நான் கட்டி இருக்க புடவை அழுக்கா இருக்கு வேற புடவை மட்டும் எடுத்து குடுங்க நான் போறேன்.” என்றவள் ஒதுங்கி நின்று கொண்டாள் தந்தை செல்ல வழி விட்டு. உலகரசி புடவை கொண்டு வந்து கொடுத்ததும் அந்த கும்மிருட்டில் கொஞ்சமும் பயம் இல்லாமல் வெறும் காலில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றவள் மோட்டார் போட்டு குளித்து விட்டு அந்த கொட்டகையில் படுத்துக் கொண்டாள்.
அவள் கண்ணயரும் நேரம் “முல்லை!” என்று குரல் கேட்டது. குரலிலேயே கண்டு கொண்டாள் அது கம்பன் என்று. “என்ன டா அண்ணனை காணோமேன்னு நினைச்சேன் வந்துட்டீங்க.” என்றபடி காலில் கிடந்த காப்பை தட்டிய படி எழுந்து அமர்ந்தாள்.
“சாப்பாடு முல்லை.” என்று கம்பன் நீட்டி விட்டு கட்டில் கால் அருகில் தரையில் அமர்ந்து கொண்டான்.
“நீங்க சாப்பிட்டீங்களா?”
“நான் சாப்பிட்டேன் முல்லை இல்லன்னா நனி விட மாட்டாங்க, நீ சாப்பிடு.” தலை அசைத்து உண்டு முடித்தவள் கையை தலைக்கு குடுத்து தூங்கி போக அவளின் காலடியில் துண்டு விரித்து படுத்துக் கொண்டான் கம்பன்.
கண்டாங்கி புடவையை தவிர்த்து வேறு கட்டி பழக்கம் இல்லை, கண்ணாடி வளையல், கொண்டை, நெற்றியில் சிறு பொட்டு காலில் கொலுசு இல்லாமல் காப்பு இதுவே முல்லை கொடி அடையாளம்.
படிப்பறிவு என்பதே கிடையாது, இந்த கிராமத்தை தாண்டியது கிடையாது. வெறும் விவசாயம், குடும்பம், தெய்வம் இது மட்டுமே இவள் உலகம். தெய்வ நம்பிக்கை அதிகமாக கொண்டவள் அதிலும் அம்மன் என்றால் அலாதி விருப்பம் முல்லைக்கு. பெயரில் இருக்கும் முல்லை மணம் அவள் வாழ்வில் கிடையாது. செழித்து வளர்ந்த முல்லை கொடி மலராமல் போனது போல தான் இவளின் வாழ்க்கையும். இந்த ஊரில் அடி எடுத்து வைக்க காத்திருப்பவனால் இவள் மலர்வாளா? இல்லை காய்ந்து சருகாகி போவாளா? எல்லாம் ஆண்டவன் ஆட்டமே.
“ராஜேந்திரா கண்டிப்பா அந்த காப்பு உன் கைக்கு வரும் தானே?”
“கண்டிப்பா வரும் கார்த்திகா. என் பெரியப்பன் ஓடி போய் முப்பது வருஷத்துக்கு மேல ஆகுது உயிரோடு இருக்கானா? செத்துட்டனான்னு தெரியாது, இருந்தாலும் இந்த ஊருகுள்ள அவன் வர முடியாதது.” என்று கண்கள் சிவக்க கூறினான்.
அவனின் உறுதி கண்டவள் கணவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “ராஜி நீ அந்த தண்டையை கையில் மாட்டிகிட்டு, அந்த நாற்காலில கம்பீரமாக அமரனும் அதை நான் பாக்கணும். உன் பக்கத்துல நானும் நிக்கணும் எனக்கு பெருசா எதுவும் ஆசை கிடையாது.” மனைவி அன்பில் கரைந்து போனவன், “உன் ஆசை சீக்கிரமே நடக்கும் கார்த்திகா இன்னும் 25 நாள் தான் கெடு இருக்கு. என் அப்பாவே அந்த தண்டையை என் கைல போட்டு விடுவாரு நீ பாக்க தானே போற ரெடியா இரு டி என் பக்கத்துல நிக்க.” என்றவன் தன் புது மனைவியுடன் கட்டிலில் சாய்ந்தான் உறவு கொள்ள.
இதோ, அதோ என நாட்கள் வேகமாக ஓடியது.கார்த்திகா கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் பொறுப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள். வீட்டிற்கு வரும் பணம் கார்த்திகா கைக்கு தான் வரும், அதே போல் அவள் கையில் இருந்து தான் வெளியே போகும். ரொம்பவே அதிகாரமாக இருந்தவள் இடுப்புக்கு இன்னும் கொத்து சாவி வரவில்லை. அதுவும் கூடிய சீக்கிரம் வந்து விடும் தண்டை கணவன் கைக்கு கிடைத்ததும்.
