• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முதலும் முடிவுமாய்-19

Pandiselvi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 30, 2021
122
59
43
Chennai
அத்தியாயம் 19

"இப்போ எதுக்கு இவ்ளோ பதட்டம்?. நான் மாறனை லவ் பண்றேன். உன்னை அப்படி பாக்கலனு நீ என் ப்ர்ண்ட்னு சொல்லிட்டேன்"

"அடிப்பாவி.. சொல்றதை முழுசா சொல்ல மாட்டியா?. கொஞ்ச நேரத்துல நெஞ்சே வெடிச்சுருக்கும்" என்று நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டான்.

"நீங்க என்ன நெனச்சு பதட்டமானேங்க?"

"அறைகுறையா சொன்னா என்ன நினைப்பேன். எங்க அந்த மைதா மாவை லவ் பண்றியோனு.." என்றவன் அவள் முறைப்பில், "இல்லமா நான் லவ் பண்றேனு சொன்னேனு சொன்னியா.. அதான்.. கொஞ்சம் இல்ல ரொம்பவே பயந்துட்டேன்"

"உங்களை லவ் பண்றேனு சொன்னதுக்குத் தான் அவனுக்கு அவ்ளோ கடுப்பு. அவன் இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல. அந்த மாதிரி இதுவரைக்கும் அவன் பண்ணதேயில்லை" என்று உண்மையாகவே ஒரு தோழியாக அவனை நினைத்து வருத்தம் கொள்ள.

"சரி அவனை விடு. அப்புறமா அவனை எப்டி டீல் பண்ணலாம்னு யோசிக்கலாம். நீ சொல்லு"

"என்ன சொல்லனும்?"

"அதான் லவ் பண்றேனு சொன்னேல. இப்போ சொல்லு" என்று அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தான்.

"அப்பவே சொல்லிட்டேனே" என்று வெட்கத்தில் தலை குனிந்தாள்.

"ம்ஹூம் அதெல்லாம் செல்லாது. அது ஏதோ அவசரத்துல அவனைப் பார்த்து சொன்னது. நச்சுனு நெஞ்சுல நிக்குற மாதிரி என்னைப் பார்த்து இப்போ சொல்லு. ரொம்ப தவிக்க விட்டடி ப்ளீஸ்" என்றவனின் விழிகளில் காதலும் ஏக்கமும் போட்டிக் கொண்டு நின்றது.

காற்றைக் கண்டவுடன் நடனமாடும் மரங்களைப் போல ஒளியிழந்த அவன் விழிகள் அவனுடனான வாழ்வைத் தந்துவிட மாட்டாயா என்று அலைப்புற்றது. அன்பெனும் குழலை அவன் விழிகளில் வாசிக்க அவளுக்கும் ஆசை தான். ஆனால் பெண்மையின் நாணம் வந்து முன்னே நின்று அவளின் வார்த்தைகளை தொண்டைக்கடியில் கட்டிப் போட்டது. விட்டு விட்டுத் துடிக்கும் இதயம் கூட விடாமல் துடித்தது அவனுக்கு அவள் தாமதத்தின் காரணம் புரியாமல்.

அதற்கு மேல் விட்டால் அவன் இதயம் மட்டுமல்ல கருவிழிகளும் அலைப்புறுதலை நிரந்தரமாய் நிறுத்திவிடும் என்றுணர்ந்தவள், "எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரியல மாறா. உன் கூட பேசாம பார்க்காம இருக்க முடியல. உன்னைத் தவிர்த்து வேற ஒருத்தர் கூட என் வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல. ரோகித் அவன் காதலை சொல்லும் போது தான் என் மனசுக்குள்ள எந்த அளவுக்கு உன்னை விரும்புறேனு புரிஞ்சது. உன்னைக் காணாம ஏங்குன அந்த நேரம் தான் உன்னை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கேத் தெரிஞ்சது. ஐ லவ் யூ மாறா" என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அவள் பேச பேச ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து வேறொரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் அவளின் அணைப்பில் மொத்தமாய் உருகி கரைந்து அவளை அணைத்துத் தூக்கி, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல். இப்போ மாதிரி எப்பவும் நீ சந்தோஷமா இருக்கனும். நீ என் வாழ்க்கையில் வந்த தேவதை. இந்த தேவதையை எனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை கடைசி வரைக்கும் இதே மாதிரி சந்தோஷமா பாத்துக்கனும். தேங்க்ஸ் டி உன் காதலை எனக்குத் தந்ததுக்கு. ஐ லவ் யூ சோ மச் நிலானி" என்று சந்தோஷ மிகுதியில் தூக்கிச் சுற்றினான்.

