• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் – 4

என்னுள் தவங்கிடக்கும் ஏராளமான வலிகள்
என்னைவிட வலுவாய் ஆழமாய்....
வேறெந்தக் கரத்தாலோ விதைக்கபப்ட்டு
அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன...
நாளை கொடுக்கலாமென்று நான்காய்
மடித்து வைக்கப்பட்ட கடிதமொன்று மீண்டும்
பிரிக்கப்படும் தேவையற்றுப்போனது.....
ஒரு நாளின் வித்தியாசத்தால் சற்றே
தள்ளிப்போடப்பட்ட நட்பின் சந்திப்பொன்று
என் தயக்கத்தினால் சொல்ல இயலாமல்
தாமதித்தத் தருணங்களின் ஒட்டுமொத்தத்
துயராட்சியானது.........
தவறவிட்டத் தருணங்களை எண்ணி
மனதிலே மாபெரும் வலி சுமந்து புலம்பலை
முன்னிறுத்துகிறது..
வீதியில் நடக்கிறேன் விரைந்து முந்துகிறது
முன்பே மனம் குமுறும் வேதனையின்
பிதற்றல்கள்.....
தாமதமாக காதலிக்கலாம் ஆனால்
காதலை தாமதமாக சொல்லி விட்டால்...?






உடலின் உள்ளெழும்பு வரை குளிர் ஊடுறுவ, ஆங்காங்கே சிறுசிறு துளிகளாய் பனி பொழிந்து வெண் முத்துக்களாய் தன் இருப்பைக் காட்டிக்கொண்டுடிருக்க, இது எதையும் பொருட்படுத்தாது நண்பர்கள் மூவரும் தங்கள் ஜாகிங்கை தொடர்ந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வயதான ஒருவர் “ஹாய் ஜென்டில்மேன்ஸ் ஹௌ இஸ் யுவர் சாட்டர்டே பார்டி.... என்ஜாய் பண்ணீங்களா..” என்றார் அவர்களைப் பார்த்து... சிபியும், ஆகாஷும் தீபக்கை முறைக்க, அவர்களை கண்டுகொள்ளாமல் “எஸ்... கேப்டன் அங்கிள் வெரி ஹாட் அண்ட் சில், செம என்ஜாயிங்... த பார்டி....” என தீபக் பதில் அளித்தான்.


“நைஸ் பாய்ஸ்... இன்னைக்கு ஈவ்னிங் நம்ம குணால் பேச்சிலர் பார்ட்டி இருக்கு... யூ ஆர் மோஸ்ட்லி இம்பார்டன்ட் பெர்சன்ஸ்.... சோ டோன்ட் பர்கெட் தட்... கம் அண்ட் ஜாயின் வித் அஸ் ஜென்டில்மேன்ஸ்..... லெட்ஸ் செலப்ரேடிங் தி பார்டி.... ஓகே ஐயாம் லீவிங் கைஸ்... எஞ்சாய் யுவர் டே...” என்று இவர்கள் பேச இடம் கொடுக்காமல் அவரே அனைத்தையும் பேசிமுடித்துவிட்டு கிளம்பினார் கேப்டன் சூரஜ்..


மழை பெய்து ஓய்ந்தது போல் அந்த இடமே அமைதியாக இருக்க “என்ன மனுஷனோடா இந்தாளு.... எப்போ பாரு எங்க ஓசி சரக்கு கிடைக்கும்னு அலையுறாரு.... பர்ஸ்ட் அந்த சோனியா ஆண்டிக்கிட்ட இந்த மனுஷனைப் பத்தி போட்டுக் கொடுக்கணும்...” என்று தீவிரமாய் தீபக் கூற..


“அன்னைக்கு நைட் பார்ட்டியை கெடுத்ததும் இல்லாம, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை... உன்னோட சேட்டையை எல்லாம் வீடியோவா எடுத்து என் தங்கச்சிக்கு அனுப்பி வைக்கிறேன்... அப்போதான் நீ கொஞ்சம் அடங்குவ... சின்னப்பிள்ளைங்க கூட தோத்துடுவாங்கடா, நீ பண்ற அட்டகாசம் தாங்க முடியல....” என ஆகாஷ் தன் கோபத்தைக் காட்ட.....


“இதோ பாருங்க டியர் பிரண்ட்ஸ்.... என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா...? சும்மா வித்யா வித்யானு பயமுறுத்துறீங்க... அப்படியே நீங்க சொன்னா நாங்க பயந்துடுவோமா...? இன்னுமா நீங்க சொல்றதெல்லாம் கேட்பா.... போங்கடா.... என் தியா செல்லம் நான் சொல்றதை மட்டும் தான் கேட்பா..! ஆல்ரெடி நீங்க என்ன சொல்லிக்கொடுத்தாலும் நம்பக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்... ஹி..ஹி....” என்று தீபக் மேலும் மேலும் அவர்களை எரிச்சல் படுத்த....


“டேய் ஏதாவது பேசி டென்சன் பண்ண, உன்னை சாவடிச்சிடுவேன்....” என்று சிபி அவனிடம் எகிற,


“இப்போ எதுக்கு உனக்கு இந்த கோபம் நான் என்ன பொய்யா சொன்னேன். நான் நல்லா எஞ்சாய் பண்ணேன். அதைத்தான் சொன்னேன்..” என்று தீபக் அதிலேயே நிற்க...


“எனப் தீபக்.... டைம் என்னாச்சு பாரு...... டுடே ஐ கோ டூ தி பீல்ட்...” என ஆகாஷ் கூற, மற்ற இருவரும் எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பினர்...


சிபி மற்றும் தீபக் ஆகாஷ் மூவரும் மூன்றாண்டுகளாக இந்திய இராணுவத்தில் மருத்துவராக பனி புரிகின்றனர். சிபிக்கு சிறுவயதில் இருந்தே தன் தந்தையைப்போல் ஒரு ராணுவ மருத்துவராக பணிபுரிய வேண்டும் என்ற லட்சியமே இருந்தது.


தீபக்கும் ஆகாஷும் சிபியுடன் சேர்ந்து, அவனது ஆர்வத்தைப் பார்த்து அவனோடு பயிற்சியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக மூவருமே இப்போது ஒரே இடத்தில் பணி புரிகின்றனர். முதலில் டெல்லி ராணுவ மருத்துவமனையில் ஆறுமாத கால பயிற்சியும், அதன் பிறகு பீல்ட் ஏரியா,( யுத்தம் நடக்கும் இடங்கள், மீட்பு பணிகள் நடக்கும் இடங்கள் ) பீஸ் ஏரியா என்று பிரிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலை செய்து வருகின்றனர்.


வடமாநிலங்களில் நடக்கும் யுத்தங்கள், மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டவர்கள், போன்றவர்களுக்காக ராணுவ மருத்துவர்கள் மாதத்தில் பத்து நாட்கள் என்று பீஸ் ஏரியாவில் இருந்து பீல்டுக்கு சென்று வருவது வழக்கம். யுத்தம் நடக்கும் சமயங்களில், அவர்களும் அங்கேயேத் தொடர்ந்து தங்க வேண்டியிருக்கும் மாதகணக்கில். இன்று ஆகாஷ் பீல்டிற்கு செல்ல வேண்டும். அவனையடுத்து சிபி.


ஆகாஷை அனுப்பி வைத்து விட்டு நண்பர்கள் இருவரும் மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். அடுத்தடுத்து அவர்களது நேரத்தை வேலை மென்று திங்க, நோயாளிகள் முடியும் நேரத்தில் தீபக்கின் போன் அலறியது. அதை எடுத்து பார்த்தவன் அந்த நேரத்தில் வித்யாவின் அழைப்பை சற்றும் எதிர் பார்க்கவில்லை. என்னவோ பிரச்சனை என்பதை யூகித்தவன் போனை எடுத்தான். அந்தப்பக்கம் அவள் என்ன கூறினாலோ தீபக்கின் முகம் முழுவதும் பதட்டம் வந்து அப்பிக்கொண்டது.



நான்காவது முறையாக காப்பியை ஆர்டர் செய்த நண்பனை கொலைவெறியோடு முறைத்து கொண்டு இருந்தான் சிபி. அவனின் பொறுமையும் அவனிடம் டாட்டா காண்பித்து கொண்டு நான் போய்விடுவேன்.. நான் போய்விடுவேன் என்று கடுப்பைக் கிளப்பியது... பறக்க இருந்த பொறுமையை இழுத்து பிடித்தவாறே “இப்போ என்ன தாண்டா உன் பிரச்சனை, சொல்லித்தொலையேன், வித்யா கூட ஏதும் ப்ராப்ளமா.. இல்லை உன் மாமனார் கூடவா.... பேசண்ஷை பார்க்க விடாம இழுத்துட்டு வந்ததும் இல்லாம, இப்படி எதுவும் சொல்லாம டென்சன் பண்ணாத.... என்னனு சொல்லுடா கடன்காரா..?” எனக் கத்தினான்.


அப்படி சிபி கத்துவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வித்யாவிடம் இருந்து போன் வந்ததில் இருந்து இவன் இப்படித்தான் இருக்கிறான்... ‘சிபியிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே நடந்த பட்டிமன்றத்தின் நடுவில் சொல்லி விடலாம் என்ற முடிவிற்கு வந்தவன், அவனை கேன்டீனுக்கு இழுத்துக்கொண்டு வந்தான்.


என்ன முடிவு எடுத்தாலும் இதை சொன்னதும் சிபி எப்படி ரியாக்ட் செய்வான் என்று பயந்து, அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் காப்பியை குடித்து தன்னை சமன்படுத்த முயற்சிக்கிறான். முயற்சிக்கிறானே தவிர அது அவனால் முடியவில்லை.


சீரியசான நேரங்களில் கூட விளையாட்டுத் தனமாய் இருப்பவன் இன்று ஏன் இவ்வளவு தடுமாறுகிறான், ஒருவேளை அவள் ஏதேனும் கூரியிருப்பாலோ..? இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் வருகிறார்கள். வித்யாவிடம் இவள் ஏதேனும் விபரீதமாய் உளறியிருப்பாள்.. உடனே இருக்கிறான் என்று நண்பனின் நிலையை சரியாகக் கணித்தான் சிபி.


அதுவே அவனுக்கு இன்னும் டென்சனை ஏற்றியது. ஆனாலும் தன் பதட்டத்தை வெளியில் காட்டாமல் சாதரணமான முகத்துடன் அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான்.


தீபக்கும் இனியும் தாமதிக்க வேண்டாம் என்ற முடிவுடன் வித்யா அவனிடம் பேசியதைக் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்ப, தீபக்கிற்குத்தான் இப்போது தலை வெடித்தது. ‘நான் எவ்ளோ பெரிய மேட்டர் சொல்லிருக்கேன், இந்தக் கடன்காரன் என்னடானா ஒரு ரியாக்சனையும் காட்டாம போறான்.’


‘ஒருவேளை எனக்கும் சொல்லிட்டு, அவன்கிட்டயும் புலம்பித் தள்ளிட்டாளோ என்னோட டார்லி..., ச்சே.. ச்சே.. இருக்காதே, சிபி வருத்தபடுவதை அவளால் தாங்க முடியாதே.... அதனாலதான என்கிட்டே அழுது தீர்த்தா.. லவ்வர்ஷ்க்கும், ஹஸ்பன்ட் அண்ட் வைப்புக்கும் மீடியேட்டர் வேலைப் பார்த்தது போய், இப்போ அண்ணன் தங்கச்சிக்கு மீடியேட்டர் வேலை பார்க்குறேன். என்ன கொடுமைடா தீபக் இது...’ எனத் தனக்குத்தானே புலம்பியவன், தன் எதிரே சிரிப்புடன் நின்றிருந்த சிபியைக் காணவும் எரிச்சல் வந்தது.


“ஏண்டா உனக்கு என்னைப் பார்த்தா எபபடித் தெரியுது... நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு எழுந்து போயிட்டு இருக்க, நீ இவ்ளோ கூலா இருக்குற அளவுக்கு நான் ஒன்னும் காமெடி சொல்லல, பர்ஸ்ட் நீ வீட்டுக்கு போன் பண்ணி பேசு, அவ சொன்னதைச் சொல்லி அவளோட பேரண்ட்சை பேச சொல்லு அவளிடம். என்ன நினைச்சிட்டு இருக்கா அவ மனசுல...” என கத்த ஆரம்பித்தான் ஆகாஷ்.


நண்பனின் கோபத்தை பார்த்தவன் “இப்படி எதாவது ஒரு பிராப்ளம் இழுத்து விடுவானு நான் எதிர்பார்க்கத்தான் செஞ்சேன்... என்ன இங்க வந்ததும் ஆரம்பிப்பா என்று நினைச்சேன்.... இப்படி முன்னாடியே ஷாக்கு கொடுப்பான்னு எதிர்பார்க்கல, இதை சொல்லத்தான் கூப்பிட்டு வந்தியா...... ப்ரீயா விடு.... வித்தியை டென்சன் ஆகாம இருக்கச்சொல்லு.... வா கிளம்பலாம்.. எனக்கு நாளைக்கு ஒரு சர்ஜரி இருக்கு, அதுக்கு ஸ்டடி பண்ணனும் நீ வர்றியா, இல்லை நானே போகவா...” என்றான்.


“டேய் நான் என்ன சொன்னேனாவது உன் மரமண்டையில் ஏறிச்சா இல்லையா...?”


“இதோ பார் தீபக் எனக்கு எல்லாம் புரியுது, இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்கும்தான் தெரியல, பட் எங்க பிரச்சினையை வீடுவரைக்கும் நான் கொண்டு போக மாட்டேன், இனியும் அவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்க மாட்டேன். அதுதான் டைம் இருக்குல்ல, யோசிக்கலாம்... பர்ஸ்ட் அவங்க இன்டியா வரட்டும்.. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு பார்க்கலாம்..”


“மச்சான் நீ சொல்றது எல்லாம் ஓகேதான்.. ஆனா அவள் அந்த அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டுத்தான் வருவா என்றும் வித்யா சொல்றா.. உனக்கேத் தெரியும் ஒரு காண்ட்ராக்ட்ல சைன் பண்ணிட்டா எந்தப் பிரச்சினையா இருந்தாலும் அதை மைன்ட் பண்ண மாட்டாங்க, அவங்களுக்கு அது தேவையும் இல்ல, அவனோட ரிசர்ச்சை கம்ப்ளீட் பண்ணிக் கொடுத்தே ஆகனும். இப்போ அதை அவ சைன் பண்ணிட்டு வந்துட்டா என்ன பண்றது...”


“ம்ம் எனக்கும் புரியுது மச்சான்.... நான்தானே அவள் லண்டன் போகணும், எம்.எஸ் பண்ணனும், இதைப் படிக்கணும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். அதைத்தானே அவளும் செய்திருக்கா.. இதில் அவளை எங்கேத் தப்பு சொல்ல முடியும்.... இது நான் செய்த தப்பு.... நான் செய்த தப்பை நானே தானே சரி பண்ணனும், அதுக்கு ஒரு வாய்ப்பாக் கூட இது அமையலாம். உடனே என்னால எதையும் யோசிக்க முடியல, ஆகாஷ் வரட்டும் பார்ப்போம்.”


“என்ன மச்சான் பேசுற, நீ என்னைத் தப்பு பண்ணின. அவளையும், அவ வாழ்க்கையையும் ஒரு நாதாரிக்கிட்ட இருந்து காப்பாத்திருக்க, அதை மறந்துடாதே...”


“ப்ளீஸ் தீபக்... அதைப்பத்தியே நான் பேச விரும்பல், அதோட நான் காப்பாத்தினது என்னோட வாழ்க்கையையும் தான். அவதானே என்னோட வாழ்க்கையே...!


“ரிலாக்ஸ் மச்சான்... நீ தேவையில்லாம எதையும் யோசிக்காத, நல்லதையே நினை.... நல்லதே நடக்கும்..... அதான் என் பொண்டாட்டி அங்க இருக்காளே, உனக்காக அவளை குண்டுகட்டாக தூக்கிட்டு வந்தாலும் வந்துருவா... நீ மட்டும் ம்ம்னு சொல்லு..”


“ஹாஹா.. மச்சான் என்னடா, என் சிஷ்டர்க்கிட்ட பயம் விட்டுப்போச்சா... இரு இன்னைக்குப் பேசும் போது சொல்றேன்..”


“டேய்... துரோகி... நீயெல்லாம் நண்பனாடா... அப்படி நீ எந்தக் கழுதையையும் மேய்க்க வேணாம்.... எல்லாத்தையும் நானே மேச்சிக்கிறேன். நீ கிளம்பு ஏதோ ஸ்டடி பண்றேன்னு சொன்னியே....”


“ஹாஹா.... மச்சான் இன்னுமாடா உன் பயம் போகல அவக்கிட்ட...” என்று அவனைக் கடுப்படித்தவன்... பின் சீரியஸாகி “ம்ம்ம் ஆமாண்டா.... ஆகாஷோட கேஸ்தான் அது, அவன் பீல்டுக்கு போகவும் என்னை அட்டென்ட் பண்ண சொன்னாங்க, அசிஸ்க்கு யாருன்னு தெரியல, நீ ப்ரீயா இருந்தா உன் நம்பர் கொடுத்துடு.... எனக்கும் டென்சன் இருக்காது....”


“எந்த கேஸ்.... அந்த சுமிதா ஆன்டியா... நாளைக்கு எனக்கு கேஸ் இல்ல, ஓபி மட்டும்தான்.... நான் லெட்ஜர்ல நம்பர் ஆட் பண்ணிடுறேன்... கால் பண்ணா வந்துடுறேன்... நோ பிராப்ளம்.... என்ன அந்த பேச்சிலர் பார்டி தான் அட்டென்ட் பண்ண முடியாது... அதுதான் யோசனையா இருக்கு...” என்று அவனிடம் புலம்ப, ‘உன்னையெல்லாம் திருத்தவே முடியாது’ என்ற ரீதியில் சிபி முறைக்க ஆரம்பித்தான்.


சீரியசாய் இருவரும் தொழில் சம்மந்தமாக பேசிக்கொண்டாலும் இருவரின் மனதிலும் வாழ்க்கை பற்றிய பயம் இருக்கத்தான் செய்தது... இருவருக்கும் அடுத்தவர்கள் பற்றிய கவலையே.... தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் வாழ்க்கைக்காக போராடிய நண்பன், இன்று அவன் வாழ்க்கையவே தொலைத்து விடுவானோ என்ற பயம் தீபக்கின் மனதில்...


தன்னைப்பற்றியே யோசித்து நண்பனும் அவன் மனைவியும் அவர்கள் வாழ்க்கையை வாழாமலே போய்விடுவார்களோ என்ற பயம் சிபியின் மனதில்... இதுதான் உண்மையான நட்பின் அடையாளமோ......

 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
653
88
63
Coimbatore
இந்த கதையை படித்த மாதிரி இருக்கு.