீர்கள் ? போங்கடி போய் எடுத்துக்கோங்க என்று பாட்டி கூறினாள். பாட்டிம்மா எல்லோரும் சும்மாவா தண்ணீர் எடுத்துப்போகிறார்கள் என்று அருண் கேட்க பாட்டி சிரித்துக்கொண்டே ஏன் ? காசு வாங்கிக்கொண்டா தண்ணீர் விடுவார்கள் என்று கேட்டாள். தவிச்ச வாய்க்கு தண்ணீர் என்பார்கள். தாகம் தீர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா என்றாள். கிணற்றிலே தண்ணீர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி ஒரு பழமொழி கூறுவார்கள் என்றாள். பாட்டி நான் கூறவா? அப்பா கூட சொல்வார்கள், ”அவனவன் செய்த பாவபுண்ணியம் பாதாளத்தில் தெரியும்” என்பார்கள் சரியா ? என்று கேட்டான்.

பாட்டிக்கு காசு பணம் முக்கியமில்லை என்பதை பல தருணங்களில் பார்த்து புரிந்து கொண்டான் அருண். நம் பெற்றோரிடம் இருந்து எதையும் பாட்டி எதிர்பார்த்ததில்லை என்பதை எண்ணிப் பார்த்தான். கிராமத்திற்கு புறப்படுமுன் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டது நெஞ்சை விட்டு நீங்காது ஒலித்துக்கொண்டே இருந்தது. நிலத்தை விற்றுவிட்டால் என் அம்மாவை என்ன செய்வது என்று யோசித்தாயா ? என முறைப்பாக அப்பா கேட்டார். கை கால்கள் நன்றாக இருக்கும்வரை நம்முடன் வைத்துக்கொள்வோம். பிறகு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவோம் என்று பூங்கொடி கூறும் பொழுதே முருகன் இடைமறித்து ஏன் இப்பொழுதே சேர்த்து விடலாமே என்றான்.

அதுவும் சரிதான், நானும் வேலைக்கு போவதால் அவர்களை பார்த்துக் கொள்வது கடினம் என்று இருவருக்குமிடையே வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. பெற்றோரின் எண்ணத்தையும் பாட்டியின் பரிதாப நிலையையும் எண்ணியபடியே தூங்கிப்போனான். காலையில் எழும்போதே குயிலின் இனிய ஓசையும் காக்கையின் இரைச்சலும் காதில் தேனாய் பாய்ந்தது, புத்துணர்வுடன் எழுந்து பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தான். பாட்டி வயக்காட்டு பக்கம் போய் பசுவை கட்டிவிட்டு வரவா ? என்றான். வேப்பங்குச்சியை வாயில் வைத்து பல்லை தேய்த்துக்கொண்டே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டிம்மா… இங்கே வாருங்கள் என்றான். உனக்கு சுடச்சுட சுக்கு காப்பி கொண்டு வரவா ? அல்லது டீ வேண்டுமா ? என்றவளிடம் உங்கள் விருப்பம் என்றான். சுக்கு காப்பியை பருகியபடியே பாட்டி ஊஞ்சலை ஆட்டிவிடுங்கள் என்றான். பாட்டி ஊஞ்சலை ஆட்டிவிடும்பொழுது அவனுடைய மனமும் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. பாட்டியின் நிலத்தை வாங்குபவர்கள் விவசாயம் செய்யாமல் மரங்களை வெட்டி இயற்கையை அழித்து நீர்வளம் உள்ள இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கணத்தது. டேய் அருண் என்னடா யோசனையில் இருந்து கொண்டு பசியை மறந்து விட்டாயா? வா களி கிண்டி கீரை கடைந்து வைத்திருக்கிறேன் என்றாள். டவுனில் இப்படியெல்லாம் சாப்பிடுவார்களா ? என்று அருணிடம் கேட்க, எதற்கு இப்படி ஒரு கேள்வியை கேட்டீர்கள் பாட்டிம்மா, அப்பாவும் அம்மாவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் அவர்களோடு நானும் கூழ், பழையசாதம், களி இப்படியெல்லாம் சாப்பிட்டு பழகிக்கொண்டேன் என்றான்.

இத்தனை வயதுக்கு அப்புறம் நான் டவுனுக்கு வந்தால் புதுவாழ்க்கை வாழ பழகிக்கொள்ள வேண்டாமா ? என்று நெஞ்சடைக்க கேட்டாள். பாட்டிம்மா… மண்வெட்டி தருகிறீர்களா? என்று கேட்கும் பொழுதே அருணின் செல் சிணுங்கியது. ஹலோ…. அப்பா என்று கூறும்பொழுதே குறுக்கிட்ட அப்பா நிலத்தை விற்க ஏற்பாடு செய்துவிட்டேன் என்று குதூகலமாக கூறினார். அப்பா உங்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். ஆன்லைனில் அக்ரிகல்சர் படிப்புக்கு அப்ளை செய்துவிட்டேன் என்று சத்தமாக கூறினான். என் அம்மா மகனின் மனதை கலைத்து விட்டார்களா ? என்று முருகன் தனக்குள்ளே கேள்விகள் பல கேட்டுக்கொண்டார்.

பாட்டியோ, இந்த படிப்பு டாக்டரை மிஞ்சின படிப்போ, என் மகனையே எதிர்த்து பேசிக்கொண்டிருக்கிறானே ? என்று பேரனை நோக்கினாள். வெள்ளச்சி பாட்டி. வாங்க நம் ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து ”என் படிப்புக்கு வித்திட்ட தெய்வம் என் பாட்டியம்மா” என்று முகநூலில் பதிவிடப்போகிறேன் என்றான். இந்த நிலத்திற்கு புத்துயிர் கொடுக்க இளங்காளை வந்துவிட்டான் என்று பேரனை பெருமையுடன் பார்த்தாள் வெள்ளச்சி.

***

நன்றி.
திறமையில்லாமல் நிலத்தையும் விற்று பாட்டியையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி டாக்டருக்கு படிப்பதால் யாருக்கு என்ன பலன்?! தனக்குப் பிடித்ததை தன்னால் படிக்க முடிந்ததை படிக்கட்டுமே நம் பிள்ளைகள்.கௌரவத்தைப் பார்த்து நல்ல விவசாய நிலத்தை விற்பது தேவையா?! என்ற பல அறிவுறுத்தல்கள் இந்தக் கதையில்.வாழ்த்துகள்.
 
  • Like
Reactions: Userfriend97

sathishraj2007

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 5, 2021
2
2
3
Chennai
அருமையான கதை கரு, தெளிவான எழுத்து நடை, உங்கள் எழுத்து பணி தொடரட்டும்
 
  • Like
Reactions: Userfriend97

S.Balu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 10, 2021

srikrishnaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 9, 2021
1
1
3
mylapore chennai 600004
TMT. MEENAKSHI'S SIRUKATHAI "THULIR VIDUM ILAM THALIR" IS AN EXCELLENT STORY, WHICH IS AN ETHICS OF HUMAN LIFE. IT PAVES A WAY TO FOLLOW AN ENTHUSIASTIC LIFE OF YOUNGER GENERATION. IT IS A GREAT ROLL MODEL TO THE SOCIETY.
 
Attachments

  • IMG_20210810_222410.jpg
    IMG_20210810_222410.jpg
    87.8 KB · Views: 48
  • IMG_20210810_222333.jpg
    IMG_20210810_222333.jpg
    93.6 KB · Views: 39

annamalai

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 11, 2021
5
4
3
chennai
WONDERFUL MESSAGE TO THE YOUNGSTERS.SHORT AND SWEAT.WISH THE AUTHOR FOR SUCCESS IN THIS AND FUTURE SIRUKATHAI COMPETITIONS. GOOD LUCK.
 
  • Like
Reactions: Userfriend97

chennainet

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 9, 2021
1
1
3
chennai
காலத்திற்க்கேற்ற கதை கரு, எளிய நடை,தற்கால பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும். எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்... இதுபோன்ற கருத்துள்ள சிறுகதைகளை எழுத வேண்டுகிறேன்..
 
  • Like
Reactions: Userfriend97

annamalai

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 11, 2021
5
4
3
chennai
THEME OF THE STORY IS HEART TOUCHING.IT MUST REACH TO THE PARENTS AND TEACHERS TO REALISE THEIR MISTAKES WHAT THEY ARE DOING NOW.WARM WISHES TO THE AUTHOR.GOOD LUCK.
 
  • Like
Reactions: Userfriend97