• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மென்பனி இரவுகள் - 22 (Final)

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
977
494
93
Tirupur
அத்தியாயம்- 22
*********************

அன்பே எனதெல்லாம் உனதே உனது!!!!!

அன்பே இரவு எனது!
அதில் கனவு உனது!

அன்பே மனது எனது!
அதில் நினைவு உனது!

தமிழ் மொழி எனது!
அதன் இலக்கணம் உனது!

தமிழ் வார்த்தைகள் எனது!
அதன் எழுத்து வடிவம் உனது!

கவிதைகள் எனது!
அதன் அர்த்தம் உனது!

எண்ணங்கள் எனது!
அதன் செயல்வடிவம் உனது!

மாமிச உடல் எனது!
அதில் உள்ள உயிர் உனது!

எழுத்தாணி எனது!
அதன் மை உனது!

நெகிழ்ச்சி எனது!
அதில் மகிழ்ச்சி உனது!

வாழ்க்கை எனது!
அதில் அர்த்தம் உனது!

காதல் எனது!
அதன் புனிதம் உனது!

தோல்வி எனது!
அதன் வெற்றி உனது!

வருத்தம் எனது!
அதில் திருத்தம் உனது!
சிந்தை எனது!
அதன் ஊற்று உனது!

அன்பே நீ எனது!
நான் உனதே உனது!!!!!
*******************



மார்கழி மாதத்திற்கே உண்டான அதிகாலை பனி அந்த வீட்டைச் சுற்றிலும் மூடியிருக்க, அணிந்திருந்த ஷ்வெட்டரையும், ஷாளையும் தாண்டி குளிர் ஊசியாய் குத்தியது... தன்மேல் இருந்த ஷாளை இழுத்து விட்டவளின், எண்ணங்கள் இரவில் சிபி அவளிடம் நடந்து கொண்டதை ஞாபகப்படுத்த முகம் அந்தக் குளிரிலும் செவ்வானமாய் சிவக்க... இதழ்களில் ரகசியப் புன்னகை உண்டானது.


உடல் கிறக்கத்திலும், மனம் மயக்கத்திலும் இருக்க, கண்கள் தானாக கணவனை நோக்கியது. கட்டிலில் சாயிந்திருந்த படி அவனும் அவளைத் தான் பாத்துக் கொண்டிருந்தான். கணவனின் பார்வையில் நால்வகை கூச்சமும் மொத்தமாய் முகத்தில் குடியேற, அங்கிருந்து வெளியேறி, குடிலின் பின்புறம் இருந்த மரத்தின் பின்னே சாய்ந்து, தன் நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் ஆனாள்.


அவளது ஆசுவாசத்திற்காண ஆயுளே குறைவு என்பதுபோல் பின்னே இருந்து இரு கரங்கள் அணைக்க... இனியும் தப்பிக்க முடியாது என எண்ணியவள் பாந்தமாய் அவன் அணைப்பில் அடங்கினாள். வார்த்தைகளற்ற உரையாடலாய் குளிர்காற்று இருவருக்கும் நடுவில். எத்தனை நேரம் கடந்ததோ... காற்றின் வேகம் அதிகரித்து, உயர்ந்த மரம் சற்றே ஆட்டம் கொடுக்க, அதில் உணர்வு பெற்றவர்கள், அங்கிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.


முதலில் அமைதியைக் களைத்தது சிபிதான்.. அவளுக்கு அவனிடம் பேச வேண்டுமே... அவளது அடுத்தக் கட்ட திட்டங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே... அதனால் அவனே ஆரம்பித்தான் பேச்சை முதலில்...



