• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 6

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu
“அத்தை நானும் இந்த வீட்டு மருமகள் தானே இது வரைக்கும் இந்த விளக்கு எதுவும் என் கிட்ட எடுத்து கொடுத்ததே இல்லையே நீங்க?” கார்த்திகாவின் கோபமான குரல் வீடு முழுவதும் எதிரொலித்தது.

அவள் போட்ட சத்தத்தில் அனைவரும் எழுந்து வந்தனர். முல்லை கம்பன் நீட்டிய மற்ற விளக்குகளை வாங்காமல் நிற்க, “கொடி வாங்கு.” என்று உஷ்ணமாக கூறினான் ஈஸ்வரன்.

கணவன் கூறிய பிறகு தயங்காமல் கைகளில் வாங்கிக் கொள்ள, “முல்லை இந்த விளக்கு எல்லாமே என் மாமியார் உன் பாட்டி இருந்த வரைக்கும் ஏற்றி வழிபட்டாங்க. அதுக்கப்புறம் இந்த விளக்கு எதையும் தொட யாருக்கும் தகுதி இல்லாம போயிடுச்சு இனி உனக்கு தான் எல்லாமே சொந்தம்.”

“அத்தை நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு கதை சொல்லிட்டு இருக்கீங்க. அந்த அழுக்கிக்கு என்ன தகுதி இருக்குன்னு அந்த விளக்கு எல்லாத்தையும் கையில் வாங்கி இருக்கா. அதுல எத்தனை விளக்கு இருக்குன்னு அவளுக்கு எண்ணி பார்க்க கூட தெரியாது. ஒன்னு ரெண்டு தெரியாதவள் கைல கொடுக்குறீங்க.

என் கைல கொடுங்க நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.” என்றவள் வேகமாக முல்லையை நெருங்கி அவள் கைகளில் இருந்த விளக்கை தொட போக, “கார்த்திகா!!!” என்று நனி குரல் கோவமாக எதிரொலித்தது.


அதற்குள் மனைவியை தனக்கு பின்னால் இழுத்துக் கொண்டவன் கண்கள் சிவக்க கார்த்திகாவை முறைத்த படி நின்று இருந்தான். நனி குரலில் குடும்பமே ஆடி போனது கந்தப்பன் கூட நனியை அதிர்ச்சியாக பார்த்தார். “கார்த்திகா முல்லை ஒன்னும் சாதாரண மருமகள் கிடையாது. இந்த வீட்டுக்கும் உனக்கும் எனக்கும் எஜமானி இனி. பரம்பரை சம்பந்தமான எந்த பொருளையும் இனி முல்லை மட்டும் தான் தொட அதிகாரம் இருக்கு உனக்கோ, எனக்கோ கிடையாது கார்த்திகா.

முக்கியமா குளிக்காமல், மூதேவியா பூஜை அறை பக்கமும் வராத, முல்லையை தொடாத, எந்த பொருளையும் நீ தொட கூடாது.” என்று சற்று அதிகாரமாக கூறியவரை கண்டு மிரண்டாலும் கோவம் மூக்கு வரை எட்டி பார்த்தது.


கார்த்திகா முல்லையைப் முறைத்து பார்க்க, “என் பொண்டாட்டியை அதிகாரம் பண்ற வேலை வச்சிக்காத பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்." என்று எச்சரித்தவன், “கம்பா கிளம்பு நமக்கு சொந்தமான தோட்டத்தை பார்க்கணும்.” என்றான்.

முல்லை விளக்குகளை பத்திரப்படுத்தி எடுத்து வைத்தவள், “மாமா காலை சாப்பாட்டுக்கு வந்துடுங்க.”


“ம்ம்…” என்று முனகியவன் கார்த்திகா முகத்தை கூட பார்க்காமல் சென்றான்.

“முல்லை நீ போ, கார்த்திகா இனி குளிக்காமல் ஈஸ்வரன் முன்போ இல்லை முல்லை முன்னாடியே வராத. அழுக்கா தீட்டோட தண்டைக்கு சொந்தமானவங்களை தொடவும் கூடாது பார்க்கவும் கூடாது இனி வீட்டுல எல்லாரும் சுத்த பத்தமா இருக்கணும்.” என்ற நனி கந்தனை கடந்து சென்றார்.



முல்லை காலை சமையலை துவங்கினாள். கம்பன் முதலில் ஈஸ்வரனை தென்னந்தோப்புக்கு தான் அழைத்து சென்றான். பல ஏக்கர் அளவில் இருந்த மிக பெரிய தோப்பு தினமும் மட்டை, தேங்காய், இளநீர் என வருமானத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும் தோப்பும் கூட.

மரங்கள் அனைத்தும் உயரமாக இருந்தது மிகவும் சுத்தமான காற்றை சுவாசித்து கொண்டு உள்ளே நுழைந்தவன் வேட்டியை தூக்கி கட்டி நடக்க அங்கு அந்த காலை வேளையில் கூட பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் ஈஸ்வரை கண்டதும் வணக்கம் ஐயா என்ற குரலும் மரியாதையும் ஈஸ்வரனை சிலிர்த்து போக செய்தது.



பல மரியாதை, கௌரவிப்புகளை கடந்து வந்தவன் தான் ஆனால் இந்த கிராமத்தில் கிடைக்கும் மரியாதை தனி போதையை கொடுத்தது. அனைவருக்கும் தலை அசைத்து விட்டு முன்னேறி சென்று கொண்டு இருந்தவன் அங்கு குவிந்து கிடந்த தேங்காய்களை கண்டான். அவர்களின் குடும்ப விசுவாசிகள் ஈஸ்வரனை வணங்கி விட்டு “இன்னைக்கு பாதி தோட்டத்து தேங்காய் ஐயா சந்தைக்கு அனுப்பணும் மொத்தமா 75,000க்கு வித்து இருக்கு இளநீர் 10,000த்துக்கு வித்து இருக்கு.” ஒருவர் பணத்தை ஈஸ்வரன் முன்பு நீட்ட கையில் வாங்கி எண்ணி பார்த்தவன் மீண்டும் அவரிடமே கொடுத்தவன், “இதை எடுத்துட்டு போய் வீட்டுல கொடுத்துடுங்க. கொடுத்துட்டு காலை சாப்பாட்டை எடுத்துட்டு வாங்க என் பொண்டாட்டியை சாப்பிட சொல்லிடுங்க.” என்றதும் பணத்தை மஞ்சள் பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டு சென்றார்.

வீட்டில் என்ன நடக்கும் என்பதை அறிந்த கம்பன் மனதுக்குள் சிரித்தவன், “அண்ணா ஐயாக்கு இளநீர் வெட்டி குடுங்க, முதல் முதல்ல இயற்கையான கூல்டிரிங்ஸ் குடிச்சி பாக்கட்டும் அப்போ தான் உடம்புல இருக்க சூடு குறையும் இனி அடிக்கடி சூடாகனும்.” என்றவன் முதுகில் ஓங்கி பட்டென்று தட்டினான் ஈஸ்வர்.

பணத்தை எடுத்து வந்தவரோ வாசலில் நின்றபடி, “தாயி!” என அழைக்க கார்த்திகா புடவை சரசரக்க வந்து நின்றாள். என்ன என திமிராக கேட்டவள் முன்பு மஞ்ச பையை நீட்டியவர், “காலைல தேங்காய் வித்த பணம்.” என்றார் பவ்வியமாக.


பணத்தை கையில் வாங்கியவள், “சரி போ.” என்று திமிராக கூறி உள்ளே நுழைந்தவள் சமையல் அறையில் நின்ற முல்லையை கேவலமாக பார்த்தாள். உன் தகுதி அவ்வளோ தாண்டி என்பது போல், ஆனால் முல்லை கண்டு கொள்ளவில்லை.

“முல்லைம்மா!” என்று குரல் கொடுத்தவர் குரலுக்கு கையில் மோருடன் ஓடி வந்த முல்லை, “அண்ணா இதை குடிங்க, மாமா சாப்பாடு குடுத்து விட சொன்னாரா?”


“ஆமாம்மா உன்னையும் சாப்பிட சொன்னாரு.”

“சரிண்ணா ஒக்காருங்க சாப்பாடு கட்டி தரேன்.” என்றவள் பரபரப்பாக கட்டி கூடைக்குள் வைத்து அவரிடம் கொடுத்து விட கந்தன் சாப்பிட அமர்ந்தார்.

கார்த்திகா பத்தாயிரம் பணம் கொடு என்று வாங்கிக் கொண்டவர் சாப்பிட துவங்க அவருடன் மற்றவர்களும் சாப்பிட அமர்ந்தனர்.

ராஜேந்திரன் முல்லையை கண்டவன், “அழுக்கி நீ எங்க கூட உக்காந்து சாப்பிட கூடாது அப்படி தரையில் ஓரமா உக்காந்து சாப்பிடு.” என்றவன் அவள் சமைத்த உணவை வழித்து நக்கினான். கார்த்திகா முல்லை அருகில் சென்றவள், “உன்னோட தகுதி இவளோ தான் டி என்னைக்கும் எஜமானி ஆக முடியாது.” என்றாள் வக்கிரமாக.

முல்லையை அக்கா என கூட பிறந்தவள் ஏற்கவில்லை, அண்ணன் மனைவியாக ராஜேந்திரன் ஏற்க வில்லை அனைத்தையும் வேடிக்கை பார்த்த நனி அமைதியாக சாப்பிட்டாள். இங்கு நடப்பது அறியாமல் மனைவி கொடுத்து விட்ட கிராமத்து உணவை அவள் கை பக்குவத்தில் மெய் மறந்து ருசித்து சாப்பிட்டான் ஈஸ்வரன்.

ஈஸ்வரன் முதல் முறை கிராமத்து உணவு அதுவும் காரமாக உண்கிறான். எப்போதும் பீசா, பர்க்கர், பிரட், பன் இது போன்ற ஆங்கில உணவுகளை மட்டுமே சாப்பிடுவான். சோறு, குழம்பு என்றால் சாப்பிடாமல் சென்று விடுவான். மனைவி கை பக்குவம் ஈஸ்வரனை மாயம் செய்ததோ என்னவோ முகம் சுளிக்காமல், மறுக்காமல் உணவை எடுத்து வாய்க்குள் வைத்தவன் தொண்டையில் உணவு வழுக்கிக் கொண்டு சென்றது.


ஈஸ்வரனை பற்றி நன்கு அறிந்த கம்பன் ஒரு இளநீர் வெட்டி வந்து அருகில் வைத்தான் காரத்திற்கு இதமாக. ஆனால் ஈஸ்வரன் அதை பருகாமல் சாப்பிட்டு முடித்தான். இவர்களின் குடும்ப சொத்துகள் அதிகம் என்பதால் அனைத்தையும் தெரிந்து கொள்ளவே மதியம் ஆனது. மதிய சாப்பாடும் வந்து விட்டது.

நேற்றைய விற்பனைக்கான கரும்பு பணம் இரண்டு லட்சம் வரை அதையும் எண்ணி சரி பார்த்து அதே நபரிடம் வீட்டில் கொடுக்க சொல்லி கொடுத்து விட்டவன், “கம்பா வா சாப்பிடுவோம்.”

கம்பனோ ஒரு பாறை கல்லில் சம்மணங்கால் போட்டு அமர்ந்தவன் கோழி இறகால் காதை குடைந்து கொண்டே, "இங்க நீ சாப்பிடுற, வீட்டுல என்ன நடக்கும்னு தெரியுமா? உன் பொண்டாட்டி சாப்ட்டாளா?"

கம்பன் கேள்வியில் ஈஸ்வரனின் முகம் கொதித்தது. கம்பன் காரணம் இல்லாமல் கேட்க மாட்டான் என்பதால் ஒற்றை கையால் வேட்டியை தூக்கி பிடித்து குறுக்கு பாதையில் வீட்டை நோக்கி நடக்க துவங்கினான். குறுக்கு பாதை என்பதால் வீட்டின் முகப்பு வாசல் வழிக்கு செல்லாமல் பின் வாசலுக்கு சென்றது. செருப்பை பின் வாசலில் கழட்டி விட்டவன் சத்தம் போடாமல் உள்ளே நுழைந்தான். அங்கு நடந்ததை கண்டு உச்சி நரம்புகள் வரை புடைத்து கொண்டு எழுந்தது.


“ஏய் அழுக்கி இந்தா பழைய சோறு இன்னைக்கு இது தான் உனக்கு சாப்பாடு. புருஷனுக்கு வாய்க்கு வக்கணையா குடுத்து விட்டல்ல!” என்று ஒரு உடைந்த பழைய பாத்திரத்தை முல்லை முன்பு நீட்டினாள் கார்த்திகா.

ராஜேந்திரன் சத்தமாக சிரித்துக் கொண்டே கூறினான், “உனக்கு வீட்டுக்கு வெளிய வச்சு சாப்பாடு போடணும் என்ன பண்ண எல்லாம் எங்க கால கொடுமை உள்ள வச்சி சோறு போட வேண்டியதா இருக்கு. உனக்குலாம் என் வீட்டு வாசல்ல இருக்க கூட தகுதி கிடையாது அழுக்கி.” எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவமான படுத்தினர் இருவரும். இதற்கு மேல் முல்லையை யாராலும் கேவல படுத்த முடியாது.

நனி தன் கையில் இருந்த சாவி கொத்தை இறுக்கி பிடித்தபடி முல்லையை கண்டவர் கண்கள் அங்கு மூன்றாவது கண்களை திறந்த படி நின்று இருந்த ஈஸ்வரனை கண்டது.

கார்த்திகா, ராஜேந்திரன் இருவரும் சத்தமாக சிரிக்க கந்தன் பெரிய மனிதருக்கான தகுதியை இழந்தான், "ஏய் சீக்கிரம் அந்த சாப்பாட்டை வாங்கிக்கோ இல்ல அதுவும் கிடைக்காது.” என்றார்.


முல்லை அனைத்து அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கை நீட்டி வாங்க போக அவளுக்கு முன்பு வலிமையான கை ஒன்று நீண்டு வந்து கார்த்திகா கொடுத்த கிண்ணத்தை வாங்க மற்றவர்கள் அதிர்ச்சியில் எழுந்தனர். ஈஸ்வரனின் கோவம் கொப்பளிக்கும் முகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டு பிடித்திட முடியாது. அவன் முகத்தை சாந்தமாக வைத்திருந்தவன் கையில் வாங்கிய கிண்ணத்துடன் சாப்பாட்டு மேஜையை எட்டி ஒரு உதை விட்டான் வலிமையாக. மேஜை இரண்டாக உடைந்தது. அதில் இருந்த உணவுகள் அனைத்தும் மற்றவர்கள் மேல் தெறித்தது.

சூடான கொதிக்கும் குழம்பு ராஜேந்திரன் இடுப்பில் கொட்ட ரசம் கந்தன் காலில் ஊற்றியது. ராஜேந்திரன் கத்த துவங்க, “ஏய்! சத்தம் வெளிய வரக்கூடாது.” என்று விரல் நீட்டி உத்தரவு போட அந்த இடமே பாத்திரங்கள் உருளும் சத்தம் மட்டும் தான் கேட்டது. வீட்டை சுற்றி வேலை செய்த அனைவரும் வீட்டுக்குள் ஓடி வந்தனர்.

என்னதான் மனைவி மீது படக் கூடாது என்று அவளுக்கு முன்பு நின்று தடுத்து நிறுத்தினாலும் ஈஸ்வரனை தாண்டி சில துளிகள் அவள் கழுத்தில், கைகளில் தெறித்து தான் இருந்தது. கார்த்திகா பயத்தில் நடுங்கிய படி தன் கணவனை நோக்கி அடி எடுத்து வைக்க ஈஸ்வரன் தனக்கான நாற்காலியில் அமர்ந்து, “கார்த்திகா இங்க வா!” என்றான் உறுமலாக.


ஈஸ்வரன் வார்த்தைகளை மீறி அடி எடுத்து வைக்க கூடாது என்பதால் மீண்டும் அதே இடத்தில் ஆனி அடித்தார் போல் நின்றவளை, "அப்படியே கீழே உக்காரு!" என்றான் அவன் காலடியில்.


கார்த்திகா கண்கள் கலங்க தன் கணவனை பார்க்க "அண்ணா அவள் என் பொண்டாட்டி இந்த வீட்டு மருமகள் அவளை போய் இப்படி அவமான படுத்துறீங்க.” முல்லையை இழுத்து நாற்காலி கை பிடியில் அமர வைத்தவன், "அப்போ இவள் யாரு ராஜேந்திரன்?"

ராஜேந்திரன் பதில் சொல்ல முடியாமல் திணறி நிற்க, “உக்காருன்னு சொன்னேன்.” ஈஸ்வரன் அதட்டலில் பட்டென்று கீழே அமர்ந்தவள் கண்ணீர் முல்லை காலடியில் விழுந்தது. கிண்ணத்தை நீட்டியவன், “இதை தான் இன்னைக்கு நீ சாப்பிடனும்.” என்றான் அதிகாரமாக.

“இல்ல மாட்டேன் இது இரண்டு நாளைக்கு முன்னாடி சமைத்தது, இதை நான் சாப்பிட மாட்டேன்.” என்றாள் அழுத படி. “அப்போ இதை என் பொண்டாட்டிக்கு குடுக்கும் போது மறந்துட்டியா, இது இரண்டு நாளைக்கு முன்னாடி சமைத்ததுண்ணு.” கார்த்திகா பதில் பேச முடியாமல் அழ, “பொண்ணுங்க கண்ணீருக்கு அடங்கி போறவன் கிடையாது இந்த ஈஸ்வர். அழுது முடிக்கிற வரைக்கும் நானும் விட மாட்டேன். “என்றவன் வார்த்தையை மீற முடியாதவள்

கடைசி நம்பிக்கையாக தன் மாமனாரை பார்த்தாள்.

அவரும், "ஈஸ்வர் நீ பண்ணுறது அராஜகம், கார்த்திகா வசதியா வாழ்ந்தவள் உன் அத்தை பொண்ணு நம்ப வீட்டு பொண்ணு அவ!" ஈஸ்வர் கை உயர்த்தி தடுத்தவன், “என் பொண்டாட்டிய வாடகைக்கு வாங்கிட்டு வந்தீங்களா என்ன? இப்போ இந்த சாப்பாட்டை இவள் வாங்கலைனா ஒரு வாரத்துக்கு பட்டினி கிடந்து வீட்டு வேலை செய்யணும்.” கந்தன் கூறிய வார்த்தைகள் அவனுக்கே எதிராக மாறியது.

இனி யாராலும் எதுவும் பண்ண முடியாது என்பதால் கார்த்திகா அவன் கையில் இருந்த பழைய சாப்பாட்டை வாங்கி அழுது கொண்டே சாப்பிட துவங்கினாள்.


ஈஸ்வரன் கார்த்திகாவை முறைக்க பார்த்தவன், “என் கிட்ட மனசாட்சி எதிர் பார்த்து யாரும் நிக்காதீங்க நடக்காது.” முல்லை தோளில் கை போட்டவன், “கொடி என் பொண்டாட்டி எனக்கு கிடைக்கிற மரியாதையா விட அவளுக்கு அதிகமா கிடைக்கணும். யாராவது அவளை அவமான படுத்துனா நான் குடுக்குற தண்டனையை அவசியம் ஏத்துக்கணும்.” என்றான் இரும்பு குரலில்.