• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 3

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
23
17
3
Tamilnadu
திரும்பியவர்கள் அனைவருமே அதிர்ந்து போனார்கள் இவனா, இவனா என்று.

தொள தொளவென நிறம் மங்கிய சட்டையில், தாடி வளர்த்து முடி கூட வெட்டாமல் ஒரு நைந்து போன செருப்பில் அந்த காலத்து ஆட்கள் அணிவது போல் ஒரு பேண்ட் அணிந்து கொண்டு பாவ பட்ட ஜீவன் போல நின்றுக் கொண்டு இருந்தவனை கண்டவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இவன் கையில் இந்த தண்டை ஏற போகிறதா? இந்த நாற்காலியில் இவன் அமர்ந்து ஆள போகிறானா. இவ்வளவு பாரங்களை தாங்க முடியுமா, முதலில் தண்டையை அவனால் சுமக்க முடியுமா?

இவனால் இங்கு இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர்.


“ஐயா இவர் தான்னு நல்லா தெரியுமா?” என்றான் சுருதி இறங்கிய குரலில் ஒருவன்.


“ஆமாம் யாருக்காவது சந்தேகம் இருந்தா அவனுடைய கையை பாருங்க.” என்றவர் அங்கு நின்று இருந்தவனை அருகில் அழைத்து கையை உயர்த்தி காட்டினார். அவன் இடது கையில் தண்டையை தாங்கும் கையில் லிங்க மச்சம் இருந்தது. ஆண்டாண்டு காலமாக தண்டை அணிய கூடிய நபருக்கு இந்த மச்சம் இருக்கும். அதுவும் ஈஸ்வரன் குடும்பத்தில் பிறப்பவர்களுக்கு மட்டுமே இருக்கும்.

பெரியவர் கூறியதாலே நம்பிக்கையோடு இருந்த மக்களுக்கு அந்த மச்சத்தை கண்டதும் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் போய் விட்டது. ஆனால் இவன் கையில் தண்டை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மறுக்கவும் முடியாமல் நின்று இருக்க.

“பெரியவரே நாளைக்கு தண்டையை என் அண்ணன் மகன் கைல போடணும், ஆனா அதுக்கு அவனுக்கு கல்யாணம் ஆகி இருக்கணும் மறந்துட்டீங்களா?” ஆமாம் அது தான் நியதி தண்டை ஏற்கும் ஆண்மகன் தன் மனைவியுடன் தான் ஏற்க்க வேண்டும் அதையும் அவள் தான் அணிவிக்க வேண்டும்.

அனைவரும் புதியவனை கேள்வியாக பார்க்க, பெரியவரே தொடர்ந்தார், “இன்னும் அவனுக்கு கல்யாணம் ஆகல தான் இப்போவே நம்ம ஊர்ல ஒரு பொண்ணை பார்த்து கட்டி வச்சிடுவோம் என்ன நான் சொல்லுறது.”

அதற்குள் அனைவரும் தங்களின் பெண்களை மறைக்க துவங்கினர்.

தண்டைக்கு விரோதிகள் அதிகம், அதிலும் இந்த தண்டையை அணிந்து கொண்டு இவன் உயிரோடு இல்லை என்றால் எங்கள் மகளின் நிலை என்ன, எதிரிகளை எதிர்த்து ஒரு நிமிடம் கூட இவனால் நிற்க முடியாதது என்று அனைவரும் அவனை ஒதுக்கி வைத்தனர் யாருமே பெண் தர முன் வரவில்லை பெண்களை அவன் கண்ணில் கூட காட்டவில்லை. அவனோ அதை எதையும் கண்டு கொள்ளாமல் நிற்க, முல்லை தான் அவனை நினைத்து பரிதாபபட்டாள் அவளும் இதே போல் ஒதுக்கத்தையும், அவமானத்தையும் கண்டவள் தானே.

அதற்குள் கம்பன் புதியவன் அருகில் வந்தவன், “நீங்க யாருமே பொண்ணு தரலனா பிற்காலத்தில் ரொம்ப வருத்தப்படுவீங்க. இங்க இப்போவே இவன் கல்யாணம் நடக்கும்.” என்று பெரியவர் குரல் கொடுக்க. கம்பன் முல்லை அருகில் சென்றவன் முல்லை கை பிடித்து அழைத்து வந்து புதியவன் முன்பு நிற்க வைத்தான். முல்லைக்கு ஒன்றுமே புரியவில்லை. கம்பன் முகத்தை கேள்வியாக பார்க்க, “அமைதியா இரு முல்லை.” என்று அப்போதும் கூறினான்.


“முல்லையை கல்யாணம் பண்ணிக்க யாருமே முன் வரல, இவனை கல்யாணம் பண்ணிக்கவும் யாருமே முன் வரல, அதனால அந்த சிவனை சாட்சியா வச்சி இவுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.” என்று சத்தமாக கூறிய பெரியவரை யாராலும் மறுக்க முடியவில்லை.


“இல்ல இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்.” என உலகரசி சத்தம் போட, பெரியவர் முல்லையைப் பார்த்து, “உனக்கு இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்றார். அவளோ கம்பனை பார்க்க, “சம்மதம் சொல்லு.” என்று கண்களால் கூறினான்.

உலகு “வேணாம்னு சொல்லு டி!” என்று காட்டு கத்தல் கத்திக் கொண்டு இருக்க. ஊர் நல்லதுக்காக மனதில் யோசித்தவள், “சம்மதம் அண்ணா!” என்றதும் பெரியவர் இருவரையும் இழுத்துக் கொண்டு மூடிய சிவன் கோவில் முன்பு நின்றார். கம்பன் தாலி கொண்டு வந்து நீட்ட. வாங்கி கட்டு தம்பி இன்னும் இரண்டு நொடி தான் நல்ல நேரம் இருக்கு நல்ல நேரம் முடியுறதுக்குள்ள முல்லை கழுத்துல தாலி கட்டுனா மட்டும் தான் ஜென்மம் ஜென்மமா இந்த பந்தம் தொடரும் என்றதும் வேகமாக தாலியை வாங்கி முல்லை கழுத்தில் கட்டியவன் அவள் நெற்றியில் குங்குமமும் வைத்து விட்டு நிமிர பெரியவர் கூறிய நேரம் முடிந்தது. இருவருமே அறியவில்லை தங்கள் பந்ததின் பிணைப்பை.

கந்தன், முகில் குடும்பத்துக்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது. இருவர் மேலும் ஒரு கை கூட்டத்தின் நடுவில் நின்றபடி அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தது.

ஊர் மக்களுக்கு இவன் போய் இந்த தண்டைக்கு உரிமை ஆனவன் என்பதை ஏற்க முடியாமல் களைந்து சென்றனர் அவனை பற்றியும் அவன் குணத்தை பற்றியும் அறியாமல்.

பெரியவர் கந்தன் அருகில் வந்தவர், “இவன் தான் உன் அண்ணன் பிள்ளை வீட்டுக்கு அழைச்சிட்டு போ.” என்றதும் கந்தன் வேக வேகமாக முன்னால் நடந்து சென்று விட முல்லையை அவள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் முறைத்து விட்டு கந்தனை தொடர்ந்து சென்றனர்.

முல்லை அவள் கணவன் மட்டும் தனித்து நின்றனர். “உனக்கு வீடு தெரியுமா?” என்று முதல் முறை வாயை திறந்து பேசினான் அவன்.

அவன் உருவத்துக்கும், அவன் குரலில் இருந்த கம்பீரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தோன்றினாலும், “தெரியும் வாங்க.” என்றவள் முன்னால் நடக்க அவளை பின் தொடர்ந்து நடந்தான் அவனின் கணவன்.

முல்லை ஒன்றை கவனிக்க தவறினாள் வாழ்வில் முதல் முறை ஒருவருக்கு முன்னால் அடி எடுத்து வைத்து நடக்கிறாள் அவளை பின் தொடரவும் ஒருவன். தூரத்தில் இருந்து இருவரையும் கண்ட கம்பன் மனதுக்குள் சிரித்துக் கொண்டு அந்த காட்சியை வீடியோவாக எடுத்து ஒரு குரூப்பில் அனுப்பி வைத்தான். யாரையும் பின் தொடர்ந்து போறதோ, அடுத்தவங்க பின்னால இருக்கிறதோ பிடிக்காதவன் இன்று அவன் மனைவி பின்னால் அவனே அறியாமல் செல்கிறான்.

பார்ப்பதற்கே அற்புதமான காட்சி அதனால் தான் கம்பன் தன் போனில் பதிவு செய்து கொண்டான். முல்லை வீட்டின் முன்பு வந்து நின்றவள் அங்கு பூட்ட பட்டிருந்த இரும்பு கேட்டை காட்டி, “இது தாங்க வீடு.” என்றாள் மெலிதான குரலில்.

