• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 33

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu

அத்தியாயம் – 33




ஈஸ்வரனுக்கு தான் கூறும் வார்த்தைகளை எப்போதும் மறக்கும் பழக்கம் கிடையாது.


“நீ வந்த எண்ணமும், நோக்கமும் வேற ஈஸ்வர். இப்போ இங்க என் முன்னாடி நிக்கிற ஈஸ்வரன் வேற, நான் முல்லையைப் பத்தி உன் கிட்ட சொல்லாததுக்கு காரணம் நீ எப்படியும் அவள் வாழ்க்கையை விட்டு விலக போற, அது மட்டும் இல்லாமல் நீ முல்லை கிட்ட வேற சொல்லி இருக்க, முல்லை வாழ்க்கையில் இல்லாத ஒருத்தன் கிட்ட அவள் சாக போறான்னு சொல்ல எனக்கு விருப்பம் இல்ல. முல்லை மரணம் தீர்மானிக்க பட்டது அதை யாறாளையும் மாத்த முடியாது.”


கம்பன் அடுத்த வார்த்தை பேச முடியாமல் திணறி கொண்டு இருந்தான். ஈஸ்வரன் பிடியில் இருந்தது கம்பனின் கழுத்து,


“நீ சொன்னது உண்மை கம்பா நான் வந்த நோக்கம் வேற, இப்போ என்னுடைய நோக்கம் வேற. இத்தனை நாள் நான் இந்த ஊருல இருக்க காரணமே என் கொடி தான், கொடி மட்டும் தான், இதுவரைக்கும் பாசத்துக்கு நான் அடங்கி போனதும் இல்ல அடிபணிந்ததும் இல்ல, பாசம் அந்த வார்த்தையை கேட்டாலே வெறுப்பு தான் வரும், ஆனா என் கொடி எனக்கு முக்கியம், என்னுடைய மாற்றம் என் கொடிக்காக அவளை சாக விட மாட்டேன்.” என்றவன் கம்பனை தூக்கி வீசினான்.


அங்கு வத்தி புகைக்கு நடுவே வீற்றிருந்த பரமேஸ்வரனை கண்ட ஈஸ்வரன், "எனக்கு கொடி தான் முக்கியம், அந்த லிங்கம் வெளிய வராது, வரவும் விட மாட்டேன், என் கொடியை அழித்து தான் நீ வெளிய வரணும்னு இருந்தால் அப்படி பட்ட கடவுளே வேண்டாம் இந்த ஊருக்கு. அவளை கொன்னு உன்னை வெளிய கொண்டு வருவேன்னு நினைக்காத. கொடி என் அடையாளம், என்னுடைய சரிபாதி.” என்றவன் அங்கு எரிந்து கொண்டு இருந்த விளக்கில் முல்லை பற்றிய ரகசியங்களை எரித்து கருக செய்தான்.


“இதே மாதிரி தான் உன்னை பத்தின உண்மையும் யாருக்கும் தெரியாது.” என்று சிவனுக்கே சவால் விட்ட ஈஸ்வரனை புருவம் உயர்த்தி பார்த்துக் கொண்டு இருந்தான் கம்பன்.


“அவ்வளவு பாசமா ஈஸ்வர் கொடி மேல?” கம்பனை கூறிய விழிகளில் பார்த்தவன் அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்.


“போகும் ஈஸ்வரன் முதுகை வெறித்து பார்த்த கம்பன் உன்னால விதியை மாத்த முடியுமா ஈஸ்வர்? அதுக்கு வழி இருக்கா?” மவுனமாக கேட்டான்.


ஈஸ்வரன் கோவில் தாண்டி நடக்க துவங்கியவன் மனதிலும் ஒன்று மட்டும் தான் தோன்றியது. நான் வந்த நோக்கத்தை எப்படி மறந்தேன்? யோசிக்க துவங்கினான். முல்லை கழுத்தில் தாலி கட்டிய பிறகு தான் ஈஸ்வரனின் மனம் தளர துவங்கியது, அதிலும் அவள் முந்தானையை போர்த்திக் கொண்டு தூங்கிய பொழுது கிடைத்த சுகத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.


எங்கே தன் கொள்கையில் இருந்து மாறி விடுவோமோ என்ற பயத்தில் தான் முல்லையிடம் அந்த கதையை கூறியது. ஆனாலும் அவள் எதுவும் செய்யாமல், அவள் அருகில் வராமல், அவள் ஏரெடுத்தும் பார்க்காமல் ஈஸ்வரனின் மனம் அவள் பக்கம் சாய்ந்து விட்டது. மனம் மட்டுமா ஈஸ்வரனுக்கு குள் உருவான ஏக்கங்களை எண்ணிக் கொண்டே போகலாம். அனைத்தையும் எப்படி தகர்த்து அவனில் கொழுந்து விட்டெரியும் ஏக்கங்களை தீர்க்க போகிறானோ? அதற்கு முதல் தடையாக இருப்பதே அவனின் கொடி தானே.


அவள் தன்னை நெருங்க கூடாது, தன்னை பற்றி சிந்திக்க கூடாது என்பதற்காக கூறியது. இன்று தனக்கு எதிராகவே திரும்பி நிற்கின்றது. ஈஸ்வரனுக்கு சர்வ நிச்சயமாக ஒன்று மட்டும் புரிந்தது கொடி மனதை கரைத்து அதில் இடம் பிடிப்பது சாதாரண காரியம் கிடையாது, எளிதில் நடக்க போவதும் கிடையாது.


‘அதற்காக என் கொடியை நான் அப்படியே விட்டு விட முடியுமா? அந்த எமனே வந்தாலும் அவனையே எதிர்த்து நிற்க துணிந்த எனக்கு என் கொடி மனசை கரைக்க முடியாதா? அவள் வாழ பிறந்தவள், இந்த ஈஸ்வரனோடு, ஈஸ்வரனுக்காக வாழ பிறந்தவள், அவள் சாவு கனவில் கூட நிகழாது.’ என நினைத்துக் கொண்டான்.


மக்கள் எழுந்து வாசலில் சானி தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தனர். ஈஸ்வரனை கண்டதும் வணங்கி நிற்க்க அனைவருக்கும் தலை அசைத்து விட்டு வீட்டிற்க்கு செல்ல அவனின் கொடி வெந்தைய நிற புடவையில் கையில் கண்ணாடி வளையல் குலுங்க பால் ஊற்றிக் கொண்டு இருந்தாள். அழுத்தமும், வெறுமையும் கொண்ட அவளின் முகத்தில் மெலிதான சிரிப்பை கண்டவன் மனதில் வெறியே பிறந்தது.


இத்தனைக்கும் அவள் இன்னும் மனம் விட்டு வாய் விட்டு சிரிக்க வில்லை, தெய்வ அம்சம் கொண்ட பிறப்பாம் ஆனால் இவள் வாழ்வு முழுவதும் வேதனை மட்டுமே நிறைந்து உள்ளது கொஞ்சம் கூட சந்தோஷத்தை தராத கடவுளுக்காக என் கொடி எதற்காக உயிர் தியாகம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டவன் சென்று குளித்து முடித்து வர பூஜை அறையில் இருந்த கொடியை முறைக்க பார்த்துக் கொண்டு இருந்தான் சித்தப்பு.


“இந்தாளுக்கு வேற பொழப்பு இல்ல.” என சலித்துக் கொண்டான் ஈஸ்வர்.


தலை துவட்டியபடி நின்று இருந்தவன் நெற்றியில் பொட்டு வைத்து விட்டவள் அதிர்ந்து போனாள். ஈஸ்வரன் உடல் அனலாக கொதித்தது.


“மாமா!” என்றாள் அவன் கழுத்தில் கை வைத்து அவன் உடல் சூட்டை சோதித்த படி.


அவள் கைகள் தன்னை தீண்டியதும் சுற்றம் மறந்து தன்னவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவன் காதுகளில் பெண்ணவள் கேட்டது விழவே இல்லை.


‘மாமா உடம்பு நெருப்பா கொதிக்கிது மாமா.”


முல்லை குரலில் அவளின் உண்மையான பரிதவிப்பு தெரிந்தது. அவன் உடல் சூட்டையும், தன் நிலையையும் உணரும் நிலையில் இல்லை முல்லை பற்றிய ரகசியங்கள் அறிந்த பிறகு. அவன் சிந்தனை, செயல் அனைத்திலும் அவனின் கொடியே நிறைந்து இருந்தாள். அவள் தன்னை தொட்ட அக்கறையை கூட ஈஸ்வரன் நெஞ்சில் இன்ப சாரலாக பதிந்தது.


தன் கழுத்தில் இருந்த அவளின் கையை பற்றியவன், “எனக்கு ஒன்னும் இல்ல கொடி, லேசான காய்ச்சல் தான் சரி ஆகிடும். பழக்கம் இல்லாத வேலை எல்லாம் செய்றதால வந்த காய்ச்சல்.” என்றான் இதமான குரலில்.


அவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ, “மாமா வாங்க.” என அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்தவள் தைலம் எடுத்து வந்து அவன் கழுத்து நெஞ்சு பகுதியில் தன்னை அறியாமல் தேய்த்து விட்டாள்.


தினமும் பச்சை தண்ணீரில் குளிப்பது, வெறும் பாயில் போர்வை இல்லாமல் குளிரில் தூங்குவது, கண் விழித்து வேலை செய்வது என பழக்கம் இல்லாத வேலைகள் தான் அவனின் காய்ச்சலுக்கு காரணம் என உணர்ந்து கொண்டாள்.


கையில் இருக்கும் காப்பை கழட்டும் வரை மாத்திரை, மருந்துகள் உண்ண கூடாது வேறு வழி இல்லாமல் அவனுக்காக கசாயம் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள். அவளின் தவிப்பையும், கவனிப்பயும் இமைக்க மறந்து ரசித்துக் கொண்டு இருந்தான். மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது. அவர்களை இருவருமே ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை.


சித்தப்பு முல்லையை பார்க்கும் பார்வையில் கொலை வெறி தாண்டவம் ஆடியது. முதலில் தன்னவள் பார்க்க ஆசைப்பட்ட திருவிழாவை நல்ல முறையில் முடிக்க வேண்டும், அதன் பிறகு இவர்களை கவனித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.


மாமனுக்கு உடம்பு முடியவில்லை என்றதும் துடித்து கொண்டிருந்தவளை கண்ட நனி மெல்லிய புன்னகையோடு பள்ளிக்கு கிளம்பினாள். முல்லை எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் ஈஸ்வரன் தோட்டத்துக்கு கிளம்பினான்.


மூக்குத்தியை சித்தப்புக்கு முன்பு எடுக்க வேண்டும், அவர் முகத்தில் கரியை பூச வேண்டும். அம்மன் தேர் திருவிழா அன்று அம்மனின் மூக்கில் மூக்குத்தி அலங்கரிக்க வேண்டும் என்ற பிடிவாதம் ஈஸ்வரனுக்கு. அதனால் தன் கொடி கெஞ்சியும் கேட்காமல் கிளம்பினான்.


ஈஸ்வர் நடு தோப்பில் நின்று கொண்டு இருந்தான். இங்கு எங்கே மூக்குத்தி மறைந்து கொண்டு இருக்கு என சுற்றிலும் பார்வையை சுழற்றினான். ‘மூக்குத்தி இருக்கும் இடத்தை தண்டை உணரும்னு சொல்லி இருந்தாரு ஒன்னும் அப்படி ஃபீல் ஆகலயே!” என்ற யோசனையோடு தோட்டம் முழுவதும் சுற்றி வந்தான்.


மாமனுக்கு கஞ்சி கொண்டு வந்தவள் மாமன் எதையோ முன்புறமாக தேடுவதை கண்டு அமைதியாக அரசமரத்தடியில் ஓரமாக அமர்ந்தாள். மனைவி வந்ததை கண்டவன் தோட்டம் முழுவதும் சுற்றி வந்து எவ்வித உணர்வும் கிடைக்காமல் ஏமாற்றமாக மனைவி அருகில் அமர்ந்தான்.


