• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 15

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
பௌர்ணமி தினம். அரசாங்க விடுமுறை நாள்.
இந்து ஆலயங்களில் விசேட பூஜைகளோடு அன்னதான நிகழ்வும் நடைபெறும். பௌத்த விகாரைகளில் விஷேட வழிபாடு நடைபெறுவதும் வழமை.


வெள்ளை நிறச் சேட்டொடு நீல நிற டெனிம் காற்சட்டையில் அம்சமாகவே இருந்தான் பியதாச. ஐந்து வயது குறைந்தாற் போன்ற தோற்றம். புத்த பெருமானுக்கு மலர் பூஜை செய்துவிட்டு வெண் தூபியை மும்முறை வலம் வந்து பின், எண்ணெய் விளக்கேற்றி வலம் வந்து அவ்விளக்கை ஓரித்திடத்தில் வைத்துவிட்டு பத்தி கட்டொன்றையும் மணல் பரப்பி பத்தி குத்துவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் குத்தி வைத்தான். காலையிலிருந்து வரும் அனைவரும் குத்திய பத்திகளின் வாசம் விகாரை முழுவதும் மணம் பரவிக் கொண்டிருந்தது. இறுதியில் ஒரு சிறிய செம்பில் நீர் அள்ளிக்கொண்டு கையில் ஏந்தியப்படி அங்கிருந்த அரச மரத்தை வலம் வந்தான். " கீதாவுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை அமையவேண்டும் " சுற்றி முடிப்பதற்குள் நூற்றியெட்டு முறை சொல்லிவிட்டான். அந்த நீரை அரச மரத்தடியில் ஊற்றிவிட்டு பூ மணல் நிறைந்த முற்றத்தில் ஓர் ஓரமாய் கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தான். அவனைப் போலவே வந்திருந்த அனைவரும் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக்கொண்டிருப்பதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தான். மக்கள் பேசிக்கொள்கிறார்கள் தான். ஆனால் கண்களுக்கு மட்டுமே அது தெரிகிறது. காதுகளுக்கோ கூச்சல்கள் எதுவும் வந்து விழவில்லை. பேரமைதியாய் இருந்தது அந்தச் சூழல். அவன் மனதிலும் அமைதி நிறைந்தது. புறப்பட்டான். பாதையெங்கும் பட்டாம்பூச்சிகளின் சஞ்சாரம் போன்ற ஓர் உணர்வு அவனில் அலையலையாய் வந்து மோதி மோதி சென்றன.

முச்சக்கர வண்டி புறப்பட்ட வேகத்தில் சட்டென வேகட்டுப்பாட்டோடு நின்றது. தூரத்தில் ஓர் அழகு தேவதை நீல வண்ணச் சேலையில் மயில் தோகையாய் விரிந்து நின்றாள். ஆஹா.... முகத்தில் தான் எத்தனை சாந்தம்.

அவளையே கண்கள் பார்த்துக்கொண்டிருக்க கால்களின் இயக்கத்தை அவன் கவனிக்கவில்லை. நாசி அவளின் வாசம் நுகர்ந்தது. விரல்கள் அவளின் விரல்களை ஸ்பரிசிக்க தடுமாறியது. அவள் அடையாளம் கண்டுகொண்டாள். மறந்துபோன வலிகள் எல்லாம் மழைத்துளிப் பட்டதும் மேலெழும் மண்வாசனைப் போல் பியதாசவைக் கண்டதும் பீறிகொண்டு மேலேழுந்தன. தடுமாறினாள். உதடுகள் தள்ளாடியது. "உனக்கே என்னை கொடுத்திருக்கலாமே...?" மனம் வெதும்பியது.

தூர நின்று கவனித்த ஔவியன் யாத்ரா, காலம் பலிவாங்கி தீர்த்துவிட்ட அந்த உணர்சி ததும்பலை தொந்தரவுச் செய்ய விரும்பவில்லை.

பாவம் பெண்.... முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுபடுத்த போராடினாள். உணர்ச்சியே வென்றது. சரி அழட்டும்.

" வலிகள் எல்லாம் கரைந்தே ஓடிட அழட்டும். அழு கீதா அழு. இது பொது இடம்தான். பரவாயில்லை பொங்கிவரும் ஆத்திரங்களையெல்லாம் கண்ணீராலேயே கழுவி விரட்டிவிட்டு. இது கோயில் வளாகம் தான். தவறில்லை , அம்மன் தாயாய் உன் கண்ணீரை துடைப்பாள். நீ அழுமா அழு. ஊரார் பார்க்கிறார்கள் தான். கவலையில்லை. அவர்கள் வாழ்த்தில் தான் உன் வாழ்க்கை சீரழிந்தது. அழு கீதா அழு. " கையில் பழதட்டோடு வந்த இலங்கோ தங்கையின் அடக்கி வைத்த அழுக்குகளை கண்ணீரோடு விரட்டும் என்று அங்கேயே நின்றுவிட்டான். அவள் அழட்டும்.


பியதாச துடித்துப் போய் நின்றான். ஆனால் பெண்ணின் காதலை முழுதாக உணர்ந்து நின்றான். என்றாலும் அவளை தாங்கி பிடித்து கண்ணீர் துடைக்கும் அளவிற்கு தைரியம் இல்லை. அவளை தொடமுடியாத தூரத்தில் அல்லவா அவன் இருக்கிறான்.


கீதா சார்ந்திருக்க துணை தூண் தேடி சக்தியற்று நின்றாள். யாத்ரா வந்து கீதாவை தாங்கிபிடித்து நெஞ்சோடு சாய்த்துக்கொண்டாள். கோயில் படியில் அமர்த்தி தன் மடியில் சாய்த்து தேற்றினாள்.


இலங்கோ பியதாசயின் அருகிற்கு வர , ஔவியனும் வந்து சேர்ந்தான்.

" அவ வாழ்க்கையில என்னதான் நடந்துச்சி இலங்கோ ? " (சிங்கள மொழி வாசகர்களுக்காக தமிழில்.)


" வாழ்ந்தா கீதாவோடதா வாழ்வன்னு சொன்னவன் தான் அப்பாவோட கூட பொறந்த அக்கா மகன். சொந்த அத்தை . எங்க பொண்ண சந்தோசமா பாத்துப்பான்னு நெனச்சி தான் நாங்க கீதாவ கட்டிக்கொடுத்தம். விசத்தை கையில வச்சிகிட்டு கீதாவை கட்டிக்கொடுன்னு ஒத்த கால்ல நின்னான் அந்த நாய். சொந்தமாவது பந்தமாவதுன்னு கடைசில நாய் வேல செஞ்சிட்டா. அவெ இன்னொருத்தியோடயும் தொடர்புலந்துருக்கா. அவளயும் கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போட்டா அந்த அத்தகாரி. அதுக்கு கீதா சம்மதிக்கணுமாம். முடியாதுன்னு சண்ணட போட்டுருக்கா கீதா. அவெ ஜாதகத்துல ரெண்டு தாரம்னு இருக்குதாம். அதுக்கு மேல யே தக்கச்சிய நா அங்க விட முடியுமா. ஒடனே கூட்டிகிட்டுவந்துட்டே. அந்த ராஸ்கல நம்பி நாங்க செஞ்ச முட்டாள்தனத்துனால யே தங்கச்சி இன்னைக்கு கண்ணீரோட வாழ்ந்துகிட்டுருக்கா. "


இலங்கோ சொன்னதை கேட்டு பியதாச பரிதாபப்படவில்லை. இறைவனின் கணக்கு
என்றும் பிழைப்பதில்லை என்று நினைத்து உள்ளூர ஆனந்தத் தென்றலில் இதம் கண்டுக்கொண்டிருந்தான்.

" அதுக்கெல்லாம் கவலபடவேணாம் இலங்கோ. கடவுள் எதயும் காரணமில்லாமல் செய்யமாட்டா. எல்லாம் நல்லதுக்குனு நினைங்க. கீதாவுக்கு நா இருக்கெ.... "


" என்ன! நா இருக்கென்னா ...? புரியலயே " ஔவியன் அவனின் வெளிப்படையான பதிலை எதிர்பார்த்தான்.

" நாங்கலாம் இருக்கம்தானே. நா, நீங்க இலங்கோ... யாத்ரா...இவ்வளோ பேர் அவளுக்காக இருக்கமே... அவள கைவிட்டுருவமா ? சொல்லுங்க.அததான் சொன்னென்." ஏதோ சொல்லி சமாளித்தான் பியதாச.


"வாங்களேன் அன்னதானம் சாப்பிடுவம். " பியதாசவை அழைத்தான் இலங்கோ.


வராமல் இருப்பானா. அவளருகில் அமர்ந்து உண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவனுக்கு அது வரமல்லவா. உடனே கண்கள் சிரிக்க "சரி" என்றுவிட்டான்.

கீதாவின் கண்களை துடைத்து முகத்தை கழுவச்செய்து அழைத்து வந்தாள் யாத்ரா. "என் கீதா" என்று முடிவாக்கப்பட்டதாய் உணர்ந்த பியதாச காதலோடு பார்த்தான் அவளை.

பந்தியில் சிலர் வாழையிலையை மடித்து எழ இவர்கள் அமர்ந்தார்கள்.

பியதாச கீதாவின் அருகிலேயே அமரும்படியாக திட்டமிட்டு அமர்ந்தார்கள் எல்லோரும். கீதாவிற்கோ இன்னொருத்தனின் மனைவியாய் ஓர் குற்றவுணர்வு அவளை நெருடியது. தயக்கத்தோடு எழுந்துச்சென்று இலங்கோவின் அருகில் அமர்ந்தாள். பியதாச புரிந்துக்கொண்டான். இத்தனை வருடங்கள் காத்திருந்தவனுக்கு இறைவனாய் தந்த இந்த பௌர்ணமி தினமே பெரும் வரமல்லவா. அது போதும் என்று எண்ணிக்கொண்டான். இனி நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற திருப்தியில் வயிற்றை திருப்தி செய்தார்கள்.



*********

மற்றைய நாட்களை விட தடபுடலாய் தயாராகிக்கொண்டிருந்தாள் இனியா.


"என்னடியம்மா... என்னைக்கு இல்லாத ஆர்பாட்டமா இருக்கு? எந்த நாளும் போற அதே ஒபிஸ்க்கு தானே போற? "


"ஐயோ அம்மா, நீ வேற.... நானே யென் கிளிப்ப காணம்னு தேடிக்கிட்டுருக்கெ...பஸ் போய்ட்டால் அப்புறம் த்திவில்ல மூனு மடங்கு காசு கொடுத்துதான் போகணும். கொஞ்சம் தேடி கொடே "


" நேத்து லீவு நாள் தானே. நாள் முழுக்க வீட்ல தானே இருந்த? நேத்தே எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கலாம்ல? இப்ப வீட்டையே ரெண்டாக்குறியே. ஒரு நாள் தூங்காமல் விட்டதுக்கு முழு நாளுமா தூங்குவாங்க?"


"அம்மா தாயே...நானே தேடிக்கிறெ. " கரங்களால் வணங்கி கேட்டுக்கொண்டாள்.

"இந்தா உன் தலையணை கீழத்தான் இருந்துச்சு. வக்கிறது ஒரு எடம். தேட்றது ஒரு எடம். "


"ச்செல்லம்.... " கன்னத்தைக் அள்ளி தன் உதட்டில் வைத்து ஒத்திக்கொண்டாள்.

நீண்ட கூந்தலை வாரி எடுத்து ஒரு சுற்றுச் சுற்றி தலையுச்சியில் நிறுத்தி கிளிப்பை போட்டு நிறுத்த, மீதி பாதி முடி அந்த கிளிப்பிற்கு மேலாக வந்து கழுத்தின் மேல் வரை தொங்கியது.


தோட்பையோடு கை கடிகாரத்தை கட்டிக்கொண்டே அறையை விட்டு வெளியே வர, தாய் சாப்பாடு பெட்டியையும் தண்ணீர் போத்தலையும் கொண்டு வந்து கையில் கொடுக்க , அதை வாங்கி பையில் வைத்தவாறு செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே வர, விராந்தையில் சாய்கதிரை போட்டு அமர்ந்திருந்த தாய்வழிப்பாட்டி,

" அந்த காலத்துல தோட்ட வேலையாக்களுக்கு சம்பளம் கொடுக்குறதுக்காக வெள்ளகாரன்களுக்கே காசு கொடுத்தவங்க எங்க தாத்தா பாட்டி. ஆனா இன்னைக்கு யே பேத்தி மாச சம்பளத்துக்காக இப்புடி ஓடுறாளே..." புலம்பினாள்.


" இந்தியாவுலருந்து கொண்டுவந்த காசையெல்லாம் பொம்பள பின்னாடி போய் அழிச்சவங்கதானே ஓங்க தாத்தா பாட்டி.... அப்ப நாங்க இப்ப இப்படி ஓடதான் இருக்கு. பேசாம இரு அம்மாயி. சும்மா பழைய கதைய தோண்டிகிட்டு...."


குனிந்து ஒற்றைக் கையால் பாட்டியின் காலை தொட்டு நெஞ்சில் வைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாய்ச் சென்றாள் பேருந்தை பிடிக்க.


இன்று எப்பாடு பட்டாவது இலங்கோவின் தாயின் பெயர் வித்தியாசத்தைச் சரி செய்து ஓய்வுதியத்தை உடனே பெற்றுக்கொடுப்பதற்கான வேலைகளைச் செய்யவே இத்தனை ஆர்வமாய் துள்ளி ஓடுகிறாள் இனியா.

நேரம் பன்னிரண்டு மணி. மதிய உணவு வேலை. இனியா தொலைபேசியை எடுத்து ஒரு இலக்கத்தை டயல் செய்தாள்.

"ஹெலோ...இலங்கோ..."

"ஆமா, இலங்கோதான். யார் நீங்க? சொல்லுங்க என்ன விசயம்?"

" நா...நா...இனியா பேசுறேன். "

" ஆ...இனியா சொல்லுங்க. என்ன விசயம்? என்ன கோல்லாம் பண்ணியிருக்கிங்க ? இன் னைக்கு எதையாவது தொலச்சிடிங்களா ? அத எடுக்க நா வரணுமா ? ஹா ஹா ஹா..." சிரித்து நகையாடினான் இலங்கோ.

பதிலுக்கு இனியாவும் சிரித்தாள்.


" ஹா....ஹா.... அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஒரு குட் நியுஸ் சொல்லத்தான் எடுத்தென்."


"ஓஹோ..... சொல்லுங்க அப்படியென்ன குட் நியூஸ்?"

" உங்க அம்மாட காசு அடுத்த கிழமைக்குள்ள கைக்கு வந்துரும். "

"அட உண்மையாவா?"

