• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாழ் - 06

பிரியபாரதீ

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 28, 2022
23
17
3
Srilanka
நோக்கியா ரிங்கிங் டோன் ச்சாருவிடமிருந்து சிற்பிக்காவைக் காப்பாற்றிவிட ச்சாருவோ

" சிற்பியக்கா தப்பிச்சிட்டனு நினைக்காத. இந்த இன்டர்வெல்ல பொய்லாம் யோசிக்கக்கூடாது சரியா? இதோ பை மினிட்ஸ்ல வந்துருவென் "

என்று திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் வயது வேகத்தோடு பாதி துள்ளலிலும் பாதி நடையிலும் சென்று மறைந்தாள்.

"சாருவிற்கு எப்படி தெரிந்திருக்கும். ஏதோ போட்டுவாங்க ட்ரை பண்றாளோ....? அப்படினால் கூட மகௌரன் பெயரை எப்படி சொல்கிறாள்? தெரிஞ்சவங்க. கூட வேர்க் பண்றவங்கனு சொல்லிடலாம்" அவளுள் பேசி முடிவெடுத்த அடுத்த நொடியில் சாரு வந்துக்கொண்டிருந்தாள்.


"ம்...இப்ப சொல்லு சிற்பியக்கா. யாரந்த மகௌரன்?"

"அதுவா....அது.. அது வந்து... கூட வேர்க்க பண்ற ஒருத்தர் டி. அவ்ளோதான்."

"எங்க எங்க என்ன பார்த்துச் சொல்லு. என் கண்ணப் பார்த்துச் சொல்லு..." சிற்பிக்காவின் முன் நின்று இடது கரத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது கரத்தை தன்னையும் கண்ணையும் காட்டி காட்டி பேசியதை பார்த்து தன்னிச்சையாக சிரித்தாள் சிற்பிக்கா.


"என்னடி நீ.... கோமாளி மாதிரி காமெடி பண்ணிட்டிருக்க? "

"ஓ.....! யாரு... நா...? நா...? கோமாளியா? ம்.... அது சரிதான். "

வாலை சுருட்டிக்கொண்டு அமைதியான நல்லம் பிள்ளைப் போல் சிற்பிக்காவின் எதிரில் இருந்த மரக்குற்றியில் அமர்ந்தவள், கையில் எடுத்து வந்த எதையோ சிற்பிக்கா பார்க்கும் விதமாக 'இதோ உலக இரகசியம் மொத்தமும் என் கையில்" என்பது போல் வைத்து ஆட்டிக் கொண்டிருந்தாள்.


"அப்படி என்னத்த கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறாள்...? என சற்று உற்று பார்த்தவள்,

"அடி ஆத்தி....இது எப்படி இவ கையில...." என யோசித்து யூகிப்பதற்கு முன்,

" ஹேலோ....மெடம், இது என்ன தெரியுதா? உங்க பிரம்ம முகூர்த்த இரகசியம் இப்போ என் கையில "



சிற்ப்பிக்காவிற்கு கடவுள் முன் நின்று வேண்டிட தெரியாது. தெரியாது என்பதை விட அது அவள் இயல்பில் இல்லை என்றுச் சொல்லலாம். கடவுள் எல்லாம் அறிந்தவரல்லவா? பின் எதற்கு அனைத்தையும் சொல்லிகொண்டிருக்க வேண்டும்? அவளைப் பொருத்தவரையில் கடவுள் முன் நின்று கடவுளை அமைதியாய் இரசிக்கலாம். கண்ணுக்கழகாய் அலங்காரம் செய்து இரசிக்கலாம். இருள் அகற்ற தீபம் ஏற்றி ஒளியை பரவவிடலாம். இது ஒரு அழகியல் உணர்வு. இதில் ஓர் இயற்கைக்குள் நுழையும் அமைதியின் நிசப்தமான நிறைவு கிடைக்கும்.

உலரி புலம்பி குழம்பநிலையை அடையாமல் இரசித்து மன நிறைவோடு தெளிந்த உள்ளத்தோடு வாழ வேண்டும் என்று நினைப்பவள்தான் சிற்பிக்கா.

ஆனாலும் அவளிடம் சில பிரார்த்தனைகள் இருக்கவேச் செய்தன.

பள்ளி காலத்தில் அவளது வீடு சண்டையில்லா வீடாக மாறவேண்டும். அவளது தந்தை மதுவருந்துவதை நிறுத்த வேண்டும். என்ற பிரார்த்தனைகள்,

பின்பு அண்ணன் மதுபழக்கத்திற்கு கத்துகுட்டியாக இருக்கும்போது "அவன் மதுவிற்கு அடிமையாகிட கூடாது" என்ற பிரார்த்தனை,

இப்போது மகௌரனுடனான வாழ்க்கைக்கான பிரார்த்தனை.


இப்படியான அவளது பிரார்த்தனைகளை பிரம்ம முகூர்த்த நேரம் என சொல்லப்படுகின்ற விடியற்காலை மூன்று முப்பது தொடக்கம் நான்கு முப்பது வரையான நேரத்தில் அவள் டயரியில் வாயால் சொல்லி சொல்லி நூற்றெட்டு முறை எழுதுவாள்.

சிறுவயதில் சிற்பிக்காவும் சாருவும் ஒரு வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றதால் சிற்ப்பிக்காவின் இந்த பிரார்த்தனை பழக்கம் பற்றி ச்சாரு அறிந்திருந்தாள்.


சிற்பிக்காவின் டயரியில் இரகசியங்கள் இருக்கப்போவதில்லையே. பிராத்தனைகள் தானே இருக்கும். அதனால் மேசை மீதிருந்த டயரியை புரட்டிவிட்டாள் ச்சாரு. அதில்,
" நானும் மகௌரனும் சிறந்த காதல் தம்பதிகளாக நிறை வருடங்கள் வாழ வேண்டும். " என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துவிட்டுதான் ச்சாரு அதை கையில் வைத்துக்கொண்டு மிரட்டிக்கொண்டிருக்கிறாள்.



பார்ப்பதற்கு வில்லி போலவே இருந்தாள்.

"இப்போது என்ன செய்வது? ச்சாருவிற்கு எப்படி புரிய வைப்பது? சின்னவளுக்கு இந்த விஷயத்தை எப்படிதான் சொல்வது? கெஞ்சுவதா ? கொஞ்சுவதா ? கெஞ்சினால் மிஞ்சுவாள். கொஞ்சுனால் அஞ்சுவாளா? ஹா... இவள் எங்க அஞ்சபோறாள்? " என கண்களை உருட்டிக்கொண்டிருந்தவளைப் பார்த்து,

"சரி சரி பயந்து நடுங்காத சிற்பியக்கா, சொல்ல விருப்பமில்லனால் சொல்ல வேணாம். இனி நீயாக சொல்லும் வரை நானாக கேட்கமாட்டேன். சரியா? " நாகரிகமான பெண் என்பதை உறுதிபடுத்தினாள் ச்சாரு.

சிறு புன்னகையோடு,
" பரவாயில்லையே....சின்னவளா இருந்தாலும் ரொம்ப மெச்சிவர்டா இருக்க. ம்....குட்" என சொன்ன சிற்பிக்கா,


"ம்.... அப்றம் நீங்க சொல்லுங்க, எப்படி போகுது கல்லூரி வாழ்க்கை? யார் போன்ல? "
கதையை அவள் பக்கம் திருப்பினாள்.


"உங்கள போல நா எதையும் ஒளிச்சி மறைக்கமாட்டேன். நா உங்கடதான் சொல்லியாகணும். வேற யார்ட சொல்ல?"

"ஏன் அப்படி? உனக்கு பரண்டஸ் இல்லையா?"

"ஓ....இருக்காங்களே... பட் ப்ரண்டுக்கு ப்ரண்டா , அக்காவிற்கு அக்காவா இருந்து என்னை சரியா புரிஞ்சிக்க வேற யாராலயும் முடியாது. அதோட உங்க அனுபவம் அப்றம் என் மேல உள்ள அக்கறை பாசம் இதெல்லாம்தான் என்னைய சரியா வழிநடத்தும்னு நினைக்கிறேன். "

"ப்பா...... உண்மையா ச்சாரு. நீ செம்ம பொண்ணு. உன் வயசு பொண்ணுங்களாம் அந்த நிமிட சந்தோசத்துக்காக எதையும் செய்யலாம்னு வாழ்ந்துட்டுருக்காங்க. ரியல்லி நீ ரொம்ப கவனமா இருக்கனு உன் பேச்சுலயே புரியுது." என்றெல்லாம் மனதுக்குள் நினைத்தவள் வாய்விட்டுச் சொல்லவில்லை.

"சரி சொல்லு " என்றாள்.

"என்ன சொல்ல?"

"அதான் மறைக்காமல் சொல்லுவெனு சொன்னியே, சோ...சொல்லு"

" அது..அது.. ஏதும் இருந்தால் சொல்லுவேன்னு சொன்னென். "

"அப்போ ஏதும் இல்ல, அப்படியா?"

" யெஸ்"

"சரி அப்போ போன் பண்ணினது யாருனு சொல்"

"அது....அது... அது ஒரு லூசு சிற்ப்பியக்கா. என்னைய லவ் பண்றானாம். அடிக்கடி கோல் பண்ணிடேருப்பான்"

"அப்போ உனக்கு விருப்பமில்லையா?"

"இல்ல, ஆனா...."

"என்ன ஆனா"

" விருப்பம்லாம் இல்ல. பட் நல்ல பையனாதான் இருக்கான்..... ஆனால் இந்த காலத்தில யார நம்புரது நீயே சொல்லுக்கா, அதான்... கொஞ்சம் யோசிக்க டைம் கேட்டுருக்கென்."

',ம் ..... சரி. "

"ச்சாரு.... நா ஒன்னு கேட்கட்டா?"

" கேளுக்கா"

" இப்போ நீ அந்த பையனுக்கு ஓகே சொல்லி சம்டைம் அவன் உன்ன ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணு பின்னாடி போய்ட்டானால் என்ன பண்ணுவ"


" ம்..... என்ன பண்ணுவேனாருக்கும்? " சிந்திப்பது போல் கன்னத்தில் கைவைத்து யோசித்துவிட்டு,

"என்னதான் சிற்பியக்கா பண்ண? சரிதா போடா னு சொல்லிட்டு இதுவும் என்கொரு அனுபவம் னு நினைச்சி நா என்னைய மாத்திப்பென். எனக்கு இன்னும் வயசுருக்கு அக்கா. எண்ட் (and) பறவைகள் கிளைகளை நம்பி அமர்வதில்லையே. அதன் சிறகுகளை நம்பிதானே அமருது. நா என்னைய நம்பி வாழ்றன். "

" ம்....பரவாயில்லையே, தெளிவாதான் இருக்க.. "

"டெஸ் பண்ணியா சிற்பியக்கா? "

" அப்படிதான்னு வச்சிக்கோயேன். என்ன கேட்டால், ஒரு பொண்ணு லவ்வே பண்ணக்கூடாது. ஏமாத்திடுவாங்க, அசிங்கபடுத்திடுவாங்க. இப்படிலாம் சொல்லமாட்டென். நீ இப்ப சொன்ன இல்ல, 'பறவைகள் கிளைகளை நம்பி அமராது ' அப்டினு. இந்த தெளிவு தான் ஒரு பொண்ணுக்கு இருக்கணும். என் ச்சாரு (B) போல்டான கேர்ல்தான். "


" தேங்ஸ்கா. இப்போ தெளிவாதான் இருக்கென். பட் எப்போ இந்த தெளிவும் தன்னம்பிக்கையும் குறையுதோ அப்போ உன்கிட்டதான் வருவென். சரியா? "

"ம்.... சரிடி வா.. கட்டாயம் உனக்காக நா இருப்பேன். "
என்றுச் சொல்லிவிட்டு,

ச்சாரு பேச்சோடு பேச்சாகச் சொன்ன
" எனக்கு வயசு இருக்கு " என்ற வசனம் மீண்டும் நினைவில் வந்து சற்று அவள் சிந்தனையைத் தூண்டிவிட யோசனையில் அழ்ந்தாள்.


" சிறு வயது ஏமாற்றங்களையும் தோல்விகளையும் சறுக்கல்களையும் சரி செய்துகொண்டு அழகாய் வாழ மீதம் நிறைய காலம் இருக்கிறது. ஆனால் .. .. ? "

என்வாறாக வருகின்ற யோசனையை தடுக்க நினைத்தாலும் முற்றுப்புள்ளி இல்லாத வாக்கியம் போல தொடர்ந்து வந்துக்கொண்டேயிருந்தது.

"மகௌரனால் மீண்டும் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டால்.... ???? "

விழி தாண்ட நினைத்த கண்ணீரைத் ச்சாருக்கு தெரியாமல் துடைத்துவிட்டு,

"ச்ச.... நா ஏன் தேவையில்லாமல் கற்பனை பண்ணிகிட்டுருக்கென். மகௌரன் அப்படி செய்ற ஆளா? இல்லவே இல்லை. "
மனம் உறுதி கொண்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ச்சாருவை நோக்கி,



"ச்சாரு நீ என் சமையல் சாப்டது இல்லையே. வா, இன்னைக்கு நா உனக்கு சமைச்சி தாரேன். சாப்ட்டு பார்த்து எப்படியிருக்குணு சொல்லு.


அமர்ந்திருந்தவளை எழுப்பி தோளில் கைபோட்டுக்கொண்டு ,

"நல்லா வளந்துட்டடி நீ..."
என்று அவளை கலாய்த்தப்படி சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.

யாழ் இசை தொடரும்......