• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

முரடனின் முல்லைகொடி

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
49
26
18
Tamilnadu

முல்லை - 1​


ஒப்பந்த காதல் கதை. வேறுபட்ட மனநிலையில் திருமணம் செய்து கொள்ளும் இருவர். அதிலும் தன் சுயநலத்துக்காக பெண்ணவளை மணக்கிறான்.


முல்லையை மலர வைப்பானா, கருகி சாம்பல் ஆக விடுவானா?


சிங்க முத்திரை பொறிக்கப்பட்ட கைப்பிடியும், பரமேஸ்வரன் கழுத்தில் இருக்கும் நாகத்தின் உருவம் நாற்காலியில் மீது அமர்ந்து இருக்க அப்படி பட்ட கம்பீர நாற்காலி காலியாக இருந்தது. அதன் அருகில் ஓர் அலங்கரிக்கப்பட்ட தட்டில் சிகப்பு துணி போட்டு அதன் மீது இருந்தது ஒரு கண்ணாடி பெட்டி அதற்குள் நான் இருக்கேன் டா என்பது போல் ஜொலித்துக் கொண்டு தவித்தது தண்டை. முழுவதும் தங்கத்தினால் செய்ய பட்ட முத்துக்கள் பதிக்க பட்ட இரண்டரை கிலோ எடை கொண்ட காப்பு. இரு பக்கமும் சிங்க முகம் பொறிக்கப்பட்ட காப்பை நாகம் சுற்றி இருக்கும் வடிவமைப்பில் அழுத்தமாக இருந்தது.


ஏன் இவ்வளவு மதிப்பு மிக்க காப்பும், நாற்காலியும் தனியாக உள்ளது?

அதன் பின்னணி என்ன?

இதற்கு சொந்தமானவர்கள் யார்?

ஆனால் அதை சுற்றி பெரும் கூட்டமும் ஊரின் முக்கியஸ்தர்கள் அனைவரும் இருந்தனர் வெள்ளை வேட்டி சட்டையில்.

கோவில் வளாகத்தின் வெளியே இருந்த ஒரு ஊரையே தாங்க கூடிய அரசமரத்தின் அடியில் தான் இந்த கூட்டம்.



கூட்டத்தில் இருந்த அனைவரின் கண்களும் நாற்காலி மீதும், தண்டை மீதும். தனக்கு சொந்தமாக வேண்டும் என்ற வெறி, எனக்கு தான் இந்த மரியாதையும், பதவியும் என்ற பேராசை, இது உரியவருக்கு போக வேண்டும் என்ற தவிப்பு, ஆண்டவா நல்ல கைக்கு கொண்டு சேருப்பா, என்ற வேண்டுதல் இப்படி மாறி, மாறி பல கண்கள் பல விதங்களை வெளிப்படுத்தினர். ஆனால் அதிக மக்களின் பேராசை அதை தான் அடைய வேண்டும் என்பது தான். “என்ன ஊரே ஒன்னு கூடியாச்சு எதுவுமே பேசாமல் இருக்கீங்க? எதாவது பேசுங்க அதுக்கு தானே கூடி இருக்கோம் நம்ப.” ஒருவரின் குரல் சத்தமாக கேட்டது.


அப்போது ஒருவர் கம்பீரமாக அந்த சபைக்குள் நுழைய மற்ற அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தி வணங்கி நின்றனர். அவ்வளவு மரியாதை கொண்ட கந்தப்பன் கூட அந்த நாற்காலியில் அமராமல் தனி நாற்காலியில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து வந்த அவர் மகன் ராஜேந்திரன் தந்தைக்கு பின்னால் நின்று கொண்டவன் கண்களும் அங்கு இருந்த நாற்காலி, காப்பு மீது தான் இருந்தது.


அங்கு மற்றொரு நபரும் ஊரில் கந்தப்பனுக்கு நிகரான மரியாதை கொண்ட முகில்வாணன் வந்து தன்னுடைய இடத்தில் அமர்ந்தான். “கந்தா நீ தான் இனி சொல்லணும், இந்த நாற்காலிக்கு சொந்தமான வாரிசு இல்ல, இருபத்தி ஆறு வருஷமா நாற்காலி, காப்பு இரண்டுமே சும்மா இருக்கு. உங்க அப்பா செத்த பிறகு இப்படியே இருக்கு. உங்க அப்பாக்கு அடுத்து உன் அண்ணனுக்கு தான் சேரனும். அவன் ஊரை விட்டு ஓடி போனதால் அவனுக்கு அப்பறம் இருக்க உனக்கு சேராதுன்னு உங்க அப்பாவே சொல்லிட்டாரு. இந்த வருஷத்துகுள்ள இந்த காப்பு அதுக்கு சொந்தமான கைக்கு ஏறியே ஆகனும்னு கோவில்ல குறி சொல்லிட்டாங்க. யாருக்கு சொந்தம் இந்த காப்பு உன் புள்ளைக்கு சொந்தமா?”


“அது எப்படி அவர் புள்ளைக்கு சொந்தம் ஆகும்? அவருக்கே சொந்தம் இல்ல இதுல அவர் புள்ளைக்கு சொந்தமாம்.” என ஒருவன் குரல் கொடுக்க ராஜேந்திரன் முறுக்கிக் கொண்டு நின்றான் தந்தைக்கு பின்னால்.


“ஊருக்குள்ள இந்த காப்பை போட தகுதியான ஆம்பளை யாருன்னு முடிவு பண்ணி அவுங்க கைல போடுங்க இல்லன்னா இந்த காப்புக்கு சொந்தக்காரன் எங்க இருக்கான்னு கண்டு பிடிங்க.” என்றனர் வாலிபர் கூட்டம்.

கந்தப்பன் அமைதியாக இருப்பதை கண்ட ஊர் முக்கியஸ்தர் ஒருவர், "ஆண்டாண்டு காலமா இந்த காப்பு தீபாஞ்சத்தை வாழ தான் வச்சி இருக்கு, யாரையும் அழிச்சதும் இல்ல, நியாயம் மாறி போனதும் இல்ல, இப்ப இந்த காப்பு ஊரை அழிக்க தயாரா இருக்கு, அப்படின்னா இந்த காப்பு உக்கிரமா இருக்கு அதுக்கு சொந்தமான கையை தேடுது, வரவன் போறவன் எல்லாம் போட அது என்ன பொண்ணுங்க போடுற வளையலா? ஈஸ்வரன் காப்பு, அந்த கடவுள் உருவாக்கியது, அவர் ஆசிர்வாதம் கிடைத்த ஆளுக்கு தான் இது போகும். இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்குள்ள இந்த காப்புக்கு சொந்தக்காரன் யாருன்னு கண்டு பிடிக்கணும், அப்படி இல்லன்னா இதை ஈஸ்வரன் காலடில போடணும், இருபத்தி ஆறு வருஷமா பூட்டி இருக்க கோவிலை திறக்க வேண்டியது தான்." என்றார் கந்தனை பார்த்தபடி.

கந்தன் அந்த பெரியவரை நிதானமாக பார்த்தவர்.. “நாளைக்கு என் மகன் கல்யாணம் அது முடிந்ததும் என் அண்ணன் எங்க இருக்கான்னு தேடுறேன், தேடி கொண்டு வரேன். என் அண்ணன் பண்ணுன பாவத்துக்கு என் அண்ணனே பரிகாரம் பண்ணுவான் இது சத்தியம்.” என்றார் அனைவர் முன்பும். அனைவரும் நம்பிக்கை இல்லாமல் கிளம்பினர்.

அங்கு பூட்டப்பட்டிருந்த சிவன் கோவில் முன்பு மூடிய கதவை பார்த்தபடி நின்று இருந்தாள் முல்லைகொடி. “ஈஸ்வரா தப்பான கைக்கோ, பேராசை பிடிச்ச கைக்கோ அந்த காப்பு போயிட கூடாது.

எங்க மாமா கைக்கு தான் போகனும், அப்படிச் இல்லன்னா அவர் பிள்ளை இருந்தா அவர் கைக்கு போகனும் நீங்க தான் எல்லாத்தையும் நடத்தி வைக்கணும்.” என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டவள் வில்வ இலைகளை மூடிய வாசல் முன்பு வைத்து விட்டு திரும்ப சாந்தமான முகத்துடன் நின்று இருந்தான் கம்பன்.

“என்ன முல்லை வேண்டுதல் பலமா?”

“அண்ணா எனக்கு என்ன வேண்டுதல் இருக்க போகுது, காப்பு நல்லவங்க கைக்கு, உரியவங்க கைக்கு போகனும்னு வேண்டிகிட்டேன் அண்ணா. நான் போய் அம்மனுக்கு விளக்கு போட்டுட்டு வரேன்.” என்றவள் தன்னுடைய வெடிப்பு படிந்த கால்களை சுடு தரையில் வைத்து தடுமாறாமல் நடந்து சென்றாள். செல்லும் முல்லைகொடியை வலி ஒரு கண்ணிலும், வெறி ஒரு கண்ணிலும் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் கம்பன்.

‘முல்லை நீ வேண்டிகிட்டது நடக்கும் முல்லை அந்த காப்பு அதுக்கு சொந்தமான கைக்கு தான் போகும், அப்போ உன் வாழ்க்கையும் மாறும்

ஆனா அது?’ யோசிக்கும் போதே கம்பனின் ஃபோன் ஒலித்தது திரையில் தெரிந்த நம்பரை கண்டு எடுத்து காதில் வைத்தவன், “எல்லாமே நமக்கு சாதகமா நடக்குது. நீ தீபாஞ்சம் குள்ள வரவேண்டிய நேரம் வந்துடுச்சி. தயாரா இரு உனக்காக முல்லை வேண்டிகிட்டு போறா!” என்றவன் அடுத்த வார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்தான்.


முல்லை தனக்கு விருப்பமான மூக்குத்தி அம்மனுக்கு விளக்கு போட்டவள் அம்மன் முகத்தையே அவர் காலடியில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள். வேண்டுதல் எதுவும் கிடையாது, வேண்டிக் கொள்ளவும் எதுவுமில்லை கிடையாது, அப்படியே வேண்டினாலும் தன் வாழ்வு மாற போவதில்லை என்பது முல்லை உணர்ந்து இருந்ததால் வாரம் தவறாமல் விளக்கு போட்டு அம்மனுக்கு பூ வைத்து அவர் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சென்று விடுவார். வீட்டில் வேலை தலைக்கு மேல் கிடக்கவும்

தன்னுடைய முந்தானையை சொருகிக் கொண்டு அவசரம் அவசரமாக செருப்பில்லாமல் நடக்க துவங்கினாள் வீட்டை நோக்கி.


அவள் வீட்டிற்குள் நுழைய அவளின் தங்கை கார்த்திகா திண்ணையில் அமர்ந்து அவளின் வருங்கால கணவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.

முல்லை வந்ததும் இவளா? என்று முகம் சுழித்து எழுந்து செல்லும் தங்கையை கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் நுழைய, “மகாராணிக்கு இப்போ தான் நேரம் கிடைச்சுதா வீட்டுக்கு வர, நீ சாமி கும்பிட்டு தான் இந்த குடும்பம் வாழுதா என்ன, வீட்டுல எவளோ வேலை இருக்கு அதை செய்யாம சுத்திட்டு வர நாளைக்கு தங்கச்சி கல்யாணம் கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.” என முடிந்த வரை பெற்ற மகளை திட்டி தீர்த்தாள் உலகரசி.


“போய் பின்னாடி கிடக்கிற பாத்திரத்தை எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வை, மச மசன்னு நிக்காத நம்ப வீட்டு வேலையை நம்ப தான் செய்யனும் முல்லை போ!” என்று விரட்டினார்.


முல்லை சென்று பார்க்க மலை போல் குவிந்து கிடந்தது. முல்லை பெரிதாக எண்ணாமல் கழுவி அடுக்கி வைத்தவள் முழு இடத்தையும் கூட்டி பெருக்கி குப்பைகளை அள்ளிக் கொட்டினாள். கொட்டி விட்டு திரும்ப அவள் முன்பு தண்ணீர் சொம்புடன் நின்று இருந்தான் கம்பன்.

“நன்றி அண்ணா.” என்றவள் முழு சொம்பு நீரையும் மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தாள்.

ராஜேந்திரன் தன் அப்பா முன்பு நின்று இருந்தான். “அப்பா உங்க அண்ணன் கிடைச்சுடுவாரா?”

“உன் பெரியப்பா கண்டிப்பா கிடைப்பாரு ராஜேந்திரன். கவலை படாமல் போ. போ போய் நல்லா தூங்கு நாளைக்கு கல்யாணம், கல்யாண மாப்பிள்ளை அழகா இருக்கணும் போ.” தந்தை வார்த்தையை மீறாமல் சென்று விட்டான் ராஜேந்திரன். கந்தன் மகனின் திருமண வேலைகளை கவனிக்க துவங்கினார்.

அதிகாலை நான்கு மணிக்கு முல்லையை அடித்து எழுப்பினார் உலகரசி. “முல்லை நீ வயலுக்கு போ இங்க இருக்க வேண்டாம் புரியுதா?” முல்லை சரி என தலை அசைத்தவள் தனக்கு மாற்றிக் கொள்ள ஒரு புடவை, சட்டை எடுத்துக் கொண்டு அனைவரும் எழும் முன்பே அங்கிருந்து சென்றாள்.

ராஜேந்திரன், கார்த்திகா திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றது என்ன தான் திருமணம் நன்றாக நடந்தாலும் ஊர் மக்கள் குறையாக தான் பார்த்தனர். “என்ன முகில்வாணன் உன்னுடைய பெரிய பொண்ணு இருக்கும் போது அவளுடைய தம்பிக்கு கல்யாணம் பண்ணுன, அடுத்து அவள் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்ட எப்போ முல்லைக்கு கல்யாணம் பண்ண போற?” இதுவே அனைவரின் கேள்வியாக இருந்தது. வழக்கம் போல அந்த கேள்விக்கு யாருமே பதில் கூறாமல் போய் சாப்பிடுங்க என்பதோடு முடித்துக் கொண்டனர். சொந்த தங்கை திருமணம் ஆனால் அக்காவோ வேகாத வெயிலில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு உணவோடு உள்ளே வந்தான் கம்பன், “முல்லை வா வந்து சாப்பிடு.” என்று அழைக்க மறுக்காமல் வந்து அமர்ந்து சாப்பிட்டாள். தங்கை திருமண சாப்பாடு இல்லை வீட்டு சாப்பாடு இவளுக்காக ஒருவர் சமைத்து கொடுத்து விடுவார். கம்பன் முல்லையைப் வேதனையோடு பார்த்தான் இருபத்தி ஏழு வயதாகும் இவளுக்கு திருமணம் செய்யாமல் இவளுக்கு பின்னால் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் என்ன கொடுமை கடவுளே இது.


“அண்ணா நீங்க கிளம்புங்க.” என்று அவனை அனுப்பி வைத்தவள் மீண்டும் தன்னை மதிக்காத குடும்பத்துக்கு உழைக்க துவங்கினாள். திருமணம் முடிந்து கார்த்திகா ராஜேந்திரன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் முகம் முழுவதும் பூரிப்புடன், தான் ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைத்த சந்தோஷமும், இனி இந்த ஊரில் மதிக்கப்படும் ஆளாகவும் மாறும் பேரின்பமும் அவள் முகத்தில் தாண்டவம் ஆடியது.

தன் கணவன் கைக்கு தான் எப்படியும் அந்த தண்டை வரும் அப்படிச் வந்து விட்டாள் தனக்கு கிடைக்கும் மரியாதையும், செல்வாக்கும் நினைத்து இப்போதே கனவு காண துவங்கினாள் கார்த்திகா.

அவள் பார்வைக்குள் சிக்கினார் நனியிதழ். அவளின் மாமியார் கந்தனின் மனைவி பேரழகி இன்னமும் அவரின் அழகு குறையாமல் இடுப்பில் தொங்கும் கொத்து சாவி ஆட மற்றவர்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார்.


அவரை எதிர்த்து பேச யாருக்கும் உரிமை கிடையாது இத்தனைக்கும் கந்தன் கைகளில் காப்பு இல்லாமலேயே அவருக்கு ஊரே மதிப்பு கொடுக்கின்றனர். அவர் மனைவிக்கு மரியாதை கிடைக்கிறது. தண்டை என் கணவன் கைக்கு வந்ததும் அந்த கொத்து சாவி, அதிகாரம் அனைத்தும் எனக்கு தான் என்று நினைத்துக் கொண்டவள் தன் கணவன் கையை பிடித்துக் கொண்டாள்.

ராஜேந்திரன் காத்திகாவை கண்டு சிரித்தவன், “கார்த்திகா நீ ரூம்க்கு போ நான் போய் எல்லா வேலையும் பாக்குறேன்.”

“அப்போ என் கூட இருக்க மாட்டியா நீ?” என்று ஏக்கமாக கேட்டவளை கண்டு சிரித்தவன், “ராத்திரி முழுக்க உன் கூட தாண்டி இருக்க போறேன் இப்போவே உன் கூட இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சு போய்டும் விடு நம்ம நல்லதுக்கு தான் சொல்லுறேன்.”

கார்த்திகா புரிந்து கொண்டவள் மாடி ஏறி அவர்கள் அறைக்கு சென்றாள். நனி மருமகள் மேலே செல்வதை நின்று கவனித்தவர் ஈஸ்வரா என்று முனகியபடி வந்தவர்களை கவனிக்க சென்றார்.

இருவருக்குமான முதல் இரவு கார்த்திகா வீட்டில் தயார் செய்யப்பட்டது அது தான் அவர்களின் சம்பிரதாயம். ”உலகரசி ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போ.” என்று கந்தன் கூற சரி அண்ணா என்று தலை அசைத்து இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். அருகில் தான் வீடு இவர்கள் உள்ளே நுழைய இவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டு இருந்தாள் முல்லை.


“அம்மா அங்க பாரு அவளை!“ என கார்த்திகா முகம் சுழிக்க அழுக்கி என்று ராஜேந்திரன் முணு முணுத்தான்.


“நீங்க உள்ள போங்க கார்த்திகா.” என்று மகளை அனுப்பி வைத்தவர், “முல்லை நில்லு நீ வீட்டுக்குள்ள போகாத, நீ தோட்டத்துக்கு போய் மோட்டார் கொட்டகையில் படுத்துக்கோ, நாளைக்கு நான் சொல்லி அனுப்பும் போது வீட்டுக்கு வா.” என்றார் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்.

முரடன் வருவான்.........
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
சொந்தப் பொண்ணுக்கே இந்த கதியா அந்த வீட்டுல? 🙄
 

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
வெரி நைஸ்