• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் - 40

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu

அத்தியாயம் – 40




கந்தர்வன் கிராமத்தை விட்டு நாடு கடந்து வந்தவன் கிடைத்த வேலையை செய்ய துவங்கினான். நனி கூறியதற்காக ஒரு வாழ்வை தேர்வு செய்தான் முதல் குழந்தையே அவர்கள் வம்சத்தின் அடையாளமாக ஆண் குழந்தையாக பிறந்தது. கூடவே கந்தன் தன்னை தேடுவதை அறிந்தவர் ஈஸ்வரனை தன்னிடம் இருந்து பிரித்தார். ஆசிரம நிர்வாகி கந்தர்வனின் நண்பன் என்பதால் அவரிடம் மகனை ஒப்படைத்தார்.


இரண்டாவது பிறந்து மகளாக இருந்தாலும் அவளுக்கும் எதுவும் ஆகிவிட கூடாது என்று மகளை சில்வியா தந்தையிடம் ஒப்படைத்தார்.


கந்தர் தனக்கு குடும்பமே இல்லை என்பது போலவே காட்டிக் கொண்டார். சில வருடங்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர் அப்போது தான் மகனை தேடி சென்றார். சிறு வயதில் இருந்து அனாதையாக வாழ்ந்தவனுக்கு தந்தை என்ற புது வார்த்தை கசப்பாக தோன்றியது.


பசி என்னும் போது பிறரிடம் இருந்து பிடுங்கி தின்றாவது தன்னை காத்து கொண்டு வாழும் போது அவனுக்கு எங்கிருந்து பாசம் தோன்றும். ஆனால் தங்கை இருப்பதை அறிந்து கொண்டான். அதற்காக தங்கையை கொஞ்சி வாழ விரும்பவில்லை.


அவ இருக்க இடத்தில இருக்கட்டும் என முடித்து கொண்டான். கிராமத்தை பற்றி, தண்டையை பற்றி ஈஸ்வரனிடம் கூற முடியாமலே இறந்தார் கந்தர்வன். ஈஸ்வரன் வாழ வேண்டும், தன் நிலையை உயர்த்த வேண்டும் என்ற வெறியுடன் ஆஸ்திரேலியா மண்ணில் கால் எடுத்து வைத்தான்.


சிறு வயதில் இருந்தே அடுத்தவரை மிரட்டி தன் பசி, தேவைகளை போக்கி கொண்டவன். தன்னுடைய வளர்ச்சிக்கும் அதே வழியை தேர்வு செய்தான். ஈஸ்வரன் கூடவே இருந்தான் துருவன். அவனும் சிறு வயதில் இருந்தே ஈஸ்வரன் கூட இருந்தவன் தான்.


முதலில் ரவுடிசத்தில் தன் வாழ்க்கையை துவங்கினான் ஈஸ்வரன். நல்லவர், கெட்டவர் என்ற பாரபட்சம் கிடையாது ஈஸ்வரனிடம். ஈஸ்வரனின் தொலைநோக்கு பார்வை, கிட்ட பார்வை அனைத்திலும் பணம், பணம், பணம் மட்டுமே நிறைந்து இருந்தது. முதலில் தன்னிடம் இருக்கும் வறுமையை, ஏக்கத்தை உதறி தள்ள வேண்டும் அதன் பிறகு தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும், தன் பெயரை மூலை முடுக்கு எல்லாம் நிலை நாட்ட வேண்டும் என்ற வெறி ஈஸ்வரனின் நாடி, நரம்பு முழுவதும் ஓடியது.


நல்லவனாக இருந்தால் ஏமாளி என்ற பட்டம் மட்டும் தான் கிடைக்கும். நான் வாழ யாரை வேண்டுமானாலும் மிதித்து மேலே செல்லலாம் தவறு இல்லை என தனக்கு தானே மந்திரம் போல் கூறிக் கொண்டான். மனசாட்சி, இரக்கம் என்பதே ஈஸ்வரனிடம் ஒரு துளி கூட கிடையாது. ஈஸ்வரனின் பார்வையில் அனைவரும் எதிரிகள் மட்டுமே. ரவுடியாக மற்றவரை மிரட்டி வாழ துவங்கினான். ஈஸ்வரன் என்ற பெயரை ஷிவ் என தனக்கு தானே புது நாட்டில் பெயர் சூட்டிக் கொண்டான்.


அனைவரிடமும் தன் மீது ஒரு பயத்தை திணிக்க துவங்கினான். ஷிவ் என்றால் முரடன் என்றே அனைவரும் நக்கல் செய்ய துவங்கி கால போக்கில் முரடன் என்பதே ஷிவ் அடையாளமாக போனது.


