ரகசிய கொலையாளி....
பாகம் -19
ஒரு கண்டிஷன் என்று மணிகண்டன் சாக்ஷியிடம் சொன்னான்.
உங்க சேனல்ல சொல்லி நீங்க தான் இந்த ஆர்டிகில் பண்றீங்க.... அதை விட முக்கியமான விஷயம் உங்க சேனலோட டி ஆர் பி ரேட்டிங் ஏத்துறத்துக்காக உங்க கற்பனையை எல்லாம் கலந்து எழுதக்கூடாது. உண்மையை மட்டுமே எழுத சம்மதிச்சா.... நான் என் கேஸ்ல கிடைக்கும் லீடு எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லுவேன்..... என்றான் மணிகண்டன்.
ஒரு நிமிடம் யோசித்து விட்டு...
ஓகே சார்..... என்றாள் சாக்ஷி.
அப்புறம் ரஸியா..... என்றான் மணிகண்டன்.
நீ கவலைப்படாதீங்க சார்..... அவங்க வந்த உடனே மட்டும் இல்ல.... எதாவது வித்யாசமா அவங்க வீட்ல தெரிஞ்சா நான் உங்களுக்கு உடனே சொல்றேன்.
ஓகே மிஸஸ் சாக்ஷி.... தேங்க் யூ ஸோ மச்..... பை தி பை..... உங்க ஃபுல் நேம்?
சாக்ஷி அருண்குமார்..... எனக்கு ஒரே பையன் 3வது படிக்கிறான். என் ஹஸ்பண்ட் அருண்குமார் ஐடி ல வேலை பார்க்கிறாரு..... என்றாள் சாக்ஷி.
ஓகே மிஸஸ் சாக்ஷி பை.....
சார்.... ரொம்ப ஃபார்மலா கூப்பிடவேண்டாம்.... ஜஸ்ட் கால் மீ பை மை நேம்.....( என் பெயரை சொல்லியே கூப்பிடுங்க)
ஸ்மைல் செய்து கொண்டே.
ஓகே சாக்ஷி பை..... என்றான் மணிகண்டன்.
பை சார்..... என்றாள் சாக்ஷி.
ராஜேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் இன்னோவாவில் திரும்பி வரும்போது....
எதுக்கு சார் ஒத்துக்கிட்டீங்க?..... என்றான் ராஜேஷ்.
ராஜேஷ்..... அவங்க ரஸியாவோட பக்கத்து வீட்டில இருக்கிறவங்க..... எது ஒண்ணும் அவங்களுக்கு முதல்ல தெரியும்..... அவங்க மிட் நைட்ல வந்து போறாங்களா இல்ல எப்போ வராங்க போறாங்கன்னு.... நம்ம எந்த நேரமும் அவங்க வீட்டை கண்காணிச்சு கிட்டு இருக்க முடியாது.....
அது என்னவோ சரிதான்..... ஆனா நீங்க லீடு கிடைக்கும் போது எல்லாம் சொல்றேன்னு சொன்னீங்க இல்ல..... அதான்..... நம்ம மேல் அதிகாரிகளுக்கு தெரிஞ்சுது ன்னா கஷ்டமாச்சே.....
இல்ல ராஜேஷ்..... இறந்த விக்டிமுக்கு நியாயம் கிடைக்கனும்..... அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ..... யாராக இருந்தாலும் அவங்க இறப்புக்கு நீதி கிடைக்கனும்....
மீடியாவில் வந்தா நியாயம் கிடைக்குமா சார்?
மக்கள் நிறைய பேருக்கு இந்த தகவல் போய் சேரும்..... யாராவது பெரிய தலைங்க இதுல இன்வால்வாகி இருந்தா நம்மால மீடியா தயவு இல்லாம ப்ரொசீடு பண்ண முடியாது..... முதலிலேயே நம்மல கட் பண்ணிடுவாங்க..... இதெல்லாம் யோசித்து தான் நான் அவங்க கிட்ட சொன்னேன்.
ஓ...... ஓகே சார்...... என்றான் ராஜேஷ்.
பின்னர் இருவரும் ஸ்டேஷனிற்கு சென்றனர்.
############
சித்து..... என்று சொல்லி தன் தோழியை கட்டிப்பிடித்துக் கொண்டாள் மீனா.
கங்கிராட்ஸ் டி..... என்றாள் சித்ரா.
கவி எங்கே?
வந்துக்கிட்டே இருக்கா.....
மூணாவது வீட்ல இருந்து வர எவ்வளவு நேரம் அவளுக்கு..... என்றாள் மீனா.
இல்லடி.... அவங்க சித்தி வீட்டுக்கு போயிட்டு இன்னைக்கு தான் வரா.....
ஓ..... ஓகே ஓகே.....
அப்புறம் சொல்லு..... லைஃப் எப்படி போகுது.... குமார் அண்ணா எப்படி பார்த்துக்கிறார் உன்னை?
உண்மையை சொல்லனும்ன்னா நான் ரொம்ப ரொம்ப லக்கி டி..... இப்படி ஒரு லவ்விங் அன்ட் கேரிங் ஹஸ்பண்ட் கிடைக்க.....
ரொம்ப சந்தோஷமா இருக்கு டி..... நீ சொல்றதை கேட்க.....
சரி அப்பறம் உனக்கு எப்போ மேரேஜ்.....
இல்லடி..... அதைப் பற்றி அப்புறமா பேசலாம்.
ஏய் சொல்லுடி..... பொண்ணு பார்த்துட்டு போனாங்க.... ஃபிக்ஸ் ஆகுற ஸ்டேஜ்ல இருக்குன்னு....முந்தா நேத்து தான சொன்ன.....