“அம்மு இவ்ளோ நாள் தான் நம்ம லைப் நம்ம விளையாட்டுத்தனத்தாலையும், வீம்புபிடிவாதத்தாலையும் எப்படி எப்படியோ போயிடுச்சு, இனி மேலாச்சும் லைப் நல்லபடியாமூவ் ஆகனும்.. நான் சொல்ல வர்ரது உனக்குப் புரியுதா….” தான் சொல்ல வருவதைசரியாகப் புரிந்து கொள்வாளோ என்றத் தவிப்புடன் சிபி அவளிடம் கேட்க,


அவளோ புரிந்தது எனும் விதமாக தலையாட்ட அதில் சிரித்தவன் அவள் தலையைத் தானும்ஆட்டித் தன் நெற்றியில் முட்டியவன் “தேங்க்ஸ்...” எனவும் “நந்து” என முறைத்தாள் ஷானவி…


“ஓகே ஓகே….. தேங்கஸ் வாபஸ், பட் நான் சொல்றதுக்கு முன்னாடி, நீ என்ன யோசிச்சு வச்சிருக்க, உன்னோட பிளான் என்ன….? அதை சொல்லு, ஏனென்றால் இதுக்கு முன்னாடி உன்னோட சூழல் வேற, இப்போ இருக்குற சூழல் வேற, அதோட இங்கே நடந்த பிராப்ளம்ஸ்ல எப்படியும் நீயும் உன்னோட பிளான்ஸ் சேஞ்ச் பண்ணிருப்ப சோ நீ பர்ஸ்ட் சொல்லு…… லேடீஸ் பர்ஸ்ட்…..”


“ம்ம்… இப்போ… இந்த செகன்ட் எனக்கு எந்த பிளானும் இல்லை நந்து. கொஞ்ச நாள் ஸ்டடீஸ்ல போயிடுச்சு. மூனு வருஷம் என்னோட கோபத்துல போயிடுச்சு… இனி அப்படி அவசரமா எதையும் செய்யக் கூடாதே, அதோட அம்மா அப்பா ரொம்ப பாவம். என்னால கஷ்டத்தைத் தவிர வேறெதுவும் பார்க்கல. கொஞ்ச நாள் அவங்களோட இருக்கனும்னு நினைக்கிறேன். இனி எப்படியும் பாரின் ட்ரிப் போக முடியாது. நீயும் பார்டர் போயிடுவ, நான் இங்கேயே இருக்கேனே, அம்மா அப்பா, அகிலா அண்ணி, சரண் அண்ணா தேனக்கா, குட்டீஸ் எல்லோர் கூடவும் இன்னும் இன்னும் ஹேப்பியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும் எனக்கு” என்று கண்களில் கனவுகளோடு கூறியவள்,


“அப்புறம் எனக்கு உன்னைப் பார்ககனும் போல இருந்தாலோ, இல்லை உனக்கு அப்படித் தோனினாலோ உடனே உன்னைப் பார்க்க நான் ஓடி வரனும். இதெல்லாம் நமக்கு கமிட்மெண்ட்ஸ் வந்ததுக்கு அப்புறம் செய்ய முடியாது, வேலை வேலைனு ஓடத் தோனும், சோ ஒரு ஒரு வருஷம் நான் ப்ரீயா இருக்கேனே ப்ளீஸ்…..” எனவும்,


ஷானவியின் பேச்சில் சிபிக்கு என்ன சொல்வது என்றேத் தெரியவில்லை. அவள் சொல்வது அவள் வரை சரிதான்… ஆனால் நடைமுறை வாழ்கையில் அது சாத்தியமா என்ற கேள்வியும் அவனுக்குள் முளைத்தது.. எட்டாண்டுகள் படித்த படிப்பை எப்படி போனால் போகிறது என்று விட முடியும். படித்த படிப்பு யாருக்கேனும் உதவ வேண்டுமே.. இதை அவளிடம் அவள் மனம் நோகாமல் எப்படி சொல்வது என்ற சிந்தனை அவனுக்குள்…


சிபியின் முகத்தையே பார்த்திருந்தவளுக்கு அவனது சிந்தனை படர்ந்த முகம் எதுவோ செய்ய, “என்ன நந்து…? நான் தப்பா சொல்லிட்டேனா…? உனக்கு பேவரா இல்லைண்ணா சொல்லு சேஞ் பண்ணிக்கலாம். நான் என்னோட பிளான் சொல்லல. என் மனசுல இருந்த ஆசையை சொன்னேன். ஜஸ்ட் அவ்ளோதான். அதோட வித்தியும் இப்போதைக்கு எந்த ஐடியாவும் பண்ணல. எது பன்றதா இருந்தாலும் நாங்க ஷேரிங்க்ல செய்யலாம்னு தான் பர்ஸ்டே யோசிச்சு இருந்தோம்…” என்றாள் அவசர அவசரமாய்……


மனைவியின் பேச்சை கவனித்தவன், அவள் தனக்காகத் தான் கூறுகிறாள் என்று புரிய, அவள் கேட்டதும் ஒரு வருடம் தானே, அதைக் கண்டிப்பாக அவளுக்கு கொடுக்கலாம்.. அதோடு அவளது ஆன்லைன் கவுன்சிலிங் மற்றும் தீபகாருண்யத்தின் கன்சல்டேசன் இப்போதைக்கு போதும், அதுவே அவளை பிசியாக வைத்திருக்கும் என்ற எண்ணமும் உருவாக, அவளை இலகுவாக்கும் பொருட்டு, வாய் விட்டுச் சிரித்தபடியே இடையில் கைப் போட்டு அருகில் இழுத்தான்.


அவனது சிரிப்பில் அவனது முகமும் மலர, கண்களை அகல விரித்து அவனை நோக்க,மனைவியின் மலர் விழிகளில் முத்தமிட்டவன் “உன் கிட்ட என்ன பிடிச்சு உன்னைக் காதலிச்சேன்னு சொல்லத் தெரியல, ஆனா எனக்கு உன்னை மொத்தமா பிடிச்சது. இது அதுனு சொல்லத் தெரியல அம்மு, இந்த அழகான பொண்ணு மொத்தமா எனக்கே எனக்கு வேணும்னு தோணிச்சு ஒரு நாள்…. அந்த செகண்ட் நான் உன்னை லவ் பன்றேனு நம்ப ஆரம்பிச்சேன்.”





“நடுவுல எவ்ளவோ நடந்து போச்சு, என்ன நடந்தாலும் உன்னோட ஸ்டடீஸும் ப்ராக்டீஸும் ஸ்பாயில் ஆகிடக் கூடாதுனு நினைச்சேன்.. லேடீஸ்னா சைல்டு கேர், இல்லைன்னா கைனக் இப்படித்தான் தன்னோட பிஜி செலக்ட் செய்வாங்க, பட் நீ சூஸ் பண்ண பல்மனாலாஜி ரிஸ்கியானது. அதையே சூஸ் பண்ணும் போது உன்னோட ப்யூச்சரும் ப்ரைட்டா சூஸ் பண்ணுவேனு எனக்குள்ளயே ஒரு எண்ணம், அது இப்போ வரைக்கும் தப்பா போகல,”


“ சோ உனக்கா எப்போ எப்படி உன்னோட ஆர்கனைசன் ஸ்டார்ட் பண்ணனும்னு தோனுதோ அப்போ செய். உன் கூட எப்பவும் நான் இருப்பேன். வீ ஆர் ஆல் சப்போர்டிங் பார் யூ……அதுவரைக்கும் நல்லா எஞ்ஜாய் பண்ணு அப்பப்போ என்னையும் கவனிக்கனும் ஓகே வா……”என அவளது முகத்தை உரசியபடியே அவன் பேசி முடிக்க…. பேசி முடித்த இதழ்களை அழுத்தமாய் மூடினாள் அவனது அம்மு….


மனைவியின் திடீர் செயலில் சற்றேத் தடுமாறியவன் மங்கையின் முத்தத்தில் சித்தம் கலங்கித்தான் போனான் மன்னனவன்.. ஆழ்ந்த முத்தத்திற்குப் பிறகு, வெட்கமும் கூச்சமுமாய் அவனை விட்டு விலகியவளின் இதழில் புன்னகையும், விழிகளில் நீருமாய் அவனை நோக்கித் “தேங்க்ஸ்” என்றவளுக்கு சிபியின் முறைப்பே பதிலாய் கிடைத்தது…ஆனாலும் அவள் அதை கண்டு கொள்ளவில்லை…


இருவரும் ஒரு மோன நிலையில் இருக்க அப்போது அங்கே அவஸ்வரமாய் “ஐ பாசமலரு....,அட என் மச்சான்.... ரெண்டு பேரும் இங்கே தான் இருக்கீங்களா, உங்களைத் தேடி ரூமுக்குப் போனேனா காணோம், சரி போன் செய்யலாம்னு நினைச்சேன் உங்களப் பார்த்துட்டேன். என்ன பண்றீங்க ரெண்டு பேரும்…..” தீபக் வந்து நிற்க, ஷானுவோ ‘டேய் எரும ஹனிமூனுக்கு வந்துட்டு என்ன பண்ணுவாங்க எங்க வந்து என்ன கேள்வி கேட்குறான் பாரு, கடைசி வரைக்கும் இவனுக்கு எதுவும் செட் ஆகாது…’ என மனதிற்குள் பல்லைக் கடித்த படியே வெளியே ஈயென இளித்து வைத்தாள்.


தீபக்கும் ‘உன்னையும் தெரியும், உன் மைன்ட் வாய்ஸும் தெரியும்’ என பதிலுக்கு ஈயென இளிக்க, இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சிபியும் வித்யாவும் அடிப்பதற்கு பக்கத்தில் எதாவது இருக்கிறதா என்று தேடத் துவங்க, ஆகாஷும் மான்யாவும் அவர்களை நோக்கி வந்தனர்.


இருவர் எரிச்சலோடும், மற்ற இருவர் கடுபோடும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு இருப்பதைப் பாரத்த ஆகாஷ் “ஹே என்னடா நடக்குது இங்க, இதுங்க என்னடான்னா அக்னி நட்சத்திரம் பிரபு – கார்த்திக் ரேஞ்சுக்கு முறைச்சுட்டு இருக்காங்க…. நீங்க ரெண்டு பேரும் அவங்களை அடிக்கிற மாதிரி நிக்குறீங்க, என்னாடா இதெல்லாம்” என ஆகாஷ் சிபியை பார்த்துக் கேட்க,


அவனோ “என் கிட்ட ஏன்டா கேட்குற, அதான் உன்னோட உயிர் நண்பன் இருக்கானே அவனக் கேளு, உன் பாசமலர் இருக்காளே அவளைக் கேளேன் வந்துட்டான் நாட்டமை பண்ண..” என சிபி பொறிந்து தள்ள, அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் முறைப்பதை நிறுத்தவில்லை….


பொறுமையிழந்த மற்ற நால்வரும் அவர்களை அங்கேயே விட்டு விட்டு, ரெஸ்டாரண்ட் நோக்கி செல்ல, தீபக்கோ, “போடி குள்ளக் கத்திரிக்காய், இனிமே இப்படி என் லைப்ல பிளே பண்ண, உன் நந்துவை நாடு கடத்திடுவேன் பார்த்துக்கோ…… அப்புறம் சேது விக்ரம் மாதிரி மென்டலா அலையப் போற...” என,


“டேய்…. ஆல்ரெடி உன் வைபை நான் நாடு கடத்தினவடா, என் கிட்டையே சவால் விடுற, போ….போயி இந்த தடவையாச்சும் அவளை பிடிச்சு வைக்குற வழியைப் பாரு…. போடா தம்பி போயி புள்ள குட்டிகள ஸ்கூலுக்கு அனுப்புற வழியைப் பாரு, ஓ நீ இன்னும் அந்த ஸ்டேஜிக்கு வரல இல்ல, தெரியாம சொல்லிட்டேன்…. போடா போய் உருப்படியா அந்த வேலைக்கு என்ன செய்யனுமோ அதை செய்……” என கெத்தாகக் கூறி வஞ்சகமில்லாமல் பல்புகளை அவனுக்கு வாரி வழங்கி விட்டு, மற்றவர்களை நோக்கித் துள்ளியபடியே ஓடினாள்.





முதலில அவளது செய்கையில் எரிச்சல் வந்தாலும், பின் வாய் தானாக தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியது... எப்படி பேசுது பரு குட்டிச்சாத்தான்... அவளது இயல்பே இது தானே,சில ஆண்டுகள் காணாமல் போயிருந்தது. இப்போது மீண்டும் அது திரும்பியிருக்கிறது. என்ற எண்ணியவன் அதே புன்னகையுடன் அவர்களை நோக்கி
சென்றான் தீபக்
.

அன்று காலை ஷானவிக்கும், தீபக்கிற்கும் நடந்த மோதலுக்குப் பிறகு, மூன்று ஜோடிகளும் தொட்டப்பெட்டா செல்லலாம் என்ற முடிவெடுத்து அங்கு வந்திருந்தனர், மூவரும் தங்கள் துணையை அழைத்துக் கொண்டு தனித்தனியாக செல்ல, தீபக் வித்யாவை இழுத்துக் கொண்டு செல்லும் போது தான் இந்த உரையாடல் நடந்ததும்….


பசுமையின் பிறப்பிடமாய் திகழும் மலைகளும் அதில் ஓங்கி வளர்நது தெரியும் மரங்களும் சில்லென்ற ஊதல் காற்றும் அவர்களுக்குள் புதுவித மயக்கத்தைக் கொடுக்க, தற்போது இதமாய் சாய்ந்து கொண்டாள் தீபக்கின் தியா…. மனைவியின் மனதினைப் புரிந்த நொடி,அவனும் அவளது இடையை அழுத்தமாய் பற்றித் தன்னருகில் இன்னும் நெருக்கமாய் அணைத்துக் கொண்டான்.


இருவரும் ஒரு மோன நிலையிலேயே நடக்க, சற்றுத் தள்ளி ஒரு மரத்தின் மீது சாய்ந்து அவளையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான். இந்த நிமிடம், இதற்காக எத்தனைப் போராட்டம், வசதியான வீட்டுப் பெண், சற்றும் தன் சவுகரியங்களை நினைக்காது அவனுக்காக அனைத்தையும் தூக்கியெறிந்து பெற்றவர்களை எதிர்த்து அவன் தான் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாய் நின்று மணந்து கொண்டாள்.


அவளுக்காக என்ன செய்தான் எதுவுமே இல்லை. இனி வாழப்போகும் வாழ்க்கையில் அவளுக்காக அனைத்தையும் செய்ய வேண்டும், அவளுக்காகவே இந்த வாழ்க்கையை அனுபவித்து ரசித்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்தவன் மனைவியின் முகத்தைப் பார்க்க அவளோ சிவந்த முகத்துடனும், மயக்கமேறிய விழிகளுடனும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


கணவனின் பார்வையை உணர்ந்தவள், அவன் சீரியசாகி விட்டான் என்பதும் புரிய,தீபக்கிற்கும் சென்டிக்கும் ஒத்தே வராதே.. என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றி,அவனை சீண்டிப் பார்க்கும் ஆவல் பொங்கியது. அதன் பொருட்டு அவனிடம் என்ன சொன்னால் கடுப்பாவானோ அதையே சொன்னாள்…


“தீபு…”


“ம்ம்….”


“ தீபு…..”


“ம்ம் சொல்லு தியா….”


“தீபு நான் ஒன்னு கேட்கனும்,”


“ம்ம் கேளு பேபி…..”

“அது வந்து, அது வந்து, நீங்க கோபப்படுற அளவுக்கு ஷானு என்ன சொன்னா….?


“ஹேய் அறிவே இல்லையாடி உனக்கு, எந்த நேரத்துல அந்த குட்டிச்சாத்தானைப் பத்தி பேசுற,சரியான இம்சைடி நீ…” என்று அவளிடம் எரிந்து விழுந்தவன்.


“அவ சொல்றா, நான் அதுக்கு சரி பட்டு வரமாட்டேனு…. அந்தப் பிசாசுக் கிட்ட சொல்லி வை,எப்பவும் இந்த தீபக் அமைதியா இருக்க மாட்டான்னு, அவ சொன்னது தப்புனு நான் நிருபிச்சு அவ மூக்கை உடைக்கல நான் தீபக் இல்லை” என்று பொரிந்தவன்..


சற்று முன் இருந்த நிதானம் போய் வன்மையாய் அவளது இதழ்களில் முத்தமிட, அவளோ கணவனின் செய்கையில் அதிர்ந்து “ஏய் லூசாடா நீ! என்ன பண்ற… விடு… விடு “ என திமிற அவனோ,


“ஹேய் லூசு கத்தாதடி நடுகாட்டுக்குள்ள இருக்கோம், நான் உன்னை ரேப் பன்ன தள்ளிட்டு வந்தேன்னு நினைச்சிடப் போறாங்க…..” எனவும்….


ஹான் என அதிர்ச்சியில் வாய் பிளந்தவள் “ம்ம்….. போங்க போங்க…. நீங்க என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க, எனக்குப் பயமாயிருக்கு போகலாம்….” என்று பயத்தில் சற்று சத்தமாகவே அழ,


அழுகையில் பிதுங்கிய அவளது உதடுகளை வருடியபடியே, “என் செல்லக் குட்டி இல்ல, மாமா சும்மா உன்கிட்ட தாமாசுக்கு அப்படி பண்னேன்டா, நிஜம்னு நினைச்சுட்டியா… சாரி பேபி,ரியலி வெரி சாரி. எனக்கு இருக்குறது ஒரே ஒரு அழகுப் பொண்டாட்டி.. நாம இருக்கறதோ அத்துவானக் காடு... கொஞ்சம் யோசிச்சுப் பாரு, நீ கத்துறதைப் பார்த்து காட்டுவாசி எவனாச்சும் பங்கு கேட்டு வந்துட்டா மாமா என்ன செய்ய சொல்லு….” என்று சோகம் போல சொல்ல, அவன் கூறியதைக் கேட்டு காண்டானவள், கீழே கிடந்த கட்டையைத் தூக்கிக் கொண்டத் தூரத்த துவங்கினாள் அவனை.



பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா…. வா… வா…
பனி விழும் இரவு
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்
தனிமையே போ… இனிமையே வா….
நீரும் வேரும் சேர வேண்டும்
பனி விழும் இரவு நனைந்தது நிலவு…..



என்ற பாடலுக்கேற்ப நடனமாடியவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் தம்பதியர் மூவரும். அவர்கள் தங்கியிருந்த காட்டேஜுக்கு பாண்டிச்சேரியில் இருந்து கல்லூரி மாணவர்கள் சுற்றுலாவுக்கு என வந்திருந்தனர். அவர்களது இரவு நேரக் கொண்டாட்டத்தில் தான் இந்த மூன்று ஜோடியும் அமர்ந்திருந்தது, அவர்களின் கொண்டாட்டமும், குதுகலமும்,இவர்களது கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்த, அனைவரும் அந்த நாட்களுக்கே சென்று வந்தனர்.


