• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 07

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. மேட்டிலும் பள்ளத்திலும், மரங்களிலும் கற்பாறைகள் மேலும் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் சிலர், சிலவயதானவர்கள் வேடிக்கைப் பார்க்க ஆவலோடு நின்றுக்கொண்டிருந்தார்கள்.

மலரும் நர்மதாவோடு வந்திருந்தாள். இலங்கோவும் யாத்ராவும் ஒரு ஓரமாய் நின்றுக்கொண்டிருந்தார்கள். இடைக்கிடையே குரல் கொடுப்பதற்காக சில சிறுவர்களும் அவர்களுக்கருகில் நின்றுக்கொண்டிருந்தார்கள்.


நர்மதா நடிக்கவேண்டிய வேடத்தில் அங்கு வேறொரு பெண். வீதி நாடகம் ஆரம்பமானது.
நர்மதா கைதட்டி துள்ளிக்குதித்தாள். அவளது உற்சாகம் அந்த முழு கூட்டத்திடமும் தொற்றிக்கொள்ள அனைவரும் விசில் செய்து கை தட்டி ஆரவாரம் செய்து நாடகத்தை வரவேற்றார்கள். கலைஞர்கள் ஒருவித பெருமிதத்தோடு உள்ளம் மகிழ்ந்தார்கள்.ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?


" காக்கா குருவிகள் கூட அதுகளோட கூட்ட அதுகளே கட்டி உரிமை கொண்டாடுதுகள்.
ஆனா நாம தோட்டத்துல வேல செய்றதுக்காக இந்த லயத்துல தங்கியிருக்கம். நம்ம நிலைமைய பாத்திங்களா?"

ஓர் ஏழை தந்தை சுத்தி நின்ற கூட்டத்தைப் பார்த்து கேட்கிறார்?

இறப்பர் மரம்வெட்டிவிட்டு வந்த தாய். கால் விரல்களுகிடையில் இரத்தம் உறஞ்சி கிடக்கிறது. ஆடை முழுவது இறப்பர் பால் ஒட்டி ஆடை நிறமே மறைந்திருந்திருத்தது. பால் வாளியை கீழே வைத்துவிட்டு. இரத்தம் தேடி அங்குலம் அங்குலமாய் அவள் உடலை அளந்துக்கொண்டிருந்த அட்டைகளை பிய்த்து தூரத்தே எறிந்துவிட்டு ,

"என்னங்க, என்னத்த புலம்பிகிட்டுருக்கிங்க? "
என கேட்கிறாள்.

" என்னத்த புலம்பி என்ன ஆகப்போகுது? யார்தா நம்ம நிலமய புரிஞ்சிக்கப் போறா?"

"புரிஞ்சிக்க யாருமில்லனு தெரிஞ்சும் எதுக்குங்க புலம்புறிங்க?"

"அதுவும் சரிதாபுள்ள..."

நர்மதா நடிக்கவிருந்த கதாப்பாத்திரம் புத்தகப்பையோடு காட்சி தருகிறாள் சிறுமியொருத்தி.

"அம்மா,அப்பா எனக்கு இந்த படிப்பே வேணாம். கிட்டத்தட்ட ஆறு கிலோமீற்றர் தூரம் நடந்தே போய் நடந்தே வரேனுங்க அப்பா. என் காலெல்லாம் வலிக்குது. "

தந்தையை பார்த்து பேசியவள் தாயின் பக்கம் திரும்புகிறாள்.

"அம்மா, நானும் உங்கூடயே வேலக்கி வந்துர்ரன். ஸ்கூலுக்கு போக முடியாது. அவ்ளோ தூரம் நடக்க முடியலம்மா. காலெல்லாம் வலிக்குது.... " கண்ணீரோடு பேசுகிறாள்.

மகளின் வேதனையை பொறுத்துக்கொள்ள முடியாத தாய்,

"அழுவாத... நட தான் நம்ம அடையாளமே. மேடு பள்ளம் எல்லாம் ஏறி எறங்க நமக்கு கடவுள் சக்திய கொடுத்துருக்கான்னு பெரும்படனும். புத்தகத்த சுமந்துகிட்டு ஸ்கூலுக்கு நடக்கவே அழுவுற.... நீ பால் மர வெட்டவோ தேயில புடுங்கவோ ஹெலிகப்டர்ல போவியாக்கும்? அதுக்கு இதவிட ரெண்டு மூனு மடங்கு நடக்கனும். "

"என்னம்மா சொல்ற?"

"ஆமா தாயி.... நாங்க பட்ட கஷ்டம் நீ பட கூடாதுனு தான் உன்ன படி படினு சொல்றம். படிப்பு ஒன்னுதா தாயி நம்ம தலயெழுத்தயே மாத்தும். "

கண்களை துடைத்துக்கொண்டு வீரமாய் எழுந்த சிறுமி ,

"ஆமா , நா கட்டாயம் நல்லா படிப்பெ. நாங்கல்லாம் படிச்சிடகூடாதுன்னா ஸ்கூலுக்கு போறதுக்கு றோட்ட கூட ஒழுங்கா செஞ்சிக்கொடுக்காம இருக்காங்க... ? நா படிச்சி இங்க இருக்க எல்லா புள்ளைகளையும் படிச்சி பெரியாளாக வப்பன். ஆமா கண்டிப்பா படிப்பே. சாதிச்சிகாட்டுவெ" சிறியவளின் தைரியப் பேச்சு அந்த கூட்டத்தை மெய் சிலிர்க்க வைத்தது. கூட்டத்தை பார்த்து சத்தமா கத்தி பேசுகிறாள். " நாமல்லாம் படிக்காமல் இருக்குமட்டும் இங்க இப்படியேதான் இருப்பம். படிப்பு; படிப்பு ஒன்னு மட்டும்தான் நம்மகிட்ட இருக்க ஒரே ஆயுதம். நாமெல்லாம் கட்டாயம் படிக்கணும். படிப்போமா? படிப்போமா? சொல்லுங்க படிப்போமா? " ஆங்காங்கே கூடி நிற்கும் மக்கள் கூட்டத்தை விழித்து கேட்கிறாள். "ஆமா...ஆமா... கட்டாயம் படிப்போம்..." என கூட்டத்தின் சார்பாக யாத்ரா ஔவியனோடு இணைந்த சிறுவர்களும் பதில் கூறுகிறார்கள்.


கோமாளி வேடத்தில் ஒர் உருவம் வந்து குதிக்கிறது. சுத்தியும் இருக்கும் மக்ககளைப் பார்த்துச் ஏளனமாய்ச் சிரிக்கிறது.

"ஹா.....ஹா.....ஹா.... என்னது? (ஆள்காட்டி விரலை நீட்டி ) நீங்க எல்லாரும் படிக்க போறிங்களா? " ஒவ்வொரு திசையிலும் திரும்பி திரும்பி கேட்கிறது. " நீங்க எல்லாருமே படிக்கப்போறிங்களா? அம்மாமார்களே அப்பாமார்களே... எல்லாரும் உங்க புள்ளங்கள படிக்க வக்கப்போறிங்களா? ஹா....ஹா..... புள்ளங்க நீங்களாம் படிச்சி பட்டதாரியாகப் போறிங்களா? " யாத்ராவும் ஔவியனும் அவர்களோடிருந்த சிறுவர்களும் "ஆமா ஆமா நாங்களாம் படிச்சி பட்டதாரியாகுவோம். எங்க லயத்தோட தலையெழுத்த மாத்தி எழுதுவோம். " என்று கத்தினார்கள்.

கோமாளி - அனைவரையும் பார்த்து சிரிக்கிறது. " நல்ல கதை, நீங்க எல்லாரும் படிச்சி பட்டம் வாங்கிட்டால் இங்க யாரு இறப்பர் மரம் வெட்டி பால் எடுக்குறது? யாரு தேயில கொழுந்து பறிக்கிறது? ஹா....ஹா....ஹா.... பாதியில படிப்ப நிறுத்தி இந்த கூட்டத்துலயே எத்தினபேர் நிக்கிறிங்க? உங்களெல்லாம்தான் இந்த இறப்பர் மரங்களும் தேயிலைச் செடிகளும் எதிர்பார்த்து காத்து கெடக்கு. நீங்களாம் படிச்சி பட்டம் வாங்கிட்டாலும்... ஹா....ஹா...."
சிரித்துக்கொண்டே நகர்கிறது.

இலங்கோவை நெருக்கிக்கொண்டு ஒரு உருவம். " யார்டாப்பா இப்படி தள்ளிகிட்டு வாரது? " என்றபடியே திரும்பிபார்த்தால் "அட... அந்த திமிர்புடிச்சவ. எதுக்கு இப்படி தள்ளிகிட்டு நிக்கிறாள்? " என அவளைத் தாண்டி பார்க்க மீசைக்கூட முளைக்காத ஒரு அரும்பு அவளைத் தள்ளிக்கொண்டிருந்தான். அந்த அருவருப்பில்தான் அவள் தன்னை நெருக்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தவன் மீசை கூட முளைக்காத அந்த அரும்பை பார்த்து முறைக்க அவன் மெதுவாய் நலுவி மறைந்தான்.

அவன் நலுவுவதை கண்ட அவள் எதிர்திசையில் திரும்பிபார்க்க, அப்போதுதான் இலங்கோவை கண்டாள். "அய்யோ இந்த மனுஷனா! இந்த மனுஷனயா இவ்வளோ நேரம் தள்ளிகிட்டு நின்னம் ?" என உள்ளுக்குள்ளேயே பயந்து புலம்பினாள்.

" வாய் வீரமெல்லாம் எங்க பயன்படுத்தனுமோ அங்க பயன்படுத்தாதிங்க. " என்று சொல்லிவிட்டு அந்த பையன் போய்ட்டான். கொஞ்சம் மேல்ல ஒரசாம தள்ளி நிக்கிறிங்களா? " என்க , "அய்யே பெரிய மன்மதன் வந்து ஒரசுறாங்க... " என மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தள்ளி நின்றாள்.


கையில் மைக்கோடு ஒருவன் பேச , இன்னொருவன் தொலைபேசியில் வீடியோ எடுப்பது போல் நடிக்கிறான்.

"வணக்கம் அம்மா வணக்கம் அப்பா... உங்க பொண்ணு கஷ்டப்பட்டு படிச்சி பட்டம் வாங்கிட்டாள். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க. ?"

"வணக்கம். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணு எவ்ளோவோ கஷ்டத்துக்கு மத்தியில படிச்சா. அவ சொன்னமாதிரியே பட்டதாரியாவும் ஆகிட்டா. இதவிட வேறென்ன வேணும் எங்களுக்கு? " உளமகிழ்வோடு பேசுகிறார்கள் பெற்றோர்கள்.

" அடுத்தகட்டமாக என்ன செய்ய போறிங்க? அடுத்த திட்டம் என்ன?" மகளிடம் மைக் திருப்பப்படுகிறது.

" அடுத்து என்ன... டீச்சிங் எப்பொய்மெண்ட் கிடைக்கும். அதுக்காக காத்திருப்பென். அப்புறம் என்னபோல கஷ்டபட்ற பிள்ளைகள நல்லா படிக்கவப்பன்." ஆர்வத்தோடு பதிலளிக்க சிறிய பரிசொன்றையும் கொடுக்கிறார்கள்.

மீண்டும் கோமாளி - " அட, சொன்ன மாதிரியே பட்டம் வாங்கிட்டபோல... என்ன டீச்சராகப்போறியா? ம்..... நல்லது நல்லது... அப்ப அந்த டொக்டர், இன்ஜினியர், லாயர், அப்படிலாம் சொல்றாங்களே.... அதெல்லாம் ஆகமுடியாதா உன்னால? ஹா ஹா ஹா..... அதெல்லாம் ஆகனும்னால் இன்னும் இருநூறு வருசம் உழைக்கணும்.... ஹா ஹா ஹா...."

சிரித்துகொண்டு அவர்களை சுற்றி சுற்றி ஆடுகிறது கோமாளி. அந்த குடும்பம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அமைதியாகி நிற்கிறது.

மக்கள் கூட்டம் கைதட்டிவிட்டு களைகிறது.

நர்மதா ஓடி வந்து " சூப்பரா நடிச்சடி. " என மகளாக நடித்த சிறுமியை தழுவிக் கொண்டாள்.

" தம்பி நாடகம் நல்லாருந்துச்சி. எங்களுக்காகவே இந்த நாடகத்த செய்துருக்கிங்க. பார்ப்பம். கடவுள் கண்ண திறக்குறானான்னு. "

கண் கலங்கியப்படி மலர் பேச , "மாற்றம் நடக்கும் மலரக்கா. நம்புவோம். " என ஔவியன் சொல்லிக்கொண்டிருக்கையில் யாத்ராவும் வந்து இணைந்துக்கொண்டாள். "நீங்க நர்மதாவ படிக்கவைங்க. அப்பதான் இந்த கண்ணீருக்கு ஒர் அர்த்தம் இருக்கும். "

"நா படிக்கிறேன் அக்கா. " என யாத்ராவின் கரத்தை வந்து தாவிக் கொண்டாள் நர்மதா.

அவளை அணைத்துக்கொண்டு, " பாருங்க ஓடியாடி விளையாட வேண்டிய வயசு. இவள போய் வீட்டுவேலக்காரியா ஆக்கிடிங்களே மலரக்கா?"

யாத்ராவின் கேள்வி மலரின் இதயத்தை குத்திக்கிழித்தது. கண்ணீர் மலமலவென கொட்டத்தொடங்கியது.

" அழுகாதிங்க. வீட்டுக்கு போய் நல்லா யோசிங்க. "

" சரி தம்பி.நா போய்ட்டு வாறேன். " என்று நர்மதாவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்துச் சென்றாள் மலர்.


நடிகர்களும் அவரவர் வேடங்களை களைத்துவிட்டு வந்து நிற்க யாத்ராவும் ஔவியனும் கைக்கொடுத்து பாராட்டினார்கள். கோமாளியாக நடித்தவனின் திறமையை அதிகமாக பாராட்டினாள் யாத்ரா.


"ஔவியன்... இந்த நாடகமெல்லாம் நம்ம சனத்த சிந்திக்க வைக்கும்னு நம்புறியா? " இதெல்லாம் தேவையில்லாத வேலை என்பது போல் இலங்கோ கேட்க, சிரித்துக்கொண்டே,
" மச்சா..... ஒட்டுமொத்தமா எல்லாரையும் சிந்திக்க வைக்க முடியாதுதான். இங்க நின்னவங்கள்ள ஒருத்தர் சிந்திச்சாலும் பெரிய விசயமில்லையா?" என்றான் ஔவியன்.


"என்னமோ....உன் எண்ணம் நல்லம். எல்லாம் நல்லதா நடந்தா எனக்கும் சந்தோசம்தான். "


"ஆமா.... யாரு அவ? புதுசா இருக்காளே? "
"யாரை கேட்கிறான் ? " புரியாதவன் போல இலங்கோ விழிக்க,

"அதான் கூட்டத்துல, உங்க பக்கத்துலயே நின்னுகிட்டிருந்தாளே, நீங்க கூட பேசினிங்களே?"

"நாடகத்த பார்க்காம... அததான் கனிச்சிகிட்டுருந்தாயா நீ?"

"அட , சொல்லுங்க மச்சா...."

"அவளா....அவ ஒரு திமிர்பிடிச்சவ. நம்ம கங்காணி மகன் பிரதீப் இவகிட்ட சேட்டபண்ணிகிட்டுருந்தான். அவனுக்கு பயந்துகிட்டு என்பக்கமா தள்ளிநின்னா. அதான் அவன மெரட்டி அனுப்பிவிட்டேன். வேறொன்னும் இல்லடா ப்பா" என்று சொல்லி முடித்த இலங்கோ, அந்த பெண்ணையும் தாண்டி பிரதீபின் மீது யோசனைகொண்டான்.

"பிரதீப் சுயநினைவோட இருந்மாதிரி தெரியல. ஏதோ குடிச்சிருப்பான் போல. "

" ம்.... பிரதீப் , அவனும் நல்லா படிக்கவேண்டிய பையன்தான். இப்ப கண்டதையும் குடிச்சிகிட்டு வீணாபோய் கெடக்குறான்."

"இப்படிபட்டவன்கள வச்சிகிட்டுதான் இந்த தோட்டத்த மாத்தபோறன்னு போறாடிகிட்டுருக்க நீ? அடுத்து ஸ்கூல் போகாமல் இடையில நிக்கிறவன்களும் இவனோட சேந்துருவான்கள். இதுகலாம் எங்க படிக்கபோவுதுங்க."

"சரி....அதவிடுங்க மச்சா, அந்த பொண்ணு எப்படி? " ஒருவிதமாக ஔவியன் கேட்க "அட போப்பா நீ வேற" என நலுவி சென்றான் இலங்கோ.

"என்ன....எங்க அண்ணன குழப்பிட்டுருக்கிங்க? "

"இல்ல....உங்க அண்ணனுக்கு கல்யாண ஆச வந்துருச்சி போலயே... ? "

"வாலாவெட்டாயா தங்கச்சி வந்து நிக்கிறா. அவள அந்த நிலையில வச்சிகிட்டு இலங்கோ அண்ணே கட்டும்னு நினைக்கிறிங்களா? அவளுக்கு ஒரு நல்லது நடக்கட்டும்னுதான் சொல்லும். "


"இன்னைக்கு எங்க வீட்ல தான் உங்க எல்லாருக்கும் சாப்பாடு. வாங்க போவோம்" என யாத்ரா சொல்ல , பாத்திரமேற்று நடித்த சிறுவர்களும் இளைஞர்களும் " அய்.... ஜாலி ஜாலி...." என்றபடி நடையை கட்டினார்கள்.


....விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்