• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் – 3

மிக அழகாய் ஓர் புன்னகை வீசுவாள்...
உங்களை சிறுகுழந்தையாய்
உணர்ந்திருக்கிறீர்களா..? உணரவைப்பாள்
ஒருநாள் போதும் அவளுக்கு......!
கண்களில் கண்ணீர் வர
எப்பொழுது கடைசியாய்
சிரித்தீர்கள்..? சிரிக்கவைப்பாள்..
ஒரு நிமிடம் போதும் அவளுக்கு...!
எதிர்பாரா முத்தம் தந்து
உங்கள் மூச்சையே நிறுத்தி வைப்பாள்
ஒரு நொடி போதும் அவளுக்கு...!







“ஹேய் ஷங்கி மங்கி எழுந்திரு டீ.... ஒரு முழுநாள் லீவையும் தூங்கியே வேஸ்ட் பன்ற ஒரே ஆள் நீதாண்டி.... விடுமுறையை தூங்கியே கழிப்பது எப்படினு ஒரு புக் போடலாம் போல உன்னை வச்சு, இப்படி டிசைன் டிசைனா தூங்குற, எந்திருச்சு தொலையேன் பிசாசே.....” என்று அந்தநாளின் பத்தாவது முறையாகத் தன் தோழியை எழுப்பிக் கொண்டிருந்தாள் வித்யா..


இன்று இருவருக்கும் விடுமுறை தினம்... இன்னும் இரண்டே வாரத்தில் இவர்கள் தாய்நாடு திரும்புவதால், பர்சேசிலும், பேக்கிங்கிலும் அவர்களது பொழுது விடிகிறது.. நேற்றோடு அவர்களின் ப்ராக்டீசும் முடிந்து விட, அந்த டீனிடம் வாங்கும் திட்டில் இருந்தும் தப்பித்து விட்டார்கள்.


ஆனாலும் அவர்கள் ஒப்படைக்க வேண்டிய ரிசெர்ச் டீடைல்ஸ் ஒன்று பென்டிங்கில் இருப்பதால் இருவரையும் இன்று வரசொல்லி இருக்கிறார் அந்த டீன் ஹேரி டேவிட்.. ஹேரியை பார்த்துவிட்டு, ஷாப்பிங் போவதாக இருவரும் முந்தைய இரவில் ப்ளான் செய்திருந்தனர். வித்யா கூறுவதற்கு எல்லாம் ஷானவியும் மண்டையை ஆட்டி ஒத்துக் கொண்டிருந்தாள். அந்த தலையாட்டலின் பின்னே இப்படி ஒரு சதி இருக்கும் என்று நினைக்கவே இல்லையே இவள்.....!


ஷங்கி, மங்கி, ஷானு, ஷானும்மா என்று வித விதமாக அவளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப, ஆனால் ஷானவியோ அசைவதாய் காணோம். இவளை என்னதான் செய்வது என்று யோசித்த வித்யாவின் மூளை அதற்கான வழியைக் கண்டுபிடித்து விட்டதை அவள் கண்கள் பளிச்சிட்டு காட்டிக் கொடுத்தன.



“யுரேகா” என்ற கத்தலுடன் ஒருமுறைக் குதித்தவள், லேப்பை எடுத்து அதில் ஒரு ஆடியோவை ஓடவிட்டாள்... அதில் “அம்லு..” என்ற வார்த்தையுடன் ஆரம்பித்த அவனின் குரலைக் கொண்ட அந்த ஆடியோ, அந்த வார்த்தை முடியுமுன்னரே அணைக்கப்பட்டது...


மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளைக் கண்டுகொள்ளாமல் எனக்குத் தெரியும் உன்னைப்பற்றி என்ற ரீதியில் ஒரு நமட்டு சிரிப்புடன்... தனது டீயை ரசித்து ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் வித்யா..


“என்னப் பிரச்சினை வித்யா உனக்கு... எத்தனை டைம் சொல்லிருக்கேன் இந்த ஆடியோவை டச் பண்ணாதனு, ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா... காலங்காத்தால எரிச்சல் பண்ற... ச்சை...” என்று தன் உறக்கத்தை கலைத்ததும் இல்லாமல் அவள் வெறுக்கும் அந்த ஆடியோவையும் போட்டு தன்னை ப்ளாக் மெயில் பண்றாளே என்று நினைத்து ஷானவி கத்த ஆரம்பிக்க......


வித்யாவோ “வாட்.....? காலங்காத்தாலயா...? ஆத்தா உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... கொஞ்சம் டர்ன் பண்ணி டைம் என்னனு பாரு... மதியம் 2.மணி. நான் லஞ்ச முடிச்சிட்டு, உன்னை எழுப்பி, எழுப்பியே டயர்டாகி இப்போ டீ குடிக்கிறேன். நீ எவ்வளவு சாதரணமாக எர்லி மார்னிங்னு சொல்ற........?” என்று பதிலுக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.


தோழியின் பேச்சைக் கேட்டு நாக்கைக் கடித்தபடி திரும்பி மணியைப் பார்த்தவள், அது நிஜமாகவே மணி இரண்டைக் காட்ட, முகத்தில் டன் டன்னாக அசடு வழிந்தபடி “சாரி தியா...” என


“ஒழுங்கா ஓடிப்போய்டு, என் கண் முன்னாடி நின்ன நான் கொலைகாரி ஆயிடுவேன், கொலைகாரின்னு ஒரு பட்டத்தோட என் நாட்டை மிதிக்க எனக்கு மனசு வரல..”


“ஹேய் அதான் சாரி சொல்லிட்டேனே.... அப்புறம் எதுக்கு எண்ணைல போட்ட அப்பளம் மாதிரி பொறியிற..” – ஷானவி


“என்ன சாரி சொல்லிட்டேனே....! உன்னையெல்லாம் பெத்தாங்களா... இல்லை செஞ்சு என்கூட அனுப்பி வச்சாங்களா...? அதெப்படி உன்னை மாதிரி ஒரு டிசைனை வீட்டுல இத்தனை வருஷம் மேச்சாங்க..” – வித்யா


“ஹே போதும் நிறுத்து.... என்ன விட்டாப் பேசிட்டே போற, ஏதோ கொஞ்சம் கண் அசந்துட்டேன், அதுக்கு நீ இவ்ளோ பேசுவியா..?” – ஷானவி


“ என்னது கொஞ்சமா...?” – வித்யா


“ஷாக்கை கொற, ஷாக்கை கொற..... எதுக்கு உனக்கு இவ்ளோ ஷாக்... பர்ஸ்ட் இப்படி ஷாக் ஆகுறதை நிறுத்து... எதுக்கெடுத்தாலும் கண்ணை விரிச்சிட்டு, முறைச்சிட்டு.... என் பாஷையில அது கொஞ்சம் தான்... இப்போ என்ன நான் கிளம்பனும் அவ்ளோதானா...? டூ மினிட்ஸ் எப்படி கிளம்பறேன்னு மட்டும் பாரு....” என்றவள் மௌத் வாஷை எடுத்து வாயைக் கொப்பளித்துவிட்டு, முகத்தைக் கழுவி, சானிடரி டிஷுவால் துடைத்துவிட்டு, முடியை மேலோடு சீவி, மொத்தக் கூந்தலையும் கொண்டையாக்கி ஒரு கிளிப்பில் அடக்கி தன்னுடைய லாங் லெதர் ஜாக்கெட்டை அணியும் போது அவள் கையில் சிக்கிக்கொண்டது அந்த செயின்.


அதைப் பார்த்ததும் அவளது உணர்வுகள் மொத்தம் வடிந்து விட, அந்த செயினையே ஒரு நொடி விழி விரித்துப் பார்த்தாள்.. இது எனக்கானது தானா... இல்லை வேறொருத்தியின் உடமையை நான் பறித்துக் கொண்டேனா..? கேள்விகள் படையெடுக்க ஆரம்பிக்க, கண்களை மூடி அதை மறக்க முயற்சித்தவள், அடுத்த நொடி தன் உணர்வுகளை மறைத்துவிட்டு அந்த லெதர் ஜாக்கெட்டை அணிந்து, ஷூவை மாட்டினாள்.


இதற்கெல்லாம் உண்மையிலேயே அவளுக்கு இரண்டே நிமிடங்கள் தான் ஆகியிருந்தது.. ஷானவி கிளம்புவதைப் பார்த்து அதிர்ச்சியில் இருந்த வித்யாவை, கதவு திறக்கும் ஓசை நினைவுக்கு கொண்டு வர, அங்கேத் தன் லேப்டாப் பேக் சகிதம் ஷானவி நின்றிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ந்தாள்.


தோழியின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை கண்டாலும், அவளிடம் எதையும் கேட்காமல், அவள் மனதை உணர்ந்து “ஹே என்னடி டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி, இந்த டூ மினிட்ஸ் ரெடியாகுற படலம்.... உன்கிட்ட தாண்டி கத்துக்கணும் குளிக்காமல், பிரஷ் பண்ணாமல் அவுட்டிங் கிளம்புவது எப்படி என்று..?” என் கிண்டலடித்தாள்.


“ஓகே... நீ இப்படியே என்னைப்பத்தி ஆராய்ச்சி பண்ணி புக் போடுறதுலையே இரு.... நான் போய் நம்ம ரிசர்ச் சப்மிட் பண்ணிட்டு வர்றேன்... போர் ஓ கிளாக் அப்பாய்ன்மென்ட், இப்போ 2.30..”


“அய்யோ இவளப் பத்தி தெரிஞ்சும் வாயை விட்டுட்டேனே... விட்டுட்டு போயிடுவாளே...” என தனக்குள்ளே முணுமுணுத்தபடியே “ஹே நில்லுடி.. நில்லுடி பிசாசே நான் வர்றேன்.. நீ குளி இல்லாம அப்படியே கூட வா... எனக்கென்ன வந்தது..” என்று மற்றவளின் மனம் மாறுவதற்குள் தன்னுடைய பேக்கையும் அள்ளிக்கொண்டு அவளுக்கு முன்னே வெளியேறினாள் வித்யா.


தனக்கு முன்னே காரில் அமர்ந்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு தானும் அமர்ந்து காரைக்கிளப்பினாள். சிலநிமிடங்களில் இருவரிடமும் அமைதியே தென்பட, அதைப் பொறுக்காமல் தன் கையேடு கொண்டு வந்திருந்த மற்றொரு பையில் இருந்து ஒரு சப்பாத்தி ரோலை எடுத்து நீட்டினாள் வித்யா.


“இதுக்குத்தான் நீ இருக்கணும் மச்சி..... கொண்டு வந்தியா..... எங்க என்மேல இருக்க கடுப்புல அம்போனு விட்டுட்டியோன்னு நினைச்சேன்..” என்றாள் ஷானவி சப்பாத்தியை உள்ளே தள்ளியபடி.... அவள் கூறியதைக் கேட்டு வித்யா முறைப்பதையும் பொருட்படுத்தாமல், அடுத்தடுத்து நீட்டிய ஐந்து ரோலையும் முடித்துவிட்டு சாலையில் தன் கவனத்தைப் பதித்தாள்.


மீண்டும் ஷானுவிடம் ஒரு கோல்ட் காப்பியைத் திணித்துவிட்டு “ஏண்டி இவ்வளவு பசியை வச்சிட்டுமா நீ தூங்கின...? திஸ் இஸ் டூ பேட் ஷானு... வாட் ஆர் திங்கிங் அபௌட் யு..?” எனவும்....


“நோ.. நோ மச்சி...! எனக்குப் பசிச்சா எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் போட்டுட்டு, முதல் வேலையா சாப்பிடுறதை தான் செய்வேன். நீ என்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்குற, பட் இந்த செகண்ட் நான் ரொம்ப ஹேப்பி மச்சி.... நீ எனக்காக வருத்தப்படுறது ரொம்ப பிடிச்சிருக்கு தியா..! Thank you so much for your solicitude…! என்றவளின் கண்களில் லேசாய் ஈரம் படர்ந்ததோ....


“ஹே ஸ்டாப்..... ஸ்டாப் இதுக்கு மேல சென்டிமென்டா பேசி, என் மூடை மாத்திடாத... இன்னையோட இந்த புக் தூக்குற வேலை, படிக்கிற வேலை எல்லாத்தையும் விட போறோம்னு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.... அதை என்ஜாய் பண்ண விடு.... ஒகே பேபி.... நம்மளோட அடுத்த ப்ளான் என்ன..?”


வித்யாவின் பேச்சில் கவனமில்லாமல் வந்தவள், அவள் அப்படி கேட்கவும் ஒரு ப்ளோவில் “ம்ம்ம் உனக்கு பேமிலி பிளானிங் தான்..” என்று சினிமா டையலாக்கை விட்டு விட...


“என்னது பேமிலி பிளானிங்கா...? என்ன ஒரு தைரியம் இருந்தா நீ அப்படி சொல்லுவ... அதுவும் என்னைப் பார்த்து.....” என்று ஷானவியை எரித்துவிடும் பார்வையை வீசி முறைத்துக் கொண்டிருந்தாள் வித்யா.


“ஹே... ஹேய் தியா.... சாரி தியா... ஒரு ப்ளோல வந்துருச்சுடி, இதுக்குப் போய் டென்சன் ஆகாத....”


“என்ன ப்ளோ... இல்ல என்ன ப்ளோங்குறேன்... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாத புடலங்கா ப்ளோ.. அதுவும் என்னைப் பார்த்து எப்படி டி இப்படி ஒரு வார்த்தை சொன்ன... இனிமேல் அந்த வடிவேல் காமெடி சிடி மட்டும் நீ பார்த்த உன்னைக் கைமா பண்ணிடுவேன், அதைப் பார்த்து பார்த்துதான் லூசு மாதிரி டைலாக் விடற...”- அவளால் ஜீரணிக்க முடியவில்லை.... திருமணம் முடிந்த இரண்டே நாளில் அவள் கணவன் ஆர்மி பணியில் சேர சென்று விட, அடுத்த பத்து நாளில் இவளுக்கு இலண்டன் வாசம்....

இதோ மூன்றாண்டுகள் முடிந்து இப்போதுதான் மீண்டும் தாயகம் திரும்ப போகிறாள்... அன்றிலிருந்து கணவன்-மனைவி இருவரும் போனிலும் ஸ்கைப்பிலும் குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். இது எல்லாம் தெரிந்தும் இப்படி சொல்லிவிட்டாளே என்ற ஆதங்கம் அவளுக்கு....


விளையாட்டுக்கு என்றாலும் தான் பேசிய வார்த்தைகள் அவளை வருத்தப்படுத்தி விட்டது என்பதை உணர்ந்த ஷானு, தோழியை இயல்பாக்கும் பொருட்டு “அம்மா தாயே வித்யாலட்சுமி தெரியாம ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்.... அதுக்கு இப்படியா...? மன்னிச்சு... மன்னிச்சு... ப்ளீஸ் பேபி..... ஹே பேப்... டோன்ட் சீரியஸ் ஆங்ரி வித் மீ.... ப்ளீஸ் டியர்....” என்று மூக்கைச் சுருக்கி கெஞ்சினாள்.


ஷானவியின் கெஞ்சலில் மனம் இறங்கினாலும், அதை அவளிடம் காட்டாமல் ஒரு முறைப்புடனே சாலையைக் கவனிக்கத் தொடங்கிய வித்யாவின் மனதில் தோழியைப் பற்றிய எண்ணங்களே.... இவளுக்கு ஏற்பட்ட மனக்காயத்தில் இருந்து இந்தளவிற்கு மீண்டு வருவாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்... அதற்கு ஒருவகையில் இந்த லண்டன் வாசம் உதவியது என்றால், மற்றொரு வகையில் வித்யா தன் முழு முயற்சியுடன் ஷானவியை மாற்ற போராடினாள்.


இப்பொழுதெல்லாம் ஷானவி யாரிடமும் தன் வால்தனத்தைக் காட்டுவதில்லை. அவளது இயல்பே மற்றவருக்கு மட்டுமல்ல, அவளுக்குமே மறந்து விட்டிருந்தது. ஆனால் வித்யாவின் அருகில் மட்டுமே அவள் சற்று இயல்பாக இருப்பாள். அதற்கு காரணம் வித்யாவின் செயல்கள் தான்.


இலண்டன் வந்த புதிதில் இருவருக்குள்ளும் ஒருவித பயம் தோன்றியது. புது இடம், இருவருமே பெண்கள் எப்படி சமாளிப்பது என்று... ஆனால் வித்யாவின் அப்பா ஹைத்ராபாத்தில் முக்கிய புள்ளி... அவர் தன் நண்பர் மூலம் ஒரு வேலையாளை அமைத்து அவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாய் இருப்பது போல் பார்த்துக் கொண்டார்.


முதல்கட்ட பயத்தில் இருந்து வெளியில் வந்த வித்யாவிற்கு தோழியின் அமைதி அப்போதுதான் கண்ணில் பட்டது. இருவருக்குமே திருமணமாகி மாதம் ஒன்றே கடந்திருந்தது அப்போது. இருவருக்கும் ஒரே நாள்... ஒரே நேரம்... ஒரே இடம்... என்ன ஒருத்திக்கு லவ் மேரேஜ்... மற்றவளுக்கோ கட்டாயத் திருமணம்...


எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி, அதுவும் அவனிடம் இருந்து சற்றும் அந்த செயலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.. அது அவள் முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியிலேயே மற்றவர்களால் உணர முடிந்தது.. அது அவளுக்கு மட்டமல்ல அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றும் பின்னே புரிந்தது.


அன்றும் அதன்பிறகும் நடந்த நிகழ்வுகளில் சிக்கி முற்றிலும் தன் இயல்பை தொலைத்து ஒரு பொம்மை போல் வலம் வந்து கொண்டிருந்தாள். யார் பேசினாலும் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துக் கொண்டிருந்தவள். எந்த நேரமும் தனிமையையும், மௌனத்தையும் தன் துணையாக்கிக் கொண்டாள்.


தன் பிரச்சினையில் இருந்து முதலில் வெளிவந்த வித்யா, தோழியின் இந்த நிலை கண்டு அதிர்ந்து போனாள். அவளை பழைய நிலைக்கு கொண்டுவரும் முடிவை உறுதியாய் எடுத்துக் கொண்டாள். அது ஒன்றும் அவ்வளவு சாதாரனம் அல்ல என்று அவளுடன் பேசுவதிலேயே தெரிந்தது. அதில் இம்மியும் மனம் தளராமல் தன் முயற்சியை விடாமல் தோழியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றினாள்.


பெங்களூரில் படிக்கும்போது இரண்டு வருடங்கள் இருவரும் ஒரே ஹாஷ்டலில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அதன் பிறகு ஷானவிக்கு ஏற்பட்ட சிறு உடல் நலக்குறைவால் மல்லிகாவின் துணையோடு சிபியையும் ஷானவியையும் தனியாக ஒரு பிளாட் எடுத்து தங்க வைத்தனர் அவர்களின் வீட்டினர்.


அவளுடன் கழித்த அந்த இரண்டு வருடங்களாகட்டும், கல்லூரியில் கழித்த அந்த ஐந்து ஆண்டுகளாகட்டும் ஷானவியின் கலகலப்பும், குறும்பும், கோபமான ஆட்களைக் கூட சிரிக்க வைத்து விடும் அவளின் குணமும் இன்று அடியோடு மறைந்து போயிருந்தது.


அதை மீட்க வேண்டும் என்ற உறுதியும், தன் காதல் திருமணத்தில் முடிய, முழு உதவியும் செய்த சிபிக்கு செய்யும் நன்றியாகவும், அவளிடம் தன் முயற்சியைத் தொடர்ந்து செயலாற்றி வெற்றியும் பெற்றிருந்தாள்.


முதலில் மற்றவர்களை போல வித்யாவையும் ஒதுக்கித்தான் வைத்து இருந்தாள். ஒரே அறை, ஒரே கல்லூரி, ஒரே வகுப்பறை என்று இருந்தாலும் ஒதுக்கத்தை காட்டத்தான் முனைந்தாள். என்ன தான் ஒதுங்கி போனாலும், சில சமயங்களில் கோபமாக கத்தி விட்டாலும், அடுத்த நிமிடமே எதுவுமே நடவாதது போல தன்னிடம் வழக்காடும் தோழியை ஓரளவுக்கு மேல் தள்ளி வைக்க முடியவில்லை. மற்றவர்களிடம் காட்டும் கோபத்தை இவளிடம் காட்ட முடியாமல் சற்றே தன் பிடிவாதத்தை தளர்த்து வித்யாவிடம் பேச ஆரம்பித்தாள்.


அவளது இந்த ஒரு செயலே தன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்து அவளை தனிமையில் விடாது பார்த்துக் கொண்டாள். வித்யாவின் சிந்தனைகள் ஷானவியை சுற்றியே நிகழ, கார் அந்த பலமாடிக் கட்டிடத்தில் இருந்த ஹாஷ்பிடலின் முன் நின்றது.


அதன்பிறகு இருவரும் மற்றவரைப் பற்றி யோசிக்க கூட நேரம் இருக்கவில்லை. அவர்கள் எடுத்துக்கொண்ட ரிசர்ச்சின் முடிவுகளை இன்று தன் தலைமை மருத்துவரின் முன்னால் காட்டி விளக்க வேண்டும். அந்த டென்சனே இருவருக்கும் அதிகம் இருந்தது.


தமிழ் பெண்களுக்கே உண்டான சிறிது நடுக்கத்துடனே ஆரம்பித்த அந்த எக்ஸ்ப்ளனேசன், அதன் பிறகு அவர்களுக்கே உண்டான வேகத்துடனும், விவேகத்துடனும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.


அங்கு கூடியிருந்த மருத்துவர்களின் சராமாரியான கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் அறிவுப்பூர்வமான தங்கள் பதில்களை தெரிவித்து அவர்கள் கைத்தட்டலையும், பாராட்டுக்களையும் பெற்று வெற்றியுடன் அந்த conferance ஐ முடித்து மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தனர்.


இனி எந்தக் கவலையுமில்லாமல் தன் காதல் கணவனை காண போகலாம் என்ற நினைப்பே வித்யாவுக்குள் இன்ப ஊற்றுக்களாய் பொங்க, அடுத்து ஷானவி கூறிய செய்தியில் கோபம் தலைக்கேற, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் வித்யா...