ஆமாம்..... அப்படி தான் நினைச்சேன்..... அவங்க நான் தாங்கி தாங்கி நடக்குறதுனால பத்து பவுன் அதிகமா கேட்டாங்க..... எங்க அப்பா எங்கே போவாரு..... என்றாள் சித்ரா.
ஏய்..... நீ மாப்பிள்ளை கிட்ட தனியா பேசும் போது ரொம்ப நல்லவரா இருக்காரு..... உன் குறையை பெரிசா நினைக்கல ன்னு சொன்னீயே டி......
அதான் ஈடுகட்ட 10 பவுன் கேட்குறானே..... அப்புறம் அவனை எப்படி நல்லவன் ன்னு சொல்றது..... சரி சரி அதை விடு.... என்று தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு மீனாவிற்காக அவள் செய்து வைத்திருந்த பாயாசத்தை எடுத்து வந்து கொடுத்தாள் சித்ரா.
எதுக்கு டி இதெல்லாம்..... இதுக்கு தான் முன்னாடியே உனக்கு மெஸேஜ் பண்ணக் கூடாது ன்னு நினைச்சேன்.... சரி எங்காவது வெளியே இருக்கப் போற ன்னு நினைச்சு மெஸேஜ் பண்ணேன்.
உனக்கு தான் நான் செய்யுற பாயசம் பிடிக்கும் இல்ல?
பிடிக்கும் தான்..... சரி சரி..... இரு கவி வரட்டும்.... அப்புறம் நம்ம மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாம்..... என்றாள் மீனா.
சரிடி.... என்றாள் சித்ரா.
சரி கவி எதுக்கு இப்போ அவ சித்தி வீட்டுக்கு போயிருக்கா?
அவங்க சித்திக்கு உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துச்சு.... உடனே அவ அம்மா அனுப்பி விட்டுட்டாங்க..... அதனால ஒரு வாரம் ஹெல்ப்புக்கு வச்சிருந்தாங்க...... இன்னைக்கு தான் வரேன் ன்னு காலைல மெஸேஜ் அனுப்பினா....... நீ வரேன் ன்னு தெரிஞ்சதால நேரா இங்கு வரேன் ன்னு சொன்னா.....
ஓ..... ஓகே ஓகே.... என்றாள் மீனா.
வேகமாக ஓடிவந்து சித்ராவையும் மீனாவையும் கட்டிக் கொண்டாள் கவி என்கிற கவிதா.
ஏய்..... எவ்வளவு நாளாச்சு டி உன்னை பார்த்து..... என்றாள் மீனா.
நீங்க பிஸி போலீஸ்காரம்மா வாச்சே..... அப்புறம் எப்படி எங்களை எல்லாம் பார்க்க முடியும்...... என்றாள் கவி சிரித்துக் கொண்டே.
பிஸி ன்னு சொன்னா உண்மைதான் டி..... காலைல ஸ்டேஷனுக்கு போனா வேலை கரெக்டா தான் இருக்கும்..... மதியம் லஞ்ச் அப்புறம் டின்னர் டைம் தான் கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைக்கும்.....
முடியலையா டி.....
இல்ல இல்ல..... பிடிச்ச வேலையாச்சே...... எப்படி முடியாம போகும்.
கங்கிராட்ஸ் டி..... என்றாள் கவிதா.
தேங்க்ஸ் கவி.....
என்ன குழந்தை வேணும்?
எனக்கு அவரைப் போல ஒரு பையன் வேணும்னு நினைக்கிறேன்..... அவரு என்னை போல ஒரு பொண்ணு வேணும்னு நினைக்கிறாரு.....
ஓ.... சூப்பர் சூப்பர்..... என்றனர் கவிதா மற்றும் சித்ரா இருவரும்.
சரி.... உன் சித்தி எப்படி இருக்காங்க.....
அவங்க இப்போ பரவாயில்லை..... என்றாள் கவி. ஆனால் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிந்தது.
என்னடி..... ஏன் டல்லா இருக்க..... என்றாள் மீனா.
வேற என்ன..... இன்னும் கல்யாணம் ஆகலையே ன்னு வருத்தம் தான்..... அப்படி தான டி.... என்றாள் சித்ரா.
ஏய்..... நீ வேற.... ஏன் அவளை வெறுப்பேத்துற..... என்றாள் மீனா.
இல்லடி.... ரொம்ப நாளா என் அம்மாவை பார்க்கலீயா.... அதான்..... என்றாள் கவிதா.
ஓ..... சரி சரி..... நீ கிளம்பு..... என்றாள் மீனா.
நீ வந்திருக்கும் போது உன் கூட இல்லாம.... என்னை கிளம்ப சொல்ற..... என்றாள் கவிதா.
இல்லடி.... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.... நானும் கிளம்பப்போறேன்..... என்றாள் மீனா.
ஏய் என்னடி.... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க..... இப்போ கூட ரொம்ப நேரம் இருக்காம கிளம்புற..... என்றாள் சித்ரா.
ஆமாம் டி..... என் வீட்ல இன்னைக்கு நைட்டு நம்ம மூணு பேரும் இருக்கலாமே.... குமார் அண்ணாவை நாளைக்கு காலைல வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லேன்.... என்றாள் கவிதா.
இல்ல கவி..... உண்மையிலேயே முக்கியமான வேலை இருக்கு..... அதுவும் இல்லாம அப்பா வீட்ல தனியா இருக்காரு இல்ல.....என்றாள் மீனா.
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.

###########
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.