அடுத்தவரை மிரட்டி அடிபணிய வைத்து உயிர் பயத்தை காட்டி பணம் சம்பாதிக்க துவங்கியவன் காலம் மாற மாற பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் மீது தன் கவனத்தைச் திருப்பினான்.


ஆனால் ஈஸ்வரன் அவனுக்கே தெரியாமல் நிறைய கெட்டவர்களை தன் தேவைக்காக கொன்று குவித்து அவர்கள் மேல் ஏறி சென்றுக் கொண்டே இருந்தான். அந்த சமயத்தில் தான் இவர்களுடன் கம்பனும் இணைந்து கொண்டது.


யார் யாரிடம் எவ்வளவு உள்ளது என கம்பன் அடையாளம் காட்ட, ஈஸ்வரன், துரு இருவரும் வேட்டையாட துவங்கினர்.


யாருடைய கண்ணீர், கதறலும் ஈஸ்வரன் காதில் ஏறவே இல்லை. ஈஸ்வரன் எதிர் பார்த்தது போலவே அனைவரும் ஷிவ் என்றாலே பயந்து நடுங்கினர். ஈஸ்வரன் அந்த பயத்தில் வாழ நினைத்தான். தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முடிவு செய்து பிஸ்னஸ் துவங்கினான்.


ஒரே ஒரு பிஸ்னஸ் செய்தால் இது தான் அவன் தொழில் என கூறலாம், அவனோ விரும்பும் பக்கம் எல்லாம் தனக்கென ஒரு பாதை வகுக்க துவங்கினான்.


எதில் அதிக லாபம் கிடைக்கும், எந்த காலத்தில் எந்த தொழில் சரியாக வரும் என அதற்கு ஏற்றார் போல் தன் திட்டங்களை மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டே இருப்பான். ஈஸ்வரன் நல்ல நிலமைக்கு வரும் போது கம்பன் தன் நாட்டுக்கு செல்வதாக கூறி கிளம்பி விட்டான்.


ஈஸ்வரன் தொழில் முறையில் வளர்ந்தாலும் அவனுக்கென இடம் கிடையாது. முதல் முறை தனக்கென வீடு வேண்டும் என ஆசை பட்டவன் தனக்கான வீட்டை கோடிகளை இறைத்து தன் விருப்பம் போல் செதுக்கினான். இதற்கு நடுவே சோயாவின் தேவைகளையும் ஈஸ்வரன் பார்த்துக் கொண்டான் நேரடியாக இல்லாமல் துருவன் மூலம் செய்ய வைத்தான்.


ஈஸ்வரன் ஆசைப்பட்ட மாளிகை கட்டி முடிக்க பட்டதும் வீட்டிற்குள் ராஜாவாக நுழைந்தான் துருவனுடன். கொஞ்ச காலத்தில் சில்வியா அப்பாவும் விபத்தில் சிக்கிக் கொள்ள இரு பெண்களையும் ஈஸ்வரன் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு கண் மூடி விட்டார்.


அன்றில் இருந்து சில்வியா, சோயா இருவரும் ஈஸ்வரன் கட்டிய கோட்டைக்குள் வாழ துவங்கினர். ஆனால் ஈஸ்வரன் இருவரையும் கண்டு கொள்ள மாட்டான். அவன் காட்டாற்று வெள்ளம் போல் அவனை யாராவது தடுக்க நினைத்தால் அவர்களையும் அடித்து கொண்டு போய் விடுவான்.


யாரும் அவன் வழியில் வர கூடாது, அவனை அடக்க நினைக்க கூடாது, நினைத்தாலும் ஈஸ்வரன் யாருக்கும் அடங்கி போகவும் மாட்டான். பந்தம், பாசம் என எதிலும் ஈஸ்வரனை கட்டி போடவும் முடியாது. தன்னை காத்துக் கொள்ள யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்க கூடியவன்.


எவர் மீதும் பாசம் கொள்ளாதவன், அவன் வளர்ந்த சூழ்நிலை அவனை இப்படி மாற்றி விட்டது. தான் ஆசைப்பட்ட நிலையை அடைந்தாலும், தன் பெயரை செதுக்கி இருந்தாலும் தன்னை கீழே தள்ளி யாரும் மேலே ஏறி விட கூடாது என்ற வெறியோடு இருந்த போது தான் கம்பன் மீண்டும் ஈஸ்வரனை தேடி வந்தான் தண்டை பற்றி கூற.


கம்பன் கூறியதை கேட்டு கை தட்டி சிரித்தவன், “எனக்கு அப்பாவே இல்லன்னு சொல்லுறேன் நீ அவர் ஊரு, வம்சம், தண்டை, நாற்காலினு காமெடி பண்ணுற. அவரை பத்தி பேசி கிட்டு இனி ஒருமுறை என் முன்னாடி வராத அப்பறம் உன் உயிர் உன் உடம்புல இருக்காது.” என ஆக்ரோஷமாக கூறியவனை கண்டு அனைவரும் பயந்து நடுங்கினர்.


ஆனால் கம்பன் மட்டும் உறுதியாக நின்று இருந்தான் ஈஸ்வரனை கூர்மையாக பார்த்தபடி. “ஈஸ்வரா நீ மட்டும் கிராமத்துக்கு வரலனா உன் வாழ்க்கையை இழந்துடுவ. உனக்கான அடையாளமே அங்க தான் இருக்கு, உன் அப்பா உன்னை ஒதுக்கி வச்சதும் அதுக்காக தான். உனக்கு உயிரான பொருள் அங்க தான் இருக்கு ஈஸ்வரா.” என அழுத்தமாக கூறினான்.


பல போராட்டங்களுக்கு பிறகு சில கட்டளைகளோடு ஒப்புக் கொண்டான் ஈஸ்வரன்.


“கம்பா நீ சொல்லுற தண்டையை வேற ஒருத்தர் கைல ஒப்படைத்து விட்டு நான் வந்துடுவேன். என்னால அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க முடியாது.”


கம்பன் சிரித்த சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் துருவன் முழித்தான். எப்படி ஈஸ்வரன் ஒப்புக் கொண்டான் என்பதே யாருக்கும் புரியவில்லை.


“ஈஸ்வரா! நீ ஊருக்குள்ள நான் சொல்லும் போது தான் வரனும், வரும் போது நீ ஒரு பரதேசி மாதிரி தான் வரனும், நீ வெளிநாட்டுகாரன், நீ ஒரு மில்லியனர்,

உனக்கு தமிழ் தெரியாதுன்னு எதையும் காட்டிக்க கூடாது. முடிந்த வரை தமிழ் பேச கத்துக்கோ, சோயா நீ சொல்லி குடு.” என்றவன்,


“ஈஸ்வரா நம்ப கிராமத்தில் சந்திக்கலாம் தயாரா இரு புது வாழ்க்கையை வாழ. ஆசிரமத்தில் வளர்ந்தாலும் மண்ணையும், மண் வாசனையும் அறியாமல் வாழ்ந்தவன் நீ இனி எல்லாத்தையும் புரிய வைக்க உனக்காக ஒரு உயிர் இருக்கு. என்றவன் எதுவும் தெரியாதது போல் கிராமத்திற்கு வந்தான்.


இதில் ஈஸ்வரனின் தந்தை பற்றி மட்டுமே முல்லையிடம் கூறினாள் சோயா, ஈஸ்வரனின் தொழில் பற்றி விரிவாக கூறவில்லை. முல்லையை மிகவும் பிடித்து போனது சோயாக்கு அண்ணியை தாயாக பார்த்தாள்.


சமைத்த உணவுகளை தட்டில் பரிமாறியவள், “சோயா வா சாப்பிடு.” என்று மென்மையாக அழைக்க,


"அண்ணி நீங்க சாப்டலையா?"


“இல்ல சோயா மாமா வரட்டும் நீ முதல்ல சாப்பிடு."


சாதத்தை பிசைந்து சோயா வாய் அருகே எடுத்து செல்ல சோயாக்கு விழிகள் கலங்கியது. புன்னகையோடு தன் அண்ணியின் முகத்தில் அன்னையை கண்டபடி வாங்கிக் கொண்டாள்.


முல்லை சோயாக்கு ஊட்டிக் கொண்டு இருக்கும் போது தான் ஈஸ்வரன் அவசரம், அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தவன் இருவரையும் கண்டு அப்படியே நின்று விட்டான். ஈஸ்வரன் திடீர் என நின்றதும் அவன் முதுகில் மோதி மூக்கை தேய்த்த படி நிமிர்ந்த துருவனும் உள்ளே பார்த்து சிலிர்த்து போனான்.


அவசரம் அவசரமாக ஈஸ்வரனை தாண்டி உள்ளே ஓடியவன், “எனக்கும் ஒரு வாய் கிடைக்குமா முல்லை?” என கை நீட்டி நின்றவனை கண்டு மென்மையாக சிரித்தவள்,


“உங்களுக்கு இல்லாததா!” என்றவள் அவன் நீட்டிய கைகளில் ஒரு உருண்டை பிடித்து வைத்தாள். மூவரையும் வெறிக்க பார்த்தபடி நின்று இருந்தான் ஈஸ்வரன்.


