அத்தியாயம் – 32
“மாமா இருக்க வேண்டிய இடத்தில் இருக்காரு பாதுகாப்பா. சீக்கிரம் ஒரு நல்ல செய்தி வரும்.” என்றவள் அப்போதும் இடத்தை கூறவில்லை.
கந்தனுக்கு சந்தேகம் வர துவங்கியது தந்தை செயல்களை கண்டு. காலங்கள் செல்ல திடீர் என நனி நாகமூர்த்தி முன்பு நின்றாள் ஒருநாள்.
“மாமாக்கு மகன் பிறந்து இருக்கான். தண்டைக்கு சொந்தமான வாரிசு உருவாகிடுச்சு இனி நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். இவன் வந்து உங்க இரண்டாவது மகன் கோட்டையை தரமட்டமா அழிக்கனும் அதை நான் பாக்கணும். என் மாமா அனுபவிச்ச வேதனையை தாண்டி உங்க இரண்டாவது மகன் அனுபவிக்கனும், அவன் செய்யணும்னு நினைக்கிற எல்லாத்தையும் ஈஸ்வரன் தடுக்கணும், அசிங்க படுத்தணும் அதை பார்க்க நான் தயாரா இருக்கேன்.” என்றவள், “உங்க மகன் கத்தார்ல இருக்காரு.” என்றவள் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் சென்றாள்.
அன்றில் இருந்து மகனை பின் தொடர துவங்கினார். நாகமூர்த்தி கந்தர்வன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதை கந்தன் தெரிந்து கொண்டான். தினமும் நாற்காலி, தண்டை கேட்டு வீட்டில் சண்டை போட துவங்கினான். அந்த கோவத்தை அனைவர் மீதும் காட்டினான்.
கந்தனின் நடவடிக்கை ரொம்ப மோசமாக ஆரம்பிச்சுது ஈஸ்வர் அதான் உனக்காக இதை எழுத துவங்கினேன். நீ விருப்பம் இல்லாமல் இந்த மண்ணுகுள்ள வந்து இருந்தாலும் கண்டிப்பா இந்த மண்ணை விட்டு கொடுக்க மாட்டா. நீ பாசத்துக்கு அடிபணிந்து போக கூடாதுன்னு தான் உன் அப்பா உன்னை வளர்த்தாரு எனக்கு தெரியும். நம்ப மண்ணுல இருக்க ரகசியம் என்னன்னு நான் இன்னும் சொல்லவே இல்ல.
உங்க அப்பா நம்ப மண்ணை விட்டு போன அன்னைக்கு கோவில் கிணறு பூமிகுள்ள போச்சு அது வெறும் கிணறு கிடையாது அத்துகுள்ள ஒரு லிங்கம் இருக்கு ஈஸ்வரா.. அது சாதாரண லிங்கம் கிடையாது. விலைபதிப்பற்ற லிங்கம், பல மில்லியன் கோடிக்கு போக கூடியது. அது யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு அந்த லிங்கத்தை பத்தி யாருக்கும் சொன்னது கிடையாது. ஒவ்வொரு வருஷமும் திருவிழா அப்போ வெளியே எடுத்து பூஜை பண்ணுவோம், பூசாரி, நம்ப வம்சம் அதாவது தண்டை போட்டு இருக்கவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அந்த லிங்கம் தண்ணிகுள்ள இருக்க வரைக்கும் ஜொலிக்கும் வெளிய எடுத்தா சாதாரண கல்லா தான் இருக்கும் ஈஸ்வர். அது மண்ணுகுள்ள இருக்கு இப்போ. அந்த லிங்கம் தான் நம்ப ஊரை செழுமையாக வாழ வைக்கும் ஈஸ்வரா இது வெறும் மூட நம்பிக்கை இல்ல.
இரண்டாவது ரகசியம் அம்மனுடைய மூக்குத்தி ஈஸ்வரா.. அவுங்க மூக்குல போட்டு இருக்க மூக்குத்தி பொய்யானது. அந்த மூக்குத்தி நம்ப தோப்புல இருக்கு. அந்த இடத்தை தண்டையால உணர முடியும்.
மூன்றாவது ரகசியம் அம்மன் நகைகள் அது பலவண்ண நவரத்தின கல் கொண்டு உருவாக்க பட்டது. நீயே பார்த்து இருப்ப.
பூமிக்கடியில் இருக்க லிங்கத்தை, அம்மன் மூக்குத்தி, நகை, எடுக்க தான் உன் சித்தப்பா முயற்சி பண்ணிட்டு இருக்கான். இதுவரை முடியல அவனால.. உன்னால முடியும் எல்லாத்தையும் நீ பாதுக்கணும். நம்ப மண்ணை பழைய படி மாத்தணும் ஈஸ்வரா. நீ நிக்கிற இடம் கோவில் சொத்துக்களை பாதுக்காக்க உருவாக்க பட்டது. இதை நம்பளால மட்டும் தான் திறக்க முடியும். வேற யாராளையும் கண்டு பிடிக்க முடியாது.
உன் சித்தப்பனாள கட்டாயம் கண்டு பிடிக்க முடியாது. ஆனா அவனுக்கு ரகசிய அறை இருக்குன்னு தெரியும், நகைகளை தேடிக்கிட்டு இருப்பான். கோவில் பொறுப்பில் இருந்த நகை எல்லாத்தையும் கட்டாயம் அழிச்சி இருப்பான். தெய்வ பொருட்கள் எல்லாத்தையும் கண்டு பிடிச்சா அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை வச்சி நம்ப விரல் விட்டு எண்ணக் கூடிய கோடீஸ்வரன் உன் சித்தப்பன்.
அது எல்லாம் பொருள் இல்ல ஈஸ்வரா, நம்ப நம்பிக்கை, நம்ப தெய்வம், நம்ப சொத்து. எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான ரகசியம் இருக்கு ஈஸ்வரா. இன்னைக்கு முல்லை உன் மனைவியா இருப்பாள். அது தான் கடவுளின் முடிவு, உனக்கு விருப்பம் இல்லாம அவளை கல்யாணம் பண்ணி இருந்தாலும் முல்லை வாழ்க்கையில் நீ மட்டும் தான்.
முல்லை குணம் புரியாத விசித்திரமாக இருக்கும். ஆனா அவள் தான் உன்னுடைய சக்தி, இதுவரைக்கும் அவளுடைய துணையோடு தான் உன்னுடைய ஒவ்வொரு அசைவும் இருக்கும். சிவனுக்கு பார்வதி எப்படி உயிர் சக்தியோ, அதே மாதிரி தான் உனக்கு முல்லை உன்னுடைய சக்தி அவள். உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியல ஈஸ்வர். ஆனா இது உண்மை. முல்லை மரணம்.
முல்லை மரணம் என்பதை படித்த அடுத்த நொடி குறிப்பேட்டை தவறவிட்டான் ஈஸ்வரன். முல்லை மரணமா, இந்த ரகசியங்களுக்கும் என் கொடிக்கும் என்ன சம்பந்தம்.
மீண்டும் கையில் எடுத்தவன் முழுதாக வாசிக்க துவங்கினான்.
முல்லை பிறப்பம்சம் ரொம்பவும் அதிசயமானது ஈஸ்வர். உன்னுடைய பிறப்பை போல தான். ஆனா அவள் பிறக்கும் போதே அவள் மரணத்தையும் கையோட கொண்டு வந்துட்டாள். முல்லை தெய்வ அம்மசம் கொண்டவள். பார்வதி தேவி அம்சம் கொண்டவள். அதனால் தான் அவ உனக்கு மனைவி ஆனா. அவ இருக்கும் இடம் செழிக்கும், பலம் பெருகும். அவ விலகி போய்ட்டா அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு சுடுகாடாக மாறிடும் ஈஸ்வர்.
அவுங்க அப்பாக்கும், உன் சித்தபனுக்கும் தெரியும் அந்த ரகசியம். அதனால அவளை வச்சி வேற திட்டம் போட்டாங்க. முகில் பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காமல் பேராசைக்கு அடிமை ஆகிட்டான்.
புதைந்த சிவலிங்கத்தை எடுக்குற சக்தி உனக்கும், முல்லைக்கும் மட்டும் தான் இருக்கு. முல்லையை பலி கொடுத்து அவளுடைய இரத்தத்தை அந்த பூமியில் கலக்க விட்டாள் அந்த லிங்கம் தானா வெளிய வரும், அம்மனுடைய மூக்குத்தியும் மின்னும்.
முல்லை பிறந்ததும் பலி கொடுக்க முடிவு பண்ணுனானுங்க அந்த பாவிகள். ஆனா முடியல முல்லை ஜாதக அமைப்பு பொருந்தி வரும் போது கிரகணங்கள் கூடும் போது தான் அவளை கொல்ல முடியும்.
கட்டாயம் முல்லையை நல்ல படியா வளர்த்து இருக்க மாட்டாங்க அவுங்க அதுக்கு பல காரணம் சொல்லுவாங்க உண்மையான காரணம் முல்லைக்கு எதுவும் தெரிய கூடாது, அவள் யோசிக்க கூடாது, தங்களை தாண்டி போக கூடாதுன்னு தான் கட்டாயம் வளர்த்து இருப்பாங்க.
முல்லையை நல்ல படியா பார்த்துக்கோ ஈஸ்வர். அவள் இருக்க வரைக்கும். விதியை மாத்த முடியாது, தெய்வத்தை எதிர்க்க முடியாது. லிங்கத்தை வெளிய எடுத்தா மட்டும் தான் தீபாஞ்சத்த்தில் பஞ்சம் இல்லாமல் மக்கள் எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க. ஆனா அதுல முல்லை உயிர் போகும் கட்டாயம். தெய்வ செய்யலோ, மனித சதியோ. உன்னால அவளை மீட்க முடியாது.
அவள் இறப்பு நிர்ணயிக்கபட்டது. நீயும், முல்லையும் சேர்ந்து தான் லிங்கத்தை வெளிய எடுக்க முடியும் ஈஸ்வர். அந்த லிங்கத்தை பத்தி யாருக்கும் தெரிய கூடாது. முல்லை உயிர் தெய்வத்தின் காலடியில் சமர்பிக்கபடும்னு விதி முடிவு பண்ணியது.
யார் தடுத்தாலும் அவளின் இருபத்தேழு வயதில் மரணம் நிகழும். அவள் வாழ்நாள் அதுவரை தான் ஈஸ்வரா. அவளின் ஆயுள்ரேகை தேய துவங்கும்.
முல்லை ரத்தமே இந்த மண்ணை காக்க போகிறது ஈஸ்வரா. ஊருக்காக, சுத்துபட்டு நான்கு கிராமங்களுக்காக இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் அவள் பிறப்பின் ரகசியமும், அவள் பிறப்பின் காரணமும் இது தான் ஈஸ்வரா. உன்னை நம்பி நானும், இந்த மண்ணும் உள்ளோம்.
குறிப்பேட்டை விசிறி அடித்தான் ஈஸ்வரன்.
“நோ!!!” என பெருங்குரல் எடுத்து கத்தியவன், கதறல்கள் அந்த இரும்பு கதவை தாண்டி மேலே தூங்கிக் கொண்டிருப்பவள் காதுகளுக்கு போய் சேரவில்லை.
பித்து பிடித்தது போல் அலமாரி கதவை ஓங்கி குத்தினான். கதவு அசைய கூட இல்லை. அவன் குத்திய வேகத்துக்கு ஓர் அம்மன் சிலை கீழே விழுந்தது.. அது வாரம் தவறாமல் கொடி வழிபடும் அம்மன் மூக்குத்தி அம்மன் சிலை தான்.
மூர்க்கனாக கத்தியும் வேதனை அடங்க வில்லை. வலி தீரவில்லை. என்னுடைய கொடியை நான் இழப்பதா. ‘வாழ்க்கையில் உறவு மீது, பாசத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு கிடைத்த முதல் உறவு என் கொடி. நான் கொண்ட முதல் பாசம் என் கொடி, என் மனதில் ஆத்மாத்தமாக உதித்த முதல் காதல் என் கொடி. அவளை சாக விடுவேனா? அவளை சாக விடவா நான் மீண்டும் இங்கு வந்தேன்.’
இவ்வளவு நேரம் மொழிப் பெயர்த்து கொடுத்த கூகுள் ஆண்டவர் ஓரமாக நொறுங்கி கிடந்தார்.. ஒரு வேளை தனக்கு தமிழ் தெரியாமல் தான் தான் தவறாக படித்து விட்டோமோ என்ற நப்பாசையில் முல்லையை பற்றிய ரசியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கம்பனை தேடி கிளம்பினான். கம்பனின் சிரிப்பு சத்தம் சுவர்களில் எதிரொலித்து கொண்டு இருந்தது.
அவசரமாக மேலே வந்த ஈஸ்வர் ரகசிய அறையை மறக்காமல் மூடினான். முல்லைக்கு தெரிய கூடாது, அவள் தெரிந்து கொள்ள கூடாது என முதல் முறை நினைத்தான் ஈஸ்வர். கையில் குறிப்பேட்டை பிடித்துக் கொண்டு திரும்பியவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்த தன் கொடியை கண்டான். மெதுவாக கொடி அருகில் அமர்ந்தவன், அவளின் அமைதியான முகத்தை கண்டான்,
"இப்போ தான் இவள் சிரிக்கவே துவங்கி இருக்காள், இதுவரை வலியை மட்டும் பார்த்தவள், திரும்பவும் வலியோட சாகணுமா முடியாது, இவளை நான் விட்டு தர மாட்டேன், தரவே மாட்டேன்." என நினைத்துக் கொண்டவன் கம்பனை தேடி வேகமாக கிளம்பினான்.
கம்பன் கோவிலில் தான் சிவன் சன்னதி முன்பு தியானத்தில் அமர்ந்து இருந்தான்.
“வா ஈஸ்வரா இந்த நேரத்துல தூங்காமல் என்னை தேடி வந்து இருக்க? எதாவது உயிர் போற விஷயமா?” கண்களை மூடியபடி கேட்டான்.
“கம்பா இதுல இருக்கிறதை படிச்சி சொல்லு.” என அவன் முன்பு தூக்கி எறிந்தான் ஈஸ்வர். ஈஸ்வர் முகத்தில் கோவம் தாண்டவம் ஆடியது.
கம்பனோ அப்போதும் கண் திறக்கவில்லை, “நீ படிச்சது உண்மை ஈஸ்வர், எதுவும் பொய் இல்ல, நீ தெரிஞ்சுகிட்ட ரகசியம் அனைத்தும் உண்மை, விதி முடிவு செய்தது ஈஸ்வர்."
சட்டென்று கம்பனின் சட்டையை பிடித்தான் ஈஸ்வர். கம்பன் கண்களை மெதுவாக திறந்து பார்க்க ஈஸ்வர் கண்கள் சிவக்க, மூன்றாவது கண் திறந்து இருந்தான். கோவத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன் முகம் இன்று கோவத்தில் கொடூரமாக இருந்தது.
கம்பன் சட்டையை பிடித்து தூக்கி சுவற்றுடன் சுவற்றில் சாய்த்து நிறுத்தியவன். "உனக்கு முன்னாடியே தெரியுமா கம்பா? உனக்கு என் கொடி சாகபோறானு முன்னாடியே தெரியுமா? அவளை பத்தின ரகசியம் எல்லாமே உனக்கு தெரிஞ்சு இருந்தும் எதுக்கு நீ என் கிட்ட சொல்லவே இல்ல?" மிரட்டலாக ஒலித்தது ஈஸ்வரனின் குரல். ஈஸ்வரன் குரலில் நடுக்கமும் இருந்தது.
ஈஸ்வரனை கூர்ந்து பார்த்த கம்பன், "எதுக்கு சொல்லனும் ஈஸ்வர்?" கம்பனின் கேள்வியில் ஈஸ்வரனின் இரத்தநாளங்கள் சூடாகி கொதித்தது.
“எதுக்கா? அவள் என்னுடைய பொண்டாட்டி, என்னுடைய கொடி கம்பா. அவளை பத்தி எல்லாமே தெரிஞ்சிக்க வேண்டிய உரிமை எனக்கு இருக்கு, எனக்கு மட்டும் தான் இருக்கு. என் கொடியை பலி கொடுக்க என் மாமனார், என் சித்தப்பன் பேய் மாதிரி சத்திட்டு இருக்காங்க நீ ரொம்ப அலட்சியமா கேள்வி கேக்குற?” என்றான் கம்பனின் கழுத்தை நெறித்தபடி.
“ஈஸ்வர்…” என திக்கி திணறி அழைத்தவன், “கொடி உன் பொண்டாட்டியா?” என்ற கேள்வியோடு சிரிக்க துவங்கினான்.
கம்பனின் சிரிப்பை கண்ட ஈஸ்வர் என்ன நினைத்தானோ அப்படியே கம்பனை விட்டான். நேராக நின்றபடி மூச்சை நன்றாக இழுத்து விட்ட கம்பன்.
“நல்லா யோசிச்சு பாரு ஈஸ்வர். நான் உன் கிட்ட சொல்லாமல் இல்ல, நீ எதை பத்தியும் தெரிஞ்சிக்க விரும்பல. இந்த ஊர், தண்டை, மக்கள் பத்தி சொன்னப்போ நீ பேசுன வார்த்தை எல்லாம் மறந்து போச்சா? முல்லையைப் பத்தி உன் கிட்ட சொல்ல வந்தப்போ என்ன சொன்ன?”
ஈஸ்வர் நெற்றியை தேய்த்தான், "அந்த ஊருக்கோ, தண்டைக்கோ என்ன நடந்தாலும் கவலை இல்ல, எனக்கு இருக்க வேலையை பார்க்கவே எனக்கு நேரம் பத்தல, இதுல பொது சேவை செய்ய எனக்கு நேரம் இல்ல முக்கியமா விருப்பமும் இல்ல நான் அந்த ஊருக்கு வந்து தண்டையை வாங்கி வேற ஒருத்தவங்க கைள கொடுத்துட்டு நான் திரும்பி பார்க்காமல் வந்துடுவேன், அதுக்கு இந்த கல்யாணம் ஒரு நாடகம், இந்த கல்யாணத்தாலயோ, இல்லை அந்த பொண்ணாலயோ எனக்கு எந்த சிக்கலும் வர கூடாது, வந்தா என்னுடைய ஸ்டைல்ல பதில் சொல்ல வேண்டி வரும், வேலை முடிந்ததும் அவள் ஒதுங்கிக்கணும் நானும் என் வழியை பார்த்துகிட்டு வந்துடுவேன்.
எது எப்படி போனாலும் திரும்பவும் சென்டிமெண்ட்டா பேசிக்கிட்டு, செத்தவரை உயர்த்தி பேசிக்கிட்டு என் முன்னாடி வந்து நிக்க கூடாது. எனக்கு யார் மேலேயும் பாசமும், விருப்பமும் கிடையாது, இதுவே வேண்டா வெறுப்பா தான் செய்ய போறேன். ”ஒவ்வொரு வார்த்தைகளும் தெளிவாக நினைவில் இருந்தது ஈஸ்வரனுக்கு.
தொடரும்...