அப்போது அவர்கள் அருகில் வயதான ஒரு பெண்மணி சிரித்தபடி இருவரும் அருகில் அமர்ந்தவர் கொடியை மென்மையாக பார்த்தார். பெரியவரை சிரிப்போடு பார்த்த கொடி தன் மாமன் முகத்தில் இருந்த வியர்வையை தன் முந்தானையில் துடைத்து விட்டு கொண்டு இருந்தாள்.


“இங்க நல்லா காத்து வருது இல்ல முல்லை.”


“ஆமா பாட்டி எப்பவுமே இந்த இடத்தில இருந்தா மனசுக்கு ரொம்ப அமைதியா இருக்கும் பாட்டி, இன்னைக்கும் அப்படி தான் இருக்கு நான் என் மாமனுக்கு கஞ்சி எடுத்துட்டு வந்தேன், நீங்களும் குடிங்க.” என இருவருக்கும் ஊற்றிக் கொடுத்தாள்.


ஈஸ்வரன் அந்த பாட்டியை கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் இந்த ஊர் போல் தெரியவில்லை, நாகரீகமாக, அமைதியான முக அமைப்பில் இருந்தார். “இந்த இடத்துல அமைதி உனக்கு கிடைக்களனா தான் முல்லை தப்பு, ஒரு காலத்தில் இங்க ஒரு சின்ன கோவில் இருந்துச்சு‌. சிலர் செஞ்ச தப்புக்கு தெய்வம் கோவிச்சிகிச்சு அம்மன் வாழ்ந்த இடம், சரி நான் கிளம்புறேன் முல்லை, கஞ்சி ருசியா இருந்துச்சி, வயிறு நிறைந்து போச்சு, போய்ட்டு வரேன் ஈஸ்வரா.” என ஈஸ்வரனிடம் அழுத்திக் கூறியவர் சற்று நேரத்தில் மறைந்தும் போனார். விழிகள் விரிய பார்த்தான் அந்த பாட்டி சென்ற பாதையை,


“கொடி அவுங்க உனக்கு தெரிஞ்சவங்களா?”


“இல்ல மாமா அவுங்க நம்ப ஊர் இல்ல வெளியூர் ஆள் போல, வயசானவங்களுக்கு பசிக்கும்ல அதான் நம்ப கிட்ட இருந்த கஞ்சியை கொடுத்தேன்.”


ஓ...... என இழுத்தான். “இந்த இடத்துல கோவில் இருந்தது உண்மையா கொடி?”


“எனக்கு தெரியல மாமா ஆனா கேள்வி பட்டு இருக்கேன். ஒரு குட்டி அம்மன் கோவில் இருந்துதாம் அறுவடை நடக்கும் போது அம்மனை வணங்கி தான் துவங்குவாங்க, ஆனா அது எங்க இருக்குன்னு தெரியல, அது மட்டும் இல்லாமல் நான் பிறக்குறதுக்கு முன்னாடியே தெய்வம் கோவத்துல மண்ணுக்குள்ள போய்டுச்சுன்னு சொன்னாங்க.”


ஈஸ்வரனுக்கு புரிந்தது லிங்கம் போனது போலவே தான் அம்மனும் மண்ணுக்குள் மறைந்து உள்ளாள் மூக்குத்தியுடன் என. கஞ்சியை முழுதாக குடித்து முடித்தவன் எழுந்து அரச மரத்தை சுற்றி வர துவங்கினான், மரத்தின் பின் பக்கம் சென்ற போது ஈஸ்வரனின் உடல் சிலிர்த்து அடங்கியது, அவன் கையில் இருந்த தண்டை ஆடியது. ஈஸ்வரன் நிற்கும் இடத்தில் தான் அம்மன் சிலையும், மூக்குத்தியும் இருப்பது புரிந்து போனது.



தொடரும்...