ஷானவிக்கு மட்டும் ஏனோ அவளது கோவா பயணம் ஞாபகம் வர, அருகில் இருந்தவனின் தோளில் அழுத்தமாய் புதைந்து கொண்டாள் எதிலிருந்தோ தப்பிப்பது போல…


மனைவியின் செயலில் அவளை சிபி கவனிக்க முகம் வேர்த்து, சிறு படபடப்புடன் அவளது இதையத்துடிப்பு படபடவென அடிப்பது அவனுக்கே கேட்க, அவளை அதிலிருந்து மீட்கும் பொருட்டு, “அம்மு…. இந்த சாங் எவ்வளவு ரொமான்டிக்கா, லவ்லியா இருக்கு இல்ல… சரண் அண்ணாவோட மோஸ்ட்லி பேவரைட் லிஸ்ட்ல இதுவும் ஒன்னு…..


“ம்ம் அவரோடது எல்லாம் வொண்டர்புல் கலக்ஷன்ஸ் இல்ல, எப்பவும் என்னோட ஐபோன்ல அவர் கலெக்ஷன்ஸ் இருக்கும், உன்னை ரொம்ப மிஸ் பன்றேன்னு தோனும் போது இந்த சாங்க்ஸ் தான் என்னோட மைன்ட் ரிலாக்க்ஷேசன்.. சில நேரம் நீ என்னோடவே இருக்குற ஃபீல் கொடுத்திருக்கு…..” என்றவன் பட்டென சிரிக்க,


அவனது உணர்வுகளை தனக்கானதாய் உணர்ந்து கொண்டவள் அவனது முதுகை வருடியபடியே இருக்க, சிபியின் சிரிப்பில் என்னவென்று பார்க்க, “இல்லை இந்த சரண் அண்ணாவோட காதல் கதையில எத்தனை சாங்க்ஸ் இந்த ரைட்டர் கொடுத்திருந்தாங்க அது எல்லாம் போதாதென்று நம்ம சாங்கையும் பாடியிருக்கார்….. அண்ணி அவர் மண்டையில கொட்டி, இது அவங்களோட சாங் நீங்க பாடாதீங்கனு சொன்னாங்களாம்….. அதுக்கு அண்ணா இந்த பிளேஸ்ல தான் அந்த சாங் சூட் பண்ணாங்க சோ எனக்கும் அப்படியே ஹம்மாயிடுச்சுனு அசடு வழிஞ்சாராம்…..” சொல்லி மீண்டும் சிரிக்க, ஷானவியும் அவனோடு இணைந்து புன்னகைத்தாள்.


தன்னுடைய சிறுபிள்ளைத் தனங்களையும், விளையாட்டுக்களையும் கொஞ்சம் ஒதுக்கி,தங்கள் வாழ்வை இனியாவது வண்ணமயமாக்க வேண்டும். ஒவ்வெருவரின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், அதை எல்லாம் தாண்டி வாழ்வில் வெற்றி பெருவர்கள் ஒரு சிலரே….


இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து, அவனையும், குடும்பத்தையும், தன்னையும் வருத்தி தான் செய்யத முட்டாள் தனத்தை நினைத்து மனதுக்குள் வெட்கிப் போனாள்…. கடந்தது கடந்தாகவே இருக்கட்டும், கடந்து போன எதுவும் இனி திரும்பி வராது… ஆனால் இனி வரும் காலங்களில் வாழ்வின் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கான வழிகளில் பயணிக்க வேண்டும், இனி தான் செய்யும் எந்த செயலும், யாரையும் வருத்தப் படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்தவள், கணவனின் கன்னத்தில அழுத்தமாய் முத்தமிட்டு, அவனது நெஞ்சத்தில் ஒய்யாரமாய் சாய்ந்து, அவனது அணைப்பில் கட்டுண்டு நிம்மதியாய் கண் மூடினாள்…

புரிதலான வாழ்க்கையில் இனி அனைத்தும் சுகமே……!
 
  • Love
Reactions: Durka Janani