• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்த மழை - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
556
113
Tirupur
முத்த மழை - 13

“கரண்.. அந்த ரமேஷ் இன்னைக்கு ஆஃபிஸ் வந்திருந்தான். அவன் காது படவே நீ சொல்ல சொன்ன மாதிரி சொல்லிருக்கேன். இந்நேரம் வீட்டுக்கு போய் சொல்லிருப்பான். அங்க ஒரு கலவரம் நடந்து முடிஞ்சிருக்கும்..” என்றார் அவனின் லாயர் ஃப்ரண்ட் விஷ்னு.

“ம்ம்.. நான் பார்த்துக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல சுந்தரும், வனிதாவும் அங்க வருவாங்க. பார்த்துக்கோ.. கவனமா பேசு..” என்று வைத்தவன் அப்போதுதான் மணியை பார்த்தான் மூன்றரையைத் தொட்டிருந்தது.

‘அய்யோ’ என தலையில் தட்டிக் கொண்டவன் தன்னுடைய இன்னொரு மொபைலை எடுத்து பார்க்க யாழினியின் அழைப்புகள் அதிகம் இருந்தன.

‘போச்சு.. போச்சு..’ என புலம்பியவன், அவர்களுக்கு பாதுகாவலுக்கு வைத்திருந்த ஆளுக்கு அழைத்து “வசந்த் நான் வர ட்வென்டி மினிட்ஸ் ஆகிடும். அவங்களை பார்த்துக்கோ..” என்றவன் யாழினிக்கு அழைத்து “சாரி யாழி.. ஒரு மீட்டிங்க் ஸ்கிப் பண்ண முடியல.. நான் இன்னும் ட்வென்டி மினிட்ஸ்ல வந்துடுவேன். ஜூஸ் போல குடிங்க.. வந்துடுறேன்..” என காரை எடுத்துக் கொண்டே பேசினான்.

அதற்குள் வந்தனா அந்த ஆளிடம் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள்.

“மேடம்… சத்தம் போடாதீங்க. கரண் சார் தான் உங்களுக்கு செக்யூரிடிக்காக என்னை வச்சிருக்கார். மார்னிங்க் இருந்து உங்க பின்னாடி தான் சுத்துறேன். சார் கிளம்பிட்டார். இப்போ வந்துடுவார்..” என்று சொல்ல சொல்ல கேட்காமல், தன் கையிலிருந்த பேகால் அவனை அடிக்க ஆரம்பித்து விட, யாழியும், வல்லியும் தான் அவளை இழுத்துப் பிடித்திருந்தனர்.

“ஏன்டா ஃப்ராடு பயலே.. எங்க பின்னாடி சுத்தினதும் இல்லாம, அதை எங்ககிட்டயே சொல்லுவியா? உன்னை போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள வைக்கிறேன்டா தக்காளி..” என அவள் பாட்டிற்கு கத்த, சிறு கூட்டம் கூடிவிட்டது.

வசந்திற்கோ ‘இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா எப்பா?’ என மனதுக்குள் சலித்துக் கொண்டாலும், அவர்களுக்கு அருகில் விரைப்பாக நின்று கொண்டே மற்றவர்களை பார்வையாலே அகற்றி இருந்தான்.

அவனின் தோற்றம், பார்வை எல்லாம் அவன் பொய் சொல்லவில்லை என்று வல்லபிக்கு புரிய, ‘ம்ச் சும்மா இரு டி.. அவர் நிஜமாவே செக்யூரிடி தான் போல, டென் மினிட்ஸ்ல அவர் வந்துடுவார். வந்த பிறகு கேட்கலாம்..’ என வந்தனாவை சமாதானம் செய்து கொண்டிருக்க, யாழினி மூவருக்கும் மாதுளை ஜூசோடு வந்து நின்றாள்.

வந்தனா குடிக்காமல் வைத்திருக்க, “ஏன் டீ..” என தெரிந்தாலும் வல்லபி கேட்க,

“இங்க பார் வல்லிக்கண்ணு.. எனக்கு பசியெடுத்தா ரொம்ப கோபம் வரும்னு உனக்கேத் தெரியும். இந்த பசில எனக்கு ஃபுல் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டனும். அம்மா வேற வெரைட்டியா சமைச்சு வச்சிருப்பாங்க. அதை நான் சாப்பிடவா வேண்டாமா? இந்த ஜூஸ் குடிச்சு என் பசி போயிட்டா, நான் எப்படி சாப்பிட..” என பொறுமிக் கொண்டிருக்க, இவர்களைப் பார்க்காமல் முதுகு காட்டி நின்றிருந்த வசந்திற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

‘சரியான சோத்து மூட்டை போல’ என அவன் நினைத்துக் கொள்ள, யாழினியும் வல்லபியும் ‘இது சரியான பைத்தியம் இல்ல, சரியாகாத பைத்தியம்’ என்பது போல் ஒரு பார்வையைக் கொடுத்துவிட்டு ஜூசை குடித்தனர்.

மறக்காமல் வந்தனாவிடமிருந்த ஜூசை வாங்கி தன் கையில் வைத்துக் கொண்டாள் வல்லபி..

வந்தனாவிற்கு பசி கூட கூட கோபமும் கூட, “ம்சே.. இவ்ளோ லேட்டாகும்னு தெரிஞ்சிருந்தா KFCல ஒரு பக்கெட் சிக்கனாவது மொக்கிருப்பேன். இப்போ பட்டினியா கிடக்குறேன். இதுக்குத்தான் சாப்பாட்டு விசயத்துல இவங்க யாரையும் நான் நம்புறதில்ல.” என புலம்பிக்கொண்டே அங்குமிங்கும் நடக்க, இதெல்லாம் தோழிகளுக்கு பழக்கம் என்பதால் அமைதியாக நிற்க, வசந்திற்குத்தான் சிரிப்பு வந்து கொண்டே இருந்தது.

சரியாக வல்லபி சொன்னது போல பத்து நிமிடத்தில் வந்து நின்ற கர்ணனிடம் சண்டையிட வேகமாக வந்தனா கிளம்ப, அவளுக்கும் கர்ணனுக்கும் இடையில் வந்து நின்றான் வசந்த்.

“இங்க பாரு மலை நான் செம்ம கோவத்துல இருக்கேன். என்னை டென்சன் பண்ணாம ஒதுங்கி ஓடிப் போயிரு..” என கத்த,

“வந்து.. ஏற்கனவே லேட்.. நீ வம்பு பண்ணி இன்னும் லேட் பண்ணாத. ஆல்ரெடி நீ கொலை பசியில இருக்க..” என யாழினி எடுத்துக் கொடுக்க,

“ஹான் ஆமா… இன்னைக்கு நீ தப்பிச்சிட்டடா சாம்பு மவனே..’ என வார்த்தைகளைக் கடித்து துப்பியவள் பின் பக்கம் ஏற, யாழினியும் ஏறிக் கொள்ள, இந்த முறை பதட்டம், தயக்கம் ஏதுமில்லாமல் கர்ணனின் அருகில் அமர்ந்தாள் வல்லபி.

வசந்திடம் தலையசைத்து காரை எடுத்தான் கர்ணன். அவன் முகம் இப்போது யோசனையில் இருந்தது. சாதாரணமாக இருந்திருந்தால் இன்னேரம் வந்தனாவிடம் வம்பு வளர்த்திருப்பான். அவன் அமைதியாக வர, எதுவும் பிரச்சினையோ? என அவன் முகத்தைப் பார்ப்பதும் ரோட்டைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்தாள் வல்லபி.

பின் பக்கம் வழக்கம் போல யாழினியும், வந்தனாவும் ஏதோ பேசிக் கொண்டே வந்தனர்.

தன் கையில் இருந்த ஜூசை அவன் பக்கம் வைத்தாள் வல்லபி. அப்போதுதான் யோசனையில் இருந்து மீண்டவன், ஜூசிலிருந்து பார்வையை மெல்ல வல்லபியின் முகத்திற்கு கொண்டு வந்தான்.

கர்ணனின் பார்வையை உணர்ந்து ‘ம்ம்..’ என்பது போல் பார்வையால் ஜூசைக் காட்ட, ‘வேண்டாம்’ என்ற எந்த மறுப்பும் சொல்லாமல் “தேவைப்பட்டுச்சு” என்று அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.

குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், “தேங்க்ஸ்” சொல்லி அவளைப் பார்த்து புன்னகைத்ததும், “ஸீரியஸ் பிராப்ளமா? மாமா ஓக்கே வா..?” என்றாள் கலக்கமாக.

கர்ணனுக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப புதிது. ஹாஸ்டல் வாழ்க்கைக்குப் பிறகு அதிகமாக அவன் யாரிடமும் ஒட்டியதில்லை. தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயத்திலேயே அவன் ஒதுங்கியிருந்தான்.

அவன் வாழ்க்கை வட்டத்துக்குள் எப்போதும் தந்தை இருப்பார். வழுக்கட்டாயமாக உள்ளே வந்தவள் யாழினி. ம்ம்… தந்தை பேசும் போதெல்லாம் யாழினியை அருகில் வைத்து பேசி, அடுத்து அவளாகவே பேசி என அவனின் வட்டம் அவர்கள் மட்டும் தான்.

இப்போது அந்த வட்டத்திற்குள் யாரும் அறியாமலே, ஏன் அவளே உணராமலே உள்ளே வந்து கொண்டிருக்கிறாள் வல்லபி. கர்ணனுக்கு புரிகிறது. ஆனால் வல்லபிக்கு புரிகிறதா? தெரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை.

“என்னாச்சு..? உடம்பு சரியில்லையா?” என்றாள் மீண்டும்.

“இல்ல.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. இது வேற பிரச்சினை..” என்றவன், “ஈவ்னிங்க் எல்லாரும் அப்பாவை பார்க்க வரீங்களா?” என்றான் மெதுவாக.

இப்படியெல்லாம் கேட்டும் பழக்கமில்லை. ‘வாங்க.. வந்து தான் ஆகனும்’ என்று அதிகாரமிடுவது தான் அவன் வழக்கமே.

“நாளைக்கு நாங்க கிளம்பனும்.. பேக்கிங்க் இருக்கு..” என்றாள் மெல்ல,

“ம்ச்..” என்று சலித்தவனின் கோபம் அவளுக்கு புரிந்தது. நாளை அவள் கிளம்புகிறாள். எந்த பதிலும் சொல்லாமல் கிளம்புவது தான் அவனின் கோபம் என்று வல்லபிக்கு புரிய, அமைதியானாள்.

“வேற ஆப்சன் இல்லையா?” என்றான் மீண்டும்..

“வேற என்ன..?” என்றவளுக்கு திணறல் எடுத்தது. இன்று ஏதோ ஒரு முடிவோடு கர்ணன் இருப்பது புரிந்து போனது.

“தெரிஞ்சே கேட்டா என்ன செய்ய..?” என்றவனுக்கு கோபம் வர துடித்தது.

“நான் டைம் கேட்டேன்..” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.

“ம்ம் என் வயசு என்ன தெரியுமா? இன்னும் எவ்ளோ நாள் இப்படி தனியாவே இருக்க.. இதுக்கு பயந்து தான் நான் இங்க வரவே இல்ல..” என்றான் விரக்தியாக.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க.” என்றவளுக்கும் கலக்கமாகிவிட்டது.

“ம்ச் விடு… நான் இப்படித்தான் இருக்கனும் போல.. யாரும் இல்லாம.” என்றவனின் குரலில் ஏதோ வித்தியாசம்.

அதை வல்லபி உணர்ந்து அவன் பக்கம் பார்க்கும் முன் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டான்.

“என்னனு சொன்னாதானே எனக்குத் தெரியும்? ஏன் இப்படி?” என்றவளுக்கு வார்த்தைகளை விட பயமாக இருந்தது.

“நத்திங்க்..” என்றவன் “நீ எப்போ ஸ்டடீசை முடிப்பன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். மூனு வருசமா நீ மட்டும் தான் இந்த மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்க.. என்ன செய்ய நான்..” என்றவனுக்கு சட்டென குரல் உயர்ந்துவிட, திகைத்துப் பார்த்தாள் கர்ணனை.

ஆனால் அவனோ அவளை திரும்பியும் பார்க்காமல், ரோட்டைப் பார்த்துக் கொண்டே ஓட்டினான்.

‘என்ன சொல்கிறான் இவன்? மூனு வருசமாவா? இப்படியொரு எண்ணம் இவன்கிட்ட எப்படி வந்தது? இது எப்படி? யாரால்?’ என்ற திகைப்பிலேயே அமர்ந்திருந்தாள் வல்லபி.

“நான் உங்களை ஹர்ட் பண்ணக்கூடாது இப்பவும், எப்பவும்..” என்றாள் திடிரென..

“இப்போ ஏன் இது..?” என அவன் பார்க்கும் போதே “ஆளிஸ்..” என்றாள் வாய்க்குள்.

அது கர்ணனுக்கும் புரிய, இதை எப்படி மறந்தான்.? என்ன பேசுவான்? அமைதியாகிவிட்டான்.

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்..?” என்று திடிரென வந்தனாவின் சத்தம் இருவருக்கு இடையிலும் கேட்டது.

“வந்துட்டோம்..” என்று ஒற்றைப் பதிலில் யாழினி அண்ணனை வேகமாக பார்த்தாள்.

“ண்ணா ஆர் யூ ஓகே..” என்றாள் பட்டென..

“ஹான் ஓகே யாழிம்மா.. நாம உடனே கிளம்பனும்.. லஞ்ச் முடிச்சதும் ஓக்கே வா.. லேட் பண்ணிடாத..” என்றான் கர்ணன்.

“ஓகே ண்ணா பட் வை..?” என்று கேட்க,

“எனக்கு அங்க ஆடிட்டர் ஆஃபிஸ் போகனும் யாழி.. சிக்ஸ்க்கு அப்பாய்ன்மென்ட்” என்றான்.



“சரி ண்ணா..” என்றவள் யோசனையாகிவிட்டாள்.

“நான் இவ்ளோ நேரமெல்லாம் பட்டினியா இருந்தது இல்ல தெரியுமா? உங்களால தான் இன்னைக்கு நான் பசியோட இருந்தேன்..” என கர்ணனிடம் வம்பு வளர்க்க,

“ஹாஹா.. என்னால ஒரு நல்ல விசயம் நடந்திருக்கு.. உனக்கு பசின்னா என்னனு தெரிஞ்சிருக்கே.. மீ ஹேப்பி..” என சிரிக்க,

“அந்த மலமாடு யாரு? ஏதோ நாங்க பெரிய அப்பாடக்கர் மாதிரி எங்களுக்கு செகியூரிடி போட்டுருக்கீங்க.. ஒரே சிரிப்பா இருக்கு..” என தன்னை கலாய்க்கவும், அவள் திரும்பி கர்ணனை கலாய்த்தாள்.

“ம்ச்.. வந்து..” என வல்லபி பல்லைக் கடிக்க,

“நான் மாமாவைத்தான் கிண்டல் பண்ணேன். உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பாகுது. நீ நோ சொல்லிட்ட. உன்னோட சான்ஸ் மிஸ்ஸாகிடுச்சு. இப்போ எனக்குத்தான் அந்த சான்ஸ் இருக்கு.. அப்படித்தான யாழி, அப்படித்தான மாமா.. நீ உன் வேலையைப் பார்.” என இருவரையும் கேட்க,

“நீங்க ரெண்டு பேர்ல யார் அண்ணியா வந்தாலும் எனக்கு ஓக்கே..” என யாழினி கூற,

“ஆனா எனக்கு வல்லிதான் வேணும்..’ என கர்ணன் பட்டென சொல்ல, வல்லபிக்கு முகமே சிவந்துவிட, இதழோரம் புன்னகை கூட முளைத்து விட்டது.

“ஏன் ஒரு பேச்சுக்காக கூட சரின்னு சொல்ல மாட்டீங்களா?” என கர்ணனிடம் சண்டைக்கு கிளம்ப,

“கண்டிப்பா சொல்ல மாட்டேன். விளையாட்டு வினையாகிடும்..” என்ற நேரம் வீடு வந்துவிட, ஏற்கனவே தன்னால் தான் லேட் என கர்ணன் சீதாவிற்கு அழைத்து சொல்லியிருக்க, அமைதியாக உணவு நேரம் முடிந்தது.

உடனே யாழினியை அழைத்துக் கொண்டு கர்ணன் கிளம்ப, வல்லபிக்கு இப்போதே அவனோடு சென்றால் என்ன என்று தோன்றிவிட்டது.

‘அச்சோ வல்லி என்னதாண்டி ஆச்சு உனக்கு..? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற.’ என மனதை அடக்கினாலும், அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.

“ஈவ்னிங்க் வீட்டுக்கு வரீங்களா?” என்று கர்ணன் கேட்டதே மனதில் ஓட, சீதாவிடம் எதையும் மறைக்காமல் அவள் சொல்லிவிட, அவருக்குமே கர்ணனின் மனநிலை நினைத்து வருத்தமாக இருக்க, பெரியவர்களிடம் பேசி, கரூர் கிளம்பலாம் என்று சொன்னார்.

மிகவும் தயக்கத்துடனே கிளம்பிய வல்லபி ராமசாமி, திரும்பி வரும் போது வல்லபி கர்ணனாக மாறியிருந்தாள்.
 
  • Wow
Reactions: shasri