“ஓ........” என இழுவையாக கூறியவன், “வா உள்ள போகலாம், அப்புறம் எதுக்கு தயங்குற?” மண்ணை பார்த்த படி கருவிழிகளை உருட்டியவள், “இந்த வீட்டுக்குள்ள நான் வந்தது இல்ல என்னை வர கூடாதுன்னு உங்க சித்தப்பா சொல்லி இருக்காங்க.” என்றாள் மென்று விழுங்கி.

முல்லையைப் கூர்ந்து பார்த்தவன், “அதை சொல்ல அவருக்கே உரிமை இல்ல வா.” என்று கேட்டை காலால் உதைத்து திறந்தவன் போ என சைகை செய்ய மறுக்க முடியாமல் முதல் முறை உள்ளே அடி எடுத்து வைத்தாள். அவனோ அனைத்தையும் கூர்ந்து பார்த்த படி ஒவ்வொரு அடியாக நிதானமாக உள்ளே வைத்து நடந்தான். நனி உள்ளே நுழையும் புதியவனை நிர்மலாக பார்த்தபடி நின்று இருந்தாள்.


இருவரையும் வரவேற்க அங்கு யாரும் தயாராக இல்லை. அதிலும் ராஜேந்திரன், கார்த்திகா இருவரும் உள்ளே நுழைந்த முல்லையை கேவலமாக பார்த்தனர். “ஏய் அழுக்கி நீ எல்லாம் இந்த வீட்டுல கால் எடுத்து வைக்கிற நாள் வரும்னு நான் நினைச்சி கூட பார்க்கல.” என்று அவளை அருவருப்பாக பார்த்த படி கூறினான் ராஜேந்திரன்.


“நீ இந்த வீட்டுக்குள்ள நுழைந்து இருக்கலாம், ஆனா இந்த வீட்டோட முழு அதிகாரமும் என் கிட்ட தாண்டி இருக்கும். உன்னை நிம்மதியா வாழ விட மாட்டேன்.” என கூட பிறந்த அக்கா மீது வெறுப்பை உமிழ்ந்தாள் கார்த்திகா.


அனைவரும் அவரவர் அறைக்குள் நுழைந்து கொள்ள இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருவரையும் கடந்து சென்ற கம்பன் புதியவனை கண்டு ரகசியமாக சிரிக்க அவன் யாரும் அறியா வண்ணம் தலை அசைத்தான். அங்கேயே வராண்டாவில் இருவரும் படுத்துக் கொள்ள பாதி இரவில் முல்லை கணவன் குளிரில் நடுங்கிய படி உடலை குறுக்கி கிடந்தான். அவனுக்கு பழக்கம் கிடையாது போல என உணர்ந்தவள் பூட்டிய கதவை வெறிக்க பார்த்து விட்டு தன்னுடைய முந்தியை விரித்து கணவன் மீது போட்டு போர்த்தி விட்டு அவன் அருகிலேயே அமர்ந்து இருந்தாள்.

அந்த மெல்லிய கண்டாங்கி சேலையில் அவன் குளிர் அடங்கியதா என்று கேட்டாள் அவனே சிரித்து விடுவான் ஆனால் அவள் சேலை அவன் மேல் பட்டதும் பாரம் கொண்ட மனது நிம்மதி ஆனது போல் இருந்தது. அதன் பிறகு அவன் உடல் குளிரை கூட உணரவில்லை. அவளோ அவளின் தூக்கத்தை தொலைத்து கணவனை தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள். இருவரின் நிலை கண்ட கம்பன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.


அடுத்த நாள் காலையே ஊருக்குள் தண்டோரா போடப்பட்டது. அதாவது, "இன்று தண்டை உரியவரிடம் ஊரார் அனைவர் முன்பும் அனைவரின் வாக்குறுதியோடு ஒப்படைக்க படும். ஊர் மகாஜனங்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் குழந்தையில் இருந்து கிழவி வரை யாரும் விட்டு போக கூடாது.”

காலை கம்பன் முல்லை முன்பு வந்து நின்றான். “என்ன அண்ணா?”

“இன்னைக்கு தண்டை இவன் கைல ஏறும் போது நீ வாங்கிக் குடுக்குற துணி தான் இவன் போடணும் முல்லை.அதுக்கு நீ காசு தரணும்.” கணவனோ முல்லை முகத்தை புருவம் உயர்த்தி பார்த்தான்.


