ரகசிய கொலையாளி.....
பாகம் -15
ரஸியாவின் அட்ரஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் மோஹன்.
கார்மேகம் சார் இப்போ ஃபிரீயா இருக்காரா ன்னு கொஞ்சம் செக் பண்ணிட்டு சொல்றீங்களா மோஹன்.... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்....
என்று சொல்லி விட்டு உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து.... பத்து நிமிஷத்துல அவரே வரேன் ன்னு சொன்னார்.
ஓகே மோஹன்.... தேங்க்ஸ்.....
ஓகே சார்..... என்று சொல்லி விட்டு சென்றான் மோஹன்.
என்ன சார் நீங்க..... நம்ம வேலையை விட்டுவிட்டு வந்து விசாரிச்சிக்கிட்டு இருக்கோம்..... அவர் ஃபிரீயா ன்னு கேட்கறீங்க..... விசாரிக்கனும்.... வந்து தான் ஆகனும் ன்னு ஸ்டிரிக்டா சொல்லலாம் இல்ல..... என்றான் ராஜேஷ்.
ஸ்மைல் செய்தான் மணிகண்டன்.
ராஜேஷ்..... நம்ம வேலையை விட்டுவிட்டு வந்திருக்கோமா?...... அப்போ இது என்ன?..... இதுவும் நம்ம வேலை தானே?
சாரி சார்..... போலீஸ் ன்னா கொஞ்சம் கெத்தா.... மிரட்டினா எல்லா வேலையும் நடந்திடும் ன்னு நினைச்சேன்.....
தப்பு ராஜேஷ்..... அவங்க ஒண்ணும் ஆஃபீஸ்ல சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டாங்க.... அவங்களுக்கு சும்மாவேவா சம்பளம் கிடைச்சிடும்.... அவங்களுக்கும் முக்கியமான வேலைகள் இருக்கும்..... அதுவும் இல்லாம அவங்களை விசாரிக்கிறதுக்கு நம்ம கிட்ட பர்மிஷன் கிடையாது.... கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் ஆச்சே.... ஸோ நம்ம என்கொயரி ன்னு சொல்லாம ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ண வந்திருக்கோம் ன்னு தான் சொல்லனும்.....
ஓகே சார்.... புரியுது.....
அப்போது சூப்பர்வைசர் கார்மேகம் வந்தார்.
வணக்கம் சார்..... என்றார் கார்மேகம்.
வணக்கம் சார்..... என் பேரு மணிகண்டன். எஸ் ஐ. மிஸஸ் காவேரியோட மர்டர் கேஸை நான் தான் இன்வஸ்டிகேட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.....
ஓ..... ஓகே சார்.....
கொஞ்சம் டீடெயில்ஸ் வேண்டும்...
கேளுங்க சார்.....
உங்களை பத்தி ஃபர்ஸ்ட் சொல்லுங்க சார்.
என் பெயர் கார்மேகம்.... வயசு 35.... 10 வருஷமா வேலை செய்யறேன்.... எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க.....
இல்ல சார்.... இப்போதைக்கு உங்களோட பர்சனல் டீடெயில்ஸ் எதுவும் வேண்டாம்.....
ஓகே சார்.... வேறு என்ன தெரியனும்?
காவேரி பத்தி சொல்லுங்க.....
ரொம்ப நல்ல பொண்ணு சார் அவங்க..... ரொம்ப சின்சியர்.... வேலைல எதுவும் தப்பு நடக்கக்கூடாது என்பதில் ரொம்ப உறுதியாக இருப்பாங்க.... அப்படி தான் ஸ்டாஃப் கலைவாணி பண்ணின தெஃப்ட வீடியோ எடுத்து என் கிட்ட காட்டினாங்க..... சொன்னாங்களா?
ஹாங்..... சொன்னாங்க.....
கலைவாணி எப்படி பட்டவங்க?
இந்த சின்ன சின்ன திருட்டு தவிர மத்த படி நல்லவங்க தான் சார்.... அந்த மெமோ வாங்கின பிறகு அதை கூட பண்றது இல்ல....
ஓகே..... வேற எதாவது ஆஃபீஸ்ல அவங்களுக்கு பிரச்சனை ன்னு உங்களுக்கு தெரிஞ்சதா?
இல்ல சார்.... அப்படி எதுவும் இல்லை....
ஹராஸ்மெண்ட் மாதிரி....
இல்ல சார்.... அப்படி எதுவும் இங்க நடக்க வாய்ப்பில்லை.... எல்லா இடத்திலும் சிசிடிவி இருக்கு.... அந்த மாதிரி எதாவது ன்னா அவங்களே அதை ஃபேஸ் பண்ற அளவுக்கு தைரியமானவங்க காவேரி.... அப்படியே இல்லைன்னாலும் என் கிட்ட சொல்லுவாங்க..... சேர்ந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது.... ஆனா இந்த ஆஃபீஸ்ல எல்லார் கிட்டேயும் சகஜமா பேசி பழகுவாங்க....
நீங்க எப்போ கடைசியா பார்த்தீங்க?
போன வாரத்துக்கு முன் வாரம் சார்.....
ரெண்டு நாள் முன்னாடி எல்லாருமே பார்த்திருக்காங்களே..... நீங்க பார்க்கலீயா?
இல்ல சார்.... நான் சிலை டெஸ்டிங் கான்ஃபிரன்ஸ் க்கு பெங்களூர் போயிருந்தேன்.... அதனால லாஸ்ட் வீக் ஃபுல்லா நான் வரல.... இன்னைக்கு தான் வந்தேன்.....
ஓ..... ஓகே..... தேங்க்ஸ் சார்..... நாங்க கிளம்பறோம்.... என்று சொல்லி விட்டு மணிகண்டன் எழுந்த போது....
இருங்க சார் டீ காஃபி குடிச்சிட்டு போகலாம்..... என்றார் கார்மேகம்.
இல்ல சார்.... வேண்டாம்..... அப்புறம் பார்க்கலாம்.... என்று சொல்லி விட்டு ராஜேஷிடம் சைகை காட்ட.... அவன் கார்மேகத்தின் ஃபோன் நம்பரை வாங்கி கொண்டு வந்து காரை எடுத்தான்.
சார்..... இப்போ அந்த ரஸியா வீட்டுக்கா?
இல்ல ராஜேஷ்..... அவங்களுக்கு முதல்ல ஃபோன் பண்ணி பேசலாம்.... அப்புறம் போகலாம்.... அதுவும் இல்லாம அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகவேண்டி இருக்கு.....
ஓகே சார்.... இப்போ ஸ்டேஷனுக்கு போயிடவா....
ஆமாம்...
நீங்க லஞ்ச் டைமுக்கு அப்புறமா ரஸியாவுக்கு கால் பண்ணி பேசிட்டு எனக்கு அப்டேட் கொடுங்க..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்.... என்று சொல்லி விட்டு ஸ்டேஷனுக்கு சென்றான் ராஜேஷ்.
அங்கிருந்து தன் பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் மணிகண்டன்.
சிவகாமி ரெடியாக இருந்தார்.
அம்மா..... ரெடியா.....
நான் ரெடிப்பா..... நீ கை கால் கழுவிட்டு டிரெஸ் மாத்திக்கிட்டு வா.... லஞ்ச் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.
சரிம்மா.... என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் சென்றான்.
சாப்பாட்டை எடுத்து கொண்டு வந்து வைத்தார் சிவகாமி.
மணிகண்டன் வந்து தரையில் அமர்ந்தான்.
தட்டில் சாப்பாடு போட்டு தன் மகனிடம் கொடுத்தார் சிவகாமி.
அப்போது டிவி டேபிள் மேலே இருந்த தன் ஃபோனை பார்த்தான் மணிகண்டன்.
அம்மா..... மாயா கால் பண்றா..... எடுங்க..... என்றான்.
எழுந்து போய் பார்த்தார் சிவகாமி.
ஒன்றுமே இல்லை.... கால் வரவில்லை.
எடுத்து காதில் வைத்து
ஹலோ .... என்றார் சிவகாமி.
மதனகோபால் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது.
உங்க பையனுக்காக நீங்க ஃபோனில் பேசறது போல நடிக்க வேண்டாம்.... எதுவும் கேட்கல ன்னு சொல்லி கொடுத்திடுங்க.... ஏன்னா அவரோட கற்பனைல அந்த பொண்ணு ஏதோ பேசறதா அவர் நினைச்சிக்கிட்டு இருப்பாரு..... நீங்க வேற எதாவது சொன்னா அவர் நீங்க பொய் சொல்றதா நினைப்பாரு.... அப்புறம் உங்க கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சிடுவாரு..... அதனால ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணுங்க.... என்று போன முறை சொல்லி இருந்தார்.
அதை நினைவில் கொண்டு....
காதில் ஃபோனை வைத்து....
ஹலோ.... ஹலோ.... என்று சொல்லி விட்டு
கண்ணா..... எனக்கு ஒண்ணுமே கேட்கல டா..... என்றார் சிவகாமி.
கொடுங்க.... நான் பேசறேன்.... என்று சொல்லி ஃபோனை வாங்கி காதில் வைத்து....
சொல்லு மாயா..... என்றான் மணிகண்டன்.
என்ன மாமா..... இன்னும் அத்தையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போகலீயா?.....
இல்ல மாயா..... இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.... சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.... அம்மா ரெடியா தான் இருக்காங்க...... சாப்பிட்டு விட்டு கிளம்பிடுவோம்.....
அத்தை சாப்பிட்டுட்டாங்களா?
அம்மா...
நீங்க சாப்டீங்களா?
சாப்பிட்டுட்டேன் பா.....
சாப்டாங்களாம்.....
அதைக் கூட கேட்கலீயா நீங்க?
அம்மாவை நான் எப்பவுமே டைமுக்கு சாப்பிட சொல்லுவேன்..... அதான் சாப்பிட்டுட்டு இருப்பாங்க ன்னு எனக்கு தெரியும்.....
சரி சரி.... சமாளிக்காத டா.....
டாக்டர் கிட்ட போயிட்டு வந்திட்டு என்ன சொன்னாங்க ன்னு சொல்லு....
ஓகே டி.... நீ சாப்பிட்டியா?
ஹூம் சாப்பிட்டுவிட்டேன்.....
என்ன சாப்பிட்ட?
அதே எக் ஃபிரைடு ரைஸ் தான்...... என்றாள் மாயா.
ஓகே டி.... பை...
நான் அப்புறமா பேசறேன்...
என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தான் மணிகண்டன்.
போலாம் மா..... என்றான் மணிகண்டன்.
ஆட்டோ வந்து நின்றது.
ஏன்மா ஆட்டோ சொன்னீங்க பைக்லையே போயிருக்கலாமே.....
இல்லப்பா வெயிலா இருக்கு.... தலை வேற வலிக்குது....
ஓ...... ஓகே ஓகே...... சரிம்மா...வாங்க போகலாம்....
என்றான் மணிகண்டன்.
ஹாஸ்பிட்டலுக்கு சென்று வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து இருந்தனர் சிவகாமி மற்றும் மணிகண்டன்.
வழக்கம் போல இருவருக்கும் ஜூஸ் கொடுத்தார் நர்ஸ்.
இல்ல சிஸ்டர் எனக்கு வேண்டாம்..... அம்மாவுக்கு மட்டும் கொடுங்க..... நான் இப்போது தான் லஞ்ச் சாப்பிட்டேன்..... என்றான் மணிகண்டன்.
ஏனெனில் வழக்கமாக அதில் மைல்டு டோஸ் மாத்திரை கலந்து கொடுப்பார் டாக்டர் அதை குடித்த பத்து நிமிடங்களுக்கு பிறகு மணிகண்டனுக்கு லேசான மயக்கம் வரும்...... அப்போது அவனிடம் மெஸ்மரிஸம் போல பேசுவார் டாக்டர். இன்று அவன் வேண்டாம் என்று கூறியதால் நர்ஸ் மற்றும் சிவகாமி இருவரும் விழித்தனர்.
டாக்டரிடம் வந்து கூறினார் நர்ஸ்.
அப்போது சிவகாமியிடம் அவர் கூறியதை சொல்லச் சொன்னார் டாக்டர்.
ஓகே டாக்டர்.... என்று சொல்லி விட்டு நர்ஸ் சிவகாமியிடம் ஜாடைக் காட்ட....
சிவகாமி மணிகண்டனிடம்
தம்பி.... தண்ணீர் அங்கே இருக்கு பாரு.... கொஞ்சம் எடுத்து கொண்டு வாப்பா..... என்று கூறினார்.
அவன் எழுந்து சென்றதும் டாக்டர் கூறியதை சிவகாமியிடம் வந்து கூறினார் நர்ஸ்.
############
தொடரும்.....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .