• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முரடன் 8

NiviAmmu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 26, 2024
45
26
18
Tamilnadu
ஈஸ்வரன் வீட்டிற்கு வர வீட்டில் முல்லை இல்லை. வந்ததும் முதலில் மனைவியை தான் தேடினான். கம்பன் பொருட்களை வாங்கி வந்து நடு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க அதில் இருந்த பொருட்களை கண்டு வாயை பிளந்தாள் கார்த்திகா.


“மொத்த பணத்தையும் நீங்களே செலவு பண்ணிட்டீங்க? இது என்ன அநியாயமா இருக்கு, யார் வீட்டு பணத்தை யார் செலவு பண்ணுறது?” என்று பொறாமையில் கத்தினாள் கார்த்திகா.

“இரண்டு லட்சத்து எண்பது ஆயிரம் நேத்து வந்த வருமானம், நீ ஈஸ்வரன் கிட்ட வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தான் கொடுத்த கார்த்திகா, மீதி பணம் எங்க?”

கம்பன் கேள்வியில் திகைத்து நின்றாள்.


“என்ன என்ன பேசுறீங்க, என் கிட்ட கொடுத்த பணத்தை ஒரு ரூபாய் கூட தொடாமல் அப்படியே கொடுத்தேன்.” நானு வார்த்தைகள் தடுமாறியது கார்த்திகாக்கு.

நனி மூவரையும் சுவாரசியமாக பார்த்தார்.


“நேத்து தோட்டத்துல பணத்தை கையில் வாங்கி எண்ணி பார்த்ததே ஈஸ்வரன் தான் கார்த்திகா, ஒவ்வொரு ரூபாயா எண்ணி வீட்டுல கொடுக்க சொல்லி அனுப்பினான், ஆனா அந்த பணம் உன் கைக்கு வரும்னு ஈஸ்வரனுக்கு தெரியாது. இப்போ போய் மீதி பணத்தை எடுத்துட்டு வா.” கார்த்திகா எச்சில் விழுங்கினாள் தன் குட்டு வெளிப்பட்ட பயத்தில் இருந்தும், “சொத்து பொது சொத்து என் புருஷன் பங்கை நான் எடுத்துகிட்டேன்.” என தெனாவாட்டாக பதில் சொல்லியவளை கூர்ந்து பார்த்த படி நாற்காலியில் அமர்ந்து தண்டையை முறுக்கி விட்ட ஈஸ்வரன், "எது பொது சொத்து எல்லாம் என் அப்பன் சொத்து, அதாவது என்னுடைய சொத்து உன் மாமனார் சொத்து எல்லாம் தனி அதுல வர வருமானமும் தனி உங்க சொத்துக்களை பத்தியும், அதோட வருமானத்தை பத்தியும் நீ உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ, இத்தனை வருஷம் இந்த குடும்பமே ஆள் இல்லாத சொத்துன்னு என்னுடைய சொத்துகள் வருமானத்தை தான் தின்னுகிட்டு இருந்தாங்க இப்போ புதுசா நீ வேற வந்து

இருக்க." கோவமாக சொல்ல வில்லை ஆனால் உனக்கு உரிமை இல்லை என்று அழுத்தமாக கூறினான் ஈஸ்வரன்.

முகத்தில் அடித்தார் போல் அவமான படுத்தியவனை எதுவும் செய்ய முடியாதா நிலை புருஷனும் சாணி அள்ளிக் கொண்டு இருக்கிறான். மாமனார் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை கடுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள் கார்த்திகா.

“பார்த்துமா கழுத்து சுளுக்கிக்க போகுது.” என்று கம்பன் கிண்டல் செய்ய ஈஸ்வரன் பார்வை நனி மீது விழுந்து விலகியது. அதற்குள் வேலைக்காரர்கள் பொருட்களை ஈஸ்வரன் அறையில் அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்தனர்.

“கம்பா எங்க கொடி வீட்டுல ஆள் இல்ல?”

“கம்பா கொடியை அவளுடைய அம்மா வந்து அழைச்சிட்டு போய் இருக்காங்க?”

“எதுக்கு ம்மா?”

“அவுங்க வயல்ல தண்ணி பாய்ச்சாமல் இருக்காம் அதுக்காக.”

ஈஸ்வரன் கை முட்டியை இறுக்கி பிடித்த படி எழ, “மாமா வந்துட்டீங்களா? வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தாள் கொடி. அவளின் புடவை பாதி நனைந்து இருந்தது இந்த வெய்யலில் வேலை செய்ததால் வியர்த்து புடவை கசங்கி மங்கலாக இருந்தாள். காலையில் அவளை கோவிலுக்கு அழைத்து செல்லும் போது அழகாக புடவை கட்டி நன்றாக இருந்தவள் இப்போது இப்படி ஒரு கோலத்தில் வந்து நிற்பதை கண்டு ஈஸ்வரன் எவ்வித கேள்வியும் கேட்க வில்லை.


“இப்போ தான் வந்தோம் கொடி, சாப்பிட்டியா?”

கொடியின் நடை அப்படியே நின்றது, கம்பன், நனியை தவிர்த்து சாப்பிட்டியா என்று இதுவரை கேட்டதில்லை ஈஸ்வரன் கேட்டதும் முல்லை மனம் குளிர்ந்து போனது அதிலும் கணவனாக அவன் அக்கறை அவளை நிறைவடைய செய்தது.

“சாப்பிட்டேன் மாமா அத்தை குடுத்து விட்டாங்க.”

“எவளோ நேரம் வேலை செஞ்ச கொடி நீ?”

“நேரம் தெரியல மாமா.” அவள் குரலில் தெரிந்த சோர்வில், “சரி நீ போய் ஓய்வெடு கொடி.” என்றான். சரி என தலை அசைத்தவள் தங்கள் அறைக்குள் நுழைந்து பாயை விரித்து படுத்தவள், நொடிகளில் தூக்கம் தழுவிக் கொண்டது.

முழு தோட்டத்துக்கும் முல்லையைப் தனி ஆளாக தண்ணீர் பாய்ச்ச விட்டுட்டாள் உலகரசி இதில் நாளை வேறு வர சொல்லி இருக்கிறாள் ஈஸ்வரன் குணம் அறியாமல்.

முல்லை எழுவதற்காக காத்திருந்தவன் சிந்தனைகள் பல திட்டங்களை தீட்டியது.

அவள் தூங்கும் நேரத்தில் தான் வாங்கி வந்த பொருட்களை அடுக்கியவன் முல்லை எழுந்து அமர்வதை கண்டான்.

அவளுக்காக தான் பாதிக்கு மேல் பொருட்கள் வாங்கி இருந்தான். அவனுக்கென்று எதுவும் இல்லை.


“எழுந்துட்டியா கொடி?” அவள் அருகில் அமர்ந்தவன் தான் வாங்கி வந்த புடவைகளை தூக்கி கொடி முன்பு அடுக்கினான். “நாளைக்கு இதுக்கான சட்டை எல்லாம் வந்துடும் கொடி இனி இந்த மாதிரி புடவை கட்டு என் பொண்டாட்டி மரியாதை எனக்கு முக்கியம்.

உன்னை நான் மரியாதையா வச்சி இருந்ததா தான் நான் போட்டு இருக்க தண்டைக்கு மரியாதை. நாளைக்கு பஞ்சாயத்து பண்ணவும் தகுதி இருக்கும். உனக்கு புரியும் கொடி.”

அடுத்ததாக வளையல்கள், தலையில் போட்டுக் கொள்ள சில பொருட்கள், காதுக்கு கம்மல் பெரிதாக இருந்தது, அவள் காலுக்கு சலங்கை கொலுசு வாங்கி வந்தவன் மறக்காமல் முல்லைக்கு செருப்பு வாங்கி வந்து இருந்தான்.


“இனி செருப்பு இல்லாமல் நீ வெளிய போக கூடாது. முதல்ல கால்ல இருக்க வெடிப்பு சரி ஆகட்டும் அதுக்கப்புறம் குதி வச்ச செருப்பு வாங்கிக்கலாம்.”

அனைத்தையும் காமித்து முடித்தவன், “கொடி நீ எதுவரைக்கும் படிச்சி இருக்க?”


“நான் பள்ளி கூடமே போனது கிடையாது மாமா. நான் வெளிய போனால் அவுங்களுக்கு அசிங்கம்னு என்னை பள்ளிக்கூடம் போக விடல.”

ஈஸ்வரன் நெற்றியை தேய்த்தான் கொடி பதிலில். சற்று நேரம் சுவற்றில் சாய்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன்,

“இனி மதியம் ஒரு மணி நேரம் ராத்திரி ஒரு மணி நேரம் நானே உனக்கு சொல்லி தரேன் நீ படிக்கலாம் கொடி.”

“நான் படிக்கலாமா மாமா?” கண்கள் மின்ன கேட்டாள் கொடி. அவள் கண்களில் தெரிந்தது அவளின் ஆர்வமும், ஆசையும். “நீ படிக்கலாம் எதுக்கு உனக்கு சந்தேகம்? ஏன் இப்படி கேக்குற?”

“எனக்கு தான் வயசாகிடுச்சே நான் படிக்க முடியாதே, எனக்கு படிப்பு ஏறாதுன்னு சொன்னாங்க மாமா.”

“யார் சொன்னது?”

“நம்ப பள்ளிகூட பெரிய டீச்சர் தான்.” தலைமையாசிரியரை தான் பெரிய டீச்சர் என்கிறாள் என்று

ஈஸ்வரனுக்கு புரிந்தது.

நீ எப்போ போய் கேட்ட கொடி?”

“மூணு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்டேன் மாமா நானும் பள்ளிக்கூடம் வரவா எனக்கும் சொல்லி தரீங்களான்னு. அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரு.” என்று உதட்டை பிதுக்கி கூறினாள்.


“அது என்ன மூணு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்ட?”

“அப்போ தான் நான் தனியா ஒரு ஏக்கர் நிலம் வாங்குன மாமா கைல கொஞ்சம் வருமானம் வந்தது அதை வச்சி படிக்கலாம்னு ஆசை போய் கேட்டேன் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.

என் கூட ஒரு பத்து பொண்ணுங்க இருந்தாங்க யாரையும் சேர்த்துக்கல மாமா.”


“பத்து பொண்ணுங்களா?”

ஆமா மாமா என்னை மாதிரி நம்ப ஊர்ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க, இங்க மட்டும் இல்ல சுத்துபட்டு கிராமத்திலும் இருக்காங்க.” கொடி அவளே அறியாமல் முதல் விதையை விதைத்தாள். இங்கிருந்து, இதில் இருந்து தான் மாற்றங்கள் துவங்க போகிறது என்று கொடி அறியவில்லை.


“சரி கொடி நாளையில் இருந்து உனக்கு நான் சொல்லி தரேன். இனி ஈஸ்வரன் நிக்கிற ஒவ்வொரு இடத்திலும் நீயும் நிக்க போற. என்னுடைய கௌரவம் இந்த தண்டை மட்டும் கிடையாது. நீ தான் என்னைக்கும் அதை மறந்துடாத.” எதற்காக அவன் கூறினானோ ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்குள் பெரும் மாற்றத்தை கொண்டு வர போகிறது இனி.

“சரி மாமா!” என நல்ல பிள்ளை போல் கூறியவள் ஈஸ்வர் வாங்கி வந்த பொருட்களை அலமாரியில் அடுக்கி வைத்தாள்.


அடுத்த நாள் விடியல் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் சில மாற்றங்களை உருவாக்கவே விடிந்தது.

ராஜேந்திரன் மாட்டு கொட்டகையில் கொசு கடி ஒரு பக்கம், நாற்றம் ஒரு பக்கம், பசி ஒரு பக்கம் என அழுது விட்டான். இதில் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு தான் பால் கரக்க வேண்டும். “இந்த அழுக்கி வேற குண்டானை தூக்கி கிட்டு வந்துவா.” என்ற கோவத்தில் பால் கறந்து கொண்டிருந்தான் ராஜேந்திரன்.

பால் கறந்து வாசல் வரை கொண்டு வந்தவன் திண்ணையில் கொண்டு வந்து வைத்து விட்டு சென்றவன் செவிகளில் கொலுசு சத்தம் விழ யார் டா இது சலங்க கொலுசு போட்டுட்டு நடக்குறது அதுவும் நம்ப வீட்டுல என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டு வாசலில் நின்றிருந்த முல்லையை கண்டு அதிர்ந்து போனான். இத்தனை வருடங்களாக அழுக்காக, அசிங்கமாக இருந்தவளா இவள் தன் கண்களையே நம்ப முடியாமல் கண்களை தேய்த்து விட்டு பார்க்க முல்லை குடத்தில் இருந்த பாலை வீட்டு தேவைக்கு ஏற்ப குண்டானில் சாய்த்துக் கொண்டிருந்தாள் சிதறாமல்.


ஆரஞ்சு கலர் சேலையில் நூல் சேலை தான் ஆனால் பார்க்க பட்டு புடவை போல் கரை வைத்து அழகாக இருந்தது அது நூல் புடவை என்று யாராலும் கூற முடியாது. கைக்கு கண்ணாடி வளையல் புடவை நிறத்தில் அணிந்து இருந்தாள், காதில் பெரிய கம்மல் சுற்று மாட்டலுடன், தலையில் கொண்டை தான் போட்டு இருந்தாள் எப்போதும் கடமைக்கு இருக்கும் இன்று இருபக்கமும் முடி எடுத்து பின் குத்தி அதன் கீழ் கொண்டை போட்டு தலையில் அழகுக்கு ஒரு தங்க நிற ஊசி குத்தி இருந்தாள்.


அனைத்தையும் தாண்டி எப்போதும் காலில் ஒரு காப்பு தான் விலங்கு போல் போட்டு இருப்பாள் இன்று அந்த காப்பை கழட்டி விட்டு முத்துக்கள் பதித்த கொலுசு

ஜொலித்தது. கண்ணாடி வளையல் சத்தமும், கால் கொலுசு சத்தமும் வீடு முழுவதும் புது புத்துணர்வை கொடுத்தது.


இன்று தான் பெரிய வீட்டின் முழு பாக்கியமும் கிடைத்தது போல் இருந்தது அவ்வீடு.

முல்லை மாற்றத்தை கண்ட கம்பனே ஒரு நொடி ஸ்தம்பித்து போனான். ஈஸ்வரனின் மனைவி தனக்கென்று இருந்த அடையாளத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்து இருந்தாள்.

பூக்களை முல்லை கையில் கொடுத்தவன், “இந்த மாதிரி உன்னை பார்க்கணும்னு பல வருஷத்து ஆசை முல்லை.

தண்டைக்கு சொந்தமானவங்க இப்படி தான் இருப்பாங்க. உன் பாட்டி இப்படி தான் இருப்பாங்க ஆனா அவுங்க கிட்ட இன்னும் சில மாற்றம் இருக்கும் போக போக அதை புரிஞ்சு நீயே மாறிடுவ.” என்றவன் வழமையான இடத்தில் அமர்ந்து தன் தியானத்தை தொடர்ந்தான்.

ஆக மொத்தத்தில் அழுக்கி முழுதாக மாறி இருந்தாள். “இது என்ன டா ஒரே நாள்ல நடந்த அதிசயம் யார் டா இந்த அதிசயத்தை நடத்தியது?” புரியாமல் முழித்துக் கொண்டு அங்கேயே நின்று இருந்தான் ராஜேந்திரன்.


முல்லை அவனை கண்டு கொள்ளாமல் கோவிலில் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய தேவையான பாலை எடுத்து தனியாக வைத்தவள் அதன் பிறகே வீட்டுக்கு பால் எடுத்தாள். அங்கு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும்

ராஜேந்திரனை கண்டு கொள்ளாமல் முல்லை வீட்டிற்குள் நுழைந்தாள்.


ராஜேந்திரன் தன் நிலையையும் முல்லையின் பளபளக்கும் நிலையையும் கண்டு அசிங்க பட்டான். இன்றைய ஒரு வாரத்தின் வலியை முல்லை இத்தனை வருடங்களாக அல்லவா அனுபவித்தாள். புத்தகம் ஏந்த ஆசை பட்ட சிறுமி கையில் பால் கறக்க பாத்திரம் கொடுத்தனர், மண் வெட்டி குடுத்தனர். இவர்களே அவளை அழுக்காக மாற்றி விட்டு அவளுக்கு அழுக்கி என்ற பட்டமும் அல்லவா குடுத்தனர்.


தினமும் இதே போல் அழுக்காக நின்ற போது அனைவரும் முகம் சுழித்தனர் அவள் பழகி கொண்டாள் இவனோ பழக முடியாமல் தன் நிலையை எண்ணி வெறுப்பை வளர்த்துக் கொண்டான்.

"கொண்டவன் வந்த பிறகு மாற்றங்கள் பல உண்டு." கம்பன் தியானத்தில் அமர்ந்த படி சத்தமாக கூற, கம்பனை முறைத்து விட்டு சென்றான் ராஜேந்திரன்.

கம்பன் சிரித்துக் கொண்டான் கண் திறவாமல்.


கம்பனின் தியான நிலையை கண்ட படி வந்த ஈஸ்வரன், ‘இவன் யாருக்காக வேண்டிக்கிறான்னு தெரியல பேய்க்கு முன்னாடி முழிச்சிடுறான்.’ என்று மனதில் நினைத்துக் கொள்ள, “என் தங்கச்சிக்காக வேண்டிக்கிறேன் ஈஸ்வர், எனக்கு முன்னாடி பேய் முழிக்கல என் தங்கச்சி முழிச்சா அவள் தரிசனம் கிடைச்சது எதிர்பார்க்க முடியாத அளவு.” என்று மீண்டும் கண் திறக்காமல் கூற ஈஸ்வர் முல்லை எழுந்து விட்டாள் என்றதும் வேகமாக குளிக்க சென்றான்.

கணவன் சத்தம் கேட்டு முல்லை எட்டி பார்க்க, "முல்லை உன் புருஷன் இன்னைக்கும் துணி எடுத்துட்டு போகல எடுத்துட்டு போ,”

“சரி அண்ணா.” என்றவள் துணி எடுக்க செல்ல, இனி அவன் தினமும் எடுக்க மாட்டான் கேட்டால் மறந்து விட்டேன் என்பான் நம்பக் கூடியதா அது.