"யெஸ்.... கண்டிப்பா கெடச்சிரும். எனக்கு காலைலருந்தே அதுதான் வேல. புல்லா எல்லாத்தையும் கிளியர் பண்ணி பேர்பக்டா பைல் ரெடி பண்ணி அனுப்பியும் வச்சிட்டெ. இனி எந்த பிரச்சினையும் வராது. கண்டிப்பா காசு கெடச்சிரும் "

", ரொம்ப சந்தோசமுங்க. எங்க அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க. யாத்ராவுக்குப் போய்ச்சேர வேண்டிய காசு. அவங்க அத வச்சி தான் அவங்க காணியில வேல தொடங்க போறாங்க. காசு மட்டும் கெடச்சிட்டா அடுத்த நாளே வேலய தொடங்கிடுவாங்க. ரொம்ப நன்றிங்க ..." சந்தோசத்தின் உச்சத்தில் பேசி தீர்த்தான் இலங்கோ."

"ஒன்னும் யோசிக்காதிங்க. நாம அடுத்த கெழம காணி வேலய தொடங்கலாம். " அவளையும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் இணைத்து பேசினாள். ஆனால் இலங்கோ இருந்த சந்தோசத்தில் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

" மக்கு மண்டக்கு எதுவுமே புரியாது போலயே...ச்ச ... வாய்க்குள்ளேயே முனங்கிக்விட்டு, சரி நா வைக்கிறேன். " என்றாள்.

தொலைபேசியைத் துண்டித்த சிறிது நேரத்தில் இலங்கோ யோசித்தான்.

காரியாலயங்களில் கோப்பு வேலைகள் ( ஃபைல்) சரியாக கவனமாக நடந்தால் மக்களுக்கு கிடைக்கவேண்டியவை நேரகாலத்தோடு கிடைக்கும் போலயே..!


...விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்...
 
Last edited:
  • Love
Reactions: kkp46

kkp46

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
7
6
63
Tamilnadu
அப்பவும், மக்கள பற்றிய சிந்தனைல இனியா மனசு புரியல இலங்கோக்கு.
Interesting... Next epi plz
 

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
தொடர்ந்து படிச்சா அடுத்த அத்தியாயங்கள் வருமா? நிறைவு செய்துடுவீங்களா?
 
  • Like
Reactions: kkp 52

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
தொடர்ந்து படிச்சா அடுத்த அத்தியாயங்கள் வருமா? நிறைவு செய்துடுவீங்களா?
வரும்.நிறைவு செய்வேன். ஆனால் போோட்டிதிகதிிிிிிிிக்குள் க்குள்க்குளக்குக்கக்க
தொடர்ந்து படிச்சா அடுத்த அத்தியாயங்கள் வருமா? நிறைவு செய்துடுவீங்களா?
கண்டிப்பா தொடர்ந்து எழுதி நிறைவு செய்வேன். ஆனால் போட்டிக்கு முன் எழுதி முடிக்க முடியாதே.
 

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
வரும்.நிறைவு செய்வேன். ஆனால் போோட்டிதிகதிிிிிிிிக்குள் க்குள்க்குளக்குக்கக்க

கண்டிப்பா தொடர்ந்து எழுதி நிறைவு செய்வேன். ஆனால் போட்டிக்கு முன் எழுதி முடிக்க முடியாதே.
இத்தனை நாளில் எழுதியிருக்கலாமே... நீங்கள் முடிக்க மாட்டீர்களோ என்று தான் முன்பு வாசிக்க தாமதம் ஆகியது. அத்துடன், உங்கள் கதையுடன் இன்னும் 2 - கதைகள் வாசிக்காமல் ஆகிவிட்டது.

நீங்கள் பதிவிடுவீர்கள் எனில் படிக்க முயற்சிப்பேன்.
 

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
இத்தனை நாளில் எழுதியிருக்கலாமே... நீங்கள் முடிக்க மாட்டீர்களோ என்று தான் முன்பு வாசிக்க தாமதம் ஆகியது. அத்துடன், உங்கள் கதையுடன் இன்னும் 2 - கதைகள் வாசிக்காமல் ஆகிவிட்டது.

நீங்கள் பதிவிடுவீர்கள் எனில் படிக்க முயற்சிப்பேன்.
பதிவிடுகிறேன்