முல்லை கூறியதை கேட்டு அதிர்ந்து போனவன் இப்படியும் ஒரு ஊரா யோசிக்கவே வெறுப்பா இருக்கு என்று கைகளை முறுக்கிக் கொண்டு கண்கள் சிவக்க நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க சரியா புரிஞ்சிக்கல. எல்லாரும் கிடையாது மாமா எங்க வீட்டு ஆளுங்க, உங்க வீட்டு ஆளுங்க மாதிரி சிலர் தான். நிறம் பார்க்காத நல்லவங்க இந்த மண்ணில் வாழுறதால தான் நான் இன்னமும் இங்க நடமாடுறேன். ஏனோ இந்த ரெண்டு குடும்பத்துக்கு மட்டும் கருப்பு நிறம் பிடிக்கல அழுக்கு, அருவருப்புன்னு நினைக்கிறாங்க.
நான் பிறக்கும் போது கொஞ்சம் மங்களான நிறமா இருந்தேன். அப்போ என்னை யாருமே தூக்க கூட வரல. நான் பிறந்ததும் எங்க குடும்பத்துல கொஞ்சம் வறுமை உருவாக்கி இருக்கு அதுக்கு நான் பிறந்த ராசி தான் காரணம்னு என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க. அதே காரணத்தை ஊர் முழுக்க சொல்ல என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க கூட முன் வரல.” பாவம் இந்த பேதை அவளை திருமணம் செய்து கொள்ள பல நல்ல ஆண்மகன்கள், நிறைய நல்ல குடும்பங்கள் தேடி வந்தது தெரியாமல் போனது.
“நம்ப குடும்பத்துல என்ன சொல்லுறாங்களோ அதை தான் இந்த ஊர் கேக்கணும் இவுங்க ஒதுக்கி வைக்கும் போது அவுங்களால உறவு கொண்டாட முடியல. ஆனா எல்லாத்தையும் தாண்டி கோவில் பூசாரி, பெரியவரு, கம்பன் அண்ணா, பெரிய அத்தை என்னை பார்த்து கிட்டாங்க அவுங்க புண்ணியத்துல தான் மூணு வேளை சாப்பிட்டு உயிரோடு இருக்கேன். அதனால் தான் கம்பன் அண்ணா சொன்னதும் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டேன் மாமா. என்னுடைய பாதுகாப்பு அண்ணன் தான்.” என்றவள் வார்த்தைகள் எனக்கு இது பழகி போனதால் வலி தெரியவில்லை என்று கூறியதை ஈஸ்வரனால் உணர முடிந்தது.
அதிலும் தன் அனைத்தும் கம்பன் என்பது போல் முல்லை கூறியது ஈஸ்வரனை கொஞ்சம் கடுப்பாக்கியது. தன்னை பற்றி அவளிடம் கூற வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்த ஈஸ்வரன், “கொடி இப்படி வந்து உக்காரு உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” அவன் முகமே கூறியது அது மிக மிக முக்கியமான செய்தி என்பதை, “நீங்க அங்க உக்காந்து சொல்லுங்க மாமா நான் இங்கேந்து கேட்டுக்குறேன்.”
ஈஸ்வரன் கொடியை தெளிவாக பார்த்தவன், "இந்த கல்யாணத்தை நீ நம்பாத கொடி, எனக்கு வேற வழி தெரியல அதனால தான் உன் கழுத்துல தாலி கட்டினேன், இந்த ஊர் பொண்ணை மட்டும் தான் இந்த தண்டை போடுறவங்க கல்யாணம் பண்ணனும்னு ஒரு விதி இருக்கு அதனால் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு, எனக்கு மனசாட்சி, மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது கொடி. எனக்கு நான் வச்சது தான் சட்டம், நான் செய்றது தான் சரி, அதனால இப்போ செஞ்சதும் சரின்னு தான் தோணுது, நான் வேற ஒருத்தியை விரும்புறேன். கிட்ட தட்ட ஆறு வருஷமா நாங்க காதலிக்கிறோம், அவளுக்கு தெரியும் எல்லாமே, அவளுடைய சம்மதம் வாங்கிட்டு தான் இந்த ஊருக்கு வந்தேன், உன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன், ஆனா எல்லாமே அவசரம் அவசரமாக நடந்து போச்சு உண்மையை மறைத்து வாழுறது, நடிக்கிறது எனக்கு பிடிக்காது. அதான் ரொம்ப டைம் எடுத்துக்காம உன் கிட்ட சொல்லிட்டேன். கொஞ்ச நாள் போகட்டும் இங்க என்ன நடக்குதுன்னு முதல்ல நான் புரிஞ்சிக்கிறேன் அப்பறம் பொறுமையா எல்லார் கிட்டேயும் சொல்லி நம்ப பிரிஞ்சிடுவோம், நம்ப பிரிஞ்ச பிறகு உன்னை அப்படியே விட்டுட மாட்டேன் கொடி, உனக்குன்னு ஒரு வாழ்க்கையை உருவாக்கி தரேன், என்னை நீ புரிஞ்சிப்பன்னு நம்புறேன், புரிஞ்சிக்க விருப்பம் இல்லனாலும் நான் இப்படி தான் என்னை மாத்த முடியாது, மாத்திக்கவும் மாட்டேன்." என்றான் உணர்ச்சிகள் இல்லாத குரலில்.
ஒரே மூச்சாக ஏற்றம் இறக்கம் இல்லாமல் இறுகிய குரலில் கூறி முடித்தவனை நிர்மலான முகத்துடன் பார்த்தவள், காலில் கிடந்த காப்பை தட்டிய படி எழுந்து நின்றாள், “உங்க விருப்பம் மாமா, என் கழுத்துல இந்த தாலி இருக்க வரைக்கும் அந்த தாலிக்கு நான் உண்மையா இருப்பேன், எப்போ நீங்க பிரியனும்னு சொல்லுறீங்களோ அப்போ இதை கழட்டி கொடுத்துட்டு என் வழில போய்டுவேன்.
இதை கழட்டி கொடுத்த பிறகு உங்களுக்கும், எனக்கும் உறவும் கிடையாது ஒட்டும் கிடையாது. என் வழிலயோ, என் வாழ்க்கையிலேயோ நீங்க குறுக்க வர கூடாது எந்த உரிமையும் எடுத்துக்க கூடாது, என் வாழ்க்கையை நீங்க முடிவு பண்ண கூடாது." மிக உறுதியாக கம்பீரமாக கூறியவள் கதவை திறந்த படி, “நீங்க ஓய்வெடுங்க.” என்றவள் வெளியே செல்ல கார்த்திகா வெளியே நின்று இருந்தாள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்று இருந்தாள்.
கார்த்திகாவை ஈஸ்வரன் மூன்றாவது கண் திறந்து முறைத்து பார்வையில் நடுங்கி போனாள். ஆனால் கொடி சாதாரணமாக முந்தியைப் இடுப்பில் சொருகி கொண்டு காப்பு சத்தம் கேட்க படிகளில் இறங்கியவள் வீட்டை விட்டு பின் பக்கம் செல்ல துணி துவைக்கும் கல்லில் கம்பன் அமர்ந்து இருந்தான்.
“வா டா முல்லை என்ன உன் புருஷன் உன் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டானா?”
“எந்த உண்மை அண்ணா? அவரை பத்தி தெரிஞ்சிக்கிற உரிமை எனக்கு இல்லன்னு புரிய வச்சிருக்காரு. அதனால் அவரை பத்தி தெரிஞ்சிக்க எனக்கு விருப்பம் இல்ல ஆர்வமும் இல்ல.”
“என் மேல கோவம் வரலையா முல்லை?”
முல்லை சில்லறையை சிதறி விட்டது போல் முத்து பல் தெரிய தலை அசைத்து அழகாக சிரித்தாள். “கோவ பட வேண்டியவங்க மேலேயே நான் கோவ பட்டது இல்லை உங்க மேல எனக்கு எப்படி கோவம் வரும். என் வாழ்க்கைக்கு எதுவோ செய்ய முயற்சி செய்றீங்க நடத்துங்க அண்ணா.”
கம்பன் தன் வலது கையை எடுத்து முல்லை தலை மீது வைத்தவன், “உன்னுடைய நம்பிக்கையை வீண் போக விட மாட்டேன் டா. போக போக உனக்கே புரியும். அந்த முரடனுக்கு தெரியல இன்னைக்கு அவன் கூறிய வார்த்தைகளே அவனை தாக்கும்.” என்பது என மனதில் நினைத்துக் கொண்டவன் ஓர் ரகசிய சிரிப்பு சிரித்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த முரடனின் பார்வை முழுவதும் முல்லை சிரிப்பிலும், கம்பன் கையிலும் நிலைத்து நின்றது. சிரிக்கும் போது அந்த சிரிப்பில் கூட உயிர்ப்பில்லை முல்லைக்கு.
ஈஸ்வரன் மனதில் தோன்றியது எல்லாம் ஒன்று மட்டும் தான், ‘அவள் கருப்பாக இருந்தாலும், அசிங்கமாக கிடையாதே, கலையான வட்ட முகம், கூர்மையான மூக்கு, கொஞ்சம் புசு, புசு கன்னம்,
கிராமத்தழகி!’ என தன்னை மீறி உணர்ந்தான். அதை ரசனை என்றும் சொல்லி விட முடியாது.
“அண்ணா எனக்கு மாத்திக்க துணி எதுவும் இல்ல வீட்டுக்கு போய் என் பெட்டியை எடுத்துட்டு வரீங்களா?”
“சரி முல்லை நான் போய் எடுத்துட்டு வரேன் நீ போய் கொஞ்சம் நேரம் ஓய்வெடு.”
“இந்த கட்டைக்கு எதுக்கு அண்ணா ஓய்வு?” என்றவளை கண்டவன் மர்மமாக சிரித்தான். “இந்த வீட்டு எஜமானி முல்லை நீ. இனி இந்த வீட்டின் ஆலமரம் நீ. உன்னுடைய அடையாளத்தை நீ தலை நிமிர வைக்கணும், அப்போ தான் உன் குடும்பமும், உன் புருஷனும் தலை நிமிர்ந்து நிப்பான் முல்லை மறந்துடாத.” இருவரையும் பார்த்த படி அவர்கள் அருகில் வந்த ஈஸ்வரன், “கம்பன் பேசி முடிச்சிட்டியா? நீ பேசுனது போதும்னா நமக்கு சொந்தமான இடங்களை காட்டு நான் பாக்கணும்.”
“ஈஸ்வர் இன்னைக்கு வெளிய போக கூடாது நீங்க. அதுவும் இருட்ட போகுது. நாளைக்கு தான் போகணும் நீங்க அறைக்கு போங்க நான் போய் முல்லை பெட்டியை எடுத்துட்டு வரேன் அவளுக்கு மாத்திக்க துணி இல்லை.” என்றவன் ஒரு பக்க காவி வேட்டியை தூக்கி பிடித்த சென்றான்.
“வா எதுக்கு இங்க தனியா நிக்கிற கொடி?” இரவு படுக்கைக்கு கொடி தயார் செய்தாள். அவள் செய்கையை கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் பெட்டிக்குள் இருந்து பாய் எடுப்பதை கண்டான். அதை அவள் கீழே விரிக்க, “கொடி எதுக்கு இப்போ கீழ படுக்குற? இவளோ பெரிய கட்டில் இருக்கு நீ கட்டில்ல படு.”
“இல்ல மாமா ஊருக்கு மட்டும் தான் நம்ப புருஷன் பொண்டாட்டி இந்த அறைகுள்ள கிடையாது. நீங்க விரும்புற பொண்ணுக்கு நீங்க உண்மையா இருக்கணும், நானும் உங்களுக்கு கொடுத்த வார்த்தைக்கு உண்மையா இருக்கணும். என் மூச்சு காத்து கூட உங்க மேல இந்த நாலு சுவத்துக்குள்ள பட கூடாது அதே போல உங்க மூச்சு காத்தும் என் மேல பட கூடாது. நீங்க படுத்து நிம்மதியா தூங்குங்க, நாளை இருந்து இந்த தண்டைக்கு தகுந்த மாதிரி நீங்க வாழனும்.“ என்றவள் விரித்த பாயில் படுத்துக் கொண்டாள்.
அவள் முந்தானையை எடுத்து முகத்தில் இருந்து இடுப்பு வரை மூடிக் கொண்டவள் உடனே தூங்கி விட, ஈஸ்வரன் தான் வெறித்த பார்வையுடன் அமர்ந்து இருந்தான். முதல் நாள் அவள் முந்தானையை போர்த்தி தூங்கிய சுகம் அவன் நினைவை விட்டு நீங்க மறுத்தது. இரவு முழுவதும் பொட்டு தூக்கம் கிடையாது ஈஸ்வரனுக்கு. அலாரம் வைத்தது போல் ஐந்து மணிக்கே முல்லை எழுந்தவளுக்கு இந்த குடும்பத்தின் மருமகளாக பொறுப்புகள் நினைவில் வந்தது. எழுந்ததும் கண் மூடி அம்மனை தரிசனம் செய்தவள் தூங்காமல் அமர்ந்து இருந்த கணவனை கண்டு அதிர்ந்தாள்.
“என்ன மாமா புது இடத்துல தூக்கம் வரலையா? போக போக பழகிடும். சூரியன் உதயத்துக்கு முன்னாடி நீங்க குளிச்சு வீட்டுல இருக்க தெய்வத்துக்கு விளக்கு ஏத்தனும் மாமா, இப்படி உக்காந்து இருக்க கூடாது. தண்டை போட்டு இருந்தவங்க வழி வழியாக பின் தொடர்ந்த நியதி மாமா.”
ஈஸ்வரன் குளிக்க கீழே இறங்கினான் அவனுக்கு முன்பு கம்பன் குளித்து முடித்து தியானத்தில் அமர்ந்து இருக்க அவனை பார்த்தபடி சென்றவன் துணி எடுத்து செல்ல மறந்து போனான். முல்லை மற்றொரு குளியல் அறையில் தலைக்கு குளித்தவள் சென்று நூல் புடவையை கட்டி நெற்றிக்கு திலகம் இட்டு தலைக்கு கட்டிய ஈர துண்டுடன் கீழே இறங்கியவள் வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டவள் கணவன் வருவதற்கு முன்பு வீட்டை துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து விட்டாள்.
“என்ன மாமாவை இன்னும் காணும்?” என்று முல்லை குளியல் அறை இருந்த பக்கமே பார்த்துக் கொண்டு நிற்க, "முல்லை உன் புருஷன் துணி எடுக்காமல் குளிக்க போய் இருக்கான், இன்னமும் அவன் இடத்தில இருக்கிறதா நினைப்பு." என கம்பன் குரல் கொடுக்க அதே நேரம் காத்திருந்து வெறுத்து போன ஈஸ்வரனும் கொடி என்று சத்தமாக அழைத்தான்.
அதற்குள் மாடி ஏறி அவசரமாக அவனுக்கு வேட்டி சட்டை துண்டை எடுத்துக் கோண்டு கீழே இறங்கி வந்தவள், “மாமா!” என மெல்லமாக அழைத்தாள்.
“கொடி எனக்கு துணி வேணும்.”
“கை நீட்டுங்க மாமா தரேன்.” என்றதும் ஈஸ்வரன் கதவை திறந்து கையை வெளியே நீட்டினான். தான் எடுத்து வந்த உடைகளை கணவன் கையில் வைத்தவள் நேராக சமையல் அறைக்குள் நுழைந்து டீ போட துவங்கினாள். கம்பன் முல்லையை கண்டு சிரித்த படி பூஜைக்கு தேவையான பூக்களை பறிக்க துவங்கினான்.
ஈஸ்வரன் தலைக்கு துவட்டியபடி வந்தவன், “கொடி குளிச்சிட்டு வந்துட்டேன் அடுத்து என்ன பண்ணனும்?”
“பூஜை அறையை சுத்தம் பண்ணிட்டேன் விளக்கு ஏத்துங்க மாமா.”
முல்லையை கூர்ந்து பார்த்தவன், “இந்த வீட்டுக்கு நீ தான் பொம்பளை வா. என் பொண்டாட்டி தான் இந்த வீட்டுல இனி தினமும் விளக்கு ஏத்தனும், அதுக்கான முழு உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு.” என்றான் கட்டளையாக. ஈஸ்வரனின் வார்த்தைகளை கேட்டபடி வந்து நின்றார் அவனின் சித்தி.
கம்பன் உள்ளே நுழைந்தவன், “அப்புறம் என்ன முல்லை சொல்ல வேண்டியவங்களே சொல்லிட்டாங்க உள்ள போ.” என்றான் தான் பறித்து வந்த பூக்களை அவள் கையில் கொடுத்தபடி. “கம்பன் உள்ள போய் நம்ப பரம்பரை விளக்கை வெளிய எடுத்து கொடு. இனி எஜமானி அம்மா குடும்ப விளக்குல தான் விளக்கு ஏற்றனும்.” என்றார் சித்தி.
கம்பன் விளக்குகளை எடுத்து வெளியே வைக்க முல்லை தன் கணவனை பார்த்தாள். “என்ன எதுக்கு பாக்குற நீ தானே செய்யனும் வா.” என்று அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தான். நாகமூர்த்தி மனைவி இறந்த பிறகு மூட்டை கட்டப்பட்ட பரம்பரை விளக்குகள் இன்று முல்லைக்காக வெளியே எடுக்க பட்டது. திரி போட்டு எண்ணெய் ஊற்றி தெய்வங்களை கண் மூடி உருகி வேண்டியவள் இந்த வீட்டின் எஜமானி நான் தான் என்னும் முதல் உரிமை தீபத்தை தன் கைகளால் ஏற்றி வைத்தாள் கணவன் துணையுடன். இவற்றை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவுக்கு நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது.