• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -16

navivij

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
136
74
28
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -16

மணிகண்டன் எழுந்து போய் தண்ணீர் கொண்டு வருவதற்குள் டாக்டர் சொன்னதை கூறி விட்டு ஓரு டம்ளர் ஜூஸை கொடுத்துவிட்டு சென்றார் நர்ஸ்.

குடிப்பது போல வாயில் வைத்து விட்டு எடுத்துவிட்டார் சிவகாமி.

என்னாச்சு அம்மா.... என்றான் மணிகண்டன்.

இல்ல திடீரென தலை சுத்துற மாதிரி இருந்துச்சு ன்னு தான் உன்னை தண்ணி எடுத்து வரச் சொன்னேன்.... அப்போது நர்ஸ் இந்த ஜூஸை எடுத்து வந்தாங்களா.... வாங்கி ஒரு வாய் குடிச்சேன்..... தித்திப்பு ரொம்ப அதிகமா இருக்கு.... நான் குடிக்க கூடாதே..... அதான்..... இதை வெளியே போய் கொட்டிட்டு வந்திடுறீயா பா..... என்றார் சிவகாமி.

சரிம்மா கொடுங்க.... என்று சொல்லி எடுத்துக் கொண்டு எழுந்தவன்.... அப்போது சரியாக சிவகாமி..... என்று நர்ஸ் கூப்பிட்டார்.

தம்பி.... வாப்பா..... என்று சொன்னார் சிவகாமி.

கீழே வைக்கலாம் என்று நினைத்தவன் அங்கு குழந்தைகள் நடந்து கொண்டும் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு தன் வாயில் ஊற்றிக் கொண்டு அந்த பேப்பர் கப்பை அங்கிருந்த குப்பை கூடையில் போட்டான்.

அப்பாடா..... என்று நினைத்து கொண்டார் சிவகாமி.

உள்ளே சென்று டாக்டர் மதனகோபாலிடம் பேசிக் கொண்டு இருந்தான் மணிகண்டன்.

சிறிது நேரத்தில் லேசாக மயக்கம் வந்தது மணிகண்டனுக்கு.

இரண்டு மேல் நர்ஸ் வந்து அவனை கைத்தாங்களாக பிடித்து பெட்டில் படுக்க வைத்தனர்.

பிறகு டாக்டர் மதனகோபாலன் மணிகண்டன் அருகில் சென்று அமர்ந்து பேசினார்.

மிஸ்டர் மணி...... என்றார்.

அமைதியாக இருந்தான்....

மறுபடியும் பேசினார் டாக்டர்.

ஹூம்..... என்றான் மணிகண்டன்.

எப்படி இருக்க?

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..... என் மாயாவுக்கு அடுத்த வாரம் பர்த்டே.....என்னை பார்க்க வரேன்னு சொல்லிருக்கா..... அதுவும் இல்லாம மாமா மாமி கிட்ட எங்க கல்யாணத்தை பத்தி பேசிட்டா..... அவங்களை எப்படியாவது ஒத்துக் கொள்ள வச்சிடுவேன்..... இல்லன்னா அவங்களை விட்டுட்டு என் கூட வந்திடுவேன் ன்னு சொல்லி இருக்கா......

மாயா..... மாயா.... என்றார் டாக்டர் மதனகோபால்.

சிறிது நேரத்தில் மாயா போல மணிகண்டனே பேசினான்.

என்னை யாராலும் என்னோட மணி மாமா கிட்ட இருந்து பிரிக்க முடியாது..... இந்த உலகமே எதிர்த்தாலும் நான் மணி மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..... என்றான் மணிகண்டன்.

இதைப் பார்த்த சிவகாமியின் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது. தன் சேலை முந்தானையை வைத்து துடைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தார்.

டாக்டர் மதனகோபால் டெஸ்ட் முடித்து விட்டு வந்து சிவகாமியிடம் பேசினார்.

என் பையனுக்கு...... என்று சொல்லும் போதே அவருக்கு கண்கள் கலங்கியது.

கவலைப்படாதீங்க மா..... லாஸ்ட் டைம் கொடுத்த மாத்திரை வேலை செய்யல..... டோஸேஜ் மாத்தனும்..... அதை விட பெஸ்ட் மெடிசின் இருக்கு.....

என்ன டாக்டர்?

மாயா.....

என்ன டாக்டர் சொல்றீங்க......

ஆமாம் மா..... உங்க பையன் அந்த பொண்ணு மாயா மேல பயித்தியமா இருக்கான்..... அவரு கொஞ்சம் கொஞ்சமாக அவங்க பேசுற மாதிரி கற்பனை பண்ணி கொண்டு அவரே பேசிக்கிறார். அந்த பொண்ணு நேரா வந்தா தான் உங்க பையனோட கற்பனை குறையும்....

டாக்டர் இவன் சொல்ற மாதிரி அந்த பொண்ணு இவனை லவ் எல்லாம் பண்ணல..... அந்த பொண்ணுக்கு இவனை ஞாபகம் கூட இருக்காது.....

டிரீட்மெண்ட் கொடுக்கிறதுக்காக ரெக்குவஸ்டா கேளுங்க..... இந்த நிலைமை இருக்குற வரைக்கும் டிரீட்மெண்ட் கொடுத்திடலாம்..... நெக்ஸ்ட் ஸ்டேஜ் நேரா பார்க்குற நிலைமை வந்துச்சுன்னா நிஜமாகவே மாயா வந்தாலும் அவருடைய மூளை அதுதான் உண்மையான மாயா ன்னு ஒத்துக்காது...... கற்பனைல இருக்குற மாயா தான் அவருடைய மாயா ன்னு நினைச்சிப்பாரு.....

அச்சச்சோ..... என்ன டாக்டர் சொல்றீங்க.....

வேறு வழி இல்லை மா...... இப்போதைக்கு இந்த ஒரு வழி தான் இருக்கு..... என்றார் டாக்டர் மதனகோபால்.

சரிங்க டாக்டர்..... என்று சொல்லி விட்டு வெளியே வந்து சேரில் அமர்ந்தார் சிவகாமி.

அம்மா..... என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தார் சிவகாமி.

அப்போது அங்கே மீனா நின்று கொண்டு இருந்தாள்.

நீங்க என்ன அம்மா இங்க?..... உடம்பு சரியில்லையா.....
என்றாள் மீனா.

இல்லம்மா..... அது வந்து...... என்று திக்கினார் சிவகாமி.

என்னாச்சு அம்மா.....

உனக்கு என்னம்மா..... உடம்பு சரியில்லையா?

இல்லம்மா..... அது வந்து..... என்று வெட்கப் பட்டாள் மீனா.

அவள் வெட்கப் படுவதிலேயே புரிந்து கொண்ட சிவகாமி.....

சந்தோஷம் மா..... எத்தனை மாசம்?

மாசம் எல்லாம் இல்லை அம்மா ...... அம்பது நாள் ஆச்சு.... வீட்டிலேயே யூரின் டெஸ்ட் பண்ணேன்.... பாசிடிவ் வந்திச்சு..... அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கார்.

வாழ்த்துக்கள் மா..... எங்கே அவர்..... பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கி கொண்டு வரப் போய் இருக்கிறார்.

ஓ..... சரிம்மா..... அவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடு....

சரிங்க மா..... மணி அண்ணா எங்கே?

அது வந்து மா..... என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே..... நர்ஸ் வெளியே வந்து.....

மேடம்..... உங்க பையனுக்கு மயக்கம் தெளியப் போகுது..... உங்களை டாக்டர் உள்ளே வரச் சொன்னார்.

என்னம்மா ஆச்சு அண்ணாவுக்கு என்றாள் மீனா.

அப்புறமா சொல்றேன் மா..... நீ என் பொண்ணு மாதிரி..... தயவு செஞ்சு ஸ்டேஷனில் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்...... என்றார் சிவகாமி.

உள்ளே சிவகாமி சென்றபோது...... மணிகண்டன் பெட்டில் படுத்து கொண்டு இருந்தான். தலையில் சில ஒயர்கள் இணைக்கப் பட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியாக ஆனாள் மீனா.

அப்போது குமார் வந்து.....
ரிப்போர்ட் வந்திடிச்சு வாம்மா.... என்று மீனாவை அழைக்க.

அமைதியாக அந்த மூடியிருந்த கதவின் கண்ணாடி வழியாக மணிகண்டனையே பார்த்து கொண்டு இருந்தாள் மீனா.

மீனா மீனா.... என்று சொல்லி அவளை உளுக்கினான் குமார்.

சுயநினைவுக்கு வந்தவள்.....

ஹாங்.... என்ன குமார்..... என்றாள்.

என்னாச்சு மா உனக்கு..... என்றான் குமார்.

ஒண்ணும் இல்லை.....

வா..... ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு உள்ளே போய் டாக்டரை பார்க்கலாம்..... என்றான் குமார்.

சரிங்க குமார்.... என்று சொல்லி விட்டு அவன் பின்னால் நடந்து சென்றாலும் தன் சொந்த அண்ணனை போல நினைத்திருந்த மணிகண்டனுக்கு என்ன நடந்தது என்று நினைத்து கொண்டே நடந்து சென்றாள்.

மணிகண்டன் கண் விழித்த போது பெட்டில் படுத்திருந்தான்.

என்னம்மா.... என்னாச்சு எனக்கு..... என்றான்.

ஒண்ணும் இல்ல பா..... நீ தான் வெயில்ல வரவே மயக்கமா இருக்கு ன்னு சொன்ன..... அப்புறம் அப்படியே படுத்திட்ட.....

ஓ..... என்று அவன் சொன்னாலும் தன் அம்மா எதையோ மறைக்கிறார்கள் என்று நினைத்து கொண்டான்.

அரைமணி நேரத்தில் நார்மலாக ஆகி விட்டான் மணிகண்டன்.

அம்மா.... ஒரு முக்கியமான வேலை இருக்கு..... டாக்டர் கிட்ட உங்க தலைவலி பத்தி பேசிட்டேன்.... மாத்திரை மருந்து கொடுத்திருக்கார்..... அதை வாங்கிட்டேன்..... ஒரு ஆட்டோ புக் பண்ணி தரேன் நீங்க வீட்டுக்கு போறீங்களா?......

சரிப்பா..... உனக்கு பரவாயில்லையா..... மயக்கமாக இருந்துச்சு ன்னு சொன்னீயே....

அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா.... நான் பார்த்துக்கொள்கிறேன்.....

சரிப்பா..... ஜாக்கிரதையா போயிட்டு வா..... நைட் டின்னருக்கு வீட்டுக்கு வந்திடு.....

சரிம்மா..... என்று சொல்லி ஆட்டோ புக் செய்து அவரை அனுப்பிவிட்டு..... காவேரியின் அக்கா யமுனா வீட்டிற்கு சென்றான் மணிகண்டன்.

ராஜேஷ் மெஸேஜ் அனுப்பி இருந்தான்.

சார் ..... பாடி போஸ்ட் மார்டம் முடிஞ்சு அவங்க அக்கா வீட்டுக்குன்னு .....

அங்கே வருபவர்களை பார்த்து எதாவது தடயம் ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று பார்க்க அங்கு சென்றான் மணிகண்டன் .

############

தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
ஸூப்பர் ப்பா..
தெளிவா கொண்டு போறீங்க
 
  • Like
Reactions: navivij

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
177
202
43
Salem
மிகவும் அருமை மா
ஃபான்ட் சைஸ் கொஞ்சம் பெருசு பண்ணுங்க மா
 
  • Like
Reactions: navivij