• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 7

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu
இந்த காப்புக்கு அடிபணிந்து மட்டும் இல்ல காப்புக்கு சொந்தமான ஆளுங்களையும் அடிபணிந்து தான் வாழனும்.

யாராவது என் வார்த்தையை மீறி என் மனைவியை அவமான படுத்தினா அவுங்களுக்கு நான் குடுக்குற தண்டனையை கட்டாயம் ஏத்துகிட்டு தான் ஆகனும்.”

அண்ணா அதுலாம் முடியாது. அந்த அழுக்கிக்கு என்ன தகுதி இருக்கு படிக்காத, நாகரீகம் தெரியாத முட்டாள் அவள். அவளும் அவள் உருவமும் பார்க்கவே சகிக்கல.” என்றவன் வாய்க்குள் இருந்து இரத்தம் வழிந்தது ஈஸ்வரன் விட்ட குத்தில்.



இனி ஏழு நாளைக்கு இவன் இந்த வீட்டுக்குள்ள வர கூடாது. நம்ப வீட்டு மாடுகளை இவன் தான் பாத்துக்கணும். முக்கியமா சுத்தமான துணி போடவே கூடாது. இவனுக்கு உழைத்தா மட்டும் தான் சோறு போடணும் அதை மீறி இவன் மேல யாரு இரக்க பட்டாலும் அவுங்களுக்கு இதை விட வேற தண்டனை கிடைக்கும். ஏழு நாள் தண்டனை முடிந்ததும் வீட்டுக்குள்ள வரட்டும் என்னுடைய தண்டனையை நான் தான் முடிவு பண்ணுவ.

என் மனைவியை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும் ராஜேந்திரன் நீ உன் பொண்டாட்டியை சரி பண்ணு வீட்டை விட்டு வெளியே போ.” என்றவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலைக் காரர்களை அழைத்து இடத்தை சுத்தம் பண்ணுங்க.

கொடியை அழைத்துக் கொண்டு வீட்டின் பின் புறம் சென்றவன் அங்கிருந்த துணி துவைக்கும் கல்லில் அமர வைத்து ஒரு மக்கில் தண்ணீர் கொண்டு வந்து கொடி கழுத்து, கால்களை, கைகளை துடைத்து விட்டான். வெற்று இடுப்பில் இருப்பதை கண்டவன் கைகள் அப்படியே நின்றது.


“கொடி நீ போய் குளி.” என்றவனை கூர்ந்து பார்த்தவள், "இனி எவ்வளவு கோவம் இருந்தாலும் சாப்பாடு மேல காட்டாதீங்க மாமா, சாப்பாடு சாமி மாதிரி அதை அவமான படுத்தவோ, வீணாக்கவோ கூடாது, விளைய வச்சி உழைச்சு அறுவடை பண்ணுறவங்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும்." என்றபடி குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஈஸ்வர் மூடிய கதவை வெறிக்க பார்த்தவன், "இவன் வீணாக்கிய உணவுகளை ஒன்று சேர்த்து இருந்தால் ஒரு கிராமமே சாப்பிட்டு இருக்கும்." தெரியாமல் பேசி விட்டு செல்கிறாள். கம்பன் முல்லை கொடுத்த உணவை சாப்பிட்டு கை கழுவியவன். “போன வேலை சிறப்பா முடிஞ்சுது, இவன் அவளுக்குத் கற்று கொடுக்கும் பாடத்தை விட அவள் இவனுக்கு கற்று கொடுக்கும் வாழ்க்கை பாடம் முக்கியம். சீக்கிரம் கத்துப்ப ஈஸ்வர்.” என்றபடி கட்டிலில் சாய்ந்தான்.

உண்மை தான் ஈஸ்வரன் முல்லை மூலமாக தான் வாழ்வின் அடிபட்ட பாடங்களை கற்று கொள்ள போகிறான். இன்று வரை உணவு என்பது நாக்கில் மட்டும் நிற்கும் ருசி என்றே நினைத்து இருந்தவனுக்கு முதல் முறை அதற்கு பின்பு உழைப்பவர்களின் வலியை புரிய வைத்தாள்.‌ முல்லை அவளுக்கே தெரியாமல் இந்த ஊருக்கும் இந்த ஊருடன் அடங்கிய சுற்று பட்டு மூன்று கிராமங்களுக்கு நிறைய நல்லது செய்ய போகிறாள்.

அவன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் ஈஸ்வரன் மூலமாக செயலாக போகிறது. ஈஸ்வரன் மீது ராஜேந்திரன் கொடிய பகையை வளர்த்து கொண்டான் ஆனால் எதிரியாக மோதாமல் துரோகியாக இருந்து அவனை அழிக்க திட்டம் தீட்ட கார்த்திகா முல்லைக்கு எதிராக திட்டங்களை தீட்டினர்.

ஈஸ்வரன் என்பவன் சாதாரண ஆள் இல்லையே இவர்கள் வைத்த பொறியில் சிக்க பார்க்கலாம் யார் திட்டம் வெற்றி பெறுகிறது என்பது.


இரவு முல்லை பாய் விரித்துக் கொண்டிருக்க, “கொடி இன்னைக்கு கொடுத்து விட்ட காசு எல்லாத்தையும் கொடு நாளைக்கு நம்ப அறைக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கணும்.”

பாயை பிடித்த படி நின்றவள், “மாமா அந்த காசு முழுக்க கார்த்திகா கிட்ட இருக்கு என் கிட்ட கொடுக்கல.” கொடி வார்த்தைகளை கேட்டு புருவம் சுருக்கியவன், “சரி நீ தூங்கு.” என்றான்.

மறுநாள் முல்லை தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி தயாராகி நின்று இருந்தாள். “மாமா நான் கோவிலுக்கு போய்ட்டு வரேன் அம்மனுக்கு விளக்கு போடணும்.”


“சரி கொடி இரு நானும் கூட வரேன்.” என்றவன் சத்தமாக அழைத்தான். “கார்த்திகா, கார்த்திகா.” அவளோ அழுது வீங்கிய முகத்துடன் வந்தவளை அருகில் நெருங்க விடாதவன், “நேத்து உன் கைக்கு வந்த காசு எல்லாத்தையும் எடுத்துட்டு வா.” என்றான்.


கார்த்திகா உள்ளே சென்றவள் ஈஸ்வரன் கூட என் கையால் காசு வாங்குகிறான் என சந்தோஷமாக எடுத்து வந்தவள், “எவளோ வேணும் சொல்லுங்க?”

“காசை மொத்தமா கீழ வை.” ஈஸ்வரன் குரலில் தெரிந்த மாற்றத்தில் படி மீது வைத்தாள். ஈஸ்வரன் கையில் எடுத்தவன் கொடி இதை எண்ணு.

கார்த்திகா நக்கலாக கூறினாள், “அவளுக்கு தான் ஒன்னு, ரெண்டு கூட தெரியாதே அப்பறம் எப்படி அவ எண்ணுவாள்?”

கொடி முழுவதையும் எண்ணி, “ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்கு மாமா.”

ஈஸ்வரன் அதிர்ந்தவன், “அவளோ தான் இருக்கா கொடி?”

“ஆமாம் மாமா.” ஈஸ்வரன் கார்த்திகாவை பார்க்க, “என் கைக்கு வந்த காசு அவளோ தான்.” என்றாள் திமிராக, ஐயோ பாவம் நேற்று அவன் தான் எண்ணி கொடுத்து விட்டான் என்பது தெரியாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பேசுகிறாள்.

அவளிடம் எதுவும் சொல்லாதவன், “வா கொடி கிளம்பலாம்.” என்று புருவங்கள் முடிச்சிட மனைவியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான். வழி முழுவதும் இருவருக்கும் பலத்த மரியாதை கிடைத்தது.


கோவில் உள்ளே நுழைய பூசாரி ஓடி வந்தார், “ஐயா வாங்க, வாங்க, வாம்மா முல்லை.”

“பூசாரி கோவிலுக்குள் சாமி தான் உசத்தி நீங்க போங்க, என்னை கும்மிடாதீங்க.” என்று கூறி அனுப்பி வைத்தான்.


“என்ன ஈஸ்வர் பொண்டாட்டி கூட சேர்ந்து நீயும் நடக்க பழகிகிட்ட போல. ஒரு அடி நடந்தாளே அசிங்கமா யோசிப்ப.” கம்பனின் குரல் கேட்டது காவி உடையில் பட்டையுடன் பக்தி மையமாக நின்று இருந்தான். “கொடி போ போய் விளக்கு போட்டுட்டு வா.” என்று அனுப்பி வைத்தவன் கம்பன் வீட்டுக்கும் எனக்கும் தேவையான பொருள் எல்லாம் வாங்கணும்.

“இறக்க சொல்லவா ஈஸ்வர்?”

“இல்ல இங்க கிடைக்கிற பணத்தில் தான் வாங்கணும். நம்ப கடைக்கு போவோம்

முதல்ல ஒரு பைக் வாங்கணும்.” என்றவன் பார்வை வெறும் காலில் நடந்து செல்லும் மனைவியை தொடர்ந்தது.

“புதுசா எதுக்கு பைக் உன் தாத்தா நாகமூர்த்தி பயன் படுத்திய பைக் உங்க வீட்டுல தான் நிக்கிது. அந்தக் காலத்து புல்லட் அவரும் அவர் பொண்டாட்டியும் ஒன்னா அந்த வண்டில போனா ஊரே வாயை பிளந்து கிட்டு பார்க்கும் அந்த வண்டிக்கும் தனி மரியாதை உண்டு உனக்கு பிடிச்சா முயற்ச்சி பண்ணி பாரு.”

“மத்தது என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்.”

“இல்ல நானும் வருவேன்.” என்றான் பிடிபாதமாக ஈஸ்வர்.

உலகரசி காலையிலேயே இழவு வீட்டில் அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தாள். முல்லை சென்று ஒரு வாரம் கூட ஆகவில்லை மூன்று நாளைக்கே மூச்சு முட்டியது.

“யவனிகா சீக்கிரம் வா. இப்படி மச மசன்னு இருந்தா எப்போ வயலுக்கு போக, வீட்டு வேலையை முடிக்க?”

“அத்தை நான் மட்டும் என்ன சும்மாவா இருக்க, வேலை செஞ்சிட்டு தானே இருக்கேன். நீங்க சமைக்கிற வேலை மட்டும் தான் அதுக்கே ஐம்பது முறை என் பேரை ஏலம் விடுறீங்க. மத்த வேலை எல்லாம் யார் பாக்குறது.”

தாய், மனைவி இருவரின் சண்டையை பார்த்தபடி படி வந்த உத்தமன், “அம்மா சாப்பாடு ரெடியா வயலுக்கு போகனும் நேரம் ஆகுது. அங்க போட்ட வேலை எல்லாம் அப்படியே கிடக்கு. நான் வேலைக்கு வேற போகனும்.”

“டேய் உத்தமா கொஞ்சம் பொறுத்துக்கோ டா இதோ தயார் ஆகிடும்.”

“அம்மா அப்போ இன்னும் சாப்பாடு ரெடி ஆகலையா? என்ன தான் பண்ணுறீங்க வீட்டுல ஒன்னுக்கு ரெண்டு பொம்பளைங்க இருக்கீங்க ஆனா வீடும் சுத்தமா இல்ல ஒரே குப்பையா இருக்கு, நேத்து அவுத்து போட்ட துணி கூட துவைக்கல, இன்னைக்கு போட்டுக்க வேண்டிய துணி இஸ்திரி பண்ணல, அப்படி என்ன ரெண்டு பேரும் புடுங்குறீங்க?” உச்ச கட்ட கோவத்தில் கத்தினான்.


“அக்கா இருந்த வரைக்கும் தனி ஆளா இந்த வீட்டை பார்த்துகிட்டா. ஒரே ஆள் எல்லா வேலையும் செஞ்சா வயல்ல கூட எல்லா வேலையும் முடிஞ்சிடும். வேர்கடலைக்கு தண்ணி பாய்ச்ச சொல்லி இரண்டு நாள் ஆகுது. அதை கூட அப்பா செய்யல. ஒருத்தி தனி ஆளா செஞ்ச வேலையை இங்க இத்தனை பேரா செய்ய முடியலையா?

எனக்கு சோறும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் மனுஷன் உயிரை வாங்குறீங்க ரெண்டு பேரும்.” என்று கத்தியவன் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

யவனிகா அவன் பின்னாடியே கத்திக் கொண்டு ஓடினாள். “மாமா கொஞ்சம் பொறுங்க தோசையாவது சுட்டு தரேன்.”


“நீயே உக்காந்து கழுத்து வரைக்கும் தின்னு ஒரு வேலைக்கும் துப்பு கிடையாது யாரும்.” என்று மனைவி மீது எரிந்து விழுந்தவன் தன் வண்டியை

எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்து போனான். யவனிகா மாமியாரை முறைத்தாள்,

“என்னை எதுக்கு முறைக்கிற முழியை நோண்டிடுவேன் பார்த்துக்கோ, நீ தான் வீட்டுக்கு பொறுப்பா இருக்கணும், வழக்கம் போல எட்டு மணி வரைக்கும் தூங்குனா இப்படி தான் புருஷன் பட்டினியா போவான். அவன் தான் பழைய கஞ்சி குடிக்க மாட்டான்னு தெரியும்ல சீக்கிரம் எழுந்து வேலை செய், மாசம் ஒன்னா தேதி ஆனா சம்பளம் மட்டும் கொத்தா வாங்கி முந்தானைல முடிஞ்சிக்கிற, நான் வேலை செய்யணுமா?”

அடுப்படியில் இருந்த சட்டியை காலால் எட்டி உதைத்தவர் வேலையே அப்படியே போட்டு விட்டு மறு திண்ணையில் மாறி அமர்ந்து கொண்டாள்.

‘இவள் கல்யாணம் பண்ணிக்கிட்டு போனாலும் போனாள் சோறு கூட இல்லாமல் காய வேண்டியதா இருக்கு.’ சொந்த அண்ணன் மகளை மகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் அவளையும் எதுவும் கண்டிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தாள் உலகரசி.

நீ என்னத்தை செஞ்சி கிழிச்சிட்ட என பல முறை முல்லையை கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்து இருக்கும். காலை மூன்று மணிக்கு எழுந்து குளித்து வீட்டு வேலைகளை முடித்து, சமைத்து, வீட்டில் உள்ள அனைவரின் துணிகளை துவைத்து காய வைத்து, தோட்டம் முழுவதையும் சுத்தம் செய்து, பால் கறந்து, மாட்டு கொட்டகையை சுத்தம் செய்து, தம்பி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு, தண்ணீர் பிடித்து வைத்து விட்டு, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஒரு சொம்பு கூழ் மட்டும் தூக்கு வாளியில் எடுத்துக் கொண்டு மற்றவர்கள் எழும் முன்பே தோட்டத்துக்கு சென்று நாள் முழுக்க மாடு போல் யாரையும் எதிர்பார்க்காமல் உழைப்பாள்.



அப்படி உழைத்தும் ஒரு வாய் சாப்பிட்டியா என கேட்க கூட ஆள் கிடையாது. அதற்கே ஆளுக்கொரு குறை கூறி அவளை வேதனை படுத்துவார்கள். கம்பன் கொண்டு வரும் உணவை சாப்பிட்டு இரவு வந்து அனைத்து வேலைகளும் முடித்து விட்டு மீண்டும் வயலுக்கே சென்று தூங்கி விடுவாள். அவ்வளவு வேலை செய்தவள் ஒரு நாளும் சோர்ந்து போனது கிடையாது, மற்றவர்களிடம் சண்டை போட்டது கிடையாது, வேறு ஒருவரை எதிர்பார்த்தது கிடையாது இத்தனைக்கும் குடும்பமே அழுக்கி என்று ஒதுக்கி வைத்து அவர்களுக்காக தனி ஆளாக அதுவும் பெண்ணாக உழைத்தாள்.

உலகரசி குடும்ப வருமானம் முழுவதும் முல்லை ஒருவளின் தனி உழைப்பு. உத்தமன் சம்பாதித்தாலும் அவை அனைத்தும் யவனிகா கட்டுபாட்டில் தான் ஒரு ரூபாய் கூட எண்ணி தர மாட்டாள். இது இல்லாமல் வேறொரு வழியில் வருமானம் வருகிறது இந்த குடும்பத்துக்கு.

இவர்கள் கூறிய அழுக்கி, அசிங்கம் தான் இந்த வீட்டின் செல்வம், லட்சுமி கடாட்சம் என்பதை தெரியாமல் காலால் எட்டி எட்டி உதைத்தனர். இனி இவர்களுக்கு புரியும். யார் உண்மையான அழகு, சுத்தம் என்பது.

ஈஸ்வரன் மனைவியை கோவிலில் விட்டவன் கடை தெருவுக்கு சென்றான். அனைத்தும் புது உணர்வு, வித்தியாசமான உணர்வு.

சாலையில் கம்பன், ஈஸ்வரன் இருவரும் நின்று இருந்தனர் முன்னால் இருந்த கூட்டத்தை கண்ட படி. கம்பன் ஈஸ்வரன் முகத்தை கண்டு சத்தமாக சிரித்து விட்டான்.

“ஈஸ்வர் இப்பவும் ஒன்னும் குறையல நீ இங்கேயே நில்லு போன்ல ஒவ்வொரு பொருளா சொல்லு நான் போய் வாங்கிட்டு வரேன். உனக்கு கூட்டம் பிடிக்காது அது மட்டும் இல்லாமல் இது மார்கெட் ஏரியா கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும் உனக்கு பிடிக்காது.”

தான் வாங்க வேண்டிய பொருட்களை யோசித்தான் அவை தான் தான் வாங்க வேண்டும் என்று முடிவோடு இருந்தான். கூட்டத்தை மீண்டும் ஒரு முறை வெறிக்க பார்த்தவன் சுற்று வட்டம் முழுவதையும் பார்வையால் வட்டம் அடித்தான். “இனி நான் பழகிக்கணும் கம்பா இனி இங்க தானே என் வாழ்க்கை.” என்றவன் தண்டயை தூக்கி விட்டு சாலையில் நடந்தான்.

பார்க்கும் ஜனங்கள் அனைவரும் வணக்கம் ஐயா, வணக்கம் ஐயா என்று மரியாதை செலுத்தி சென்றனர். ஈஸ்வரன் கூறிய வார்த்தைகளை கேட்ட கம்பன் இன்பமாக சிரித்துக் கொண்டான்.

பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்யும் ஈஸ்வரனை கம்பன் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் அவன் வாங்கிய பொருட்களை கண்டு ரகசியமாக சிரித்துக் கொண்டான். *சீக்கிரம் நீ மாறிடுவ ஈஸ்வர் உன் அடையாளம் என்னன்னு தெரிஞ்சுப்ப.”

அனைத்தையும் வாங்கி முடிந்ததும் கம்பன் பொருட்களை ஏற்ற ஒரு வண்டி அழைத்து வந்தவன் ஈஸ்வரன் வாங்கி இருந்த பொருட்களை கண்டு சிரித்தான்.