வழமை போல இயல்பாக ஆரம்பித்த அந்த நாள் டேனியலுக்கு மட்டும் மரண வாசலை எட்டிபார்க்க உதித்த நாளாக மாறியது.
டேனியல் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் அந்த தோட்டத்தில் சாரதியாக வேலை செய்கிறான். மனைவி, ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை.
மகள் உயர் கல்விக்காக நகர பாடசாலைக்கு மாற்றலாகிவிட்டாள். மகன் சிறியவன். அந்த தோட்டத்து பாடசாலையில்தான் படிக்கிறான்
அன்று அந்த ட்ரெக்டர் அந்த பாடசாலைக்கு உள்நுழையும் வாயிலில்தான் கைவிடப்பட்ட யுத்தவாகனம் போல் நின்றுக்கொண்டிருந்தது.
சாரதி இருக்கையில் உயிரில்லாத மனித உடல் எந்த அசைவும் பலமும் இன்றி சாய்ந்துகிடந்தது.
முதல் தாக்குதல் முகத்தில் தான் விழுந்திருக்கவேண்டும். இரு கைகளாலும் முகத்தை பொத்தியப்படி சக்கரத்தின் ( ஸ்ரெயரிங்க்) மேல் தலையை வைத்தப்படி கிடந்தது அந்த உடல்.
டேனியல் முதல் தாக்குதலிலேயே உடல் சக்தியை இழந்திருக்கக்கூடும். ட்ரக்டரியிலிருந்து இறங்கி ஓடிட முடியாத அளவுக்கு.
எதிர் தாக்குதல் நிகழாதிருக்க முதல் தாக்குதலிலேயே எதிராளியின் சக்தியை இழக்கச் செய்திடுவது புத்திசாலித்தனம்தான்.
மாமிச உண்ணிகள் உயிர்களை வேட்டையாடும் போது தப்பி ஓடிடாமல் இருப்பதற்காகவும் எதிர்த்து தாக்காமல் இருப்பதற்காகவும் ஒன்று கால்களைத் தாக்கி பலத்தை இழக்கச் செய்யும். அல்லது கழுத்தையோ தலையையோ தாக்கி சக்தியை முற்றாக இல்லாது செய்யும். இங்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.
எதிர்த்து தாக்க முடியாவிட்டாலும் இறங்கி ஓடியாவது இருக்கலாம். பலர் முனுமுனுத்தார்கள்.
முகத்தையாவது காப்பாற்றிக்கொள்ளவே முகத்தை பொத்தியப்படி தலையை சாய்த்திருக்கிறான். அதற்கு மேல் தன்னை காப்பாற்றிக் கொள்ள திராணியற்றே மயங்கி விட்டான் போல.
அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, விறுவிறுவென ஒரு கால் நடை சத்தம்.
வந்தவன், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்களையெல்லாம் ஒரு சுற்று பார்த்துவிட்டு ட்ரெக்டர் மேல் தாவி பாய்ந்தான்.
அவன் இளைஞனோ கிழவனோ அல்ல. ஆனால் துனிந்தவன். எதிரிக்கும் இரக்கம் காட்டும் குணம் உள்ளவன். தான் வாழாவிட்டாலும், பாவம்... அடுத்தவன் வாழட்டும் என விட்டுகொடுப்பவன்.
காதலித்த பெண்ணையும் அவளை காதலித்த ஒரு கோழைக்கு விட்டுக்கொடுத்தது அவனின் இந்த குணங்கள்தான்.
" அவள் இல்லையென்றால் செத்தே ஒழிவேன் " என்றான் வேரோருவன். அவர்களே வாழ்ந்துவிட்டு போகட்டும் என இவன் தனித்து நின்றான்.
இன்றும் தனித்தே வாழ்பவன்தான் இந்த பியதாச. காதலை மட்டும் சுமந்தவனாக .
இவனது மனவுறுதிக்கும் ஒழுக்க வாழ்விற்கும், நேர்மைக்கும் , தைரியத்திற்கும் மொத்த தோட்ட மக்களுமே சரணடைந்திருந்தார்கள். அவனுக்கென ஒரு தனி மரியாதை...தனி இடம் இருக்கவேச் செய்தது அந்த தோட்டத்தில்.
ஊரில் யாருக்கு என்ன பிரச்சனையென்றாலும் வந்து நிற்பான்.
டேனியலை கீழே இறக்க முயன்றான்.
"தமுசலா மெஹே அத்வல் பெந்தகென பலாங்கின்னே மொக்கத? ஹரியடம ஃபில்ம் எகாக் (B)பலனவா வகே. மேக்க ஃபில்ம் எகாக் நெமேய். எத்தடம மனுஷ்யக் சீய நெதுவ இன்னவா. மே ஒயாலாகேம கெனெக் நேத? (B)பலாங்கின்னத மெதன்ட ஆவே? ரூபென் விதராக் மனுஷ்யக் வெலா வெடாக் நேஹெ. கரன வெடவலினுத் மனுஷ்யக் வென்ன ஒனே. கொய்வகே கெனக்வுனாத் மே வகே வெலாவேதி உதவ் கரண்ண ஒனே. மே வகே தெயாக் உம்பலாடத் வென்ன வெடி காலயக் யன்னே நெஹெ.
மென்ன மே.... பலாங்கின்னெத்துவ தெங்வத் மே மனுஷ்யாவ ஹோஸ்பிடல் கெனியன்ன உதவ்வாக் தென்ன."
(கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? படம் பார்ப்பது போல். இதொன்னு படம் இல்ல. உண்மையிலுமே ஒரு மனுஷன் ஜீவன் இல்லாமல் கிடக்கிறான். இவன் உங்கள்ள ஒருத்தன் தானே? பாத்துகிட்டு நிற்கவா இந்த இடம் வந்தீங்கள்? உருவத்தில் மட்டும் மனிதனாக இருப்பதில் பிரயோசனம் இல்ல. செய்ற வேலையிலயும் மனிதினாக இருக்கணும். எப்படியாபட்ட ஆளாக இருந்தாலும் இந்த மாதிரியான நேரத்துல உதவி செய்ய வேணாமா. இந்த மாதிரி உங்களுங்கும் நடக்க ரொம்ப காலம் ஆகாது. இந்தா......., பாத்துகிட்டுருக்காமல் இப்பவாவது வந்து இந்த மனுஷன ஹொஸ்பிடல் கூட்டிட்டுப் போக உதவி செய்ங்க. )
பியதாச அவனது மொழியில் (சிங்கள மொழியில்) போதித்த வார்த்தைகள் சிலருக்கு புரியாவிட்டாலும் அவனது உடல் மொழி உணர்வும் வலியும் அங்கிருந்த அனைவருக்கும் அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.
வேடிக்கை பார்த்தவர்கள் ஏதோ போதிமரத்தடியில் திடிர் ஞானம் கிடைத்தது போல் சுறுசுறுப்பாக வந்து கைத் தாங்கலாக டேனியலை இழுத்து கீழே கிடத்தினார்கள்.
ஒருவன் அவனது முச்சக்கர வண்டியை கொண்டுவந்து நிறுத்தினான்.
முகம் இரத்தத்தால் மறைந்திருந்தது. இரத்தம் எங்கிருந்து வடிகிறது என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினம்தான்.
டேனியலை கண்டாளே முகத்தை திருப்பிக்கொண்டு முறைத்து செல்லும் பக்கத்து வீட்டுக்காரனான சன்முகத்தின் கண்கள் கூட ஈரம் கண்டன.
ஔவியனும் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
குறுதியில் மூழ்கிய முகம். அவனை ஏதோ செய்தது. தாக்கியது மனிதனல்ல என்பது மட்டும் புரிந்தது.
ட்ரெக்டர் இருந்த இடத்தைத் பார்த்ததும் அவன் மனிதனே அல்ல என்பதை உறுதி செய்தான்.
பாடசாலை பாதை. அதுவும் பாடசாலையை பார்த்தே ட்ரெக்டர் நின்றிருந்தது.
ஔவியனின் கண்கள் சிவந்தன.
"ஒரு பாடசாலை முன் இத்தகைய வன்முறைச் செயலை செய்ய எவ்வளவு தைரியம் வேண்டும்? பள்ளி வாசலையே மிதிக்காத காட்டுமிராண்டிகள். அரச நிறுவனங்களுக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை கூட நினைத்துபார்க்கத் தெரியாத தற்குரிகள். தமிழ் பாடசாலை அதுவும் தோட்டத்து பாடசாலை என்கிற அலட்சியம் தான். "
ரௌத்திரம் கொண்டு சீறி எழுந்தது அவனது உள்ளம். ஆனால் நிதானம் காத்தான்.
பாடசாலை மாணவர்கள் சிலரும் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக சூழல் சுத்திகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்களே இந்த சம்பவத்தை நேரில் கண்டிருக்க கூடும்.
இரத்த முகத்தை பார்த்ததும் டேனியலை விரும்பாத மனங்கள் கூட நெகிழத்தான் செய்தன.
சிலர் கையாளாகாத கோவத்தை வெறும் வாய்க்கதைகளோடு வெளிப்படுத்திக் கொண்டு களைந்து சென்றார்கள்.
ஆனால் சிலர் அவன் மீதான கோபத்தை கைவிடாமல் இந்த நிலையிலும் திட்டித்தீர்த்தார்கள்.
"அவன் போட்ர ஆட்டத்திற்கு இது வேணும். இனியாவது அடங்கியிருப்பானா...? "
" ம்.... இனி இருப்பானோ இல்லையோ.... ? " உயிரோட திரும்பி வந்தா பார்ப்பம்"
" நான் நம்பல்ல, அப்படியே வந்தாலும் கொறஞ்சது ரெண்டு மூனு மாசமாவது படுக்கையிலதான் "
ஒருவன் மரணப்படுக்கையிலும் திட்டப்படுகிறான் என்றால், உண்மையிலும் அவன் கெட்டவனாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அவன் ஏதோவோர் வழியில் பிறரை வதைத்தித்திருக்கிறான் என்று அர்த்தம்.
பியதாச ஒரு முச்சக்கர வண்டியில் டேனியலை தூக்கிபோட்டுக்கொண்டு வண்டியில் அமர்ந்தான். வேகமாய் வண்டி சென்றது.
ஔவியன் மாணவர்களை நோக்கி முன் நகர்ந்தான்.
பாடசாலை மைதானத்திலிருந்து ஒரு ஆசிரியை கையசைத்தப்படி ஔவியனை அழைக்க மைதானத்தை கடந்துச் சென்றான்.
ஒரு வகுப்பறையில் மாணவர்கள் சூழ கண்கள் சிவந்து, இதயதுடிப்பு இரு மடங்கு வேகத்தில் உச்சந்தலையை தொட்ட நிலையில் பதின்மூன்று வயது மாணவன் ஒருவன் கதிரையில் அமர்ந்திருந்தான்.
அவன் டேனியலின் மகன் மரினோ. கண் முன்னேயே தந்தை தாக்கப்படுவதை பார்த்த ஆத்திரத்தில் அந்த சின்ன இதயம் படும் பாட்டை ஔவியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"என்ன நடந்தது டீச்சர்? "
ஆசிரியர் சொல்வதற்கு முன்பே மரினோவின் தோழன் சம்பவத்தை விவரித்தான்.
"டேனியல் மாமா.... ட்ரெக்டர திருப்புறதுக்காக இந்த பக்கம் திருப்பினாரு. ......." கதையாய் சொன்னான் சிறுவன்.
******
சாதாரணமாய் நடந்து வந்த இருவர். இரு திசைகளிலிருந்தும் சட்டென வேகமாகிறார்கள்.
ட்ரெக்டரில் பாய்ந்து டேனியல் முகத்தில் குத்தினான் ஒருவன். கையில் இரும்பில் செய்த முள் வளையம் ஒன்றை நான்கு விரல்களுக்குள் நுழைத்து பெருவிரலால் இருக்கி பிடித்திருந்தான்.
" ஐயோ......ஐயோ....." கத்தினான் டேனியல்.
விடாது குத்திக் கொண்டே சென்றான் அவன்.
சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார்கள் மாணவர்கள். வகுப்பறையிலிருந்து ஏதோ சத்தமென்று ஓடி வந்தான் மரினோ. மைதானத்திற்கு வரவிடாது தடுத்தான் நண்பன். தடுப்பை மீறி விளையாட்டாய் விசயம் தெரியாது ஓடினான் மரினோ.
தூர நின்று பார்த்தான். தந்தை ஓட்டும் ட்ரெக்டர். அதில் இருப்பதும் தந்தையேதான்.
வேகமாய் ஓடியவன் அந்த மைதானத்தில் கிடந்த பெரிய கல்லை தூக்கினான். அவனது கோபத்தின் வேகத்தில் கல் வேகமாய் சென்றது. அந்த மனித வேட்டைக்காரனின் நெத்தியில் பட்டு விழுந்தது.
ஆத்திரத்தில் கீழே இறங்கியவன் சிறுவன் என்று கூட பாராமல் மரினோவை தாக்க ஓடி வந்தான். " பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்தால் பொலிஸ் பிரச்சினை தீவிரமாகும் என்று மற்றவன் தடுத்து நிறுத்த இருவரும் ஓடிவிட்டார்கள்.
சிறுவன் நிகழ்வை சொல்லி முடித்தான்.
"மரினோவை அவன்கள் என்றாவது தாக்கக்கூடும். என்ன செய்வதென்றே புரியவில்லை. " ஆசிரியை அச்சத்தை வெளிபடுத்தினார்.
"அதெல்லாம் நான் பாத்துக்குறென். மரினோ மேல எவனாவது கைய வச்சான்....அப்பறம் நா யார்னு தெரியும். அவன்க பிள்ளைகளுக்கு வன்முறையை தூண்டுற மாதிரி ஸ்கூல் முன் இப்படி செய்ததே பெரிய பிழ. அவர்களுக்கு ஒரு பாடம் படிபிச்சே தீருவேன்"
ஔவியரின் வார்த்தைகள் ஆசிரியருக்கு ஒரு தெம்பை கொடுத்தது. மரினோவும் பயம் தெளிந்து கண்களை துடைத்தான்.
....விஞ்ஞானம் சீண்டா கலைகள் தொடரும்....