• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி, பாகம் -2

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
270
105
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....
பாகம் -2
உங்க கணவர் பெயர் என்னம்மா?..... என்றான் மணிகண்டன்.
அவர் பேரு சேகர் சார்..... என்றாள் மலர்.
இறந்துபோன காவேரிக்கு சொந்தக்காரங்க யாரு?
அவங்க ஒரு வருஷமா தனியா தான் இருக்காங்க சார்.....
அவங்க ஹஸ்பண்ட்?
டைவர்ஸ் ஆயிடிச்சு சார் அவங்களுக்கு..... குழந்தைங்க இல்ல..... அவர் தான் காரணம் ன்னு கேள்விப்பட்டேன்....
எதுக்கு அவர் காரணம்..... கொலைக்கா..... என்றான் ராஜேஷ்.
இல்ல சார்..... அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லாததற்கு..... என்றாள் மலர்.
மணிகண்டன் திரும்பி ராஜேஷை முறைத்தான்.
சாரி சார்..... என்றான் ராஜேஷ்.
அப்போது மணிகண்டனுக்கு கால் வந்தது..... கட் செய்தான்.....
சொல்லுங்க மா..... நீங்க எத்தனை நாளா இங்கே வேலை செய்யறீங்க?
ஆறு மாசமா தான் சார்.....
காவேரியை பார்க்க யாரெல்லாம் வருவாங்க?..... உங்களுக்கு அதை பற்றி எதாவது தெரியுமா?
அவங்க அக்காவும் அவங்களோட பொண்ணும் பையனும் வாரா வாரம் சனிக்கிழமை இல்லன்னா ஞாயிற்றுக்கிழமை ல வருவாங்க.....
இங்கேயே தங்குவாங்களா?
இல்ல இல்ல..... காலையில வந்திட்டு ராத்திரி போயிடுவாங்க.....
வாரா வாரம் வருவாங்களா?
ஆமாம் சார்..... நான் வேலை பார்க்குற இந்த ஆறு மாசமா பார்த்துக் கொண்டு தான் இருக்கேன்..... கண்டிப்பா சனிக்கிழமை இல்லன்னா ஞாயிற்றுக்கிழமை வந்திடுவாங்க......
அவங்க பேரு ஃபோன் நம்பர் எதாவது தெரியுமா?
பேரு..... என்று யோசித்தாள் மலர்.
அவங்க அக்கா பேரு தெரியல சார்...... காவேரி அக்கா அவங்களை அக்கா அக்கா ன்னு தான் கூப்பிடுவாங்க..... அந்த பசங்க பேரு...... ரக்ஷன், ரோஷனி.....
எவ்வளவு பெரிய பசங்க?
மூணாவது இல்லன்னா நாலாவது படிப்பாங்க.....
ரெண்டு பேருமே வா?
ஆமாம் சார்..... டிவின்ஸ்.....
ஓ..... ஓகே.....
உங்களுக்கு என்ன வயசு?
28 சார்.....
உங்களுக்கு பசங்க?
பையன் மூணாவது படிக்கிறான் சார்..... பேரு கமல்.....
சரி..... என்கொயரிக்கு போலீஸ் ஸ்டேஷனிற்கு கூப்பிட்டா வரணும்.....
சார்.....
உங்க புருஷனையும் கூட கூட்டிக்கிட்டு வரணும்.
ஓகே சார்.....
நீங்க போங்க..... என்று அவளிடம் சொல்லிவிட்டு.....
ராஜேஷிடம் இவங்க ஹஸ்பண்ட்டை வரச் சொன்னான் மணிகண்டன்.
சார்..... என்று சொல்லி மணிகண்டன் முன் வந்து நின்றான் சேகர்.
உங்க பேரு?
சேகர்.....
வயசு.....
30.....
என்ன வேலை பண்றீங்க?
கன்ஸ்டிரகஷன் கம்பனில வேலை பார்க்கிறேன் சார்.....
எந்த கம்பனி?
குறிப்பாக எந்த கம்பெனியும் இல்ல சார்..... எங்க வேலை இருக்கு ன்னு கூப்பிடறாங்களோ அங்கே போய் வேலை செய்வேன்.....
ஏஜென்சி மூலமாவா.....
ஆமாம் சார்.....
ஏஜென்சி பேரு என்ன?
ஏஆர்ஆர் ஏஜென்சி....
ஓகே..... அந்த ஏஜென்சி டீடெயில்ஸ் கொடுங்க.....
ஓகே சார்.....
அப்போது ராஜேஷின் ஃபோன் அடித்தது. தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து பார்த்தான்.
ராஜேஷை திரும்பி பார்த்தான் மணிகண்டன்.
எஸ் ஸார்...... எல்லா டீடெயில்ஸ் நோட் பண்ணி கொண்டு தான் சார் இருக்கேன்....ஃபோனை கட் பண்ணிட்டேன்...... என்றான் ராஜேஷ்.
ஓகே..... என்று தலை அசைத்தான் மணிகண்டன்.
இன்னைக்கு காலைல நடந்ததை சொல்லுங்க.....
சார்..... என் பொண்டாட்டி மலர் ஃபோன் பண்ணினா..... பதட்டமா அழுதுக்கொண்டே பேசினா..... உடனே நான் வந்தேன்..... டைனிங் ரூம் ஜன்னல் வழியா பார்த்தா..... யப்பா..... இப்போ நினைச்சா கூட தலையே சுத்துது..... ரொம்ப கொடூரமா இருந்துச்சு சார்..... என்றான் சேகர்.
அப்புறம்.....
உடனே 100 க்கு கால் பண்ணேன்......
சரி..... உங்க ஒயிஃப் இந்த வீட்ல வேலை செய்யறதால என்கொயரிக்கு கூப்பிடுவோம்..... சொல்லும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு வாங்க.
சரிங்க சார்..... என்றான் சேகர்.
உள்ளே சென்று ஃபாரன்ஸிக் ஆட்களிடம் அவங்க ஃபோன் எதாவது கிடைச்சதா?
இருக்கு சார்.... உடைஞ்சி போயிருக்கு..... என்றார் ஒருவர்.
ஓகே.... என்று சொல்லி விட்டு வெளியே வந்து மலரை கூப்பிட்டான் மணிகண்டன்.
சார்.....
இந்தம்மா நம்பர் கொடுங்க மா.....
காவேரி அக்கா நம்பரா?
ஆமாம் மா.....
ஒரு நிமிஷம் சார்.... என்று சொல்லி தன் கணவனிடம் இருந்த தனது ஃபோனை வாங்கி நம்பரை கூறினாள்.
ஓகே மா.... நீங்க போங்க..... என்றான் மணிகண்டன்.
சரிங்க சார்.... என்று சொல்லி மலர் மற்றும் சேகர் இருவரும் அவர்களது மொபைல் நம்பரை ராஜேஷிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
நவீன்..... என்று கூப்பிட்டான் மணிகண்டன்.
எஸ் ஸார்.... என்று சொல்லி வந்து நின்றான் நவீன்.
என்னாச்சு?
சாரி சார்..... இவ்வளவு பயங்கரமான கொலையை சினிமாவுல தான் பார்த்திருக்கேன்..... நேர்ல பார்த்ததும் பயம்.... நடுக்கம்.... அதுக்கும் மேல வாந்தி வந்திடிச்சு சார்.....
இப்போ ஓகே வா.....
கொஞ்சம் பரவாயில்லை சார்..... ஆனா ராத்திரி எப்படி தூங்கப்போறேன் ன்னு தெரியல..... என்றான் நவீன்.
தூங்கனும்ன்னு வேற ஆசை இருக்கா உனக்கு.... இந்த கேஸ் முடியுற வரைக்கும் நமக்கு எல்லாம் சாப்பாடு தூக்கம் எல்லாம் நேரத்திற்கு கிடைக்காது..... என்றான் மணிகண்டன்.
ஓகே சார்.....
சரி.... இந்தாங்க இறந்துபோன காவேரியோட ஃபோன் நம்பர். சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட் க்கு ஃபோன் பண்ணி இந்த நம்பருக்கு ஒரு மாசமா இல்ல இல்ல மூணு மாசமா இன்கம்மிங்.... அவுட்கோயிங்..... மெஸேஜ்..... எல்லாம் கலெக்ட் பண்ணுங்க.....
ஓகே சார்..... டிபார்ட்மெண்ட் நம்பர் சார்.....
ஃபோன்ல கேட்டா சீக்கிரமா டீடெயில்ஸ் கிடைக்காது..... நேரா போய் பார்த்து வாங்கிக் கொண்டு வாங்க.....
அட்ரஸ் சார்.....
நானே போய் டிராப் பண்ணவா..... என்றான் மணிகண்டன்.
சாரி சார்.....
ஆனா சார்...... எப்படி போறது?
முறைத்தான் மணிகண்டன்.
சாரி சார்.....
ராஜேஷ் நவீனிடம் சென்று.....
உன் கிட்ட காசு இருந்தா ஆட்டோ புடிச்சு போ..... இல்லையா இந்த பக்கமா போற பைக்ல லிஃப்ட் கேட்டு போ.....
சரி.... எங்கே இருக்கு ஆஃபீஸ்.....
இப்போ என் கிட்டயே திட்டு வாங்கப் போற பாரு.....
ராஜேஷ் சார்..... தெரியாம தான கேட்கிறேன்..... நீங்க சொல்லக்கூடாதா?
அடேய்..... ஃபோன்னு ஒண்ணு கையில வச்சிருக்க இல்ல..... அதில் தேடி கண்டுப்பிடிச்சு போ..... என்றான் ராஜேஷ்.
ராஜேஷ்..... என்றான் மணிகண்டன்.
ஓகே ஓகே.... பார்த்து போ.... பை..... என்று சொல்லி விட்டு மணிகண்டனின் அருகில் வந்தான் ராஜேஷ்.
சார்......
பக்கத்து வீட்டில் போய் விசாரிச்சிட்டு வாங்க ராஜேஷ்......
ஓகே சார்..... என்று சொல்லி விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றான் ராஜேஷ்.
மறுபடியும் ஃபோன் அடித்தது.
எடுத்து ஹலோ..... என்றான் மணிகண்டன்.
ஹேப்பி பர்த்டே டா......
தேங்க்ஸ் டி......
முதலிலேயே கால் பண்ணேன்..... ஏன்டா கட் பண்ணின.....
கிரைம் சீன் ஸ்பாட்ல இருக்கேன் டி.....
அதனால..... என் ஃபோனையே கட் பண்ணுவியா...... அவ்வளவு தைரியமா உனக்கு.....
அம்மா தாயே..... தெரியாம கட் பண்ணிட்டேன்..... இப்போ வேலையா இருக்கேன்..... ஆளை விடு......
மாமா.... மாமா.....
சொல்லுடி......
நான் இந்த வாரம் ஊருக்கு வரேன்...... உனக்காக ஒரு பர்த் டே கிஃப்ட் வாங்கி வரேன்.....
என்னது.....
அது சர்ப்ரைஸ்......
சரி ஓகே......
எனக்கு என்ன ரிட்டன் கிஃப்ட்?
ரிட்டன் கிஃப்டா?
ஆமாம்..... கிஃப்ட் கொடுக்கிறவங்களுக்கு ரிட்டன் கிஃப்ட் கொடுக்கனும்.....
கிஃப்ட் தான..... கொடுத்திட்டு போச்சு.....
கிஃப்ட் இல்ல..... ரிட்டர்ன் கிஃப்ட்.....
என்ன கிஃப்ட் வேண்டும் சொல்லு.....
உன் இஷ்டம் மாமா..... நீ என்ன கிஃப்ட் கொடுத்தாலும் எனக்கு பிடிக்கும்.....
சிரித்தான் மணிகண்டன்.
சரி சரி மாயா..... நான் அப்புறமா பேசறேன்..... வேலை இருக்கு.....
ஓகே மாமா..... லவ் யூ ஸோ மச்......
ஓகே டி..... பை.....
மாமா.....
என்ன டி......
நீ லவ் யூ சொல்லவே இல்லையே.....
ஏய்..... கிரைம் சீன்ல நின்னுக்கிட்டு..... லவ் யூ சொன்னா நல்லா இருக்காது டி.....
சரி சரி..... இப்போ சொன்ன இல்ல அது போதும்.....
எப்போ.....
லவ் யூ சொன்னா நல்லா இருக்காது ன்னு சொன்ன இல்ல...... அது லவ் யூ மட்டும் நான் எடுத்துக்கிறேன்...... என்றாள்.
ஓகே மாயா..... எனக்கு இன்னொரு கால் வருது..... பை.... பை..... என்றான் மணிகண்டன் சற்றே சத்தமாக.
பிறகு காலை கட் செய்து விட்டு இன்கம்மிங் காலை எடுத்தான்.
பக்கத்தில் இருந்த அனைவரும் அவனை திரும்பி பார்த்தார்கள்.
ஹலோ சார்.....
........
ஆமாம் சார் ஸ்பாட்ல தான் இருக்கேன்.....
........
கண்டிப்பா சார்..... அப்டேட் பண்றேன் சார்....
.........
ஓகே சார் ஓகே சார்....
........
இல்ல சார் .....
........
தேங்க்ஸ் சார் .... பை ....
##########
தொடரும் .....
அ. வைஷ்ணவி விஜயராகவன் .
 
  • Like
Reactions: Anusha Senthil