கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் மல்லாக்காய் சாய்ந்துக் கிடந்தன. இதனைக் காண்கின்ற தாவரப் பிரியர்களுக்குப் பின்னணி இசையாக மரங்களின் மரண ஓலமே கேட்கும். யுத்தத்திலோ இயற்கை அனர்த்தங்களிலோ நாற்பது மனித உயிர்கள் ஒரே இடத்தில் சரிந்து கிடப்பதை பார்க்க எப்படியிருக்குமோ? அப்டியிருந்தது ஔவியனுக்கு.
"இது மக்களின் அடிமை நிலையை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. 'பல வருடங்களாக இத்தோட்டத்தில் வாழ்ந்து வந்தாலும் கூட "ஒரு செடியைக்கூட நாற்ற முடியாது. ' என்ற நிலைக்கு இத்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது மக்களின் அடிப்படை உரிமை மீறுவதாக அமைவதுடன் தோட்டத் தொழிலாளர்களை, நிறுவனங்கள் இன்னும் அடிமைகளாகவே நடத்துகிறார்கள். அன்றைய வெள்ளையனுக்கு பதில் இன்றைய கம்பெனிகள். எங்கள் விதிக்கொடுமை என்றுதான் மாறுமோ....?" தொலைப்பேசிக்குள் நடுத்தர வயதில் ஒருவன் ஆதங்கத்தை கொட்டிமுடிக்க, தொலைபேசியை அணைத்தாள் சாரு.
"இதுக்கு ஏதாவது செய்யணும் ஔவியன் அண்ணா. அடிப்படை மனித உரிமைகள் கூட நமக்கு இல்லயா? நம்ம உரிமய நாமதான்ணா கேட்டு வாங்கணும். " சூட்டோடு பேசினான் ருத்ரன்.
"தோட்ட நிர்வாகம் தன் காணியில் உள்ள மரங்களை வெட்டுது. அதுக்கு யார கேட்க வேணும்...
இதில் என்ன வெங்காய உரிமை கேட்க இருக்கு?
" சொல்லிக்கொண்டே நுழைந்தான் இலங்கோ.
என்ன ஒரு எதிர்மறையான வார்த்தைகள். சட்டென திரும்பினான் கிருபா. அந்த நாற்பது மரங்களில் கிருபாவின் முதல் காதலி கொடுத்த கன்றும்தான் மரமாகி இருந்தது. அவள் நினைவாக அவனிடமிருந்தது அதுவொன்றுதான். அவள் எங்கே சென்றாளோ? திரும்பவும் கண்ணில் படுவாளோ இல்லையோ? என்பதையெல்லாம் அவன் நினைப்பதில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று அவன் காத்திருக்கவுமில்லை. ஆனால் அவன் அவளின் நினைவாக அவள் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த மரத்தை காதலித்தான். "அந்த மரமும் அல்லவா அங்கு சாய்ந்துக்கிடக்கிறது. அந்த ஒற்றை மரத்தையாவது விட்டிருக்கலாமே.... அந்த மரம் யாரை என்ன செய்தது? அவள் கூட திரும்ப வரக்கூடும். ஆனால் அந்த மரம் ? என மனதுக்குள் ஏங்கி ஏங்கி விம்மிக்கொண்டிருந்தவனை இலங்கோவின் வார்த்தைகள் ஏதோச் செய்தது. தோட்ட நிர்வாகத்தின் மீதிருந்த அத்தனை கோபத்தையும் சேர்த்து இலங்கோவின் மீது சீறிடலாம் போல் இருந்தது அவனுக்கு.
காலை பின்னோக்கித் தேய்த்து வேகம் எடுக்கும் காளை போல் அவனது மனதுள் புதைந்திருந்த ஆத்திரமெல்லாம் மேலெழயெழ முகம் மாறிக்கொண்டேப்போனது.
" மச்சா சொல்றதும் உண்மதான். " ஔவியனின் குரல் கேட்க சமநிலையானான் கிருபா.
" தோட்ட நிர்வாகத்தோட காணியில மரம் நாட்டிட்டி அத வெட்ட கூடாதுன்னு சொல்ல நமக்கென்ன உரிம இருக்கு? அது அவன் நிலம். அவன் மரம் வெட்டுவான்,நாட்டுவான். அது அவனின் முடிவுதானே. இதுல என்ன மக்கள் உரிமை மீறல்? "
ஓர் இடம் பிடித்து இலங்கோவும் அமர்ந்த்கொண்டான்.
"அண்ணா, எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துலருந்தே நா அங்கதான் இருக்கெ. அவ்ளோ யே, யே அப்பா பொறந்தது கூட அந்த வீட்டலயேதானாம். யே அப்பாவுட்டு அப்பா , அவர்ட அப்பா எல்லாரும் அந்த வீட்லதான் பொறந்து வாழ்ந்து செத்துருக்காங்க. அந்த காணியில மரம் வளக்க உரிமையில்லையா அண்ணா? அதோட நெலத்துல மரம் வளக்க என்ன உரிம வேண்டிகெடக்கு. நாங்க என்ன பக்கத்து வீட்லயா மரம் வளத்தோ ? சின்ன வயசுலருந்து எங்க அப்பா பாத்து பாத்து செஞ்ச நெலத்துலதானே மரம் வளத்தோ. என்னோட மரத்தையும் வெட்டிடாங்களே!" தேம்மி விம்மி அழாத குறைதான். ஆண் பிள்ளை அழ கூடாது அல்லவா. ஆனால் அவனின் பதற்றமான பேச்சியின் பின் இருந்த அழுகை எல்லோருக்கும் புரியாமலில்லை.
" நீ சொல்றது சரிதா கிருபா. பக்கத்து வீட்டு காணியில மரம் நட்றமாதிரியான செயல்தான் இது. இருநூறு வருசமா இங்க வாழ்ந்தாலும் நம்ம பாட்டனோ பூட்டனோ ஒரு பேச்சஸ் காணியகூட தன் பெயர்ல வாங்கி வைக்கலயே. இதெல்லாம் வெள்ளகாரன்கள் போரப்ப கம்பெனிகளுக்கு குத்தகைக்கு கொடுத்துட்டுப்போன தோட்ட நிலங்கள். கம்பனிகள் குத்தகைக்கு எடுத்து நிர்வாகம் செய்ற தோட்டங்கள்ள நாம ஒன்னும் செய்ய முடியாது. " ஔவியன் நிதானமாய்ச் சொல்லி கிருபாவை தெளிவுபடுத்த நினைத்தான். ஆனால் அவனைப் பொருத்த வரை அவன் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய பூமி அது. அது அவன் வீடுதான். அவன் நிலம்தான். ஔவியன் என்ன சொன்னாலும் அவன் மனம் ஏற்பதாயில்லை.
" அது சரி அண்ணா. தோட்டங்கள கம்பெனிகள் நிர்வாகம் செய்யட்டும். நாங்க தோட்டத்துக்குள்ள போய் ஒரு இறப்பர் மரத்தையோ தேயிலச்செடியயோ வெட்டவோ நாட்டவோ இல்லையே. அதுக்குள்ள போய் ஏதும் செய்துருந்தா அவன் இப்படி செய்யலாம். இது நா சின்ன வயசுலருந்து வாழ்ற வீடு. எங்க லயத்துக்குள்ள நாங்க என்னாலும் செய்வோம். அதுல ஒரு மரம் நாட்ட உரிமை போராட்டம் செய்யணுமா அண்ணா ? " கிருபா எழுந்தே விட்டான்.
"ஹா...ஹா..... கிருபா, ஆத்திரம் வேண்டாம்டா. இவ்ளோ காலம் பொருத்துட்டம். இனி கோபப்பட்டு எதுவும் நடக்காது. நாம கொஞ்சம் சரியா யோசிச்சா எல்லாம் சரியாகும். வாடா வா வா வந்து உட்காரு. " ஆதரவாய் அருகிற்கு அழைத்து நண்பனாய் தோள் மீது கைப்போட்டு தட்டிக்கொண்டே பேசினான் ஔவியன்.
" இந்த தோட்டங்கல்ல வேல செய்றவங்கல தங்கவைக்கிறதுக்காகத்தான் இந்த லய வீடுகள கொடுத்துருக்காங்க. அதொன்னும் நம்ம லயமோ நம்ம வீடோ கெடயாது. அதுவும் கம்பெணிகள் வசம்தான் இருக்கு. அவங்களாக நெனச்சி அந்த வீட்லயே சில வசதிகள செய்து கொடுத்தால் தான் உண்டு. இல்லனால்...... நாம்மல செய்துகொள்ளச் சொல்லி அனுமதி கொடுத்தாலே ஒழிய பெருசா எதுவும் செய்திடவோ உரிம கொண்டாடவோ முடியாதுடா. "
" ஔவியன் இந்த புள்ளங்களுக்கு ஆரம்பத்துலருந்து சொன்னாதான் புரியும். இதெல்லாம் வருங்காலம் தெரிஞ்சி வச்சிருக்கணும். யாருமே விளக்கமா சொல்லிகொடுக்குறது கெடயாது. வருங்காலத்துக்கு ஒன்னுமே தெரியாமல் போனால் இருநூறு வருசமா பட்ட பாடெல்லாம் வீணா தான் போகும். ஒன்னுமே தெரியலயே இந்த புள்ளங்களுக்கு. ஸ்கூல்லலாம் என்னத்த படிக்கிறாங்களோ..." சலித்துக் கொண்டான் இலங்கோ.
"ஸ்கூல் சிலபஸ்லலாம் இத போடமாட்டாங்க மச்சா. அரசாங்கமும் சரி, நம்ம அரசியல்வாதிகளும் சரி, கம்பெணிகளும் சரி மக்கள சிந்திக்க விடமாட்டாங்க. சிந்திச்சிட்டால் அவங்க எப்படி பொழப்பு நடத்துறது ?ஹா..." என்று ஔவியன் ஏளனச் சிரிப்போடு நிறுத்திவிட,
" நம்ம பாட்டனோ பூட்டனோ ஒரு பேச்சஸ் நெலத்தயாவது விலைக்கு வாங்கி போட்டுட்டுருக்கலாம்ல..." எனச் சாரு சிறு பிள்ளைத்தனமாய்ச் சொன்னாலும் அது கருத்தான பேச்சுதான்.
" அதெப்படி சாரு? கைல காசில்லாமல் நெலம் வாங்குறது? " யாத்ரா தலையிட்டாள்.
"யே அக்கா! இப்ப லயத்துல வாழுற யார்கிட்டயுமேவா காசு இருந்துருக்காது ?"
" ஆமா சாரு. நம்மலோட பட்டன், பூட்டன்லாம் தமிழ் நாட்லருந்து வந்தவங்கதானே. அவங்கல்லாம் இங்க வந்து சம்பாதிச்சி காசு தேடிக்கிட்டு திரும்பபோகத்தான் வந்தாங்களாம். ஆனா சொந்தமா நெலம் வாங்குறளவுக்கு யாராலயும் சம்பாதிக்க முடியல ."
" யே...அங்கேயே வேல செஞ்சி சம்பாதிச்சிருக்கலாமே. எதுக்கு இங்க வந்தாங்க? இப்பவரை ஒரு மரம் நட கூட உரிமை இல்லாம வாழ்ந்துகிட்டு கெடக்குறமே ச்செ" பொறிந்தான் கிருபா.
" அந்த காலத்துல இலங்கை இந்தியாலாம் வெள்ளகாரனுக்கு கீழதான் இருந்துச்சி. பிரிடிஸ்ட இராச்சியம் அப்போ. இலங்கைல கோப்பி, தேயில, இறப்பர், ஏலம், கறுவால்லாம் பயிர் செய்து அத ஏற்றுமதி செய்து இலாபம் சம்பாதிக்க நெனச்சான் வெள்ளையன். காடா கெடந்த நெலத்த வெட்டி கொத்தி கன்றுகள நட்டு வேல செய்ய ஆக்கள் வேணும்தானே. அதுக்காகத்தான் நம்ம சனத்த இந்தியாவுலருந்து இங்க கூட்டிட்டு வந்தாங்க. "
"யே அக்கா...? அப்பல்லாம் இலங்கைல மனுசன்களே இருக்கலயா? இங்க இருந்த மனுசன்கள வச்சி வேல வாங்கிருக்கலாமே. எதுக்கு அங்கருந்து எங்க பாட்டன்கள கூட்டிட்டு வரணும்!" அஸ்ணி விவரமாய் கேட்பதாய் நினைத்து கேட்டாள். உண்மையிலும் இது விவரமான கேள்விதான். ஆனால் சரியான உண்மைக் காரணம் தெரியாமல் எதைச் சொல்வது என்று யாத்ரா தடுமாறுகையில் தெரிந்த உண்மையைச் சொல்லி சமாளிக்க முற்பட்டான் ஔவியன்.
" அந்த காலத்துல இலங்கைல இங்க வாழ்ந்தது சிங்கள ஆக்கள். அவங்க ஆங்கிலேயருக்கு கீழ்படிந்து தோட்ட வேலைகள செய்ய விருப்பப்படல. அநேகமான சிங்கள மக்கள் நிலங்களுக்குச் சொந்தக்காரவங்களாதான் இருந்தாங்களாம். அதனால் வேலை செய்து சம்பளம் வாங்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கல. அதனால இந்தியாவுல தமிழ்நாட்டிலிருந்து மக்கள தொழில் வாய்ப்பு தாரதாவும் நல்ல சம்பளம், நல்ல வசதியான வாழ்க தாரதாவும் சொல்லி வர வச்சாங்க. "
வினோத் குறுக்கிட்டு " யே தமிழ் நாட்ல அவங்களுக்கு தொழிலோ , நிலமோ இருக்கலயா? இங்க சிங்கள ஆக்கள் கூலி வேல செய்ய விருப்பப்படலயே. யே அவங்க மட்டும் தமிழ்நாட்லருந்து வரணும்? " என கேட்க, யாத்ரா " இப்படி குறுக்க குறுக்க பேசினால் என்னால இத சொல்ல முடியாது. " என்றாள்.
ஒரு தோரணையில் சொல்லிக்கொண்டு வந்தவளை குழப்பிவிட்டுவிட்டானே. வினோத்தை ஒரு நோட்டம் விட்டுவிட்டு அவன் தலையில் "யேண்டா ..?" என ஒரு குட்டு குட்டினான் ஔவியன். மீதியை ஔவியன்தான் சொல்லியாகனும்.
" அதுவா...., இந்த மக்கள் சிறந்த உழைப்பாளி கள். தமிழ் நாட்லயும் நிலம் வைத்திருந்த பன்னையார்கள் இருந்தாங்க. இந்த மக்கள் அந்த பன்னையார்கள்ட நெலத்துல தான் வேல செஞ்சிகிட்டுருந்தாங்க . ஒரு கட்டத்துல பன்னையார்கள் சில நிலங்கள விக்கிறதா சொன்னாங்க. அப்ப.... உழைப்பாளிகளா இருந்த இந்த மக்களுக்கு சொந்தமா நிலம் வாங்க வாழ ஆசபட்டாங்க. ஆனால் பணம் இருக்கல. அப்பத்தான் இலங்கைல " நல்ல வேல, நெறய சம்பளம்னு " சொன்னதும் , இலங்கைக்கு வந்து நல்லா சம்பாதிச்சிட்டு சொந்த நாட்டுக்குப் போய் காணி வாங்கனும்னு நெனச்சி இங்க வந்தாங்களாம். " என்று சொல்லிவிட்டு இந்த இடத்தில் யாருக்காவது ஒரு கேள்வி வருமே. என நினைத்து இடைவெளி விட்டான். ஔவியன் நினைத்து போலவே மீண்டும் வினோத் கேட்டான்.
" வேலைக்காக வந்தாங்க சரி, யே திரும்ப போகல? சம்பாதிச்சிகிட்டு போய் தமிழ் நாட்டுலயே காணிய வாங்கி அங்க வாழ்ந்துருக்கலாமே. அப்ப நாங்கல்லாம் இந்தியாவுல பொறந்துருப்பம்தானே.... யே அண்ணா இவங்க போகல? "
" திரும்ப போகாமல் விட்டதுக்கு நெறய காரணம் இருக்கு வினோத். இப்ப மாதிரி ஃப்ளைட் இருக்கல வினோத் அப்போ. அங்கருந்து வந்த பயணமே நரகம்தான். காட்டு வழி. அங்கருந்து நடந்தேதான் வந்தாங்க. வார வழியிலயே நெறய பேர் செத்துப்போய்ட்டாங்க. ஒவ்வொருத்தரும் ஒருத்தரயாவது எழந்துதான் இங்க வந்து சேர்ந்தாங்க. புருசனோ , பொண்டாட்டியோ , புள்ளங்களோ, பெத்தவங்களோ கண் முன்னுக்கே செத்துபோனாங்க. செத்த உடம்புகள அந்த காட்டுலயே போட்டுட்டு வாரப்ப எவ்வளோ வேதனப்பட்டுருப்பாங்க. செத்துப் பொழச்சி மிஞ்சினவங்கதான் இங்க வந்து சேர்ந்தாங்க. " ஔவியனின் கண்கள் கலங்க பிள்ளைகளின் கண்களும் கலங்கிநின்றன. ஔவியன் தன் தளதளத்த குரலை சரிசெய்து விட்டு மீண்டும் பேச ஆரம்பிக்கையில்,
"அண்ணா கப்பல்ல வந்துருக்கலாமே. அந்த காலத்துல கப்பல் இருந்துச்சிதானே அண்ணா? " அஸ்ணி கேட்டாள்.
" ஆமா அஸ்ணி. கப்பல்லயும் கொஞ்சபேர் வந்தாங்க. அளவுக்கு அதிகமா ஆக்கள கூட்டிகிட்டு வந்த " ஆதி லட்சுமி" னு ஒரு கப்பல் இடையில கவிழ்ந்து அதுல வந்த அத்தன பேருமே செத்துபோய்ட்டாங்க. நெறய ஒழைக்கலாம். சொந்த நாட்ல போய் காணி வாங்கலாம்னு ஆச ஆசயா வந்த சனம், கொஞ்சம் கூட எதிர்பார்த்துருக்காது, இவ்ளோ வேதனைகள அனுபவிக்க வேண்டி இருக்கும்ணு." எனச் சொல்லி கண்களைத் துடைத்தாள் யாத்ரா.
ஔவியன் தன் முன்னோர்களின் வேதனைகளை அவனுள் கொண்டுவந்து நிறுத்தினான். அவனால் அடக்கிக்கொல்ல முடியாத வேதனை அவனைச் சூழ்ந்தது.
" அரவுயிரா வந்து சேர்ந்தவங்களுக்கு இங்க ஒரு பெரிய இடியே காத்துருந்துச்சி. மல பூமி. முழுக்க காடு. மலை காட்ட அழிச்சி செடிகள நட சொன்னாங்க. என்ன செய்ய? திரும்பி போகவும் சீவன் இல்லாமல் காட்டுக்குள்ள வேல செய்தாங்க. மலையிலருந்து உழுந்து நெறயபேர் செத்தாங்க. தொடர்ச்சியா வேல செஞ்சி செஞ்சே கொஞ்சபேர் செத்தாங்க. பொறந்த புள்ளைய கொஞ்சி பால் கொடுக்க முடியாம ஒவ்வொரு தாய்மாரும் தவிச்சாங்க.
நரகத்துக்குள்ள வாழ்ந்தாங்கன்னே சொல்லலாம். " ஔவியன் சொல்ல சொல்ல பிள்ளைகளின் நாடி நாளங்களின் வேகம் கூடியது.
" நெறைய காசோட வாரதா சொல்லிட்டு வந்த சனம் பெரியளவவில காசு கெடக்காதனால திரும்ப போகாம இருந்துட்டாங்க. சிலர் சொந்தங்கள பலிகொடுத்த விரக்தியில திரும்பிப்போகாமல் இருந்துட்டாங்க. இந்த மண்ணு பழகிபோக இந்த மண்ண விட்டுப் போக விருப்பமில்லாமல் இங்கேயே தங்கிட்டாங்கனவங்களும் இருக்காங்க. சிலர் போக முயற்சிப்பண்ணியும் ஏதேதோ காரணங்களால போக முடியாமல் போக இங்கேயே தங்கிட்டாங்க. அப்படியே இந்தியாவுலருந்து இங்க வந்து இருநூறு வருசமும் ஆச்சி. " வினோத்தின் கேள்விக்கான பதில் இதுதான் என்பது போல அவனை நோக்கி சொல்லி முடித்தான் ஔவியன்.
" ஆக மொத்த்துல சொந்த காணி வாங்கன்னு புறப்பட்ட சனம் இவ்வளோ கஸ்டங்கள அனுபவிச்சும் மாடா ஒழச்சும் இந்தியாவுலயோ இலங்கையிலயோ இன்னமும் ஒரு ஏக்கர் காணிய சொந்தமா வாங்காமல் இந்த லயத்துலயே குப்பகொட்டிகிட்டு இருக்காங்க இல்லையா அக்கா..? " ருத்ரன் கேட்டான்.
" இல்ல ருத்ரன். ஒட்டு மொத்தமா எல்லாரும் அப்படியே வாழ்றாங்கன்னு சொல்ல முடியாது. இந்நியாவுக்குப் போக முடியாட்டியும் இந்த தோட்ட வாழ்க்கைய விட்டுப் போனால் போதும்னு நினைச்ச சிலர் இலங்கையிலேயே வடக்கு மாகாணத்துல கிளிநொச்சி, வவுனியா போன்ற பிரதேசங்கள்ள போய் காணி வாங்கி அங்க குடிபெயர்ந்து வாழ்றாங்களும் இருக்காங்க. " யாத்ரா சொல்ல,
" ஆனால், அங்கயும் மலையகத்தான்ற பேர்லதான் வாழ்றாங்க. யாழ்பாணத்தான் இங்கருந்து போனவங்கள ஒரு விதமாதானே பார்க்குறான். " இலங்கோ அவன் அனுபவத்தைச் சொன்னான்.
" அண்ணா, அப்படி பார்த்தால் இலங்கைல எல்லாருமே வந்தேறிய குடிகள்தான். வந்து சேர்ந்த காலங்கள்தான் முன்ன பின்னயே ஒழிய எல்லா சனமும் வேறோரு எடத்துலருந்து வந்து சேர்ந்ததுகள்தான். "
யாத்ரா பேசுகையில் ஔவியனுக்கும் ஒரு விடயம் ஞாபகம் வந்தது.
" மச்சா, இந்தியாவுலருந்து எல்லாருமே தோட்ட தொழிலுக்காக மட்டும் வரல. வியாபாரங்களுக்காகவும் வந்துருக்காங்க. முதலாளிகள், அவங்க எல்லாம் மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் இப்படி எல்லா எடங்கல்யும் இருக்காங்க. ஆனா அவங்கல்லாம் இந்திய வம்சாவளின்னு அவங்கள சொல்லிக்கிறது கெடயாது. மலையக பிரதேசத்துல வாழ்ற நாம மட்டும்தான் இந்திய வம்சாவளின்ற பேர்ல வாழ்றம் "
"அதுனா உண்மத்தா ஔவியன். ஆனா நாம்ம சனம் மட்டும்தான் மொத்த நாட்டுக்கும் சேத்து இன்ன வர ஒழச்சிகிட்டுருக்கு. நாமலாம் இந்த தோட்டங்கல்ல வேல செய்ய முடியாதுன்னு வெளிய போனால்தான் இந்த நாட்டுக்கு நம்ம அரும புரியும். "
"எதுக்கு அண்ணா போகணும்? இத்தன வருசமா ஒழச்சிகொடுத்துட்டு இப்ப எதுக்கு போகணும்? போறதுனால் வெள்ளகாரன் போறப்பயே போய்ருக்கணும். இனி போக கூடாது அண்ணா. எங்க தாத்தா பாட்டி அம்மா அப்பா இல்லனால் இந்த தோட்டங்கல்லருந்து இலாபம் பாத்துக்குமா இந்த நாடு? "
"சூப்பர்டா ..... இத இததான் நா எதிர்பார்த்தெ. "
"என்னா அண்ணா சொல்றிங்க. ருத்ரன் தான் அறிவுகெட்டத்தனமா பேசுறான்னா ..? நீங்களுமா? நாம இப்படியே தொழிலாளிகளாவே இங்க இருக்க முடியுமா? இந்த லய வீட்லயே வாழ்ந்துகிட்டு கொழுந்து பறிச்சிகிட்டும்....மரம் வெட்டிகிட்டும் ....அட்டங்ககிட்ட கடிபட்டுகிட்டு இரத்தம் சிந்திகிட்டு இங்கயே வாழனுமா அண்ணா?"
" டேய் வினோத்.... நீதான் முட்டாள்தனமா பேசுற... நாம இங்கருந்து போய்ட்டா அடுத்து சிங்களவன வச்சி வேல வாங்குவான். இவ்வளோ காலம் ரெத்தம் சிந்துன நெலத்த விட்டு எதுக்குடா நாம போகணும்? நிறைய பேர் கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் டவுன்களுக்கும் போய்ட்டாங்க. மீதியிருக்க நாமலும் போய்ட்டால்.... ? நமக்கு சாதகமா இருக்க ஒரே விசயமே 'இருநூறு வருசமா இங்க வாழ்றம், ஒழக்கிறம்.' என்றதுதான். இத வச்சிதான் நாம நமக்கான அடையாளத்த உருவாக்கணுமே தவிர இங்கிருந்து போய் இன்னொரு இடத்துல வேறொரு புது அடையாளத்த இல்ல . புரியுதா " ருத்தரன் அழுத்தமாய் பேசினான்.
" நம்மள வெள்ளகாரன் மட்டும் அடிக்கல. சிங்களவனும்தான் அடிச்சான். இது அவன் பூமி. சொந்த நாட்டுக்கே போன்னு சொல்லி அடிச்சான். நாம்ம சனம் எல்லா அடியையும் வாங்கிகிட்டு இவ்வளோ காலம் அமைதியா இருக்குது. இனி நீங்கதான் பிள்ளைகள் நம்மள சிறப்பா அடையாளபடுத்தணும். " இலங்கோ பிள்ளைகளின் மனதை சலவை செய்து திடப்படுத்தினான்.
....விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்....

Last edited: