• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை -12

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
முத்த மழை - 12

ஒரு வாரம் தான் மாமியார் வீட்டில் இருந்தாள் வனிதா. அந்த ஒரு வாரம் கழித்து பிறந்த வீட்டிற்கு வந்தவுடன் அவள் செய்த அலும்பில் சுமிக்கே எரிச்சல் வந்துவிட்டது.

‘என்னை மாதிரி மாமியார் வீட்டுலையே இருந்தா உங்க தங்கச்சி என்ன செஞ்சிருப்பா?’ என கணவனிடம் வேறு முறைத்துக் கொண்டாள்.

“ம்ச் விடு சுமி. அவளைப் பத்தி தான் தெரியுமே.. கர்ணன் போற வரைக்கும் நீ நிம்மதியா இருந்துக்கோ. அப்புறம் மறுபடியும் இங்க வந்து தான் டேரா போடுவா” என்றான் சுந்தர் சலிப்பாக.

“இதுக்காகவே மாமா இங்கேயே இருந்தா என்னனு யோசிக்கத் தோனுதுங்க..” என அவளும் சலிப்பாக சொல்லிவிட்டு, “நான் குளிச்சிட்டு வரேன்.. இங்கேயே இருங்க..” என குளியலறைக்குள் நகர்ந்தாள்.

மனைவி ஏன் சொல்கிறாள்? என்று தான் சுந்தருக்கு தெரியுமே.. அமைதியாக கட்டிலில் சாய்ந்து கொண்டான்.

ஆண் குழந்தை தான் அந்த வீட்டிற்கு மொத்த வாரிசு என்றாலும், ராஜலட்சுமிக்கு வனிதா மீதுதான் அதிக பாசம். சுந்தரை சொத்துக்களை பாதுகாக்கும் ஒரு காவலாளி போலவும், கர்ணனுக்கான எதிரி போலவும் தான் வைத்துக் கொண்டிருக்கிறார்.

பெண் பிள்ளைகள் தந்தையோடு தான் அதிக இணக்கம் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியவள் வனிதா. அவளுக்கு அன்னை இருந்தால் போதும். எல்லாவற்றிற்கும் அவர் வேண்டும். அதனாலே திருமணம் முடிந்த மூன்றாம் நாள், ‘அம்மா வேணும்’ என இங்கு வந்தவள் தான், கர்ணன் வந்த பிறகே மாமியார் வீடு சென்றிருக்கிறாள்.

யாழினி ஆரம்பத்தில் இருந்தே அப்பாச் செல்லம். அவளுக்கு வனிதாவின் செயல்கள் அப்போதிருந்தே பிடிக்காது. எல்லா இடத்துலயும் ‘நான் தான், எனக்குத் தான்’ என்று காட்டிக்கொள்ளும் மனப்பாங்கு வனிதாவிடம் அதிகம். அது யாழினிக்கு வராது. பிடிக்கவும் செய்யாது.

ஆரம்பத்தில் இதனால் பிரச்சினைகள் வரும், அதில் முக்கால்வாசி வனிதா மீதுதான் தப்பிருக்கும். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவளுக்குத்தான் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வார் ராஜலட்சுமி.

சொக்கலிங்கம் கூட இதை பார்த்து மனைவியை கண்டித்திருக்கிறார், வனிதா அதற்கும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, யாழினியை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார் சொக்கலிங்கம்.

சுந்தருக்கு இதெல்லாம் எரிச்சலைக் கொடுக்கும். ‘ஏன் இப்படி? இதை செய்யாதே? அவள் சின்னப் பெண்தானே?’ என ஏதாவது வனிதாவிடம் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். ஏண்டா இதை சொன்னோம் என்று அவனை புலம்ப வைத்துவிடுவாள். அந்தளவிற்கு பிரச்சினை செய்து விடுவாள். அதனால் அமைதியாகவே இருந்து கொள்வான்.

அதற்காக யாழினியிடம் சென்று அவளை சமாதானம் செய்யும் நல்ல அண்ணனும் இல்லை சுந்தர். ராஜ லட்சுமியின் மறு பிம்பம் அவன். சுயநலவாதி.! யார் அடித்துக் கொண்டு செத்தாலும் அவனுக்கு கவலையில்லை. அவனுக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது. அவன் சொத்திற்கும் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது. அதில் மிக மிக கவனமாக இருப்பான்.

வீட்டில் அனைவரும் இப்படி இருப்பதால் தான், சிவகுரு குடும்பத்தோடு அழகாக பொருந்திப் போனாள் யாழினி.

இங்கு அக்கறையோ பாசமோ கிடைக்காமல் திண்டாடியவளுக்கு, சிவகுருவின் வீட்டில் அது கொட்டி கொடுக்க, ‘இது தான் என் வீடு’ என்ற எண்ணம் வெற்றியை காதலிக்கும் முன்னமே வந்துவிட்டது அவளுக்கு.

பிறந்த வீட்டிற்கு வந்து விட்டோம் என்பதற்காகவும், கர்ணன் இதையெல்லாம் கவனிக்கிறான் என்பதற்காகவும் மட்டும் தான் தந்தையை சென்று பார்த்து வந்தாள். முழுதாக மூன்று நிமிடம் கூட அந்த அறையில் இருக்கவில்லை.

சொக்கலிங்கத்திற்கு மகளை தெரியும் என்பதால், பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்.

நர்ஸ் தான் “ஸார் சாப்பிடனும்..” என அவரை அமர வைக்க முயற்சிக்க,

“கொஞ்ச நேரம் போகட்டுமே தம்பி..” என்று சைகையில் கூற,

“டைம் பாருங்க சார். கரணன் சாரும், யாழினி மேடமும் நீங்க லஞ்ச் முடிச்சிட்டீங்களான்னு கேட்டு மெசேஜ் போட்டுட்டாங்க. லேட்டான திட்டுவாங்க சார்..” என்று நன்றாக சாய்த்து உட்கார வைத்தான்.

அந்த நர்சின் வார்த்தைகள் சொக்கலிங்கதிற்கு ஆறுதலாக இருந்தது. இதே வீட்டில் இருக்கும் சுந்தர் இப்போது வரை வந்து ஒரு வார்த்தை கேட்கவில்லை. பார்க்க வந்த வனிதாவும் ‘சாப்பிட்டீங்களா?’ என்று கேட்கவில்லை.

வெளியில் இருந்தாலும் நேரத்தைக் கணக்கிட்டு மறக்காமல் கேட்கும் மற்ற இரண்டு பிள்ளைகளையும் நினைத்து மனது லேசானது.

அது கொடுத்த நிம்மதியில் அமைதியாக உணவை முடித்தார்.

வெளியில் “எதுக்கு ம்மா அவன் கூட எல்லாம் யாழியை அனுப்புறீங்க. அவளை ஏமாத்தி இங்க என்ன நடக்குதுனு விசாரிச்சு புதுசா பிரச்சினை செய்யப் போறான்..” என தாயிடம் கத்திக் கொண்டிருந்தாள் வனிதா.

“ம்ச் வனி.. அவ இருந்தா நம்ம ஒன்னும் பேச முடியாது. அப்புறம் அவன்தான் கிளம்பறானே.. இன்னும் என்ன பிரச்சினை செய்யப் போறான். நாம அவன் போற வரை அமைதியா இருந்தாலே போதும்..” என்று மகளைக் கண்டித்து கொண்டிருந்த நேரம், இன்டர் காம் அழைப்பு வந்தது.

செக்யூரிடி என புரிய வனிதா தான் எடுத்தாள். “மேடம்.. ஆடிட்டர் ஆஃபிஸ்ல இருந்து வந்துருக்காங்க. சுந்தர் சாரை கேட்டு..” என்றதும்,

“ம்ம் உள்ள அனுப்புங்க..” என்றுவிட்டு சுந்தரையும் அழைத்து விட்டாள்.

“நான் யாரையும் வர சொல்லலயே?” என்றவாறே வந்தவன், அங்கிருந்தவர்களைப் பார்த்து புருவம் சுருக்கினான்.

“சொல்லுங்க சார்..?” என்றதும்,

“ஸாரி சார்.. உங்களை சேவ் பண்ண நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணோம், பட் முடியல..” என தயங்கி “லாஸ்ட் மந்த் ஃபார்டி லக்ஸ் க்கு கணக்கு காட்டல. அன்ட் இந்த மந்து ட்வென்டி ஃபைவ் லக்ஸ்.. இந்த ரெண்டு அமவுன்டும் ஏன் டேலி ஆகலன்னு எங்க சார் கேட்டார். நான் முடிஞ்சளவுக்கு சமாளிச்சேன்.. பட்..” என மீண்டும் இழுக்க,

“ம்ச்.. என்ன பாலாஜி இது? இதெல்லாம் நான் சொல்லனுமா உங்களுக்கு. லாஸ்ல காட்ட வேண்டியதுதான..” என்றான் எரிச்சலாக.

“ஸார் நீங்க கொடுக்குற காசுக்கு மேலையே தான் நான் வேலை செய்றேன். நான் என்ன சொன்னாலும், எங்க சைன் கேட்டாலும் என் பாஸ் கண்ணை மூடிட்டு போடுவார். ஆனா இங்க பிரச்சினை எங்க பாஸ் இல்ல. உங்க அண்ணன்.! கர்ணன்!..” என்று நிறுத்த, அனைவரும் பட்டென நிமிர்ந்து பாலாஜியை பார்த்தனர்.

“கர்ணனா? அவன் இங்க எங்க வந்தான்..?” என எரிச்சலாக கேட்டது சுந்தர் இல்லை, வனிதா.

“மேடம் அவர் லாஸ்ட் டூ மந்த்ஸோட அகவுன்ட்ஸ் மட்டும் தான் செக் பண்ணிருக்கார். அதுலயே மாட்டிக்கிட்டோம். இன்னும் பழசெல்லாம் பார்த்தா மொத்தமா மாட்டிப்போம்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வனிதாவின் கணவனும் பதட்டமாக வந்துவிட்டான்.

அவனின் பதட்டத்தைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் அனைவரும் பார்க்க, “நாம நினைச்ச மாதிரி கர்ணன் ஆஸ்ட்ரேலியா போகல வனி.. இனி இங்க தானாம். ஒரு டாகுமென்ட் வெரிஃபை பண்ண லாயர்கிட்ட போயிருந்தேன். அப்போ அவர்தான் இதை சொன்னார். ப்ராப்பர்டி எல்லாம் ரிசெக் பண்ணிட்டு இருக்காங்களாம். உங்க அப்பாதான் சொல்லிருக்கார். அவன் ஏதோ ப்ளானோட தான் வந்துருக்கான்னு நினைக்கிறேன்.” என்றான் கோபமாக.

“ம்ச்.. அவனுக்கு இங்க என்ன தெரியும்? யாரைத் தெரியும்? நாம என்ன பிசினஸ் பண்றோம்னு கூட அவனுக்குத் தெரியாது. அந்த பிசினஸ் பத்தி ஒரு மண்ணும் தெரியாது. இவனுக்காக ஏன் பயப்படனும்..” என கர்ணனைப் பற்றித் தெரியாமல், வழக்கம்போல கிண்டலாக வனிதா கூற,

“உனக்கு அறிவு இல்லன்னு அடிக்கடி நிரூபிக்காத..” என்று எரிச்சலாக கத்திய சுந்தர் “அன்னைக்கு நான் சொன்னது மறந்துடுச்சா உனக்கு? அவனுக்கு இங்க நடக்குற எல்லாம் தெரியும். பிசினஸ், ஃபினான்ஸ், கார்மென்ட்ஸ் ன்னு எல்லாமே அவனுக்கு அப்பா சொல்லிருக்கார். அகவுன்ட்ஸ் க்கு புதுசா ஒரு ஆப், அன்ட் சாஃப்ட்வேர் கூட அவன்தான் போட்டுக் கொடுத்துருக்கான். நமக்கு கூட தெரியாம இருக்கலாம். ஆனா அவனுக்குத் தெரியாம இருக்க வாய்ப்பே இல்லை..” என்று ஆத்திரமாக முடித்தான்.

“ம்ச் இப்போ நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்துங்க. அடுத்து என்ன செய்றதுனு யோசிக்கலாம். பிரச்சினை ரொம்ப சீரியஸ். ரொம்ப கவனமா கர்ணனை ஹேன்டில் பண்ணனும். கோபப்பட்டு வார்த்தையை விட்டோம். கண்டிப்பா பிரச்சினை வேற மாதிரி ஆகிடும்..” என்றான் வனிதாவின் கணவன்.

ஆடிட்டர் பாலாஜியும் அதையே தான் சொன்னான். “சார் இப்போதைக்கு நமக்கு காரியம் தான் பெருசு. உங்க அப்பாக்கிட்ட பேசி சொத்தை எழுதி வாங்குற வழியைப் பாருங்க. முதல்ல யார் யாருக்கு எந்த எந்த சொத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க..” என்றான்.

அவன் சொல்வது தான் சரி என்பது போல் தோன்றினாலும், இப்போது அனைவரின் பார்வையும் ராஜலட்சுமியிடம் சென்றது.

அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியிலேயே அவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அனைவருக்கும் புரிந்தது.

“அத்த என்ன செய்யுது?” என சுமிதான் அவரிடம் வேகமாக வந்தாள்.

உடலெல்லாம் சில்லிட்டுப் போய், அதிர்ச்சியில் மயங்கி சுமித்ராவின் மேலேயே விழுந்து விட்டார் ராஜலட்சுமி.

“அம்மா.. அத்த…” என்று அனைவரும் அவரிடம் ஓட, அந்த சத்தத்தில் சொக்கலிங்கத்தின் அறையில் இருந்த நர்ஸ் வெளியே வந்தான்.

நிலமையை நொடியில் கணக்கிட்டு, வேகமாக சென்று ராஜலட்சுமியை செக் செய்து, “சடனா பிபி ரைஸாகிருக்கு, அதனால வந்த மயக்கம்..” என்றவன் முதலுதவி செய்து விட்டு “ஹாஸ்பிடல் கொண்டு போயிடுறது பெட்டர் சார்..” என்றான் சுந்தரைப் பார்த்து..

இப்படியொரு சூழலை யாருமே எதிர்பார்க்கவில்லை. “நான் கார் எடுக்கிறேன்.. நீங்க பத்திரமா கூப்பிட்டு வாங்க..” என வனிதாவின் கணவன் வெளியில் செல்ல, சுந்தரும் சுமியும் ராஜலட்சுமியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.

அவர்கள் வெளியில் சென்றதும், அந்த நர்ஸிடம் வந்த வனிதா “நீ எப்படி வெளிய வந்த.?” என்றாள் கூர்மையாக.

“உங்க சத்தம் கேட்டுத்தான் வந்தேன் மேம்..?” என்றான் பவ்யமாக.

“இந்த சத்தம் மட்டும் தான் கேட்டுச்சா? இல்ல நாங்க பேசின எல்லாமே கேட்டுச்சா?” என்றாள் ஆத்திரமாக.

“மேம்.. நீங்க பயந்து கத்தின சத்தம் தான் கேட்டது. அதுக்கு முன்னாடி பேசின எதுவும் எனக்கு கேட்கல. அப்படியே கேட்டாலும், அது எனக்கு தேவையில்லாத பேச்சு. அதை யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன்.” என்றான் கொஞ்சம் நிமிர்வாகவே.

“ம்ம்.. பார்த்து கவனமா இருந்துக்கோ.. இங்க இருந்து நல்ல முறையில் போகனும். அதை மறந்துடாத..” என மிரட்டி விட்டு செல்ல, அந்த நர்சின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை.

அந்த புன்னகையோட வீட்டில் நடந்த அனைத்தையும் வாய்ஸ் நோட்டாக கர்ணனுக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன்.

மிகவும் பிரபலமான ஒரு செக்யூரிடி செர்விஸில் இருந்து, சொக்கலிங்கத்தின் பாதுகாப்பிற்காக, கர்ணனால் வேலைக்கு வைக்கப்பட்டிருந்தான் பாண்டியன்.

மற்றவர்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மேள் நர்ஸ் என்று அந்த வீட்டில் காட்டப் பட்டிருந்தான்.

கர்ணனின் இந்த திட்டத்திற்கு மருத்துவர் முழு உதவியும் செய்திருந்தார்.

இங்கு இரண்டறைக்கே மூவரும் மாலின் வெளியில் வந்து நின்றிருந்தனர். மூன்றானது, மூன்றரையானது. கர்ணன் மட்டும் வரவில்லை. மூவருக்கும் சலிப்பு போய் எரிச்சல் வந்து அதுவும் எப்போதோட பறக்கும் என்ற நிலை.

“பெரிய ஃபங்க்சுவாலிடி பாலோவ் பண்ற ஆளுன்னு பீத்திக்கிட்ட, இப்போ எங்கடி உன் அண்ணா?” என வந்தனா யாழினியைக் காய்ச்சுக் கொண்டிருந்தாள்.

வல்லபிக்கும் அதே கேள்விதான். ஆனால் ஏதேனும் காரணம் இருக்குமோ என்று அமைதியானாள்.

யாழினி தான் கர்ணனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள். அவன் எடுக்காமல் இருக்க, அப்போது அவர்களுக்கு அருகில் வாட்டசாட்டமாக ஒருவன் வந்து நின்று புன்னகைக்க, ‘எவன்டா இவன் மலமாடு மாதிரி..’ என மூவரும் பயத்தில் ஓரடி பின் சென்றனர்.


 
  • Like
Reactions: shasri and saru

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
390
8
28
Hosur
Ellarukum security aall potrupan polaye
Ha ha
Lovely