கார்த்திகாவின் மற்றொரு ஆசையாக அந்த வீட்டில் நாகமூர்த்தி இறந்த பிறகு பூட்ட பட்ட அவர்கள் அறை மீது ஆசை வந்தது. அந்த அறையை தங்களின் அறையாக மாற்ற வேண்டும் என்று சமீப காலமாக திட்டம் தீட்டி கொண்டு இருந்தவள் தன் கணவன் காதிலும் போட்டு வைத்தாள்.
தண்டை கைக்கு வரட்டும் கார்த்திகா அதுவரைக்கும் அமைதியா இரு என மனைவிக்கு மாற்றம் கூறி இருக்கிறான் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் இன்னமும் தன் பெரியப்பா கிடைக்காத சந்தோஷத்தில் தண்டை தனக்கு கிடைத்த விடும் என்ற மமதையில் வயலில் வாய்க்காலின் மீது நடந்து கொண்டு இருந்தவன் அடி சறுக்கி நெல் விதைக்க தயாராக இருந்த சேற்றில் கால்லை விட்டு விட்டான். “ராஜு!” என்று தடுமாறி விழ போன கணவனை இழுத்து பிடித்தவள் “பார்த்து வா.” என்று கூற கடுப்பாக நிமிர்ந்தவன் கண்ணில் சிக்கினாள் முல்லை.
“ஏய் அழுக்கி இங்க வா.” என்று சத்தமாக அழைத்தான். முல்லை இருவரையும் கண்டவள் ராஜேந்திரன் அருகில் வந்ததும், “முல்லை என் புருஷன் செருப்பு சேத்துல மாட்டிகிச்சி அதை எடுத்துட்டு போய் வாய்க்கால்ல கழுவி எடுத்துட்டு வா.” என்று இரக்கமே இல்லாமல் கூறிய தங்கையை சலனமற்று பார்த்தவள் ராஜேந்திரன் செருப்பை எடுத்து சென்று கழுவி வர அவளின் தந்தை, கந்தன் இருவருமே பார்த்தனர் கூடவே நரம்புகள் புடைக்க நின்று இருந்த கம்பனும் கண்டான்.
சீக்கிரம் உனக்கு இதில் இருந்து விடுதலை கிடைக்கும் முல்லை என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் கந்தனுடன் நடக்க துவங்கினான்.
தனக்கு இது போன்ற அவமானம் புதிது இல்லையே என்பது போல் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை எடுத்து முகத்தில் தெளித்து இருந்த நீரை துடைத்தபடி சென்றாள்.
கந்தன் என்ன முடிவு செய்தானோ அவனே அறிவான். உலகரசி விடியற்காலையே கந்தன் வீட்டுக்கு கணவனுடன் வந்து விட்டாள். தன் மருமகன் தான் தண்டையை போட வேண்டும் என்ற முடிவோடு. “அண்ணா இன்னைக்கு தண்டையை ராஜேந்திரன் தான் போடணும் அண்ணா, விட்டு கொடுக்ககூடாது இது நம்ம குடும்பத்து உரிமை. அப்பா உன்னை தான் போட கூடாதுன்னு சொன்னாரு, உன் புள்ளைய இல்ல.
இன்னைக்கு இந்த தண்டையை விட்டுட்டா இத்தனை வருஷம் நம்ம குடும்பத்துக்கு கிடைச்ச முதல் மரியாதை, கௌரவம், பட்டம், பரியம், உரிமம், கோவில் நிர்வாகம், மரியாதை, நமக்கு கிடைக்கிற முக்கியத்துவம் எல்லாமே போய்டும். இது எல்லாத்தையும் தாண்டி உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்க ஊர்ல உன்னுடைய வார்த்தையே கேட்காமல் போய்டும் அண்ணா. இனி கோவில்ல நமக்கு கிடைக்கிற முதல் மரியாதை கூட கிடைக்காது.”
“எனக்கு தெரியும் உலகு. விட்டுட மாட்டேன், நீங்க எல்லாரும் தயாராகி கோவிலுக்கு வாங்க.” என்றார் கட்டளையாக.
அண்ணனை தேடாமல் அண்ணன் எப்படி கிடைப்பார். இவர்களின் திட்டமும், ஆசையும் பலிக்குமா இனி?
தனக்கு தான் தண்டை என்ற ஆசையில் ராஜேந்திரன் பட்டு வேட்டி சட்டையில் நகைகள் அணிந்து கிளம்பி நிற்க. அவனுக்கு குறைவு இல்லாமல் கணவன் நாற்காலியில் அமர்ந்ததும் அவன் அருகில் கம்பீரமாக நிற்க வேண்டும் என்ற ஆசையில் கார்த்திகா புடவையும், நகையும் ஜொலிக்க தயாராகி நின்று இருந்தாள்.
எப்படியும் தங்களின் கனவு நிறைவேறி விடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. அனைவரும் கிளம்ப கம்பன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த முல்லையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.
தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தவள் சேலை நனைந்து இருந்தது. “முல்லை நீ இப்படி ஓரமா நில்லு என்ன நடந்தாலும் வாயை திறக்க கூடாது இன்னைக்கு நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் தான் நீ கேக்கணும், செய்யனும் இந்த ஊர் நன்மைக்காகவும், உன்னுடைய நன்மைக்காகவும் முல்லை.” கம்பன் குரலில் அவசரமும், பதட்டமும், உறுதியும் கண்டவள், “அண்ணா என்னுடைய நல்லதை பத்தி யோசிக்கிறது நீங்களும், அவுங்களும் தான் அப்புறம் எப்படி உங்க பேச்சை மீறுவேன் இங்கேயே நிக்கிறேன் அண்ணா, நீங்க போங்க.” என்றவள் முந்தானையை கொண்டு தன் முகத்தில், கழுத்தில் இருந்த வியர்வையை துடைத்தாள்.
ஊர் முழுவதும் மீண்டும் கூடியது. முக்கியஸ்தர்கள், பெரியவர்கள், பொறுப்பில் இருப்பவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர் அதே அரசமரத்தடியில். கந்தன் குடும்பமும், முகில்வாணன் குடும்பமும் ஒன்றாக நின்று கொண்டிருக்க கோவில் பூசாரி நாற்காலி, தண்டை இரண்டையும் கொண்டு வந்து அதற்குரிய இடத்தில் வைத்தார். ராஜேந்திரன் கண்கள் மின்ன கண்டான் தண்டையை. அந்த தண்டை கைக்கு ஏறிய பிறகு தான் நாற்காலி தனக்கு கிடைக்கும் என்பதால் அமைதியாக தன்னுடைய ஆசையை, ஆவலை அடக்கிய படி நின்று கொண்டிருந்தான்.
நனி கோவில் உள்ளே நுழைந்தவள் ஆண்டவனிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டார். இறுதியில் கடவுளை வெறித்த பார்வை பார்த்தவள் அமைதியாக கந்தன் அருகில் நின்று கொண்டாள். “என்ன முடிவு பண்ணி இருக்காங்க பெரிய குடும்பம், அவுங்க அண்ணனை கண்டு பிடிச்சாரா இல்லையா?” என்று இளவட்டங்கள் கேள்வி எழுப்பி கத்த, “சும்மா இருங்க டா இளம் ரத்தம்னு ஓவரா துள்ள கூடாது. அவங்க குடும்பத்துக்கு மரியாதை இருக்கு அதை யாரும் மீற கூடாது.”
“அவுங்க குடும்பத்து மரியாதையே தண்டை தானே, தண்டை கைல இருந்தா நாங்க மதிக்க போறோம் இல்லன்னா எதிர்பார்க்க கூடாது.” என்று கூட்டத்தில் இருந்து குரல் எழும்ப கந்தன் விழிகள் சிவக்க அங்கு கண்ணாடிக்குள் இருக்கும் தண்டையை கண்டார்.
“கந்தா என்ன முடிவு பண்ணி இருக்க ஊர் மக்கள் முன்னாடி சத்தமா சொல்லு. நமக்கு நேரம் இல்ல நாளைக்கு தான் கடைசி நாள் இன்னைக்கே எதாவது ஒரு முடிவு எடுத்து ஆகனும்.”
கந்தன் நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவர், “நான் என்ன சொல்ல, என் அண்ணனை தேடி பார்த்தேன் கிடைக்கவே இல்லை, என் அண்ணனை பத்தி ஒரு துறுப்புச்சீட்டு கூட கிடைக்கல. என் அண்ணன் போடாத இந்த தண்டையை நான் போட கூடாதுன்னு தான் இத்தனை வருஷம் அமைதியா இருந்தேன். அதுக்காக இந்த தண்டையை எங்க குடும்பம் விட்டு கொடுக்காது. அதை நல்லா புரிஞ்சிக்கோங்க. இது காலம் காலமா எங்க குடும்பத்துக்கு சொந்தமானது. அதனால இது என் மகன் ராஜேந்திரன் கைல ஏறுவது தான் சரி.” என்றார் கட்டளையாக.
சட்டென்று எட்டுதிக்கும் எதிர்ப்பு கிளம்பியது. “எங்களால ஏத்துக்க முடியாது இந்த முடிவை. இந்த தண்டை உங்களுக்கே சொந்தம் இல்லன்னு தானே உங்க அப்பா சொன்னாரு அப்படி இருக்கும் போது இதை எப்படி உன் மகன் போட முடியும்?” என்று இளவட்டங்கள் கத்த துவங்க இடமே பரபரப்பானது. கந்தன் வார்த்தை அங்கு அந்த கூட்டத்தில் எடுபடவில்லை.
ஊரின் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கல் மேடை மீது ஏறி நின்று, “இளம் பசங்க எல்லாம் சத்தத்தை நிறுத்துங்க. இங்க கத்தி கூச்சல் போடுற மாதிரி இருந்தா பஞ்சாயத்தை விட்டு வெளிய போங்க.” என்று அவர் குரல் கொடுக்கவும் அனைவரும் அமைதியாகி வாய்க்குள் முனகியபடி நின்று இருந்தனர்.
அவர் தான் இந்த ஊரின் மூத்த குடிமகன். “கந்தா உன்னுடைய வார்த்தை சரி இல்ல. இந்த தண்டை உன் உடம்புல பட கூடாதுன்னு தானே உன் அப்பா சொன்னாரு. அப்படி இருக்கும் போது உன்னுடைய இரத்தம் ஓடுற உன் மகன் உடம்புல எப்படி இந்த தண்டை பட முடியும்.
இந்த தண்டைக்கு தனி மரியாதை இருக்கு அதை அன்னைக்கே சொல்லி தான் பஞ்சாயத்தை கலைத்து விட்டேன் மறந்து போச்சா?”
“ஐயா பெரியவரே! என்ன எங்க அப்பாவையே எதிர்த்து பேசுறீங்க நீங்க அப்பா வார்த்தைக்கு கட்டுபடனும் மறந்து போச்சா?” என்று எகிறிக் கொண்டு நின்றான் ராஜேந்திரன்.
“நாங்க எதையும் மறக்கல நீயும் உன் அப்பனும்தான் எல்லாத்தையும் மறந்துட்டீங்க. உன் அப்பன் வார்த்தைக்கு கட்டு படுறோம்னு இந்த ஊரும் ஊரை சேர்ந்தவங்களும் வாக்கு குடுக்கல. உங்க அப்பனுக்கு, உங்க குடும்பத்துக்கு கிடைக்கிற மரியாதை உன் தாத்தன் என் நண்பன் நாகமூர்த்திக்கு கிடைச்ச மரியாதை அவ்வளவு தான். மத்தபடி உன் அப்பா வாக்குக்கு இங்க எந்த மரியாதையும் கிடையாது. தண்டை யார் கைள இருக்கோ அவுங்களுக்கு, அவுங்க வார்த்தைக்கு தான் இந்த ஊர் கட்டுப்படும் ராஜேந்திரன்.”
“ஊர் மக்கள் சார்பாக சொல்லுறேன் இந்த தண்டை உன் கைக்கு வராது. இதுக்கு உரிமையான ஆளை நீங்க கண்டுபிடிக்க விரும்பல நான் கண்டுபிடிச்சிட்டேன்.” என்று சத்தமாக கூறினார் பெரியவர். அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, கந்தன் குடும்பம் பேரதிர்ச்சியாக பார்த்தது. நடக்கும் அனைத்தையும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முல்லை அருகில் நிழலாடவும் திரும்பினாள் அப்போது ஒருவன் கால் தடுக்கி கீழே விழ பார்க்க அவன் கையை இறுக்கமாக பிடித்தவள், “பார்த்துங்க, நிதானமா கீழ பார்த்து நடங்க கல்லு கிடக்கு.” என்றவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“நாகமூர்த்தி மூத்த மகன் இப்போ உயிரோடு இல்ல.” என்றார் அவர். ராஜேந்திரன் ரகசியமாக நக்கல் சிரிப்பு சிரிக்க, கடவுளே என்றபடி ஊர் மக்கள் பார்த்துக் கொண்டு நின்றனர். “ஆனால் அவனுக்கு ஒரு மகன் இருக்கான்.” என்று கை நீட்ட ராஜேந்திரன் சிரிப்பு அழிந்து போனது.

பெரியவர் கை நீட்டிய பக்கம் அனைவரும் திரும்ப முல்லை கையை பிடித்துக் கொண்டு நின்று இருந்தான் ஒருவன்.
Last edited by a moderator: