எல்லாம் ஆகிற்று அம்முவை போலீசில் கைது செய்து முழுதாக ஒரு நாள் முடிந்து இருந்தது…
தனமும் மூர்த்தியும் வந்து பார்த்து அழுது சென்றனர்…
அவர்களிடம் எனக்கு எதுவும் ஆகாது சீக்கிரம் வெளியே வந்து விடுவேன்…உதய் அனைத்தையும் கவனித்து கொள்வான்…நீங்கள் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள் என பேசி இருந்தாள்…
அவர்களும் அவள் கூறிய அனைத்தையும் கேட்டு விட்டு உனக்கு நாங்கள் இருக்கிறோம் என தைரியம் கூறி வந்தனர்…
அன்றைய கடைசி ஆளாக உதய் தான் பார்க்க வந்து நின்றான்…
வந்தவன் முதலில் எதுவும் பேசாமல் அவளை அவளின் உடல் நிலையை கண்களில் நிரப்பினான்…
அவன் பார்வையை உணர்ந்து எனக்கு ஒன்னும் இல்லை உதய்.. நல்லா இருக்கேன்… என கூறியதும் அவளை நேர்கொண்டு பார்த்து முறைத்தான்…
அதில் அவளுக்கு சிரிப்பு கூட வந்தது அதையும் வைய்க்குள் அடக்கினாள் …
அவள் பேச தொடங்கும் முன் கை காட்டி நிறுத்தியவன்…
"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்…உன்னை கல்யாணம் செய்ற அளவுக்கு பிடிக்கும்…இதை எல்லாம் உன்கிட்ட பேச நேரம் பாத்து வச்சி இருந்தேன்…ஆனா இன்னைக்கு உன்ன இங்க பாத்ததும். உனக்கு நான் இருக்கேன்னு இப்பவே சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்…
அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லு நா வக்கீல் ஏற்பாடு செய்றேன்…"
"ஹ்ம் அதுக்கு தான் உன்ன வர சொன்னேன் உதய்… உன்னோட மெயில் செக் பண்ணு அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி வக்கீல் கிட்ட பேசு…
அம்மா அப்பாவ பாத்துக்கோ..
நீ சொன்னதை பத்தி நா வெளிய வந்ததும் பேசிக்கலாம்… " என தன்னம்பிக்கை குறையாமல் சர்வ சாதாரணமாக உரையாடினாள் ..
அவனுக்கு அவளைப் பார்த்தது முதல் இன்னும் ஆச்சரியம் விலகவில்லை.. அவனுக்கு ஒவ்வொரு முறையும் அம்மு ஒவ்வொரு விதமாக தெரிந்தாள் .. அந்த ஒவ்வொரு முறையும் அவனை அவன் பால் இழுத்தாள்..
யுவராஜன் தனியாக வந்து இதெல்லாம் உனக்கு தேவையா என்பது போல் பேசிச் சென்றான்..
இந்த முறை சுமதியை ரவி வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்தாள் ..
போலீசும் ஆம்புலனசும் வருவதற்குள் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்து இருந்தாள்…
போலீசும் அவளிடம் பெரிதாக எந்த கேள்வியும் கேட்டு கொள்ளவில்லை..
போலீஸ் வந்தவுடன் அங்கு நடந்தவற்றை விளக்கி விட்டு கொலையை ஒப்புக்கொண்டு சரண் அடைவதாக கூறினாள்..
இன்ஸ்பெக்டர் வருண் கேஸ் பைல் செய்து விட்டு "வீட்டிற்கு சொல்ல வேண்டுமா? வக்கீல் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமா? " என கேட்டு இருந்தான்…
இவளோ அனைத்தையும் மறுத்து விட்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள்…அவளுக் கென ஒரு பெண் போலிசை வரவைத்து காவலுக்கு வைத்தான்…
விஷயம் கேள்விப்பட்டு டிவி பேப்பர் என அனைவரும் மறுநாள் கலையே வந்து நின்றனர்…
இன்ஸ்பெக்டர் வருண் அம்முவின் பெயரை தவிர வேறு எதுவும் அவளை பற்றி கூறாமல் தற்காப்புகென தாக்கியத்தில் இறந்ததாக கூறினான்..
அவர்கள் தற்காப்பு என்றாலும் கொலை கொலைதானே என்றனர்…
இன்னும் பல கேள்விகள் அனைத்தையும் ஒருவழியாக சமாளித்து அனுப்பினான்…
உள்ளே வந்து அம்முவிடம் அனைத்தையும் கூற…அவளோ "அவங்களுக்கு எல்லாமே நியூஸ் தான் சார்…
இதுல எனக்கு ஏதாவது ஆகி இருந்தாலும் இவர்கள் பொங்க தான் செய்வார்கள்…
ஆனால் அதையும் தாண்டி வேறு எதுவும் இவர்களால் எதுவும் செய்து விட முடியாது" என கூறினாள்…
வருணும்" நீங்க சொல்றது கரெக்ட் தான்" என கூறி அவன் இடம் அமர்ந்தான்…
ஸ்டேஷனளில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டத்தில் அவளை கண்டனர்…
அந்த நேரத்தில் தான் அதிரடியாக மனோஜின் பெற்றோர் உள்ளே நுழைந்து லாக்கப்பில் இருந்த அம்முவை நோக்கி சென்றனர்…
போனவர்கள்" எங்களோட ஒரே மகனை கொன்னுட்டியே பாவி…உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்…நீ ஆயுள் முழுசும் ஜெயிலில் இருக்கும் படி செய்யாம ஓயமாட்டோம்.." என ஆவேசமாக பேசினார் மனோஜின் தாய்…
'புள்ளைய பெத்தா போதாது…ஒழுக்கமா வளர்க்கணும்.. இல்லனா இப்டி தான் ஊருக்குள்ள அடி வாங்கி சாகும் 'என மனதில் நினைத்தவள் வெளியே அமைதியாக அவர்களை பார்த்து நின்று இருந்தாள்…
"எவ்ளோ திமிரு நம்ம கதறுறது அவ காதுலையே விழாத மாதிரி நிக்குறாளேங்க.. இவளை சும்மா விட கூடாதுங்க…"
"ஏதோ ஆதங்கத்துல பேசுறீங்கன்னு தான் அமைதியா இருந்தேன்.. என்ன சத்தம் கூடுது? இது என்னோட ஸ்டேஷன்.. இனி எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க "என சத்தம் போட்டு அழைத்து இருந்தான் வருண்..
"வயசு பொண்ணுக்கு ஒண்ணுன்னா எல்லாம் அவங்களுக்கு தான சப்போர்ட் பண்ணுவீங்க" என அப்பொழுதும் மனோஜின் அம்மா பேசுவதை நிறுத்தவில்லை…
"சரி சொல்லுங்க உங்க பையன் ஏன் அங்க போகணும்.. போகவே தான அசம்பாவீதம் நடந்துப்போச்சு.. யோசிங்க உங்க பையன் ஒன்னும் உத்தமன் இல்லை…" என் அவருக்கு புரிய vaika முயற்சி செய்தார் வருண்.
"என் பையன் எப்படி பட்டவனா வேணா இருந்து இருக்கட்டும் அதுக்காக அவனை எங்களுக்கு இல்லாமையே பண்ணிட்டாளே…
இதுல நீங்க அவ செஞ்ச கொலையே தப்பில்லைங்கற போல சமாளிச்சு பேசுறத பாத்தா எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பிக்கையே இல்லை…" என கோவத்தை வார்த்தைகளில் காட்டினார் மனோஜின் தந்தை.
"ஏன் அதுதான் கோர்ட் இருக்கே அங்க போய் உங்க நியாயத்தை கேட்டு வாங்குங்க…"என கோவமாக பேசினான் வருண்…
அவனும் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது போல் நடிப்பது…
"கண்டிப்பா இந்தியாவுல இருக்க பெரிய லாயர் தான் இந்த கேஸ் எடுக்க போறாரு…நாங்க அங்க பேசிக்கறோம்" என கூறி எழுந்து சென்றனர் மனோஜின் பெற்றோர்…
பாலத்காரம் செய்யப்பட்ட நிலையில் உடல் புண்ணாகி போன பெண்களை ஹாஸ்பிடலில் வைத்து யார் எத்தனை பேர் எங்கு என பல விஷங்களை கேட்டு கேஸ் பைல் செய்து இருக்கிறான்…பல குற்றவாளிகள் இதுவரை தண்டனை பெறவில்லை…
சிலர் தண்டனை பெற்று குறுகிய காலத்திலேயே வெளியே வந்து வழக்கம் போல வாழ்க்கை வாழ்வதை பார்த்து இருக்கிறான்…
பாதிக்கப்பட்ட பெண்களை உயிருக்கு போராடும் நிலையில் வாக்குமூலம் வாங்கி இருக்கிறான்…
எல்லாம் பேப்பரில் பதிக்கப்பட்டு பைலில் தூங்குகிறது…
இதுவே அவன் காணும் முதல் தற்காப்பு கொலை அதுவும் பெண் தன்னை காத்துக்கொள்ள அடிப்படை தாக்குதல் நிகழ்த்தி இருப்பது…
பெண்கள் தைரியமாக இதுபோல் செயல் பட வேண்டும் என்பதே இவனின் எண்ண போக்காக இருந்தது…
அதனை நடத்தி காண்பித்து இருப்பது அம்மு என்பதில் அவனுக்கு மகிழ்ச்சி கூட…
அதனாலேயே அவளை கோர்ட்க்கு அழைத்து செல்லும் வரை ஸ்டேஷன் விட்டு அகலாமல் காவல் காத்து கொண்டு இருக்கிறான்..
எதுவும் அவளை பாதிக்கவில்லை…அவளுக்கு என இருந்த சில நண்பர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதாக அவளிடம் கூறி சென்றனர்…
இதற்கும் மேல் அவளை இங்கே வைத்து இருக்க முடியாமல் கோர்ட்க்கு அழைத்து சென்று அவளை ரிமாண்ட்( கைதியின் வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு முற்பட்ட காலம், காவல் வைப்பு காலம்) செய்தனர்…
அங்கு இவள் தரப்பில் ஆஜர் ஆன உதயின் நண்பன் விக்ரம் எதுவும் வாதிடும் படியான சூழ்நிலை அமையவில்லை…
போலீஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அம்முவின் கைப்பட எழுதிய வாக்குமூலம் இருந்தது…
ஜட்ஜ்க்கு அதுவே போதுமானதாக இருந்தது…மேற்கொண்டு இந்த கேஸ்க்கான ஹீயறிங் அடுத்து எப்பொழுது என கூறி அவளை அனுப்பி வைத்தார்…
அம்முவை நீதிமன்ற காவலிலேயே வைத்து இருக்கலாம் ஆனால் வருண் தான் இன்னும் விசாரணை முடியவில்லை என கூறி காவலில் எடுத்திருந்தான்..
அவனுக்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்பட்டது.. அவளை தண்டிப்பதற்காக அல்ல எந்தெந்த வழிகளில் அவளை வெளிக்கொண்டு வர முடியும் என்பதை ஆராய்வதற்காக அவளிடம் இன்னும் விசாரணை தேவைப்பட்டது…
இன்னும் முழுமையாக சுமதியையும் எதுவும் கேட்டு முடிக்கவில்லை… அவளால் மனோஜ் கொலை செய்யப்படவில்லை என்பதையும் அம்மு தெளிவாக கூறியதால் சுமதியை கைது செய்யவில்லை…
ஆகவே அவளையும் அழைத்து கேட்க வேண்டிய கேள்விகளுக்கான பட்டியலை தயார் செய்து இருந்தான் வருண்…
இவ்வாறு ஒவ்வொருவரும் அம்முவையும் சுமதியையும் காப்பாற்றும் பொருட்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் யோசித்தும் செய்து கொண்டும் இருந்தனர் ஆனால்…
வீட்டின் நிலைமை வேறாக இருந்தது… சிந்து அப்படியாக மாற்றி வைத்திருந்தாள் ..
அவளால் உதயணன் அம்முக்காக கிளம்பி வந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை… அப்படி என்ன இருவருக்கும் என குடைந்து எடுத்து விட்டாள் …
தனமும் கோவத்தின் உச்சிக்கு சென்றவர் "அப்படியே இருவருக்கும் ஏதாவது உறவு இருந்தால் நான் எந்த விதத்திலும் தடை கூற மாட்டேன்" எனக்கு கூறினார்…
"அப்ப அப்படி பிளான் பண்ணி தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா"?
"இந்த கேள்வி உனக்கே அபத்தம்ன்னு தெரியும் தெரிஞ்சும் நீ கேட்கிற என்றால்.. நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பல… நீ மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கியோ அதை அப்படியே நினைச்சுக்கிட்டே இரு.. நாங்க உன்ன சமாதானப்படுத்த இந்த முறை எதுவும் செய்யப் போவதில்லை" என கூறி கதவை அடித்து சாத்தி சென்றார் தனம்…
" யுவராஜ்க்கே சிந்துவின் நடவடிக்கையும் பேச்சும் பிடிக்கவில்லை… அவள் இப்பொழுது எட்டு மாத கருவை சுமந்து கொண்டிருப்பதால் அமைதியாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்…
தனம் பேசியதில் ஏற்கனவே கோபம் கொண்ட சிந்துவின் மனம் தாறுமாறான சிந்தனைகளை கிளப்பி விட்டு எடாகூடமாக பேச செய்தது..
அதன் விளைவாக அவள் வந்த இந்த இரண்டாவது மாதத்தில் யாரும் பேசாத விஷயத்தை இவள் எடுத்துப் பேசினாள் …
" நான் கூட யுவராஜ் கூட ஓடிப் போய் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு நிறைய கவலை பட்டுட்டேன்..கூட இருந்த எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்னு ..
ஆனா இப்ப தானே தெரியுது அன்னைக்கு அம்முlவோட கல்யாணத்துல நான் ஓடிப் போகலைன்னா அந்த கல்யாணம் நடந்திருக்கும் ஆனா உங்க பொண்ணு நல்லபடியா வாழ்ந்து இருக்க மாட்டா…
ஒரு நாள் ஒரு பொழுதாவது பொம்பளை மாதிரி நடந்துட்டு இருப்பாளா…" என ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே..
யுவராஜ் வேகமாக வந்து அவளின் கன்னத்தில் ஒரு அரை விட்டான்…
அதிர்ந்து நின்றவள் வாசலில் நின்ற உதயின் உருவத்தை கண்டதும் "அண்ணா எல்லாரும் என்ன அடிச்சு கொடுமை பண்றாங்கண்ணா …
அதுலையும் இந்த யுவராஜ் என்னை கை நீட்டி அடிச்சுட்டாண்ணா … இதற்காகவா இவன் கூட நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..
இவனை தவிர வேற யாராலும் என்னை நல்லபடியா பார்த்துக்க முடியாதுன்னு தான இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா இவன் என்னை அடிச்சுட்டான் அண்ணா…" என அழுது கொண்டே பேச…
அவள் பேசியதை அங்கு இருந்து அனைவரும் வெறுப்பாக கேட்டுக்கொண்டு இருந்தனர்..
"இந்த அடிய நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்ன பாத்தியா அன்னைக்கு நான் அடிச்சிருக்கணும் இல்ல அம்மாவோ அப்பாவோ உன்ன அடிச்சிருக்கணும் அன்னைக்கு எதையும் உன்னை கேட்காமல் நீ அழுது அடம் பிடிச்ச அப்படின்ற ஒரே காரணத்துக்காக எல்லாரும் அமைதியா போனோமில்லையா உன்னோட வாழ்க்கையை நாங்க ஏத்துக்கிட்டோம் இல்லையா அதுக்காக நீ செய்ற நன்றி கடன் ரொம்ப நல்லா இருக்குது சிந்து" என வெறுப்புடன் உதய் கூற…
"அண்ணா நீயும் என்ன இப்படி பேசுற… உனக்கு நான் ரொம்ப முக்கியம் இல்லையா? அம்மு தான் முக்கியம்ன்னு நினைத்து தான என்னை திட்டுற?…"
" நீ எல்லாம் ஒரு முழு பைத்தியம் சிந்து அதனாலதான் நீ இப்படி பேசிக்கிட்டு இருக்க" என கோவ மிகுதியில் உதய் கூற..
' கடைசியா என்னை பைத்தியம்னே சொல்லிட்டீங்களா அண்ணா…?
" வேற என்ன சொல்றது உனக்கு இப்படி ஒரு குடும்ப வாழ்க்கை கிடைச்சதை நினைச்சு நீ ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கணும் ஆனா படலை… எல்லாரும் உன்னோட பேச்ச கேட்கணும்னு நினைச்சு உன்னோட லைப்ப நீயே ரொம்ப கிரிட்டிக்கல் செஞ்சிக்கிற..
இதையும் கேட்டுக்கோ சிந்து அம்மு ஜெயிலில் இருந்து வர வரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்…
அம்முவை ஜெயில்ல இருந்து கொண்டு வர்றது மட்டும்தான் இப்போதைய வேலை…
அதுவரைக்கும் நீ இந்த வீட்ல ரொம்ப அமைதியா தான் இருந்தாகணும்..
நடுவுல ஏதாவது பேசிகிட்டு சண்டை பிடிச்சுகிட்டு திட்டிகிட்டு ஜாட மடையா பேசிகிட்டு இருந்தேன்னா அவ்வளவுதான்…
அத்தை இனிமேல் அவளோட சாப்பாட்டுக்கு என்ன சமைக்கணுமோ அதை இனிமே அவளே தான் செஞ்சுக்குவா..இனிமே அவளுக்குன்னு நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது…
உட்கார வைத்து ராணி மாதிரி பார்த்துக்கிறாங்க இல்ல இதுவும் பேசுவ நீ இதுக்கு மேலயும் பேசுவ…
யுவராஜ் உன் மேலையும் நிறைய தப்பு இருக்குது அன்னைக்கு அவ வந்து அழுதா ஆர்ப்பாட்டம் செஞ்சா என்று அவளை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்காம அன்னைக்கே ஒரு உதை போட்டு மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்து அந்த பிரச்சனையை அன்னைக்கே தீர்த்து வைத்திருந்த இன்னைக்கு இது எதுவுமே நடந்திருக்காது…
இன்னைக்கு அவளுக்கு நடந்த ஒவ்வொன்னுத்துக்கும் இனிமே நடக்க போற ஒவ்வொன்னுகும் நீங்க ரெண்டு பேர் மட்டுமே காரணம்…
நான் இப்படி பேசிட்டேன்னு ரொம்ப பீல் பண்ற மாதிரி நடிக்கிறது சாப்பிடாம இருக்கறது உடம்பை வருத்திக்கிறது குழந்தையை கவனிக்காம இருக்கிறது இது மாதிரி எதையாவது பண்ணிட்டு இருந்த சிந்து என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும் உனக்கு…" என பெரிதாக பேசிவிட்டு மூச்சு வாங்க அமர்ந்தான்..
அவன் பேச தொடங்கும் போதே வெளியே வந்த தனம் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவரும் உடன் அமர்ந்தார்…
சிந்துவோ புயல் ஒன்று அடித்து அடங்கியது போல அமைதியாக நின்று இருந்தாள்…
அழுகையும் அடங்கி இருந்தது…
காதலி வருவாள்…