• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

மௌனம்...!!

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
உடைந்து போவதற்கும்....
ஓங்கி அழுவதற்கும்...
வேண்டுமானால்
நான் பழக்கப்பட்டுப்
போயிருக்கலாம்...!

உன்னை நேசிப்பதில்
மீண்டும் மீண்டும்
புதிதாகவே பிறந்து இருந்தேன்...!!

ஏமாற்றங்களை சந்திக்கும்
என் மனதிற்கு....
காயங்கள் புதிதல்ல...
வலிகள் புதிதல்ல...
உன் பிரிவும் கூட புதிதல்ல...

உன் மௌனம் எனக்கு
மிக மிக புதிதாய் இருந்தது...!
எலும்பில்லா நாக்கானாலும்
உணர்ச்சிகள் உருவெடுக்கும்
இடம் தானே...
ஒருமுறை வாய் திறந்து
பேசி இருக்கலாம்...
என் அழுகையின் வீரியமாவது
குறைந்து இருக்கும்..!!
-saranya writes