எப்போதும் தனிமையை விரும்ப கூடியவன், பந்த பாசங்களை அடியோடு வெறுப்பவன் இன்று மூவரையும் பார்க்கும் பார்வையில் மாற்றம் இருந்தது. முக்கியமாக கொடி மீது அவனின் பார்வை ஏக்கமாக மாறியது. இருவருக்கும் ஊட்டி முடித்தவள் தட்டை எடுத்துக் கொண்டு திரும்பும் போது தான் கண்டாள் தன் மாமனை.


"மாமா வாங்க எதுக்கு வாசல்லையே நிக்கிறீங்க?" என அழைத்தவள் வார்த்தைக்கு கட்டுபட்டு உடனே உள்ளே நுழைபவனை சோயா, துரு இருவரும் வியப்பாக கண்டனர்.


தங்களின் ஷிவ்வையும் கட்டு படுத்த ஒரு ஆள் இருக்கிறார் என்பதை விட தங்களின் ஷிவ் ஒருவள் வார்த்தைக்கு கட்டுபட்டு போவது தான் இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.


“கொடி நான் போய் துணி மாத்திட்டு வரேன்.” என்றவன் அவசரம் அவசரமாக மாடி ஏறினான்.


கூறியது போலவே துணி மாற்றிக் கொண்டு வந்தவன் தன் கொடி பரிமாற வழக்கம் போல் கொஞ்சமாக மட்டும் சாப்பிட்டான். பல நாட்கள் இங்கு இல்லாததாலும், மனதில் வேறொரு திட்டம் இருப்பதாலும் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருந்தது ஈஸ்வரனுக்கு. உடனே அறைக்கு சென்று வேலைகளை பார்க்க துவங்கியவன் அதற்குள் மூழ்கி விட்டான்.


“அண்ணி இங்க வாங்க உங்க கிட்ட ஒரு முக்கியமான செய்தி சொல்லணும்.”


“சொல்லு சோயா!” என சோயா அருகில் அமர்ந்த படி கேட்டாள் முல்லை.


“அண்ணி நாளைக்கு அண்ணன் பிறந்தநாள். நாங்க பார்ட்டி பண்ண போறோம். அண்ணனும் ஒத்துகிட்டான், நீங்க என்ன சொல்லுறீங்க?”


"மாமா சரின்னு சொன்ன பிறகு நான் என்ன சொல்ல சோயா.”


துரு, சோயா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தவர்கள், “நாளைக்கு பார்ட்டில நாங்க உங்களை மொத்தமா மாத்த போறோம், அண்ணனே அசந்து போக போறான் பாருங்க அண்ணி.”


“நீ வேற சோயா சும்மா இரு, மாமா திட்ட போறாங்க.”


“அண்ணா எதுக்கு திட்டுவான், அவனே அசந்து நிக்க போறான் பாருங்க, நாளைக்கு ஷிவ்க்கு நாங்க தர போற கிஃப்ட் நீ தான் முல்லை, நானும், சோயாவும் சேர்ந்து உன்னை மொத்தமா மாத்த போறோம் பாரு.” என துரு கூற.


முல்லைக்கு அவர்கள் என்ன மாற்ற போகிறார்கள் என்று தெரியவில்லை.


“நீங்க பேசிட்டு இருங்க அண்ணா, நான் மாமாக்கு பால் எடுத்துட்டு போய் குடுத்துட்டு வரேன்.”


“கம்பன் மட்டும் தான் உனக்கு அண்ணன் நான்லாம் அண்ணன் கிடையாது முல்லை. பொண்ணுங்க என்ன அண்ணான்னு கூப்பிட்டா எனக்கு அலர்ஜி. நீ என்னை பேர் சொல்லி கூப்பிடு.” என கை ஆட்டி பதறியபடி கூறிய துருவனை கண்டு மென்மையாக சிரித்த முல்லை,


“சரிங்க துரு.” என பட்டென கூறி விட்டு மாமனை தேடி சென்றாள்.


துரு முல்லையை கண்டு நிறைவாக சிரித்தவன், “முல்லை ரொம்ப அப்பாவியா இருக்கா சோயா.”


“ஆமா துரு அண்ணியை நம்ப மாத்துவோம் என்ன?”


இருவரும் ஹைபை கொடுத்துக் கொண்டனர் ஈஸ்வரனின் கோவத்துக்கு ஆளாக போவது தெரியாமல்.




தொடரும்...