• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,051
473
113
Tirupur
அத்தியாயம் - 8

என் உயிர் வாழப் போதும் உன்
உள்ளங்கை வெப்பம்..!
என் மழைத்துளிக்குப் போதும்
உன் முகத்தோடு ஓர் ஸ்பரிஷம்..!
என் பயணங்களுக்குப் போதும்
உன் பாதங்களின் பக்கம்..!
என் அதிகாலைக்குப் போதும்
நீ வந்த அழகான கனவு..!
என் மௌனங்களுக்குப் போதும்
உன் உயிர் துளைக்கும் பார்வை..!!




“உனக்கு என்ன நீ பெரிய அட்வெஞ்சர்” பண்ணினதா நினைப்பா.... கொஞ்சம் விட்டிருந்தா இன்னேரம் உனக்கு சங்கு ஊதிருப்பானுங்க, அறிவில்ல...... நான் தான் காரை விட்டு இறங்காதேனு சொல்லிட்டு இருக்கேன், ஜாக்கிசானுக்குத் தங்கச்சி மாதிரி ஜம்ப் பன்ற.... என கை, கால்களில் கட்டோடுப் படுத்திருந்த ஷானவியைப் பார்த்து ஏகத்துக்கும் குதித்துக் கொண்டிருந்தான் சிபி.


அவளுக்கு அடிபட்டுவிட்டது என்றதும், அவனது மனம் ஒரு நிலையில் இல்லை. அவனிடம் சிக்கியவர்கள் அனைவரையும் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தான். ஷானு இப்போதுதான் மயக்கத்தில் இருந்து எழுந்திருந்தாள். அதுதான் தற்போது அவளை வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருக்கிறான். அவளோ அவன் திட்டுவது எதுவும் புரியாமல் அரை மயக்கத்தில் இருந்தாள்.

“நான் தான் பெங்களூர்ல வச்சே உன்னை வரவேணாம்னு சொன்னேனே கேட்டியா............ என்னமோ வந்து எதையோ கிழிக்கப் போறவ மாதிரி கிளம்பிட்டு, ஏரியாக்குள்ள என்ட்ரி ஆகுறதுக்குள்ளயே, உன் கை காலுக்கெல்லாம் பிலாஸ்திரி போட்டு படுக்க வச்சுட்டானுங்க. பர்ஸ்ட் உன் வாய்க்கு ஒரு பெரிய டேப் போட சொல்லணும், அப்போ தான் எனக்கு நிம்மதி, உன்னால் இப்போ எங்க வேலை எவ்ளோ லேட் தெரியுமா.....? முந்திரிக்கொட்டைக்கு உன்னைத் தான் முன்னுதாரனமாக காட்டனும் ச்சே.....” எனத் தன் கோபம் அடங்காமல் கத்தியவன் அங்குள்ள சிஷ்டரிடம் அவளுக்கு மீண்டும் தூங்க வைப்பதற்கான ஊசியைப் போட வைத்தும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு வெளியேறினான்.


சிபி இப்படிக் கத்துவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வீட்டில் கிளம்பும் போதே அவன் வேண்டாம் என்றுக் கூறியும் கேட்காமல், அவனோடு வேதாளம் போல் தொத்திக் கொண்டே வந்து சேர்ந்தாள். வித்யாவின் வீட்டின் அருகே நெருங்கும் போதே பாதுகாப்புகள் அதிகம் இருப்பது தெரிந்தது அவனுக்கு. அதோடு சரணும் மற்ற நண்பர்களும் இன்னும் வந்திருக்கவும் இல்லை.

அதனால் யாருக்கும் சந்தேகம் வராது அளவிற்கு தெருமுனையில் காரை நிறுத்தி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். காரில் ஏறியதில் இருந்து கேள்விகளால் அவனைக் குடைந்துவிட்டு, இப்போது நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஷானு, கார் நின்றது கூடத் தெரியாமல்.

சுற்றிலும் பார்வையைப் பதித்திருந்தவன், ஷானு சற்றே திரும்பி வாகாக சீட்டில் சாய்ந்து படுக்க, அவனின் கவனம் சுற்றுப்புறம் மறந்து அவளிடம் லயித்தது.

தன் அருகே உறங்கும் அவனது அழகு ராட்சசியின் முகம் நீண்ட நாட்களுக்குப் பின் வரமாய் கிடைக்க, அந்த வரத்தை தவற விட மனமில்லாமல் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்தக் கள்வன்.