ஆகாயம் தாண்டியும்
கூட்டிப்போ கூடவே
ஆளில்லாத் தீவுகள்
கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்
கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்
கூட்டிப்போ கூடவே

நிகழாத சூழல்
நிகர் இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய்
என் வாழ்வையே
ஒளி பாயும் காலம்
குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே
அடைந்தேனே உன்னை அடையாளமே..🎶

வெகுநேரம் சந்தோஷ வானில் பறந்து மேகக் கூட்டங்களுக்குள் ஒளிந்து விளையாடி மண்ணில் வந்து இறங்கியவர்கள் காரில் அமர்ந்தனர். இதுநாள் வரை அவனிடம் வாய் ஓயாமல் ஏதாவது கேட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பவள் காதலை சொன்ன பிறகு அவன் முகம் பார்க்கவே கூச்சமாக இருந்தது. கையைப் பிசைந்து கொண்டு குனிந்து பார்வையை அங்கயே பதிந்திருந்தாள்.

அவனை நேருக்கு நேர் பார்த்து கதைக்கும் அழகிலே அவன் உலகை மறந்து கிடப்பான். ஏனோ அவள் நாணிக் கோணி இதழை கடித்துக் கொண்டு இருக்க மண்சேர துடிக்கும் விதை போல அவளிடம் மொத்தமாய் சரணடைய துடிக்கும் இதயத்தை அடக்கப் பெரும்பாடுபட்டான். குறுகுறுவென பார்வையை அவளிடம் படரவிட பெண்ணவள் தான் தடுமாறினாள்.

"நிலா இந்த ட்ரெஸ் அழகா இருக்கு. அப்படியே தேவதை மாதிரி இருக்க. ஏஞ்சல் தான் வானிலிருந்து இறங்கி பக்கத்துல உட்கார்ந்துருக்குற மாதிரி பீல் ஆகுது"

தான் அழகு என்று கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொண்டாலும் மனம் கவர்ந்தவனின் வாய் வழியே கேட்கும் போது பேரழியாக கர்வம் கொண்டது அவள் மனம்.

"நிலா கல்யாணம் பண்ணிக்கலாமாடி" என்று கிறங்கிய தொனியில் கேட்க.. அவன் முகம் நோக்கியவள், காதல் கதிர் வந்து பாயும் அவன் விழிகளில் சொக்கிப் போனாள். விழிகளில் அத்தனை செய்திகளையும் அவன் கடத்திக் கொண்டிருக்க, வார்த்தைகள் தான் பாவம் முகக்கவசம் அணிந்து ஊமையாகி விட்டது அவளுக்கு. அவன் விழிகளின் பாஷையில் மையம் கொண்டது அவள் நெஞ்சம்.

"நிலா.." என்று சிறு சதுர வடிவ வாடாமல்லி கவர் போட்ட பாக்ஸை அவள் முன் நீட்டினான்.

அவனிடம் இருந்து கிடைக்கும் முதல் பரிசு. கண்கள் ஒளிர அதை வாங்கியவள் ஆசையாய் பிரித்துப் பார்த்தாள். மெல்லிய வெள்ளிக் கொலுசு பளபளவென மின்னியது உள்ளே. குட்டியாய் ஒரு பட்டர்ப்ளை அதன் அருகில் அதை விட குட்டியாய் பல இதயங்கள் அதில் பிங்க் வண்ண எனாமலுடன் அழகாய் மிளிர்ந்தது.

"வாவ்.. ரொம்ப அழகா இருக்கு மாறா" என்று கையில் வைத்து அதன் அழகை ரசித்தாள்.

அவள் கையில் இருந்து வாங்கியவன், "நிலா காலைக் காட்டு" என்றவனை விழிகள் அதிர பார்த்தாள்.

"வே.. வேண்டாம் மாறா.. நானே போட்டுக்கிறேன் குடு" என்று கையை நீட்டி சங்கடத்தில் நெளிய.

அவன் கொலுசை கையில் வைத்துக் கொண்டு அழுத்தமாய் அவளைப் பார்க்க அவள் கூச்சத்துடனே காலைத் தூக்கி சீட்டில் வைத்தாள். அவள் பாதம் தொட்டு கொலுசை அனுவிக்க.. அவன் விரல் தீண்டலில் வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறந்து அவள் உடலை சிலிர்க்க வைத்தது. கொலுசை இரு காலிலும் மாட்டியவன் குனிந்து கொக்கியை பற்களால் கடித்து இறுக்க.. அவன் இதழ் ஸ்பரிசமும் மீசை உரசலும் அவளுக்குள் பல மின்னல்களை பாய்ச்ச விரல்களை பின்னிப் பிணைத்து இதழைக் கடித்து விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.

அவன் மீசை அரும்புகளை அழகாய் அவள் காலில் பதியம் இட்டு நிமிர அவளின் இரண்டு கைகளும் அவள் அணிந்திருந்த கவுனின் இருபக்கமும் அழுத்திப் பிடித்திருக்க, இதழை கடித்து விழிகளை இறுக மூடி இருத்தவளைக் கண்டு குறுநகை புரிந்தவன், "நிலா.. கொலுசு மாட்டி விட்டேன். ப்ரத்டே பேபி சாக்லேட் குடுக்கனுமே.. சாக்லேட் எங்க? நானே எடுத்துக்கவா?" என்று அவள் காதில் ரகசியம் போல் முனுமுனுக்க காதில் நுழைந்து கழுத்தில் படர்ந்த அவன் வெட்ப மூச்சுக் காற்றில் விழி திறந்தவள் அருகில் தாபத்தோடு நெருங்கிய அவன் முகத்தைக் கண்டு அதிர்ந்து எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். கருநிற மயக்கும் விஷமக் கண்ணனாய் குறும்போடு அவள் முகம் நோக்கினான்.

"எ.. என்ன கேட்டேங்க?"

"கிஃப்ட் குடுத்துட்டேன். ஸ்வீட் நீ தரனுமே" என்று இரு புருவங்களை உயர்த்தினான்.

"அது.. அது.. இப்போ இல்ல. அப்புறமா தர்றேன்"

"அப்டியா? இல்லையா?" என்றவனின் விழிகள் அவள் இதழில் மையல் கொள்ள..

அவள் அவசரமாய் இதழைப் புறங்கையால் துடைத்தவள், "மாறா.. நீ இப்படி பார்க்காத. எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று சினுங்கினாள்.

"ரொம்பலாம் கற்பனை பண்ணாத. அப்டிலாம் பண்ண மாட்டேன். ஆனா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்டி. ஏற்கனவே உன் நெனப்பு தினம் ரொம்ப வாட்டுது. இப்போ காதலை சொன்ன பிறகு அப்டியே உன்னை தூக்கிட்டு போயிடனும்னு தோனுது" என்றவன் அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவள் பின்புறமாக அணைத்தபடி நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். சற்றுமுன்பு இருந்த தாபம் எங்கோ மாயமாய் மறைந்து விட இருவருக்கும் காதல் கொண்ட மனதில் பிரிவின் ஏக்கமும் வலியும் வந்து ஒட்டிக் கொண்டது. இன்னமும் சிறிது நேரத்தில் இருவரும் வேறு வேறு பாதையில் செல்ல வேண்டும். ஏனோ இந்த நேரம் இப்படியே உறைந்து விடக் கூடாதா என்று இருவரும் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேல மாறா. உன்னை தினமும் பாக்கனும் போல தோனுது"

"நானே ரொம்ப ஏங்கிப்போயி தான்டி இருக்கேன். நீ இப்டி பீல் பண்ணேனா அப்புறம் என்ன ஆனாலும் பரவாலனு உன்னைக் கூடவே கூட்டிட்டு போயிடுவேன்"

"உன்கூட வர்ற நான் ரெடி தான். ஆனா அப்பா என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சுருக்காரு. அவரு நம்பிக்கையை உடைச்சுட்டு உன்கூட வர முடியாது‌. இதுவரைக்கும் நான் எது பண்ணாலும் அப்பா எனக்கு நோ சொன்னதே இல்லை. ஆனா இந்த விஷயத்துக்கு வீட்ல என்ன ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரியல. அப்பா கிட்ட பேசனும்‌. எப்டி சொல்றதுனே தெரியல. உங்க வீட்ல சம்மதம் சொல்வாங்களா?" என்று வருத்தத்துடன் சொல்லி முடிக்க..

"நாம லவ்வை சொல்லியே ஒருமணி நேரம் தான்டி ஆகுது‌‌. அதுக்குள்ள பிரச்சினை, வீட்ல சம்மதம் வாங்குறதை பத்தி ஏன் யோசிச்சு பீல் பண்ணனும்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ என்னை லவ் பண்ற வேலையை மட்டும் இப்போ பாரு" என்று அவள் இடையை இறுக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்‌. சிறிது நேரம் மனம் விட்டு பேசி சிரித்தனர்‌. அன்றைய பிறந்தநாள் அவளுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது.

இரவுணவை சேர்ந்தே வெளியில் முடித்தவர்கள், அவளை வீட்டில் இறக்கி விடும் பொழுது அவள் ஒரு கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு, "நிலா போனுமா?" என்று ஏக்கத்தோடு கேட்க. அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் விழிகளிலும் கலக்கம்‌. அவள் விழிகள் கலங்குவதை உணர்ந்தவன், "ஹே சாரி நிலா. சும்மா கேட்டேன். பாத்துப்போ. வீட்டுக்குப் போயிட்டு கால் பண்றேன்".

நொடியில் மாறிவிட்ட அவன்‌ மனதை அவள் அறியாததா, "கால் பண்ணுங்க" என்று இறங்கிச் சென்றாள்.

உள்ளே அவள் தந்தையும் தாயும் ஹாலிலே நிலாவின் வருகைக்காக காத்திருந்தனர் முகத்தில் குழப்ப ரேகையுடன்.

தொடரும்.
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
165
111
43
Dindigul
சகுனி வேல ஆரம்பிச்சிடுச்சு போல