• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யுகா யுகம் முன்னோட்டம்

kkp22

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 29, 2023
Messages
3
யுகம் டீஸர்


இல்ல எனக்கு புரியல… அவ கான்செப்ட் தான் என்ன?


அஞ்சு ஜென்மமா, உன்ன காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்றா. இப்போ நீ அவள காதலிக்கிறனு அவளுக்கும் நல்லாவே தெரியுது.


உன்ன பிடிச்சு இருக்கு. காதல் இல்லனு சொன்னா?


இல்ல எனக்கு புரியல… என்ன தான் வேணும் அந்த பொண்ணுக்கு? என்று பரத் கடுப்பான குரலில் நண்பனை கடிந்துக் கொண்டிருந்தான்.


அவன் சொல்லும் அனைத்தும் உண்மை தானே.


அவளாக தான் அவனை தேடி, நாடி வந்தாள். இருவரும் மகிழ்வாக வாழ்ந்த பல கதைகள் சொல்கிறாள். காதல் என்று இவன் நெருங்கினாள், விலகி நிற்கிறாள். அவனுள்ளும் அவள் விலகல் வலிக்க தான் செய்கிறது. ஆனால் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ள அவள் ஆளும் இதயம் இசையவில்லை.


இப்போதும் நண்பன் கேள்விகளுக்கு அமைதியாக இருந்தானே தவிர, உள்ளுக்குள் அத்துணை கோபம் கிளர்தெழுகிறது. தன்னவளை குறை சொல்லும் நண்பன் மீது.


விழிகள் அழுத்தமாக எங்கோ வெறிக்க, எதிரே இருந்த சாப்பாட்டு மேஜை இன்னும் சிறிது நேரத்தில் மூச்சை விட போகிறது உறுதி. நண்பன் என்று அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் கோபம் எல்லாம் அவன் கரத்தின் அழுத்தமாக மேஜை விளிம்பில் தான் பதிந்து கொண்டிருக்கிறது.


உனக்காக மட்டும் தான் நம்ம குருப் அந்த பொண்ண சகிச்சிட்டு இருக்கோம். எங்களுக்கு என்ன தலையெழுத்தா? இந்த மாதிரி இடத்தில வந்து கஷ்டப்பட, உன் காதலுக்கும், அன்புக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாத பொண்ணுக்காக நீ உருகிறது எங்களுக்கு பிடிக்கல சிவ்.


இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் நல்ல வசதியான பையனா பார்த்து, காதல் முன்ஜென்மம் அது இதுனு கதை கட்டி, அவங்க காசுல ஊர சுத்துறதுக்கும், சொகுசாக வாழ்றதுக்கும் திட்டம் போடுற திருட்டு கும்பல். உன்ன ஏமாத்திட்டு இருக்கா, உனக்கு அது புரியல


என்று பரத் சொன்னது தான் தாமதம், அனைவரும் அமர்ந்து இருந்த சாப்பாட்டு மேஜை பறந்தது, அவன் ஒருவனின் ஆக்ரோசத்தில்.


இருக்கையை விட்டு எல்லாம் எழுந்து நிற்க, அருகே அமர்ந்து இருந்த பரத் கழுத்தை நெருக்கி இருந்தான் சிவ்.


கண்கள் வெம்மை பூசி சிவக்க, கழுத்து நரம்பு புடைக்க, ருத்ர மூர்த்தியாக நின்றிருந்த சிவனை பார்க்க, கொலை நடுங்கியது அத்தனை பேருக்கும்.


அவர்களை விட்டு விலகி நின்று கொண்டனர் அவன் நண்பர்கள் அத்தனை பேரும்.


ஆனால் அவன் கோபத்தை தாங்கி நிற்கும் பரத் கண்களிலோ மருந்துக்கு கூட பயம் துளியும் இல்லை. எள்ளல் புன்னகை இதழ்களில் உறைய தன் நண்பனை தான் அசராது பார்த்துக் கொண்டிருந்தான்.


இந்த நொடி நண்பன் கேட்டால், அவன் உயிரை கூட கொடுப்பான். ஆனால் தகுதியற்ற ஒரு பெண்ணுக்காக நண்பன் வாழ்வை பணயம் வைக்க அவன் விரும்பவில்லை.


அவளை பற்றி பேசினால், அவனுக்கு பிடிக்காது, கோபப்படுவான் என்று நன்கு தெரியும். இருந்தும் நண்பன் நலனுக்காக தன் உடலை வருத்தி கொள்ளும் உன்னத நண்பன் அவன்.


இன்னொரு முறை அவளை பத்தி பேசின??? டெஃபைனட்லி ஐ கில் யூ. அவ என்னை ஏமாத்தினா கூட சந்தோசமா ஏமாற நான் தயார். பிகாஸ் ஐ லவ் ஹெர் இன் மை சோல். புரிஞ்சுதா உனக்கு? நீ என்கிறதால விடுறேன். வேற எவனாவது இந்த மாதிரி பேசி இருந்தா? இன்னைக்கு தான் அவங்களுக்கு கடைசி நாளா இருக்கும் என்று பல்லை கடித்த படி எஃகு குரலில் எச்சரித்தவன் அவன் கழுத்தில் இருந்து கையை எடுக்க,


நானும் உனக்காக தான் டா இவ்வளவு பாடுபடுறேன். வேற எவனாவது இருந்திருந்தா எக்கெடும் கெட்டு சாகுனு விட்டு போய் இருப்பேன் என்று இருமிய படி சிறிது நேரம் மூச்சு குழலை அடைத்து வைத்த நண்பனுக்காக மட்டுமே அவன் யோசனை இருந்தது.


சலிப்பாக பெருமூச்சு விட்ட சிவ்வோ, நீ ஏன் அவளை தப்பாவே பார்க்கிற? சின்ன வயசுல இருந்து தனியா இருந்த வ, மெண்டலி ஏதோ டிஸ்டர்ப் ஆகி இருக்கா என்று சிவ் நண்பனிடம் கூட தன்னவளை விட்டு கொடுக்காமல் பேச,


நீயே ஒத்துக்கிறியா அவ பைத்தியம்னு என்ற நண்பன் சட்டையே, ஏய்… என்று ஆக்ரோசமாக சிவ் பிடிக்க,


இந்த கிளம்பிடிச்சே உன் பைத்தியம் என்று அவனுக்கு பின்னால் வாசல் கதவை தாண்டி எங்கோ வெறித்த பார்வையுடன், சித்த பிரம்மை பிடித்தது போல் சமுத்ரா சென்று கொண்டிருந்த சமுத்ராவை பார்த்து சொன்னான்.


ஷம்மு… நண்பனை எப்போது வேண்டுமென்றாலும் பொலக்கலாம், தெரியாத ஊரில், பேய்கள் உலாவும் நட்ட நடு சாமத்தில், நடை பழகும் காதலி பின்னால் ஓடினான் ஆதி சிவன்.


டேய் நீ எங்க போற? அவ அப்படியே போய் செத்து தொலையட்டும் என்று திட்டியபடியே பரத் செல்ல, அவனை தொடர்ந்து மற்றவர்களும் அவனுடன் சென்றனர்.


வெளவால், கூகை, கோட்டான் எல்லாம் பேரிரைச்சல் எழுப்ப, அவள் காதில் அவை எதுவும் கேட்கவில்லை.


"மித்ரா… உனக்காக தான் நான் பல வருஷம் காத்து இருக்கிறேன். வந்து விடு என்னிடம் வந்து விடு" என்று உயிரை இருக்கும் ஆண் குரல் அசரீரியாக அவள் காதில் மட்டும் ஒலிக்க, குரல் வந்த திசை நோக்கி, அந்த அடர்ந்த கட்டுக்குள் சென்று கொண்டிருந்தவளுக்கு சுற்றம் எதிலும் சித்தம் இல்லை.


குரல் மட்டுமே சிந்தையை மயக்க, சித்தம் இழந்து பின்னால் சென்று கொண்டிருந்தவள் பின்னால் காதல் மயக்கம் கொண்ட நலனும் செல்ல, நட்பின் பின்னால் அவன் நண்பர்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது.


சார்… அந்த பொண்ணு பத்தின டீட்டைல்ஸ் என்று சமுத்ரா புகைப்படத்துடன் ஒரு பைல், கண்ணாடி மேஜை மீது வைக்கப்பட,


இந்த பொண்ணா? அவர் சிறிதும் எதிர் பார்க்காத நபர் என்று அவர் அதிர்ந்த முகமே உணர்த்தியது.


உள்ளுக்குள் அத்தனை கோபம் தான் ஏமாற்ற பட்டு நிற்பதை எண்ணி.


என்னை என்ன முட்டாள்னு நினைச்சிட்டானா என் பையன் என்று கேட்டவர் பார்வை எதிரே சுவரில் ஆளுமையாக நின்றுக் கொண்டிருந்த சிவ் புகைப்படம் மீது பதிந்தது.


அவருக்கு அவன் தான் உலகம்.


"என் பையன் மேல ஒரு துரும்பு கூட பட நான் அனுமதிக்க மாட்டேன். ஆப்ட்ரால் ஒரு சாதாரண பொண்ணு அவன் உயிருக்கு எமன்னா, அந்த எமன் உயிரை கூட எடுக்க தயங்க மாட்டேன்.." என்று உக்கிரமாக சொன்னவர்,


"கதிர்…" என்ற அழைக்க, அவர் விசுவாசி ஓடி வந்து நின்றான் அவருக்கு எதிரில்.


அவர் மனதில் நினைத்தால் கூட நடத்தி முடிக்கும் திறமைசாலி. அவரின் ஆக சிறந்த தளபதி.


அவர் விழிகள் சமுத்ரா புகைப்படத்தில், உஷ்ணமாக பதிய, புரிந்து போனது அவனுக்கு. முடிச்சிட்டு வந்து உங்களை பார்க்கேன் என்று புறப்பட்டு விட்டான்.


இங்கே திசையறியா பயணம் மேற்கொண்டிருந்த சமுத்ரா தோளை பிடித்து தன்னை நோக்கி இழுத்த சிவ் தன் நெஞ்சோடு அவளை காத்துக் கொள்ள, அவன் இதய ஓசையில் இதுவரை காதில் கேட்ட குரல் கேளா தூரம் ஓடி போனதுவோ!


சித்தம் களைந்து, அவன் மார்பில் இருந்து தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க, அவனோ இங்க என்ன பண்ற என்று தான் பரிதவிப்பாக கேட்டான்.


பின்னால் மூச்சிரைக்க ஓடி வந்த கூட்டமோ, சில அடி தள்ளி நின்று கொண்டது.


இப்போ அடுத்து ஏதாவது கதை கட்டுவா பாரேன் என்று பரத் கடுப்பாக,


அவன் சொன்னது போல் கதை தான் கட்டினால். அவள் வாய் மொழி யாவும் அவள் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கதை தானே.


யாரோ… என்னை கூப்பிட்ட போல இருந்துச்சு, மெல்லிய குரலில் அவள் சொல்ல,


இந்த ஆரம்பிச்சுட்டால்லா என்றான் பரத் சலிப்பாக.


ஆதி சிவனோ, மறுபடியும் அந்த கனவு வருதா? என்று கேட்க,


கனவு இல்ல… நிஜமா என்னை யாரோ கூப்பிட்ட போல இருந்துச்சு" நீயாவது என்னை நம்பேன் என்று தவிப்பாக அவள் சொல்ல,


சரி… நாளைக்கு காலைல பேசிக்கலாம் என்று அவளை அணைத்த படி திரும்ப, ஆ ஆ ஆ என்று முணங்கியவள் காலை சிறிய கருங்கல் பதம் பார்த்து சொட்டோன்று ஒரு துளி ரத்தம் அந்த கல் மீது விழுந்தது.


என்னாச்சு என்று கேட்டவன், அவள் கால் பெருவிரலில் வடியும் இரத்தம் பார்த்து அவளை தூக்கி கொள்ள,


இல்ல என்னை இறக்கி விடுங்க, சின்ன கல் தான்… அடி பலமா இல்ல… நானே வரேன் என்று மறுத்தவள் பேச்சை, அவளுக்கு சுணங்கு வரும் நேரம் அவன் கேட்க தயாராக இல்லை.


அவர்கள் கூட்டம் மொத்தமும் அந்த இடம் விட்டு நகர,


மங்கையவள் குருதிதுளி நனைத்த கருங்கால்லோ, மின்னல் கீற்று போல் வானுடன் ஒளியை கடத்த, உயிர் கொண்டு ஊர்ந்து சென்றது சர்ப்பம் ஒன்று.




 

Attachments

  • images - 2023-08-02T223340.217.jpeg
    images - 2023-08-02T223340.217.jpeg
    31.2 KB · Views: 14
Top