ஷானாவிக்கு நேரே, அவள் தன் காதலி என்ற உரிமையுடன் இது வரை ஒரு பார்வைக் கூட பார்த்தது இல்லை. அதற்கான சந்தர்பங்கள் இருந்தும் அதை அவளின் எண்ணம் புரிந்து பயன்படுத்தியதில்லை. அதனால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பற்றிக்கொண்டான்.


நெற்றி, கண், காது, என்று அவளது முக வடிவை கைகளால் வருடியவன், அவளின் இதழுக்கு வந்ததும், அவன் கைகள் ப்ரேக் போட்டது போல் அப்படியே நின்றது. பெண்ணவளின் இதழ்களின் ஈரம், அவனது ஆண்மையை வெகுவாய் பாதிக்க என்ன முயன்றும், அவனால் அந்த உணர்வை அடக்க முடியாமல் அவன் தனக்குள்ளே போராட, ஷானவியின் ஒரு அறை சிபியிடம் பேயாட்டம் போட்ட உணர்வுகளை மொத்தமாய் அடக்கியது.


தன் முகத்தில் சூடான மூச்சுக்காற்று மோதுவதை உணர்ந்த ஷானு, உறக்கத்தின் பிடியில் இருந்து விழித்துப் பார்க்க, தன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த சிபியின் முகத்தைப் பார்த்து முதலில் விழித்தாள். பின் தான் அவன் பார்வை சற்றே வித்தியாசமாய்பட்டு, அவளுக்குள் உடலெங்கும் ஒருவித உணர்வை ஏற்படுத்துவதை உணர்ந்தாள்.


அது என்னவென்று ஆராயாமல், அந்தப் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றெண்ணி, மிகவும் இயல்பாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, “என்ன நந்து..” எனவும் அவனுடைய உலகத்தில் பறந்து கொண்டிருந்தவனோ, அவளது முகமாற்றம் எதையும் கவனிக்கவில்லை.

அவளின் இயல்பானக் குரலைக் கேட்டு சட்டென்று திகைத்து பின் தினறிக்கொண்டே “கொசு.... கொசு உன் கன்னத்துல உட்கார்ந்திருக்கு....” என சிபி கூறி முடிக்கவும், ஷானு அவனை அறையவும் சரியாய் இருந்தது.


அவள் தன்னைக் கண்டு கொண்டாளோ என்ற அச்சத்தில் அவன் இருக்க, அவளோ “என் கன்னத்துல எங்கே இருக்கு..... இங்கே பாரு, உன்னோட கன்னத்துல தான் கடிச்சிட்டு இருக்கு..” என்று கூலாக தான் அடித்த கையில் இருந்த கொசுவைக் காட்ட, சிபிக்கு என்ன முயன்றும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தவன் அவளின் முறைப்பில் சற்றே நிறுத்தினான்.


அவனது சிரிப்பைப் பார்த்து “இப்போ ஏன் லூசுமாதிரி இளிக்கிற, பெரிய கருணாஸ்னு நினைப்பு..... அவ்ளோ பெரிய காமெடி ஒன்னும் இங்க நடக்கல....” என் சிலிர்க்க.....


அவனோ அவளது நெற்றியில் லேசாக முட்டி “நீ எப்போ வளருவ மங்கி, நீ இன்னும் இப்படியே இருந்தா ரொம்பக் கஷ்டமாச்சே எனக்கு......” என்று அவளுக்குப் புரிந்ததும் புரியாமலும் கூறியவன், அவளைவிட்டு தள்ளி மறுபக்கம் திரும்பினான்.

அவன் என்னக் கூறினான், ஏதோ பூடகமாக கூறினானே என்று சிறிது நேரம் யோசித்தவள், ஒன்றும் புரியவில்லை எனவும் மீண்டும் தான் விட்டத் தூக்கத்தைத் தொடர்ந்தாள் நிம்மதியாக....


அவளிடம் அடியை வாங்கியவனோ, திகைத்துப் போய் இருந்தான். என்ன செய்ய இருந்தோம் என்று..... அவன் செய்ய நினைத்தது மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால், வாழ்நாள் முழுமைக்கும் அவனை மன்னித்திருக்கமாட்டாள்.


அவன் மனமோ சிபியை குற்றப்படுத்தியது உன்னால் தான் எல்லாம் என்று... உன்னை நம்பி வந்தவளை என்ன செய்ய நினைத்தாய் என்று, அது கொடுத்த குற்ற உணர்ச்சியில் சுற்றுப்புறம் மறந்து, எதற்கு வந்தோம் என்பதையும் மறந்து ஸ்டியரிங்கில் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.



இருவரும் இப்படியொரு நிலையில் இருக்க, அடியாட்கள் போன்ற இருவர் வந்து இவர்கள் கார்க் கதவைத் தட்ட, அதில் ஒருவனுக்கு ஷானுவை அடையாளம் தெரிய, அடுத்த நிமிடமே அந்த இடம் பரபரப்பகியது.


சிபியை அவன் கண்டுப்பிடித்துவிட்டான் என்பதை உணர்ந்து, அவர்கள் மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கும் முன் ஷானவியை இறங்காதே என்று கூறிக்கொண்டே அவனைத் தாக்கினான்.



ஆனால் அங்கிருந்த மற்றொருவன் சிபியை கட்டையால் அடிக்க வர, அதை கண்ட ஷானு, அவளுக்குத் தெரிந்த கராத்தேவை வைத்துக் கொண்டு அவனிடம் சண்டையிட ஆரம்பித்தாள்.



அதற்குள் மற்ற ஆட்களும் வர, இனி சண்டையிட்டு ஜெயிக்க முடியாது என்று நினைத்து அங்கிருந்து தப்பிக்க எண்ணி ஷானவியைத் திரும்பிப் பார்த்தான் சிபி.



அவளோ ப்ரூஸ்லிக்கு டூப் போட்ட ஜச்கிசானையே மிஞ்சுவது போல் பறந்து பறந்து அடித்துக் கொண்டிருந்தாள். அவளது திறமைப் பார்த்து அவனே ஒரு நிமிடம் அசந்து போய்விட்டான்.



‘அய்யோ இவ ப்ளாக்பெல்டாச்சே, இன்னைக்கு எத்தனைப் பேருக்கு பேமிலி பிளானிங் முடிச்சாளோத் தெரியலயே’ என்று நொந்து கொண்டு, சில நொடிகள் அப்படியே நின்றவனுக்கு நிதர்சனம் புரிய காரை ஸ்டார்ட் செய்து கொண்டே அவளை அழைக்க, அவன் அழைத்த நொடி அவள் சற்றே நிதானிக்க, அந்த நிதானத்திற்கு கிடைத்தப் பரிசு தான் அவளது மருத்துவமனை வாசம்.




அவளை அடித்தவர்களை துவம்சம் செய்யும் அளவுக்கு கோபம் இருந்தாலும், அந்த நேரம் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்றெண்ணி அவளை முதலில் அங்கிருந்து அழைத்து வந்தான். அந்தக் கோபம் தான், அவளையும் அங்குள்ளவர்களையும் விரட்ட வைத்தது.



அடுத்த இரண்டு மணி நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் சேனல்கள் அனைத்தும் தீபக் மற்றும் வித்யாவின் காதல் விவகாரத்தை ப்ளாஷ் நியூசாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. சிபி மற்றும் அவனது நண்பர்கள் யாராலும் தீபக் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.



வித்யாவின் நிலையும் என்னவென்றுத் தெரியாது போக, ஆகாஷ் கொடுத்த ஐடியாவின் படி, சரணின் தொழில் வட்டார நண்பர் ஒருவரின் உதவியுடன் இவர்கள் காதலை டிவி சேனல்களில் ஒளிபரப்ப வைத்தனர்.



நியூஸ் ஒளிபரப்பாகி இருபது நிமிடத்தில் வித்யாவின் அப்பா அது பொய்யான செய்தி என்றும், இருவரின் படிப்பு முடிந்ததும் திருமணம் வியக்கும் வண்ணம், பெரியோர்கள் முன்னிலையில் ஆடம்பரமாக நடைபெறும் என்றும் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். மேலும் தீபக்கையும் வித்யாவையும் அவர் அருகிலே வைத்து எடுத்த போட்டோக்களையும் கொடுத்திருந்தார்.




அதைக் கண்டதும் சிபியும் ஆகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமாய் சிரித்துக் கொள்ள, சரண் தீபக்கின் வீட்டில் எல்லாரும் பயத்தில் இருப்பார்கள், அவர்களிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்பதற்காக கிளம்பி விட்டான்.



“எப்படி டா... மாப்பிள்ளை, கரெக்டா கெஸ் பண்ண, அந்தாளு இப்படியொரு ஸ்டேட்மென்ட் விடுவாருனு உனக்கு முன்னாடியேத் தெரியுமா.....? – சிபி




“ஹாஹா .... டேய் மச்சான் அவர் அரசியல்ல பெரும்புள்ளி, ஏற்கனவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அடுத்து எம்.பி ஆகுரதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்குனு கருத்துக் கணிப்புகள் சொல்லிருக்கு. சோ இங்கேத் தட்டினா.... அங்கே ஆப் ஆவானு தோனுச்சு. அதான் இந்த ஐடியா.... ஆனாலும் மேரேஜ் பத்தியெல்லாம் பகிரங்கமா ஸ்டேட்மென்ட் விடுவாருனு நினைக்கல......” – ஆகாஷ்




“இது என்ன பெரிய விசயமா...., இதையும் ஒரு அரசியலாக்கி அதை வச்சு தன் அரசியல் வாழ்க்கையை இன்னும் பலமாக்கிடுவார். அதோட எதிர்ப்புத் தெரிவிச்சா அவங்க ஜாதிகாரனுங்க மட்டும் தான் செய்வானுங்க, அதே சமயம் ஆதரவை யோசிச்சுப் பாரு, காதல் திருமணம் எனும் போது எல்லாத் தரப்பில் இருந்தும் ஆதரவு வந்து சேரும். ஒண்ணுப் போனா இன்னொன்னு.... இது தானே அரசியல்......” சிபி.




“நீ சொல்றதும் சரிதான் இவனுங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்க, சரி வா, நாம தீபக்கை கூப்பிட்டுக்கிட்டு கிளம்புவோம். இனி எந்தப் பிரச்சினையும் வராது, அதோட அங்கே ஒருத்தி ஹாஸ்பிட்டலில் மயக்கத்துல இருக்கா. மறந்துடாதே, ஏற்கனவே அவளையும் ஏன் இதுல இழுத்து விட்டீங்க என்று சரண் அண்ணாத் திட்டிட்டு இருக்கார்” – ஆகாஷ்



“ஐயோ...... ஆமாண்டா.... சீக்கிரம் வா, இல்ல ஹாஸ்பிட்டலையே ஒரு வழி பண்ணிருவா.... ஆனாலும் மச்சான், அவ பறந்துப் பறந்து அடிச்சதை நினைச்சா எனக்கு உள்ளுக்குள்ள உதறல் எடுக்குதுடா மச்சி.”



“ஹா ஹா என்னா அடி, கராத்தே கிளாஸ் போனதுக்கு உருப்படியா இன்னைக்குத் தாண்டா வேலை செஞ்சிருக்கா...” இருவரும் பேசிக் கொண்டே, தீபக்கையும் அழைத்துக் கொண்டு ஷானவியைக் காண மருத்துவமனை வந்திருந்தனர்.



சிபிக் கூறியதை உண்மையாக்கும் பொருட்டு, அங்கிருந்தவர்களை முடியைப் பிய்த்துக் கொள்ள வைத்திருந்தாள் அவளின் கண்ணான காதலி.. பக்கத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் சரண்.




நண்பர்கள் மூவரையும் பார்த்து முறைத்த சரண் எதுவும் கூறாமல் கிளம்பி விட, அங்கிருந்த சிஷ்டரிடம் என்ன நடந்தது என்று அவர்கள் கேட்டறிய இப்போது தலையில் கை வைப்பது இவர்கள் மூவர் முறையும் ஆனது.




சிபி அவளை விட்டுக் கிளம்பிய நான்கு மணி நேரம் வரை அனைத்தும் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவள் மயக்கம் தெளிந்து, சுற்றுப்புறம் உணர்ந்ததும், சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அமைதிக்கும் அவளுக்கும் தான் ஏணி வைத்தாலும் எட்டாதே......! தன் வால்த் தனத்தையெல்லாம் ஒவ்வொன்றாய் காட்ட ஆரம்பித்தாள்.




‘ட்ரிப்பைக்கழட்டு, நடந்து பார்க்கிறேன், வாந்தி வருது, வாஷ்ரூம் போகனும், தலை வலிக்குது, என்ன டெஸ்ட் எடுத்தீங்க, என்ன மெடிசின் கொடுத்தீங்க. அட்டென்ட் பண்ண டாக்டர் யாரு, சீப் யாரு,’ என்று ஒவ்வொன்றாய் ஆரம்பித்தவள் கடைசியில் பசிக்குது சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், மட்டன் கைமா என்றெல்லாம் ஆர்டர் கொடுக்க, அனைவரும் அரண்டுபோய் சிபிக்கு போன் செய்ய, அந்தோ பரிதாபம் அவன் அதை எடுக்கவில்லை.




பின் ஷானவியிடமே கெஞ்சி கூத்தாடி சரணின் நம்பரை வாங்கி அழைத்திருக்கின்றனர். அவன் வந்ததும் தான் அவள் சற்றே அடக்கியிருக்கிறாள் என அழாக்குறையாக அந்த சிஷ்டர் கூற, சிபி ஷானவியை கொலை வெறியுடன் முறைக்க, அவளோப் பரிதாபமாய் ஒரு பார்வையைப் பார்த்து வைத்தாள். அதைப் பார்த்து நண்பர்கள் இருவரும் சிரிக்க.....





மீண்டும் வந்த அதே சிஷ்டர் “சார், உங்க ப்ரதர் பில் செட்டில் பண்ணிட்டாராம், இவங்களை முதல்ல டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பி வைக்கச் சொல்றாங்க, கூப்பிட்டுப் போங்க சார், பர்ஸ்ட் அவங்களுக்கு சாப்பிட வாங்கிக் கொடுங்க, இங்கப்பாருங்க ட்ரிப்பைக் கலட்டாதீங்க என்று சொன்னதுக்கு, என் கையையும் கடிச்சிட்டாங்க” என்ற கொசுறு தகவலையும் கொடுக்க, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாய் அவர்களை வெளியே அனுப்பியது ஹாஸ்பிட்டல் நிர்வாகம்.




“உன்னைப் பத்தி தெரிஞ்சிருந்தும் தனியா விட்டுட்டுப் போன, என்னை நானே கொண்டுபோய் ஒரு பழைய குட்டி சுவத்துல முட்டிக்கனும். கொட்டிக்கோ.... நல்ல கொட்டிக்கோ.. கொஞ்சமாவது அறிவு இருக்கா, நீயும் ஒரு டாக்டர் தான, ஒரு ஹாஷ்பிட்டல்ல எப்படி நடந்துக்கனும்னு தெரியாது. என்ன மேனர்ஸ் கத்துக்கிட்ட நீ... டார்ச்சர் பண்றது எப்படி என்று இனி உன்கிட்டத்தான் க்ளாஸ் எடுத்துக்கணும்.... சாப்பாடு அவ்வளவு முக்கியமா உனக்கு, எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து வந்திருக்கோம், அதை மறந்துட்டு எப்பப் பார்த்தாலும் முழுங்குறதுலயே குறியா இருந்தா என்ன அர்த்தம்....... நீயெல்லாம் என்ன மாதிரி மேனு பேக்சர்டி.......” என கொஞ்சம் கூட கோபம் குறையாமல் ஹைதரபாத் பிரியாணிக்கு பெயர்போன அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்து கத்திக் கொண்டிருந்தான்.




“ஹேய் நிறுத்து...... எதுக்கு இப்போ கத்துற உன் இஸ்டத்துக்கு, என்ன நடந்ததுனே தெரியாம வந்துட்டான் லூசு மாதிரி கத்த, நீங்க யாருமே இல்ல, நான் ஒரு வயசுப் பொண்ணு, ஒன் அவருக்கு ஒரு இன்ஜெக்சன் போட்டா டவுட் வராதா.....? அதோட நீ சொன்ன மாதிரி நான் ஒரு டாக்டர், இதக் கூட தெரிஞ்சிக்கக் கூடாதா......” என பாவம்போல் பிரியாணியை உள்ளேத் தள்ளியபடியே ஷானு பேச... சிபி கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.




இவர்கள் இருவரும் இப்போதைக்கு இந்த சண்டையை நிறுத்த முடியாது, மேலும் தீபக் வேறு மிகவும் சோர்வாய் இருப்பது தெரிய ஆகாஷ் தான் இடையில் புகுந்தான்.



“ஷானு.... இது என்னோட பிரண்டோட ஹாஸ்பிட்டல் தான்” எனவும் அவள் சந்தேகமாய் பார்க்க, “இரு.... இரு....... உங்க ப்ரண்டானு யோசிக்காத, அவனோட பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் டாக்டர். சோ ப்ராக்டீஸ் முடிஞ்சதும் அவனும் இங்கேயே ஜாயின் பண்ணிட்டான். அதனால் தான் பயப்படாம உன்னை விட்டுட்டுப் போனோம். இனி எந்தக் கேள்வியும் வேண்டாம், எல்லாம் பெங்களூர் போய் பேசிக்குவோம்... இப்போ கிளம்புவோம்.” என அவன் பேச்சை முடிக்க, சிபியும், ஷானவியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே நகர்ந்தனர்.



தீபக்கும், ஷானுவும் பின்னே அமர, சிபி ஓட்ட ஆகாஷ் முன்னே அமர கார் பெங்களூர் நோக்கிப் பறந்தது. தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை உணராமல் நிம்மதியாய் நித்திரையில் இருந்தாள் ஷானு.