ரகசிய கொலையாளி......
பாகம் -17
யமுனாவின் வீட்டு வாசலில் காவேரியின் சடலத்தை வந்து இறக்கினார்கள். நிறைய பேர் வந்திருந்தார்கள்..... அவளுடைய ஆஃபீஸில் வேலை செய்பவர்களும் வந்திருந்தனர்.
மணிகண்டன் மற்றும் ராஜேஷ் இருவரும் சென்றிருந்தனர். மணிகண்டன் கூறியதால் ராஜேஷ் மஃப்டியிலேயே ( சாதாரண உடையில்) வந்திருந்தான். மணிகண்டன் ஹாஸ்பிடலில் இருந்து சென்றதால் அவனும் மஃப்டியில் சென்றான். அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க சொல்லி ராஜேஷிடம் கூறினான் மணிகண்டன்.
யமுனா அழுது கொண்டே இருந்தாள். அவளுடைய கணவன் ரகுராம் தான் எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தான். யமுனாவின் குழந்தைகள் கண்கள் கலங்க அவளருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்கள்.
காற்றுத் தீ போல காவேரி இறந்ததைப் பற்றி அனைவரும் ஒரு ஒரு விதமாக பேசிக் கொண்டு இருந்தனர். காவேரியின் வீட்டில் வேலை செய்த மலர் மற்றும் அவளுடைய கணவன் சேகர் இருவரும் வந்து மாலை போட்டனர். யமுனாவின் பக்கத்தில் அமர்ந்து அவளுடைய கையை பற்றி ஆறுதல் கூறினாள் மலர்.
மலர்..... என்னடி ஆச்சு என் தங்கச்சிக்கு..... என்று சொல்லி அழுதாள்.
தெரியலையே அக்கா..... முந்தைய நாள் கூட நல்லா தான் இருந்தாங்க..... என்று சொல்லி அழுதாள் மலர்.
நாங்க சனிக்கிழமை வரலாம்னு இருந்தோமே.... ரக்ஷனும் ரோஷினியும் சித்தி கூட வெளியே போகலாம் ன்னு பேசிக் கொண்டு இருந்தாங்களே..... என் பசங்க மேல உயிரையே வச்சிருந்தாளே என் காவேரி..... என்று சொல்லி அழுதாள் யமுனா.
அக்கா.... அழாதீங்க அக்கா....
உங்களைப் பார்த்து குழந்தைகளும் அழறாங்க பாருங்க..... என்றாள் மலர்.
கண்களை துடைத்துக் கொண்டு தன் குழந்தைகளை கட்டி அணைத்து கொண்டாள் யமுனா.
அவள் அழுவதை பார்த்தே பலர் அழுதார்கள். ரகுராம் அனைவருக்கும் டீ காஃபி அரேன்ஜ் பண்ணி கொடுத்தான்.
அப்போது மியூசியம் ஸ்டாஃப் சார்பாக மேனேஜர் கார்மேகம் பெரிய மாலையை எடுத்துக் கொண்டு சென்றார். காவேரியுடன் வேலை செய்த அனைவரும் கார்மேகத்துடன் சென்று காவேரிக்கு மாலையை அணிவித்தனர்.
காவேரியை பிடிக்காத கலைவாணிக்கே அவளைப் பார்த்ததும் அழுகை வந்தது. ஏனெனில் மிகவும் அழகாக இருக்கும் காவேரி தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தாள் என்று தெரிந்து மிகவும் வருந்தினாள்.
ராஜேஷூம் மணிகண்டனும் யாராவது ஒருவராவது தங்கள் முகத்தில் பயமோ பதட்டமோ அல்லது சந்தோஷமோ காட்டுக்கிறார்களா என்று பார்த்தனர்..... ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை.
சற்று தள்ளி இருந்த தங்கள் இன்னோவாவில் சென்று அமர்ந்தனர் இருவரும்.
என்ன சார் இது..... எல்லாருமே வருத்தம் தான் படறாங்க..... நீங்க சொல்றது போல யாரோட ரியாக்ஷனும் இல்லையே...... என்றான் ராஜேஷ்.
இல்ல ராஜேஷ்..... தலையை வெட்டியதால ஒருவேளை அந்த கொலைக்காரன் சைக்கோ வா இருக்குமோ ன்னு நினைச்சு தான் எல்லாரையும் உன்னிப்பாக கவனிக்க சொன்னேன்.
புரியல சார்.....
ராஜேஷ்..... கொலைக்காரன் சைக்கோவா இருந்தா..... கொலை செய்யப் பட்டவங்களை பார்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் அழுகையை கேட்கவோ இங்கே கண்டிப்பா வருவான் ன்னு நினைச்சேன்.....
இப்போ கொலைக்காரன் வரலையா?
தெரியல..... வந்தும் நம்மால அவன் யாருன்னு கண்டுப்பிடிக்க முடியலையா?..... இல்ல அவன் வரலையா ன்னு......
கண்டிப்பா ஆம்பளை தானா சார்.....
ஆமாம்...... கழுத்தை அறுக்கனும்னா கண்டிப்பா நிறைய பலம் வேண்டும்...
ஏன் சார்..... போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் படி தலைல அடிப்பட்டதில் தான இறந்ததா சொல்றாங்க..... அப்போ ஒரு வேலை யாராவது ஒரு லேடி கொன்றுவிட்டு அவங்களை காப்பாற்ற எதாவது ஒரு ஆம்பளை தலையை கட் பண்ணி இருக்கலாம் இல்ல?
ராஜேஷ்..... சூப்பர்..... நீங்க சொல்றதிலும் ஒரு பாஸிபிலிட்டி இருக்கு..... அந்த கோணத்திலும் விசாரிக்கலாம்.....
ஓகே சார்..... தேங்க்ஸ்..... சார் இன்னொன்று சொல்லவா......
சொல்லுங்க ராஜேஷ்.....
எனக்கு இந்த விக்டிமோட புருஷன் மேல ஒரு டவுட் இருக்கு......
எதை வச்சு சொல்றீங்க......
அந்த ஆளு இங்கே வரல பார்த்தீங்களா?..... என்னதான் பிரச்சினை இருந்தாலும் லவ் பண்னேன் இப்பவும் பண்றேன் ன்னு சொன்னானே வந்தானா பார்த்தீங்களா?
அதான் நீங்க அவருக்கு ஐடியா கொடுத்திட்டீங்களே......
என்ன ஐடியா சார்....
அதான் எங்கே எரிக்கப் போறாங்க ன்னு கேட்டு அங்கே போய் பார்த்துக்கோங்க ன்னு.....
உங்களுக்கு எப்படி தெரியும் சார்?
நம்ம ஸ்டேஷன்ல என்ன நடக்குது ன்னு எனக்கு தெரியாம இருக்குமா ராஜேஷ்.
சாரி சார்.....
அவன் மேல எனக்கு ஒரு டவுட் இருக்கு சார்..... ஆனா அவன் அழுததைப் பார்த்து பாவமா இருந்துச்சு..... அதான் சொன்னேன்.....
பரவாயில்லை..... இந்த சடங்கு எல்லாம் முடிஞ்ச பிறகு யாரு ஃபைனல் ரிச்சுவல்ஸ் செய்யறாங்க ன்னு பார்க்கலாம்..... என்றான் மணிகண்டன்.
சார் உங்களுக்கு யார் மேலேயாவது டவுட் இருக்கா?
ஹூம்.....
யாரு சார்?
யமுனா ஹஸ்பண்ட் ரகுராம்.
ஏன் சார்?
அவன் பார்க்கிறதுக்கு ரொம்ப ஸ்மார்டா இருக்கான்..... அந்த விக்டிம் வேற டைவர்ஸி..... ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகி விக்டிம் பிரெக்னென்டா ஆகி இருந்தா..... எங்கே தன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடுமோ ன்னு அபார்ட் பண்ண சொல்லி இருக்கலாம்..... அதுக்கு ஒத்துக்இலைன்னு கோபத்தில் தலையில் அடிச்சபோது ஆக்ஸிடென்டலி இறந்திருக்கலாம்.....
ஓகே சார்..... அப்படி இருந்தா ஏன் தலையை துண்டாக வெட்டனும்.....
அதுவும் சரிதான்..... நீங்க சொல்ற மாதிரி கொலைக்காரங்க ரெண்டு பேராக இருந்தா..... கொலை செஞ்சது ஒருத்தர்..... தலையை வெட்டியது ஒருத்தர்..... என்றான் மணிகண்டன்.
ஒண்ணுமே புரியல சார்..... இந்த கேஸ் அவ்வளவு சீக்கிரத்தில முடியாதுன்னு நினைக்கிறேன்...... என்றான் ராஜேஷ்.
அது என்னவோ உண்மைதான் ராஜேஷ்..... இது சீக்கிரமா முடியக்கூடிய கேஸ் இல்லை..... என்றான் மணிகண்டன்.
சடங்குகள் முடித்து காவேரியின் சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். ராஜேஷ் கூறியது போல காவேரியின் கணவன் செல்வம் அங்கு வந்திருந்தான். வேகமாக ஓடிச் சென்று தன் மனைவியின் முகத்தைப் பார்த்து அழுதான் செல்வம்.
ரகுராம் அவன் தோளைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சி செய்தான்.
ரகு அண்ணா..... என்று சொல்லி அவனை கட்டிப் பிடித்து கொண்டு அழுதான் செல்வம்.
செல்வம்..... செல்வம்..... பிளீஸ் அழாதீங்க..... என்றான் ரகுராம்.
ரகு அண்ணா..... நான் என் பொண்டாட்டிக்கு இறுதி சடங்கை செய்யட்டுமா?..... என்று அவன் காலில் விழாத குறையாக கேட்டான் செல்வம்.
இல்ல செல்வம் யமுனாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்..... என்றான் ரகுராம்.
அங்கு நின்று கொண்டு இருந்த அத்தனை பேரையும் ஒரு சேராக நினைத்து தரையில் விழுந்து பிளீஸ்..... நீங்க யாரும் அண்ணி கிட்ட சொல்லாதீங்க..... அதனால எனக்கு பிரச்சனை இல்லை..... பாவம் ரகு அண்ணாவுக்கு தான் பிரச்சனை..... என்றான்.
அவன் அழுவதை பார்த்து அனைவரும் பாவப்படவே..... சரி என்றனர்.
செல்வம் ரகுராம் கையில் இருந்த கொல்லிக் கட்டையை வாங்கி தன் மனைவிக்கு கொள்ளி வைத்தான்.
அங்கு வந்திருந்தவர்களையும் பார்த்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன்.
சார்..... இந்த செல்வம் ஓவரா பண்ற மாதிரி தெரியுது..... ஒருவேளை இவன் தான் கொலை செஞ்சிருப்பானோ?..... என்றான் ராஜேஷ்.
இன்னும் டீப்பா இன்வஸ்டிகேட் பண்ணினா தான் தெரியும் ராஜேஷ்.... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்..... புரியுது..... என்றான் ராஜேஷ்.
ஒண்ணு கவனிச்சீங்களா ராஜேஷ்?
என்ன சார்......
விக்டிமோட கிளோஸ் ஃபிரெண்டு ன்னு சொல்லப்பட்ட ரஸியா இங்கேயும் வரல...... என்றான் மணிகண்டன்
அட ஆமாம் சார்..... என்றான் ராஜேஷ்.
அவங்க அட்ரஸ் இருக்கு இல்ல?.....
இருக்கு சார்....
அங்கே போங்க..... என்றான் மணிகண்டன்.
எஸ் ஸார்..... என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்தான் ராஜேஷ்.
##########
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன் .