• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரகசிய கொலையாளி.....பாகம் -21

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
291
43
43
Maduravoyal
ரகசிய கொலையாளி.....

பாகம் -21

அதற்கு மேல் சிவகாமியை கட்டாயப் படுத்த மனமில்லாமல்.....

சரிம்மா..... உங்க இஷ்டம்..... ஆனாலும் எனக்கு வருத்தம் தான்.... என்று சொல்லிவிட்டு சாமி படங்களுக்கு முன் விழுந்து சேவித்து கொண்டு அந்த தாம்பூலத்தை எடுத்துக் கொண்டாள் மீனா.

நான் கிளம்பறேன் அம்மா.....

சரிம்மா..... ஜாக்கிரதையா வீட்டுக்கு போ.... போயிட்டு ஒரு கால் பண்ணு.....

சரிங்க அம்மா..... பை..... சார் வந்தா சொல்லுங்க.....

கண்டிப்பா மா..... மீனா..... இந்த விஷயம்..... என்று இழுத்தார் சிவகாமி.

கவலைப்படாதீங்க அம்மா..... நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்...... அவ்வளவு ஏன் என் புருஷன் கிட்ட கூட சொல்லாம தான் இங்கு வந்தேன்....

சரிம்மா.... தேங்க்ஸ்.... பை....

பை அம்மா...... என்று சொல்லி விட்டு கேபில் ஏறி தன் வீட்டிற்கு சென்றாள் மீனா.

அவளுக்கு அன்று முழுவதும் தூக்கமே வரவில்லை...... மணிகண்டனை நினைத்து மிகவும் வருந்தினாள். எப்படியாவது மாயா அண்ணியோட நம்ம மணி அண்ணனை சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

அப்போது குமாரிடம் இருந்து கால் வந்தது.

ஹலோ..... மீனா.

ஹாங்.... சொல்லு குமார்.

வீட்டுக்கு போயிட்டு கால் பண்ண சொன்னேன் இல்ல?

சாரி டா மறந்திட்டேன்... அப்பாவுக்கு டின்னர் கொடுத்திட்டு நானும் சாப்பிட்டு விட்டு வந்து படுத்திட்டேன்.....

சரி.... ஏன் இவ்வளவு நேரமா தூங்காம இருக்க?

தூக்கம் வரல டா.....

ஏன் டி..... ஒன் ஆஃப் தி பிரெக்னனென்சி எஃபக்டெஸ்ஸா? ( கருத்தரித்ததாலா?)

அதுவும் தெரியல குமார்.... சரி நீ சாப்பிட்டியா?

சாப்பிட்டுட்டேன்..... சரி தூங்கு.... நாளைக்கு டியூட்டிக்கு போகனும் ன்னு சொன்ன இல்ல?

ஆமாம்.....

ஓகே பை மீனா.....

பை குமார்.....

குமார் ஒரு நிமிஷம்....

சொல்லுடி.....

நாளைக்கு நைட் ஷிஃப்ட் பண்ணாத டா....

ஏன்.... என்னாச்சு.... நெக்ஸ்ட் வீக்கோட நைட் ஷிஃப்ட் முடியுதே.....

தெரியும்..... எனக்கு உன்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்கனும்ன்னு தோணுது....

ஹூம்.... புரியுது டி..... ஆனா நைட் ஷிஃப்ட்ல அலோவன்ஸ் அதிகம்.... அதுவும் இல்லாம இப்போ நமக்கு குழந்தை பிறக்கப் போகுது..... ஹாஸ்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ் எல்லாம் இருக்கு.....

ஓகே டா.... எனக்கு புரியுது.... நாளைக்கு ஒரு நாள் மட்டுமாவது?..... பிளீஸ்.....

ஓகே மீனா.... நான் நாளைக்கு லீவு போட்டிடறேன்..... நாளைக்கு ஈவினிங் உன்னை ஸ்டேஷனில் இருந்து பிக்கப் பண்ணிக்கிட்டு வெளியே போய் டின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரலாம்..... ஓகே வா?

ஓகே டா.... தேங்க் யூ ஸோ மச்..... என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள் மீனா.

#############

ஈவ் டீசிங் கேஸில் அரெஸ்ட் ஆகி இருந்த ஒருவனை அடித்துக் கொண்டு இருந்தார் ரவி.

மணிகண்டன் உள்ளே வந்ததும்.... சஸ்யூட் செய்தனர் அனைவரும்.

என்ன கேஸ் ரவி சார்?

ஈவ் டீசிங்.....

ஓ.... ஓகே..... என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் மணிகண்டன்.

தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் மணிகண்டன்.

லேட் ஆயிடிச்சே.... நீங்க கிளம்பவில்லையா ரவி சார்.....

டியூட்டி சேன்ஜ் ஆள் இன்னும் வரல சார்....

யாரு...

ஏழுமலை சார்.....

பத்தரை ஆயிடிச்சே இன்னுமா வரல.... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்தான் ஏழுமலை.

சார்.... என்று சொல்லி சல்யூட் அடித்தான் ஏழுமலை.

என்ன ஏழுமலை சார்.... இவ்வளவு லேட்டா வந்தா அவரு வீட்டுக்கு போகனும் இல்ல.... இப்போ லேட்டா ஆனா அவர் நாளைக்கு காலைல லேட்டா வருவாரு..... அப்புறம் மறுபடியும் எல்லாம் லேட்டா ஆகும் இல்ல.....

சாரி சார்.... என்று சொல்லி விட்டு உள்ளே சென்று யூனிஃபார்ம் மாற்றிக் கொண்டு வந்தான் ஏழுமலை.

எத்தனை லேட்டு.... என்று வடிவேல் காமெடி போல முணுமுணுத்தான் ராஜேஷ்.

என்ன ராஜேஷ்?

ஒண்ணும் இல்லை சார்..... அச்சச்சோ சாருக்கு பாம்பு காது.... இனிமே மனசுக்குள்ளேயே பேசனும்..... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ்.

இளங்கோவும் நவீனும் கிளம்பிட்டாங்களா?

கிளம்பிட்டாங்க சார்.....

ஓகே ராஜேஷ் நாளைக்கு சீக்கிரமா வந்திடுங்க..... டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் நாளைக்கு வந்திடும் ன்னு டாக்டர் சொன்னாரு..... அப்புறம் கிரைம் சீனுக்கும் போய் வேற எதாவது தடையம் கிடைக்குதா ன்னு பார்க்கனும்.

ஓகே சார்..... கண்டிப்பா...... என்றான் ராஜேஷ்.

மணிகண்டன் வீட்டுக்கு சென்றதும் சிவகாமி வழக்கம் போல சாப்பாட்டுடன் மாத்திரையை கலந்து கொடுத்தார். இம்முறை மாத்திரையை மாற்றிக் கொடுத்திருந்தார் டாக்டர். அதனால் சாப்பாட்டில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.....

அம்மா..... என்னம்மா இன்றைக்கு சாப்பாடு கசக்குது..... என்றான் மணிகண்டன்.

அப்படியா..... எனக்கு ஒண்ணும் தெரியலையே பா.....

நீங்க வேணும்னா ஒரு வாய் சாப்பிட்டு பாருங்களேன்..... என்று சொல்லி ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு வந்து தன் அம்மாவின் வாயருகில் நீட்டினான்.

இல்லப்பா.... நான் சாப்பிட்டு விட்டு இப்போ தான் ஆஃப்டர் ஃபுட் மாத்திரை போட்டேன்.... உடனே சாப்பிடக் கூடாது என்று சொல்லி சமாளித்தார் சிவகாமி.

ஓகே அம்மா..... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே டீ பாயின் மேல் இருந்த ஸ்வீட் பாக்ஸை பார்த்தான்.

என்னம்மா ஸ்வீட்டா?..... யார் வாங்கி வந்தது?..... நீங்க எவ்வளவு சாப்பிட்டீங்க..

ஆமாம் பா.... சொல்ல மறந்திட்டேன் உன் கூட ஸ்டேஷனில் வேலை பார்க்கிறாளே மீனா.....

ஆமாம்.....

அவ தான் வந்து ஸ்வீட் பாக்ஸ் கொடுத்திட்டு போனா......

மீனாவா?..... எதுக்கு வந்தா?

அந்த பொண்ணு பிரெக்னென்டா இருக்கா டா.... அதான் ஸ்வீட் கொடுத்திட்டு போனா.....

ஓ..... ஓகே ஓகே ஓகே.

எதுக்கு வீட்டுக்கு வந்து கொடுத்தா.... நாளைக்கு ஸ்டேஷனில் என் கிட்ட கொடுத்திருக்கலாமே..
நீங்க ஆசைப் பட்டு சாப்பிட்டுட்டீங்கன்னா பிரச்சனை ஆயிடுமே......

இல்லப்பா..... நான் சாப்பிடல......

சரிம்மா...... ஒரு பீஸ் இப்போ எனக்கு கொடுங்க..... வாய் ரொம்ப கசக்குது..... என்றான்.

இருப்பா.... என்று சொல்லி ஒரு பீஸ் ஸ்வீட்டை எடுத்து வந்து கொடுத்தார் சிவகாமி. சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விட்டு சிறிது நேரம் தன் ஃபோனில் யூடியூப் வீடியோக்கள் பார்த்து விட்டு தூங்கினான் மணிகண்டன்.

###########

மறுநாள் காலை போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் குணசேகரனை பார்க்க சென்றனர் மணிகண்டன் மற்றும் ராஜேஷ்.

குட் மார்னிங் சார்.... என்று சொல்லி கைக் கொடுத்தான் மணிகண்டன்.

குட் மார்னிங்..... உட்காருங்க சார்.... என்று சொல்லி
தன் முன்னே இருந்த சேரை காண்பித்தார் டாக்டர் குணசேகரன்.

சார்..... நீங்க கொண்டு வந்து கொடுத்த எந்த பிளட் சேம்பில்ஸ் ஓடவும் டிஎன்ஏ மேட்ச் ஆகல..... என்று சொல்லி ரிப்போர்ட்டை கொடுத்தார் டாக்டர்.

அதை வாங்கி பார்த்தான் மணிகண்டன்.

செல்வம் - நோ மேட்ச்
(காவேரியின் கணவன்)

ரகுராம் - நோ மேட்ச்
(காவேரியின் அக்கா யமுனாவின் கணவன்)

கார்மேகம் - நோ மேட்ச்
(காவேரியின் சுப்பீரியர் ஆஃபீஸர்)

தர்மா - நோ மேட்ச்
( காவேரியுடன் வேலை செய்தவர்)

மோஹன் - நோ மேட்ச்
( காவேரியுடன் வேலை செய்தவர்)

சேகர் - நோ மேட்ச்
(காவேரியின் வேலையாள் மலரின் கணவன்)

இவங்க யாருமே இல்லையா டாக்டர்?

இல்ல சார்.....

சார்..... ஒருவேளை ஆர்டிஃபீஷியல் இன்செமினேஷன் பண்ணி இருந்திருப்பாங்களா?

மே பீ..... என்றார் டாக்டர் குணசேகரன்.

வேறு ஏதாவது இருந்திருக்க வாய்ப்பிருக்கா? ஐ மீன் ரேப் மாதிரி..... என்றான் மணிகண்டன்.

இல்ல சார்..... அப்படி எதுவும் தெரியல..... ஃபோர் மன்த்ஸ் ஃபீடஸ்..... ரேப்பா இருந்தா கண்டிப்பா அவங்க பெண் உறுப்பு டேமேஜ் ஆகி இருந்திருக்கும்..... போஸ்ட் மார்டம்ல அப்படி எதுவும் தெரியல..... என்றார் டாக்டர் குணசேகரன் .

#########

தொடரும் ......

அ . வைஷ்ணவி விஜயராகவன் .
 
Last edited: