ரகசிய கொலையாளி.....
பாகம் -29
மேடம்..... நான் பிரெக்னென்டா இருக்கேன்..... ரொம்ப டிராவல் பண்ண வேண்டாம் ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க..... அதனால நுங்கம்பாக்கம் பக்கத்திலேயே எதாவது பிலேஸ் சொன்னீங்கன்னா நான் வரேன்.....
நான் உங்களை மீட் பண்ண ஓகே ன்னே சொல்லல.... அதுக்குள்ள நீங்க என்ன பிலேஸ் எல்லாம் சொல்றீங்க.....
சாரி மேடம்..... நீங்க எப்போ ஃபிரீ ன்னு சொல்லுங்க.... அந்த டைம் நீங்க சொல்ற பிலேஸூக்கு நான் வரேன்.....
அப்படி என்னதான் உங்களுக்கு பிரச்சனை..... அவ்வளவு என்ன முக்கியமான விஷயம்.... நேர்ல பார்த்து தான் பேசனும்ன்னு இப்படி அடம் பண்றீங்க..... உங்க ஹஸ்பண்ட் எதாவது டார்ச்சர் பண்றாரா?.....என்றாள் மாயா சற்றே கோபமாக.
அச்சச்சோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை மேடம்.... நான் பேச நினைப்பது என்னை பற்றி இல்ல.... உங்களை பற்றி.....
என்ன?
ஆமாம் மேடம்..... நான் ஈ1 போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்யறேன்.... எங்க எஸ்.ஐ.சார்..... அவரு..... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மறுபடியும் மணிகண்டன் மற்றும் ராஜேஷ் வர.....
சாரி மேடம்..... சார் வந்திட்டார்..... நான் அப்புறமா பேசறேன்..... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள் மீனா.
பெருமூச்சு விட்டபடி.... வெறுப்பாக தன் ஃபோனை டேபிளில் வைத்தாள் மாயா.
ஃபிளைட்டில் வந்த கலைப்பினாள் தூங்கிக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
வீட்டை பூட்டி விட்டு குளிக்க சென்றாள் மாயா.
யாரு இந்த மீனா.... எதுக்கு என் கிட்ட பேச நினைக்கிறா?..... என்னை பத்தி என்ன சொல்லப் போறா?.... என்றெல்லாம் யோசித்து கொண்டே குளித்து விட்டு வந்து ரெடியாகி அமர்ந்திருந்த போது ஆர்டர் செய்த சாப்பாடு வர தன் அம்மாவை எழுப்பி சாப்பாடு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டாள் மாயா.
###########
மணிகண்டன் சொன்னது போல ஃபிளாஷ் நியூஸ் செய்தாள் சாக்ஷி.
வணக்கம்..... சென்னையில் சென்ற வாரம் நடந்த பயங்கரமான கொலையை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
சென்னையை அடுத்த ஆவடியில் வசித்து வந்த காவேரி என்ற பெண்மணி போன வாரம் வியாழக்கிழமை இரவு கொடூரமாக கொல்லப்பட்டார்.
தலையை துண்டாக நறுக்கி அவர் மடியிலேயே வைக்கப்பட்டிருந்ததாக தகவல். இது பழிவாங்க நடந்த கொலையா அல்லது ஏதேனும் சைக்கோவால் நடத்தப் பட்ட கொலையா.... இது தொடருமா..... என்பது பற்றி கேட்டதற்கு போலீசாரிடம் இருந்து சரியான பதில்கள் இல்லை.....
கொலைச் செய்யப்பட்ட காவேரிக்கு வயது 26.... சென்னை மியூசியத்தில் பென்ச் கிளார்க்காக பணியாற்றினார் என்று தெரிய வந்தது. அவர் கொலை செய்யப் பட்டத்திற்கான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.... இது தான் கொலைச் செய்யப்பட்ட மிஸஸ் காவேரி..... என்று காவேரியின் புகைப்படத்தை போட்டுக் காட்டினாள் சாக்ஷி. புகைப்படம் ஜூம் செய்து காட்டப்பட்டது.
இந்த நியூஸ் திடீரென இந்த சேனலில் வந்ததால் இன்னும் சில சேனல்களில் அவர்களுக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு பேசினார்கள்.
ஒரு சேனலில் வேலைக்கார பெண் மலரிடமே பேட்டி எடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் டெலிகாஸ்ட் செய்தனர்.... விறுவிறுப்பாக செய்தி மக்களிடையே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஷேர்சேட் என்று பல்வேறு ஆப்புகளில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு.
மிஸஸ் காவேரியின் கொலையில் ஒரு புதிய திருப்பம்..... முக்கியமான ஏதோ தடையம் கிடைத்திருப்பதாக தகவல்...... அது உண்மை தானா?..... என்று அறிந்து வர நமது தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அங்கே சென்றிருக்கிறார்.... அவரிடம் நாம் இப்போது பேசலாம்.....
வணக்கம் ஜெயச்சந்திரன்.....
வணக்கம் சாக்ஷி.....
அங்கே நிலைமை எப்படி இருக்கு......
சாக்ஷி..... நான் இங்கு வந்த இரண்டு மணி நேரமா..... இறந்துபோன காவேரியோட வீட்டில் போலீஸ்காரர்கள் சோதனை செஞ்சிக்கிட்டு இருக்காங்க..... அதுவும் இல்லாம ஃபாரன்ஸிக் ஆட்களும் நிறையபேர் வந்திருக்காங்க..... புதுசா ஒரு தடையம் கிடைச்சிருக்கு ன்னு சொல்றாங்க.....
அது என்ன தடையம் ன்னு சொல்ல முடியுமா ஜெயச்சந்திரன்?
சாக்ஷி..... இப்போதைக்கு உள்ளே என்ன தடையம் கிடைச்சிருக்குன்னு தெரியல..... ஆனா கொலை செய்தவன் புளூ காரில் வந்திருந்தான் மேலும் அது பாண்டிச்சேரி ரெஜிஸ்டிரேஷன் வண்டி என்று தகவல் வெளியாகியுள்ளது.....
இது போலீஸ்காரர்கள் கொடுத்த தகவலா ஜெயச்சந்திரன்?
இல்ல சாக்ஷி..... அவங்க வெளிப்படையாக சொல்லல.... ஆனா அவங்க சொல்றதை வச்சு பார்க்கும் போது இன்னும் 24 மணி நேரத்தில் கொலைக்காரனை பிடிச்சிடுவாங்க ன்னு தோணுது....
தேங்க்ஸ் ஜெயச்சந்திரன்..... தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி.....
நன்றி சாக்ஷி.....
இப்போ பார்த்தீங்கன்னா நம்ம நிருபர் சொன்னதிலிருந்து சீக்கிரமாகவே அந்த கொலைக்காரன் கையும் களவுமாக பிடிப்படுவான் என்று தெரிகிறது.... மேலும் தகவல்கள் அறிய எங்களுடைய 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியை காணலாம் அல்லது மின்முகவரியிலும் காணொலியாக காணலாம்.... நான் சாக்ஷி அருண்குமார்....நன்றி வணக்கம்.
என்று சொல்லி முடித்தாள் சாக்ஷி.
இதைப் காவேரியின் வீட்டில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தனர் ராஜேஷ் மற்றும் மணிகண்டன்.
சூப்பரா பேசறாங்க சார் இந்த சாக்ஷி..... என்றான் ராஜேஷ்.
மீடியாவில் வேலை செய்யனும் ன்னா அதுக்கான பேச்சு திறமை வேண்டும் இல்ல..... என்றான் மணிகண்டன்.
ஆமாம் சார்.....
ஒரு தடையமும் கிடைக்கலையே.... நாம் தான் இந்த வீட்டை சல்லடை போட்டு தேடிட்டோமே.....
சல்லடை என்று அவன் சொன்னதும்.....
ராஜேஷ்..... வா ஜல்லடையில் தேடல.....
எந்த ஜல்லடை?..... கிட்சனில் இருக்கும் ஜல்லடையா?
இல்ல ராஜேஷ் வாங்க..... என்று சொல்லி விட்டு பாத்ரூம் தண்ணீர் போகும் ஜாலியை ஒரு கட்டையை எடுத்து தட்டி திறந்தான்.
சார்..... இது ஜல்லடை இல்ல ஜாலி.....
ஏதோ ஒண்ணு..... நீங்க போய் அந்த பாத்ரூம்.... ஃபிளஷ் டாங்.... அங்க இருக்கும் ஜல்லடை எல்லாத்தையும் பாருங்க.....
அய்யோ போலீஸ் வேலை செய்யலாம் ன்னு வந்தா இவரு கக்கூஸ் கழுவ சொல்றாரே.... என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே சென்றான் ராஜேஷ்.
பேசாம இருந்திருக்கலாம் நேத்து...... பகல்ல யாரு இருப்பாங்க ன்னு கேட்டு நான் வந்ததும் இல்லாம அவரும் வந்து.... என்று புலம்பிக் கொண்டே பெருமூச்சு விட்டபடி சென்றான்.
மூக்கில் கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டு..... தேடினான் மணிகண்டன்.
எதுவும் கிடைக்கவில்லை.
வீடு உள் பக்கமாக பூட்டிருந்தது.... வரும்போது காவேரி கதவு திறந்து வந்திருந்தால் கூட செல்லும் போது எப்படி சென்றிருப்பான். கை ரேகைகள் இல்லை.... கண்டிப்பாக கிளௌஸ் போட்டிருந்திருப்பான்.... எப்படி வெளியே சென்றிருக்க முடியும்..... என்று சிந்தித்து கொண்டு இருந்தான் மணிகண்டன்.
அப்போது மணிகண்டனுக்கு டிஜிபி யிடம் இருந்து கால் வந்தது.
எடுத்து ஹலோ என்றான்.
ஹலோ.... நான் டிஜிபி பரந்தாமன் பேசறேன்....
யெஸ் சார்.... குட் ஆஃபட்டர் நூன் சார்..... நான் எஸ்.ஐ. மணிகண்டன்.
தெரியும் மிஸ்டர் மணிகண்டன்..... கேஸ் எந்த லெவல்ல இருக்கு.....
எந்த கேஸ் சார்.....
காவேரி மர்டர் கேஸ்.....
சீக்கிரமா அக்கியூஸ்டை பிடிச்சிடுவோம் சார்.....
எனக்கு தெரியும் மிஸ்டர் மணிகண்டன்.
ஆனா பாருங்க இந்த நியூஸ் சேனல்ல எல்லாம் வந்து ரொம்ப பெரிய விஷயமாக ஆனதால கேஸை சிபிஐ மாற்றச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு..... என்றார் டிஜிபி பரந்தாமன்.
ஆனா சார்.... நானும் என்னோட டீமும் நிறைய ஃபீல்டு ஒர்க் பண்ணிருக்கோம்.... இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தா.... நாங்க கல்ப்டரிட்டை பிடிச்சிடுவோம்..... என்றான் மணிகண்டன்.
##############
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.