ரகசிய கொலையாளி...
பாகம் -23
அவளை உளுக்கினேன்..... அப்படியே மயங்கி சோஃபாவில் விழுந்தாள்..... தண்ணீர் தெளித்து எழுப்பினேன்..... அப்புறம் என் கணவரை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு போனேன். இரண்டு நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி டிரீட்மெண்ட் கொடுத்தும் சரி ஆகல..... மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க.... என்றார் ரஸியாவின் அம்மா அழுதுகொண்டே.
எதனால இப்படி இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்களா?..... என்றான் மணிகண்டன்.
இல்ல..... பர்ட்டிகுலரா எதுவும் சொல்லல.... ஆனா எதையோ பார்த்து பயந்திருக்காங்க..... அதனால டிரோமாவில் இருக்காங்க.... இது நாள் ஆக ஆக தான் சரி ஆகும்ன்னு சொன்னாங்க..... என்றார் ரஸியாவின் அப்பா.
உங்க பொண்ணு அபியூஸ் பண்ணப் பட்டிருக்காங்களா?....
இல்ல சார் இல்ல.... நாங்க அதைத் தான் நினைச்சு பயந்தோம்..... லேடி டாக்டர் செக் பண்ணிட்டு ஃபிசிக்கல் அபியூஸ் எதுவும் இல்லை..... ஷீ ஈஸ் ஸ்டில்ல எ வெர்ஜின்னு சொன்னாங்க..... மாஷா அல்லா..... என்றார் ரஸியாவின் அம்மா.
இப்போதைக்கு எங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க பொண்ணு ரஸியா தான் காவேரி மர்டர் ஐ விட்னஸ்..... அதனால தான் அவங்க இப்படி மிரண்டு போய் இருக்காங்க.....
எங்க ரஸியா அந்த பொண்ணு காவேரி வீட்ல இருக்கும் போது தான் கொலை நடந்திருக்கும் ன்னு சொல்ல வரீங்களா?
ஆமாம் அதனால தான் பயந்து இப்படி ஆகிட்டிருக்காங்க..... கொலைக்காரன் யாருன்னு உங்க பொண்ணுக்கு தான் தெரியும்.....
மாஷா அல்லா....
அந்த கொலைக்காரனால எங்க பொண்ணுக்கு ஆபத்து வருமா?
இல்ல.... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த கொலைக்காரனுக்கு காவேரி மேல தான் வென்ஜென்ஸ்..... உங்க பொண்ணு அங்கே இருந்தாலும் அவங்களை ஒண்ணும் பண்ணாம பத்திரமா உங்க வீட்டுக்கு கொண்டு வந்து விட்டிட்டு போயிருக்கான்..... என்றான் மணிகண்டன்.
மேடம்..... அந்த புளூ கார் ன்னு சொன்னீங்க இல்ல.... அதோட நம்பர் பார்த்தீங்களா?..... எதாவது ஞாபகம் இருக்கா?.... என்றான் ராஜேஷ்.
இல்ல சார்..... யெல்லோ ஃபோர்டு ன்னு நினைச்சேன்..... ஆனா வெள்ளை போர்டை பார்க்கவும் கடுப்பாகி உடனே ரஸியாவிடம் வந்திட்டேன்.....
வேற எதாவது கார்ல ஸ்டிக்கர் எதாவது ஒட்டி இருந்ததா?.... என்றான் மணிகண்டன்.
இல்ல சார்..... நான் எதுவும் கவனிக்கல....
இந்த தெரிவில யார் வீட்டிலாவது சிசிடிவி இருக்கா?
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்ல சார்..... என்றார் ரஸியாவின் அப்பா.
ஓகே..... உங்க பொண்ணு சரி ஆனதும் சொல்லுங்க.... இது தான் என் நம்பர் என்று சொல்லி தன் கார்டை கொடுத்தான் மணிகண்டன்.
இவரும் கார்டு வச்சிருக்காரா..... அன்னைக்கு இளங்கோ அந்த போஸ்ட் மார்டம் டாக்டர் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டானே.... என்று நினைத்து கொண்டான் ராஜேஷ்.
ஓகே சார்..... என்றனர் ரஸியாவின் அம்மா அப்பா.
ராஜேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் கிளம்பினார்கள். வெளியே வரும்போது சாக்ஷி அங்கு நின்று கொண்டு இருந்தாள். அவளை பார்த்து தேங்க்ஸ் சொல்லும் விதமாக கண்களை சிமிட்டி விட்டு இன்னோவாவில் ஏறினான் மணிகண்டன்.
சாக்ஷியின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த வேணி அதைப் பார்த்து விட்டு.....
என்னடி சாக்ஷி அந்த போலீஸ்காரன் உன்னைப் பார்த்து கண்ணடிச்சிட்டு போறான்.
அப்படியா ஆன்டி.... நான் கவனிக்கவில்லையே.... என்றாள் சாக்ஷி.
ஏய்.... நான் பார்த்தேன்.... உன்னை தான் பார்த்தான்.
நான் வகிடுல குங்குமம் வைக்கல இல்ல அதான் என்னை பார்த்து கல்யாணம் ஆகல ன்னு நினைச்சிருப்பாரு..... தயவு செஞ்சு என் அருண் கிட்ட சொல்லிடாதீங்க.....
ஏன் சந்தேக படுவானா அருண்.....
நீங்க வேற..... அதெல்லாம் இல்ல..... எனக்கு தொல்லை விட்டா போதும் ன்னு அந்த போலீஸ்காரன் கூட போ ன்னு சொல்லிடுவாரு..... என்று சொல்லி சிரித்தாள் சாக்ஷி.
அடக்கடவுளே.... என்றார் வேணி.
சரி சரி.... அதை விடுங்க.... வாங்க உள்ள போய் பேகம் ஆன்டியை பார்க்கலாம்.... என்று சொல்லி அவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் சாக்ஷி.
மற்றவர்கள் போலீஸ் சென்றதும் கலைந்து போய் விட்டனர்.
#############
சிவகாமி ஊரில் இருந்த பக்கத்து வீட்டுக்கார அக்காவிடம் தன் அண்ணியின் நம்பரை வாங்கி மீனாவிற்கு அனுப்பினார்.
மேலும் டாக்டர் கூறியதால் மணிகண்டனின் காதில் கேட்கும் படி மாயாவின் பிறந்த நாள் அன்று அவளால் மணிகண்டனை பார்க்க வரமுடியாது என்று அவன் நினைக்கும் அளவிற்கு எதாவது சொல்லச் சொன்னார்.
அதையும் மீனாவிடம் கேட்டார் சிவகாமி.
ஓகே அம்மா.... நான் யோசித்து விட்டு சொல்றேன்.....
அதுக்கு முன்னாடி நான் மாயா மேடம் கிட்ட பேசறேன்.
மீனா....
சொல்லுங்க அம்மா....
மாயா என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு சந்தோஷம் தான்..... ஆனா அது நடக்கலை ன்னா என் பையனை இழந்திடுவேனோ ன்னு பயமா இருக்கு....
கவலைப்படாதீங்க அம்மா..... மணி அண்ணாவோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.....
சரிம்மா..... பேசிட்டு சொல்லுமா.....
அம்மா..... காலைலேயே பேசி நம்பர் வாங்கிட்டீங்களா?
இல்லம்மா.... நேத்து நீ வந்து போனதுமே வாங்கிட்டேன்..... நீ தூங்கிருப்ப ன்னு நினைச்சேன்.... அதான் காலைல சொல்லலாம் ன்னு நினைச்சு விட்டுட்டேன்.....
சரிம்மா..... மதியமா லஞ்ச் டைம்ல பேசறேன்..... மணி பத்தாக போகுது.... எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுது.....
நான் கிளம்பறேன்.
சரிம்மா ஜாக்கிரதை.... அப்புறம் மணி இருக்கும் போது பேசாதே....
சரிங்க அம்மா.... நான் பேசிட்டு சொல்றேன்..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் மீனா.
சிவகாமி வீட்டை பூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய நினைத்தார்.
###########
டெல்லி......
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி ஸ்கூல் யூனிஃபார்மில் ஒரு தெருவில் பயந்து கொண்டே நடந்து சென்றாள்.
அப்போது ஒருவன் பைக்கை அவளருகில் நிறுத்தி.....
ஏய் ருக்கோ..... ( ஏய் நில்லு)
பயந்து கொண்டே நின்றாள் அந்த பெண்.
ஐ லவ் யூ போல் ( ஐ லவ் யூ சொல்லு)
நஹி.... முஜே தும் கோ பஸந்த் நஹி.... முஜே சோடுதோ....(இல்ல.... எனக்கு உன்னை பிடிக்கல.... என்னை விட்டுவிடு) என்று கைகளை கூப்பி கெஞ்சினாள்.
ஏய்..... என்று சொல்லி அவளுடைய தலை பின்னலை பிடித்து இழுத்தான். மரத்தின் பின்னால் இருந்து வேகமாக வந்து அவனை ஓங்கி அரை விட்டாள் மாயா.
பைக்கை சாய்த்து கொண்டு கீழே விழுந்தான் அவன்.
அந்த பெண் மாயாவின் பின் பக்கம் வந்து நின்று கொண்டு திதி ( அக்கா)..... என்று அழுதாள்.
ரோ மத் சோனியா.... ( அழாதே சோனியா)....
பீ பிரேவ் அன்ட் ஹிட் திஸ் டைம் ஆஃப் ரோக்ஸ் ( தைரியமா இந்த மாதிரி பொறுக்கிகளை அடிக்கனும்).....
ஏய்..... என்று எழுந்த அந்த ஆளை மறுபடியும் ஒரு அரை விட்டு தன் இடுப்பில் வைத்திருந்த ஹேண்ட் கஃப்ஸை வைத்து அரெஸ்ட் செய்தாள்.
பூலிஸ் ( போலீஸ்....)..... என்று பயந்து தப்பிக்க முயன்றவனை இழுத்து பிடித்து பக்கத்து தெருவில் இருக்கும் அவளது ஜீப்பை வரவழைத்து அவனை ஏற்றினாள்.
தேங்க்ஸ் திதி....
இதோ பாரு சோனியா..... இதுக்கெல்லாம் பயந்து கொண்டு இருந்தினா வாழவே முடியாது..... தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும்.... என்றாள் மாயா ஹிந்தியில்.
ஏய்.... உன்னை...
போலீஸ்லையா மாட்டி விடற..... உன்னை வந்து வச்சிக்கிறேன்.... என்றான் அவன் ஹிந்தியில்.
ஏய்.... இதுக்கு மேல இவ வழில நீ வந்த..... உன்னை என்கவுண்டர் பண்ணிடுவேன்.... என்று சொல்லி தன் துப்பாக்கியை எடுத்து காண்பித்தாள் மாயா.
பயந்து எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான் அவன். பின்னர் மாஃப் கீஜியே பெஹென்....
( மன்னிச்சிடுங்க சகோதரி....) என்று மாயா மற்றும் சோனியா இருவரையும் பார்த்து சொன்னான்.
###########
தொடரும் ......
அ . வைஷ்ணவி விஜயராகவன் .

Last edited: