வான் தொட ஒரு சனம் முன்னேறிக் கொண்டிருந்தது. மேலே ஏற ஏற வானம் தான் ஏனோ நகர்ந்துக்கொண்டே போனது.
ஒரு வழியாக ஔவியனின் சொந்தக் காணியில் கால் பதித்துவிட்டார்கள்.
அதுவொரு மலை பூமி. ஆனால் இயற்கைக்கு மிக நெருக்கத்தில் இருந்தது.
"மலரக்கா கொஞ்சம் பொறுங்க,. வந்ததுமே வேலைய தொடங்கிட்டிங்க. மலையேறி வந்தது களைப்பா இல்லையா? கொஞ்சம் உடக்காருங்க. தேதண்ணி குடிச்சிட்டு ஆறுதலா தொடங்குவோ. "
சீத்தை துணியை இடுப்போடு சுற்றி சொருகி நிறுத்திவிட்டு கூரிய கத்தியால் தரை மறைத்துக் கிடந்த செடிகளை வெட்டி தள்ள முற்பட்டவளை தடுத்தான் ஔவியன்.
" ஔவியன் தம்பி களைப்பாறயெல்லாம் நேரமில்ல. தோட்டத்துல களைப்பாறியா வேல செய்றம்? காடு மேடல்லாம் பழகினதுதானே. இந்த கொஞ்சத்த ஏறி வந்ததுக்கா உட்காந்தி நேரத்த வீணாக்கணும். பேசாம வேலய பாக்கவிடு தம்பி. "
"அதுதானே, மொதல் முறையா ஒரு தமிழனுக்குச் சொந்தமான நெலத்துல வேல செய்ய போறம். இதுவே எங்களுக்கு பெரிய பூஸ்ட்டுதான். " என்று சுந்தர மாஸ்டர் (மகள் )கிழவியின் மகன் சொல்ல, அவனின் மகனோ, "ஆமா...ஆமா...தமிழன் காணி என்றதே எங்களுக்கு எணர்ஜிதான். " என்றான்.
"யெஸ்..... திஸ் காணி ஈஸ் அவ எணர்ஜி .." என கரத்தை மடக்கி புஜத்தை காட்டி வீரனாய் திடத்தோடு நின்றான் அவனின் மகன். அவன் நின்ற விதம் பார்த்த அனைவரிலும் விரைவாய் சிரிப்பு வந்து சத்தமிட்டு ஓய்ந்து,
இப்படி மூன்று தலைமுறைகள் ஔவியனின் சொந்தக் காணியில் வேலை செய்வதற்காக வந்திருந்தார்கள்.
"உன்னோட நெலத்துல வேல செய்ய எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா ஔவியன்? இந்த மொத்த நெலத்தையுமே நீ வாங்கி போடு. உன் காலுக்கு கீழே இருந்து நாங்க ஒழைச்சி உன் காலடியில சேர்க்குறம்." மலரின் பக்கத்து வீட்டுக்காரி , சுற்றியிருந்த நிலங்களை கைகளை விரித்து காட்டி முகம் பூரிப்போடு சொல்லிக்கொண்டிருக்கையில்....குறுக்கிட்டான் ஔவியன்.
" ஆமா.... நானே எல்லா காணியயும் வாங்கி போடுறேன். நீங்கல்லாம் வந்து கூலி வேல செய்ங்க. சூப்பர்ல ?"
"ஆமா .... ஔவியன். இந்த கம்பனிக்காரன்களுக்கு ஒழச்சிக்கொட்டி என்னத்த கண்டொம் ? இந்த நாட்டுக்கும் நம்ம ஒழப்பு மட்டும்தான் வேணும். எங்கள என்னைக்கு மதிச்சியிருக்கு? இந்த இலக்கசன் காலத்த தவிர , இன்னொருத்தனுக்கு செய்றத ஒனக்கு செஞ்சிட்டு போய்டறமே. என்ன சொல்றிங்க ?" எல்லோரிடமும் விருப்பு வாக்கு சேகரித்தான் இன்னொருவன்.
"அதுதானே. நீ சரியாதா பேசுறப்பா." என்றார்கள் எல்லோரும்.
" சபாஷ்.... சூப்பர்...." கைகளை தட்டிக்கொண்டு வந்து இடப்பக்கமாக இருந்த பெரிய கற்பாறை மேல் அமர்ந்தான் ஔவியன்.
" இந்த கூலி புத்தி உங்கள விட்டு போகவே போகாதா ? எப்பவும் இன்னொருத்தெ நெலத்துல இன்னொருத்தனுக்கு கீழ வேல செஞ்சி அவெ கொடுக்குறத வாய மூடிக்கிட்டு வாங்கிட்டு போகணும். அவ்வளவுதா உங்களுக்கு வேணுமில்ல ? "
"என்னப்பா தம்பி, இப்படி பேசுற? " வந்திருந்த கூட்டத்தில் இவரே சற்று பெரியவர்.
"வேற எப்படிங்கய்யா பேசுறது ? " ஔவியனின் மறு தீயாய் எரிய தொடங்கினான் இலங்கோ.
" காலத்துக்கு இப்படியே அடுத்தவன் நெலத்துலயே வேல செய்ய நெனக்கிறிங்களே! ஹா... அது சரி, கொறஞ்ச பட்சம் வாழ்ற வீடாவது சொந்த காணியில இருக்கணும்னு நினைக்காதவங்கத்தான் சொந்த நெலத்துல தொழில் செய்யணும்னு நினைக்கபோறிங்காளாக்கும்? அப்படி யோசிச்சியிருந்தாதான் நாங்கல்லாம் இன்னைக்கு சொந்த வீட்ல வாழ்வமே. அப்புறம் எங்க தொழில பத்தி யோசிக்கிறது? " பெரியவர்களின் முகங்களெல்லாம் வாடி வதங்கி போயிற்று.
தன்னை சற்று நிதானப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினான் இலங்கோ.
" ஐயா, சொல்றம்னு கோவிச்சிக்காதிங்க. வேல தாரம்னு நமக்கு வீடு கொடுத்து வசதிகள செய்து கொடுத்து இந்த மலையிலயே வாழ வச்சான் வெள்ளைக்காரன். எல்லா வசதியும் கெடக்குதுன்ற ஒரே காரணத்தால எவ்வளோ சிரமபப்பட்டாலும் இந்த லயத்துலயே வாழ்ந்தாங்க நம்ம தாத்தா பாட்டி. அவங்க செய்த பிழை இன்னமும் நாங்க உரிமை இல்லாத நெலத்துல வாழ்ந்துகிட்டுருக்கம். இனி வரும் சந்ததியும் உரிமையில்லாம வாழனுமா? சொல்லுங்க."
" அதுக்கு என்னப்பா செய்றது? அந்த லயத்த விட்டே போகணும்னு சொல்றியா ? அப்படியே போனாலும் வெளிய போய் என்ன வேல தான் செய்றது ? குடும்பத்துல ஒருத்தர் சரி தோட்டத்துல வேல செய்றதாலதான் லயத்துலனாலும் வாழ்றதுக்கு ஒரு எடம் இருக்கு. "
" சும்மா கெடக்குற இந்த வீட்ட விட்டுப்போய் கூலி வீடோ சொந்த வீடோ வாங்கி பிறகு கஷ்டத்துல உழுவுறதுக்கா? இப்பனாலும் சாப்பிட இல்லாமல் போனாலும் வாழ்றதுக்கு ஒரு எடம் இருக்கு. வெளிய போய்ட்டால் அதுவும் இல்லாம இல்லயா கெடக்கணும்? "
" ஆனா.... இப்ப எத்தனையோ பேர் லயத்த விட்டு போய் காணி எடுத்து வீடு கட்டி வாழ்றாங்கதான். அது கொழும்பு கடைகளுக்குப் போய் வேல செய்த கொஞ்ச பேர் போனாங்க. அப்புறம் அரசாங்க ஆசிரியர் நியமனம் கெடச்ச சில பேர் போய்ருக்காங்க. எல்லாருக்கு அந்த வசதி இருக்கனுமே?"
இப்படி ஆளுக்காள் ஒவ்வொன்றை பேசிக்கொண்டிருந்தார்கள். யாத்ரா பேச தொடங்கினாள்.
" மலரக்கா... ஒரு காலத்துல தமிழ் நாட்டுல எல்லாருக்கும் சொந்த நிலம் இருந்துச்சி. ஒரு கட்டத்துல கொஞ்ச நிலம் வச்சியிருந்தவங்கட நிலத்தையெல்லாம் அபகரிச்சி எடுத்து தங்களுக்குச் சொந்தமா ஆக்கி நிலவவுமையாளர்களாக ஆகினாங்க ஒரு கூட்டம் . அங்க விதைந்தது நம்ம தலையெழுத்து. " ஒன்றும் புரியாதவர்களாக அனைவரும் யாத்ரா வையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
" அக்கா பொறுங்க. நாங்களும் வந்துர்ரம். " மூச்சு வாங்கிக்கொண்டு வந்து ஔவியன் அமர்ந்திருந்த கற்பாறையில் அமர்ந்தார்கள் இளசுகள்.
" வாலுங்க வந்துடுச்சிங்க. இனி கொஞ்சம் நிதானமாதா இருக்கணும்." சூதனமாகிக்கொண்டான் இலங்கோ.
" நீங்கல்லாம் ஏன் கிருபா வந்திங்க. நீங்கலாம் கத்தி பிடிச்சி வேல செய்யவா போறிங்க ? " நகைச்சுவையாய் கேட்டு சிரித்தாள் யாத்ரா.
" நாங்கல்லாம் இந்த காட்டுல வேல செய்மாட்டோ. சும்மா ஜொலிக்காக வந்தோம். " என்று சொல்லிவிட்டு , "இலங்கோ அண்ணா சும்மா நிக்கிறிங்களே. களச்சிபோய் வந்துருக்கொல்ல. அந்த தண்ணி போத்தல எடுத்து கொடுக்குறது..." என இலங்கோவை வம்பிழுத்தான் ருத்ரன்.
"ம்.... இதெல்லாம் கால கொடுவன " என்று சொல்லிக்கொண்டே இலங்கோ போத்தலை எடுத்துக்கொடுக்க ஒவ்வொருத்தராக தண்ணீர் குடித்தார்கள்.
" சரி.... நாங்க வேலலய தொடங்குறம்." மலர் கத்தியை மீண்டும் பிடித்து களத்தில் இறங்க, அனைவரும் ஆளுக்கொரு திசையில் வேலையை தொடங்கினார்கள்.
"அக்கா தமிழ் நாட்டு கத ஒன்னு சொல்லிகிட்டுருந்திங்களே...அத சொல்லுங்க.கேட்போம்" அவன் பாணியில் சொன்னான் கிருபா. அன்றிருந்த சோர்வு, மன அழுத்தம் எதுவும் இல்லாது சுறுசுறுப்பாக வழமையான குறும்புகளோடு இருந்தான் கிருபா.
ஔவியனும் இலங்கோவும் களத்தில் இறங்கி வேலை செய்தார்கள்.
யாத்ரா ஆரம்பத்திலிருந்து கதையை தொடங்கினாள்.
" பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சி பற்றி படிச்சியிருப்பிங்க. அந்த வெள்ளைக்காரன் அவனின் பொருளாதாரத்த உயர்த்துறதுக்காகவும் நாடுகள கைப்பற்றதுக்காகவும் நிறைய வேலைகள செய்தாங்க. அதுல சிலதுகள் நம்மள நிறைய பாதிச்சியிருந்தாலும் சில நல்லதுகளும் நடந்திருக்கு. "
"புகையிரத பாதைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆங்கிலக் கல்வி, வீட்டு வசதி, தபால் நிலையங்கள் இதெல்லாத்துக்கு மேலாக , ஒரு நாட்டின் பொளுதாரத்துக்கு வித்திட்டாங்க. கோப்பி , தேயிலை, இறப்பர், ஏலம், கறுவா இதெல்லாம் அவங்க சுய நலனுக்காகச் செய்தாலும் நம்மள வச்சி செய்த இந்த எல்லாத்தையுமே இப்போ நாமே பயன்படுத்திகிட்டுருக்கோம். அவங்க செய்த இன்னொரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?"
" என்னது அக்கா? " வினோத் குறுக்கு கேள்வி கேட்டான்.
"இத நா சொல்லணும்னால் தமிழ் நாடு வர போகவேண்டியிருக்கும். பரவாயில்லையா ?"
" பரவாயில்ல. சொல்லுங்க அக்கா. " ருத்ரன் அவனது குரலால் ஆர்வம் கூட்டினான்.
"முன்ன காலத்துல தமிழ் நாட்டுல எல்லாருக்கும் சொந்த நிலம் இருந்துச்சி. சோழர் ஆண்ட காலம். மக்களுக்கு நிலங்கள தானமாகவும் வழங்கி எல்லாம் தமிழ் மக்களையும் சமநிலைல வாழ வைத்தாங்க. "
"என்னக்கா ! சோழராட்சி காலத்துக்கெல்லாம் போய்டிங்க ?"
"டேய் வினோத் இப்போ கத வேணுமா வேணாமா ?"
" ஓகே...ஓகே... சொல்லுங்கக்கா..." வாலை சுருட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.
" அதுக்குப் பிறகு.... ஏதேதோ காரணங்களச் சொல்லி மக்கள்கிட்டருந்து நிலங்கள எழுதி வாங்கினாங்க. அப்போதான் நிலமில்லாத ஒரு சனம் உருவாகிச்சி. சொந்த நிலங்கள எழுதிக்கொடுத்துட்டு கூலிகளாக அதே நிலங்கள்ள அந்த சனம் வேல செய்துச்சி. இதுதான் நம்ம இனத்துக்கான முதல் துரோகம். "
" யாருக்கா எழுதி வாங்கினது? வெள்ளக்காரணா ? "
" ஹா....ஹா.... வெள்ளக்காரன் கூட அவ்ளோ மோசமில்ல கிருபா. இந்த தில்லாலங்கடி வேலையச் செய்தது நம்ம தமிழ் சனமேதான்."
"தமிழன குழியில தள்ளுறது தமிழனாதான் இருப்பான். " கிருபா பெரிய அனுபவசாலி போல் சொன்னான்.
" ஒரு கட்டத்துல மக்கள் பிரித்தானிய அரசாங்க அதிகாரம் மூலம் பறிக்கப்பட்ட நிலங்கள திரும்ப வாங்க கடிதங்கள் மூலம் போராடினாங்க. "
" என்ன ஒரு கூத்து பாத்திங்களா.... ஒரு இனத்தோட நிலத்த அந்த இனத்தவனே அபகரிச்சியிருக்கான்? அத திரும்ப வாங்க சம்மந்தமே இல்லாத வேறொருத்தன்ட அனுமதி கேட்குறான். சொல்லி வேல இல்ல. " கிருபாவை வேலையை நிறுத்திவிட்டு வியந்து பார்த்தான் ஔவியன்.