கொஞ்ச நேரம் யோசித்தவள், “அண்ணா நீங்க அந்த வீட்டுக்கு போய் என்னுடைய பெட்டில ஒரு அம்மன் படம் இருக்கும் அந்த படத்துக்கு கீழே நான் சேர்த்து வச்ச பணம் இருக்கும் எடுத்துட்டு போய் துணியும், மாமாக்கு நகையும் வாங்கிட்டு வாங்க. தண்டை கைல ஏறும் போது மாமா வெறும் உடம்போடு நிக்க கூடாது அது கௌரவுமும் கிடையாது எல்லார் முன்னாடியும் மாமா அசிங்க படுறதுல எனக்கு விருப்பம் இல்லை.” என்றாள் தெளிவாக.

கம்பன் புதியவனை கூர்ந்து பார்த்து விட்டு சென்றான். “மாமா வாங்க கோவிலுக்கு போகனும், உங்களுக்கு அங்க குளத்துல தான் தீட்டு கழிச்சு புது துணி தருவாங்க வாங்க.” என்று அழைத்துக் கொண்டு இருக்கும் போதே பெரியவரும், முக்கியஸ்தர்களும் வந்தனர்.

“தம்பி வாங்க உங்களுக்கு தீட்டு கழிக்கிற சம்பிரதாயம் இருக்கு கம்பன் துணி வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் போனான்.” என்றனர்.

வீட்டிற்குள், “கந்தா குடும்பமா சீக்கிரம் வாங்க.” என்று மறக்காமல் குரல் கொடுத்து விட்டு இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றனர். பெண்கள் அங்கே அனுமதி இல்லை. முதலில் அவனின் தாடி முடியை வெட்டி எடுத்து குளத்துக்கு அழைத்து செல்ல கம்பன் முல்லை காசில் வாங்கிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தான். அதே போல் முல்லைக்கும் புடவை இருந்தது.

பெரியவர் இருவருக்கும் புது துணி குடுத்தவர் இரண்டு பேரும் குளத்துல ஜோடியா தலை முழுகிட்டு இந்த துணியை போட்டு கிட்டு ஊர் ஜனங்கள் முன்னாடி வாங்க நாங்க அங்க காத்திருக்கோம் என்றார். அவர் கூறி விட்டு செல்ல இருவரும் ஒன்றாக தலை மூழ்கி விட்டு எழுந்தனர். தாடி, முடி எல்லாம் எடுத்த பிறகு சட்டை இல்லாமல் அவனை பார்த்தவள் குழம்பி போனாள் அதே குழப்பத்தோடு மண்டபத்தில் தனக்கான பட்டு சேலையை கட்டிக் கொண்டு தயாராகி வெளியே வர அவளின் கணவன் அவளுக்கு முன்பு தயாராகி கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் வெளியே.

அவனை கண்டு முழித்தாள் முல்லை சுற்றும், முற்றும் மண்டையை சுழல விட்டவளை கண்டவன், “என்ன தேடுற? ஏதாவது கீழே போட்டுட்டியா?” இரும்பு குரலில் கேட்டான்.


“என் மாமாவை காணும் அவுங்களை தேடுறேன்.” என்றவளை கூர்ந்து பார்த்தவன், “நான் தான் உன் மாமா.” என்றான் அழுத்தமான குரலில்.

முல்லை விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் தங்க சங்கிலியும், கையில் தங்க மோதிரமும் அணிந்து இறுக்கி பிடித்த சட்டையில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டு இருப்பவன் என் மாமனா நேற்று சோப்பு டப்பா போல் இருந்தவனா இவன் என பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“வா கொடி போகலாம் ஊர் மக்கள் நமக்காக காத்திருக்காங்க.” என்றவன் ஒற்றை கையால் மீசையை முறுக்கியபடி இப்போதும் மனைவியை முன்னாள் நடக்க விட்டு பின்னால் சென்றான்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
பிச்சைக்காரன் மாதிரி வந்தவனை பில்கேட்ஸ் மாதிரி ஆக்கினா பாவம் முல்லையும் என்ன தான் செய்வா... 🤣🤣🤣 அதான் அடையாளம் தெரியாம முழிக்கிறா... சோ ஸ்வீட் 😍
 
  • Haha
Reactions: Vathani

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
அடேங்கப்பா..
இவன்தான் முல்லையின் முரடனா?