ரகசிய கொலையாளி....
பாகம் -31
உங்க அம்மாவும் சிவகாமி அம்மாவும்..... ரெண்டு பேரும் தனியா இருக்காங்க..... உங்க அம்மாவுக்கு கூடப் பிறந்தவங்க துணை இருக்கு..... ஆனா சிவகாமி அம்மாவுக்கு இருந்த கூடப் பிறந்த துணையும் இல்ல..... அவரோட குடும்பமும் துணையாக இல்லை..... எவ்வளவு பிரச்சனை வந்தாலும்.... அவமானம் வந்தாலும் உங்க அம்மா அவங்க தம்பி ஒயிஃப் கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்காங்களே..... ஏன் தெரியுமா?...... என்றாள் மீனா.
அமைதியாக மீனாவை பார்த்தாள் மாயா.
உங்களுக்கு சொந்த பந்தங்கள் வேண்டும் ன்னு..... நாளைக்கு அவங்களுக்கு பிறகு நம்பிக்கையான ஒரு ஆள் உங்களுக்கு துணையாக இருக்கனும் ன்னு.....
அந்த நம்பிக்கை அவங்களுக்கு உங்க அத்தை மேல சுத்தமா இல்லை..... ஆனா அதுக்கு இரண்டு காரணங்கள்.... ஒண்ணு உங்க அப்பா..... அவரு உங்க அம்மாவுக்கு அவரோட தங்கச்சி எப்படி பட்டவங்க ன்னு புரியவைக்கல..... இன்னொன்று மணி அண்ணா ஃபேமிலி உங்களை விட வசதியில குறைஞ்சவங்க..... அதனால அவங்களால உங்களுக்கு துணையாக இருக்க முடியாது ன்னு உங்க அம்மா நினைக்கிறாங்க.... அவங்க நினைக்கிறது தப்பு ன்னு சொல்ல முடியாது..... என்று பேசி முடித்தாள் மீனா.
நான் கிளம்பறேன்..... என்றாள் மாயா.
மேடம்..... என்ன முடிவு பண்ணீங்க.....
நான் வீட்டுக்கு போய் யோசிச்சிட்டு சொல்றேன்.....
மாயா மேடம்..... இதுல மணி அண்ணாவோட லைஃபே அடங்கி இருக்கு..... நாளைக்கு உங்க பர்த் டே..... கண்டிப்பா அவர் உங்களை மீட் பண்ணுவார்..... நீங்க சம்மதிச்சா உண்மையில் உங்களை நேர்ல...... இல்லன்னா அவரோட கற்பனைல.....
எழுந்து சென்றாள் மாயா. வீட்டிற்கு செல்லும் வரை மீனா சொன்னது எல்லாம் அவள் நினைத்து பார்த்து கொண்டே இருந்தாள். அன்று பர்ச்சேஸ் செய்யும் போதும் மணிகண்டனை நினைத்து கொண்டே இருந்தாள்.
அப்போது அவளுடைய ஹைய்யர் அஃபீஷியலிடம் இருந்து ஃபோன் வந்தது.
ஃபோனை எடுத்து விஷ் செய்தாள் மாயா.
மன்டே டியூட்டில ஜாயின் பண்றீயா மா..... என்றார்.
யெஸ் சார்......
ஒரு சென்ஸிபிள் மர்டர் கேஸ் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்து நம்ம கிட்ட வந்திருக்கு மா.... அதை நான் உன் கிட்ட கொடுக்கிறேன் ..... நான் டீடெயில்ஸ் உனக்கு மெயில் பண்றேன்...... என்றார்.
யெஸ் சார்.... ஷியூர் சார்..... என்றாள் மாயா.
ஃபோனை வைத்து விட்டு மீனாவிற்கு கால் செய்தாள் மாயா.
சொல்லுங்க மேடம்......
மேடம் சொல்லாதீங்க ன்னு சொன்னேன் இல்ல?
நான் ஸ்டேஷனில் இருக்கேன் மேடம்..... அதான் பேர் சொல்லி சொல்ல முடியல.....
மேடம் வேண்டாம்..... மாயா மட்டும் போதும்.
ஓகே..... என்ன முடிவு பண்ணீங்க..... அதைச் சொல்லுங்க.....
நான் மணி மாமாவோட டாக்டரை பார்த்து பேசனும்..... அப்புறமா தான் என் முடிவை சொல்லுவேன்...
அவர் கிட்ட அப்பாயின்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணனுமே.... இப்போ சொன்னீங்கன்னா.... மன்டே தான் கிடைக்கும்..... நாளைக்கு மணி சாரை நீங்க பார்த்தே ஆகனுமே.....
அது உங்களோட தலைவலி..... முடியாது ன்னா விட்டிடுங்க..... என்று சொல்லி ஃபோனை வைக்க சென்றவளிடம்....
ஓகே ஓகே.... நான் சிவகாமி அம்மா கிட்ட பேசிட்டு கேட்டு சொல்றேன்.....
ஓகே இன்னைக்கு ராத்திரிக்குள்ள நான் அந்த டாக்டர் கிட்ட பேசி ஆகனும்..... அதுக்கு முன்னாடி டாக்டரோட டீடெயில்ஸ் அனுப்புங்க..... எந்த ஹாஸ்பிட்டலில் வேலை செய்யறாரு..... என்ன ஏது ன்னு....
ஓகே மேடம்.... என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டு சிவகாமிக்கு கால் செய்தாள் மீனா.
அடுத்த பத்து நிமிஷத்துலேயே மாயாவிற்கு மறுபடியும் கால் செய்தாள் மீனா.
மேடம்..... அப்பாயின்மெண்ட் கிடைச்சிடிச்சு..... ரொம்ப வருஷமா சாரை தெரிஞ்சதால ஆன்லைன்ல மீட் பண்ண டாக்டர் ஒத்துக்கிட்டார்.... அவரோட டீடெயில்ஸ் அப்புறம் மீட்டிங் ஐடி எல்லாம் ஃபைவ் மினிட்ஸ்ல சென்ட் பண்றேன்..... என்றாள் மீனா.
ஓகே.... பை..... என்றாள் மாயா.
தேங்க்ஸ் மேடம்.... என்றாள் மீனா சந்தோஷத்துடன்.
ஃபோனை வைத்து விட்டு கூகிளில் அவள் அனுப்பிய டாக்டரை பெயரை போட்டு தேடினாள் மாயா.
டாக்டர் மதனகோபால் பிரபலமான டாக்டர் என்று வந்தது. அவரை பற்றி நிறைய நல்ல கமெண்ட்ஸூம் வந்திருந்தது. மீனா 9.30 மணிக்கு கூகுள் மீட் லிங்க் அனுப்பி இருந்தாள். அதற்குள் தன்னுடைய ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டாள் மாயா.
தனக்கு சில டிரெஸ்களும் தன்னுடைய அம்மாவிற்கு ஒரு புடவையும் எடுத்துக் கொண்டு கிளம்பி வீட்டிற்கு சென்றாள் மாயா.
############
நவீனும் இளங்கோவும் தூங்கி எழுந்து சாயங்காலமாக விக்டிம் காவேரி வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டிற்கு வாடகைக்கு சென்றனர்.
சென்றதும் மணிகண்டனுக்கு கால் செய்தனர்.
மணிகண்டன் டென்ஷனாக இருப்பதால் ஃபோனை சைலென்டில் போட்டுவிட்டு இருந்தான். அதனால் கவனிக்கவில்லை.
ராஜேஷூக்கு கால் செய்தான் நவீன்.
ஹலோ சொல்லு நவீன்.....
என்ன சார் ஃபோனை எடுக்கல..... என்றான் நவீன்.
அது ஒரு பெரிய கதைடா.....
என்னாச்சு சார்?
நீ ஸ்பீக்கரில் போடு..... இளங்கோவும் கேட்கட்டும்.... என்றான் ராஜேஷ்.
ஓகே சார்.... என்று சொல்லி ஸ்பீக்கரில் போட்டான் நவீன்.
எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்?
சார் சொன்னது போல காவேரி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கிட்டோம்......
வீட்டுக்குள்ள தான இருக்கீங்க?
ஆமாம்..... டோர் லாக் பண்ணிருக்கா.....
ஆமாம் சார்.... என்றான் நவீன்.
இல்ல எதுக்கும் உங்க கிட்ட ஹெட் ஃபோன்ஸ் இருந்தா போட்டுக்கோங்க.... ஸ்பீக்கரில் பேச வேண்டாம்.
ஏன்டா..... என்னாச்சு?
ஹெட் ஃபோன் இருக்கா இல்லையா?
இருக்கு.....
எடுத்து ரெண்டு பேரும் காதில் மாட்டுங்க.... என்றான் ராஜேஷ்.
சரிடா.... என்று சொல்லி தன் பேகில் இருந்து ஹெட் ஃபோனை எடுத்து ஃபோனில் ஃபிக்ஸ் செய்து இருவர் காதிலும் வைத்து கொண்டனர்.
ஏன் என்னாச்சு ராஜேஷ்..... என்றான் இளங்கோ.
இளங்கோ..... நீங்க கிளம்பியதும்..... நாங்க அங்க ஃபாரன்ஸிக் ஆட்களை வைத்து கொண்டு எவிடன்ஸ்
இருக்குற மாதிரி கிரியேட் பண்ணிக் கொண்டு இருந்தோம்..... அப்போ சாருக்கு டி.எஸ்.பி. கால் செய்தார்..... என்று மொத்த விஷயத்தையும் சொல்லி முடித்தான் ராஜேஷ்.
இப்போ நாங்க என்னடா பண்றது.... என்றான் இளங்கோ.
சார் இப்போது ரொம்ப டென்ஷனா இருக்காரு டா.... அவரு கிட்ட கேட்க முடியாது..... அதுவும் இல்லாம மன்டே வரைக்கும் கேஸ் நம்ம கையில தான் இருக்கும்..... ஸோ நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ஃபுல் நைட்டு கேர்ஃபுல்லா சிசிடிவி ஃபூட்டேஜை செக் பண்ணுங்க..... டியூட்டி சேஞ்ச் பண்ண வேண்டாம்.... அந்த நைட் டியூட்டி கார்டுக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்.... சார் சொன்னது போல அவர் நடந்துக்கட்டும்..... என்றான் ராஜேஷ்.
ஏய்.... சாருக்கு தெரிஞ்சா திட்டப் போறாரு டா.....
இல்லடா..... பாவம் சார்.... இந்த கேஸூக்காக எவ்வளவு சிரமப் பட்டு இத்தனை தூரம் வந்த பிறகு ஈஸியா சிபிஐ க்கு மாத்தறாங்க..... என்றான் ராஜேஷ்.
சரிடா.... அப்போ நாங்க கால் பண்ணதா சொல்லாத..... என்றான் இளங்கோ.
சரிடா என்று சொல்லி ராஜேஷ் ஃபோனை வைத்து விட்டான்.
கேமரா டிடெக்டர் ( detector) வைத்து வீடு முழுவதும் எதாவது ஹிட்டன்( hidden) கேமரா இருக்கிறதா ... என்று பார்த்தார்கள். அதன் பிறகு ரூமில் கம்ப்ளீட் செட்டப் செய்தார்கள் நவீன் மற்றும் இளங்கோ. நான்கு புறமும் நான்கு கேமராவும்.... வீட்டினுள் மூன்று கேமராவும்.... வைக்க சொல்லி கொடுத்திருந்தனர். அதை சரியாக வைத்து விட்டனர் போலீஸ் கான்ஸ்டபிள்கள். வீட்டினுள் பகல் நேரத்தில் கார்டிங் செய்த கோவிந்தன் கான்ஸ்டபிள் வைத்து விட்டார். இரவு சிவா கான்ஸ்டபிள் வைத்து விட்டார். அனைத்தையும் சிஸ்டமில் கனெக்ட் செய்து பார்த்துக் கொண்டு இருந்தனர் இளங்கோ மற்றும் நவீன்.
###########
தொடரும்......
அ. வைஷ்ணவி விஜயராகவன்.