" பிரித்தானிய அதிகாரம் ' நிலங்கள திரும்ப வாங்கலாம். பணம் செலுத்தி நிலப்பத்திரங்கள அவங்க அவங்க பெயர்ல எழுதி நில சொந்தகாரவங்களாக மாறலாம்.' என்று அறிக்கைவிட்டுச்சி. இது தான் பிரித்தானியர் செய்த அந்த இன்னொரு நல்லது. "
" சரிக்கா. இப்போ அதுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக இந்த கத இப்போ இங்கன வந்துச்சி ?"
"காரணம் இருக்கு வினோத். நம்ம சனம் இந்த நெலத்த திரும்ப வாங்குறதுக்காகத்தான் இலங்கைக்கே வந்துச்சி. "
" புரியலயே அக்கா."
" பண்ணையார்கள்ட நிலத்துல வேல செய்தா காணி வாங்குறளவுக்கு சம்பளம் கிடைக்காது. அதிக சம்பளம் தரக்கூடிய வேலைய வெள்ளக்காரன் இலங்கையில ஏற்படுத்திக்கொடுத்தான். அப்போத்தான் நம்ம சனம் நிலம் வாங்கணும்ன்ற இலட்சியத்தோட இங்க வந்து சேந்துச்சி. "
" சரி....வந்தாங்க. உழைச்சிகிட்டு திரும்ப போய் நிலம் வாங்கியிருக்கலாமே அக்கா?"
" யேன் வாங்கல்ல? லச்சகணக்கான மக்கள் இங்கருந்து உழைத்துக்கொண்டுபோய் தமிழ் நாட்டுல நிலம் வாங்கினாங்க கிருபா. அந்த நிலத்துல விவசாயமும் செய்தாங்க."
" அப்ப யேன் நாமல்லாம் இங்க பொறந்தம். ? ஏன் எங்க தாத்தா பாட்டியெல்லாம் திரும்ப போகல ?"
" அதுக்கு நெறய காரணங்கள் இருக்கு வினோத். "
"அதையும் சொல்லுங்களே அக்கா, கேட்பம்."
"சோட்டா சொல்றேன் ருத்ரன், ஓகேவா; இங்கிருந்து எல்லா சனமும் போய்ட்டால் இங்க வேலைக்கு ஆள் இருக்காதில்லையா. அதுனாலதான் தமிழ் மக்கள வெள்ளக்காரன் திரும்ப போகவிடாமல் பண்ணினான். தொழில் சங்கங்கள உருவாக்கி தொழிலாளர்கள இங்கயே தங்கவைத்தான். வீடு , மலசலகூட வசதி, பாடசாலை கல்வி.... இப்படியான வசதிகளெல்லாம் செய்து கொடுத்து மக்கள் இங்கேயே விரும்பியிருக்கும்படி செய்தான். இதுதான் நம்ம இனத்துக்கான இரண்டாவது துரோகம். மது குடிக்கவும் பழக்கினான். இதுகளையும் மீறி தப்பி போனவங்களும் இருக்காங்க."
"ம்......" ருத்ரன் அமைதியானான்.
" இலங்கையில அதுவும் மலையகத்துல மிஞ்சியிருக்க நாம மட்டும்தான் இலட்சியத்த மறந்துட்டு கொடுத்த இந்த லய வாழ்க்கையே சொர்கம்னு வாழ்ந்து கிட்டு இருக்கம் போல." கிருபா தெளிவாய் சிந்தித்தான்.
" ஆமா இலங்கோ அண்ணா...அன்னைக்கு கதையோட கதையா சிங்களவனும் நம்மள அடிச்சான்னு சொன்னிங்களே. அது என்ன கத இலங்கோ அண்ணா? "
"இப்போ எதுக்கு இவனுங்க நம்மள இழுக்குறான்க?" ஏதோ வில்லங்கம் இருக்குமோ என யோசித்த இலங்கோ கேட்டும் கேட்காததுமாய் தீவிரமாய் செடிகளை வெட்டிக்கொண்டிருந்தான்.
...விஞ்ஞானம் தீண்டா கலைகள் தொடரும்...